Dec 2, 2011

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

DEC 03: இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன் என்று அணைவரிடமும் மனைவியிண் தலையை காட்டியபடியே காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார் ராஜா. (செய்தி நக்கீரன் இணையத்தளம்).

சிந்திக்கவும்: இதுதான் இவர்களது பத்திரிக்கை தருமத்தின் இலட்சணம். பத்திரிக்கை துறை என்பது மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை, அரசு பயங்கரவாதங்களை, ஊழல்களை தாட்டி கேட்கவும், அதேநேரம் மக்களுக்கு பயன்படும் செய்திகளை சொல்வதுமாக இருக்க வேண்டும்.

நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றன
ர்.

தனி ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பெரும் செய்தியாக்கி, அவன் மனைவியின் தலையை வெட்டி கொண்டு போவதை படமாக போட்டு அதற்க்கு ராயல்டி வேறு கேட்கிறார்கள் மானம் கெட்டவர்கள். இதில் வேறு நெற்றி கண் துறப்பினும் குற்றம் குற்றமே என்று ஏதே நக்கீரன் பரம்பரையில் வந்தவர்கள் போல் அடைமொழிவேறு.

வெட்டப்பட்ட மனைவியின் தலையை பலகோணங்களில் படம்பிடித்து அதன் நடுவே நக்கீரன் என்று எழுதி அதை பத்திரிக்கையில் போட்டு வியாபாரம் செய்யும் மனிதநேயம் கொன்ற பித்தர்கள்.
முன்பு  வீரப்பனை வைத்து கதை சொல்லியே காலம் ஓட்டினார்கள், இடையில் சீனாவில் நரமாமிசம் தின்றவர்கள் படத்தை இன்டெர் நெட்டில் இருந்து எடுத்து வைத்து கொண்டு அந்த படத்தின் நடுவில் நக்கீரன் என்று  எழுதி அதற்க்கு ராயல்டி  கேட்டவர்கள்தான் இவர்கள்.

அதுபோல் சுவாமி நித்யானந்தாவின் படுக்கையறை காட்சி விடியோகளை போட்டு அதற்க்கு பணம் கட்டினால் முளுவிடியோவும் காட்டுவோம் என்று சொல்லி விளம்பரபடுத்தி அதன்மூலம் பணம் சம்பாதித்தார்கள். தேர்தல் நேரம் வந்து விட்டால் இவர்கள் போடும் கூத்து இருக்கிறதே எழுதிக்கொண்டே போகலாம். இந்த எல்லா கீழ்த்தரமான வேலைகளை செய்து கொண்டு அதற்க்கு ஒருபடி மேலே போயி இந்த   தினமணி, தினமலர், இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் ஹிந்துத்துவா பேசி  மதகலவரங்களை உண்டாக்கி வருகின்றன.

இதன் இவர்கள் மூலம் மக்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறார்.  மனைவி கெட்டு போனால் அவளை வெட்டி கொலை செய்யுங்கள் என்று சொல்லவருகிரார்களா, இல்லை பெண்களே!  ஜாக்கிரதையாக  இருங்கள்! என்று மிரட்டுகிறார்களா? ஏதோ ஒரு பெண் அப்படி செய்து விட்டால் என்பதற்காக அதை பெரிய செய்தியாக்கி பெண்களை அவமானப்படுத்தும் ஒரு வேலையை இந்த பத்திரிக்கைகள செய்திருக்கின்றன. பெண்களை கெடுத்து நாசமாக்கும் இந்த ஆண்வர்கத்தை வெட்டி கொல்ல வேண்டும் என்று பெண்கள் நினைத்தால் தினம் தினம் பல்லாயிரக்கணக்கில் ஆண்களை கொல்ல வேண்டி வருமே.

அதேபோல் தமிழ் சினிமாக்களும் பெண்களை இழிவு படுத்துவதில் முதன்மையாக திகழ்கிறது. சமீபத்தில் வெளிவந்த நானே சிவன் படம் தொடர் கொலைகளை பண்ணும் ஒரு சைகொவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.  அதில் தன அம்மா கெட்டு போனால் அதனால் இதுபோல் உள்ள பெண்களை எல்லாம் தேடி திரிந்து கொலை செய்வானாம் கதாநாயகன்.பொது நலம் இல்லாத மனோ வியாதி பிடித்த சைகோ வெல்லாம் பத்திரிக்கை துறையிலும், சினி துறையிலும் வந்ததன் விளைவுதான் இவையெல்லாம்.  

ஒழுக்கம் என்பது ஆண், பெண் இருசாராருக்கும் பொதுவானது. ஏதோ ஆண் தவறு செய்தால் அவன் ஆண்பிள்ளை சகதியை கண்டால் மிதிப்பான் தண்ணியை கண்டால் கழுவுவான் என்று ஒரு பழமொழி வேறு சொல்லிக்கொண்டு பெருமையாக அதை செய்வது. பெண்கள் என்றதும் கற்ப்புக்கரசி! கண்ணகி! என்று ஒரு வரையறை, கணவனே கண்கண்ட தெய்வம்! இப்படி சொல்லி அவர்களை அடிமைபடுத்தி வைத்திருப்பதோடு அல்லாமல் இப்படி கண்டமாதிரி கற்பு விசயங்களை சொல்லி தூற்றுவது. பெண்களை தூற்றும் இவர்களுக்கெதிராக பெண்களே! ரவுத்திரம் பழகுங்கள். 
*மலர்விழி* 

15 comments:

சிந்திக்க உண்மைகள். said...

அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?

இதுதான் இவர்களது இலட்சணம்.

ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?

ராமனின் தந்தை தசரதன் நடத்திய அசுவமேத யாகம்.


அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.

இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.

Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse.

The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.

இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.

ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் (தசரதனின் மனைவிகளை) புணர்ந்தார்கள்.

இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.

ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.

ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை? - - பா.வே. மாணிக்கவேலர் . SOURCE: விடுதலை
*********
ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
படித்துவிட்டு விடை சொல்லுங்கள்.

>>>>
குதிரையுடன் உடலுறவா? அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்.
<<<<<

.
இதுதான் இவர்களது இலட்சணம்.

Anonymous said...

Nalla nadunilaiyana pathivu vaalththukkal..... Rajan.

Anonymous said...

Very good article... tank u sinthikkavun ..... By; malathi.

நிவாஸ் said...

பத்திரிக்கைகளுக்கு ஒரு வேண்டுகோள்

பத்திரிக்கைக்கு உலகிற்கு கலங்கம் இந்த மாதிரியான செய்திகள். இவர்களின் வக்கிரப் புத்தியின் உச்சகட்டம் இதுபோன்ற செய்திகள். நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது எழுதுவதற்கு, அதற்க்கெல்லாம் இவர்களுக்கு நேரம் கிடையாது, இதுபோன்ற சேய்கள் கீழ்த்தனமானது என்பதை இவர்கள் உணர்வே மாட்டார்களா? பணம் மட்டும் தான் இவர்கள் குறிக்கோளா?

நெற்றிக்கண் - பிறவிக் குருடு

Anonymous said...

இந்த காரியத்தை செய்தவன் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கியாக இருந்திருந்தால் அல்லது இந்த க் காரியம் ஒரு இஸ்லாமிய நாட்டில் நடந்திருந்தால் .......

இந்நேரம் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமே வறுத்தெடுக்கப்பட்டிருக்கும்.


இந்த காரியத்தை செய்தவன் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கியாக இல்லாமலும் அல்லது இந்தக் காரியம் ஒரு இஸ்லாமிய நாட்டில் நடந்திருக்காமல் இருப்பதனாலும்

இப்னுஜாகில்களும், எழில்கலும், நகிரேண்களும், ச‌ர‌மலவாகன்களும் பேர்பறை, செங்க‌ல்கொடி இத்தியாதி இத்தியாதிகளும்…….

