Aug 4, 2012

குஜராத்தில் மோடியால் உடையும் BJP!

"பா.ஜ., கொள்கைகளை விட்டு நரேந்திரமோடி விலகிச் சென்று விட்டார். ஏழை, நடுத்தர மக்களிடம் இருந்து அரசும், முதல்வர் மோடியும் விலகிச் செல்கின்றனர்.

இதனால் மோடி மீதும், அரசு மீதும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்' என, முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்தத் தலைவருமான கேசுபாய் படேல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பா.ஜ., வில் இருந்து விலகுவதாக, கேசுபாய் படேல் நேற்று அறிவித்தார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் கன்ஷிராம் ரானாவும் கட்சியில் இருந்து விலகினார்.


மாநிலத்தில் கட்சியை கட்டிக்காத்து பேணி வளர்த்தோம். அதற்கு பலன் இல்லாமல் போய்விட்டது. புதிய கட்சி குறித்து நாளை (இன்று) அறிவிப்பேன்' என்றார். "குஜராத்தில் கேசுபாய் படேல் சார்ந்துள்ள படேல் சமுதாயத்தினர் கணிசமான அளவுக்கு உள்ளனர்.

படேல் சமுதாயத்தினர் தான் பா.ஜ.,வின் அடித்தளமாக இருந்து வருகின்றனர். அந்த சமுதாயத்தில் கேசுபாய் மிகவும் செல்வாக்கோடு இருந்து வருகிறார். இந்நிலையில் அவர், தனியே கட்சி துவக்கி, தேர்தலில் களமிறங்கினால், பா.ஜ.,வுக்கு அது, சிக்கலை ஏற்படுத்தி விடும்' என, அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

2 comments:

Seeni said...

ivanga onna irunthuthaan enna nallathu -
nadanthuchu.....

Unknown said...

Yengal thala modiyai evanalum assaika muteyathu.....