Mar 8, 2010
மத மற்றும் மொழி தீவிரவாதி ராஜ் தாக்கரே மீது 76 வழக்கு பதிவுகள்.
மஹாராஷ்டிர மத மற்றும் மொழி தீவிரவாதி நவ நிர்மான் தலைவர் ராஜ் தாக்கரே மீது சுமார் 76 வழக்குகள் பல் வேறு காவல் நிலையங்களில் பதிவாகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.வட இந்தியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது தொடர்பாகவும், சிறுபான்மை முஸ்லிம் மட்டும் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக கலவரங்களை தூண்டியது தொடர்பாகவும், மஹாராஷ்டிரத்தில் பிற மாநிலத்தவர்கள் தங்கவோ, பணிபுரியவோ கூடாது என்பதன் தொடர்பாக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது ஆகியவற்றிற்காக வழக்குகள் பதிவாகியுள்ளன.இதில் சுமார் 6 வழக்குகளில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்று இருக்கிறார். மீதமுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment