Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Jun 11, 2020

கொரோனா கொள்ளையர்கள்!

C
OVID-19 நோய்க்கு சிகிச்சை அளிக்க 110 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளித்து கடந்த 03.04.2020 தேதியிட்டு தமிழக அரசு அரசாணை (G.O.Ms.174) வெளியிட்டிருந்தது

நாடு முழுவதும் பேரிடராக பரவிவரும் கொரானா நோய்த் தொற்றினை தடுத்து மக்களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்காமல் தனியார் மருத்துவமனைகள் கொரானா நோயினை வைத்து கொள்ளயடிப்பதற்கே மேற்படி அரசாணை வழிவகுக்கும்.

அதை போல கோரானா காலத்தில் மத்திய மற்றும் மாநிலங்களை ஆளும் அதிமுக மற்றும் பிஜேபி அரசுகள் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக போர்வை வாங்கியதாக ரூ 750, பிளாஸ்டிக் வாலி ரூ.400, பிளாஸ்டிக் மக் ரூ.142 என ஊரடங்கு காலத்தில் செய்யும் கொள்ளை அனைத்தையும் கொரோனா சிகிச்சை பெயரில் எழுதிவருகின்றன. எந்த ஊரில் பிளாஸ்டிக் வாலி 400 ரூபாய். கொள்ளையோ கொள்ளை.

அதுபோல் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பும் மக்கள் கொரன்டீன் இல் இருக்காமல் நேரே ஊருக்கு செல்ல அனுமதி வாங்கி கொடுக்க ஆள் ஒன்றுக்கு 1 இலட்சம் முதல் 2 லட்சம் வரை வாங்கி கொண்டு பாஸ் எடுத்து கொடுக்கும் ஏஜெண்டுகள் என்று மக்களை கொள்ளையடிக்கிறார்கள். இதுவெல்லாம் ஒரு உதாரணம்தான். கொரானா தடுப்பு உபகரணங்கள் டெஸ்ட் கிட்ஸ் முதல் மாஸ்க் வரை பல்வேறு கொள்ளைகள் அரங்கேறி இருக்கிறது. கேடுகெட்ட ஈன பிறவிகள் இந்த பேரிடர் காலங்களிலும் மக்களை சுரண்டி கொள்ளையடிக்கும் கொலைகார பாவிகள்.

யானைக்காக குரல் கொடுத்த பிரபலங்கள்!


Sep 11, 2018

விநாயகரே! வினை தீர்ப்பவரே!

பிள்ளையார் எங்கிருந்து ஏன் வந்தார்? தமிழகத்தில் பிள்ளையார் ஊர்வலங்கள் எப்படி மாறின? இந்து முன்னணி பிள்ளையார் சிலையுடன் எப்படி மதவெறியை தூண்டுகிறது? நூலைப் படித்துப் பாருங்கள்!
பிள்ளையார் எங்கிருந்து ஏன் வந்தார்? தமிழகத்தில் பிள்ளையார் ஊர்வலங்கள் எப்படி மாறின? இந்து முன்னணி பிள்ளையார் சிலையுடன் எப்படி மதவெறியை தூண்டுகிறது? நூலைப் படித்துப் பாருங்கள்!

Jan 4, 2015

தீவிரவாதிக்கு சிலையா பொங்கி எழுந்த ஜோதிமணி!?

கோட்சேவுக்கு சிலை வைத்தால் நானே உடைத்து எறிவேன் : சகோதரி ஜோதி மணியின் அனல் பறக்கும் பதில்.

மகாத்மா காந்தியை கொலை செய்த பிராமண கோட்சேவுக்கு சிலை வைத்தால் நானே வந்து அந்த சிலையை தகர்த்து எறிவேன் என்று சகோதரி ஜோதிமணி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சகோதரி ஜோதி மணி சென்னிமலை அவர்களின் கவனத்திற்கு.

சகோதரியே உங்களது மன தைரியத்தை பாராட்டி முகநூல் முஸ்லிம் மீடியா பல முறை செய்தி வெளியிட்டுள்ள அதே வேளையில் இம்முறையும் உங்களது மன தைரியத்தை பாராட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.

சாமானிய பொதுமக்களுக்கு பிராமண கோட்சே என்றால் யார் என்றே தெரியாமல் இருந்த மக்களுக்கு கோட்சே என்பவன் மகாத்மா காந்தியை கொன்றவன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டிவிட்டு.

பிராமண தீவிரவாதி கோட்சேவின் சிலை மீது காக்கைகள் கழிவுகளை கழித்து விட்டு சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியின் சிலையை தகர்த்து எரிய தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.

பாபர் மஸ்ஜிதை இடித்த அரக்கர்களுக்கு அதேபாணியில் பதிலடி கொடுக்க இளைஞர்களின் கைகள் தவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்.

பிராமண தீவிரவாதியின் சிலை தமிழகத்தில் வைக்கப்படுமேயானால் கரசேவை புரிய இளைய சமுதாயம் களம் காண தயாராக இருக்கிறது.

தந்தை பெரியார் பண்படுத்திய மண்ணில் காவி (பிராமண) தீவிரவாதிக்கு சிலையா ? ஒட்டுமொத்த தமிழினமும் ஓரணியில் திரண்டு தகர்த்து எரிய தயாராக இருக்கிறது.

May 28, 2014

அதுசரி இந்த மாதிரி டைலாக்கெல்லாம் எப்படி!?

மோடியின் பதவியேற்ப்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்வது வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவதுபோல் உள்ளது!!  -ஜெயலலிதா.
ஆமாம் தாயி, குஜராத்தில் முஸ்லிம்களின் ரத்த வாடை காயும்முன் நடைபெற்ற மோடியின் பதவியேற்ப்பு விழாவில் நீங்க ஓடோடிபோய் கலந்து கொண்டது எங்களுக்கு "கிழிந்த சதையில் காய்ச்சிய கம்பி குத்துவதுபோல்" இருந்தது. உங்க பதவியேற்பு விழாவில் மோடி கலந்துகிட்டது "உடைந்த எலும்பை உலுக்கி இழுப்பதுபோல்" இருந்தது.
அதுசரி, இந்த மாதிரி டைலாக்கெல்லாம் சிறுபான்மை மக்கள் அநீதிக்குள்ளாக்கப்படும்போது மட்டும் எப்படி ஒங்களுக்கு மறந்துபோவுது?
அதனாலதான் உங்களுக்கு பெங்களூர் கோர்ட்டில் இருந்து சம்மன் வரும்போது எங்களுக்கு நெய்தோசை மீது மீன்குழம்பு ஊற்றி தருவதுபோல் உள்ளது. பூந்தமல்லி கோர்ட்டிலிருந்து உத்தரவு வரும்போது பாய் வீட்டு பிரியாணியோட ப்ரெட், ஹல்வாவும் அன்பளிக்கப்பட்டது போல் உள்ளது.

தமிழ்நாட்டில் மோடியின் BJP அடைந்த படுதோழ்வியின் பலிவாங்கும் நடவடிக்கையாக தான் தெரிகிறது ராஜபக்சேக்கான விருந்துபாச்சாரம் தமிழிண உணர்வை கேலி செய்யும் பாஜக பரிவாரம்.
இனி இந்த கேடி தமிழ் நாட்டுக்கு வந்தால் காலில் உள்ளதை கலட்டி சாணத்தை தேய்த்து அடியுங்கள், கேடிக்கு செம்பு தூக்கியவர்களையும் சேர்த்து தமிழ் உணர்வு உங்களிடமிருந்தால்.  @ j.sri.

Mar 12, 2014

அளிக்கப்பட வேண்டுமா! இல்லை பாதுகாக்கப்பட வேண்டுமா?


பயங்கரவாதிகளின் பயங்கரவாதத்தை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அநீயாயம் செய்து கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகளின் அநீதிகளை, காவல்துறை மற்றும் உளவுத்துறையின் அநீதிகளை தட்டிக்கேட்க வேண்டும். 

1.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை முஸ்லிம்களை போலி என்கவுண்டர் மூலம் காவல்துறை கொலை செய்கின்றது.

2.வெடிகுண்டுகளை தயாரித்து, பதுக்கி வைத்து, அதனை வெடிக்கச் செய்வது ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் என்று தெரிந்தும் கூட அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகள் என காவல்துறை கருப்பு ஆடுகளும், உளவுத்துறை கருப்பு ஆடுகளும் முத்திரை குத்துகின்றன. இதற்காக அவர்களுக்கு மோடியின் பாஜக அரசை போல அதிமுகவின் ஜெ அரசு 10 லட்ச ரூபாய் பரிசும், பதவி உயர்வும் அளித்துள்ளது.

3.வகுப்புவாத கலவரத்தை தூண்டும், வெடிகுண்டு கலாச்சாரத்தை நாடெங்கிலும் பரப்பும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளை விட்டுவிட்டு அப்பாவி முஸ்லிம்களை பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் கைது செய்கின்றது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு.

4.காஷ்மீரில் ஆக்கிரமிப்பு இராணுவத்தினருக்கு அங்குள்ள முஸ்லிம் பெண்களை தேவைக்கு கற்பழிக்க இராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் அளித்துள்ளது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு. உண்மைகள் பல வெளிவந்த போதிலும் முஸ்லிம் பெண்களின் கற்பினை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை காங்கிரஸ் அரசு.

