மும்பை: தீவிரவாத ஹிந்து கட்சியான பாஜகவின் தலைவர் நிதின் கத்காரிக்குச் சொந்தமான காரில் சிறுமியின் சடலம் கிடந்தது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் பெற்றோரான விமல் மற்றும் அசோக் தாக்கரே ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
அதில், '2009ம் ஆண்டு மே 19ம் தேதி அன்று, தீவிரவாத ஹிந்து கட்சி தலைவர் நிதின் கத்காரிக்குச் சொந்தமான காரில் எங்களின் 7வயது மகள் யோகிதாவின் சடலம் கிடந்தது. இந்த கார் மும்பையின் கிழக்குப் பகுதியில் உள்ள கத்காரியின் பழைய வீட்டு வளாகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.
இதனை கொலை வழக்காகப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால், இதுபற்றி மத்திய புலனாய்வு துறை விசாரிக்க உத்தரவிடவேண்டும்' என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்குமாறு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment