எப்ரல் 2, சீமானுக்கு தைரியம் உள்ளதா?; எஸ்.வி. சேகர் பாய்ச்சல். நடிகர் எஸ்.வி. சேகர் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ’சென்னை மயிலாப்பூர் தொகுதியில் எனக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்து நான் கவலைப்படவில்லை.
தேர்தலுக்கு பின் நிச்சயம் தங்கபாலு கவலை படுவார். சினிமா இயக்குனர் சீமான் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிப்போம் என்கிறார்.
அவருக்கு தி.மு.க. வேட்பாளர்களையோ, பா.ம.க. வேட்பாளர்களையோ தோற்கடிப்போம் என்று கூற தைரியம் உள்ளதா? இதே சீமான் கடந்த சில ஆண்டுகளுக்கு தம்பி என்ற சினிமாவை எடுத்தார்.
அதில் நடித்தது சிங்கள பெண் பூஜா. அப்போது சீமானுக்கு தமிழன் என்ற உணர்வு எங்கே போய்விட்டது’’ என்று கேள்வி எழுப்பினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment