Showing posts with label மலர் விழி. Show all posts
Showing posts with label மலர் விழி. Show all posts

Sep 14, 2018

தமிழர்களின் வாழ்வியல் மேற்கு தொடர்ச்சி மலை!

செப் 15/2018: தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் வரும். அப்படி சில படங்கள் வந்தாலும் நம்மில் எத்தனை பேர் அந்த படத்தை திரையரங்கில் பார்க்கின்றோம் என்பது கேள்விக்குறி, அப்படி தரமான கதைக்களத்தில் லெனில் இயக்கி விஜய் சேதுபதி தயாரித்து இன்று வெளிவந்துள்ள படம்தான் மேற்கு தொடர்ச்சி மலை.

தேனியிலிருந்து இடுக்கி வரை மூட்டை தூக்கி செல்லும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைதான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை, இதை கதையாக கூற முடியாது, ஒவ்வொருவரின் கதாபாத்திரங்களின் வழியாக கதையை நகர்த்தியுள்ளனர். ஒரு மூட்டை தூக்குபவன் தன் அன்றாட செலவிற்கு பணத்தை சேர்ப்பது எத்தனை கடினம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இந்த மேற்கு தொடர்ச்சி மலை. 
தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து மலை மேல் உள்ள கிராமங்களுக்கு பொருட்களை சுமந்து செல்லும் தொழிலாளி ரங்கசாமிதான் (ஆண்டனி) படத்தின் நாயகன். மலை அடிவாரத்தில் இருந்து தினமும் பொருட்களை சுமந்து சென்று கிராமங்களில் உள்ள மக்களிடம் ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்து ஏலக்காய் மூட்டைகளை கீழே சுமந்து வந்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் இவரின் வாழ்க்கை வழியே, அந்த மக்களின் வாழ்வியலை பதிவு செய்கிறது படம். 

ரங்கசாமி ( ஆண்டனி) எப்படியாவது சொந்த நிலம் வேண்டும் என்பதற்காக உழைக்கின்றான், அவனின் வாழ்க்கை வழியாக விரியும் இப்படம். இப்படத்தில் இவர்கள் எல்லாம் நடித்தார்கள் என்று எந்த ஒரு இடத்திலும் சொல்லவே முடியாது, வாழ்ந்தே இருக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும், அன்றாட தேவைக்கு அதிகமாக செலவு செய்யும் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களின் வாழ்க்கை முறை எப்படி என்று பார்த்து பழகி போன நமக்கு இது படம் இல்லை பாடம். இப்படி ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததற்காகவே லெனினை பாராட்டலாம். படத்தில் நடித்த நடிகர்கள், இத்தனை யதார்த்ததை சமீபத்தில் எப்போதும் பார்த்தது இல்லை. தமிழ் சினிமாவுக்கு தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் ஒரு அற்புத படைப்பு இந்த மேற்கு தொடர்ச்சி மலை. தரமான படத்தை தந்த தமிழன் சேதுபதிக்கு வாழ்த்துக்கள். 
இது ஒரு வழக்கமான சினிமா அல்ல. தமிழர்களின் வாழ்வியல் முறையை விளக்கும் பதிவு. 
*மலர் விழி*

Feb 18, 2016

இந்துத்துவா பாசிசத்திற்கு எதிரான அணிவகுப்பு !

வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் தாரக மந்திரம். இந்த மதச்சார்பற்ற கொள்கைக்கு RSS சங்பரிவார ஃபாசிச கும்பல் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. 

மோடி ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவின் மதசார்பின்மை, மற்றும் சகிப்புத்தன்மை கேள்வி குறியாகி உள்ளது. சகோதரத்துவத்துடன்  வாழ்ந்து வரும் இந்திய மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. 

இதை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிப்ரவரி 17 அன்று  பாப்புலர் ஃப்ரண்ட் தினம் என்று அறிவித்து வேற்றுமையில் ஒற்றுமை என்ற முழக்கத்துடன் இந்தியா முழுவதும்    கொடியேற்றி இரத்ததானம், இலவச மருத்துவ முகாம் மற்றும் பல்வேறு சமுக நலத்திட்ட உதவிகளை வழங்கியது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாசிச ஹிந்துதுவாவின் திட்டங்களை நாங்கள் உடைக்க வல்லவர்கள் என்பதனை உணர்த்த சீருடை அணிந்த வீரர்கள் ராணுவ அணிவகுப்பு பேன்ற அணிவகுப்பை நடத்தினர். அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் ஒற்றுமை பேரணி என்ற அணிவகுப்பும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
*மலர் விழி*

Dec 11, 2015

நீ “உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்!

“நான்” என்ற சொல்லை நீங்களும், நானும், எல்லோரும் மிகச் சுலபமாக ஒரு நாளைக்கு நூறுதரங்களிற்கு மேல் பயன்படுத்தி வருகிறோம். “நான்” என்பதனைப் பற்றி சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா ஒரு தடவை. “நான்” என்பது என்ன? கண்ணாடியில் தெரியும் முகமா, அல்லது எம்மிடம் இருக்கும் புகைப்டத்தில் இருக்கும் முகமா, கதவில் எழுதிய பெயரா, அல்லது வேறா ? என் எதிரே “நான்” வந்தால் அடையாளம் கண்டு கொள்ள முடியுமா? நான் யார்? 

தந்தையை வருவதை பார்த்து சிகரட்டை முகுகுக்கு பின்னால் ஒளித்து வைத்துக் கொள்பவனா? தலை சீவும் போது கண்ணாடியில் ரசிக்கும் அவனா? பாதையில் செல்லும் வசீகரமான பெண்ணை திரும்பி திரும்பி பார்ப்பவனா? இறைவனிடம் கண்ணீர் சிந்தி பிரார்த்திப்பவனா?, பாடல்களை ரசிப்பவனா? குத்து பாட்டுக்கு மனசில் ஆட்டம் போடுபவனா? விதவிதமாக உணவை சுவைப்பவனா? காதலியுடன் பேசி பேசி காலம் கடத்துபவனா? இந்த பட்டியல் நீளமானது.

நான் என்பது யார்? என் அடையாளம் தான் எ்னன? என் சுயம் தான் என்ன? என் சுயத்தை என்றாவது தேடியிருக்கிறேனா? அதை பார்த்து அதிர்ந்திருக்கிறேனா அல்லது சிரித்திருக்கிறேனா? இந்த அடையாளம் என்பதனை உடலாக, முகமாக, பழக்கமாக, எழு்த்தாக, பேச்சாக, செயலாக, சிந்தனையாக, பழகும் விதமாக பிரித்துப் பார்த்தால் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு முகம் உள்ளது தெரிய வரும். அப்படியென்றால் பல முகங்களில் எனது நிஜ முகம் எது? இந்த கேள்வி கேட்கப்படாதவரை பலர் இயந்திரமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கேள்விக்கு விடை காண்பவர்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பார்கள் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பார்கள். நம்மை நாமே அடையாளம் கண்டு கொள்ளல் வாழ்க்கையை சுவைப்படுத்தும், செழுமைப்படுத்தும்.

நாம் நம்மை அடையாளம் கண்டு கொள்வதன் முதல் கட்டமாக நம் அணுகுமுறை, செயல்முறை, சிந்தனை ஓட்டத்தின் தன்மை ஆகியவற்றினை நன்கு பரிசீலனை செய்ய வேண்டும். நேற்றின் கசப்பான பாடங்களில் இருந்து இதுவரை காலமும் நான் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என்று உணர்ந்து கொள்வதும் நம் அடையாளத்தை நமக்கு நன்கு காட்டும். தனியான குளியலறையில் நம் நிர்வாணம் நம்மை அவமானப்படுத்தாது. அதே போல சுய பரிசீலணையில் நாம் வெட்கப்பட ஒன்றுமேயில்லை. நம்மிடம் நாம் பொய் சொல்லாதவரை, சாக்கு போக்கு சொல்லாதவரை, காரணங்களை குழப்பிக்கொள்ளாதவரை நாம் நம்மை அடையாளம் கண்டு கொள்ள முடியும். நேற்றின் தாக்கத்தினை அறிந்து கொள்வதன் ஊடாக அதில் தேவைாயான படிப்பினைகளை உள்வாங்குவது எம்மை நாமே இனங்காண துணைநிற்கும்.

தனிமை, தனிமையில் தியானம் (மெடிடேசனல் மூட்) என்பன மனதை அல்ஃபா நிலைக்கு கொண்டு செல்லும். முகம்மது நபி (ஸல்) அவர்கள் இதனைத்தான் ஹிராக்குகையில் செய்தார்கள். ஒரு நாள் இரு நாள் அல்ல, வாரக்கணக்காய் தனிமையில் உண்மையை தேடினார்கள். அவரது நபித்துவம் கூட அன்னை கதீஜாவின் வீட்டினிலோ அல்லது மக்காவின் சந்தையிலோ வைத்து வழங்கப்படவில்லை. மாறாக தன்னை தேடும் அந்த ஆன்மீக பயணத்திலேயே கிடைத்தது. “நான் யார்” என்பதே என்னை பொருத்தவரை மில்லியன் டொலர் கேள்வி. டி.எம்.எஸ்.-ன் குரலில் கண்ணதாசன் எழுதிய அந்த அற்புதமான காவிய வரிகள் இது : “உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.

நன்றி : Abu Maslama ( கைபர்தளம்).
*மலர் விழி*

Dec 2, 2015

மாட்டுகார வேலா மனுசனை கொஞ்சம் பாருங்கடா!


சிங்கார சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் திசைதெரியாமல் தடுமாறி கிடக்கும் இந்த நேரம் நமது மாட்டை பாதுகாக்கும் கூட்டம் எல்லாம், மாட்டுகார வேலா என் மாட்டை கொஞ்சம் பார்த்துக்கடா! என்று சுகமாக, உல்லாசமாக இருக்கிறார்கள்.

இவர்கள் யாரை பார்த்து தீவிரவாதி வீடு கொடுக்க கூடாது, அவர்கள் கடைகளில் பொருள்கள் வாங்க கூடாது என்று சொன்னார்களோ அந்த முஸ்லிம் மக்கள்தான் பெரும் அளவில் சென்னை மீட்ப்பு பணிகளில் களம் இறங்கி உள்ளனர். சுன்னத் ஜமாஅத், பாப்புலர் பிரான்ட் ஒப் இந்தியா (PFI ), சோசியல் டெமாகரடிவ் பார்டி ஒப் இந்தியா (SDPI), தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தவ்கீத் ஜமாஅத், இந்திய தவ்கீத் ஜமாஅத், போன்ற அமைப்புகளின் தொண்டர்களும், அவர்களின் ஆம்புலன்ஸ் களும் மிகவும் சிறந்த முறையில் மீட்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேற்கூறிய இயக்கங்களின் அலுவுலகங்கள், தமிழ் நாடு ஹஜ் கமிட்டி கட்டிடம், சென்னையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் 24 மணி நேரமும் மக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. அங்கே மக்கள் பெரும் அளவுகளில் தங்கவைக்கப்பட்டு, உணவளிக்கபட்டும் வருகிறார்கள். இத்தோடு இவர்கள் மருத்துவ குழுக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளார்கள் என்பது சிறப்பான விடயமாகும்.

*இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மாட்டுகாக குரல் கொடுக்கும் சுப்பிரமணிய சுவாமி சென்னை மக்களுக்கு மத்திய அரசு உதவ கூடாது என்று கேட்டு கொண்டு தான் கைபர் கணவாய் வழியாக வந்த வந்தேறிதான் என்பதை தெள்ளதெளிவாக வெளிப்படுத்தி கொண்டார்.*

*சுப்பிரமணிய சாமியின் கூட்டாளி காக்கை சித்தர் கல்யாண ராமன் மதவெறி தலைக்கு ஏறிய முக நூலில் கூறி இருக்கும் கருத்தை பாருங்கள்.*
*மலர் விழி*

Nov 21, 2015

தஞ்சையின் வளம் காக்க வந்த கத்து குட்டி!

"கத்து குட்டி" மண் சார்ந்த சிந்தனை, இயற்கை பாதுகாப்பு , சுற்றுச் சூழல்முன்னேற்றம் ஆகியவற்றை பேசும் சிறப்பு மிக்க படம். தமிழகத்தின் நெல் களஞ்சியமான, தஞ்சை காவிரி டெல்டாப் பகுதியை நச்சுப் பாலைவனமாக்க மாற்ற முயலும் மீத்தேன் எரிவாயுத் திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரு அருமையான படம்.   

“விவசாயிகளின் பட்டினிச் சாவு என்பது அவன் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சாகவில்லை.  பலபேருக்கு சோறு போடும் விவசாயத்தை ஒழுங்காக செய்ய முடியவில்லையே என்ற விரக்தியாலும் அவமானத்தாலும் அவன் சாகிறான் என்று விவசாயத்தை, விவசாயிகளை கவுரவிக்கும் படம்.

“விவசாயிகளின் தற்கொலைகளை கள்ளக் காதல் , வயிற்று வலி , குடும்பத் தகராறு இப்படி பொய்யான காரணங்களை சொல்லி அரசும், அதிகார வர்க்கமும் எப்படி கொச்சைப்படுத்துகிறது என்பதை தோலுரித்து காட்டும் சிறப்பு மிக்க படம். 

“கர்நாடகா தண்ணீர் கிடைக்க வழி செய்யவில்லை, கேரளா தண்ணீர் கிடைக்க வழி செய்யவில்லை, ஆனா பாண்டிச்சேரி (சாராயம்) தண்ணியும், டாஸ்மார்க்கும் தாராளமா கிடைக்க அரசு வழி செய்கிறது என்று பூரண மதுவிலக்கின் அவசியத்தை உணர்த்தும் பாடல் மிக அருமை.
செல்போன் டவர்களால் சிட்டு குருவி இனம் மட்டுமே அழிவாதாக நம்மில் பெரும்பாலோர் அறிந்துள்ளோம். ஆனால் வேறு என்ன என்ன பறவைகள்,  மற்றும் உயிர்கள் அழியும் என்பதை பட்டியல் இட்டு காட்டுகிறது இந்த படம்.  இதன்  மூலம் நவீன கண்டுபிடுப்புகள் சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் உபயோகப்படுத்த அரசு மிகவும் கவனம் எடுக்க வலியுறுத்துகிறது
தமிழகத்தின் நெல் களஞ்சியம் தஞ்சை மாவட்டத்தின் இயற்கை அழகை அழகாக கமிரா படம் பிடித்துள்ளது. மீத்தேன் திட்டம் நிறைவேறினால் தஞ்சை மண் வளம் அழிந்து பாலைவனமாக மாறும் என்பதை மிக அழகாக எடுத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர். இந்த அருமையான விழிப்புணர்வு படத்தை தமிழ் கூறும் நல்லுலகுக்கு கொண்டுத்த தயாரிப்பாளர், இயக்குனர் நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியவர்களே.  நடிகையின் தொடையையும், தொப்புளையும் காட்டி கேவலமாக படம் என்கிற பெயரில் கலாச்சார சீரழிவை உண்டாக்கி வயிறுவளர்க்கும் கூட்டம் இதை பார்த்தாவது திருந்துவார்களா?                                                                                                   *மலர் விழி*

Nov 11, 2015

நாதுராம் கோட்சே & மைசூர் வேங்கை திப்பு சுல்தான்!

கர்நாடகா மாநில அரசு சார்பில் முதன் முறையாக 10/11/2015 ம் தேதி மைசூர் வேங்கை திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது 
1782ஆண்டு டிசம்பர் 29 தேதி முதல் 1799 மே 4-ஆம் தேதி வரை மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்ட குறுநில மன்னர் திப்பு சுல்தான். ஆவார். மைசூர் வேங்கை என்று அழைக்கப்படும் இவர் ஆங்கிலேயர்க்கு எதிராக 4 போர்களை நடத்தியுள்ளார். 
அந்த நேரத்தில் வெள்ளையர்கள் துப்பாக்கிகளையும், பிரங்கிகளையும்  கொண்டே போரிட்டனர். அவர்களுக்கு ஏவுகணைகள் பற்றி ஒன்றும் தெரியாதிருந்தது.ஏவுகணைகள் மூலம் வெள்ளையர்களை  படுதோல்வி அடைய செய்தார் திப்பு சுல்தான். இவர்தான் ஏவுகணை தொழில் நுர்ப்பத்தை  முதன் முதலில் உலகுக்கு தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஸ்ரீரங்கப்பட்டணாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்திய திப்பு சுல்தான், ஆங்கிலேயர்களுடன் நடத்திய நான்காம் போரில் சாதாரண படை வீரனை போல களத்தில் நின்று சண்டையிட்டு மாண்டு போனார். இந்நிலையில் அனைத்து மக்களின் கோரிக்கையை ஏற்று வெள்ளையர்களுக்கு எதிராக போரிட்ட சுதந்திர போராட்ட வீரர் திப்பு சுல்தான் பிறந்த நாளை 2015 ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாட கர்நாடக மாநில ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. 
இந்நிலையில் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பாஜகவினர் போராட்டம் நடத்தினர். குடகு மாவட்டத்தில் ஊர்வலம் சென்ற பாஜகவினர் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து போராட்டம் நடத்த முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். 
கண்டனம்: திப்பு சுல்தானின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும் என்று முன்னாள் பிரதமர் தேவகௌடா தெரிவித்தார்.
சிந்திக்கவும்:  தேச தந்தை மகாத்மா காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சார்ந்த கோட்சே என்பவனுக்கு பாராளுமன்றத்திலே சிலை, வெள்ளையர்களுக்கு அடிபணியாமல் இந்திய சுதந்திரத்திற்க்காக போர் புரிந்து உயிர் நீத்த மாவீரன் திப்பு சுல்தானின் பிறந்த நாளை கொண்டாட இந்து முன்னணி ராமகோபால ஐயர் முதல் ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா ஹிந்துத்துவா கும்பல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்து இவர்களின் உண்மையான சுயரூபம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 
திப்பு சுல்தான் எல்லா மதத்தவர்களையும் சமமாக நடத்திய ஒரு மாமன்னர். குறிப்பாக அவர் ஹிந்துமக்களுக்கு பல கோவில்களை கட்ட நிலங்களை தானமாக வழங்கியவர். மதுரை ஆதினம் மடத்துக்கும் அவர் தானங்கள் செய்துள்ளார். அப்படிபட்ட ஒரு சிறந்த மன்னரை கூட அவர் முஸ்லிம் என்கிற காரணத்துக்காக அவரை நினவு கூற எதிர்ப்பு தெரிவிப்பது சிறுபான்மை மக்களுக்கு எதிரான கொடிய வெறுப்பு பிரச்சாரம் ஆகும். இவர்களது வெறுப்பு அரசியலுக்கு பிகாரில் கிடைத்த செருப்படி பற்றாது போலிருக்கிறது.   
*மலர் விழி*

Sep 22, 2015

மனிதன் விலங்குகளிடம் கற்க வேண்டிய பாடங்கள்!

மனிதன் விலங்குகளிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் மொத்தம் இருபத்தி ஒன்று. சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல்படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
எவன் ஒருவன் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும் என்பது சாணக்கியர் கூற்று.

Sep 10, 2015

சின்ன நடிகருக்கு பெரிய உள்ளம்!

