Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Oct 24, 2015

KFC வீட்டில் செய்வது எப்படி?

KFC சிக்கனை வீட்டில் எப்படி  செய்வதென்று பார்ப்போம்.  தேவையான பொருட்கள்:சிக்கன் – 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)
இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
மாவிற்கு…
மைதா – 1 1/2 கப்
முட்டை – 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
கோட்டிங்கிற்கு…
பிரட் தூள் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் தண்ணீரை வடித்து,அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு கலந்து நன்றாக விரவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை நான்ஸ்டிக் பாத்திரத்தில் போட்டு  (தேவையென்றால் சிறிது தண்ணீர் சேர்த்து) அடுப்பில் வைத்து 
அடிபிடிக்காமல், சிக்கனை முக்கால்வாசி வேகவைத்து அதனை இறக்கி தனியாக ஆர வைத்து கொள்ளவும். 

பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தேவைக்கு சிறிது தண்ணீர் ஊற்றி சற்று கட்டியாக கலந்து வைத்து கொள்ள வேண்டும். வேறொரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். KFC சிக்கன் ரெடி. 

Mar 19, 2014

ருசிக்கா அல்லது ஆரோக்கியத்திற்கா!?

நாக்கிற்கு நல்ல ருசியை மட்டும் தந்து உடலுக்கு உபாதை தருவதை உட்கொள்கிரோமே இது சரியா?

மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல.

மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும். எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும். இதில் சத்துகள் எதுவும் இல்லை.


குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது, எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த Bakery பண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.

Europe union,UK, மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன. (எந்த உணவவையும் எப்போதும் நன்கு மென்று உட்கொள்ளுங்கள்).

Dec 1, 2013

எடை குறையச்செய்யும் உணவு!?

எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம்.

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்குகொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.

வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புசத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு தம்ளரில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது.

வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, வினிகர் இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது.

Jul 13, 2011

சுவையான மட்டன் பிரியாணி ரெடி!

தேவையான பொருள்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
மட்டன் - 11/2 கிலோ
நெய் 250 கிராம்
தயிர் - 400 மில்லி (2 டம்ளர்)
பூண்டு - 100 கிராம்
இஞ்சி - 75 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலம் - 3 வீதம்
பெரிய வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 50 கிராம், - எலுமிச்சை - 1,
பொதினா, கொத்தமல்லிதழை - கையளவு
கேசரிப்பவுடர் - சிறிதளவு
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு

முன்னேற்பாடுகள்:
1. வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
2. இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்
3. பாஸ்மதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

செய்முறை;
1. குக்கரை அடுப்பில் வைத்து, சூடேறியது நெய்யை ஊற்றவும்

2. நெய் சூடேறியதும் ஏலம் பட்டை கிராம்பைப் போடவும்

3. பின்னர் அதில் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

4. பின்னர் அதில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுதுகளை போட்டு வதக்கிக் கொள்ளவும்

5. கழுவி சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள மட்டன் துண்டுகளை அதில் போட்டு சிறிது நேரம் கிளறவும்

6. தயிர், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கிளறிவிட்டு குக்கரில் 10 நிமிடம் வேக வைக்கவும்.

7. பின்னர் 1:1 என்ற விகிதத்தில் தண்ணீர் வைத்து அதில் சிறிதளவு உப்பு போட்டு அரிசியை தனியாக வேறு பாத்திரத்தில் வேக வைத்துக்கொள்ளவும்

8. குக்கரில் உள்ள குருமாவில் எலுமிச்சைச் சாறு ஊற்றி புதினா மல்லித்தழை போட்டு கொதிக்க விடவும்

9. கொதிக்கும் குருமாவில் சமைத்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டு கிளறி சமப்படுத்தவும்

10. கேசரி பவுடரை சிறிது பால் கலந்து பிரியாணி மீது ஒரு பக்கமாக ஊற்றி, மூடி வெயிட் போட்டு லேசான தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கிவிடவும்

11. நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பைப் போட்டு கிளறி பிரியாணியை வேறுபாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு பின்பு பரிமாறவும்.
பிரியாணி பார்ப்பதற்கு சிகப்பு, வெள்ளைக் கலரில் அழகாகவும் ருசி மிக்கதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.

May 4, 2011

ருசியான முட்டை குழம்பு!!

May 5, தேவையான பொருட்கள்: முட்டை 4, வெங்காயம் 1/2, மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி, தக்காளி 1, உப்பு, கடுகு, சீரகம்.

எண்ணெயில் வறுத்து அரைக்க: மல்லி 2 தேக்கரண்டி, மிளகாய் வற்றல் 3, பூண்டு 2 பல்,
இஞ்சி 1/2 இன்ச், மிளகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, தேங்காய் துருவல் 4 தேக்கரண்டி, அரிசி 1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிது.

செய்முறை: முட்டைகளை வேக வைத்து இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். தேங்காய் தவிர மற்ற வறுக்க வேண்டிய பொருட்களை 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்க வேண்டும்.

அரிசி வெள்ளை ஆனதும் இறக்கி, ஆற வைத்து தேங்காய், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி குழைய வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

Mar 23, 2011

மிளகு கறி!!

தேவையான பொருட்கள்:
மட்டன் - 500 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
மிளகுத் தூள் - ஒரு மேசைக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - ஒரு முழு பூண்டு
எண்ணை - 5 தேக்கரண்டி
வெங்காயம் - 4
கருவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை: எண்ணையைக் காய வைத்து அதில் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்னர் பூண்டை பொடியாக அரிந்து போட்டு வதக்கி கறியை சேர்த்து கிளறி உப்பும் சேர்த்து தீயை சிம்மில் வைத்து வேக வைக்க வேண்டும். கடைசியாக மிளகு சீரகத் தூள் தூவி மீண்டும் கிளறி 5 நிமிடம் தீயை சிம்மில் வைத்து இறக்க வேண்டும்.

Feb 27, 2011

ஈரல் வறுவல்!! செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: ஆட்டு ஈரல் - 500 கிராம், வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 2, வர மிளகாய் - 4, இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன், மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் - ஒரு டீ ஸ்பூன், சோம்பு - ஒரு டீ ஸ்பூன், மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன், கறிவேப்பிலை - இரண்டு கொத்து, எண்ணை - முன்று டேபிள் ஸ்பூன், பட்டை, இலை - தாளிக்க.

செய்முறை: ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி.லி தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும். மிளகு, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் வைக்க வேண்டும். வெங்காயத்தை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை சிறிது சிறிதாகவும் நறுக்கி வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, இலை தாளிக்க வேண்டும்.

வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, சிவந்ததும் ப. மிளகாய், கறிவேப்பிலை போட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி & பூண்டு விழுது, மஞ்சள் பொடி, ஒரு டீ ஸ்பூன் உப்பு மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கியதும் ஈரல் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். அடிக்கடி திறந்து கிளறி விட வேண்டும். தண்ணீர் வற்றியதும் இறக்க வேண்டும்.
சுவையான ஈரல் வறுவல் ரெடி.

நன்றி: நளன்.

Feb 25, 2011

ஆம்பூர் மட்டன் பிரியாணி!!

தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 1 கிலோ, மட்டன் - 1 கிலோ, மிளகாய் - தூள் 2 தேக்கரண்டி, வெங்காயம் - 500 கிராம், பழுத்த தக்காளி - 500 கிராம், பச்சை மிளகாய் - 5
புதினா - 1 கொத்து, எண்ணெய் - 200 மில்லி, நெய் - 50 மில்லி, எலுமிச்சை -அரை பழம்
பட்டை, ஏலம், கிராம்பு - தலா 2, பிரியாணி இலை - 2, உப்பு தூள் - தேவையான அளவு

செய்முறை: அரிசியை ஊற வைக்க வேண்டும். மட்டனை கொழுப்பெடுத்து கழுவி தண்ணீரை வடிக்க வேண்டும். வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு புதினா, தயிர் சேர்க்க வேண்டும். அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்க வேண்டும்.

அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து மட்டனை வேக விட வேண்டும். மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விட வேண்டும். மட்டன் அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விட வேண்டும். பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்க வேண்டும். இப்போது சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.

நன்றி : நலன்