இவர்க‌ளின் இஸ்லாமிய காழ்ப்புணர்வு பதிவுகளின் கருத்துரையில் சந்தில் சிந்து பாடும் கோழிகர்ணன்களும் போண்டுகளும்,

நொந்து நூலாகி போயிருக்கிறார்க‌ள்.

பாலாய் போய்விட்டதே ஒரு கைங்கரியம் என்று திரைப‌ட‌ உல‌க‌ சகுனிர‌த்தின‌ங்ளும், காச‌க‌ம‌ல‌ன்க‌ளும், லாபாக்க‌ளும், அர்ச்சுனிக‌ளும் பிலாக்காண‌ம் பாடிக் கொண்டிருக்கின்றார்க‌ள்

.

Unknown said...

தரமற்ற செய்தி வெளியீடுகளை ஊடகங்கள் கைவிட வேண்டும்! இத்தகைய செய்திகளைப் படித்து கொடூர சிந்தனைகள் வளரவே வாய்ப்பே அன்றி, பயனேதுமில்லை! அருவருக்கத்தக்க, பரிதாபத்துக்குரிய நிகழ்வுகளை சென்சேஸனல் செய்திகள் என்று வெளியிடுவோர், சமூக பின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு இச்செயலைக் கைவிட வேண்டும்! சமூகப் பொறுப்புணர்ச்சியை வளர்க்க இது போன்ற விழிப்புணர்வு பதிவுகளை வரவேற்போம்!

Arun Ambie said...

இல்லாதது பொல்லாததெல்லாம் தான் எழுதுவோம். பொய்களை உண்மை போலவும் உண்மைகளைப் பொய் போலவும், புகைப்படங்களை வெட்டி ஒட்டியும் வெளியிடுவோம். இது வியாபார தந்திரம் என்று நக்கீரன் காமராஜ் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டதாகப் படித்துள்ளேன். அத்தகையோரிடம் சமூகப் பொறுப்புணர்ச்சியை எதிர்பார்ப்பது காங்கிரசிலும் திமுகவிலும் குடும்ப ஆதிக்கம் விலகும் என்று எதிர்பார்ப்பது போன்றது ;)

PUTHIYATHENRAL said...

கருத்துகளுக்கு நன்றி சிந்திக்கவும் உண்மைகள்!

PUTHIYATHENRAL said...

நிவாஸ் சரியா சொன்னீங்கள் இவர்கள் கொண்டுள்ள வக்கிரபுத்தியே இவர்களை இவ்வாறு எழுத தூண்டுகிறது. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

PUTHIYATHENRAL said...

ரமேஷ் வெங்கடபதி சார் எப்படி இருக்கீங்கள் நலமா! உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! மீண்டும் வருகை தாருங்கள்.

PUTHIYATHENRAL said...

இல்லாதது பொல்லாததெல்லாம் தான் எழுதுவோம். பொய்களை உண்மை போலவும் உண்மைகளைப் பொய் போலவும், புகைப்படங்களை வெட்டி ஒட்டியும் வெளியிடுவோம். இதைதான் இன்றைய தமிழ் பத்திரிகைகளில் பெரும்பான்மை செய்து வருகின்றன. உண்மைக்கு புறம்பான இதுபோன்ற இழி செயல்களை செய்து கொண்டு நாங்கள் பத்திரிக்கையாளர்கள் ஜனநாயகத்தின் தூண்கள் என்று வேறு ஓலம் இடுவர். நன்றி அருண் அம்பி சார், உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. நன்றி மீண்டும் வருகை தாருங்கள்.

Anonymous said...

Nakkeeram yenru peyar vaithathukku pathilaa ..... Naarathar enru vaiththirukkalaam... Mathi sutha

Anonymous said...

ROMBA ARUVARUPPA IRUKKUTHU.

IRULAPPAN

Anonymous said...

Nakkerran kobal is very good guy. U don't want to write against him.

Anonymous said...

Kobal romba kevalama veerappan visayaththai vaiththu panam panninaar.