10/09/2015: காஞ்சா கருப்பு, தமிழ் திரையுலகை தனது கிராம வழக்கு பேச்சின் ஊடாக சிறிய நகைச்சுவை காதாபாத்திரங்களில் நடித்து தமிழ் மக்கள் உள்ளங்களில் இடம்பிடித்தவர். 
இவரை வெறும் நடிகராகவே பலருக்கு தெரியும். ஆனால், சராசரி நடிகர்களை தாண்டி, கமல், ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் கூட செய்யாத விடயங்களை இவர் ஏழை கிராமத்து மக்களுக்கு செய்து வருகிறார்.
வேல்முருகன் போர்வெல்ஸ் என்று ஒரு சொந்தப்படம் எடுத்து வெளியிட்டார். சொந்தமாய் ஒரு போர்வெல் லாரியை வாங்கி படத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார். பின் தான் வாங்கிய அந்த போர்வெல் லாரியை பயன்படுத்தி தென் மாவட்ட பகுதியில் ஏழை மக்களுக்காக பணம் வாங்காமல் இலவசமாக இதுவரை 55 போர்வெல் குழாய் அமைத்து தந்து இருக்கிறார். அந்த பணியை இன்னும் விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார்.
சாதாரணமாக ஒரு போர்வெல் போட குறைந்தது 20,000 முதல் 30,000 வரை செலவாகும். அது போக தன் பிறந்த கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் திறந்து ஏழை மக்களுக்கு இலவச கல்வி தருகிறார். அவரின் பள்ளியை கவனித்து வருவது இவரது மனைவி சங்கீதா இவர் ஒரு physiotherapist என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் ஏழை எளிய மக்களின் பணத்தில் 10 கோடி முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள் இந்த தமிழ் சமூகத்துக்கு அப்படி என்ன செய்துவிட்டார்கள். வாங்கும் சம்பளத்திற்கு வரி ஏய்க் ஒரு ட்ரஸ்ட் வைத்து கொண்டு அங்கே இங்கே என்று சில சில்லறைகளை சிதற விடுவார்கள். சுனாமி மற்று கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இவர்களின் சுயரூபம் உலகுக்கு தெரிந்தது. இவர்கள் அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி கொடுப்பதாக அறிவித்த தொகையை ஒருசிலர் தவிர யாரும் கொடுக்கவில்லை என்பதே உண்மை. 
*மலர் விழி*

Aug 13, 2015

உங்கள் கிராமங்களை பாதுகாக்க உடனே அணுகுங்கள்!

உங்கள் கிராமத்தை நாங்கள் தத்தெடுத்து , சீமை கருவேலமரத்தை அழித்து , நல்ல மரங்கள் நட்டு பராமரித்து தருகின்றோம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது.
நடைமுறைகள் :1.விண்ணப்பத்தை அச்சு (பிரிண்ட்) எடுத்துக்கொள்ளவும்.
2.விண்ணப்ப பெறுநரில் ” கிராம தலைவர் மற்றும் பொதுமக்கள் , அல்லது என்ன பதவி என்பதை எழுதவும் . முகவரியை நிரப்பவும்.
3.கீழே இப்படிக்கு என்ற இடத்தில் விண்ணப்பத்தை சமர்பிப்பவர் நமது இயக்கத்தின் சீரமைப்பு பகுதி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பொறுப்பேற்க சம்மதித்து கையெழுத்திட்டு பெயர் மற்றும் தொடர்பு எண் வழங்கவும்.
4.அனுமதிக்கிறேன் என்ற இடத்தில் நமக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளவரின் அலுவலக முத்திரை (சீல் ) வைத்து கையொப்பம் வாங்கவும். விண்ணப்பத்தின் பின்புறம் மக்களின் கையெழுத்து பெறவும்.
5.அதை புகைப்படம் எடுத்து வாட்சப் எண்ணிற்கு 7806919891 அனுப்பவும். அல்லது விண்ணப்பத்தை ஸ்கேன் செய்து aaproject.tn@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
6.அனுப்பிய பிறகு 7806919891 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக பெறப்பட்டவுடன் MM-AAPROG என்ற பெயரிலிருந்து உங்கள் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
7.பெறப்பட்ட ஒருவார காலத்திற்குள் உங்கள் கிராமத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் விபரங்களுக்கு : www.aaproject.org

Oct 24, 2014

என் இனிய பொன் நிலாவே!

என் இனிய பொன் நிலாவே : என்னுடைய முதல் காதல் மறக்க முடியாதது. அவள் சின்ன பெண் எட்டு வயது குட்டி நிலா. நான் பனிரெண்டு வயது சுட்டி பையன். அவள் வீடு அடுத்த தெருவில். பள்ளிக்கு போகும் போது மட்டுமே அவளை பார்க்க முடியும். மற்ற நேரங்களில் அவளை காண முடியாது.

என் பார்வையில் விழுந்த அந்த குட்டி நிலாவின் பெயர் அப்போது எனக்கு தெரிய வில்லை. அவள் பிஞ்சு முகம் மட்டும் என் நினைவில் எப்பவும். தினமும் அவளை பார்க்கும் ஆவலில்  பள்ளிக்கூட வாசலில் நான். பள்ளியின் எதிர் வரிசையில் அவள் வீடு. பள்ளி ஆரம்பிக்கும் வேலையில் என் குட்டி நிலா பள்ளிகூட வாசலில் வந்து வகுப்புக்குள்  ஓடி விடுவாள். நானும் காத்திருந்து அவளை பார்த்துவிட்டு என் வகுப்புக்கு சென்று விடுவேன்.

என் குட்டி நிலாவை பள்ளிகூட வாசலில் மட்டும் பார்த்த எனக்கு திடீரென்று ஒரு இன்ப அதிர்ச்சி, நான் படிக்கும் டியுசனில் அவளும்  சேர்ந்து விட்டாள். அன்று டியுசனில் அவளும் என்னை பார்த்தாள். தினமும் என்னை பார்ப்பாள். டியுசன் மிஸ் பெயர் சொல்லி அழைக்கும் போது அவள் பெயரும் எனக்கு தெரிந்தது. அவளுக்கும் என் மேல் காதல் துளிர்ந்தது என்பதை அவளது பார்வை மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. பிஞ்சு காதல் அன்பும், அக்கறையும் வெட்க பார்வையும் மட்டுமே எங்களுக்குள் இருந்தது.

படிப்பு, விளையாட்டு இவற்றுடன் அவளுடைய நினைவும் என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. பள்ளி படிப்பு முடிந்தது தினமும் மாலையில் அவளை பார்பதற்காக அவள் வீட்டு தெருவில் சைக்கிளில் சுற்றுவது எனக்கு பிடித்திருந்தது . அவள் வீட்டு ஜன்னலில் என் பொன் நிலாவின் முகத்தை பார்க்கும் போது எனக்குள் ஒரு சந்தோஷ பரவசம். தினமும் தொடர்ந்த இந்த சந்தோசத்தை கெடுக்க அண்ணன்கள்  ரூபத்தில் வில்லன்கள் தோன்றினார்கள். 

என்னுடைய சில நண்பர்கள் வழியாக எங்களுடைய காதல் அவளுடைய அண்ணன்களுக்கு தெரியவர. அவளுக்கு அவசரம் அவசரமாக வேறு மாப்பிளை பார்த்து திருமணம் முடிவு செய்து விட்டார்கள். அவளுடைய திருமண நாள் என் வாழ்கையில் வலி மிகுந்த ஒரு நாள். அன்று முழுவதும் கடற்கரை மணலில் படுத்திருந்த எனக்கு இரவில் வானத்தில் தோன்றிய முழு நிலாவை பார்த்ததும் என் இனிய பொன் நிலாவின் ஞாபகம் என்மனதில் ஓடியது. என் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. என்னுடைய முதல் காதல் என்வாழ்வில் மறக்க முடியாதது.

*மலர் விழி*

Sep 30, 2014

இந்தியாவை அடகு வைத்தார் மோடி!

செப் 30/14: இந்தியா -அமெரிக்கா இடையிலான உறவு உறுதியானது என்று அமெரிக்கப் பத்திரிகையில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கூட்டாக அறிவித்துள்ளனர்,
இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு உறுதியானது, நம்பகமானது, நிரந்தரமானது ஆகும். மேலும் எதிர்காலத்தில் விரிவடையக் கூடியதாகும். 
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது, முன்பை விட தற்போது அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவங்கள், தனியார் துறை ஆகியவைகளுக்கு இடையேயும் ஒத்துழைப்பு அதிகரித்திருக்கிறது. இரு நாடுகளின் ராணுவத்தினரும் பூமியில், கடலில், வானில் என பல்வேறு இடங்களில் கூட்டாக பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.
இந்தியாவும், அமெரிக்காவும் உலக அளவில் கூட்டாளிகளாகும். பரஸ்பரம் உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வதன் மூலம், இரு நாடுகளும் தங்களது நாட்டில் பாதுகாப்பை அதிகரிக்க உறுதி பூண்டுள்ளன. தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. கடற்பகுதியில் அனைத்து நாடுகளின் கப்பல்களும் சுதந்திரமாக தொடர்ந்து இயக்கப்படுவதில் இரு நாடுகளும் உறுதி செய்யும். தெற்காசியாவை கட்டமைக்க இந்தியாவும், அமெரிக்காவும் உறுதி பூண்டுள்ளன. 
சிந்திக்கவும்: பாரத மாதாகி ஜே! மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்கிற நம்ம ஊரு பழமொழி இந்த ஹிந்துத்துவா கோட்டான்களுக்கு (ஆந்தை) சரியாக பொருந்தும்.. நம்ம முண்டாசு தலைப்பா கட்டிய மண்ணு மோகன் பொருளாதார புலி இதையேதான் செய்தார். அவரை பார்த்து இந்த வர்ணாசிரம ஹிந்துத்துவா மதவெறி கும்பல் ஓலமிட்டன. சிங்கு என்ன செய்தாரோ அதை விட பன்மடங்கு அதிகமா செய்றார் நம்ம பவர் ஸ்டார் மோடி.
எங்கடா போச்சி உங்கள் சுதேசி கொள்கை, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, சுவிஸ் பேங்க் பணத்தை திரும்ப கொண்டு வருவோம் என்று ஓலமிட்ட மோடி கும்பல் இன்று இந்தியாவை அந்நிய தரகு முதலாளிகளிடமும், முதலாளித்துவ நாடுகளிடமும் அடகு வைத்திருகிறார்கள். இனி வருங்காலத்தில் திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், தூத்துக்குடி மக்ரூனி, அருப்புகோட்டை காரச்சேவு, மதுரை ஜிக்குருதண்டா, ஆம்பூர் பிரியாணி இவை அனைத்திற்கும் இனி அமெரிக்காகாரன்தான் விலை நிர்ணயம் செய்வான். 
முடிவாக ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்வா கும்பலின் சுதேசி பிரதமர் மோடி தரகு முதலாளிகளின் அடிமை மன்மோகன் சிங்கின் வாரிசாகி இந்தியாவை அடகு வைத்தார். அமெரிக்க கொடிக்குள்  ஐக்கியமாகிபோனது இந்தியா. முன்பு படையெடுத்து அந்நிய நாட்டை பிடித்து வளங்களை சுரண்டினார்கள். இன்றோ படையெடுக்காமல் கத்தியின்றி ரெத்தம் இன்றி ஒப்பந்தங்கள் மூலம் நாட்டை சுரண்டுகிறார்கள். 
*மலர் விழி*

Sep 12, 2014

போராளிகளும் ட்ரோன் விமானங்களும்!

செப் 13: உலகமே ஆப்கான் முதல் ஈராக் வரை போரிடும் போராளிகளின் தாக்குதல் உத்திகளை கண்டு வியக்கிறது. 
அப்படிபட்ட போராளிகளை அச்சுறுத்துவதாக 'கில்லர் ரோபோ’. 'ட்ரோன்’ (Drone) எனப்படும் ஆள் இல்லா உளவு விமானங்கள் விளங்குகின்றன.

உண்மையில், இந்த ட்ரோன் உளவு விமானங்கள் நிலங்களை அளக்க, காட்டுத் தீயைக் கண்காணிக்க, மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்க என பல்வேறு சமூக பயன்பாடுகளுக்காக தான்  உருவாக்கப்பட்டது பின்னர் அதை உளவு வேலைகளுக்காகப் பயன்படுத்தினார்கள். ஒரு ட்ரோன் விமானம் மேகக் கூட்டங்களிடையே பறந்து நிலங்களைப் படம் பிடித்து அனுப்பும். அதில் போராளிகளின்முகாம்கள் இருந்தால், அடுத்ததாக போர் விமானங்கள் கிளம்பிச் சென்று தாக்குதல் நடத்தும். 

ஆனால் உளவு விமானங்கள் சத்தமின்றி எடுத்து அனுப்பும் படங்களை வைத்து போர் விமானங்கள் தாக்குதல் நடத்த வரும். போர் விமாங்கள் தளங்களை விட்டு புறப்பட்டு தாக்குதல் இலக்கை அடைவதற்குள் இவை புறப்பட்ட தகவலை அறிந்த போராளிகள்  தங்கள் கேம்ப்பை காலி செய்து விடுவார்கள். உளவு விமானங்கள் அனுப்பிய படங்களை மையமாக கொண்டு ஆளில்லாத இல்லாத வேற்று இடத்தில் குண்டுகளை வீசி விட்டுத் திரும்பும் ஏகாதிபத்திய போர் விமானங்கள்.

