Jan 27: விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்து இருப்பதின் பின்னணியில் அரசியல் இருக்கிறது. தணிகை குழு அனுமதி அளித்தபின் அரசு தலையிடுவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என்றால் அதை சமாளிக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்..
சிந்திக்கவும்: கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார் ஐயா ராமதாஸ். பா.ம.க. கட்சியைச் சேர்ந்தவரும் வன்னியர் சங்கத் தலைவருமான மரம் வெட்டி குரு, சமீபத்தில் நடந்த வன்னியர் சாதி மாநாட்டில், “வன்னிய இனப் பெண்களைக் கலப்பு மணம் செய்பவர்களை வெட்டுங்கடா” என்று சொன்னதை மக்கள் மறந்து விடவில்லை. ரோட்டோரம் உள்ள மரங்கள் என்னையா பாவம் செய்தது, அதை வெட்டி போட்டுத்தானே ஐயா கட்சி வளர்த்தார். இவரது சகிப்புத்தன்மைக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் மரங்களே சாட்சி.
ஐயா ராமதாஸ் அவர்கள் திடீர் என்று கமஹாசனுக்கு இந்த அளவுக்கு வரிந்து கட்டி கொண்டு வர காரணம் இருக்கிறது, சமீபத்தில் தலித் மக்கள் மீது நடந்த வன்முறைக்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு அதரவாக பல்வேறு ஜனநாயக வழிகளில் குரல்கள் எழுப்பின. அதனால் இப்பொழுது, ராமதாஸ் சந்தர்பத்தை பயன்படுத்தி அரசியல் நடத்துகிறார். முஸ்லிம் இயக்கங்கள் விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய கோரியதும் கமலுக்கு ஆதரவாக களம் புகுகிறார்.
இவர் செய்வதுதான் அரசியல், ஆனால் தமிழக அரசு செய்ததை அரசியல் என்கிறார். ரஜினி முதல் கருணாநிதி வரை இதை பேசி தீர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் ஐயாவோ கொம்பு சீவுகிறார். சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று படத்தை வெளியிட்டு அதன் மூலம் ஏதாவது பிரச்சனைகள் உருவாகும் பொழுது போலீசை வைத்து அடக்க சொல்கிறார். ஏதாவது அசம்பாவிதம் நடக்கணும் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தணும் என்று எதிர்பார்க்கிறாரா? ஏன் இந்த கொலை வெறி ஐயா!
7 comments:
விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசன் எடுத்தது" அந்த படத்தை DTH யில் வெளியிடுவேன் என்று சொன்னது" அனைத்துமே உள்ள்நோக்கதுடன் செய்ய பட்டது என்று தற்பொழுது அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.இந்த படத்தை நாம் திரையில் வெளியிட்டால் கண்டிப்பாக இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதனால் கண்டிப்பாக படம் தடைப்படும். என்று முதலிலேயே கமலகாசனுக்கு தெரிந்து உள்ளது. அதனால் தான் படத்தை ஒரு நாள் முன்பாகவே DTH யில் வெளியிட முயற்சி செய்தார். அவருக்கு தேவை இந்த படத்தினுடைய நச்சிதன்மை வாய்ந்த கருத்தை மக்கள் பார்த்து விடவேண்டும். என்ற உள்நோக்கத்துடன் தான் அணைத்து காயையும் கமல்ஹாசன் நகர்த்தினார் அதில் தோல்வியும் பெற்றார்.
ஜனவரி 11-ம் தேதி படம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியான நேரத்தில், 24 முஸ் லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் கமலை சந்தித்தனர். வெளிநாடுகளில் விநியோகஸ்தராக இருக்கும் முஸ்லிம் ஒருவர்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அப்போது சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடந்தது. ''முஸ்லிம்களோடு நல்ல நட்புஉணர்வு கொண்டவன் நான். அவர்களைக் கொச்சைப்படுத்தி படம் எடுக்க மாட்டேன்'' என்றார் கமல். ''துப்பாக்கி படக் குழுவினரிடம் எங்களைப்பற்றி கேட்டுப் பாருங்கள். எங்களின் செயல்பாடு பற்றி நீங்கள் வைத்திருக்கும் பிம்பம் உடையும்'' என்று, கமலிடம் சொன்னது முஸ்லிம் கூட்டமைப்பு. இறுதியாகப் பேசிய கமல், '' 'விஸ்வரூபம்’ இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் அல்ல. இந்து முன்னணியினருக்கு எதிரான படம். ராமகோபாலன் படத்தைப் பார்த்து விட்டு எதிர்ப்பார்'' எனச் சொன்னார். பேச்சு வார்த்தையின் இறுதியில், திரைக்கு வருவதற்கு முன் படத்தை போட்டுக்காட்ட ஒப்புக்கொண்டார் கமல்.
ஜனவரி 11-ம் தேதி படம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியான நேரத்தில், 24 முஸ் லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் கமலை சந்தித்தனர். வெளிநாடுகளில் விநியோகஸ்தராக இருக்கும் முஸ்லிம் ஒருவர்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அப்போது சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடந்தது. ''முஸ்லிம்களோடு நல்ல நட்புஉணர்வு கொண்டவன் நான். அவர்களைக் கொச்சைப்படுத்தி படம் எடுக்க மாட்டேன்'' என்றார் கமல். ''துப்பாக்கி படக் குழுவினரிடம் எங்களைப்பற்றி கேட்டுப் பாருங்கள். எங்களின் செயல்பாடு பற்றி நீங்கள் வைத்திருக்கும் பிம்பம் உடையும்'' என்று, கமலிடம் சொன்னது முஸ்லிம் கூட்டமைப்பு. இறுதியாகப் பேசிய கமல், '' 'விஸ்வரூபம்’ இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் அல்ல. இந்து முன்னணியினருக்கு எதிரான படம். ராமகோபாலன் படத்தைப் பார்த்து விட்டு எதிர்ப்பார்'' எனச் சொன்னார். பேச்சு வார்த்தையின் இறுதியில், திரைக்கு வருவதற்கு முன் படத்தை போட்டுக்காட்ட ஒப்புக்கொண்டார் கமல்.
கொடநாட்டில் இருந்து ஜெயலலிதா கோட்டைக்கு வந்தார். 'விஸ்வரூபம்’ பட விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு ஆலோசகர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறைச் செயலாளர் ராஜகோபால், டி.ஜி.பி. ராமா னுஜம், உளவுப்பிரிவு ஐ.ஜி. அம்ரிஷ் பூஜாரி, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் எனப் பெரிய டீமோடு ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஜெயலலிதா. அதன்பிறகு, படத்துக்குத் தடை என்ற பேச்சுகள் கிளம்ப ஆரம்பித்தன. 'விஸ்வரூபம்’ படத்துக்கு 15 நாட்கள் தடை என்பது இரவில் உறுதியானது.
'இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தி ஒரு படம் வெளியாகவே இல்லை. குர்-ஆன், தீவிரவாதத்தை போதிக்கும் நூலாகவும் தொழுகை வழிபாடுகள் தீவிரவாதத்துக்கு ஊக்கம் அளிப்பதாகவும் காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. கோவை, மதுரை போன்ற நகரங்கள் எல்லாம் சர்வதேசத் தீவிரவாதிகளின் புகலிடங்கள்போல் காட்டப்பட்டுள்ளன. தமி ழகத்தில் மாமா, மச்சான் உறவுமுறை பேசி சமூக நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழலை சிதைக்க வல்லது 'விஸ்வரூபம்’ திரைப்படம். 'முற்போக்கு பேசும் வைதீகன் ஆபத்தானவன்’ என்று சொன்ன பெரியாரின் கருத்தை கமல் மூலம் உண்மை என அறிய முடிகிறது'' என்கின்றனர் முஸ்லிம் கூட்ட மைப்பினர்.
மரம்வேட்டிகுறு வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கமாட்டான்
விஸ்வரூபம் படத்திற்கு தடைவிதித்தது,ஜெயலலிதாவின்,ஆட்சிக்கு, வீழ்ச்சிக்கு போடப்பட்ட விதையாகும்.விதி இப்படித்தான் வேலை செய்யும்.இதை யாராலும் தடுக்க முடியாது.எந்த நோக்கமாக இருந்தாலும், எந்த கருத்துகளாக இருந்தாலும் அதுவெல்லாம் வாய் ஜாலங்கள் சாதி,சமயம்,மதம் என்பது ஒழிவதற்கு இதுவும் ஒரு காரணம்.இவை எதோ ஒரு ரூபத்தில்,இயற்கை என்னும் அருட்பெரும் ஜோதியின் விளையாட்டு .எதுவும் நன்மைக்கே .ஒரு ஆட்சி கவிழ வேண்டுமானால் எதோ ஒரு காரண காரியம் தேவைப்படுகிறது.அவை இப்போது நடந்து கொண்டு உள்ளது.கமலதாசனுக்கு நல்ல நேரம்,ஜெயலலிதாவுக்கு கேட்ட நேரம் ஆரம்பம் ஆகிவிட்டது.பொறுத்து இருந்து பார்ப்போம். எல்லாம் இயற்கையின் விளையாட்டு.மக்களால் எதையும் சாதித்துவிட முடியாது.இயற்கையால் எதுவும் நடக்கும். வள்ளலார் சொல்லியது அனைத்தும் நடந்து கொண்டு உள்ளது.எங்கே கருணை உள்ளன அங்கே விளங்கிய அருட்பெரும் ஜோதி .மக்கள் மீது அன்பும் கருணையும் உள்ள இடத்தில் நன்மையே நடக்கும்.சாதி,சமயம்,மதம் என்ற விஷம் நாட்டில் இருக்கக் கூடாது,என்று நினைக்கிறார் கமல்.அதில் தவறு ஒன்றும் இல்லை. இயற்கை அவர் பக்கம் நிலைத்து நிற்கும் ,வெற்றி பெறுவார்.கமல் புகழ் உலகம் எங்கும் பரவ வேண்டும் என்பது இயற்கையின் விருப்பம்.அவை நடந்தே தீரும் .அன்புடன் ஆண்மநேயன்.கதிர்வேலு.
Post a Comment