Dec 17, 2009

டி.ஐ.ஜி.க்கு அபராதம்

சென்னை:டிச. 16: நன்னடத்தை விதியின் கீழ் தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 1,400 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, கோவை சிறையில் இருக்கும் கைதி சகாபுதீன் உட்பட 2 பேர், தங்களையும் விடுவிக்க வேண்டும் என்று கோவை சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தனர். அவர்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை கேட்டு தகவல் உரிமை ஆணையத்தில் 2 பேரும் மனு செய்தனர். ‘அவர்களுக்கு காரணத்தை தெரிவிக்க தேவையில்லை’ என்று கூறி, கோவை சிறைத்துறை டிஐஜி மாரியப்பன் மனுவை நிராகரித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அதைத் தொடர்ந்து கைதிகள் 2 பேரும் மேல்முறையீடு செய்தனர். இதில் நேரில் ஆஜராகுமாறு டிஐஜி மாரியப்பனுக்கு தகவல் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் தனது சார்பில் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்தை அனுப்பியுள்ளார். தகவல் பெறும் உரிமை ஆணையத்துக்கு முறையாக பதில் அளிக்காததால், டிஐஜி மாரியப்பனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து ஆணையம் உத்தரவிட்டது. இந்த அபராதத்தை அவரது சம்பளத்தில் பிடித்தம் செய்யவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

No comments: