![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgezPkhn2pg1oZ6GHMocdUNVScdo43OicI4IlKyCoU7ooRochz-ZHXOrXPnHWBKjXBpIhep0rFpKg-x5PVZftRy1UZQnp1_4Hy4KwDa3aBoIjUOcy8PI5sK45m18Y6bJns12jP2GVoCcuc/s200/M+Karunanidhi-Sonia+Gandhi.jpg)
இந்நிலையில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கலைஞர் கட்சி நிர்வாகிகளுடன் இன்று இரவு அவசர ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து கனிமொழி எம்.பி.யை பார்க்கவும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவும் கலைஞர் திங்கட்கிழமை டெல்லி செல்வார்.
ஸ்பெக்ட்ரம் தொடர்பாக கனிமொழி சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு கலைஞர் எழுதியுள்ள கடிதத்தில்,
‘’கனிமொழி, சரத்குமார் ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது.
கன்னியாகுமரி முதல் இமயமலை வரை திமுகவிற்கு எதிராக பழிவாங்கும் படலம் நடைபெறுகிறது. இந்த போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம்’’ என்று கூறியுள்ளார்.
சிந்திக்கவும்: காங்கிரஸ் தன்னை பழிவாங்குகிறது என்பதை கூட எப்படி கவிதை நடையில் சொல்கிறார் நமது கலைஞ்சர்.
மகள் சிறையில் அடைபட்டதும் டெல்லி பறக்கும் கருணாநிதியே! ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது ஏன் பறக்கவில்லை.
ஒன்றல்ல, இரண்டல்ல பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டதை வேடிக்கைபார்த்து துணைபோன ஈனத் தலைவர் அல்லவா! நீங்கள்.
வரலாறு திரும்பி உள்ளது அரசியல் சதுரங்கத்தில் இவ்வளவு நாட்கள் நீங்கள் காய்களை நகர்த்தி நீர்கள் இப்போது காற்று மாற்றி அடிக்கிறது அனுபவி ராஜ அனுபவி.
ஊழலை பண்ணிவிட்டு அதை மறைக்க பார்கிறார்கள். இனி தமிழ் நாட்டில் கருணாநிதி செல்லா காசு என்று காங்கிரசுக்கு தெரிந்து விட்டது அதுதான் கலட்டி விட்டுவிட்டார்கள்.
No comments:
Post a Comment