Showing posts with label SDPI. Show all posts
Showing posts with label SDPI. Show all posts

Jul 23, 2014

இஸ்ரேலுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேல் பயங்கரவாத அரசு கடந்த சில தினங்களாக ஃபலஸ்தீனில் அப்பாவி மக்கள் மீது விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்து வருகிறது. 

சர்வதேச போர் சட்டமுறைக்கு எதிரான முறையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்துவது கண்டனத்திற்குரிய செயலாகும். இந்த கொடுஞ்செயலை கண்டித்தும், மேலும் இந்தியா மற்றும் உலக நாடுகள் இஸ்ரேல் உடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டுமென வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 எஸ்.டி.பி.ஐ கட்சி ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டம்:

இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசையும், ஐ.நா வையும் வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ கட்சி ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டம்  ஒன்றை நடத்தியது. கடந்த 8 ஆம் தேதி தொடங்கி தற்போது வரை 14 நாட்களாக பாலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் நிகழ்த்தி வரும் கொடூர தாக்குதலில் இதுவரை 500 க்கும் அதிகமான அப்பாவி மக்களும், குழந்தைகளும் பலியாகியுள்ளனர். 

தொடர்ந்து வான்வழி மற்றும் தரைவழி மூலமும் கொடூர தாக்குதலை இஸ்ரேல் நடத்திவருகிறது. இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டி தனமான தாக்குதலை இந்தியாவும் ஐ.நா வும்  கண்டிக்க வேண்டும். இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மாபெரும் ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டம் சென்னை அடையாரில் உள்ள ஐ.நா வின் குழந்தைகள் நல அலுவலகமான யுனிசெப் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

Sep 26, 2013

மோடி படத்தை செருப் பால் அடித்து ஆர்ப்பாட்டம்!

திருச்சியில் இளந்தாமரை மாநாட்டிற்கு வந்த மோடிக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ.யினர் மோடி படத்தை செருப் பால் அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Sep 14, 2013

வகுப்புவாத அரசியலை நிறுத்து! SDPI கட்சி ஆர்ப்பாட்டம் !

செப் 15/2013: உத்தர பிரதேசத்தில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்தக் கோரி SDPI கட்சியின் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் முலாயம் சிங் வீட்டை நோக்கி மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது.

கலவரத்திற்கு காரணமான குற்றவாளிகளை விரைவாக கைது செய்யக் கோரியும், சுதந்திரமான விசாரணை கோரியும், வகுப்புவாத வன்முறை தடுப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரியும், வகுப்புவாத அரசியலை பா.ஜ.க மற்றும் சமாஜ்வாதி பார்ட்டி நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேரணி நடைபெற்றது. 

பேரணியாக சென்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்த கண்டன பேரணியை எஸ்.டி.பி.ஐ கட்சியின் டெல்லி பிரதேச தலைவர் தலைமை தாங்கி நடத்தினார். இதில் ஏராளனமான பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். ஓட்டுக்காக ஹிந்துத்துவாவோடு சேர்ந்து இந்த கலவரத்தை முலாயம் சிங் கட்சியினர் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Jan 8, 2013

காவேரி டெல்டா விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா?

Jan 09: காவேரி நதி நீரை தமிழகத்துக்கு  தராமல், தொடர்ந்து கர்நாடகா அரசு, தமிழர்களை வஞ்சித்து வருகிறது.  மத்தியில் யார் ஆட்சி செய்தாலும், இதே நிலைதான் தொடர்கிறது.

காவேரி நதிநீர் பிரச்சனையால், தமிழக விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், காவேரி தண்ணீரை டெல்டா விவசாயிகளுக்கு, பெற்று தர வக்கில்லாத மதிய அரசை கண்டித்தும், காவேரி டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 45.000 நஷ்ட ஈடு வழங்க கோரியும், சோசியல் டெமாகரடிவ் பார்டி ஆப் இந்தியா, சார்பாக தஞ்சாவூரில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம், ஜனவரி 09/2013 இன்று நடத்தப்படுகிறது.

சிந்திக்கவும்: கர்நாடகா மாநிலம் இந்தியாவில்தான் இருக்கிறதா? அல்லது அது தனி நாடா? என்கிற கேள்வி நம்மில் பலருக்கும் எழுகிறது. கர்நாடகாவில் கனமழை பெய்து காவேரியில் வெள்ளம் வந்தால், அந்த தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட்டு தமிழகத்தை வெள்ளத்தில் மூழ்கடிப்பதும், தமிழகத்திற்கு விவசாயத்திற்கு தண்ணீர் தேவைபடும் பொழுது, அதை தர மறுப்பதுமாக "கர்நாடகா பாரதிய ஜனதா கட்சி" மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்கிறது. நதிநீர்கள் இணைக்கப்பட்டு விவசாயிகள் வளம் பெறுவார்களா?

Nov 15, 2012

தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து SDPI ஆர்ப்பாட்டம்!


Nov 15: தென், வட மாவட்டங்களிலும், தமிழகம் முழுவதிலும் ஜாதி வெறியாட்டங்கள், சமூக விரோத செயல்கள் அதிகளவு நடந்து வருகின்றன.

தலித் மற்றும் தலித் அல்லாதவர்களிடையே மோதலை ஏற்படுத்த சில அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. காதல் திருமணம், கலப்புத் திருமணம் செய்வது கூடாது என சில அரசியல் கட்சிகள் மேடையில் பகிரங்காமாக பேசி வருகின்றன.

இந்நிலையில் தென்மாவட்டங்களில் நடந்த ஜாதி வெறியாட்டங்களை கண்டித்தும் முழுமையாக அமைதியை நிலைநாட்ட வலியுறுத்த கோரியும் SDPI கட்சியின் சார்பாக சென்னையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டமும் பொது கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தோல். திருமாவளவன், தோழர் தியாகு, மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Oct 3, 2012

"குடி" குடியை கெடுக்கும்! மதுவுக்கு தடைவருமா?

Oct 04: இந்தியா சுதந்திரம் பெற்று அறுபத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது ஆனால்  மது விலக்கும், தீண்டாமையும் இன்னும் ஒழியவில்லை.

உடலுக்கு கேடு விளைவிக்கும் மது இன்றைய கொண்டாட்டங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. புத்தாண்டு, பண்டிகை, திருவிழாக்கள்  என்று மது விற்பனை களைகட்டுகிறது.

தமிழ் சமூகத்தில், தனி மனித வாழ்க்கையில் பெரும் ஒழுக்கக்கேடுகளாகக் கருதப்படுகின்றவற்றில் மது பழக்கமும் ஒன்று. மதுக்கடைகள் மூலம் தமிழ்நாட்டின் ஆண்டு வருமானம் 18 ஆயிரம் கோடி ரூபாய்.

அரசுக்கு மதுவின் மூலம் வரும் வருமானம்தான் பெரிதாக தெரிகிறது. ஆனால் மது வியாபாரத்தால் சீரழிந்த குடும்பங்கள் பல கோடி. இதை நம்பி தான் அரசின் இலவச திட்டங்கள் செயல்படுகின்றன. ஒருபக்கம் மக்களை அழித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு இலவசங்களை அள்ளி வீசுகிறது நமது மதிகெட்ட அரசுகள். மது அருந்துபவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஆகும் மருத்துவ செலவோ ரூ. 2 லட்சம் கோடி.

May 26, 2012

செவி சாயிக்காத மத்திய மாநில அரசை எதிர்த்து SDPI போராட்டம்!!


சென்னை: கூடங்குளம் போராட்டக்குழு மற்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும்,

போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை எந்த நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டும்.

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மே25 ல் சென்னை மெமோரியல் ஹால் முன்பு சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகிறது.

Dec 13, 2011

மோதல்களை தடுத்து நிறுத்துங்கள்! SDPI

புதுடெல்லி DEC14:முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இரண்டு மாநிலங்களின் மக்கள் இடையே மோதல் சூழல் உருவாவதை தடுக்க மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போதைய பீதியூட்டும், மோதல் சூழலை முடிவுக்கு கொண்டுவரும் பொறுப்பு உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் உள்ளது. ஐந்து மாவட்டங்களில் வாழும் மக்களை குறித்து கேரள மாநில கவலை அடையும் வேளையில், நான்கு மாவட்டங்கள் வறட்சியினால் தரிசாக மாறிவிடும் தமிழகத்தின் கவலையை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இப்பிரச்சனையில் பீதியையும், கலக்கத்தையும் விதைத்து உணர்ச்சிப்பூர்வமாக மாற்றி தங்களது குறுகிய நோக்கங்களுக்கு உபயோகிக்கும் முயற்சியில் இருமாநில அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. கேரள மக்களின் பீதியை அகற்ற வேண்டும். அதேபோல் தமிழக மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவர்களுக்கு உண்டான தண்ணீர் தட்டுபாடின்றி கிடைக்க வகை செய்யவேண்டும். அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண்பதுதான் சிறந்தது.

முல்லைப் பெரியாரின் பெயரால் நடக்கும் போராட்ட நிகழ்ச்சிகள் தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் இடையேயான மோதலாக மாறாதிருக்க எஸ்.டி.பி.ஐயின் தமிழக-கேரள தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு தொடர்பான அமளிக்கு இடையே இரண்டு மாநில மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் சோர்வடையாமல் இருக்க கவனம் செலுத்தவேண்டும் இவ்வாறு இ.அபூபக்கர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 
சிந்திக்கவும்: ஒற்றுமைக்கு முன்கை எடுத்துள்ள  SDPI  தலைமைக்கு வாழ்த்துக்கள். அதே நேரம் முல்லை பெரியார் விசயத்தினால் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் சோர்வடைந்து விடாமல் பார்த்து  கொள்ளுமாறு தங்களது கட்சியினர்களுக்கு வலியிறுத்தி இருப்பது ஒரு சிறப்பான சிந்தனை. ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்கள் மாதிரி கூடன் குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று மத்திய அரசை வேண்டாமல் அதை திறக்க கூடாது என்று வலிமையாக குரல் கொடுப்பதற்கு  நன்றி. 
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல். 

Aug 6, 2011

மதக்கலவரத்தை தூண்டும் சுப்ரமணிய சுவாமி!

AUG 07, சென்னை: நாட்டில் சமூகங்களிக்கிடையே கலவரத்தையும் பிளவையும் ஏற்படுத்தும் வகையில் கட்டுரை வெளியாக்கியுள்ள அரசியல் தரகு வியாபாரி சுப்ரமணிய சுவாமியை தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகளுக்கு SDPI மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுக் குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அண்மையில் மஹாராஷ்டிராவிலிருந்து வெளிவரும் DNA (Daily News and Analysis) செய்தித்தாளிலும், இணையதளத்திலும் அரசியல் வியாபாரி சுப்ரமணிய சுவாமியால் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் முஸ்லிம் களுக்கெதிராக அவதூறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டதோடு, நாட்டு மக்களை பிளவுபடுத்தும் விதத்திலும், பெரும் மதக்கலவரத்திற்கு தூபம் போடும் விதத்திலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் அக்கட்டுரையில் எழுதியுள்ளார்.

