Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Apr 22, 2013

பிளஸ் டூ மாணவர்களுக்கு சில டிப்ஸ்!

ஏப்ரல் 23/2013: பிளஸ் டூ முடித்தவுடன் அடுத்து என்ன படிப்பது? பொதுவே எந்த துறையில் படிப்பது என்கிற சந்தேகம் மாணவர்களுக்கு ஏற்ப்படும்.

எந்த துறையில் படித்தால் வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என்கிற எண்ணமும், படித்த படிப்பினை கொண்டு நல்ல வேலையில் சேர முடியுமா? என்கிற பயமும் இயல்பாக ஏற்ப்படும்.

முன்பு எல்லோரும் சொப்ட்வெர் இஞ்சினியர் படிப்பில் அதிக வேலை  வாய்ப்புகள் உண்டு என்று எல்லோரும் அதே துறையை படித்து அந்த துறையில் மிகுந்த போட்டியும், மந்தநிலையம்  நிலவுகிறது.

இப்பொழுது அதிக வேலை வாய்ப்புகளை அள்ளி தரக்கூடிய துறையாக  பெட்ரோலியம் இன்ஜினியரிங், ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங், மரைன் இன்ஜினியரிங், நேனோ இன்ஜினியரிங் போன்ற துறைகள் விளங்குகின்றன.

பெட்ரோலியம் இன்ஜினியரிங்: கச்சா எண்ணெயை பெறுவதற்கான புதிய வழிகள் மற்றும் எரிபொருள் உற்பத்தி தொடர்பான விசயங்கள். எண்ணெய் வளத்தை கண்டுபிடிப்பது, பெட்ரோல் மற்றும் எரிவாயுவை பிரித்தெடுப்பது போன்றவற்றை இத்துறை கற்றுத்தருகிறது

ஏரோ நாட்டிக்கல் இஞ்சினியரிங்: விமானம் வடிவைப்பு மற்றும் தொழில் நுட்பம் தான் ஏரோ நாட்டிகல் படிப்பாகும். ஏரோ நாட்டிக்கல்  இறுதியாண்டு படிக்கும் போதே வேலை உறுதி செய்யப்பட்டு விடும் அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படிப்பாக இது திகழ்கிறது. பல நாடுகளில் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியர்கள் தேவையாக உள்ளனர். 

மரைன் இஞ்சினியரிங்: இந்திய வர்த்தகத்தில் பெரும் பகுதி கடல் சார்ந்தே நடக்கிறது. மெரைன் இஞ்சினியரிங் என்பது கப்பல் இயங்கும் முறையை, மற்றும் தொழில் நுட்பங்களை கற்று தருவதாகும்.   இத்துறை பயின்றவர்களுக்கு இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அதிக அளவிலான வேலை வாய்ப்புக்கள் உண்டு.

நேனோ இஞ்சினியரிங்:  நேனோ என்பது நீளத்தை அளக்கும் ஒரு அளவு கோல், ஒரு மைக்ரோ மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கை நேனோ மீட்டர் என்று சொல்லலாம். நேனோ மீட்டர் அளவில் இருக்கும் பொருள்களை வைத்து செய்யும் தொழில் நுட்பத்தை சுருக்கமாக நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள். உதாரணமாக பெரிய அளவிலான பொருட்களை சுருக்கி மிக சிறியவடிவில் செய்வதை கூட நேனோ டெக்னாலஜி என்று சொல்லலாம். இந்த படிப்பும் அதிக வேலை வாய்ப்புகளை பெற்று தர கூடியது.

Jul 22, 2011

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அசத்தும் அரசு பள்ளிக்கூடம்!

JULY 23, மேட்டுப்பாளையம்: "டிப்-டாப்' சீருடை, லேப்-டாப் கம்ப்யூட்டர், பவர்-பாயின்ட் படிப்பு, நுனி நாக்கில் ஆங்கிலம் என அசத்துகின்றனர், அந்த பள்ளியின் மாணவர்கள். இவர்கள் யாரும் ஊட்டி சர்வதேச பள்ளிகளில் படிக்க வில்லை கோவை மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மாணவர்கள் தான்.

தனியார் பள்ளிகளே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு ஹைடெக் ஆக வளர்ந்து வருகிறது, இந்த பள்ளி. மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, சிறுமுகையை அடுத்த லிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் தன்னை அடையாளம் காட்டி வருகிறது. மாணவர்கள் அழகான சீருடை அணிந்து, மிடுக்கான தோற்றத்துடன், பள்ளிக்கு வருகின்றனர். தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில், பவர் பாயின்ட் புரோஜக்டரில் ஆசிரியர்கள் ஆங்கிலப் பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர்.

மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, மாணவர்கள் ஆங்கிலம் பேசுவது அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது. பள்ளி தலைமை ஆசிரியை கூறியதாவது: இப்பள்ளியில் காந்தவயல், காந்தையூர், உளியூர் ஆகிய மலைவாழ் கிராமங்கள் மற்றும் லிங்காபுரத்தை சேர்ந்த குழந்தைகள் படிக்கின்றனர். மொத்த மாணவர்களில், 50 சதவீதம்பேர் மலைவாழ் இனத்தை சேர்ந்தவர்கள்.

நன்கொடை பெற்று அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச சீருடை, நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.  தனியார் பள்ளிகளுக்கு இணையாக இருக்கை, நூலக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அறிவியல் திறன் வளர்க்க அறிவியல், கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் உள்ளன. "டிவிடி' புரோஜக்டரில் திரையிட்டு கற்பிக்கப்படுவதால், நன்கு ஆங்கிலம் கற்கின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வம் குறையாமல் வருகின்றனர்.

வாழ்க்கை கல்வியை வளப்படுத்தும் வகையில் களப்பயணம், யோகா, ஸ்போக்கன் இங்க்லீஷ், ஓவியப் பயிற்சி, இசையுடன் கூடிய கூட்டு உடற்பயிற்சி, கணிதக் கல்வி, ஆடல்பாடல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கடந்தாண்டு அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற இப்பள்ளி மாணவர்கள்,  பரிசுகள் பெற்றனர்.  ஆசிரியர்களின் கடும் முயற்சியால், இன்று தனியார் பள்ளிகளுக்கு இணையாக இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. ஆசிரியர்கள் நன்கு பாடம் சொல்லி கொடுப்பதால், மூன்று மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

Jun 12, 2011

கல்வி கொள்ளையர்களுக்கு கடிவாளமா?

JUNE 13, தனியார் பள்ளிகள் கட்டணம் குறித்து மேல் முறையீடு செய்த 6400 பள்ளிகளுக்கான திருத்திய கட்டணம் நாளை வெளியாகிறது. புதிய கட்டணங்கள் எப்படி நிர்ணயிக்கப்பட்டது என்பது குறித்தும் கட்டணக் குழு நாளை விளக்கம் அளிக்க உள்ளது.

தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்த நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டணக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் இந்த கட்டணத்தில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று 6400 பள்ளிகள் மேல் முறையீடு செய்தன.  பின்னர், கட்டணக் குழுவின் தலைவராக நீதிபதி ரவிராஜபாண்டியன் பொறுப்பேற்றார். அவர் 15.11.2010 முதல் 4.5.2011 வரை பள்ளி நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தினார்.

நேர்காணலின் போது ஒவ்வொரு பள்ளியும் அளித்த விவரங்கள், மேல் முறையீடு செய்தபோது அளித்த விவரங்கள், நேர்முகத் தேர்வின்போது அளித்த விவரங்கள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து ஆடிட்டர்களின் தணிக்கைக்கு உட்படுத்தி மீண்டும் அவற்றை கட்டணக் குழு சரிபார்த்தது.

இதையடுத்து கடந்த சில நாட்களாக இறுதி ஆணை தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து புதிய கட்டணத்தை வெளியிட அரசு அனுமதி வழங்கியது.  இதையடுத்து மேல் முறையீடு செய்த மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஐசிஎஸ்இ பள்ளிகள் அடங்கிய 6357 பள்ளிகளுக்கு இறுதி ஆணைகள் தயார் நிலையில் உள்ளன.

இறுதி ஆணைகள் நாளை (13ம் தேதி) அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.  நாளை காலை 10.30 மணி அளவில் டிபிஐ வளாகத்தில் உள்ள கட்டணக் குழு அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இறுதி ஆணைகள் அடங்கிய கவர்களை பெற்றுக் கொள்வார்கள்.

அதன் பின் அந்தந்த மாவட்டங்கள் ஏதாவது ஒரு மையத்துக்கு அந்தந்த பள்ளிகளை வரவழைத்து இறுதி ஆணைகளை முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்குவார்கள்.  மேல் முறையீடு செய்த பள்ளிகள் நேர்காணலின்போது கொடுத்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டும், கட்டண நிர்ணய சட்டப்படியும் பள்ளிகளுக்கு ஏற்ப தற்போது கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளிக்கு முன்பு எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. மேல் முறையீட்டுக்கு பின்னர் தற்போது எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நாளை தெரியும்.  நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு நாளை இது குறித்து விளக்கம் அளிக்க உள்ளது.

ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் அந்தந்த பள்ளிகள் கட்டணம் குறித்த விஷயங்களை பள்ளி தகவல் பலகையில் ஒட்ட வேண்டுமா, ஏற்கெனவே வசூலித்த கட்டணம் அதிகமாக இருந்தால் அதை திரும்ப மாணவர்களுக்கு கொடுக்க வேண்டுமா, இந்த கட்டணத்திலும் திருப்தி இல்லை என்றால் மீண்டும் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுமா என்கிற சந்தேகங்களுக்கு நாளை பதில் கிடைக்கும் என்று தெரிகிறது.

May 24, 2011

10 வயதில் சிஸ்கோ தேர்வு எழுதி சிறுமி அறிவு சாதனை!!

May 24. திருநெல்வேலி: இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார்.

அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். அவரது ஐகியூ.,திறன் அதிகரிப்பு, கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அபார திறமை கொண்டிருந்தார்.

சிறுமியை மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், "பென்னட் காமத்' என்ற அறிவியல் முறைப்படிசோதித்து பார்த்ததில் அவரது ஐகியூ.,எனப்படும் அறிவுத்திறன் அளவு 225 ஆக இருப்பது தெரியவந்தது.

வழக்கமாக மனிதர்களின் அறிவுத்திறன் 110க்குள்தான் இருக்கும். 110க்கு மேல் இருந்தால் அறிவுத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் இச்சிறுமியின் திறன் 225 ஆக உள்ளது என்றார்.

எனவே முதல் வகுப்பு, 4ம் வகுப்புகளில் டபுள் புரமோசன் எனப்படும் இரட்டை தேர்ச்சி பெற்றார். வரும் கல்வியாண்டில் 6ம் வகுப்பு பயில வேண்டிய சிறுமி விசாலினி 8ம் வகுப்பு பயில உள்ளார்.

இவர் கடந்த மார்ச் மாதம் நெல்லையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் படித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.சி.பி.,தேர்வினை ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்றார்.
தொடர்ந்து இம்மாதத்தில் அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனத்தினர் நடத்தும் சிசிஎன்ஏ எனப்படும் நெட்வொர்க் தேர்வினையும் திருவனந்தபுரத்தில் ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.

இவருக்கு சிறுவயதில் சிகிச்சையளித்த டாக்டர் ராஜேஷ், மதுரை டாக்டர் நம்மாழ்வார், நெல்லை கம்ப்யூட்டர் மைய நிர்வாக சுந்தரபாண்டியன் ஆகியோர் பாராட்டினர். பாகிஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுவன் ஹைதர் இத்தகைய சாதனையை கடந்த ஆண்டு செய்துள்ளான். ஆனால் பத்து வயதிலேயே சிறுமி விசாலினி சிஸ்கோ தேர்வினை எழுதியுள்ளார்.

ஒரு முறை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்டு தேர்வினை எழுதினாள். இரட்டை தேர்ச்சி பெறுவதால் இவளை விட பெரிய மாணவர்களுடன் வகுப்பில் படிக்க வேண்டியுள்ளது. மேலும் இதற்காக இவளை சில பள்ளிகள் அனுமதிக்கவே மறுத்தன.

ஒரு கல்விஆண்டில் 3 பள்ளிகளில் சேர்த்து பின்னர் வெளியேற்றப்பட்டு அலைந்தோம். எனவே இவள் வயது மீறினாலும் உயர்கல்வி பயில முறைப்படி அனுமதியளிக்க அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

டாக்டருக்கு படிப்பதுதான் தமது நோக்கம் என்கிறார் சிறுமி விசாலினி. ஏற்கனவே சிறுவயதிலேயே இத்தகைய திறமை படைத்த நெல்லையை சேர்ந்த மாணவன் சந்திரசேகர் போன்றவர்களுக்கும் வயது தொடர்பாக இத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. எனவே சிறுமி விசாலினிக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திதரவேண்டும் என்பதே அவரதுபெற்றோரின் விருப்பமாகும்.

