Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

May 25, 2015

அமெரிக்கன் திரைப்படங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி!

அமெரிக்காவில் உருவாக்கப்படும் ஹாலிவுட் படங்களில் தவறாமல் சில விஷயங்கள் இடம்பெறும்.  இது போன்ற விடயங்கள் இல்லாத அமெரிக்க திரைபடங்களே இல்லை என்று கூட சொல்லலாம். 
எப்பவுமே FBI/CBI வேலை பாக்குற எல்லாருமே அண்டர்கவர் போலீஸாக இருப்பார்கள். மக்கள் தொகையில பெரும்பாலான ஆட்கள் போலீஸாக வேலை செய்வார்கள். எப்பேற்பட்ட ஆபத்தாயினும் போலீஸ் குடும்பம் மட்டும் அழகாக சிரித்தப்படி கடைசியில் நிற்பார்கள்.

அமெரிக்க படங்களில் காட்டும் பள்ளிகள் யாவும் கால்பந்து, அல்லது பேஸ் பால் இரு விளையாட்டுகளை மட்டுமே பிரபல படுத்துவார்கள். சிறப்பு ஸ்பான்சர்ஷிப் வாங்கிடுவார்கள் போல.

வேற்று கிரகவாசிகள் பூமியை தாக்க நினைத்தாலே அவர்கள் இறங்கும் இடம் அமெரிக்கா மட்டும் தான். ஏலியன்ஸ் அட்டாக் அமெரிக்கர்கள் மீது மட்டுமே. அமெரிக்காவில் மட்டுமே ஓநாய்கள், வித்யாசமான ஜந்துக்கள், மற்றும் ரத்தக் கட்டேரிகள் வரும்.மற்ற நாடுகளுக்கு அந்த கொடுப்பனை கிடையாது.

இயற்கை சீற்றம் என்றாலே முதலில் தாக்கப்படுவது வெள்ளை மாளிகையும் அதிபரும் தான். அமெரிக்க அதிபர் மட்டுமே நடு ரோட்டில் கூட இறங்கி மக்களுக்காக குரல் கொடுப்பார். தேவைப்பட்டால் துப்பாக்கி சகிதமாக அதிபரே ஆபரேஷனிலும் இறங்குவார்.

கண்டிப்பாக அமெரிக்க படமெனில் ஒரு ஆப்பிரிக்கா நாட்டு கருப்பு நடிகர் பரிதாபமாக உயிர் விடுவார். அதிலும் ஹீரோக்களுக்காக மட்டுமே அவர்களின் உயிர் போகும். தீவிரவாதிகள் என்றால் உலகின் ஏதாவது ஒரு நாட்டின் முஸ்லிம்களாக இருப்பார்கள். தங்கள் நாட்டை அழிக்க  சதி செய்வதில் ரஷ்யா, சீனா, வடகொரியா கம்யூனிஸ்ட்கள் இருப்பார்கள். சுற்றி சுற்றி அமெரிக்க படங்களின் மைய கரு இதுவாகவே அமைந்து இருக்கும்.

மேலும் தாங்கள் சண்டையிட்ட நாடுகளில் தங்கள் ராணுவம் செய்த பராக்கிரமங்கள், தங்கள் போர் தளவாடங்களின் மகிமைகள், வல்லமைகள் இவற்றை ஓவர் பில்டப் செய்து உலக நாடுகளின் தலைமை தாங்கள்தான் என்பதை நிரூபிக்கும் தேச பக்தி படங்களாகவே  இருக்கும்.  மற்றபடி நல்ல கருத்துக்களை, காதலை, அன்பை, குடும்ப பாச நேசங்களை சொல்லவதாக வரும் படங்கள் அரிதிலும் அரிதே.

May 21, 2015

எகிப்தில் ராணுவம் நடாத்தும் பயங்கரவாதம்!

எகிப்தில் முன்னாள் அதிபர் முஹம்மது முர்சி மற்றும் புகழ் பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு மரணத் தண்டனை விதித்ததை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லியில் உள்ள எகிப்து தூதரகம் நோக்கி கண்டன பேரணியை நடத்தியது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநில கமிட்டியின் தலைமையில் இப்பேரணி நடைபெற்றது.
பேரணியில் கலந்துகொண்டு பேசிய டெல்லி மாநில பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் பர்வேஸ் அஹ்மது ஆற்றிய உரையில்,’ஜனநாயகம் என்பது ஒவ்வொரு மனிதர்கள் மற்றும் சமூகத்தின் அடிப்படை உரிமையாகும். ஒவ்வொரு பிரச்சனையிலும் தங்களது கருத்துக்களை வெளியிட அனுமதி உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடிமக்களாகிய நமக்கு, எகிப்தில் ஜனநாயக சக்திகள் சிறை மற்றும் மரணத்தண்டனையை எதிர்நோக்கியுள்ளது கவலை அளிக்கிறது.
அரபு வசந்தம், அப்பகுதியில் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருந்தது.ஆனால், முர்ஸியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பலகீனமான ஆதாரங்களின் அடிப்படையில் கூட்டு மரணத்தண்டனையை ராணுவ அரசு நிறைவேற்றுவதை காண நேர்ந்துள்ளது. எகிப்தில் சிறையில் அடைத்துள்ள அனைவரையும் விடுதலைச் செய்யவேண்டும்’ என்று கூறினார். மேலும் இப்பேரணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மக்கள் தொடர்பு இயக்குநர் முஹம்மது ஆரிஃபும் உரையாற்றினார்.
தூதரகத்திற்கு சற்று முன்பாக போலீஸ் பேரணியை தடுத்து நிறுத்தியது. பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்கள் எகிப்து தூதரக அதிகாரிகளை சந்திக்க சென்றனர். ஆனால், தூதரகத்தில் உள்ள வேறு அதிகாரிகளை சந்திக்கவே அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள்,’தேர்ந்தெடுக்கப்பட்ட  எகிப்தின் அதிபரான முர்ஸி மற்றும் புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞர் ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி உள்ளிட்ட நுற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை நீதித்துறையை கேலிக்கூத்தாக்குவதாகும். எகிப்தில் ஜனநாயகம் புதைக்கப்படுவதை நிறுத்தவேண்டும். அனைத்து எகிப்திய ஜனநாயகவாதிகளையும் சிறைகளிலிருந்து விடுவிக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். 

Apr 30, 2015

விண்வெளி பற்றி ஒரு துளி!

பால்வெளி (galaxy) யில் மனிதர்கள் வாழும் பூமி சூரிய குடும்பத்தை சேர்ந்ததாகும். ஆரம்ப காலத்தில் விண்வெளி ஆராட்சியாளர்களால் சூரிய குடும்பம் ஒன்றே பால்வெளி மண்டலத்தில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.  

பின்னர், சூரிய குடும்பம் மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான கோள்களின் குடும்பங்கள் இருப்பதாக ஆராட்சியாளர்கள் கண்டுபிடித்தனர். மிக தொலைவில் உள்ள அவைகளை சென்றடைய முடியுமா? என்கிற ஆராய்ச்சி தொடர்கிறது. ஆரம்ப காலத்தில் புளூடோ என்கிற கோள் சூரிய குடும்பத்தை சேர்ந்ததாக கணக்கிடப்பட்டது. அதனாலேயே நவகிரகங்கள் என்று சொல்வார்கள். பின்னர் அது பெரும் கோள் அல்ல என்று கருதப்பட்டு சிறு கோள்களுடன் சேர்க்கப்பட்டது. 
சூரியக் குடும்பம் (Solar System);  சூரியகுடும்பம் என்பது சூரியனையும்  சூரியனின் ஈர்ப்பு விசையில் சுற்றும் கோள்கள், சிறுகோள்கள், துணை கோள்கள் போன்றவற்றை  உள்ளடக்கிய ஒரு தொகுதி ஆகும். புதன் வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரோனஸ், நெப்டியூன் ஆகிய எட்டு கோள்கள் சூரிய குடும்பத்தை சேர்ந்த கோள்கள் ஆகும்.

சிறுகோள்கள் அல்லது குறுங்கோள்கள்:  செரசு, புளூடோ, எரிஸ், ஹௌமியா, மேக் மேக், செட்னா ஆகியவைகள் ஆகும். 

துணைக் கோள்:  நீலா ஆகும்.

போற்றப்படும் அறிவியல் அறிஞ்சர்கள்;   நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், கலீலியோ கலிலியோகான்னசு கெப்லர்,  ஐசக் நியூட்டன்,  ஆகியோர்கள் மிகவும் முக்கியமானவர்கள் ஆவர். 

Sep 13, 2014

YAHOO மற்றும் GOOGLE வந்த சோதனை!

Sep 14/14: அமெரிக்க உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காவிட்டால், இணையதள நிறுவனமான, 'யாகூ'வுக்கு, நாள் ஒன்றுக்கு, 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ராணுவம் மற்றும் வெளியுறவுத் துறை ரகசியங்களை இணையதளம் மூலம் அம்பலப்படுத்தினார், எட்வர்ட் ஸ்னோடென் என்ற அமெரிக்க உளவுத்துறை அதிகாரி. அதையடுத்து, உலகம் முழுவதும் உள்ள இணையதளங்களை உளவு பார்க்கத் துவங்கிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு துறை, அது குறித்த தகவல்களை, அவ்வப்போது, யாகூ மற்றும் கூகுள் இணையதளங்களிடம் கேட்டு பெறுகிறது.

இவ்வாறு கொடுப்பது தன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது போன்றதாகும் என தெரிவித்து, அந்தத் தகவல்களை வழங்க, யாகூ மறுத்தது. இதனால் கோபமடைந்த அமெரிக்க உளவுப்பிரிவு கண்காணிப்பு கோர்ட், 'எத்தனை நாட்களுக்கு ஒத்துழைக்கவில்லையோ, அத்தனை நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு, ஒன்றரை கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்' என, யாகூவை மிரட்டியது.இதையடுத்து, வேறு வழியில்லாமல், யாகூ இணையதளம், அந்த தகவல்களை வழங்கியதாக, அதன் வழக்கறிஞர், ரோன் பெல், தன் இணையதள பக்கத்தில் எழுதியுள்ளார்.

Sep 4, 2014

இஸ்ரேலின் இருதயம் வரை செல்வோம்!

செப் 04/14: ஹமாஸின் இராணுவ எழுச்சியும், அவர்களின் போராட்ட முறைமைகளும் இஸ்ரேலை கலக்கமடைய செய்துள்ளது. ஹமாஸ் அடைந்த  இராணுவ வெற்றி காட்டிலும் அவர்கள் பெற்ற அரசியல் வெற்றி இஸ்ரேலை திகைக்க வைத்துள்ளது. 

காஸா மீதான இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பு அதன் திட்டமிட்ட யுத்த நிகழ்ச்சி நிரல்களிற்கு மாற்றமாக நடந்த போது அதிர்ந்தது இஸ்ரேல் மட்டுமல்ல மொத்த உலகமும்தான். மொத்த அரபு தேசங்களையும் தனது ராணுவ பலத்தால் அச்சுறுத்தி வந்த இஸ்ரேலுக்கு காஸாவின் தோல்வி அதன் எதிர்காலத்தையே தோல்வி பயத்தில் தள்ளியது. 

ஹமாஸ் இயக்கத்தின் ராணுவ பிரிவான இஸ்ஸத்தீன் அல்-கஸ்ஸாம் போராளிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தற்காகாப்பு சண்டைகள் என்ற எல்லைகளை தாண்டி இஸ்ரேலை எதிர்த்து போர் செய்யும் அதன் ராணுவ வலிமையையும், திடமான மனோ வலிமையையும் கண்ட இஸ்ரேலிய ஸியோனிஸ அரசு கதிகலங்கி விட்டது என்றே சொல்லலாம். இஸ்ரேல் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை உலகுக்கு தரலாம் என்று எண்ணி இஸ்ரேலின் எண்ணம் தவிடுபொடி ஆக்கப்பட்டுள்ளது.

இந்த யுத்தத்தில் ஹமாஸ் போராளிகள் மட்டுமன்றி காஸாவின் பொது மக்களும் யூத இராணுவத்தின் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்கள், பீரங்கி தாக்குதல்கள், விமானங்களின் காட்டுத்தனமான குண்டுத் தாக்குதல்கள், ஏவுகணை தாக்குதல்கள் ஆகியவற்றால் ஏற்பட்ட  உயிர் மற்றும் பொருள் இழப்புகளை தாங்கி கொண்டு தங்கள் போராளிகளுடன் துணை நின்றது வரலாற்றின் வைர வரிகளில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும். இது ஹமாஸ் இயக்கம் எந்த அளவு பாலஸ்தீன மக்களின் உள்ளங்களை வென்றுள்ளது என்பதை பறைசாற்றுகிறது. 

உலகின் உயர்ந்த இனம் என தம்மையும், ஏவல் நாய்கள் என பலஸ்தீனர்களையும் எண்ணி இறுமாத்திருந்த யூத தேசத்தின் தலைவர்களிற்கு தங்கள் சிந்தனைகள் மற்றும் தீர்மானங்கள் பற்றிய மீள்பார்வையின் அவசியத்தை உணர்த்துவதாக காஸா ஆக்கிரமிப்பு - 2014 அமைந்துள்ளது. பயங்கரவாதிகள் என அமெரிக்க அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட “ஹமாஸ்” இந்த இஸ்ரேலிய மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்பு முயற்ச்சியால் “மக்களின் பாதுகாப்பிற்கும் விடுதலைக்கும் போராடும் தியாகம் மிகுந்த இயக்கம்” எனும் புது முகவரியுடன் உலகம் முழுக்க வலம் வருகிறது. உலக விடுதலை இயக்கங்கள் பட்டியலில் ஹமாஸை லத்தீன் அமெரிக்க நாட்டு பத்திரிகைகள் புகழும் அளவிற்கு அதன் வல்லமை வளர்ந்துள்ளது.

ஹமாஸ் தங்கள் போராட்டத்தின் அரசியல் மற்றும் இராணுவ வெற்றிகள் பற்றி புளுகாங்கிதம் அடைந்துள்ளது. அதன் போராளிகள் உற்சாகமாக வாகனங்களில் பவனி வருகிறார்கள். குழந்தைகள் குண்டுகள் வீழ்ந்து வெடித்துச் சிதறிய வீதிகளில் இனிப்பு மிட்டாய்கள் வழங்க மகிழ்கின்றனர். ஹமாஸ் நேற்றைய தினம் காஸா மக்களிற்கும், உலகம் முழுவதும் வாழும் பலஸ்தீனர்களிற்கும் விடுத்த செய்தியில்...  “நாம் வெற்றி பெற்றுள்ளோம். நாம் இன்னும் எமது படைபலத்தை பெருக்குவோம், சுரங்கங்களை தோண்டி இஸ்ரேலின் இருதயம் வரை  செல்வோம், நவீன ஆயுத பலங்களுடனும் தொழில் நுட்பங்களுடனும் எம்மை கட்டமைப்போம்” என முழங்கியுள்ளது. 

பெண்கள் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள்!

மத தீவிரவாதம் பெண்களை கூட ஈவு இரக்கம் இல்லாமல் 18 முறை கத்தியால் குத்தும் அளவுக்கு கொண்டு சொல்கின்றது.

குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் கர்ப்பிணி பெண்ணை கற்பழித்தது பின்னர் அவள் வயிற்றை கிழித்து அதில் இருந்த குழந்தையை ஈட்டியில் குத்தி தீயில் சுட்டு கொன்றனர், பின்னர் தாயையும் அதுபோன்று கொன்றனர். அதுபோல் உள்ள ஒரு சம்பவம்தான் இது. செய்தி பழையது என்றாலும் படிப்பினை தரவல்லது. 

எகிப்தைச் சேர்ந்த மர்வா ஷெர்பினி தனது பாடசாலைக் காலம் முதல் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கியவர். 1992 முதல் 1999 வரை எகிப்தின் தேசிய கரப்பந்தாட்ட அணியில் அங்கம் வகித்த மர்வா மருந்தாளர் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர். 2005ம் ஆண்டு அலி உக்காஸ் எனும் மரபணுப் பொறியியலாளரை திருமணம் செய்த இவர் ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்தார்.

ஜேர்மனியில் வசித்த காலத்தில் ஏனைய முஸ்லிம்களோடு இணைந்து இஸ்லாமிய கல்விக்கும் கலாசாரத்திற்கும் என நிறுவனமொன்றை ஆரம்பித்தார். இவரது சமய, கலாசார நடவடிக்கைகள் அதிதீவிர வலதுசாரி கிறிஸ்தவர்களிடையே பெரும் காழ்ப்புணர்வை தோற்றுவித்தன.

2008 ஆகஸ்ட் மாதம் ட்ரெஸ்டன் நகரிலுள்ள சிறுவர் பூங்காவில் மகன் முஸ்தபாவுடன் மர்வா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரோமன் கத்தோலிக்கப் பண்பாட்டில் ஊரிய அலெக்ஸ் மர்வா தனது மத அடிப்படையில் ஹிஜாப் அணிந்திருந்தது பொறுக்க முடியாது அவளை  கீழ்த்தரமான வார்த்தைகளால்  திட்டி  தீவிரவாதி என்றும் தூற்றினான். இதனால் மனமுடைந்த மர்வா தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக மாவட்ட நீதிமன்றத்தில் அலெக்ஸ்க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 780 யூரோக்களை அபராதமாக செலுத்துமாறு அலெக்ஸ்க்கு உத்தரவிட்டது. ஆயினும் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து அலெக்ஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தான். இம்மனு மீதான விசாரணை 2009 ஜூன் முதலாம் திகதி இடம்பெற்றது. அப்போது நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாத சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக கொண்ட அலெக்ஸ் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் "நீ இனிமேல் உயிர் வாழத் தகுதியற்றவள்" எனக் கூறியவாறே மர்வா ஷெர்பினி மீது பாய்ந்து 18 தடவை அவரை கத்தியால் குத்திகொன்றான். 

*பெண்கள் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள்  அப்படி என்றால் இவர்கள் பேய்களை விட கேவலமானவர்களா? உடனே பேய் இருக்கா என்று கேட்டு விடாதீர்கள், நம்ம ஊரு பழமொழி ஐயா!*


Aug 23, 2014

இஸ்ரேல் விமான தளங்களை தாக்க திட்டம்!

இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் இருக்கும் விமான நிலையத்தை வெளிநாட்டு விமானங்கள் தவிர்க்க வேண்டும் என ஹமாஸ் இயக்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தாக்குதல்களை தீவிரப்படுத்த திட்டமிட்டிருப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
வியாழக்கிழமை காலை 6 மணி முதல் இந்த எச்சரிக்கை அமலுக்கு வருவதாக ஹமாஸ் செய்தித் தொடர்பாளர்  தெரிவித்துள்ளார். ஃபலஸ்தீனம் – இஸ்ரேல் இடையே சமாதானம் ஏற்படுத்த எகிப்து அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தது. பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் கமாண்டரின் மனைவியும், 7 மாத குழந்தையும் பலியாகினர்.
இதனையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்தது. பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்படும் நல்ல வாய்ப்பை எதிரிகள் தொலைத்துவிட்டனர். இனி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட வாய்ப்பில்லை. கெய்ரோவில் இருந்து ஃபலஸ்தீன தலைவர்கள் நாடு திரும்புவதே நல்லது என ஹமாஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.   

Aug 7, 2014

இஸ்ரேல் ஹமாஸிடம் தோற்றதா?

ஆகஸ்ட் 07/14: இஸ்ரேலுடனான போரில் காஸா வெற்றி பெற்றுள்ளதாக ஹமாஸ் இயக்கமும் அல்ஜிஹாத் அல்இஸ்லாமி இயக்கமும் அறிவித்துள்ளன. 
எகிப்து நாட்டின் தலையீட்டின் மூலம்   அமுலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள 72 மணிநேர யுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்து, இஸ்ரேல் படைகள் வாபஸ் ஆகா தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து ஹமாஸ் மற்றும் அல்ஜிஹாத் அல்இஸ்லாமி இயக்கங்கள் காஸாவின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளன.
ஹமாஸ் இயக்கத்தின் செய்தி தொடர்ப்பாளர் கருத்து தெரிவிக்கையில், இஸ்ரேல் நூறு சதவீதம் தோல்வியை தழுவி விட்டது என்றார். போராளிகள் இன்னும் மாபெரும் பலத்துடனே இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் படைகளை வாபஸ் வாங்கியுள்ளபோதும், எல்லைப் புறத்தில் தயார் நிலையில் அவை இருக்கும் என்று இஸ்ரேலிய ராணுவ கமாண்டர் தெரிவித்துள்ளார். இந்த யுத்தத்தில் தமது தரப்பில் 64 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ஒவ்புக்கொண்டுள்ளது.

Jul 24, 2014

உலக பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்ரேல்!

ஜூலை 24/14: உலகில் ஒரு நாட்டை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்றால் கண்ணை மூடி கொண்டு இஸ்ரேலை அறிவித்து விடலாம். 
உலகில் நாடே இல்லாது நாடோடி கூட்டமாக சுற்றி திரிந்த யூதர்கள் பாலஸ்தீனில் வந்தேறிகளாக குடியேறி அந்நாட்டு மண்ணின் மைந்தர்களை கொன்று குவித்து அகதிகளாக்கி நாட்டை அபகரித்தது. அத்தோடு நில்லாமல் அகண்ட இஸ்ரேல் என்ற கொள்கையோடு காஸா மக்களை இன்றுவரை கொன்று குவித்து வருகிறது. 
இந்நிலையில் சர்வதேச நாடுகளின் நெருக்குதலுக்கு பணியாமல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை தாக்குதலைத் தொடர்ந்தது. காஸாவில் குடியிருப்புப் பகுதிகள் நிறைந்த தென்கிழக்குப் பகுதியில், இஸ்ரேல் ராணுவம் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி இந்த தாக்குதலை நடத்தியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
475 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன், 2,644 வீடுகள் பாதியளவு சேதமடைந்தன. 46 பள்ளிகள், 56 மசூதிகள், 7 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காஸா பகுதியில் கடந்த 17 நாள்களாக இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 720 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்களாவர். மேலும் இந்த சண்டையில் 32 இஸ்ரேல் ராணுவத்தினரும், அந்நாட்டைச் சேர்ந்த 2 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
முன்னதாக காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் புதன்கிழமை தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதற்கு ஐ.நா.சபையில் உறுப்பு நாடுகளாக உள்ள இந்தியா உள்ளிட்ட 29 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 17 நாடுகள் இந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்திருந்தன.

Oct 3, 2013

இன்று நள்ளிரவிற்குள் அமரிக்க அரசு கலைக்கப்படுமா?

Sep 03/2013: இன்று நள்ளிரவிற்குள் அமரிக்க அரசு மூடப்படலாம் அமரிக்க நேரப்படி இன்று நள்ளிரவிற்குள் அந்த நாட்டின் அரசிற்கு மூடுவிழா நடத்தப்படலாம். 

இந்த நிலை தவிர்க்க முடியாத நெருக்கடிக்கான தீர்வா என்ற ஆய்வுகள் எல்லாம் ஏற்கனவே வெளியாக ஆரம்பித்துவிட்டன. இன்றையை நள்ளிரவு வரையிலான ஊசலாட்டத்தின் பின்புலம் செனட் சபைக்கும் காங்கிரசுக்குமான பனிப்போராக வெளிப்படுத்தப்படுகிறது
.
அமரிக்க ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையாகவுள்ள செனட் சபை குடியயரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள அரச பிரதிநிதிகளால் அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை நிராகரித்துள்ளது. 54- 46 என்ற எண்ணைக்கை அடிப்படையில் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது. பராக் ஒபாமாவினால் முன்மொழியப்பட்ட சுகாதார திட்டத்தை ஒரு வருடத்திற்கு பிற்போடுமாறு செனட் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான முடிவை இன்று நள்ளிரவிற்குள் வழங்காவிட்டால் அமரிக்க அரசைக் கலைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதன் முதல் விளைவாக 7 லட்சம் அமரிக்க அரச ஊழியர்கள் எந்த முன்னறிவிப்புமின்றி வேலையிழப்பர். அவர்கள் மறுபடி வேலை பெற்றுக்கொள்வதற்கான எந்த உத்தரவாதமும் வழங்கப்படாது. அமரிக்கப் பங்கு சந்தை மட்டுமல்ல உலகம் முழுவதும் பங்குசந்தைப் பெறுமானங்கள் இன்று முடிவுகளுக்கு முன்பதாகவே வீழ்ச்சியடைந்துள்ளது. டலரின் பெறுமானம் ஏனைய நாணயங்களுக்கு எதிராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அரசிற்கு மூடுவிழா நடைபெறுமானால் அமரிக்க ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் பெரும் நெருக்கடிகள் உருவாகும். முதலாம் உலகப் போரின் பின்னதாக
உலகம்  அமரிக்காவின் அரசியல் நகர்விலேயே அசைந்து கொண்டிருக்கின்றது. பல்தேசிய நிறுவனங்கள் எஞ்சியவற்றைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகத் தலைப்படும். வங்கிகளில் வைப்பிட்ட பணங்களை மீளப் பெறமுடியாதிருக்கும். பொருட்களின் விலை அதிகரிக்கும். சட்டம் ஒழுங்கு பாதிப்படையும்.

இன்றிரவு உலகம் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்கொள்ண்டாலும் மிகக் குறுகிய காலத்துள் இது நிகழப் போவது தவிர்க்க முடியாத ஒன்று. 
ஓகஸ்ட் மாதம் 17 ம் திகதி அமரிக்க அரசின் கடன் தொகை அதன் உச்சத்தை அடையும். அதன் பின்னர் அமரிக்க அரசு சட்டப்படி கடன் பெற முடியாது. பெறப்படும் கடனுக்கு உத்தரவாதம் வழங்க முடியாது.
இதனால் கடனாளியாக அமரிக்கா என்ற நாட்டையே திவாலாக்குவதா அன்றி சென்ட் சபையின் சிக்கல் என்ற எல்லைக்குள் அரசை நிறுத்துவதா என்ற கேள்வியே இன்றைய கேள்வி. 
ஆக, இன்று இரவே அமரிக்க அரசைக் கலைத்துவிடுவதே வசதியானது என்றும், இதனால் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகைகளை நீண்ட காலத்திற்குப் பிற்போடலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Feb 19, 2013

சட்டவிரோதமாகக் தங்கி இருப்பவர் விசயத்தில் புதிய சட்டம்!

பிப் 20/2013: உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து அமெரிக்காவுக்கு விசிடிங், டூரிஸ்ட், ஸ்டூடன்ஸ் விசா மற்றும் மெக்சிகோ பார்டர் கிராசிங் என்று பல்வேறு வழிகளில் நுழையும் வெளிநாட்டினர் அங்கே ஓவர் ஸ்டே ஆகிவிடுகிறார்கள்.

இப்படி சட்டவிரோதமாகக் தங்கி இருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டும். இந்நிலையில் சட்ட விரோதமாக 8 ஆண்டுகளுக்கு மேல் தங்கி இருப்பவர்களுக்கு முறையான குடியுரிமை வழங்க, அமெரிக்க அரசு முன்வந்து உள்ளது. 

இதற்கான புதிய சட்டம் இயற்றப்பட உள்ளது. இது குறித்த ஆவணங்கள் பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன்படி முறையான அமெரிக்க விசா பெற விண்ணப்பிப்பவர்கள், தங்கள் குற்றப்பின்னணி, மற்றும் கைரேகை பதிவு உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிப்பதுடன், கட்டண தொகையும் செலுத்த வேண்டும். இவர்களின் விசா அங்கீகரிக்கப்பட்டவுடன், அமெரிக்காவில் சட்டபூர்வமாக வசிக்கவும், பணிபுரியவும் அனுமதி வழங்கப்படும்.

மேலும், தங்கள் சொந்த நாடுகளுக்கு குறுகிய கால பயணம் சென்று வரவும் அவர்கள் அனுமதிக்கப்படுவர். அதன்பின், அவர்களுக்கு வழங்கப்படும் முறையான வசிப்பிட அடையாள அட்டையை வைத்து, எட்டு ஆண்டுகளில், "க்ரீன் கார்டு'க்கு அவர்கள்  விண்ணப்பிக்கலாம். ஆனால், அதற்கு ஆங்கிலமும், அமெரிக்க வரலாறும் கற்பதுடன், அரசுக்கு போதுமான அளவு வரியும் செலுத்தி இருக்க வேண்டும். "க்ரீன் கார்டு' பெற்றவர்கள், அமெரிக்கக் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம். இந்த சட்டத்திற்கு  அமெரிக்காவின் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியும் ஆதரவு தெரிவித்து உள்ளது.

Nov 24, 2012

உலகத்தையே வியக்க வைக்கும் சீனா!


Nov 25: உலகின் மிக பெரிய கட்டிடத்தை சைனா கட்ட உள்ளது. அந்த கட்டிடதிற்கு ஸ்கை சிட்டி (SKY CITY ) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் தற்போதைய உலகின் பெரிய கட்டிடமான பர்ஜ் துபாய்யை விட 10 மீட்டர் அதிகமாக இருக்கும். இந்த கட்டிடம் சைனாவின் ஹுனான் பிரதேசத்தின் கட்டப்பட இருக்கிறது.

இதில் உலக அதிசயம் ஒன்று நடக்க இருக்கிறது, இந்த கட்டிடம் வெறும் 90 நாட்களில் கட்டி முடிக்கப்பட உள்ளது. ஜனவரி 2013 இல் தொடங்கி மார்ச் 2013 இந்த கட்டிடம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் மொத்த உயரம் 838 மீட்டர் ஆகும்.

பர்ஜ் துபாய் கட்டடிடம் 2719 அடி உயரம் கொண்டது அதை கட்டி முடிக்க 5 வருடகாலம் ஆனது. ஆனால் சைனா கட்ட போகும் கட்டடம் 2749 அடி உயரம் கொண்டது வெறும் 90 நாட்களில் கட்டி முடிக்கப்பட இருக்கிறது.

சிந்திக்கவும்: சைனாவால் அது முடியும் அவர்கள் ஒலிம்பிக் போட்டியை நடத்திய விதத்தை வைத்தே அதை கணிக்க முடிகிறது. நாம நடத்திய காமன்வெல்த் போட்டியின் இலட்சணம் உலகமே சிரித்தது. உலகில் சீனாவுக்கு அதிக்கப்படியாக மக்கள் தொகையை கொண்ட ஒருநாடாக இருந்து கொண்டு ஒலிம்பிக்கில் ஒருதங்கம் வெல்ல தவம் கிடக்க வேண்டியது இருக்கிறது.

உகலம் முழுக்க சைனாவின் பொருட்கள் ஆக்கிரமித்துள்ளது. ஆனால் நம்ம பொருளாதார புலி மண்ணு மோகன் உள்நாட்டு உற்பத்தியை பெருக்கி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை கொடுத்து நாட்டை வளப்படுத்துவதை விட்டு பெப்சி, கொக்க கோலா, வால்மார்ட், இப்படி கார்பரேட் கொள்ளைகாரர்கள் இங்கே வந்து வியாபாரம் செய்து வேலையில்லாத மக்களுக்கு வேலை கொடுப்பான், இந்தியாவை வளப்படுத்துவான் என்று சாத்தான் போல் வேதம் ஓதுகிறார்.

SELF EMPLOY என்கிற சுய தொழில் செய்யும் நமது சிறுவணிகர்களின் வயிற்றில் அடித்து வேலையில்லா திண்டாட்டத்தை உண்டாக்க சதி செய்கின்றனர். மக்கள் விழிப்படைவார்களா?

Nov 6, 2012

ஒபாமா அமோக வெற்றி! மீண்டும் அதிபராகிறார்!


Nov 07: அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபர் ஒபாமா வெற்றி பெற்றார்.

மொத்தம் உள்ள 538 இடங்களில் 270 பிரதிநிதிகளின் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ அவரே அதிபராவார். ஒபாமா மொத்தம் 274 இடங்களை பெற்று ஒபாமா மீண்டும் அமெரிக்க அதிபர் ஆனார்.

ஒபாமாவின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் மாநிலங்களில் கலிபோர்னியா முதலிடம் வகிக்கிறது. கலிபோர்னியா, நியூயார்க், இல்லினாயிஸ், மிநிசோடா ஆகிய மாநிலங்கள் ஒபாவின் வெற்றிவாய்ப்பை நிர்ணயித்தது.
 
ஒபாமாவின் வெற்றியை அமெரிக்காவில் குடிஉரிமை பெற்ற வெளிநாட்டினர் குறிப்பாக மெக்சிகோ, ஆப்ரிக்கா, சோமாலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, ஈரான், ஈராக், சிரியா, போன்ற வெளிநாட்டினர் விரும்புகின்றனர்.
 
அதுபோல் அமெரிக்காவில் உள்ள ஆப்ரிக்கன் அமெரிக்கன் அதாவாது கருப்பு இனமக்கள் ஒபாமா வெற்றி பெறுவதையே விரும்பினர். ஒபாமாவின் வெற்றியை ஒபாவின் ஆதரவாளர்கள் விமர்சையாக கொண்டாடுகிறார்கள்.

Nov 5, 2012

நீயா! நானா! ஜெயிக்க போவது யாரு?


Nov 06: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நாளை நடக்கிறது. அமெரிக்காவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். ஒருவர் அதிபராக 2 முறை பதவி வகிக்கலாம்.
 
அமெரிக்காவில் மொத்தம் இரண்டே கட்சிகள்தான் ஒன்று குடியரசு கட்சி, மற்றொன்று ஜனநாயக கட்சி. ஜனநாயக கட்சி சார்பில் 2வது முறையாக தற்போதைய அதிபர் ஒபாமா போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார்.
 
அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளது. அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்க அரசியல் நிர்ணய சபை என்று ஒன்று உள்ளது. அந்த சபையில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து 538 பிரதிநிதிகள் அங்கம் வகிப்பார். அந்த சபைக்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்க வாக்குப் பதிவு நாளை நடக்கிறது. இதில் வெற்றி பெறும் பிரதிநிதிகள் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள். மொத்தம் உள்ள 538 இடங்களில், 270 பிரதிநிதிகளின் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ அவரே அதிபராவார்.
 
இந்நிலையில், அனல் பறக்கும் பிரசாரம் நேற்று இரவு முடிந்த நிலையில், 50 மாகாணங்களில் இன்று அதிபர் தேர்தல் நடக்கிறது. கடந்த சில மாதங்களாக  தற்போதைய அதிபர் ஒபாமாவும் எதிர்க்கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியும்  சூறாவளி பிரசாரம் செய்தனர். எனினும், இருவருக்கும் சம பலத்துடன் இருப்பதாக கருத்து கணிப்புகள் தகவல்  வெளியாகி உள்ளது. சில மாநிலங்களில் ஒபாமாவுக்கும் சில மாநிலங்களில் மிட் ரோம்னிக்கு ஆதரவு அமோகமாக உள்ளது. எனினும், வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் மாநிலமாக ஓஹியோ அமைந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சிந்திக்கவும்: அமெரிக்காவை ராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டாள் என்ன? எங்களுக்கு அதை பற்றி கவலையில்லை என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. சும்மா ஒரு செய்திக்காக சொல்லி வைத்தேன் ஐயா. அது சரி நமக்கு நிச்சயமா கவலையில்லை ஆனால் நம்ம மண்ணு மோகன் சிங்கு வகைரா எதிர்பார்த்து காத்து கிடக்கிறதே!

Sep 15, 2012

திரைப்படம் மூலம் குழப்பம் உண்டாக்கும் யூதர்கள்!

முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும்  முஹம்மது நபி(ஸல்) அவர்களை மிக மோசமாக அவமதிக்கும் திரைப்படம் ஒன்று அமெரிக்காவில் வசிக்கும்  யூதன் ஒருவனால் தயாரிக்கப்பட்டுள்ளது. 
இன்னும் வெளிவராத இந்த படத்தின் ட்ரைலர் யூட் டுயுப்யில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதிலும் வாழும் முஸ்லிம்கள் இதற்க்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதும் அமெரிக்காவை கண்டித்து பலவகையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக வீதிகளில் இறங்கி  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் SDPI கட்சி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தவ்கீத் ஜமாஅத் போன்ற அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

Aug 17, 2012

அமெரிக்க குடியுரிமை சட்டத்தில் மாற்றம்! இந்தியர்களே உஷார்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய குடியுரிமை சட்டப்படி நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதைத் தடுக்க ஏராளமான இந்தியர்கள் உள்ளிட்டோர் நேற்று விசாவை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்தனர்.

பல்வேறு காரணங்களால், மாணவர் விசா, சுற்றுலா விசா போன்றவற்றை பயன்படுத்தி, அமெரிக்கா சென்றவர்கள் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். விசா, காலாவதியான பிறகும் பலர் அங்கேயே தங்கியுள்ளனர்.

இது போன்று முறைக்கேடாகத் தங்கியுள்ளவர்களை அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்ப அதிபர் ஒபாமாவின் புதிய குடியுரிமை கொள்கை வழி வகுத்துள்ளது.அமெரிக்காவில் 17.6 லட்சம் பேர் முறைக்கேடாக தங்கியுள்ளனர். இவர்களில் 30 ஆயிரம் பேர் இந்தியர்கள். இவர்கள் அனைவரும் 31 வயதுக்குட்பட்டவர்கள்.

Jul 16, 2012

இன அழித்தொழிப்பு செய்ய சதி திட்டம்! ஸுல்ஹி!!


கெய்ரோ, july.17: கிட்டத்தட்ட 10 மில்லியன் முஸ்லிம்களை இன அழித்தொழிப்புச் செய்ய மியான்மரில் சதித்திட்டம் தீட்டப்பட்டு முயற்சிகள் நடப்பதாக அந்நாட்டைச் சார்ந்த முஸ்லிம் இளம் பெண்மணி ஆயிஷா ஸூல்ஹி கூறுகிறார். எகிப்தில் உள்ள ஷரீஆ கல்லூரியில் பயின்று வருகிறார் ஸூல்ஹி.
முஸ்லிம்களுக்கு எதிராக கொடூரங்களை குறித்து ஆயிஷா ஸூல்ஹி அல் வதனுல் மிஸரிய்யா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்  கூறியது: “பெளத்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகள் அங்குள்ளமு ஸ்லிம்களுக்கு மதுபானம், பன்றி இறைச்சி அல்லது மரணம்- இதில் எதை தேர்ந்தெடுக்கப் போகின்றீர்கள் என்று சாய்ஸ் வழங்குகின்றனர். ஆனால், முஸ்லிம்கள் மரணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள்.

Jun 14, 2012

பர்மாவை கண்டும் காணாத ஐ நா வை கண்டித்து!?

பர்மாவில் நடைபெற்று வரும் இன கலவரத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டும் சொந்த மண்ணிலேயே அநாதையாக்கப்பட்டு உள்ளனர்.

இதனை ஐக்கிய நாடுகள் சபை கண்டும் காணாமல் கண்மூடி மௌனம் சாதிப்பதை கண்டித்து வரும் 19.06.2012 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பெசன்ட் நகர் பீச் அருகில் உள்ள ஐ,நா,அகதிகள் மறுவாழ்வு துறை அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது .இந்த போராட்டத்தில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அணியணியாய் கலந்து கொள்ள கேட்டுகொல்கிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.













Aug 8, 2011

விரல் ரேகை இல்லாத மனிதர்கள் !!

august 9,வாஷிங்டன்: விரல் ரேகை ஒருவரின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. ஒருவருக்கு உள்ளது போல விரல் ரேகை இன்னொருவருக்கு இருக்காது. அதனால்தான் மனிதர்களை அடையாளம் காண எல்லா நாடுகளும் விரல் ரேகைகளை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றன. விரல் ரேகையே இல்லாமலும் சிலர் இருக்கின்றனர். மிகமிக அரிதாக அப்படி நடப்பதுண்டு.

ரேகை இல்லாமல் இருப்பது ஒருவகை தோல் நோய் என்கின்றனர் டாக்டர்கள். விரல் ரேகை பற்றிய ஆராய்ச்சியை டெர்மடோகிளிபியா என்று அழைக்கின்றனர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை சேர்ந்த தோல்நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் இலி ஸ்பீரிச்சர் தலைமையிலான குழுவினர், விரல் ரேகை இல்லாமல் இருப்பதற்கு காரணமான மரபணு மாற்றத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரை, அமெரிக்க மனித மரபணுக்கள்Õ இதழில் வெளியாகி உள்ளது. சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பிறந்ததில் இருந்தே விரல் ரேகைகள் இல்லை. அனைவரும் டெர்மடோகிளிபியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களை டாக்டர் இலி ஸ்பீரிச்சர் குழுவினர் ஆய்வு செய்து சில மருத்துவ உண்மைகளை கண்டறிந்துள்ளனர்.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உள்ளங்கை, விரல், கால் விரல்கள், பாதம் எல்லாமே வழுவழுவென இருக்கின்றன. விரல் ரேகை பதிவு செய்தால், கோடுகள், வட்டங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும். குறிப்பிட்ட ஒரு மரபணு மாற்றம், தோல் பகுதியை மட்டும் பாதிக்கிறது.

மற்ற உறுப்புகளை பாதிக்காது. அதுபோல் விரல் ரேகைகளை மட்டும் பாதிக்கும் புரோட்டீன் எது என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் டாக்டர் இலி. சுவிஸ் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவுக்கு சென்ற போது விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் பிடித்துக் கொண்டனர். அவருக்கு விரல் ரேகை இல்லாததால், தீவிரவாதி என நினைத்து அவரிடம் கேள்விகள் கேட்டு துளைத்தது குறிப்பிடத்தக்கது.

Jul 26, 2011

சாட்டிலைட்டில் இருந்தும் தெரியுது கோடீஸ்வரரின் பெயர்!!

July 27,அபுதாபி: தன் பெயரை எதிலாவது எழுத வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு. மரத்தில், பஸ் சீட்டில், மலை உச்சியில்.. இப்படி பொறித்து வைப்பார்கள்.

 ஐக்கிய அரபு குடியரசின் அபுதாபி மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர். உலக கோடீஸ்வரர்களில் ஒருவர். உலகில் அதிகம் கார் வைத்திருப்போர் லிஸ்ட்டில் முன்னணியில் இருப்பவர். வகைக்கு ஒன்றாக 200 கார், டிரக் வைத்திருக்கிறார்.

அபுதாபிக்கு அருகில் உள்ள ஃபுடாய்சி என்ற தீவை இவரது தந்தை இவருக்கு பரிசாக கொடுத்தார். அதில் தனது பெயரை ரத்தின சுருக்கமாக ‘ஹமத்’ என்று முக்கால் கி.மீ. உயரம், 3 கி.மீ. நீளத்துக்கு எழுதி வைத்திருக்கிறார். இந்த எழுத்துகள் அனைத்தும் பிரமாண்ட பள்ளம் வெட்டியதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. கடற்கரையில் இருந்து பிரமாண்ட பள்ளம் வெட்டி அதில் கடல் நீரை வரவழைத்துள்ளார்.  செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் போட்டோக்களில்கூட அவரது பெயர் தெரிகிறது.  இதற்காக அவர் ரூ.99 ஆயிரம் கோடி செலவு செய்திருக்கிறார்.

சிந்திக்கவும்: ஒரு பக்கம் மக்கள் பசியால், பட்டினியால் சாவுகிறார்கள் இதை போன்ற செல்வந்தர்கள் பணத்தை இப்படி செலவு செய்கிறார்கள். இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் வீடுதான் உலகிலேயே அதிக பொருள் செலவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிட தக்கது. இப்படி பட்ட சுயநலம் கொண்டவர்களின் செல்வங்களை பறித்து ஏழை மக்களுக்கு கொடுக்க வேண்டும்.