பல அரசியல் குழப்பங்களுக்கு காரணமான சுப்ரமணிய சுவாமி சமூகங்களுக்கு மத்தியில் குழப்பம் ஏற்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்தவேண்டும். சுப்ரமணிய சுவாமி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று கோவையிலும், மதுரையிலும் SDPI ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. வரும் ஆகஸ்ட் 8 ல் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Jul 20, 2011

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சி.பி.ஐ விசாரணை தேவை!

JULY 21, புதுடெல்லி: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பான விசாரணையின் போது போலீஸ் கஸ்டடியில் மரணமடைந்த ஃபயாஸ் உஸ்மானியின் மரணத்தைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும்,

 என சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இச்சம்பவத்தில் குற்றவாளிகளான போலீஸ் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என குண்டு வெடிப்புகளை கண்டித்த எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குண்டுவெடிப்புகளை நடத்தியவர்கள் குறித்த தெளிவான ஆதாரங்கள் கிடைக்கும் வரை புலனாய்வு ஏஜன்சிகளும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் ஊகங்களை பரப்புரைச்செய்வதை நிறுத்தவேண்டும்.

மலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர்தர்கா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட பல்வேறு குண்டுவெடிப்புகளில் சங்க்பரிவார அமைப்புகளின் பங்கு தெளிவானபிறகும் புலனாய்வு அதிகாரிகள் முஸ்லிம் சமுதாயத்தின் மீது சந்தேகங்களை எழுப்புகின்றனர் என இ.அபூபக்கர் குறிப்பிட்டார்.

பல வருடங்களாக சிறையில் வாடும் முஸ்லிம்களையும் அவர்களின் உறவினர்களையும் புதிய குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புபடுத்தி விசாரணை செய்வது கேலிக்குரியது என அவர் குறிப்பிட்டார்.

Jul 15, 2011

மும்பை குண்டு வெடிப்பு SDPI கண்டனம்!

JULY 16, புதுடெல்லி: மும்பையில் கடந்த புதன்கிழமை மூன்று இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளை சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

கண்டிக்கத்தக்க கோழைத்தனமான இச்செயல் நடுங்கச்செய்ததாகவும், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெரிவிப்பதாகவும் எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், காயமடைந்தவர்கள் ஆகியோரின் துயரத்தில் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்பு சம்பவத்தை மனிதத்தன்மை விரோதமானது என குறிப்பிட்ட இ.அபூபக்கர், இதன் பின்னணியில் செயல்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.

அனைத்து சமூக மக்களும் வாழும் ஒரு நகரத்தில் பிரிவினையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு நடத்தப்பட்ட கூட்டுப் படுகொலையாகும் இது. சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் ஏதேனும் ஒரு பிரிவினரை நோக்கி விரலை சுட்டிக்காட்டுவதிலிருந்து புலனாய்வு ஏஜன்சிகளும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் விலகவேண்டும்.

ஊகங்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே பல நிரபராதிகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளது. கடந்த காலங்களில் நடந்த ஏராளமான குண்டு வெடிப்புகளில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த நிரபராதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உண்மையான குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகும், நிரபராதிகள் இதுவரை விடுவிக்கப் படவில்லை. ஏதேனும் ஒரு மதத்தையோ, பிரிவினரையோ, சமுதாயத்தையோ முற்றிலும் குற்றம் சாட்டுவதை நிறுத்திவிடுவது நல்லது.

அதற்கு பதிலாக தீவிரவாதத்தை தனிமைப்படுத்துவதிலும், எதிர்கொள் வதிலும் மத்திய-மாநில அரசுகள் சந்தர்ப்பசூழலுக்கு தகுந்தவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிரபராதிகள் கொடுமைக்கு ஆட்படுத்தாதவிதம் ஒவ்வொரு வழக்குகளையும் ஆதாரங்களின் அடிப்படையில் கையாளவேண்டும் என இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Jul 1, 2011

பொது நிகழ்சிகளில் மரக்கன்று நடுவது நல்ல முன்னுதாரணம்!

JULY 02, ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், பிற்படுதப்பட்டவர் களுக்ககவும் ஒரு மாற்று அரசியலை முன்வைத்து கடந்த 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட SDPI யின் 3 ஆண்டு தொடக்க விழா இந்தியா முழுவதும் கொடியேற்று விழா மற்றும் ஒரு லட்சம் மரகன்றுகள் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக நமது ஊர் ஏர்வாடியில் நெல்லை மாவட்ட தலைவர் தலைமையில் நான்கு இடங்களில் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.

சிந்திக்கவும்: ஒவ்வொரு பொது நிகழ்சிகள், விழாக்கள் இவற்றில் இப்படி மரம்நடும் நிகழ்ச்சியை இணைத்து அரசியல் கட்சிகள், மற்றும் பொதுநல அமைப்புகள், தொண்டு அமைப்புகள் செய்ய ஆரம்பித்தால் இந்தியா ஒரு பசுமை நாடாக மாறும். நல்ல ஒரு முயற்சி வாழ்த்துக்கள். அதுபோல் நிகழ்ச்சிகள் நடத்த காவல்துறை அனுமதி வாங்க வேண்டும் என்று அரசு எப்படி சட்டம் வைத்துள்ளதோ அதுபோல் ஒவ்வொரு நிகழ்ச்சி நடத்த அனுமதி பெறும்போதும் இத்தனை மரங்கள் நட்ட வேண்டும் என்ற நிபந்தனையோடு அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும்.

May 29, 2011

ஆட்சியாளர்களின் அம்மணத்தை அம்பலப்படுத்தும்! SDPI !!

May 30, பெங்களூரு: SDPI கட்சியின் புதிதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய தலைவர் இ அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய உரை.