May 23, 2011

40 வருட வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது 4 வருட கல்வியே!!

May 23, சென்னை : ""நாற்பது வருட வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது நான்கு வருட படிப்பே என்பதை மாணவ, மாணவியர் மனதில் கொள்ள வேண்டும்,'' என, அண்ணா பல்கலைக்கழக வேந்தர் மன்னர் ஜவகர் பேசினார்.

அண்ணா பல்கலைக்கழக வேந்தர் மன்னர் ஜவகர் பேசியதாவது: படிப்பை பொறுத்தவரை மூன்று நிலைகள் உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை முதல் நிலையாகவும், எட்டு முதல் பிளஸ் 2 வரை இரண்டாம் நிலையாகவும், கல்லூரி படிப்பானது மூன்றாவது நிலையாகவும் உள்ளன.

முதல் இரண்டு நிலையை பொறுத்தவரை மாணவர்களின் படிப்பில் பெற்றோரின் பங்கு அதிகம் இருக்கும். ஆனால், மூன்றாம் நிலையான கல்லூரி படிப்பை பொறுத்தவரை, அதற்கான பாதையை மாணவர்கள் தான் வகுக்க வேண்டும்.

கவுன்சிலிங்கை பொறுத்தவரை எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற விஷயத்தில் உறுதியாக இருங்கள். இறுதி நேரத்தில் குழப்பத்தில் சிக்க வேண்டாம். குறிப்பாக 40 வருட வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது நான்கு வருட படிப்பே என்பதை மாணவ, மாணவியர் மனதில் கொள்ள வேண்டும்.

பொதுவாக கடின உழைப்பு, கடமை தவறாமை, நேர்மை, ஒருங்கிணைந்து செயல்படுதல், முழு ஈடுபாடு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். கடின உழைப்பு மூலம் பெறும் பயனே சிறந்தது. அதற்கு ஈடாக எதையும் ஒப்பிட முடியாது. ஆகையால் மாணவ, மாணவியர் கல்லூரி காலங்களில் படிப்பிற்கான கடின உழைப்பிற்கு தயாராக வேண்டும்.

பெற்றோரும், மாணவர்களும் இணைந்து முடிவெடுங்கள். இன்ஜினியரிங் கவுன்சிலிங் செல்வதற்கு முன், கல்லூரி மற்றும் துறை ரீதியான வாய்ப்புகள் குறித்து தகவல்களை திரட்ட வேண்டும். இதே போல, குறைந்த கட்டணமே வசூலிக்கும் அரசு கல்லூரிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்றைய சூழ்நிலையில், சிறப்பான வேலைவாய்ப்பை அளிக்கும் குறிப்பிட்ட துறையானது, நாம் நான்கு வருட படிப்பு முடிக்கும் போது, எந்த நிலையில் இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது. ஆகையால், புதிய பாடப் பிரிவுகளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு, பல பாடப்பிரிவுகள் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையாக இருப்பதை நாம் அறிய வேண்டும்.

ஆகையால், இரண்டு பிரிவுகளை ஒன்றாக்கி புதிய பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதை அறிந்தும், அவற்றின் பயனறிந்தும் அவற்றை தேர்ந்தெடுத்த படிக்க முன் வர வேண்டும்.
அனைத்து பாடப் பிரிவுகளையும் ஆண், பெண் இருபாலரும் தேர்ந்தெடுக்கலாம். கல்லூரி மற்றும் துறையை தேர்ந்தெடுப்பதில் பெற்றோர் மற்றும் மாணவர்கள் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். கவுன்சிலிங்கை சந்திப்பதற்கு முன்பாகவே மாணவ, மாணவியர் பதட்டத்தில் இருந்து விடுபட வேண்டும். இதன் மூலம் இறுதி நேரத்தில் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க முடியும்.

May 20, 2011

தனி ஒரு மாணவனுக்கு கல்வியில்லை என்றால்?

May 21, கோவை பீளமேடு மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் தர்மராஜ், பஞ்சு குடோன் தொழிலாளி.

மனைவி சங்கீதா(29), தனியார் நிறுவன தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு சமையலறையில் சங்கீதா, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

அவரை தர்மராஜ் காப்பாற்ற முயன்றார், இருவரும் படுகாயமடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் சங்கீதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். முன்னதாக அவர் கோவை கிழக்கு போலீசாரிடம் அளித்த மரண வாக்குமூலம்:

நானும், கணவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்தோம், இருவரும் வேலைக்கு செல்கிறோம், கடின உழைப்பாளிகள்.

கணவர் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவர். அவரது சம்பளத்தை அப்படியே என்னிடம் கொடுத்து விடுவார்.

இருவரின் வருமானத்தை கொண்டு மகன் தர்ஷனை உப்பிலிபாளையத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி படிக்க வைத்தோம்.

எங்கள் வருமானத்தின் பெரும்பகுதி பள்ளிக்கட்டணத்துக்கே சென்று விடுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு அதே பள்ளியில் மகன் முதல் வகுப்பு செல்கிறான்.

ரூ.12 ஆயிரம் கட்டணம் செலுத்துமாறு கூறினர். சேமித்த பணத்தில் ரூ.5 ஆயிரம் செலுத்திவிட்டோம். மீதி தொகையை செலுத்த முடியவில்லை.

பணத்தைக் கட்ட வழி தெரியவில்லை. இதனால் தீக்குளித்தேன்’’ என்று தெரிவித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

சிந்திக்கவும்: பாரதி உயிரோடு இருந்திருந்தால் இந்த கொடுமைகளை பார்த்து, தனி ஒரு மாணவனுக்கு கல்வி இல்லை என்றால்? இந்தியாவையே அழித்திடுவேன் என்று பாரதி பாடி இருப்பான்.

நெஞ்சு பொறுக்கதில்லையே இந்த நிலை கெட்ட அரசுகளை நினைக்கும் போது!! அமெரிக்காவை போல் ஒவ்வொரு மாணவனுக்கும் அடிப்படை கல்வி இலவசமாக கொடுக்கப்படவேண்டும்.

அமெரிக்க பள்ளிகளில் மேல்நிலை கல்வி வரை இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதுபோல் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு தரமான உணவுகள், புத்தகம் மற்ற வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது.

இந்த தனியார் பள்ளிகள் வாங்கும் அநியாய கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும். இல்லையேல் இந்த பள்ளிகள் தடை செய்யப்பட்டு கல்வி அரசுடமை ஆக்கப்பட வேண்டும்.

அப்படி இல்லையேல் ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் குறைந்தது ஐம்பது சதவீதமாவது ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க படவேண்டும்.

May 8, 2011

பிளஸ் 2 தேர்வில் 1190 மார்க் எடுத்து மாணவி முதலிடம்!!

May 9, பிளஸ் 2 தேர்வில் ஓசூரைச் சேர்ந்த ரேகா என்ற மாணவி முதல் ராங்க் பெற்றுள்ளார்.

ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி மாணவியான இவர் ஆயிரத்து 190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மாணவி ரேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் : 195, ஆங்கிலம் : 195
கணிதம் : 200, இயற்பியல் : 200, வேதியியல் : 200, உயிரியல் 200

ரேகாவின் தந்தை கேசவன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தாயார் மலர்விழி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார்.

ரேகாவுக்கு ஒரே தங்கை, கிருத்திகா. கிருத்திகா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.
தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், தங்கை, ஆசிரியர்கள், தோழிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ரேகா, தனக்கு மருத்துவப் படிப்பு படிக்க விருப்பம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Apr 29, 2011

பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் கொடியவர்கள்!!

April 30, ஏழை மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதால் பள்ளியின் ஒழுக்கமும், தரமும் கெட்டுவிடும், ஆசியர்களிடமும் ஒழுங்கு குலையும் என்று சென்னை அடையாறிலிருக்கும் ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி கருதுவதாக வந்த செய்தியைப் படித்திருப்பீர்கள்.

இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு மாணவரின் செயல்திறனையும் அவரது பொருளாதார நிலைமையையும் இணைத்து ஒரு அறிக்கையை சுற்றுக்கு விட்டுள்ளார்கள். அதோடு, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், அனைவருக்குமான கல்வி உரிமை மசோதாவை எதிர்த்து போராடும் படியும் தூண்டியிருக்கிறார்.

தமிழக விவசாயிகள் பாத்திரம் பண்டங்களை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக பிழைப்பு தேடி அலைந்துக்கொண்டிருக்கிறார்கள். நிரந்தர வேலையில்லாமல் கிடைக்கும் வேலையை செய்து பிழைக்கும்படி நகரத்தை நோக்கி துரத்தப்படுகிறார்கள்.

நமது பிள்ளையாவது படித்து முன்னேறினால் போதும் என்ற பெற்றோரின் நம்பிக்கையை சுமந்து வரும் அந்த குழந்தைகளின் குறைந்த பட்ச ஆரம்ப கல்விக்கான வழியை ஆசிரியர்களும், பெற்றோர்க்ளும் சேர்ந்து அடைக்கிறார்கள். அவர்களைக் கண்டுதான் மூக்கைப் பொத்துகிறார்கள். துரத்தியடிக்கிறார்கள்.

இந்திய உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை மறுத்தது பார்ப்பனியம். சம்ஸ்கிருதம் பேசினால் நாக்கை அறுக்க வேண்டும் என்றது மனுஸ்மிருதி. இன்று அடையாரில் இருக்கும் ஒரு பார்ப்பனப் பள்ளியும், பார்ப்பன முதல்வரும் ஏழைகளை தடை செய்வோம் என்று பகிரங்கமாக பேசுகிறார்கள்.

புதிய பார்ப்பனியம்! பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் அடிமைகள் என்று பார்ப்பனியமும், வெள்ளை நிற ஆரியர்களைத் தவிர மற்றவர்கள் அடிமைகள் என்று ஹிட்லரின் நாசிசமும் பேசிய வரலாறு இன்று திரும்புகிறது. ஒரு வேளை இந்தியா வல்லரசாக வேண்டு மென்பதற்காக ஏழைகளை மொத்தமாகக் கொன்றுவிடுவார்களோ தெரியவில்லை.

சிந்திக்கவும்: உழைக்கும் ஏழை மக்கள் முன்னேற கூடாது என்று நினைக்கும் இந்த கொடூர சிந்தனை ஒழிக்க படவேண்டியது. இவர்கள்தான் பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் கொடியவர்கள்! இதுபோல் சிந்திப்பவர்களது பொருளாதாரத்தை பிடுங்கி விட்டு ரோட்டுக்கு கொண்டு வரவேண்டும். எப்படி ஏழைகளாக வாழ்வது என்று இவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். இந்தியாவின் வளமே வெள்ளை உள்ளம் படைத்த ஏழை மக்களே!! ஒழுக்கம் மற்றும் எல்லா விசயங்களிலும் பணக்காரர்களை விட ஏழை மக்களே சிறந்து விளங்க கூடியவர்கள்.

Apr 28, 2011

கண்டு!! படிப்போம்!!


ஆச்சரியம் ஆனால் உண்மை!இன்றைய மாணவ மாணவிகளுக்கு ஆச்சிரியத்தை உண்டுப்பன்னும் விதமாக கேரளா மாநிலம் ஆலப்புழ மாவட்டத்தில் முதியவர்களுக்கு நடந்த பரீச்சையில் ஏற்றமும் வயது கூடிய மாணவி
தொண்ணூறு வயதை தாண்டிய பாத்திமா பீவி.

பரீட்சை ஹால்லில் இருந்து பரீட்சை எழுதி வயது ஒன்றுக்குமே தடை இல்லை என்பதை நிரூபித்தது அனைவரையும் அச்சரியத்தில் ஆள்ள்த்தி உள்ளது!ஆரயிரதிர்க்கும் மேலாக பரீட்சை எழுதியதில் இவரே நாயகியாக திகழ்ந்தார்.

சிறுவயதில் படிப்பதற்கு வசதி இல்லாததால் படிக்கமுடியாமல் போனதாக சொல்லும் இந்த முதியவர் சுறுசுறுப்பாக பரீட்சை எழுதினாலும் ரிசெல்ட் வரும் வரை டென்சனாக இருபதாகவும் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுவேன் என்றும் பாத்திமா பீவி கூறினார்.