இதனால் ஏகாதிபத்திய நாடுகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகின.  F -22 போர் விமானத்தை ஒரு முறை இயக்க, சுமார் 40 ஆயிரம் டாலர் செலவு ஆகும். இந்திய ரூபாயில் சுமார் 24 லட்சம் செலவாகும். இதனால் கடுப்பாகி போன ஏகாதிபத்திய அரசுகள் ட்ரோன் உளவு விமானங்களையே தாக்குதல் நடுத்தும் விமானங்களாக வடிவமைத்தன. இந்த ட்ரோன் விமானங்களில் சிறிய ஏவுகணைகளைப் பொருத்தி அனுப்பும் அளவுக்கு கொஞ்சம் பெரிதாக வடிவமைத்தார்கள். அதன் முன் பகுதியில் பவர்ஃபுல் கேமராவைப் பொருத்தினார்கள். அதை சேட்டிலைட்டோடு இணைத்தார்கள். ட்ரோன் உளவு விமானங்கள் 'கில்லர் ரோபோ’ என்ற பெயரோடு உருமாற்றம் பெற்றது. இந்த ட்ரோன் விமானங்கள் உளவு பார்த்ததும் தானே ராக்கெட்டுகளை வீசி இலக்கை அழித்து விடும். இதுதான் இன்றைய போராளிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும்  விடயமாகும். 

Aug 14, 2014

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!


  • ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.
  • குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், ”நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்” என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.
  • குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.
  • விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.
குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.

நன்றி -வினவு.

Jul 12, 2014

RSS ஹிந்துத்துவாவை எதிர்த்த சுவாமி விவேகானந்தர்!

விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு விழா. அஞ்சல் தலை வெளியீடு, நினைவு நாணயம் வெளியிடுதல், முக்கிய வீதி களுக்குப் பெயர் சூட்டுதல் பல்கலைக் கழகங்களில் ஆய்வு மையம் என்று ஆர்.எஸ்.எஸ். வர்ணாசிரம கூட்டம் சுவாமி விவேகானந்தரை உரிமை கொண்டாடுகிறது. 

ஆனால் உண்மை என்ன வென்றால் சுவாமி விவேகானந்தர் ஆர்.எஸ்.எஸ். இந்து வெறிக்கும், வர்ணாசிரம கொள்கைகளுக்கும் எதிரானவர். இந்த விவேகானந்தர் யார்? அவரின் ஒரு பக்கத்தை மட்டுமே வெளியே காட்டி விட்டு மறுபக்கத்தை மறைப்பதேன். 

சுவாமிவிவேகானந்தர் பார்ப்பனீயத்தைப் பற்றியும், இந்து மதத்தின் ஜாதிய தன்மை குறித்தும் ஆர்.எஸ்.எஸின் இந்து வெறி குறித்தும் ஆதி சங்கரரின் குறுகிய இதயம் குறித்தும் அவர் எழுதியதை ஏன் இவர்கள் வெளிப்படுத்தவில்லை?

உண்மையிலேயே விவேகானந்தர் மீது பற்றும் அவர்தம் சிந்தனைகளைப் பரப்ப வேண்டும் என்ற நல்லெண்ணமும் அவர்களிடத்தில் இருக்குமேயானால் விவேகானந்தர் கருத்துக்கள் அனைத்தையும் ஒளிவு மறைவின்றி பரப்ப வகை செய்திட வேண்டும். 

இந்துக்கள் ஏன் மதம் மாறினார்கள்? அதற்க்கு வர்ணாசிரம் ஜாதி வெறி எப்படி காரணமான இருந்தது என்பது பற்றி விவேகானந்தர் தனது (தர்மசக்கரம் - துந்துபி ஆண்டு கார்த்திகை மாதம் சக்கரம் -31, ஆரம் 11) நூலில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். 

வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர். பிராமணர்களின் கருணையின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார். உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர்களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிடமிருந்து பிறக்கவில்லை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 

பிராமணரல்லாத வகுப்பார் படிப்படியாகத் துயில் நீங்கி எழுகிறார்கள். பிரா மணருடைய சாத்திரங்களிலும் மந்திரங்களிலும் அவர்களுக்குள்ள நம்பிக்கை நீங்குகிறது. மேலை நாட்டுக் கல்வி பரவியதனால் பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்திலே பதுமா நதியினுடைய கரைகள் இடிந்து விழுவதுபோல அழிந்து போகின்றன! ஆதாரம்: சுவாமி விவேகானந்தர் வரலாறு.

ஆதி சங்கரர் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறும் கருத்தை பாருங்கள்:

சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப் போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்யமில்லை. என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை;  அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப் பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத் துவத்தில் பெருமை பாராட்டுபவர்.

பசுவதையும் - இந்துமதமும்  குறித்து விவேகானந்தர் கருத்து: 

தம்முடைய சொந்தச் சகோதரர் பட்டினியினால் இறக்க, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் பொருட்டு ஒருபிடி அரிசி கொடாமல், மனிதர் மேல் அனுதாபமின்றிப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் குவியல் குவியலாக உணவைக் கொடுக்கின்ற இத்தகைய சபைகளில் நான் புகுவதில்லை. மக்கள் சங்கம் இவற்றினால் நன்மை அடை கிறதென நான் எண்ணவில்லை என்று கோமாதா பாதுகாப்பு சங்கங்களை நோக்கி சுவாமிஜி சாடுகிறார்.

பசுவைப் பாதுகாப்போம் என்று தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ள பா.ஜ.க.வினரே, பசுவை கோமாதா என்று போற்றும் மாட்டுக்குப் பிறந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., உள்ளிட்ட சங்பரிவார்க்  கூட்டமே, உங்களையெல்லாம் சராமாரியாக சாடுகிறார் விவேகானந்தர்  - இதற்கு முதலில் பதிலைச் சொல்லி விட்டு, விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு விழாவை விசேடமாக நடத்துங்கள். இந்துவெறி, வர்ணாசிரம கொள்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய மகானை ஏதோ உங்கள் கருத்துக்களை சொல்லும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கேடர் போல் சித்தரிக்க உங்களுக்கு மானம், ரோசம் இல்லை.  
*மலர் விழி*

Jul 10, 2014

தமிழர்கள் முதுகில் குத்தும் மோடியின் பாஜக அரசு!

ஜூலை 10/14: கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது எனவே அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இல்லை என்று இதுதொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மோடியின் பாஜக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இது தமிழக மக்களின் முதுகில் குத்தும் செயலாகும்.

சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் எல்.டி.ஏ.பீட்டர்ராயன், உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் ‘கச்சத் தீவு பகுதி உள்பட தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் யாவும் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கை கடற்படையின் தாக்குதல்களில் இருந்து இந்திய மீனவர்களைப் பாதுகாக்க நிரந்தர ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று கோரியுள்ளார். 

இதற்கு பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம்; ‘இந்திய இலங்கை இடையேயான கடல் எல்லை தொடர்பாக கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களின்படி கச்சத் தீவு, இலங்கைக்குச் சொந்தமானது. அங்கு ஓய்வு மட்டுமே எடுக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. மாறாக கச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு இல்லை.’ என கூறியுள்ளது.  

இதன் மூலம் கச்சத் தீவு விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டையே தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசும் தொடர்ந்துள்ளது. மத்தியில் ஆளுகின்ற கட்சிகள் மாறினாலும் காட்சிகள் மட்டும் மாறவில்லை. காங்கிரஸ்-பாஜக ஆகிய கட்சிகள் எப்போதுமே தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே மேற்க்கொண்டு வருகின்றன.

முன்னர் இவ்விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை எதிர்த்து பாஜக பிரச்சாரம் செய்தது, மேலும் மீனவர்களின் நலன்காக்க கடல் தாமரை மாநாடும் நடத்தியது. ஆனால் தற்போது தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாஜக மேற்க்கொண்டு வரும் நிலைப்பாடு அதன் தேர்தல் நேர நாடகத்தை தெளிவாக காட்டுகிறது. இந்த இரட்டை நிலை மூலம் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த தலைவர்கள் என்ன செய்ய போகிறார்கள். பாஜகவின் இந்த செயலை கண்டிக்கவாவது அவர்கள் முன்வருவார்களா?
*மலர் விழி*

May 29, 2014

மோடி அரசின் ரகசிய அஜண்டா!

மே 30/2014: தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினம் பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சார்ந்த 20 க்கும் மேற்பட்ட கும்பல் அங்கு கூடியிருந்த மக்களை சரமாரியாக தாக்கியுள்ளது.                                     
தாக்குதலில் அர்ஷாத் (21) கையிலும், அமீன் (25) கழுத்திலும், மைதீன் (28), நூருல் அமீன் (21) ஆகியோருக்கு கையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. உயிருக்கு போராடி வரும் இவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
சிந்திக்கவும்: மோடி பதவி ஏற்றதும் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா கும்பல் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலவரங்களை தைரியமாக நடத்த தொடங்கி விட்டனர். அம்மா ஆளும் தமிழகத்திலேயே இப்படி என்றால்  இந்தியாவின் மற்ற பகுதிகளை கேட்கவா வேண்டும்? 
பெங்களூரில் ஒரு சாமியார் முஸ்லிம் பள்ளிகளில் கூறப்படும் பாங்கு சத்தத்தை நிறுத்த வேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ். வர்ணாசிரம இயக்கங்கள் எல்லாம் ஓரணியில் திரண்டு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.
மேலும் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவது, கஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது, பசுவதை தடுப்பு சட்டத்தை அமல் படுத்துவது, சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலவரங்களை நடத்தி அவர்களின் பொருளாதரத்தை சூறையாடி அவர்களை மனதளவில் அடிமைகளாக்கி தங்களது தாய் மதமான ஹிந்து மதத்திற்கு திரும்ப கொண்டு வருவது  இதுதான் மோடி அரசின் ரகசிய அஜண்டா.
இதற்க்கு ஆதரவாக செயல்பட நீதி துறை, உளவுத்துறை மற்றும் அரசு அதிகார வட்டத்தில் உள்ள நடுநிலையாளர்களை மாற்றி ஹிந்துத்துவா சிந்தனை படைத்த தங்களது ஆதரவாளர்களை கொண்டு வருவது இதுதான் மோடியின் வரும் 5 ஆண்டுகால திட்டம். மோடியின் கனவு பலிக்குமா? அல்லது இந்தியா ஒரு உடைவை நோக்கி நகருமா பொறுத்திருந்து பார்ப்போம். 
*மலர் விழி*

Oct 30, 2013

இந்திய உளவுத்துறையும் & இந்தியன் முஜாஹிதீன் இயக்கமும்!

அக் 31/2013: பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் பாட்னா கூட்டத்தில் தாக்குதல் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன என்று முன்பே பீகார் அரசுக்கு தகவல் தெரிவித்திருந்தோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.

பாட்னா குண்டுவெடிப்புக்கு இந்தியன் முஜாஹிதீன்கள்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு நிலவில் இருக்க இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. பேரணியில் ஹிந்துத்துவவாதிகள் குண்டு வைப்பார்கள் என்று ஐந்து மாதங்களுக்கு முன்பு ஐபி அளித்த முன்னறிவிப்பு இப்பொழுது விவாதமாகி இருக்கிறது. மோடியின் தேர்தல் பேரணியில் வீரியம் குறைந்த குண்டுகள் வெடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதாக இருந்தது ஐபியின் முன்னறிவிப்பு.  

குஜராத்தில் நடந்த இடைதேர்தல் சம்பந்தமாக இந்த முன்னறிவிப்பு வந்தது என்றாலும் பாட்னாவில் இதே போன்று வீரியம் குறைந்த குண்டுகள் வெடித்திருப்பதனால் புலனாய்வு அதிகாரிகள் தங்கள் விசாரணையை அதனை நோக்கியும் திருப்பியுள்ளனர். ஒரு ஹிந்துத்துவ அமைப்புதான் குண்டு வெடிப்பை நிகழ்த்தும் என்றும், அது மோடியுடைய கூட்டத்தில் நடப்பதற்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது என்றும் ஐபி தெளிவான முன்னறிவிப்பு செய்திருந்தது. ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள்தான் இதன் பின்னால் இருக்கிறார்கள் என்று அந்த முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான அறிக்கை மே 21 தேதியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா உட்பட தேசிய நாளிதழ்களில் வெளியாகியிருந்தது. முஸ்லிம்களை கவர்வதற்காக மோடி எடுத்து வரும் முயற்சிகளைத் தடுப்பதற்காகவே இந்த ஹிந்துத்துவ அமைப்பு இதில் ஈடுபடுகிறது என்று ஐபி தெளிவாக்கியிருக்கிறது. தான் ஹிந்துக்களுக்கு மட்டும் தலைவர் அல்ல என்று மோடி பாட்னா கூட்டத்திற்கு முன்புள்ள கூட்டத்தில் கூறியிருந்தார். அத்தோடு மோடி நடத்திய சத்பாவனா நிகழ்ச்சியும் கவனிக்கத்தக்கது. அதில் முஸ்லிம் தலைவர்கள் உட்பட சில முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இந்த விஷயத்தில் மோடிக்கு ஒரு பாடம் கற்பிக்கவும், இந்தியாவை ஹிந்து ராஷ்ட்ரமாக ஆக்க வேண்டும் என்பதை மோடிக்கு நினைவூட்டவுமே இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது.மக்கள் கொல்லப் படக்கூடாதென்றும், அதே சமயம் அவர்கள் பீதிவயப்பட வேண்டுமென்றும் கருதித்தான் வீரியம் குறைந்த குண்டுகளை வெடிக்கச் செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக ஐபி அறிக்கை கூறுகிறது. பாட்னாவில் வெடித்த அனைத்து குண்டுகளும் சக்தி குறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கும் இந்தக் குண்டுவெடிப்புக்குப் பின்னால் ஹிந்துத்துவ சக்திகள்தான் இருக்கும் என்று சூசகமாக குறிப்பிட்டிருந்தனர்.மோடியின் நிகழ்ச்சிகளுக்கு அச்சுறுத்தல் உண்டென்று பீகார் அரசுக்கு ஐபி முன்னரே தகவல் அளித்திருந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே நேற்று கூறினார். ஆனால் இதுகுறித்த விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை. 

குறிப்பு: மேலும் இந்த இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு என்பது ஐபி ஏற்ப்படுத்திய ஒரு போலி அமைப்பு என்பதை பல்வேறு சந்தர்பங்களில் வெளிப்பட்டுள்ளது. இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கும் ஐபிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதையும், ஐபி தான் செய்ய நினைப்பதை இவர்களை கொண்டு நிறைவேற்றும் என்பதும் பல்வேறு சந்தர்பங்களில், பல்வேறு நிகழ்வுகளில் உண்மையாகி இருக்கிறது. இந்திய உளவுத்துறை இந்திய ஓட்டு பொருக்கி கட்சிகளின் கைப்பாவை. இந்திய அரசியல் சதுரங்கத்தில் ஒட்டு பொருக்கி கட்சிகளின் ஆதாயத்துக்கு தகுந்தவாறு பல்வேறு செயல் திட்டங்களில் அவர்களுக்கு உறுதுணையாக இவர்கள் செயல்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

மொத்தத்தில் காங்கிரஸ், பாரதிய ஜனதா என்கிற இரண்டு ஓட்டு  பொருக்கி தேசிய அரசியல் கட்சிகளும் விளையாடும் அரசியல் சதுரங்கத்தில் அப்பாவிகள் பலியாகிறார்கள் என்பதே உண்மை.

*மலர் விழி*

Oct 25, 2013

ஈழத்தமிழர் பிணங்களை தின்று தீர்த்த இந்திய அரசே!

இந்திய அரசே ! இந்திய அரசே ! ஈழத்தமிழர் பிணங்களை தின்று தீர்த்த இந்திய அரசே !
காமன் வெல்த் மாநாடா!
சிங்களவனின் மாமன் மச்சான் மாநாடா!


பொதுநல மாநாடா? கொலைக்காரன் இராசபட்சே புகழ் சூட்டும் மாநாடா?
கனடா நாட்டை பாரடா ! காமன் வெல்த்தைப் புறக்கணித்தது ஏனடா இந்திய இலங்கையே
அந்த நாள் ஆரியப் பாசமா?


சிங்களன் உணக்கு பங்காளி?
தமிழர் உனக்குப் பகையாளியா?
வெளியேற்று வெளியேற்று
காமன் வெல்த் அமைப்பிலிருந்து
சிங்கள நாட்டை வெளியேற்று


மனித உரிமைகள் மாண்புகள் என்று
மகத்துவம் பேசும் பிரிட்டன் அரசே!
மகிந்த இராசபட்சே செய்த 
மனிதப் படுகொலைத் தெரியலையா ?

நடத்தாதே நடத்தாதே காமன் வெல்த் மாநாட்டை
கொலைக் கார கொழும்பு நகரில் நடத்தாதே!

*மலர் விழி*

Oct 21, 2013

அரசு பயங்கரவாத நடவடிக்கைகளின் சூத்திரதாரி வாக்குமூலம்!

OCT 22/2013: நான்கு போலி மோதல் கொலை வழக்குகளில் கைது செயப்பட்டு, பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் குஜராத் அரசின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா, சபர்மதி சிறையிலிருந்து குஜராத் அரசிற்கு அனுப்பியிருக்கும் பதவி விலகல் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். 

சுயநலமும் அதிகாரவெறியும் கொண்ட கீழ்த்தரமான கிரிமினல் பேர்வழிதான் மோடி” என்பதை எடுத்துக்காட்டுவதாக அந்த கடிதம் அமைந்துள்ளது.  நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற பின், குஜராத் போலீஸில்  தனிக்காட்டு ராஜாவாக திகழ்ந்தவர் தான் இவர்.

மோடியின்  தொண்டனாக இருந்து சேவை செய்த இவர் குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனபடுகொலை மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு போலி என்கவுண்டர்கள் ஆகியவற்றை திட்டமிட்டு நடத்தியவர். தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் முஸ்லீம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசு பயங்கரவாத நடவடிக்கைகளின் சூத்திரதாரியாக செயல்பட்டவர். இப்படிப்பட்ட இவர் தனது பதவி விலகல் கடிதத்தை சுய வாக்குமூலம் போல அளித்துள்ளார்.

‘‘குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு தொடங்கி 2006-ஆம் ஆண்டு வரையிலும் நடந்துள்ள ‘மோதல்’படுகொலைகள் அனைத்தும் மோடி அரசிற்குத் தெரிந்துதான் நடந்தன; மோடி அரசின் ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டுதல்கள் அடிப்படையில்தான் இவைகள் நடத்தப்பட்டன என்று வன்சாரா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இவரை போன்றே மோடியின் கொலைபாதக செயல்களுக்கு உறுதுணையாக இருந்த குஜராத் அரசின் முன்னாள் துணை உள்துறை அமைச்சர் அமித் ஷா, மோடியின் தயவால் மூன்றே மாதத்தில் பிணையில் வந்து விட்டார். ஆனால் தான் மட்டும் ஏழு வருடங்களாகக் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் காலதாமதமாக இப்பொழுது உண்மைகளை உரைத்திருக்கிறார்.
*மலர் விழி*

Oct 18, 2013

முஸ்லிம் வாக்குகளைப் பெற வேடம் போடும் மோடி!

OCT19/2013: பிரதமர் பதவி வேட்பாளர் கனவில் மிதக்கும் நரேந்திர மோடி முஸ்லிம்களைக் கவர பல தந்திரங்களையும் மேற்கொண்டு வருகிறார்.

2002-ஆம் ஆண்டு முஸ்லிம் இனப்படுகொலையின் மூடி மறைக்க முஸ்லிம்கள் அணியும் ஆடைகளை மோடி தற்போது அணிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக ஷெர்வாணி அணிந்து மோடி பல மேடைகளில் தோன்றுகிறார்.

ஆனால், வாக்குகளைப் பெற மோடி வேடம் மாறினாலும், பா.ஜ.க.வுக்கு தனது ஹிந்துத்துவா அஜண்டாவை மூடி மறைக்க இயலவில்லை. முஸ்லிம் எதிர்ப்பு கட்டுரைகள் இன்னமும் பா.ஜ.க.வின் இணையதளங்களில் காணப்படுகிறது. முஸ்லிம்களைக் கவர மோடி பல வேடங்களைப் போட்டாலும், சங்க் பரிவாரக் கும்பல்களால் முஸ்லிம், விரோதத்தை மூடி மறைக்க இயலாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
*மலர் விழி*