Jul 24, 2014

உலக பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்ரேல்!

ஜூலை 24/14: உலகில் ஒரு நாட்டை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்றால் கண்ணை மூடி கொண்டு இஸ்ரேலை அறிவித்து விடலாம். 
உலகில் நாடே இல்லாது நாடோடி கூட்டமாக சுற்றி திரிந்த யூதர்கள் பாலஸ்தீனில் வந்தேறிகளாக குடியேறி அந்நாட்டு மண்ணின் மைந்தர்களை கொன்று குவித்து அகதிகளாக்கி நாட்டை அபகரித்தது. அத்தோடு நில்லாமல் அகண்ட இஸ்ரேல் என்ற கொள்கையோடு காஸா மக்களை இன்றுவரை கொன்று குவித்து வருகிறது. 
இந்நிலையில் சர்வதேச நாடுகளின் நெருக்குதலுக்கு பணியாமல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை தாக்குதலைத் தொடர்ந்தது. காஸாவில் குடியிருப்புப் பகுதிகள் நிறைந்த தென்கிழக்குப் பகுதியில், இஸ்ரேல் ராணுவம் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி இந்த தாக்குதலை நடத்தியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
475 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன், 2,644 வீடுகள் பாதியளவு சேதமடைந்தன. 46 பள்ளிகள், 56 மசூதிகள், 7 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காஸா பகுதியில் கடந்த 17 நாள்களாக இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 720 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்களாவர். மேலும் இந்த சண்டையில் 32 இஸ்ரேல் ராணுவத்தினரும், அந்நாட்டைச் சேர்ந்த 2 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
முன்னதாக காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் புதன்கிழமை தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதற்கு ஐ.நா.சபையில் உறுப்பு நாடுகளாக உள்ள இந்தியா உள்ளிட்ட 29 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 17 நாடுகள் இந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்திருந்தன.

1 comment:

gurumoorthy said...

one side Judgement sir