
கடந்த 2007ம் ஆண்டு துர்க்கை வடிவில் சோனியா காந்தி இருப்பது போன்ற போஸ்டர்கள் உ.பி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டன. இதையடுத்து முசாபர்பூர் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், மூத்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் சோனியா காந்தியை இந்துக் கடவுளாக சித்தரித்து போஸ்டர் ஒட்டியதன் மூலம் இந்து மதத்தை காங்கிரஸ் கட்சி அவமதித்து விட்டதாக கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.கே.ஸ்ரீவத்சவா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக நேரிலோ அல்லது தனது வழக்கறிஞர் மூலமாகவோ சோனியா காந்தியும், ரீட்டா பகுகுணாவும் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பாசிச பயங்கரவாதிகளுக்கு சாதகமாக விரைந்து செயல்படும் ஹிந்துத்துவா நீதித்துறை, பாபர் மஸ்ஜித் வழக்கு விசயத்தில் மட்டும் நீண்ட மவுனம் காட்கும் காவி நீதித்துறை. இந்தியா சீக்கிரம் ஒளிரும் என்பதற்கு இதுவெல்லாம் ஒரு சிறந்த முன்மாதிரி.
No comments:
Post a Comment