Dec 21, 2009

2008-09 ஆம் ஆண்டில் சிறையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் மரணம்


புதுடெல்லி:இந்தியாவிலிலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் 1527 சிறைக்கைதிகள் 2008-09 ஆண்டில் மரணித்ததாக தேசிய மனித உரிமை கமிசனின் அறிக்கை தெரிவிக்கிறது.

மரணித்தவர்களில் 1467 பேர் ஆண்கள். உத்தரபிரதேசத்தில் தான் அதிகமான சிறைக்கைதிகள் இறந்துள்ளனர். உ.பி.- 287, ராஜஸ்தான் – 133, மேற்குவங்காளம் – 98, மத்தியபிரதேசம் – 86 குஜராத் – 74, கர்நாடகா – 72, பஞ்சாப் – 70, தமிழ்நாடு – 69.இதில் 90 சதவீதம் சாதாரண மரணங்கள் என அதிகாரப்பூரவ தகவல்கள் கூறுகின்றன. தற்கொலை, சக சிறைவாசிகளிடமிருந்தோ சிறைக்கு வெளியே இருந்தோ ஏற்பட்ட தாக்குதல்கள், அதிகாரிகளின் அலட்சியம், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றின் காரணமாக மீதமுள்ளவர்கள் மரணித்ததாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கிறார்.

2007-08 ஆம் ஆண்டில் 1787 பேரும், 2006-07 ஆம் ஆண்டில் 1497 பேரும் சிறைச்சாலைகளில் மரணமடைந்தனர். கஸ்டடி மரணங்களை உடனுக்குடன் அந்தந்த மாநிலங்கள் அறிக்கையை 24 மணிநேரத்திற்குள் வெளியிடவேண்டுமென தேசிய மனித உரிமை கமிசன் கட்டளையிட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வ கணக்கின்படி நாட்டின் 1200 மாவட்டங்களிலிலுள்ள சிறைச்சாலைகளில் அளவுக்கதிகமான சிறைக்கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக தேசிய க்ரைம் ரிக்கார்ட்ஸ் பீரோ கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

மனித உரிமையை பேணிப் பாதுகாப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் அதிகாரிகளுக்கான பயிற்சிமுகாம், விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியன மனித உரிமை கமிசனின் மேற்பார்வையில் நடைபெறும். சிறைக்கைதிகளின் மனித உரிமையைகல்வியை அதிகாரிகளுக்கு போதிப்பதற்காகவே இது நடத்தப்படுகிறது.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments: