Jan 27, 2013

கமலை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினார் இலக்கியவாதி!

புதுடில்லி:  பிரபல எழுத்தாளர் ஆஷிஸ் நந்தி  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த இலக்கிய விழாவில் ஊழல் குறித்து பேசினார். அப்பொழுது எஸ்.சி. எஸ்டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினர் தான் அதிகம் ஊழலில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்தார்.
 
இந்த கருத்து குறித்து பெரும் சர்ச்சை உண்டாகி இருக்கிறது. இவர் மீது போலீசார் வன்கொடுமைக்கு எதிரான வழக்கை பதிவு செய்துள்ளனர். இவரை கைது செய்ய வேண்டும் என பகுஜன்சமாஜ் வாடி கட்சி தலைவர் மாயாவதி கோரிக்கை வைத்துள்ளார்,

காங்கிரஸ், பாரதிய ஜனதா, SDPI, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன்சமாஜ் கட்சி, லோக்தள், ஆகிய கட்சியினரும், எஸ்.சி., ஆணையத் தலைவர் பி.எல்.புனியா மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாயாவதி தனது அறிக்கையில் ஆஷிஷ் நந்தியின் கருத்து உண்மைக்கு மாறானது; கண்டிக்கத்தக்கது. இப்பேச்சு ஜாதிரீதியிலான அவரது மனதை வெளிப்படுத்துகிறது. இது, குறிப்பிட்ட பிரிவினரின் நற்பெயரைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்; கடுமையான சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜஸ்தான் அரசு அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இல்லையேல் வீதியில் இறங்கி போராடுவோம் என்றார்.
 
சிந்திக்கவும்: நம்மவர்களுக்கு கருத்து சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியவில்லை. கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் கண்டதையும் பேசுவது, படமாக எடுப்பது இதுவே வேலையாகி விட்டது. இந்தியாவில் ஊழல் செய்யாமல் நேர்மையாக இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அது இன்றைய பொருளாதார கொள்கையும், கலாச்சாரமும்,  முதலாளித்துவமும் நமக்கு கொடுத்த பரிசுகள். ஊழலுக்கு ஜாதி, மத, இன வேறுபாடு ஒன்றும் கிடையாது. ஊழல் செய்பவர்கள் ஊழல்வாதிகள் அவ்வளவுதான். அதை ஒரு இனத்தோடு தொடர்புபடுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

3 comments:

Seeni said...

kodumaiyadaa...

Anonymous said...

விஸ்வரூபம் திரைப்படம்

Viswaroopam Movie Online

(Full movies)

http://www.yarlminnal.com/?p=26589

Anonymous said...

விஸ்வரூபம் முழு திரைப்படத்தையும் பார்க்க கீழ்க்கண்ட இணையதளத்திற்கு செல்லுங்கள்.

(Full movies)

http://www.yarlminnal.com/?p=26589

பாருங்கள் பரப்புங்கள்! விஸ்வரூபம் திரைப்படம்!