Mar 9, 2010

இந்தியாவில் சிறுபான்மை கமிசன் இல்லாத 13 மாநிலங்கள்!

இந்தியாவில் 13 மாநிலங்களில் இதுவரை சிறுபான்மையினரின் நலனை காக்க தனிப்பட்ட கமிசனை அமைக்கப்படவில்லை" என தேசிய சிறுபான்மை கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது.

மாநில சிறுபான்மை கமிசன்களின் மாநாட்டைக் கூட்ட தேசிய சிறுபான்மை கமிசன் முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் 31-ம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், "இதுவரை சிறுபான்மை கமிசன் அமைக்கப்படாத மாநிலங்கள் விரைந்து கமிசனை அமைக்க வலியுறுத்தப்படும்" என்று தேசிய சிறுபான்மை கமிசன் தலைவர் சஃபி குரேஷி தெரிவித்தார்.

"ஹரியானா, குஜராத், ஒரிஸ்ஸா உள்பட 13 மாநிலங்கள் இதுவரை சிறுபான்மை கமிசனை அமைக்கவில்லை. சிறுபான்மை கமிசனை அமைக்குமாறு அந்த மாநிலங்களிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இதை அந்த மாநிலங்கள் இதுவரை கண்டு கொள்ளவில்லை. வகுப்பு கலவரங்கள் அதிகம் நடைபெறும் குஜராத் மற்றும் ஒரிஸ்ஸா இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

1 comment:

இப்னு அப்துல் ரஜாக் said...

http://philosophyprabhakaran.blogspot.com/

watch this