5. தீவிர வாத தடுப்பு மையம் அமைத்தால் மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மத்திய உளவுத்துறையினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் அதனால் நான் அதனை எதிர்க்கின்றேன் என கொக்கரித்த தமிழக முதல்வர் கோவையில் அப்பாவி முஸ்லிம்களை வெடிகுண்டு வழக்கில் சிக்க வைப்பதற்காக கர்நாடக போலிஸூடன் இணைந்து முஸ்லிம்களின் வீட்டில் சோதனை என்ற பெயரில் வெடிகுண்டுகளை பதுக்கிய கர்நாடக காவல்துறையினர் மீதும், தமிழ காவல்துறையினர் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

6. அத்வானி ரதை யாத்திரை மேற்கொள்ளும்போது மதுரையில் அத்வானி வரும் பாதையில் வெடிகுண்டு வைத்த சிவசங்கரை கைது செய்த போதிலும் போலீஸ் பக்ருதீனை இன்னும் அந்த வழக்கில் போலியாக சிக்க வைக்கும் காவல்துறையினரை கண்டிக்கவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை. அதிமுக அரசின் தொடர் முஸ்லிம் விரோதப்போக்கு.

7. பெங்களூர் மல்லேஸ்வரம் வெடிகுண்டு பாஜவினர் தான் இதனை செய்திருப்பார்கள் என்று ஆட்சிக்கு வரும் முன் கூறிய கர்நாடக காங்கிரஸ் அரசு, ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தயக்கம் காட்டுகின்றது.

8. மததுவேஷத்தை பரப்பும் ஹிந்துத்துவ வாதிகளை விட்டுவிட்டு முஸ்லிம்களின் பதிப்பகங்களில் சோதனையிட்டு முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிகும் காங்கிரஸ்.

10. மேலப்பாளையம் வெடிபொருட்கள் வழக்கில் காவல்துறையினர்ரின் கட்டுக்கதை என்று உண்மை கண்டறியும் குழு அறிக்கையை சமர்ப்பித்த பின்னரும் அந்த வழக்கை சிபியைகு மாற்ற வேண்டும் என்ற முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்து விட்டு, பாஜக நிர்வாகிகலின் கொலைகளுக்கு சொந்த பிரச்சனைகளும், பெண் விவகாரமும் தான் காரனம் என்று கூறிய தமிழக டி.ஜி.பி. திரு ராமானுஜம் அவர்களின் அறிக்கையை புரந்தள்ளிவிட்டு காவல்துறையின் தொடர் முஸ்லிம் வேட்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது மட்டுமில்லாமல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றாமல் போலி வழக்குகளை புனையும் காவல்துறையினருக்கு பத்து லட்ச ரூபாய் பரிசும், பதவி உயர்வும்.

இதன் பிறகும் நீங்கள் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சியினரை புறக்கணிக்காமல் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டினால் பிறகு முஸ்லிம் சமூத்தை அளிக்கும் சங்கப்பரிவாரத்தின் சூழ்ச்சிக்கு நீங்கள் ஆதரவு கொடுப்பதாகிவிடும்.

முஸ்லிம்கள் அளிக்கப்பட வேண்டுமா? இல்லை பாதுகாக்கப்பட வேண்டுமா?

நம் கண் முன்னே நமது சகோதரர்களை தீவிரவாதிகளாக்கி அவர்களை சித்ரவதை செய்து, ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் பயங்கரவாதத்தை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அநீயாயம் செய்து கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகளின் அநீதிகளை, காவல்துறை மற்றும் உளவுத்துறையின் அநீதிகளை தட்டிக்கேட்க வேண்டும், முஸ்லிம் சமூகம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அப்போதென்றால் உங்களுக்கு சரியான களம் SDPI கட்சி தான்.,   நாம் எஸ்.டி.பி.ஐ.க்கு வாக்களிக்க வேண்டும்.

May 16, 2012

ஷ்ஷ்ஷ் அப்பாடா இப்பவே கண்ண கட்டுதே! பா ஜ க!?


புதுடெல்லி: அடுத்தடுத்து ஒவ்வொரு மாநில பிரிவுகளிலும் ஏற்படும் குழப்பங்களையும், பிரச்சனைகளையும் தீர்ப்பதில் பா.ஜ.க மேலிடத்திற்கு இப்பவே கண்ணைக்கட்ட ஆரம்பித்துவிட்டதாம்.
கர்நாடகாவில் எடியூரப்பாவும், ராஜஸ்தானில் வசுந்தராஜே சிந்தியாவும் தம் வசம் வைத்திருக்கும் எம்.எல்.ஏக்களை காட்டி பா.ஜ.க மேலிடத்தை மிரட்டி வரும் வேளையில், குஜராத்தில் முன்னாள் முதல்வரும் பா.ஜ.கவின் மூத்த தலைவருமான கேசுபாய் பட்டேல் மோடி எதிர்ப்பை கிளறிவிட்டு கட்சிக்கு அச்சுறுத்தலை விடுத்து வருகிறார்.

Sep 24, 2011

இடையில் முறிந்த ஹனிமூன்

சென்னை : தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் பலவிதமான பிரச்சனைகளுக்கு பின் இருக்கட்சிகளும் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்தது, அமோக வெற்றியும் பெற்றது.

இப்போது நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் எந்த கூட்டணி கட்சிகளுக்கும் மதிப்பு அளிக்காமல், ‘அம்மையார்’ அனைத்து  இடங்களுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்து அனைவருக்கும் அதிரடி ‘ஷாக்’ அளித்துள்ளார்.இதனால்அதிர்ந்து போன தேமுதிக பலவித முயற்சிகளையும் எடுத்துப் பார்த்தது. எதுவும் பயனளிக்காததால் தனித்துப் போட்டியிடுவதாக இப்போது அறிவித்துள்ளது.

இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் மக்களுடனும் தெய்வத்துடனும்தான் கூட்டணி என்று கூறி, தனியாகவே நின்று வந்த தேமுதிக கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக என்ற குதிரையில் ஏறி ஜம்மென்று சட்டசபைக்குள் போய் விட்டது. ஆனால் இப்போது ஏற்றிய இடத்திலேயே மீண்டும் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது அதிமுக. இதற்குப் பெயர்தான் சிங்காரித்து மூக்கறுப்பதென்பது!

எனவே முன்பைக் காட்டிலும் பெரும் நெருக்கடி விஜயகாந்துக்கு. இந்த முறை தனது செல்வாக்கை அவர் நிரூபித்தே தீரவேண்டிய கட்டாயம். காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடலாம் என்றால், ஒரேயடியாக வாக்காளர்கள் புறக்கணித்துவிடுவார்களோ என்ற பயமும் அவருக்கு உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரான பிறகு, சொல்லிக் கொள்ளும்படி உருப்படியான ஒரு கருத்தைக் கூட எந்தப் பிரச்சினையிலும் அவர் முன் வைத்ததில்லை. உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் நைஸாக அதிமுகவிடம் அதிக சீட் பெறுவதுதான் அவர் நோக்கமாக இருந்தது.

இதைப் புரிந்து வைத்திருந்த முதல்வர், ஆரம்பத்திலேயே தட்டி வைக்க நினைத்து இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முடிவு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமான பிரிவா என்பது தெரியவில்லை!

இவர்களது இந்த கூட்டணி தேனிலவு வெகு சீக்கரத்தில் முடிவுக்கு வந்துள்ளதை அரசியல் நிபுணர்களும் பொதுமக்களும் ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.

Jul 7, 2011

இன்று பிற்பகல் தயாநிதிமாறன் ராஜினாமா?

புதுடெல்லி, ஜூலை.7-பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய மந்திரி தயாநிதிமாறன் இன்று பிற்பகல் சந்தித்து பேச உள்ளார்.

அப்போது தயாநிதிமாறன் மந்திரி பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுப்பார் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jun 10, 2011

பாவம் தமிழ் மக்கள் !!!

June 10, திரு. விஜயகாந்த் அவர்களும் அவரின் தொண்டர்களும் பெற்ற வெற்றிக்கு கொஞ்சம் கூட அருகதையில்லாத வகையில் அவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன. இது வெற்றி பெற்றதினால் இவர்கள் அடிக்கும் கூத்தல்ல இது. இவர்களின் பண்பே இதுதானோ என்று அச்சுரத்தோனுகிறது.

வெற்றி பெறுவதற்குமுன் இருந்த பணிவு, அடக்கத்தைவிட வெற்றிபெற்றபின் அந்த நற்குணங்கள் அதிகமாக இருக்கவேண்டும். அந்த நன்னடத்தைக்கு அந்தந்த கட்சியின் தலைவர்களே எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும்.

ஏகபோக திமிருக்கும், அகந்தைக்கும் உதாரணமாக திகழ்வது அவர்களின் சுருக்கமான அரசியல் வாழ்க்கைக்கு காரணமாக அமைவது மட்டுமல்லாமல் அவர்களை வரலாறும் ஏகடியம் செய்யும்.