SDPI அமைத்திருக்கும் இந்த அரசியல் தளம் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் உட்பட நாட்டில் வாழும் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் அளவிற்கு விசாலமானது.

புதிய பூகோளத்தை வடிவமைத்திருக்கிறோம் அதற்கு எல்லைகள் உண்டு. இந்த பூகோள எல்லையில் ஹிந்துக்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பார்சீக்கள், ஆதிவாசிகள், தலித்துகள், மற்றும் பிற இந்தியர்களுக்கு உரிய பிரதிந்தித்துவம் உண்டு.

வரையறுக்கப்பட்ட இந்த புதிய பூகோளத்தில் புதிய சரித்திரம் படைக்கவிருக்கிறோம்.
இந்த புதிய சரித்திரம் படைக்க நமது கட்டமைப்பை மீளாய்வு செய்வதும் அவசியம். இந்த புதிய சிறிய கட்சி 21 மாநிலங்களில் செயல்வீரர்களைக் கொண்டுள்ளது.

11 மாநிலங்களில் மாநில அளவிலான கமிட்டிகளைக்கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது பெருமை படத்தக்கது. நமது இலக்கு ஒரு வருடத்தில் 200000 செயல்வீரர்களைச் சேர்ப்பது. இந்த இலக்கை நாம் அடையவில்லை மிக மெத்தனமான போக்கை கடைபிடித்துள்ளோம்.

இந்த 21 ஆம் நூற்றாண்டிற்கான நவீன அரசியல் தொலைநோக்குப் பார்வையுடன் நாம் உருவெடுத்துள்ளோம். இது தொடர்பாக எந்த முன்மாதிரியும் நமக்கில்லை. இந்த புதிய சிந்தனைக்கு நாமே முன்னோடி.

புதிய உலகில் போராட்ட களத்தை மட்டுமே நாம் கொண்டிருக்கிறோம். அரசியலின் கிழிந்த பக்கத்திலிருந்து நாம் காப்பியடிப்பதில்லை. சுத்தமான கரும்பலகையில் முதல் எழுத்தை எழுததயராயிருக்கிறோம்.

இந்த கட்சி தனிநபர் துதிபாடும் கட்சியல்ல. தனிநபர் இங்கு முக்கியமல்ல. தலைமையேற்று வழிநடத்தும் பண்புதான் இங்கு மிக முக்கியம். நம்மிடையே தேர்ந்தெடுக்கும்போது நாட்டின் வருங்கால தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நமக்கு சவாலாக, நமக்கெதிராக பலர் திரும்பியுள்ளனர், மதச்சார்பின்மை மற்றும் போலி மதச்சார்பின்மை பேசுவோர், தலித்து ஆளும் வர்க்கம் இதுபோன்று முஸ்லிம் கட்சிகளும் நமக்கெதிராக திரும்பியுள்ளனர். பாஜகவும், கம்யூனிஸ்டுகளும் நமக்கு எதிராக உள்ளனர்.

ஒரு சிறிய சம்பவத்தை சாக்காக வைத்து கொண்டு SDPI கட்சியின் 100 க்கும் மேற்பட்ட அலுவலங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நமது தலைவர்கள் மிரட்டப்பட்டனர். RSS போன்ற வகுப்புவாத சக்திகளால் நமது செயல் வீரர்கள் தாக்கப்பட்டனர். ஆனால் நான் சத்தியமிட்டு சொல்கிறேன் நம் இயக்கத்தை எவராலும் தடுக்க முடியாது.

நண்பர்களே, இந்த அரசியல் கட்சிக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்புகள் என்று ஆச்சர்யப்படலாம். காரணம் மிக எளிமையானது. மற்ற பிற அரசியல் கட்சிகள் சிறியதோ அல்லது பெரியதோ இடதுசாரியோ அல்லது வலதுசாரியோ அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்தன்மையுடன் உருவானது தான் சோசியல் டெமாக்ரெடிக் பார்டி ஆஃப் இந்தியா.

ஆட்சியாளர்களின் அம்மணத்தை அம்பலப்படுத்தும் திராணியுள்ள பச்சைக்குழந்தையின் வெள்ளை மனதுடன்,"அதுவல்ல, இது தான் பாதை" என்று சுட்டிக்காட்டும் கட்சி இது. இதுபோன்ற குணநலங்கள் உள்ளவர்கள் வரலாறு நெடுகிலும் எதிர்ப்பையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்துள்ளனர். வரலாறும் இவர்களுக்குத்தான் சொந்தம்.

அடிமைப்படுத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சமுதாயங்களின் இளைஞர்களின் கோபாவேசத்தை அளவிட தெரியாதவர்கள் அரசியல் உருவாக்கத்தை நம்ப மறுக்கிறவர்களிடமிருந்து எதிர்ப்பு வரத்தான் செய்யும். அவர்களை நாம் உதாசினம் செய்யலாம் அதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

இதற்காக நீங்கள் தயாராக இருங்கள் நாங்களும் தயாராகவே இருக்கிறோம். எஸ்டிபிஐ வெறும் அரசியல் கட்சியல்ல. இது ஒரு மிஷன். மக்களின் ஆழ்ந்த துயரத்திற்கு மத்தியில் அவர்களின் உள்ளக்கிடக்கையின் மனசாட்சியின் வெளிப்பாடு இது. இதுபோன்ற இயக்கங்கள் தான் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்.

நான் ஏற்கெனவே கூறியுள்ளது போல நமது நாட்டிற்காக புதிய வரலாறு படைக்க புதிய பூகோளத்தை வரையறுத்திருக்கிறோம். நாம் இதில் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நிகழ்காலத்தின் அர்பணிப்பு ஒளிமயமான எதிர்காலத்திற்காக.

May 14, 2011

ஜெயலிதாவுக்கு SDPI மாநில தலைவர் வாழ்த்து!!

May 15, அஇஅதிமுக கூட்டணி அமோக வெற்றி டாக்டர் ஜெயலலிதா அவர்களுக்கு SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வாழ்த்து.

SDPI யின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி இன்று விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் தங்களது கூட்டணி பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்று அமோக வெற்றி பெற்றிருக்கிறது.

குறிப்பாக தங்களது அதிமுக தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை பிடித்துள்ளது. மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்கும் தங்களை வாழ்த்துகிறேன்.

அத்தோடு சிறுபான்மை மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் வாழ்கை தரத்தை முன்னேற்றும் வகையில் நல்ல பல திட்டங்களை செயல்படுத்துவதோடு, ஊழல் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி நல்லாட்சி செய்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் மாநில தலைவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

May 13, 2011

கேரளா அரசியலில் SDPI அசைக்க முடியாத சக்தியாக மாறியது!!

May 14, திருவனந்தபுரம்: கேரளாவில் இரு பெரும் கூட்டணிகள் கட்சிகள் யு.டி.எஃப் என்றழைக்கப்படும் ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் எல்.டி.எஃப் என்றழைக்கப்படும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகியவை ஆகும்.

இந்த இரு கூட்டணி கட்சிகளுக்கும் இடையில் தனித்து போட்டியிட்ட சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி (SDPI) பெற்ற வாக்குகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த கட்சி கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர் மாவட்டங்களில் சில தொகுதிகளில் பெற்ற வாக்குகள் தேர்தல் முடிவுகளின் கதியை மாற்றியுள்ளது. கொல்லம், இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களின் பல தொகுதிகளில் புறக்கணிக்க முடியாத கட்சியாக எஸ்.டி.பி.ஐ மாறியுள்ளது.

கேரள மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி நூலிழை பெரும்பானமையைத்தான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 72 தொகுதிகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது காங்கிரஸ் கூட்டணி.

இடதுசாரி கூட்டணிக்கோ 68 இடங்கள் கிடைத்துள்ளன. ஆகையால் காங்கிரஸ் கூட்டணி வெற்றிப்பெற்ற ஒவ்வொரு தொகுதியுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு எதிர்பாராத அதிர்ச்சி தோல்விகளைக் கொடுத்துவிட்டு இடதுசாரிகளின் மானம் காத்தது கோழிக்கோடு மாவட்டம்.

அம்மாவட்டத்திலுள்ள வடகரை சட்டமன்றத் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் சோசியலிஸ்ட் ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட எம்.கே.பிரேம்நாத்திற்கு வெற்றி உறுதி என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் வடகரை தொகுதியில் இடதுசாரி கூட்டணியை சார்ந்த சி.கே.நாணு 847 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். ஆனால், எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஸலீம் அழியூர் பெற்ற வாக்குகளோ 3.488 ஆகும். காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பெற்ற வாக்குகள் தடையாக மாறியது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கைக்குரிய தற்போதைய எம்.எல்.ஏவை களமிறக்கி சி.பி.எம் கடும் போட்டியை ஏற்படுத்திய கண்ணூர் மாவட்டத்தில் அழிக்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தந்தது எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகளாகும்.

முஸ்லிம் லீக் இளைஞர் பிரிவைச்சார்ந்த கே.எம்.ஷாஜி 483 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றிப்பெற்றார். ஆனால், எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் நவ்ஷாத் பெற்ற வாக்குகளோ 2,935 ஆகும். இத்தொகுதியில் எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகள் இடதுசாரிகளின் வெற்றியை பாதித்தது.

திருச்சூர் மாவட்டம் மணலூர் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் பேபி ஜானின் தோல்வியில் நிர்ணாயக பங்குவகித்தது எஸ்.டி.பி.ஐ ஆகும்.4 83 வாக்குகள் வித்தியாசத்தில் தான் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வெற்றிப்பெற்றார். எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பி.கே.உஸ்மான் பெற்ற 2,293 வாக்குகள் இத்தொகுதியில் காங்கிரஸின் வெற்றியை நிர்ணயித்துள்ளது.

கொல்லம் மாவட்டத்தில் கருநாகப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் இரு முன்னணிகளுடன் தனித்துப் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிகளுடன் ஊடகங்களால் உயர்த்திக்காட்டப்பட்ட பா.ஜ.கவை இத்தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய எஸ்.டி.பி.ஐ கேரள மாநிலத்தலைவரான நாஸருத்தீன் எழமரம் நான்காவது இடத்திற்கு தள்ளி 7,645 வாக்குகளை பெற்றுள்ளார்.

இடுக்கி மாவட்டம் தொடுபுழா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பெற்ற வாக்குகள் கேரள அரசியலில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இங்கு போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐயின் எம்.எ.நஜீப் 5,386 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

கோதமங்கலம், குன்னத்துநாடு, கண்ணூர், மட்டனூர், பூத்தார், நாதாபுரம், கொண்டோட்டி, நிலம்பூர், மலப்புரம், வேங்கரா, மங்கடா, வள்ளிகுன்னு, பொன்னானி, தானூர், தவனூர், பட்டாம்பி, மானந்தவாடி, சொர்ணூர், ஆற்றிங்கல், வாமனபுரம், சேலக்கரை, குருவாயூர் ஆகிய தொகுதிகளிலும் இரண்டரை வருடம் கூட பூர்த்தியாகாத எஸ்.டி.பி.ஐ குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித்தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட அதிக வாக்குகள் தனித்துப்போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐக்கு கிடைத்துள்ளதாக கட்சியின் தலைவர் தெரிவிக்கிறார். மேலும் அதிக ஆர்வத்துடன் மக்கள் பிரச்சனைகளில் கட்சி தலையிட இவ்வாக்குகள் உதவும்.

மாற்று அரசியலுக்கு இந்த தேர்தல் ஊக்கத்தை தந்துள்ளது!! இ. அபூபக்கர்!!

May 14, கேரளா தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தி முக்கிய காரணியாக பங்காற்றியுள்ளது.

என்று சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் தலைவர் இ அபூபக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த மாநிலங்களில், மக்கள் தேர்ந்தெடுக்க ஊழல் பாரம்பர்யமிக்க ஒரே விளைவை ஏற்படுத்தக்கூடிய இரு கூட்டணிகள் மட்டுமே இருக்கிறது.

ஆளுங்கட்சிக்கேதிராக எதிர்கட்சிக்கு மாறி மாறி வாக்களிப்பது என்பது அரசியல் பாரம்பர்யத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இல்லை.

தற்போதுள்ள அரசியல் அமைப்பில் தங்களுடைய உடனடி எதிரியாக அவர்கள் கருதும் ஆளுங்கட்சியை வீழ்த்த தகுதியான கூட்டணிக்கே வாக்களித்து அதிருப்தியை தெரிவிப்பதை தவிர இந்த குடிமக்களுக்கு வேறு வழியில்லை .

துரதிர்ஷ்டவசமாக இதுவே தமிழகத்திலும் கேரளாவிலும் ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி ஏற்படுகிறது. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கோ அல்லது கம்யூனிஸ்ட் கூட்டணிக்கோ மக்கள் அருதிப்பெரும்பான்மையாக வாக்களித்து வெற்றி பெற வைக்காமல் இருப்பதே மாற்று அணி உருவாக்க வழிவகுக்கிறது.

மேற்கு வங்காளத்தில் தங்களுக்கு பெரும் சுமையாக இருந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை வாக்காளர்கள் தூக்கி எறிய வாய்ப்பை எதிர்பார்த்து இதுவரை காத்திருந்தனர்.
கேரளா தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் கூட்டணிகள் அமைக்காமல் தனியாக களமிறக்கப்பட்டிருந்த சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா வேட்பாளர்கள் வெற்றி பெறாவிட்டாலும் இந்த மாநிலங்களில் சுமார் நூற்றி ஒரு 101 தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஒரு சில தொகுதிகளில் கட்சி பெற்றுள்ள வாக்குக்கள் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் வாக்குகளாக அமைந்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். SDPI பொருத்தமட்டில் இது முதல் சோதனை முயற்சி. பசியிலிருந்தும் பயத்திலிருந்தும் விடுதலை பெரும் நமது நேர்மறையான மாற்று அரசியலுக்கு பலத்தையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் இந்த தேர்தல் முடிவுகள் தந்துள்ளது என இ அபூபக்கர் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்த தேர்தலில் ஆதரவளித்த அனைத்து கட்சிகளுக்கும் கட்சி செயல்வீரர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

கேரள மாநில எஸ்.டி.பி.ஐ தலைவர் தேர்வு!!

May 14, கோழிக்கோடு: சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் கேரள மாநிலத் தலைவராக நஸ்ருதீன் எழமரம் கோழிக்கோட்டில் நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் நடந்த தேர்தலில் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு உறுப்பினராக பதவி வகிக்கும் நாஸருத்தீன் கட்சியின் மாநில தலைமைச்செயலக உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார். தனிப்பட்ட காரணங்களால் வழக்கறிஞர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப் தலைவர் பதவியிலிருந்து விலகியதைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் கோயா தேர்தலை நடத்தினார்.

இத்தேர்தலுக்கு தலைவர் வழக்கறிஞர் கே.பி.முஹம்மது ஷெரீஃப் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர்களான எம்.கே.மனோஜ்குமார், அப்துல்மஜீத் ஃபைஸி, துணைத் தலைவர்களான முவாற்றுப்புழா மெளலவி அஷ்ரஃப், அய்யப்பன் மாஸ்டர், பொருளாளர் சேம்குட்டி ஜேக்கப், வி.டி. இக்ராமுல் ஹக், நூர்ஜஹான், துளசீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Apr 29, 2011

எண்டோ ஸல்ஃபான் பூச்சிக்கொல்லி!! எஸ்.டி.பி.ஐ தர்ணா!!

April 29, புதுடெல்லி: எண்டோ ஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடைச் செய்யக்கோரி சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் டெல்லி பிரிவு சார்பாக ஜந்தமந்தரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கேரளாவிலும்,கர்நாடகா மாநிலத்திலும் தடை செய்யப்பட்டுள்ள எண்டோஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடை செய்வதற்கு பதிலாக தடை எதிர்க்கும் நிலைப்பாட்டை அரசு மேற்கொள்வதாக போராட்டத்தில் கலந்து கொண்டோர் குற்றஞ்சாட்டினர்.

எண்டோஸல்ஃபான் குறித்து மேலும் ஆய்வறிக்கைகளை காத்துக் கொண்டிருக்காமல் உடனடியாக மத்திய அரசு தடைச்செய்ய வேண்டுமென அவர்கள் கோரினர். 74 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள எண்டோஸல்ஃபான் என்ற கொடூரமான பூச்சிக்கொல்லி மருந்தினால் இந்தியாவில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் அதனை தடைச்செய்ய மத்திய அரசு தயங்குகிறது.

எண்டோஸல்ஃபானை தடைச்செய்ய பிரதமர் முன்வரவேண்டும். தடைக்கான வாய்ப்புகளுக்கு தடையாக இருக்கும் மத்திய விவசாயத்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

மக்களின் உயிர்களைவிட எண்டோஸல்ஃபான் நிறுவனத்திற்கும், விவசாயிகளுக்கும் கிடைக்கும் லாபத்திற்கு மேற்கண்ட அமைச்சகங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டோர் பிரதமருக்கு மனு அளித்தனர்.

இப்போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ டெல்லி கன்வீனர் அப்துற்றஷீத் அக்வான் துவக்கிவைத்தார். இப்போராட்டத்தில் அம்பேத்கார் சமாஜ் கட்சியின் தலைவர் தேஜ்சிங், எஸ்.டி.பி.ஐ உ.பி மாநில கன்வீனர் அன்ஸான் இந்தோரி, எஸ்.டி.பி.ஐ டெல்லி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அஸ்லம்,கேரள மாநில பொதுச்செயலாளர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப், இமாம்ஸ் கவுன்சில் உத்தரபிரதேச கன்வீனர் மெளலானா ஷஹ்தாஸ் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

Apr 6, 2011

பாரம்பரிய கட்சிகளை புறக்கணிப்போம்!!

April 7th, 2011: கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல்களில் நேர்மையான ஊழலற்ற ஆட்சி அமையவும், அடிதட்டு ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடையும் வகையிலும் ஒரு நல்ல அரசியல் மாற்றம் ஏற்பட மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இதியாவின் தேசிய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் மேற்கு வங்காளத்தில் நிறுத்தியுள்ள வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு வழங்குவது என முடிவு செய்துள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் தேசிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ், பாஜக, சிபிஐ (எம்) மற்றும் மாநில அளவிலான கட்சிகளான இந்தியா யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ், திமுக, அதிமுக, TMC, அஸ்ஸாம் கன பரிஷத் ஆகிய அனைத்து கட்சிகளுமே ஊழல், குடும்ப ஆட்சி, சமூக விரோத செயல்கள் மற்றும் அடாவடித்தனம் போன்ற விஷயங்களில் ஒத்த கொள்கையுடையவர்களாக உள்ளனர்.

பல்வேறு மாநிலங்களில் இவர்கள் பல ஆண்டு காலமாக ஆட்சி புரிந்து வருகின்றனர். இந்த கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்கள், அவர்களுடன் இருப்பவர்கள் மற்றும் கூட்டாளிகள் ஆகியோர் மட்டுமே கடந்த அறுபது ஆண்டுகால ஆட்சியில் பயன் அடைந்துள்ளனர்.

இக்கட்சிகளால் மக்கள் விரக்தி அடைந்திருந்தாலும் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டு வேறு வழியில்லாமல் ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆளுங்கட்சிக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ மாற்றி மாற்றி வாக்களித்து வருகின்றனர். எனவே மாறி மாறி இந்த பாரம்பரிய கட்சிகளே ஊழல்கள் பல செய்து மாநிலத்தை சுரண்டி ஆட்சி செய்து வருகிறது.

மேற்கு வங்காளத்தில் மட்டும் சிபிஐ(எம்) ஏகபோகமாக ஊழல் ஆட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. இத்தகைய பாரம்பரிய கட்சிகளால் மக்களுக்கு எவ்வித பிரயோஜனமும் இல்லாத சூழ்நிலையிலும் ஒவ்வொரு தேர்தல்களின் போதும் வேறு வழியில்லாமல் மாறி மாறி வாக்களிக்கும் இந்த எதிர்மறை அரசியலால் நாட்டை சுரண்டி பிழைக்கும் அரசியல் சாம்ராஜ்யம் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது.

எனவே தான் நாட்டு மக்களை பசியில் இருந்தும் பயத்திலிருந்தும் விடுவிக்ககூடிய நேர்மறையான ஆக்கபூர்வமான மாற்று அரசியலை உருவாக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பாடுபட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக இந்த முயற்சியில் ஒரு சில முன்னேற்றம் அடந்துள்ளது.

ஒரு சில மாநில கட்சிகள் மற்றும் தேசிய அளவில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா எழுச்சி பெற்று வருவது ஒடுக்கப்பட்ட மற்றும் வஞ்சிக்கப்பட்ட மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளது. தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி இந்த பாரம்பரிய கட்சிகளுக்கு எதிராக கணிசமான எண்ணிக்கையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது.

ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி கூட்டணிகளுக்கு வாக்களித்தே ஆக வேண்டும் என நிர்பந்தத்தால் தவித்த மக்களின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு நல்ல மாற்றாகவும், மருந்தாகவும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

எனவே ஐந்து மாநிலங்களில் நடைபெறும் இந்த தேர்தல் பாரம்பரிய கட்சிகளின் ஊழல் கூட்டணிக்கு நல்ல பாடம் புகட்டுவதொடு, மக்களுக்கு நிவாரணமும் நிம்மதியையையும் கொடுக்கக் கூடிய தேர்தலாக அமையும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் ஊடக தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார் .

Apr 5, 2011

சென்னையில் எஸ். டி. பி. ஐ. யின் தேர்தல் பிரச்சாரம்!

சென்னை 5 ஏப்ரல்: சென்னை துறைமுகம் தொகுதியில் உள்ள ஏழுகிணறு பகுதியில் நேற்று திங்கட்கிழமை அன்று எஸ்.டி.பி.ஐன் சார்பாக மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக எந்த கட்சிகளோடும் கூட்டணி இல்லாமல் எஸ்.டி.பி.ஐ தனியாக மொத்தம் 7 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

அதில் மிக முக்கியமாக கருத்தப்படும் துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ-ன் தென் சென்னை மாவட்ட தலைவர் பி.முஹம்மது ஹூஸைன் போட்டியிடுகின்றார்.

நேற்று திங்கட்கிழமை (04.04.2011) அன்று மாலை சரியாக 7.00மணி அளவில் சென்னை ஏழுகிணரு பூங்கா அருகில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மற்றும் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்புரை ஆற்றிய மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி அவர்கள் பேசும்போது, இந்த நாட்டில் அரசியலுக்கு ஏற்பட்ட அவல நிலையை பட்டியலிட்டு பேசினார்.

தொடங்கப்பட்டு வெறும் 18 மாதங்களே ஆன நிலையில் எஸ்.டி.பி.ஐ நாடு முழுவது 20ற்கும் மேற்பட்ட மாநிலங்களில் கடுமையான வேகத்தில் வளர்ந்து வருவதாக கூறினார்.

மேலும் ராஜஸ்தானிலும், மேற்குவங்காளத்திலும், கேரளாவிலும், கர்நாடகாவிலும் சென்ற ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் கணிசமான வெற்றியை எஸ்.டி.பி.ஐ பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் எஸ்.டி.பி.ஐக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறினார்.

துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் நமக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவும் அதற்காக தொண்டர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இருக்கின்ற எல்லா திராவிடக்கட்சிகளையும், மததுவேஷ கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க தொடங்கி விட்டார்கள் என்றும் இனி எதிர்காலம் எஸ்.டி.பி.ஐற்குத் தான் என்று கூறினார்.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர்ம் முஹம்மது நாஜிம் அவர்கள் பேசும் போது, இந்த நாள்வரை மற்றவர்களை போன்று நாமும் மாறிமாறி இரு திராவிடக்கட்சிகளை ஆதரித்து வந்தோம், ஆனால் அவர்கள் நமக்கு துரோகம் இழைத்ததை தவிற வேறு ஏதும் செய்து விடவில்லை.

14 ஆண்டு காலமாக சமூக சேவையில் ஈடுபட்டு இம்முறை அரசியல் களம் காணும் நமது வேட்பாளர் முஹம்மது ஹுஸைன் அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தனக்கும் வேட்பாளருக்கும் இடையே இருந்த பழைய பசுமையான நினைவுகளை பொதுமக்களுடன் பகிர்ந்துகொண்டார்.

சாதாரண ஏ.சி மெக்கானிக்காக இருந்து வரும் நமது வேட்பாளர் அதிக தியாகங்களை செய்யக்கூடியவர் என்றும் மக்களுக்காகவே, சமூக அக்கறைக்காகவே தமது முழு வாழ்க்கையையும் அற்பணித்தவர் என்று கூறினார்.

குடிகாரர்களும், ஊழல் வாதிகளையும் ஒதுக்கி விட்டு இந்த முறை மக்கள் அனைவரும் எஸ்.டி.பி.ஐற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மற்றுமொரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் எஸ்.டி.பி.ஐற்கு உள்ள தொடர்பு என்ன என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கினார்.

ஊழல் அற்ற ஆட்சி வரவேண்டும், மக்கள் ஆட்சி ஏற்படவேண்டும், லஞ்ச லாவண்யம் ஒழிய வேண்டும் என்றால் மக்களால் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறினார்.

அதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் நீண்ட அலோசனைக்கு பிறகு, நிறைய கருத்துக்கணிப்பிற்கு பிறகு சமூக ஆர்வலர்களை ஊக்குவித்து, அதன் மூலம் தொடங்கப்பட்டதே எஸ்.டி.பி.ஐ ஆகும். இனி வரக்கூடிய காலங்களில் இந்தியாவை ஆளக்கூடிய அளவிற்கு எஸ்.டி.பி.ஐ தனித்துவமிக்க கட்சியாக, மக்கள் சக்தியாக மாறும் என்று கூறினார்.

இறுதியாக உரையாற்றிய துறைமுக தொகுதி வேட்பாளர் மற்ற கட்சிகளில் இருக்கும் வேட்பாளர்களுக்கு அவர்களிடம் இருக்கும் பணத்தை வைத்துத்தான் அவர்களுக்கு சீட் ஒதுக்கப்படுகிறது.

பொதுமக்கள் மத்தியிலேயே, பிரச்சார நேரத்தின் போதே தங்களுடைய‌ தலைவர்களிடம் அடிவாங்குவது, தகாத வார்த்தைகளால் திட்டு வாங்குவதும், கீழ்த்தரமாக நடத்தபடுவதையும் காண முடிகிறது.

இப்படி இருக்க இவர்களால் சட்டமன்றத்திற்குச் சென்று மக்களுக்காக குரல் கொடுக்க முடியுமா? ஆகவே மக்களுக்காக பேசக்கூடியவர்களைத்தான் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இறுதியாக தென் சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் புஹாரி அவர்கள் நன்றி உரை கூற பொதுக்கூட்டம் இனிதே நிறைவுற்றது.

மக்களிடம் வசூல் செய்துதான் அரசியலிலே இறங்கி இருக்கின்றோம். எனவே தாங்களால் இயன்ற அளவு பொருளாதார உதவி செய்யுங்கள் என்று கூறிய போது எஸ்.டி.பி.ஐன் தொண்டர்கள் அல்லாத பல பொதுமக்கள் பொருளாதார உதவி செய்தனர். இக்கூட்டத்திற்கு ஐனூறுக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது எத்தனையோ அரசியல் கட்சியின் வேட்பாளர்களின் கணக்குகளை பார்வை இட்டிருக்கின்றோம் எவறுமே சரியான செலவு கணக்கை காண்பித்ததில்லை நீங்கள் மட்டும் தான் உண்மையான கணக்குகளை காண்பித்திருக்கிறீர்கள் என்று கூறி தனது தனிப்பட்ட வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.