Showing posts with label சாமியார்கள். Show all posts
Showing posts with label சாமியார்கள். Show all posts

Feb 24, 2017

“கார்போரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ்!

ஷா யோகா என்கிற பெயரில் பிரச்சாரம் செய்யும் ‘ “ஜக்கி வாசுதேவ்” இவர்க்கு இன்னொரு பெயர் “கார்போரேட் சாமியார்”
இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில்  ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம் கீழ் புறத்தில் குதிரை வண்டி நிறுத்துமிடமாக பயன்பாட்டில் இருந்த இடத்தில் சில சமூக விரோதிகளுக்கு கஞ்சா வியாபாரம் செய்ததாகவும், இவருக்கு ‘ரிச்சர்ட்’ என்ற பிரபல ரவுடி வியாபாரத்தில் உதவியதாகவும், இவர்கள் இருவருக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
வியாபாரத்தின் மூலமாகவோ அல்லது பழக்க வழக்கத்தின் மூலமாகவோ ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை என்றும்,சில நாட் களில் ரவுடி ரிச்சர்ட்டும் கொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதேபோல ஜக்கியின் மனைவியை இவரே கொலை செய்து விட்டார் என்று வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறை மூலமாக தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இதையெல்லாம் அறிந்த பத்திரிகை நிருபர்கள் நேரம் வரும் போது ஜக்கியிடம் இதுபற்றி கேள்வி கேட்க வேண்டும் என இருந்த நிலையில் கோவை மாநகரில், மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி. மைதானத்தில் கடந்த 13.12.2011 அன்று ஆனந்த அலை மகா சத் சங் நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் கலந்து கொள்ள வரவிருப்பதாகவும், இது குறித்து கோவை வெஸ்ட் பிரஸ் வளாகத்தில் அன்று மாலை 5.30 மணியளவில்  பத்திரிகையாளர்களையும் நேரில் சந்தித்து விளக்கமளிக்க இருப்பதாகவும் தெரிவித்திகிறார்கள்
சுமார் 25 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட அந்தச் சந்திப்பில் மாதம் இரு முறை வெளிவரும்‘ஆயுதம்’ இதழின் செய்தியாளராக பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் எஸ். பூபதி கண்ணன் என்பவர் ஜக்கியைப் பார்த்து கீழ் வரும் கேள்விகளை சரமாரியாக கேட்கத் துவங்கினார். அதன் விவரம்:
1. உங்கள் யோகா மையத்தில் வெளிநாட்டில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது உண்மையா?
2. மேலும் யோகா மையத்திற் குள்ளும் உங்கள் வளாகத்தைச் சுற்றி உள்ள ஒரு சில இடங்களிலும் வெளிப்புற மரங்களிலும் இரகசிய கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறதே உண்மையா?
3. உங்கள் பெயரை ஜாவா வாசுதேவ் என்பது எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்?இதுவும் உண்மையா?
4. மேலும் 1970 ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது உண்மையா? என்று சங்கு சக்கரம் சுற்றுவதுபோல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டபோது….
ஜக்கியின் முகம் மாறியது; கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உடனே ஜக்கி செய்தியாளரைப் பார்த்து, “உனக்கு மனநிலை பாதிக்கப்ப்டடதுபோல உள்ளது. அதனால்தான் கேள்விகளை இப்படி கேட்கிறாய்” என்று கூற, சக பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைய – மீண்டும் ஜக்கியின் மனைவியின் சாவில் இருக்கும் கேள்விகளைக் கேட்டபோது, அருகில் இருந்த அவருடைய சீடர் களிடம் மௌனமாக ஜாடை காட்ட, 4 குண்டர்கள் செய்தியாளரை வெளியே தூக்கிக் கொண்டு வந்து ஒருவர் அவருடைய வலது கையை முறுக்கிக் கொண்டும், இன்னொருவர் அவருடைய பாக்கெட்டிற்குள் பத்திரிகையில் இவர் பணிபுரியும் அடையாள அட்டையைப் பறித்துக் கொண்டும் மற்றும் 2 பேர் தோள் பட்டை யில் சரமாரியாக தாக்கினார்கள். வலி தாங்க முடியாமல் கத்தியபோது, சக பத்திரிகையாளர்கள் வெளியே வந்து பார்த்தவுடன் தாக்குதலை நிறுத்திக் கொண்டார்கள்.
இது சம்பந்தமாக அன்று இரவே தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.பி.ஆர். மற்றும் சக நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தி மறுநாள் (14.2.2011) அன்று காலை சுமார்100க்கும் மேற்பட்ட நிருபர்கள் ஈஷா மையம் ஜக்கி மீது புகார் கொடுத்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதன் அடிப்படையில் அருகிலுள்ள பந்தைய சாலை பி4 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு காவல்நிலைய ஆய்வாளர் நகல் பிரதியை வழங்கினார். நகலின் பதிவு எண்.433/1808. இது இன்று வரை கிணற்றில் போட்ட கல் போல நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது.
அதேபோல 2006 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இவர் மீது புகார் கொடுத்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் வழக்கின் முடிவு வெத்துவேட்டாகி இவரின் மனைவி, மகளையும் இழந்தது தான் மிச்சம். இதுபோல பல மாவட்டங்களிலிருந்த 18வயதிற்குட்பட்ட பெண்கள் இவரால் யோகாசனம் என்கிற மூளைச் சலவை செய்து தன்வசப்படுத்திக் கொண்டார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது. இப்படிப்பட்ட சந்தேகத்திற்குரிய மதவாதியான ஜக்கி வாசுதேவ் தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பாரா அல்லது அமைதி காத்து குற்றவாளி என ஒத்துக் கொள்வாரா?

Nov 6, 2014

செக்ஸ் சாமியாரின் அரசியல் பரவசம்!

நவம்பர் 07/14: செக்ஸ் சாமியார் ஆசாராம் பாபுவின் ஆதரவாளர்கள் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுமி ஒருவரை வன்புணர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கிறார்  சாமியார் ஆசாராம் பாபு. இவரது  மகன் நாராயண் சாய் என்பவர் நடத்தி வரும் ஓஜாஸ்வி கட்சி வருகிற  டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் சுவாமி ஓம்ஜி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதனன்று (5ஆம் தேதி) செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஓஜாஸ்வி கட்சி சார்பில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம். எங்களுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் கணிசமான இடங்களில் வெற்றி பெறுவோம்” என்றார். இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாயும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சிந்திக்கவும்: ஏற்கனவே இந்திய அரசியல் முடை நாற்றம் வீசுகிறது இதில் வேறு செக்ஸ் சாமியார்கள் வேறு நுழைந்து விட்டால் அவ்வளவுதான். நாடாளுமன்றம், பாராளுமன்றம் முழுவதும் அஜால் குஜால்தான். 

Nov 6, 2011

முற்றும் துறந்த முனிவர்கள்!

நியூ டெல்லி: பாபா ராம்தேவ் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் ஆகியோர்கள் துறவி அல்ல, நல்ல விற்பனையாளர்கள் இவர்கள் இருவரும்  சாமியார்கள் என்று  சொல்லி மக்களை ஏமாற்றி  காசு பார்கின்றனர்.

இவர்கள் காவி உடை அணிந்த நல்ல வியாபாரிகள். பாடஞ்சலி யோக் பல்கலைகழகம் மற்றும் திவ்ய யோக் பார்மசியை நடத்தி சுவாமி ராம்தேவ் கோடி,கோடியாக சம்பாதிக்கிறார். ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் ஆர்ட் ஆஃப் லிவிங் பௌண்டேசன் என்பதை நடத்தி அதன் மூலம் சிறந்த வியாபாரம் செய்து கோடிஸ்வரராக விளங்குகிறார்.

மேலும் வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடியில் சிக்கி இருக்கும் பாபா ராம்தேவ் உத்திரகாண்டில் தனது ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இவர் சமீபகாலமாக ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தோடு சேர்ந்து ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் நடத்தி வந்தார் என்பது குறிப்பிட தக்கது.

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்தி தன்னை தூய்மையானவராக காட்டி கொள்ளும் பாபா ராம்தேவ் தனது ஆசிரமம் நடக்கும் உத்திரகாண்டில் ஏன் அதை நடத்தவில்லை. அங்கு இவர் அப்படி பட்ட ஒரு போராட்டத்தை நடத்தினால் இவரது சுயரூபம் வெளியே வந்து விடும் என்ற பயமே அதற்க்கு காரணம்.

அதுபோல் கர்நாடகாவில் ஆசிரமத்தை நடத்தி வரும் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் ஏன் அங்கு ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை, ஏன் என்றால் கர்நாடகாவை ஆள்வது தங்களது ஹிந்துத்துவாவாதிகள் என்பதே. ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது முதலில் தங்கள் சொந்த மாநிலத்தில் இருந்து தொடங்கட்டும். இதுபோல் சாமியார்களை நம்பி மக்கள் மோசம் போவதை விட்டு விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.

-ராஜன்-

Aug 9, 2011

பயங்கரவாதி சாத்விபிரக்னயா மீதான ஜாமின்மனு தள்ளுபடி !!!

ஆகஸ்ட் 9, மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கைது செய்ய்பட்ட பெண் சாமியார் சாத்விபிரக்னயா மீதான ஜாமின்மனுவை கோர்ட் தள்ளுபடிசெய்தது.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி மகாராஷ்டிராவி்ன் மலேகான் பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாயினர். பலர்படுகாயம‌டைந்தனர்.

இது தொடர்பாக மகாராஷ்டிரா குற்ற அமைப்பு தடுப்பு கட்டுப்பாட்டு (எம்.சி.ஓ.சி.) போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் இந்து அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் சாத்விபிரக்னயா சிங் தாகூர்,அபினவ் பாரத் அமைப்பைச் சேர்ந்த சமீர்குல்கனி உள்ளிட்ட எட்டுபேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு மகாராஷ்டிரா குற்ற அமைப்பு தடுப்பு சிறப்பு கோர்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் முக்கிய குற்றவாளியான சாத்விபிரக்னயா, எம்.சி.ஓ.சி.ஏ கோர்டில் ஜாமின் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் தனது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்வும் தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ளஇருப்பதால், ஜாமினில் விடுவிக்கும்படிகோரியிருந்தார். அவர் சார்பில் வக்கீல் ராமேஷ்வர் கெய்த் ஆஜரானார். அவர் வாதிடுகையில், பிரக்னயா உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியான பாதிக்கப்பட்டுள்ளார். ஆகையால் அவருக்கு சிகிச்சையளிக்க இரண்டு மாதங்கள் ஜாமின்அளி்க்க வேண்டும் என கூறயிருந்தார். இதற்கு அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். முடிவி்ல் நீதிபதி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

Jul 19, 2011

நித்யானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைக்குமா?

JULY 20, ரஞ்சிதா நிதியானந்தாவுடன் சேர்ந்திருக்கும் காட்சிகளை ரகசிய கேமிரா வைத்து எடுத்துத்திருந்தார். பின்னர் ரஞ்சிதா அமெரிக்கா போய்விட்டார்.  நித்யானந்தா அவருக்கு வாக்களித்திருந்த பணங்களை கொடுக்காததால் அந்த வீடியோவை வெளிப்படுத்தினார்.

இதனால் ரஞ்சிதாவிடம் சரண் அடைவதுதான் பெஸ்ட். என நான் நித்யானந்தாவிடம் சொன்னேன் என்று வழக்கறிஞசர் ஸ்ரீதர் தெரிவித்தார். இதனால் அமெரிக்கா போன ரஞ்சிதாவிடம் பணத்தை செட்டில் செய்து, இந்தியாவுக்கு வரவழைத்தார்கள்.

ரஞ்சிதாவுக்கு பணத்தை செட்டில் செய்த நித்யானந்தா, எனது அட்வைஸை கரெக்டா செய்துவிட்டார்.  ரஞ்சிதாவை கூடவே வைத்துக்கொள்வதுதான் பாதுகாப்பானது என்று நான் மட்டும் அல்ல, நித்யானந்தா பார்த்த பல வழக்கறிஞர்களும் அவரிடம் சொன்னார்கள்.

அதனால் அதை மட்டும் கரெக்டா செய்துவிட்டார் நித்யானந்தா. ரஞ்சிதா மட்டும் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்து, சிடியில் இருப்பது தானும், நித்யானந்தாவும் தான் என்று வாக்குமூலம் கொடுத்துவிட்டால் பிரேமானந்தாவாக, நித்யானந்தா ஆகிவிடுவார் என்றார்.

சிந்திக்கவும்: நித்யானந்தா எப்பொழுது பிரேமானந்தாவாக மாறுவார். இவரை சட்டம் தண்டிக்குமா? இவருக்கும், கொலைகார சங்கராசாரி, மற்றும் அவர்வழி வந்த சாமியார்களுக்கும் பிரேமானந்தா மாதிரி இரட்டை ஆயுள் தண்டனை வழங்கினால்தான் இதுபோல் கயவர்கள் மீண்டும் உருவாகாமல் இருப்பார்கள். சட்டம் தன் கடமையை செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Jul 18, 2011

சுவாமி நித்தி படுக்கை அறை காட்சியை எடுத்தது ரஞ்சிதா தான்!

JULY 19, சென்னை:  2010 மார்ச் முதல் வாரத்தில் வெளியான சாமியார் நித்யானந்தா  நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் பெரும் அதிர்வை உண்டாக்கின.

இதையடுத்து நித்யானந்தா தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே உள்ள நித்யானந்தா கடந்த 13.07.2011 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய சுவாமி நித்யானந்தா நக்கீரன் உள்ளிட்ட சில ஊடகங்கள் வழக்கறிஞர் ஸ்ரீதர் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாக பொய் குற்றச் சாட்டை கூறினார். இதையடுத்து, 'நக்கீரன் வெளியிட்டது உண்மையான வீடியோ காட்சிகள்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்டப்பூர்வமாகவும் இதனை நிரூபிப்போம்.

வீடியோ காட்சிகள் போலியானவை என்று சொல்லும் சுவாமி நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் நீதிமான்கள், சட்ட வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தடயவியல் நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 100 பேர் முன்பாக இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று நக்கீரன் பகிரங்கமாக சவால் விடுகிறது.

இந்த சவாலை எதிர்கொண்டு, தங்களின் பரிசுத்தத் தன்மையை நிரூபிக்க நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தயாரா?' என்று நக்கீரன் கூறியிருந்தது. இந்நிலையில் சென்னையில் 18.07.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த நித்யானந்தாவின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர்,  எனக்கும் நக்கீரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நித்யானந்தா தொடர்பான வழக்கை நான்தான் நக்கீரன் மீது தொடர்ந்தேன்.நான் எந்தக் கட்சியையும் சாராதவன்.

சுவாமி நித்யானந்தா எனக்கு வந்து ஒரு கிளைண்ட்.  நித்தியானந்தாவுக்கு யாரோ தவறான ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். தேவையில்லாமல் அவர் நக்கீரன் மற்றும் சில ஊடங்களை மட்டும் குற்றம் சாட்டியிருக்கிறார். அன்றைக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்து ஊடங்களும் நித்யானந்தா பற்றிய செய்திகளை வெளியிட்டது. யாரும் நித்யானந்தாவை மிரட்டவில்லை.

இந்த சிடி விஷயம் பற்றி தெரிந்தது 5 பேர்தான். நித்யானந்தா, ரஞ்சிதா, லெனின் தர்மானந்தா, ஆர்த்திராவ். நித்யானந்தா என்னிடம் சொல்லும் போது, சிடி உண்மையானது என்றார். அப்போது அட்வைஸ் பண்ணினோம். உண்மையான சிடியாக இருந்தால் தாமதப்படுத்த வேண்டாம். கன்சல்டிங் பாட்னர் என்று சொல்லிவிட்டு கேஸில் இருந்து தப்பிக்க பாருங்க. அதைவிட்டுட்டு ரொம்ப டீப்பா போனீங்கன்னா டிரபுள் வரும். அதற்கேற்ற மாதிரி அவர் ஒத்துக்கிட்டார்.

இதையடுத்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் சிடியில் இருந்தது நான்தான் என்று ஒப்புக்கொண்டார். அப்போது யோக நிலையில் இருந்ததாக கூறியிருந்தார். அதைப்போல ரஞ்சிதாவும், ஆமாம் நான் சாமிக்கு சேவை செய்வேன் என்று பேட்டி கொடுத்தார்.  தற்போது சிடி பொய் என்று கூறுகின்றனர். இது வழக்கை திசை திருப்பும் செயல். அந்த சிடியை பார்த்தால் நித்யானந்தா எழுந்து கையை நீட்டி அங்கபாரு என்று சொல்லும்போது, ரஞ்சிதா அதுவெல்லாம் ஒன்றும் இல்லைபடு என்று சொல்லுகிற மாதிரி இருக்கும்.

அதை உன்னிப்பா கவனித்தால் தெரியும். கண்டிப்பா ரஞ்சிதா படுக்கை அறை காட்சியை, போக்கஸ் லைட் நடுவில் எடுத்திருக்காங்க அப்படியின்னா வேர்க்க விறுவிறுத்துதான் எடுத்திருப்பாங்க.  அப்போது நான் வழக்கறிஞராக சொல்லிவிட்டேன். ரஞ்சிதாதான் எடுத்திருக்காங்க. ரஞ்சிதாவிடம் சரண் அடைவதுதான் பெஸ்ட். ரஞ்சிதாவுக்கு பணத்தை செட்டில் செய்து நித்யானந்தா அந்த அட்வைஸை மட்டும் கரெக்டா செய்துவிட்டார் என்று கூறினார்.

Jul 16, 2011

ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைத்தாரா நித்யானந்தா?

July 17,பெங்களூர்: நடிகை ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைப்பதாக பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தா நடத்திக் காட்டிய வித்தை படுதோல்வி அடைந்தது.

வெளிநாட்டு சீடர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். மக்களை ஏமாற்றுவதாக நித்யானந்தாவுக்கு எதிராக ஒரு நிருபர் ஆவேசமாக கூச்சல் போட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் உலகம் முழுவதும் பத்திரிகைகள் மற்றும் டி.வி.க்களில் வெளியானதால் நித்தியானந்தாவின் உண்மையான முகம் மக்களிடம் அம்பலமானது. இதையடுத்து நித்யானந்தா கர்நாடகா போலீசால் கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.

ரஞ்சிதாவும் இதுவரை தலை மறைவாக இருந்தார். மக்களிடம் மதிப்பிழந்த நித்யானந்தா, சிலரது தூண்டுதலின் காரணமாக சமீபத்தில் ரஞ்சிதாவுடன் சென்னை வந்து பிரஸ் மீட் நடத்தி செய்தி நிறுவனங்கள் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார். அதை தொடர்ந்து அடுத்த காமெடி கலாட்டாவை தனது பிடதி ஆசிரமத்தில் அரங்கேற்றியுள்ளார்.

நேற்று முன்தினம் குரு பூர்ணிமா பூஜை நடந்தது. ஆடம்பரமாக கொண்டாடினார் நித்யானந்தா. ரஞ்சிதா உள்பட ஏகப்பட்ட பெண் சீடர்கள், வெளிநாட்டு கோஷ்டிகள் அவரை சுற்றி அமர்ந்திருந்தன. அப்போது தான் ஒரு வித்தை புரியப் போவதாக நித்யானந்தா அறிவித்தார். குண்டலினி சக்தி மூலம் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உங்களை அந்தரத்தில் மிதக்க வைக்க போகிறேன் என்றார்.

அந்தரத்தில் மிதப்பது எல்லாம் ரொம்ப சிம்பிள். பிளாங்க் செக் கொடுத்து ஏழையை பணக்காரனாக்குவது போன்றதுதான் அது. குண்டலினியில் ஈடுபட்டு இந்த சக்தியை அடைவதற்குள் உங்களுக்கு வயதாகிவிடும். அதனால் நானே உங்கள் குண்டலினி சக்தியை உடனடியாக எழுப்பிக் காட்டுகிறேன்! என்று நித்யானந்தா சவால் விடும் தோரணையில் அறிவித்தார்.

இதையடுத்து ரஞ்சிதா உள்பட அங்கிருந்த சிஷ்யகோடிகள் அனைவரும் அந்தரத்தில் மிதக்க தயாராயினர். சிம்மாசனத்தில் அமர்ந்து கையில் வாள், கேடயம் போன்றவற்றை வைத்துக் கொண்டு நித்யானந்தா ஏதோ மந்திரம் முணுமுணுத்தார். பிறகு வாயை குவித்து காற்றை ஊதினார். நடக்கட்டும் என்பது போல் கைகளை அசைத்து எல்லோரையும் குதிக்க சொன்னார். குதித்து கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் சர்ரென மேலெழும்பி அந்தரத்தில் மிதக்கலாம் என்றார்.

இதையடுத்து எல்லோரும் சம்மனமிட்டு உட்கார்ந்தபடியே குதிக்க தொடங்கினர். விநோத ஒலிகளை எழுப்பிய வண்ணம் அவர்கள் குதித்தது ஒரே நேரத்தில் ஏராளமான தவளைகள் தாவி குதிப்பதை போலிருந்தது. எங்கே அந்தரத்தில் பறந்துபோய் கீழே விழுந்தால் அடிபட்டு விடுமோ என்று சிலர் ஹெல்மெட் வேறு போட்டிருந்தனர்.

ஆனால் ஜன்னி வந்தது போல எல்லோரும் குதித்ததுதான் மிச்சம், யாரும் மிதக்கவில்லை. சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த நித்யானந்தா, ரஞ்சிதாவை பார்த்து, ம்...நீயும் குதி...ம்  என்பதுபோல சைகை காட்டினார்.
அடுத்த நிமிடம் தனது டிசைனர் சாரியை இடுப்பில் செருகிக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் இருந்து சர்வாங்கமும் அதிர குதிகுதியென குதித்தார் ரஞ்சிதா.

இதை பார்த்த ஒரு நிருபர், என்னையும் மிதக்க வைக்க முடியுமா? என்று கேட்டார். நித்தியானந்தா சளைக்கவில்லை. அவரையும் குதிக்க சொன்னார். ஹெல்மெட் மாட்டிக்கொண்டு நிருபரும் உட்கார்ந்த இடத்தில் இருந்து துள்ளி குதித்தார். ஆசிரமம் முழுக்க இப்படி ஒரே துள்ளலாக இருந்ததே தவிர யாரும் அந்தரத்தில் மிதக்கவில்லை.  தீவிரமாக குதித்த ரஞ்சிதா மல்லாந்து விழுந்தார். ஆனாலும் சிரித்தபடி எழுந்து உட்கார்ந்தார். கடைசிவரை யாரும் எழும்பாததால் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

நித்யானந்தா மீண்டும் தன் வேஷம் கலைந்து விட்டதை திசை திருப்ப, அசட்டு சிரிப்புடன் விளக்கம் கூற முயன்றார். ஆனால் சும்மா குதித்து அவமானப்பட்ட நிருபர், நித்யானந்தாவுடன் வாக்குவாதம் செய்தார். ‘‘மக்களை முட்டாளாக்கும் விதத்தில் இன்னும் எத்தனை காலம்தான் இப்படி வித்தை காட்டுவீர்கள்?’ என்று கோபமாக கேட்டார்.  வெளிநாட்டு சீடர்கள் சிலரும் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினர். அவர்களை லோக்கல் சீடர்கள் அழுத்தி உட்கார வைத்தனர்.

Jul 13, 2011

ரஞ்சிதாவுடன் நித்யானந்தா; வீடியோ உண்மையே!

ஜூலை 14 ,பெங்களூர்: பெங்களூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், நித்யானந்தா, ரஞ்சிதாவுடன் சென்னையில் பத்திரிக்கையாளர்களை அழைத்து பேட்டி அளித்தது கர்நாடக போலீசில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘

கோர்ட்டில் எல்லா விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன; நித்யானந்தா, ரஞ்சிதாவுடன் இருந்த வீடியோ உண்மை தான்’ என்று போலீஸ் மீண்டும் உறுதி கூறியுள்ளது. சாமியார் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் சென்னை போலீசில் கொடுத்துள்ள புகாரில், தாங்கள் நெருக்கமாக இருப்பது போல் கடந்தாண்டு வெளியான சி.டி. காட்சிகள் போலியானவை என்று கூறியுள்ளனர்.

கடந்தாண்டு சம்பவத்தை சுட்டிக்காட்டி, அவர்கள் பேட்டியும் அளித்தனர். இருவருமே, பல கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினர். நேற்று முன்தினம், ரஞ்சிதா பேட்டியை பாதியில் முடித்துக்கொண்டு வெளியேறி விட்டார். நேற்று நித்யானந்தா பேட்டியின் போது, பதில் சொல்ல முடியாமல் திணறி, நிருபர்களையே திட்டித்தீர்த்தார். பல கட்டங்களில் அவருக்கு பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

நானும் ரஞ்சிதாவும் ஒன்றாக இருந்ததாக எடுக்கப்பட்ட வீடியோ போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளது; வீடியோவில் உள்ளது பெங்களூரில் என் ஆசிரமத்தில் உள்ள அறை அல்ல’ என்றெல்லாம் முன்னுக்கு பின் முரணாக பேசினார் நித்யானந்தா. சென்னையில் அவர் பேட்டியளித்த நிலையில், அது பற்றி கர்நாடக போலீஸ் அதிர்ச்சி அடைந்தது. ‘வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, பேட்டி அளிப்பதே தவறு; போதாக்குறைக்கு கோர்ட்டில் வழக்கு பட்டியலில் இல்லாதவர்கள் பற்றி குற்றம் சுமத்தி பேசுவது எப்படி’ என்று வினவினர்.

நித்யானந்தா வழக்கை விசாரித்து வரும் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் இது பற்றி நேற்று கூறுகையில், ‘நித்யானந்தா, ரஞ்சிதா வழக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விசாரணையில் உள்ள ஒரு வழக்கு பற்றி மற்றொரு மாநிலத்தில் நடவடிக்கை எடுக்கும்படி கோரி, அவர்கள் புகார் கொடுத்து இருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல். நித்யானந்தா & ரஞ்சிதா நெருக்கமாக இருக்கும் சி.டி.யை டெல்லி, ஐதராபாத்தில் உள்ள ஆய்வு மையங்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்தோம்.

அந்த சி.டி.யில் பதிவாகி இருந்த வீடியோ காட்சி உண்மைதான் என்று சான்றிதழ் பெற்றுள்ளோம். அது நீதிமன்றத்திலும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், நித்யானந்தா & ரஞ்சிதாவின் நடவடிக்கை வழக்கை திசை திருப்பும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் உள்ளது’ ஜாமீனில் இருக்கும் போது வெளியூரில் அது குறித்து பேட்டி அளிப்பதும் தவறு என்றனர்.

கேர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில், லெனின் உட்பட மூன்று பேர் தான் உள்ளனர். அப்படியிருக்கும் போது, கோர்ட்டில் தாக்கல் செய்யப்படாத வேறு சிலர் பெயர்களை சொல்லி, அவர்களை களங்கப்படுத்தும் வகையில் சென்னையில் பேட்டி அளித்தது சட்ட வரையறையை மீறியது மட்டுமல்ல; கோர்ட் அவமதிப்பும் கூட. மேலும் சன் குழுமத்தை திட்டமிட்டு, களங்கப்படுத்தும் வகையில், யாரோ சிலர் தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்ட சதியாகவே கருத இடமிருக்கிறது’ என்றும் சட்டநிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

Jul 9, 2011

நூற்றுக்கும் அதிகமான பெண்களைச் சீரழித்த சாமியார் கைது!

JULY 10, நெல்லை வண்ணார் பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கேரள மாநிலம் கோவளத்தில் உள்ள ஒரு லாட்ஜில் உதவி மேனேஜராக பணியாற்றி வருகிறார். இந்த லாட்ஜுக்கு சோட்டாணிக்கரையைச் சேர்ந்த சாமியார் நந்தகுமார் அடிக்கடி வந்து தங்கிச் செல்வது வழக்கம்.

இதனால் அவருடன் கிருஷ்ணனுக்குப் பழக்கம் ஏற்பட்டது. கடந்த வாரம் லாட்ஜுக்கு வந்த நந்தகுமாரிடம், தன் குடும்பத்தில் உள்ளவர்களின் ஜாதகத்தைப் பார்த்து பரிகாரம் சொல்லுமாறு கிருஷ்ணன் கூறினார். இதற்கு நந்தகுமாரும் ஒப்புக் கொண்டார். நேற்று நந்தகுமார் நெல்லை சந்திப்பிலுள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கிருப்பதாக கிருஷ்ணனுக்குத் தகவல் தெரிவித்தார்.

கிருஷ்ணனின் மனைவி லலிதாவுக்கு ஏற்கனவே நந்தகுமாரைத் தெரியும் என்பதால், லலிதாவும், உறவினர் பானுமதியும் குடும்பத்தினரின் ஜாதகங்களை எடுத்து கொண்டு லாட்ஜூக்குச் சென்றனர். அறையில் நந்தகுமார் குடிபோதையில் இருந்தார். பரிகாரம் சொல்வது போல் நடித்து, திடீரென இருவரின் கைகளைப் பிடித்து இழுத்தார். சேலையையும் பிடித்து இழுத்ததால், பெண்கள் இருவரும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து லாட்ஜ் ஊழியர்களிடம் அவர்கள் தெரிவித்தனர். பின்னர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நெல்லை சந்திப்பு காவல்துறையினர் நந்தகுமாரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலி சாமியார் என்பது தெரிய வந்தது. எப்போதும் போதையிலேயே இருக்கும் நந்தகுமார், கேரளா, சென்னை, மதுரை, திருச்சி, குமரி உள்ளிட்ட பகுதிகளில் பரிகாரம் சொல்வது போல நடித்து நூற்றுக்கும் அதிகமான பெண்களைச் சீரழித்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

Jul 8, 2011

நித்யானந்தா, பிரேமானந்தா, ஆகியோரின் மற்றொரு வாரிசு!

JULY 09, திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அ.அம்மாபட்டி பகுதியில்  ஒரு கோயில் உள்ளது.  இங்கு கள்ளப்பாளையத்தை சேர்ந்த தண்டபாணி (47) என்பவர் பூசாரியாக உள்ளார்.

கோயிலில் பவுர்ணமி அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் கூட்டம் அவ்வளவாக இருக்காது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தண்டபாணி கோயில் அறையை விபசாரத்துக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.

கோயிலில் மாலை நேரங்களில் சந்தேகத்துக்கிடமாக பெண்கள், ஆண்கள் வந்து செல்வது பற்றி குடிமங்கலம் போலீசாருக்கு புகார் வந்தது.  இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில், போலீசார் நேற்று மாலை கோயில் பகுதியில் மறைவாக இருந்து கண்காணித்தனர். அப்போது 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் அங்கு வந்தனர். தண்டபாணியிடம் சென்று பேசினர்.

பின்னர் அவர் கோயில் அருகே உள்ள அறையின் கதவை திறந்து விட்டார். அதற்குள் நால்வரும் சென்றனர். உடனடியாக போலீசார் அறையை நோக்கி சென்றனர்.  இதை பார்த்த பூசாரி தண்டபாணி, அறையில் இருந்தவர்களை உஷார்படுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார். அறைக்குள் இருந்து வெளியேறிய 4 பேரும் தப்பி ஓடினர்.

போலீசார் விரட்டி சென்றதில், பூசாரி தண்டபாணியும், 2 அழகிகளும் சிக்கினர். பெண்களிடம் விசாரித்தபோது, அவர்கள் இருவரும் உடுமலை கொல்லம்பட்டறையை சேர்ந்த சரஸ்வதி (36), மடத்துக்குளம் நரசிங்காபுரம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி என்பதும், விபசாரத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது.  அவர்களையும், தண்டபாணியையும் போலீசார் கைது செய்தனர்

சிந்திக்கவும்: தங்களுடைய வழிகாட்டிகளான சங்கராச்சாரியார் கொலை செய்யும் போது, பெண்களோடு சல்லாபம் செய்யும் போது தங்கள் ஆன்மீக குருக்களை பின் பற்றி இந்த பூசாரிகளும் இதை செய்கின்றனர். நித்யானந்தா, பிரேமானந்தா, ஆகியோரின் மற்றொரு வாரிசுசாகவே இவரை நம்மால் பார்க்க முடிகிறது. இதுதான் இவர்களுக்கு பார்ப்பன ஹிந்துத்துவா வர்ணாசிரமம் கற்று கொடுத்த பாடம்.  தலித் மக்களை பூசாரிகளாக வரவிடாமல் தடுத்த இந்த யோக்கியர்கள் பண்ணும் அட்டூழியங்கள் சகிக்கல.

Jul 7, 2011

நித்யானந்தாவின் காம லீலைகளை மறைக்க சன் டிவி மீது புகார்!

JULY 08, சென்னை: "நித்யானந்தா குறித்த வீடியோ காட்சிகளை உள்நோக்கத்துடன் ஒளிபரப்பியதாக சன் "டிவி' நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன், ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீஸ் கமிஷனரிடம், நித்யானந்தா தியானபீட தமிழ்நாடு தலைவர் நித்ய சர்வானந்தா மனு அளித்துள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி, இரவு 8:30 மணிக்கு, எங்கள் ஆன்மிக குரு நித்யானந்தர், தமிழ் நடிகை ஒருவருடன் இருப்பது போன்ற ஆபாசமான, "மார்பிங்' செய்யப்பட்ட வீடியோ படக்காட்சி ஒன்றை, சிறப்பு நிகழ்ச்சியாக சன்"டிவி' ஒளிபரப்பியது. உள்நோக்கத்துடன், இந்து மததிற்கு எதிராக இது ஒளிபரப்பப்பட்டது.

சிந்திக்கவும்: அசிங்கம் பிடித்த  நித்தியானந்தா சன் டிவி இயக்குனர் கைது செய்யப்பட்டதை பயன்படுத்தி தானும் ஒரு புகாரை கொடுத்து தன்னுடைய குற்றத்தை மறைக்கப்பார்கிறார். நித்யானந்தா நடிகையோடு இருந்த சல்லாப விடியோ காட்சிகள் உண்மை என்று பெங்களூர் தடவியல் துறை நிருபித்திருந்தும், ஹிந்துமதத்தை கேவலப்படுத்த சன் டிவி முயற்சித்ததாக ஒரு பொய் புகாரை கொடுத்து தன்மீது உள்ள வழக்கை திசைதிருப்ப பார்கிறார். இவரது ஆசிரமங்களை மனம் திருந்திய பக்தர்கள் அடித்து நொறுக்கியதை சன் டிவி குண்டர்கள் செய்தார்கள் என்று திசை திருப்ப பார்கிறார்கள். நியானந்தா என்ற ஆன்மீக வியாபாரிக்கு, பெண் பித்தருக்கு, மக்கள் கொடுத்த செருப்படியை சட்டம் கொடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
-மலர்-

Jul 5, 2011

சாமியார்கள் சொத்து, கோவில் புதையல் மக்களுக்கே! கி.வீரமணி!

JULY 06, இந்தியாவில் உள்ள கோயில் சொத்துகள், புட்டபர்த்தி சாயிபாபா போன்றவர்களின் சொத்துகளை மக்கள் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம்.

மக்கள் அளித்த பணம் மக்களுக்கே திருப்பித் தரப்படுவதில் தவறில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள முதலாளித்துவத்தை மூன்று வகையாகப் பிரிக்க வேண்டும் என்பார் தந்தை பெரியார்.

ஒன்று, கோயில்களில் உள்ள கடவுள் அவதாரங்களின் அள்ளக் குறையாத, "முதல் போடா மூலதனப் பெருக்கம்" கோடி கோடியாக கொட்டிக் கொண்டு இருப்பதும், அதைக் “கோயில் பெருச்சாளிகள் கொள்ளையடிப்பதும் ஒரு வகையான விசித்திர முதலாளித்துவம்.

இரண்டு, பிறவியினால் எவ்வித உழைப்பும் இன்றி, உயர்ஜாதி, ஆண்டவனின் முகத்தில் பிறந்த ஜாதி என்று முத்திரைக் குத்திக் கொண்டு, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பூணூலையும், தர்ப்பையும், பஞ்சாங்கத்தையுமே மூலப் பொருளாகக் கொண்டு, பெரும்பாலான அடிமைப்படுத்தப்பட்ட மக்களையே சுரண்டிக் கொழுக்கும் பிறவி முதலாளித்துவம்.

மூன்று, மூலதனம் போட்டு தனது மூளை உழைப்பு, சுரண்டல் புத்தியைக் கூர்மையாக்கி தொழிலாளர்களின் உழைப்பை மூலதனமாகக் கருதாமல், அதற்கு ஏதோ ஒருவகைக் கூலி மட்டும் கொடுத்து, அதை விலை உயர்வு மூலம் ஒரு கையில் கொடுத்ததை, மறுகையில் பிடுங்கிக் கொள்ளையடிக்கும் முதலாளிகள் மனித முதலாளித்துவம்.

மூன்றாவது வகை இருவகை முதலாளித்துவத்தை எளிதாக ஒழித்துவிடலாம். ஒரு அவசரச் சட்டம் போட்டுக்கூட, பணக்கார முதலாளிகளிடம் இருக்கும் பணம், சொத்துகளை அரசுகளால் எடுத்துக்கொள்ள முடியும்.

ஆனால், கோயில், மதம், பார்ப்பனீயம் இவைகளிடம் நெருங்குவதற்கு எக்கட்சி அரசானாலும் துணிவதில்லை. சிதம்பரம் கோயிலில் சுமார் 200 ஆண்டுகளுக்குமேல் தீட்சதர் கூட்டத்தால் சுரண்டப்பட்ட மக்கள் தந்த, தருகின்ற வருமானம், மன்னர்கள் விட்டுச் சென்ற சொத்துகளைக் காப்பாற்ற பல அரசுகள் முயன்றும் இப்போதுதான் அது ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் வந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக, ஆந்திராவில் புட்டபர்த்தி சாயிபாபா தன்னை ஆண்டவன் அவதாரம் என்று கூறிக் கொண்டு, ஏமாளி பக்தர்களை ‘பக்தி வந்தால் புத்தி போகும்’ என்று தந்தை பெரியாரின் கூற்றினை மெய்ப்பிப்பது போல செய்து, அவர் பலருக்கும் ‘ஆசி’ வழங்கி வந்தவர். பல வாரங்கள் மாதங்கள் நோய் வாய்ப்பட்டு, சிறுநீரகம் முதலிய பல்வேறு உறுப்புகள் படிப்படியாக செயலிழந்து, பிறகு மரணமடைந்தார். அவரது மடத்தில் புட்டபர்த்தியில் அங்கே சொத்துகளை நிருவகிப்பது முதல், பல பிரச்சினைகளில் சண்டைகள் பல மாதங்களாக சில ஆண்டுகளாகவே நடந்து வந்துள்ளன.

அவரது மரணத்திற்குப்பின் அங்கே இருந்த தங்கம், வைரம், ரூபாய் நோட்டுகள் என்று பல லட்சம், பல கோடிக்கணக்கில் அவை கடத்தப்பட்டு, ஆந்திர அரசே அதுபற்றி புலன் விசாரணைகளை நடத்தும் நிலை உள்ளது! மடத்திலிருந்து லாரியில் கடத்திச் சென்றுள்ள பணம், தங்கம், வைர நகைகள் பிடிபட்டதாக செய்திகள் வந்தவைகளை மீடியாக்கள் பெரிதும் பார்ப்பன ஊடகங்கள் அமுக்கி வாசித்தன.

ஒரு வார இடைவெளிக்குப் பின்னர், அது சம்பந்தப்பட்ட தமிழ்நாட்டுப் பார்ப்பன தொழில் அதிபர் ஒருவர், அந்த ரொக்கம் ஏதோ, பாபாசமாதி கட்ட, ஒப்பந்தக்காரருக்கு, யாரோ கொடுத்ததாக ஒரு பேட்டி கொடுத்தார். மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டார்கள்; ஏன் உடனே செய்யவில்லை? பிடிபட்ட நேரத்தில், பிடிபட்டவர்தானே அப்படி வாக்குமூலம் கொடுத்திருக்க வேண்டும்? பிறகு அதிலிருந்து மீளுவதற்கே இப்படி ஒரு “அற்புத யோசனை” அறிவுரை நிபுணர்களால் ‘அவாளுக்கு’ச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கக் கூடும்!

தோண்டத் தோண்ட வெளிவரும் புதையல்போல, பாபா அறையிலிருந்து தங்கக் குவியல்கள் வந்த வண்ணம் உள்ளதாம்! செய்தி ஏடுகளால் மறைக்க முடியாது சிலவற்றை வெளியிடுகின்றன. பிரசாந்தி நிலையத்தில் இருந்து ஏராளமான ரொக்கப் பணமும், நகைகளும் கடத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அண்மையில் நடைபெற்ற சில வாகனப் பரிசோதனைகளின்போது ரூபாய் 10 கோடி மற்றும் 35 லட்சம் பணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் , கடந்த சில நாள்களாக திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோயில் அங்கே ஆறு பாதாள அறைகள் திறக்கப்பட்டதில், இது வரை கண்டு எடுக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது!  திருப்பதி கோயிலையும் மிஞ்சும் சொத்து இதற்கு இருக்கும் போல் உள்ளது!

கேரள மாநில பட்ஜெட்டையும் தாண்டும் சொத்து இந்த ஒரு கோயிலிலேயே முடக்கப்பட்ட மூலதனமாக கிடக்கிறது! இவைகளில் கோயில் பெருச்சாளிகள் கொண்டு சென்றவை எவ்வளவோ? யாருக்குத் தெரியும்?  பத்மநாப கல் முதலாளி ஆடாமல் அசையாமல் வருமான வரி ஏதும் தராமல் உள்ளவராக உள்ளார்!

குருவாயூர் கிருஷ்ணன் கோயில் வருமானம், சபரிமலை அய்யப்பன் கோயில் வருமானம் இப்படி பலவகை வருமானங்கள் மூலம் கிடைக்கும் தொகை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால், எவ்வளவு அரசு கல்லூரிகள், தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவ மனைகளை எழுப்பலாம்! நமது மத்திய அரசு, லாபம் தரும் பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்பதை நிறுத்திவிட்டு இந்த மூலதனங்களை எடுத்துப் பயன்படுத்தலாமே!

அரசியல் சட்டத்தின் 25,26 என்ற பிரிவுகளைக் காட்டி சிலர் சட்டப் பூச்சாண்டி காட்டலாம். அதுபற்றிக் கவலைப்படாமல் துணிந்து முடிவு எடுத்தால் அப்பிரிவுகளிலேயே அதற்கு தாராளமாக இடம் உள்ளது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு! மக்கள் கொடுத்த பணம் மக்களுக்கே திருப்பித் தரப்படுவதில் தவறு ஏதும் இல்லையே! மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்துமாக! இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அரசுக்கு சொந்தமான புதையலை கொள்ளையடிக்க திட்டமா?

காஞ்சிபுரம், ஜூலை 5- திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் எடுக்கப்பட்ட பொக்கிஷங்கள் அனைத்தும் திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திரர் தெரிவித்துள்ளார்.

"நீண்ட காலமாக பத்மநாப சுவாமி கோயிலின் பாதுகாவலர்களாக திருவாங்கூர் மன்னர் குடும்பம் தான் இருந்து வந்துள்ளது. அந்த கோயிலுக்காகவே அவர்களது ஆட்சி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்துள்ளது. தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து நகைகளும் ஆபரணங்களும் கோயிலுக்கு திருவாங்கூர் மன்னர்களால் அளிக்கப்பட்டது தான்.

எனவே, அவை அனைத்தும் மன்னர் குடும்பத்தினருக்கே சொந்தமானது. எனினும், அந்த பொக்கிஷங்கள் அனைத்தும் கோயிலிலேயே வைக்கப்பட வேண்டும்." என்று ஜயேந்திரர் கூறினார். பல நூற்றாண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி திறக்கப்பட்டது. இதில், இதுவரை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் காசுகள், நகைகள், வைரங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

விரைவில் மேலும் ஒரு அறை திறக்கப்பட உள்ளது. அதன் கதவு மற்றதை விட மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளதால், அதில் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் பெருமளவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளை மூலம் பத்மநாப சுவாமி கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்திக்கவும்: கொலை குற்றவாளி, பெண் பித்தர் சங்கராசாரியார் ரொம்ப காலங்களுக்கு பிறகு இப்படி திருவாய் மலர்ந்துள்ளார். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது போல் தங்கள் பார்பன உயர்ஜாதியை சேர்ந்த திருவாங்கூர் மன்னரின் குடும்ப சொத்தாக இந்த புதையலை மாற்ற திட்டம் வகுத்து செயல்படுகிறார் சங்கராசாரி.

சங்கர மடத்தை தன் கைகளில் வைத்து கொண்டு பிராமணர்கள் மட்டும் அதன் சொத்துக்களை அனுபவித்து வருகிறார்களோ அது மாதிரி கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட புதையலையும் பறிக்க நினைக்கின்றனர். அதானால்தான் இந்த சங்கராச்சாரி இப்படி திருவாய் மலர்ந்துள்ளார்.

"கண்டெடுக்கப்படும் புதையல்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம்" என்ற சட்டம் இதற்கும் பொருந்தும். ஆகவே இது அரசுக்கு சொந்தமானது தான் இதில் யாதொரு சந்தேகமும் இல்லை. இதை அமுக்க பார்க்கும் பார்ப்பன கழுகுகளிடம் இருந்து அரசு தன்வசப்படுத்தி மக்கள் பணிகளுக்கு செலவிட வேண்டும்.
 -மலர்-

Jun 30, 2011

துரத்தும் சி.பி.ஐ.! ஓடும் சாமியார்!

JULY 01, ஊழல் எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு ஆதரவு பிரச்சாரத்தை செய்து வந்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யோகா மாஸ்டர் ராம்தேவின் உதவியாளர் இப்போது சிக்கலில் மாட்டி உள்ளார்.

சாமியார் ராம்தேவ் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பத்து வருடங்களுக்கு முன் ஓட்டை சைக்கிளில் வலம் வந்தவர் இப்பொழுது ஹெலிகாப்டரில் வலம் வருகிறார்.

சமாமியார் ராம்தேவ் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் வைத்திருந்தது மற்றும் போலி மருந்து கம்பனிகள் நடத்தி வந்தது பற்றி    சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இவரது நெருங்கிய உதவியாளர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தார்.

பாஸ்போர்ட் பெறுவதற்கு பொய் தகவல் கூறியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், பாபா ராம்தேவுக்கு நெருக்கமான ஆச்சாரியா பால கிருஷ்ணனிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இந்த விசாரணை நடைபெற்றது. மேலும், பாலகிருஷ்ணனுக்கு ஹரித்துவார் நகராட்சி அலுவலகம் வழங்கிய இரண்டு பிறப்பு சான்றிதழ்களில் முரண்பாடு உள்ளது.

இது தொடர்பாக, ஹரித்துவார் நகராட்சிக்கு சென்று, பிறப்பு, இறப்பு பதிவேடுகளை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர்களிடம் அனைத்து ஆவணங்களையும் ஹரித்துவார் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.

Jun 25, 2011

கார்பரேட் சாமியார் உதவியாளரிடம் சி.பி.ஐ. விசாரணை!

JUNE 26,  சாமியார் பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் ஆச்சாரியா பாலகிருஷ்ணன்.

அவர் நேபாளத்தை சேர்ந்தவர் என்றும் இவரிடம் அனுமதி பெறப்படாத துப்பாகிகள் இருந்தன என்றும் இவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் படி போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

இது தொடர்பாக, போலீசாரின் பார்வை தன் மீது விழுந்ததால், ஆச்சாரியா பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருந்து வந்தார்.  பின்னர், திடீரென நிருபர்கள் முன்பு தோன்றிய ஆச்சாரியா பாலகிருஷ்ணன், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இந்நிலையில், ஆச்சாரியா பாலகிருஷ்ணன் போலி பாஸ்போர்ட் வைத்திருப்பதாக சி.பி.ஐ.க்கு மத்திய அரசிடம் இருந்து புகார் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த புகாரை சி.பி.ஐ. ஆய்வு செய்து வருகிறது. திங்கட்கிழமை ஆச்சாரியா பாலகிருஷ்ணன் மீது முதல்கட்ட விசாரணை பதிவு தொடங்கப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

Jun 22, 2011

பார் புகழும் சாமியார்களும் அவர்களின் மகிமைகளும்!

JUNE 22, இந்தியாவை ஆட்சி செய்யும் சாமியார்களின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கும் ஒரு விடயமாகும்.

இவர்கள் மக்களின் பணங்களை கொள்ளையடித்து எப்படி தங்களை வளர்த்துகொண்டார்கள் என்பதை பார்க்கும் போது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது!

*  காஞ்சி சங்கராச்சாரி: காஞ்சி சங்கராச்சாரி ஜெயந்திரனின் சங்கர மடம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டும்.

புகழ்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை. சென்னை மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்கியது. சென்னை திருவல்லிக்கேணி மாதவன் என்பவரைத் தாக்கியது. காஞ்சிபுரம் சங்கர மடத்தை விட்டு இரவோடு இரவாக நேபாள பெண்மணி ஒருவருடன் தலைக் காவேரிக்கு ஓடியது.

அனுராதா ரமணன் என்ற பிராமணப் பெண்ணை, கையைப் பிடித்து இழுத்ததால் அவர் டி.வி.யில் கண்ணீரும், கம்பலையுமாக பேட்டி கொடுத்தது. பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது, தமிழில் குடமுழுக்கு கூடாது என்று சொன்னது. சங்கரா பல்கலைக் கழகத்துக்கு இந்தியன் வங்கியில் இருந்து தவறாக ரூ.1 கோடி நிதியுதவி பெற்றது. ரா என்ற எழுத்தில் தொடங்கும் நடிகையோடு உல்லாசம் புரிந்தது.

*  பிரேமானந்தா: திருச்சி அருகே ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா சாமியார். பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இவருக்கு உண்டு. பல நூறு ஏக்கர் நிலத்தில் ஆசிரமம், மற்றும் நகைகள், பணம் என்று இவரிடம் கோடிகள் குவிந்து கிடந்தன.

புகழ்: போதை பொருள் வியாபாரம், ஆசிரமத்தில் உள்ள இளம் ஏழை பெண்களை வெளிநாட்டுகாரனுக்கு கூட்டி கொடுத்தது, கொலை செய்தது.  இதனால் அவர் மீது கொலை, கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த குற்றத்துக்காக சாமியார் பிரேமானந்தாவுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.

*  நித்யானந்தா: 32 வயதேயான நித்தியானந்தா தமிழகத்தின் திருவண்ணா மலையில் பிறந்தவர். 33 நாடுகளில் 1200 மையங்கள், அமெரிக்க இந்துப் பல்கலைக்கழகத்தின் தலைவர், பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் 200 ஏக்கர் பரப்பளவில் தலைமைப் பீடம். பெரும் செல்வாக்கு,

புகழ்:  நித்யானந்தா சாமியும், நடிகை ரஞ்சிதாவும் சல்லாபம். ஆசிரமத்து பெண்களை அமெரிக்கா லாஸ்வேகாஸ் நகருக்கு அழைத்து சென்று நிர்வாண நடனம் நடக்கும் கிளப்களில் அவர்களை நிர்வாணமாக்கி அவர்களோடு நடனம் ஆடியது பின்னர் விடுதி அறையில் அவர்களோடு செக்ஸ் வைத்து கொண்டது.

சாப்ட்வேர் என்ஜீனியர் படித்த பெண்ணை மது வாங்கி வரச்சொன்னது, மதத்தின் பெயரால் அவரை மது அருந்த சொல்லி பலவந்தபடுத்தி அவர் மயக்கநிலையில் இருக்கும் போது கற்பழித்தது. இப்படி பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்தது.

வாழ்க்கைக்குத் தேவையான 64 தந்திரங்களில் 6 வகையான தந்திரங்கள் செக்ஸ் தொடர்பானவை என்றும், அதைக் கற்றுத் தரும்போது நிர்வாணமாக இருப்பதும், உடலுறவு போன்றவற்றில் ஈடுபட வேண்டி வரும்.

என்று கூறி தனது தியான பீடத்துக்கு வரும் பெண்களிடம் ஒரு 10 பக்கம் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியது,  இதுபோல் கூறி அந்த பெண்களை ஏமாற்றி செக்ஸ் உறவு கொண்டது. அமெரிக்காவை சேர்ந்த டக்ளஸ் மெக்கன்னர் என்பவரின் மனைவி ஷியாமளாவை அவரிடம் இருந்து அபகரித்தது.

சிவ் முரத்திவேதி: இவர் சத்ய சாய்பாபாவின் சீடர். சொந்தமாக கோவில், புனே, வாரணாசி, லக்னோ, பெங்களூர் நகரங்களில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள்.

புகழ்: கோவில் சுரங்க அறையில் இளம் பெண்களை மிக நூதனமாக ஏமாற்றி விபசார தொழிலில் ஈடுபடுத்தி வந்தது. கல்லூரி மாணவிகள், விமானப்பணிப் பெண்கள் என பல பெண்கள் கணவனை பிரிந்த பெண்கள் இவர்களை வைத்து கோவிலின் உள்ளே சுரங்க அறை அமைத்து விபச்சாரம் நடத்தியது.

டெல்லியில் பணக்காரர்கள் வசிக்கும் சி.ஆர்.பார்க், செக்டார் 3 ஆ.கே.புரம், பிகாஜி காமா பிளேஸ் (முகம்மத்பூர்), சப்தர்ஜங் என்கிளேவ் (ஹியூமான்பூர்), மற்றும் தேவ்லி (ஜவகர் பார்க்) ஆகிய 5 இடங்களில் சிவ்முரத் திவேதி விபசார விடுதி வைத்திருந்தார். இந்த 5 இடங்களுக்கும் போலீசார் சீல் வைக்கப்பட்டது. டெல்லி தவிர பெண்களை உத்தர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், சிம்லாவுக்கு அனுப்பி விபச்சாரத்தின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தார்.

* கல்கி பகவான்: விஜய்குமார் நாயுடு என்ற கல்கி பகவான். தன்னை கல்கி அவதாரம் என்றும், தன் மனைவியை அம்மா பகவான் என்றும் சொல்லிக்கொண்டவர். தன்னைக் காண வரும் பக்தர்களிடம் கட்டாய கட்டணமாக ரூ 5000 வரை பெறுகிறார். சிறப்பு தரிசனத்துக்கு ரூ 25000 கட்டணம். ஹோமம் செய்ய ரூ 60000 கட்டணம்.

புகழ்:  அம்மா பூஜை என்ற பெயரில் மட்டும் ரூ 240 கோடியும், விஜய்குமார் நாயுடுவின் மகன் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பக்தர்களை ஏமாற்றி ரூ 3000 கோடியும் அடித்தது. இளம் ஆசிரம பெண்களை வெளிநாட்டவர்களுக்கு விருந்தாக அளித்தது. போதைப் பொருள் பதுக்கல், பல கோடி ரூபாய் மோசடி செய்தது.

* பாபா ராம்தேவ்: வட இந்தியாவில் யோக சிகிச்சை மற்றும் மருந்துகளை விற்பனை செய்யும் பாபா ராம்தேவின் வணிகம் ஓராண்டு வரவு செலவு 400 கோடி. பாபா ராம்தேவின் மொத்த சொத்து மதிப்பு 1100 கோடிக்கு மேல்.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 100 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம். மற்றொரு நாட்டில் சொந்தமாக தீவு. வெளிநாட்டு விலை உயர்ந்த கார்கள், தனிவிமானத்தில் பவனி. ஓட்ட சைக்களில் வலம் வந்தவர் இப்போது ஹெலிகாப்டரில் வலம் வருகிறார்.

ஹரித்வார் நகரில் பாபா ராம்தேவின் யோக மையத்தில் உறுப்பினராக்கு வதற்கு கட்டணங்களை எழுதி மிகப்பெரிய விளம்பரப் பலகையை வைத்திருக்கிறார்கள். சாதாரண உறுப்பினர் கட்டணம் ரூபாய் 11,000, மதிப்பிற்குரிய உறுப்பினர் கட்டணம் ரூ. 21,000, சிறப்பு உறுப்பினர் கட்டணம் ரூ. 51,000, வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் ரூ. 1,00,000, முன்பதிவு உறுப்பினர் கட்டணம் 2.51 இலட்சம், நிறுவன உறுப்பினர் கட்டணம் 5 இலட்சம் என்று வெளிப்படையாக ஒரு நகைக்கடை விளம்பரம் போல் கூவி அழைக்கிறார்கள்.

* ஸ்ரீ ஸ்வாமிஜி: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் ஸ்ரீ ஸ்வாமிஜி என்று அழைக்கப்படும் பிரகாஷனந்த் சரஸ்வதி சாமியாரின் இருப்பிடம். அவருக்கு அங்கே 200 ஏக்கர் அளவில் ஆசிரமம் உள்ளது. வெளி நாடுகளிலும் கோவில்கள், மருத்துவ மனைகள் உண்டு.

புகழ்:  இவர் தனது ஆசிரமத்தில் இருந்த இரு பெண்களிடம் பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட இரு பெண்களும் காவல் துறையிடம் புகார் கொடுத்தனர். வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. முடிவில் இந்த சாமியாருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 45 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

சத்திய சாய்பாபா: ஆந்திரத்தைச் சேர்ந்த புட்டபர்த்தியின் சாயிபாபாதான் அவர். இவருக்கு 165 நாடுகளில் சொத்துக்கள் உண்டு. ஒவ்வொரு வருடமும் குறைந்தது 55 மில்லியன் டாலர்கள் சாயிபாபாவின் டிரஸ்டுக்குக் வரும் வருமானம்.

புகழ்:  ஆசிரமத்தில் நடந்த படுகொலைகள். அவர் இறப்புக்கு பின்னே அவரது அறையை திறந்து பார்த்தால் கோடி கோடியாய் பணம் மற்றும் நகைகள், வைரங்கள் இப்படி புதையலாக கிடைத்தன. இணையதளங்களில் சாயிபாபா மற்றும் ஹோமோசெக்சுவாலிட்டி என்று தேடினால் பலரது கதைகள் வந்து விழுகின்றன.

*  ஸ்ரீஸ்ரீ இரவிசங்கர்: பெங்களூருக்கு அருகில் ஒரு மலையை அரசிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்து “வாழும் கலை’யைக் கட்டணம் வாங்கிக்கொண்டு கற்றுக்கொடுக்கும் ஸ்ரீஸ்ரீ இரவிசங்கரின் வருடாந்திர வர்த்தக மதிப்பு 400 கோடி.

*  ஆஸ்ரம் பாபு: டெல்லியில் ஆசிரமம் வைத்து நடத்தும் ஆஸ்ரம் பாபுவின் ஓராண்டு வரவு செலவு வர்த்தகம் 350 கோடி.

*  சுதன்ஷன் மகராஜூ:  நாடு முழுவதும் தியான நிலையங்களை நடத்திவரும் சுதன்ஷன் மகராஜூக்கு ஓராண்டு வரவு செலவு 300 கோடி.

*  அமிர்தானந்த மாயி:  பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் முதலானவற்றை வர்த்தக நோக்கில் நடத்திவரும் மாதா அமிர்தானந்த மாயியின் ஓராண்டு வரவு செலவு 400 கோடி. அமிர்தானந்த மாயியின் மொத்த சொத்து மதிப்பு 1200 கோடிக்கு மேல்.

*  முராரி பாபு:  பணக்காரர்களுக்காக மட்டும் பல ஆயிரங்களைக் கட்டணமாக வாங்கிக் கொண்டு அருளுரை கூட்டங்கள் நடத்தும் முராரி பாபுவுக்கு 150 கோடி.

இவையெல்லாம் ஓராண்டுக்குரிய வரவு செலவு மட்டும்தான். சொத்து மதிப்பு இதனினும் பல மடங்கு அதிகம்.

*  பங்காரு சாமியார்:  கல்லூரிகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், பல பினாமி தொழில்கள் போக, மேல்மருவத்தூர் எனும் நகரையே தனக்காக உருவாக்கிக் கொண்டவர்.

*  தீபக் தாக்கூர்: அமெரிக்காவில் வெள்ளையர்களுக்கு ஆழ்நிலை தியானமும், யோகாசனமும் கற்றுத் தருகிறேன் என்று உலக ஆளவில் பல மோசடிகளை செய்து மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டுபவர்.

தீவிரவாத சாமியார்கள்:

*  சுவாமி ஆசிமானந்தா:  குஜராத் மாநிலம் டாங்ஸ் பகுதியில் வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற பெயரில் ஆசிரமம். பலகோடி ரூபாய் சொத்துக்கள்.

புகழ்:  மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளின் முக்கிய குற்றவாளி. இப்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

* பெண் சாமியார் சாத்வி பிரக்யா: இவர் ஹிந்துத்துவா சாமியார். இவருக்கும் வழக்கமான சாமியார்கள் போல ஆசிரமங்கள் உள்ளது.

புகழ்: இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் மூளையாக இருந்து செயல்பட்டவர். மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி போன்ற குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்களுக்கு ஆலோசனை மற்றும் பொருளாதார உதவி செய்தவர்.

இதுவல்லாமல் மகரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியான மையங்கள், ரஜினீஷின் ஆசிரமம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிளைகள், வேதாத்திரி மகரிஷியின் குண்டலினி மையங்கள், ஜக்கி வாசுதேவ், பிரார்த்தனையிலேயே  “குணமாக்கி’  நற்செய்திக் கூட்டங்கள் நடத்தும் டி.ஜி.எஸ் தினகரன் முதலானோரும் மேற்கண்ட கோடீசுவர சாமியார்களின் பட்டியலில் உள்ளவர்கள்தான்.

Jun 19, 2011

கழுதையா? குதிரையா?

JUNE 19, ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் சிலமாந்தூர் போலீஸ் நிலைய சரகத்தில் கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள ஓடிகொண்டா சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை போலீசார் மடக்கி சோதனை நடத்தினார்கள். அப்போது, காரின் உள்ளே ஒரு பையில் ரூ.35 லட்சம் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த கார் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த கார் சத்யசாய் மத்திய அறக்கட்டளைக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

கார் டிரைவர் ஹரீஸ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சோதனையில் பிடிபட்ட பணமானது, புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள சத்யசாய்பாபாவின் தனிப்பட்ட அறையான யஜுர் மந்திரில் இருந்து பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிந்திக்கவும்: சாய்பாபா என்பவர் மேஜிக் வித்தைகளை காட்டி பொதுமக்களை ஏமாற்றி சம்பாதித்த பணமும், நகைகளும் அவர் மரணத்திற்கு பின்னால் அவர் தனி அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

கடவுளின் அவதாரமாக தன்னை பெருவாரி இந்து மக்களிடம் காட்டிக்கொண்டு படித்த இந்து பண்டிதர்களிடம், மேதாவிகளிடம் கூட இவரின் கோமாளித்தனம், தெய்வீகமாய் எடுபட்டது.

சிலநேரங்களில் மனிதன் இறந்தபின்னால்தான் அவன் செய்த செயல்கள் குறித்த உண்மைகள் வெளியே வரும். "புழுதி அடங்கிய பிறகுதான்  தெரியும் தான் சவாரி செய்தது கழுதையா, குதிரையா என்று" என்ற பழமொழி போல்.

Jun 17, 2011

முற்றும் துறந்தவருக்கு ஏன் கோடிகணக்கில் பணமும், நகையும்!

JUNE 18, புட்டபர்த்தி பிரசாந்தி ஆசிரமத்தில் உள்ள சத்ய சாய்பாபாவின் பிரத்யேக அறையான யஜூர்வேத மந்திர் மீண்டும் திறக்கப்பட்டது.

அங்கு கணக்கில் வராத கோடி கோடியாக பணமும், பெருமளவில் நகைகளும் குவியல் குவியலாக இருந்தது தெரிய வந்தது. ஏராளமான கம்ப்யூட்டர்களும் கிடைத்துள்ளன.

கடந்த மார்ச் 28-ம் தேதி பகவான் சத்யசாய் பாபா உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 24 ம் தேதி இறையடி சேர்ந்தார். அப்போது அவர் வசித்து வந்த பிரத்யேக அறையான யஜூர்வேதமந்திர் பூட்டப்பட்டது.

தற்போது ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அறை திறக்கப்பட்டது. அந்த அறையைத் திறக்கும் ரகசிய எண் சாய்பாபாவின் நெருங்கிய சீடரான சத்யஜித்துக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவரே அறையைத் திறந்தார்.

பின்னர் உள்ளே போனபோது ஒவ்வொரு அறையிலும் கணக்கில் வராத பணமும், நகைகளும் குவியல் குவியலாக இருந்தது தெரிய வந்தது. பணம் கட்டுக் கட்டாக கண்டுபிடிக்கப்பட்டது. வைர நகைகள் பெருமளவில் இருந்தன. இவற்றின் மதிப்பு என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் பல கோடி அளவுக்கு இருக்கும் என்று தெரிகிறது.

அங்கிருந்த கணக்கில் வராத பணம், நகைகளை கணக்கெடுத்து தனித் தனியாக பிரிக்கும் பணியில் மாணவர்கள் குழுவை ஈடுபடுத்தினர். பின்னர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் பணத்தையும், நகைகளையும் வங்கிக்கு கொண்டு சென்று டெபாசிட் செய்தனர்.

சிந்திக்கவும்: சாமியாருக்கு ஏன் இவ்வளவு கணக்கில் வராத நகைகளும் பணமும்? எல்லாம் மோசடி என்பது புரிய முடிகிறது. இது போன்ற சாமியார்கள் எல்லோரும் பெரும் கார்பரேட் முதலாளிகளின் பினாமிகள் என்ற செய்தி இப்பொது உண்மை ஆகியுள்ளது.

Jun 8, 2011

மூலிகை மருந்து தயாரிப்பில் மோசடி? ராம்தேவ் !!!

புதுடெல்லி, ஜுன். 9- ஊழல், கறுப்பு பணத்தை ஒழிக்க கோரி யோகா குரு ராம்தேவ் ஹரித்துவாரில் உள்ள தன் ஆசிரமத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இன்று (வியாழன்) அவரது உண்ணாவிரதம் 6-வது நாளாக நீடித்தது. அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.

ராம்தேவ் குறித்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ராம்தேவின் சொத்துக்கள், வருமானம் குறித்து விசாரணை நடத்தி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

ராம்தேவுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  குட்டித்தீவு ஒன்றை சொந்தமாக வைத்திருக்கும் அவர் மூலிகை மருந்து விற்பனை மூலம் கோடி, கோடியாக சம்பாதித்து வருகிறார்.

 ஹரித்துவாரில் உள்ள பதாஞ்சலி யோகா பீடத்தின் ஒரு பகுதியில் ராம்தேவ் வழங்கும் ஆலோசனை பேரில் தான் இந்த ஆயுர்வேத மூலிகை மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மருந்துகளில் கலப்படம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தற்போது போலி மூலிகை மருந்து தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சில வகை ஆயுர்வேத மூலிகை மருந்துகள் தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் ராம்தேவ் முறைப்படி அனுமதி பெறவில்லை என்று தெரிகிறது. அது போல மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அவர் உரிய வகையில் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

ராம்தேவ் ஆசிரமத்துடன் சில ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்பு வைத்துள்ளன. மருந்து தயாரிப்பு, கலவை, விற்பனை, ஏற்றுமதி போன்ற எல்லா விஷயங்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.  இதையடுத்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஹரித்துவார் ஆசிரமத்தில் சோதனை நடத்தி விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

விரைவில் இந்த விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராம்தேவின் சொத்துக்கள் குறித்து ஒரு பக்கம் விசாரணை நடந்து வரும் நிலையில் மற்றொரு பக்கம் அவர் பண முதலீடுகள் பற்றிய விசாரணையும் நடந்து வருகிறது. எனவே ராம்தேவ் சொத்துக்கள், ஆயுர்வேத மருந்து தயாரிப்புகள் குறித்து விரைவில் பல பரபரப்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jun 7, 2011

கார்ப்பரேட் சந்நியாசி மேல் நடவடிக்கை வேண்டும்! திமுக!

JUNE 8, யோகா குரு ராம்தேவ் சொத்துக்கள் பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக வலியுறுத்தி உள்ளது.

டெல்லியில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரம் இருந்த ராம்தேவை போலீசார் வெளியேற்றினர்.

இதையடுத்து ஹரிதுவாரில் ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்டார். நான் உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ராம்தேவ் சொத்துக்கள் பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழு செயலாளர் ஆதிசங்கர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பாபா ராம்தேவ் ஒரு கார்ப்பரேட் சந்நியாசி போல் நடந்துகொள்கிறார். ராம்தேவின் நிதி தொடர்பான நடவடிக்கைகள் பற்றியும், திரண்ட சொத்துக்கள் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.