தலைவனாய் வருதல் விபத்து தலைவனுக்குண்டான பண்புகளை தனதாக்கிக்கொல்வதில்தான் தலைமைத்துவம் அடங்கியுள்ளது. அதுதான் மகத்துவமும் கூட.

மனதில் வரும் உணர்வுகளையெல்லாம் செயலாக்கிச்சென்றால்..... அது தலைவனின் பண்பல்ல. இன்று பதவிக்கு வந்த இவர்களின் செயல்களின் பரிணாமங்களை, அதன் முடிவுகளை 4 ஆம் வருட முடிவில் காண்போம்.

அ.இ.அ.தி.மு.க. வின் உறுப்பினர்களும் அவர்களின் தலைவியுமான செல்வி ஜெயலலிதாவும் முன்னாள் முதல் அமைச்சரை அவரின் கடந்த கால எல்லா நடவடிக்கைகளையும் விமரிசிப்பதும், மாற்றி அமைப்பதும் ஒரு உயர்ந்த தன்மைக்கு உரியதன்று.

எனவே, ஒப்பாரும், மிக்காரும் இல்லா ஒரு உன்னத ஆட்சியை கொண்டுவர தனக்கடுத்து சுயநலமில்லா சான்றோரின் சகவாசம் வேண்டும்.

தான் பெரும்பான்மை பெற்றதினால், சிறுபான்மை அவையவரின் வேண்டுகோளுக்கு செவி மடுக்காது தான்தோன்றித்தனமாய் செய்யும் செயல்கள் நல்லனவல்ல. இது ஒரு பேரினவாதத்தின் மற்றொரு முகமாகவே நல்லோரால் காணப்படும்.

Jun 5, 2011

பாபா ராம்தேவ் டெல்லியில் நுழைய தடை !!!

புதுடெல்லி, ஜூன். 5- பாபா ராம்தேவ் மீண்டும் டெல்லியில் வந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

இவர் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பதும் இவர் இந்தியாவில் ஹிந்துத்துவா ஆட்சியை உண்டாக்க போடும் நாடகம் என்பதும் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் இன்று பகல் 11 மணிக்கு மூத்த மந்திரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு டெல்லி போலீசார் ஒரு அறிவிப்பு வெளியிட்டனர். அதில் பாபா ராம்தேவ் அடுத்த 15 நாட்களுக்கு டெல்லிக்குள் நுழையக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது.

ராம்தேவ் ஆதரவாளர்கள் 39 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களும் டெல்லிக்குள் வர தடை விதித்துள்ளனர்.

May 26, 2011

மாறுவாரா ஜெ!! மக்கள் எதிர்பார்க்கின்றனர்!!

May 27, அரசு திட்டங்கள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் வாய் திறக்க கூடாது என்ற நிலையை, முதல்வர் ஜெயலலிதா மாற்ற வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான முந்தைய ஆட்சியின் போது, அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து அவர் மட்டுமே பேசுவார்; அறிவிப்புகளை வெளியிடுவார்.

விழாக்களிலும், செய்தியாளர்கள் கூட்டத்திலும் அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்பட எவரும் வாய் திறக்க மாட்டர்.

மக்களுக்கு உத்தரவாதம் வழங்குதல், நம்பிக்கையான வாக்குறுதி அளித்தல் போன்றவற்றுக்கும் இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மீறுபவர்கள் பதவி பறிக்கப்பட்டதும் உண்டு.

தீர்க்கக்கூடிய பொதுவான பிரச்னையை சாதாரண மனிதன், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனுவாக அனுப்பி, அது முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நிறைவேற்றப்பட்ட பல சம்பவங்கள் உண்டு.

ஆனால், அமைச்சர், அதிகாரிகளிடம் மனுவாக கொடுத்து, அது நிறைவேறிய சம்பவம் மிகச்சொற்பம் தான். அரசு விழாக்களில் அமைச்சர்கள் பேசும் போது கூட, "அம்மா அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தான் கூறுவார்களே தவிர, தங்கள் துறை தொடர்பான தகவல்கள், முன்னேற்றங்கள், திட்டங்கள் பற்றி வாய் திறக்க மாட்டார்கள் இந்நிலை மாறுமா? மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

May 23, 2011

கலங்காதே கனிமொழி!! கருணாநிதி ஆறுதல் கூறினார்!!

May 24, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி, ஜாமின் மறுக்கப்பட்டு, டில்லி திகார் சிறையில் இருக்கும் மகள் கனிமொழியை கருணாநிதி நேற்று நேரில் சந்தித்தார்.

நேற்று காலை, சென்னையிலிருந்து டில்லிக்கு வந்தார் கருணாநிதி. காலை, 11.30 மணிக்கு, டில்லி விமான நிலையம் வந்து சேர்ந்த அவர், அங்கிருந்து நேராக கான்மார்க்கெட் அருகில் உள்ள தாஜ்மான்சிங் நட்சத்திர ஓட்டலுக்கு விரைந்தார்.

அங்கு, தி.மு.க ., எம்.பி.,க்கள் சிலருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். சிறிய ஓய்வுக்கு பின், மாலை, 5 மணிக்கு, ஓட்டலை விட்டு கிளம்பினார். அவருடன் ராஜாத்தி, கனிமொழியின் கணவர் அரவிந்தன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் சென்றனர்.

இரண்டு கார்கள் மற்றும் ஒரு எஸ்.பி.ஜி., வாகனம் புடைசூழ, திகார் சிறைக்கு சென்ற கருணாநிதி, சரியாக, 5.45 மணிக்கு உள்ளே சென்றார். மீடியாக்கள் குவிந்திருந்த கேட்டை தவிர்த்து விட்டு, வேறுவழியாக, கருணாநிதியும், அவருடன் வந்தவர்களும் உள்ளே சென்றனர்.

தன்னை சந்திக்க வந்த தந்தை கருணாநிதியை பார்த்ததும் கனிமொழி சற்று உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கியதாகக் கூறப்படுகிறது. அவருக்கு, பயப்படாமல் இருக்கும்படி கருணாநிதி ஆறுதல் கூறியதாகத் தெரிகிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்கும் ராஜாவிடமும் சில நிமிடங்கள் பேசிய கருணாநிதி, அவருக்கும் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், சரத்குமார் ரெட்டியிடமும் ஆறுதல் தெரிவித்துவிட்டு, தனது, 45 நிமிட சந்திப்பை முடித்துக் கொண்டு கருணாநிதி வெளியே வந்தார்.

ஓட்டலில் தங்கியிருந்த கருணாநிதியை, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்றிரவு சந்தித்துப் பேசினார். ஏற்கனவே, கருணாநிதி சென்னையில் அளித்த பேட்டியில், சோனியாவை சந்திக்கப் போவதில்லை' என, கூறியிருந்தார். சோனியா, நேற்று ஒரு நாள் அவசரப் பயணமாக காஷ்மீர் சென்றிருந்தார். பிரதமர் மன்மோகனும் எத்தியோபியா பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு நடைபெறும் பாட்டியாலா கோர்ட்டில் ஆஜராக, நேற்று, கனிமொழி வந்த போது, அவரை மத்திய ரசாயன அமைச்சர் அழகிரி மனைவி காந்தியும், அவரது மகன் துரை தயாநிதியும் சந்தித்தனர். கனிமொழி நிலைகண்டு கலங்கினார் காந்தி. அங்கிருந்த ராஜாத்தியுடனும் காந்தி பேசினார். அதேநேரத்தில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினும் நேற்றிரவு டில்லி வந்தார்.

May 21, 2011

இமயம் முதல் குமரி வரை பழிவாங்கும் படலம்!!

சென்னை May 22, ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கலைஞர் கட்சி நிர்வாகிகளுடன் இன்று இரவு அவசர ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து கனிமொழி எம்.பி.யை பார்க்கவும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவும் கலைஞர் திங்கட்கிழமை டெல்லி செல்வார்.

ஸ்பெக்ட்ரம் தொடர்பாக கனிமொழி சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு கலைஞர் எழுதியுள்ள கடிதத்தில்,

கனிமொழி, சரத்குமார் ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது.
கன்னியாகுமரி முதல் இமயமலை வரை திமுகவிற்கு எதிராக பழிவாங்கும் படலம் நடைபெறுகிறது. இந்த போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம்’’ என்று கூறியுள்ளார்.

சிந்திக்கவும்: காங்கிரஸ் தன்னை பழிவாங்குகிறது என்பதை கூட எப்படி கவிதை நடையில் சொல்கிறார் நமது கலைஞ்சர்.

மகள்
சிறையில் அடைபட்டதும் டெல்லி பறக்கும் கருணாநிதியே! ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது ஏன் பறக்கவில்லை.

ஒன்றல்ல, இரண்டல்ல பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டதை வேடிக்கைபார்த்து துணைபோன ஈனத் தலைவர் அல்லவா! நீங்கள்.

வரலாறு திரும்பி உள்ளது அரசியல் சதுரங்கத்தில் இவ்வளவு நாட்கள் நீங்கள் காய்களை நகர்த்தி நீர்கள் இப்போது காற்று மாற்றி அடிக்கிறது அனுபவி ராஜ அனுபவி.

ஊழலை பண்ணிவிட்டு அதை மறைக்க பார்கிறார்கள். இனி தமிழ் நாட்டில் கருணாநிதி செல்லா காசு என்று காங்கிரசுக்கு தெரிந்து விட்டது அதுதான் கலட்டி விட்டுவிட்டார்கள்.

May 20, 2011

அவன், அவள், அது!

கை நீட்டம்மா கை நீட்டு,


காசு வாங்கலாம் கை நீட்டு,


பங்களா வாங்கலாம் கை நீட்டு,


பகட்டாய் வாழலாம் கை நீட்டு.

May 16, 2011

ஜெயலலிதா முதல்வராகி முதலில் பிறபித்த ஆணைகள்!!

May 17, தமிழக முதல்வராக 16.05.20111 அன்று பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா, மாலையில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கிளம்பி சரியாக மாலை 6.40 மணியளவில் கோட்டை வந்த அவருக்கு, அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கோட்டையில் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா தனது முதல் உத்தரவாக, படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தற்போது 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிதி உதவியோடு, மணப் பெண்ணிற்கு 4 கிராம் (அரை சவரன்) தங்கம் இலவசமாக வழங்கப்படும் எனும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆணை பிறப்பித்து அதற்குரிய கோப்பில் முதல் அமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

இரண்டாவதாக, இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதோடு மணப் பெண்ணின் 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்க முதல் அமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

முதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு மேற்காணும் ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பலன் பெறும் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் 500 ரூபாய் மாத ஓய்வூதியத்தை 100 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டு அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

பொது விநியோக திட்டத்தில் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியை இலவசமாக வழங்கிடவும் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டு அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

தமிழகத்தின் கடலோர மீன் வளத்தைப் பாதுகாக்க வேண்டி ஒவ்வொர் ஆண்டும் 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும் காலகட்டத்தில் பாதிக்கப்படும் மீனவக் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் 1000 ரூபாய் உதவித் தொகையை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்து அதற்கான கோப்பில் முதல் அமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

அரசுப் பணி புரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்க மகப்பேறு கால சலுகையாக 6 மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்பில் முதல் அமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

அத்துடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் அமல்படுத்தவும், அரசின் சிறப்புத் திட்டங்களை செம்மையோடு விரைந்து செயல்படுத்தவும் புதிய துறை ஒன்றைத் தொடங்க முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

May 14, 2011

ஜெயலலிதா வருகையும்!! போக்குவரத்து கெடுபிடியும்!!

May 15, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா. மாலை, 4.30 மணிக்கு அவர் வந்தார். ஆனால், பகல் 12.30 மணியிலிருந்தே, அண்ணா சாலை போக்குவரத்தில், கடும் கெடுபிடி காட்டினர் போலீசார்.

சென்னை போக்குவரத்தின் ரத்தநாளமே அண்ணா சாலை தான். அந்தச் சாலையில் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்தை தடை செய்வதும், தடுத்து அனுப்புவதும் பொதுமக்களுக்கு எவ்வளவு சிரமத்தை கொடுக்கும் என்பது போலீசாருக்கு தெரியாததல்ல.

கடந்த, 1991-96ல் நடந்த, அ.தி.மு.க., ஆட்சியின் போது, ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவப்பெயர், அவருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து தான்.

நேற்று வரை முதல்வராக இருந்த கருணாநிதியும், தனது வருகைக்காக போக்குவரத்து நிறுத்தப்படுவதை பெரியளவில் ஆதரித்தவரல்ல.

நாளை முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஜெயலலிதாவும், அத்தகைய மனநிலையில் தான் இருக்கிறார் என்பது, அந்த போக்குவரத்து நெரிசலில் அவரே சிக்கியதில் தெரிந்தது.

எந்த பந்தாவும் இல்லாத, தன் வழக்கமான வாகனத்தில், கடும் நெரிசலுக்கு இடையே, எம்.ஜி.ஆர்., சிலையை நோக்கி ஊர்ந்து தான் வந்தார் ஜெயலலிதா.

ஆனால், இவருக்காக, பகல் 1 மணியில் இருந்தே, ஒரு பக்கம் போக்குவரத்து நிறுத்தமும், மறுபக்கம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இது, நிச்சயமாக புதிய முதல்வரிடம் நல்ல பெயர் எடுக்க விரும்பிய, ஏதோ ஆர்வக்கோளாறு அதிகாரியின் செயலாக தான் இருக்க வேண்டும். இத்தகையவர்களை அடையாளம் கண்டு, கண்டிக்க வேண்டியது முதல்வராக போகிறவரின் கடமை.

போக்குவரத்து நிறுத்தத்தால் அதிருப்தியடைந்த வாகன ஓட்டிகள், தங்கள், "ஹாரனை' இடைவிடாமல் ஒலிக்கச் செய்ததன் மூலம் கொடுத்த, "சமிக்ஞை' அது தான்.

மேற்கு வங்கம் இடது சாரிக்கூட்டணியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது!!

May 15, கொல்கத்தா: மேற்கு வங்காள மாநில சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 59 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.

முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றி சதவீதம் 20 ஆகும். ஆனால், மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம் மக்கள் தொகையை விட இது குறைவாகும்.

கடந்த சட்டப் பேரவையில் 46 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் இடம் பெற்றிருந்தனர். அவ்வகையில் தற்போதைய சட்டப் பேரவையில் முஸ்லிம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனலாம்.

மாநிலத்தின் மொத்த எம்.எல்.ஏக்கள் 294 பேர். இவர்களில் 59 பேர் முஸ்லிம்கள். வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்களில் 7 பேர் முஸ்லிம் பெண்களாவர். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 2 முஸ்லிம் பெண்கள் தாம் எம்.எல்.ஏக்களாக பதவி வகித்தனர்.

திரிணாமுல்-காங்கிரஸ் கட்சி கூட்டணியில் 40 பேர் முஸ்லிம் எம்.எல்.ஏக்களாவர். திரிணாமுல் காங்கிரஸை சார்ந்த 25 பேரும், காங்கிரஸ் கட்சியை சார்ந்த 15 பேரும் சட்டப்பேரவைக்கு செல்கின்றனர்.

தேர்தலில் படு தோல்விடைந்த ஆளும் இடது சாரிக்கூட்டணியில் இம்முறை 18 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு செல்லவுள்ளனர். அவர்களில் 13 பேர் சி.பி.எம் கட்சியை சார்ந்தவர்கள். AIFB-2, RSP-2, SP-1 ஆகியோரும் அடங்குவர்.

உமக்கு ஒய்வு தரவில்லை!! ஒழித்துக்கட்டி இருக்கிறார்கள்!!

14 May, தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தி.மு.க. கூட்டணி குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

தேர்தல் முடிவு குறித்து கலைஞர், ‘’தமிழ்நாட்டு மக்கள் எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் இந்த வாய்ச்சவடால் தீரவில்லையா கலைஞர் அவர்களே "இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடல்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

இறக்கும் முன்னராவது இறவாபெயர் வாங்கி இருக்கலாம் ஆனால் இறக்கும் காலத்தில் நீங்கா நீசப்பெயர் வாங்கிச்செல்லும் இழிநிலை ஏன்தான் உமக்கோ?

சிறு பான்மைச்சமுதாயம் உம்மிடம், "எங்களுக்கு இட ஒதுக்கீடு தாருங்கள் என கேட்ட பொழுது என் நெஞ்சத்தில் இடம் தந்திருக்கிறேனே அதை விடவா மேலதிகம் வேண்டும்" என்று கேட்டபொழுது அதையும் சிலாகித்து பேசிய சில முஸ்லிம் பெயர் தாங்கி மந்தைகளை பார்த்திருக்கிறேன்.

ஆனால் தமிழ் நாட்டுக்குத் தேவை ஒரு கக்கன் அல்லது காமராஜர் அல்லது எம். ஜி. ஆர். அல்லது ஒரு நல்லகண்ணுவேயல்லாது உம்மைப் போன்ற பேராசை பிசாசோ அல்லது ஜெயலலிதா போன்ற மத மாச்சர்யங்களுக்கு கட்டுண்ட தலைவியோ அல்ல.

ஆனால் உம்மை போன்று சக்கர நாற்காலியில் தள்ளிச்செல்லும் காலம் வரை காசு சேர்க்கும் முயற்சியில் யாரும் இறங்க மாட்டார் என்று நம்பிக்கை கொள்ளும் பல தமிழர்களில் நானும் ஒருவன். காலம் பதில் சொல்லும்

தவளை தன் வாயால் கெடும்!!

May 14, திமுகவின் பிரச்சார பீரங்கியாக, விஜயகாந்த்தை தனிப்பட்ட முறையில் தாக்கி பிரச்சாரம் செய்த நடிகர் வடிவேலு, தேர்தல் முடிவு குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.

13.05.2011 அன்று மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வீட்டுக்கு வடிவேலு வந்தார். சில நிமிடங்கள் அவரிடம் பேசிவிட்டு புறப்பட்டார்.

வடிவேலு வீட்டை தேமுதிக தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதாகவும், தற்போதைக்கு சென்னை வர வேண்டாம் என்றும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வடிவேலுவுக்கு தகவல் வந்ததாம். இதனை அழகிரியிடம் கூறுவதற்காகவே வடிவேலு இரண்டு முறை சந்தித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.