Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Jul 29, 2014

விடிந்திடும் முன் விழித்திரு!!

எப்போது மரணிப்போம்
யாருக்கு தெரியும்...?
எப்படியும் மரணிப்போம்
யாவருக்கும் தெரியும்..!

மரணத்தின் போது
வேதனைகளை பெறுவது சிரமம்.
மரணத்தை அடைய
வேண்டுவோர் கடினம்.!

காசாவில்.. குண்டு போட்டதில்
மாண்டவர்கள் அதிகம்.
குண்டென அறியாத -சின்ன
வண்டுகள் அழிவது அநியாயம்.

எது ஞாயம்..?
எது அநியாயம்?
என்பதை அறிந்தும்
எவருமே தட்டி கேட்க்காதிருப்பது ....!?

உயிருக்கு அச்சமா?
உடமைக்கு அச்சமா?
உலகவாழ்க்கை தான் ...
உனக்கு மிச்சமா!?

மனிதர்களை அழித்து...
மனங்களை எரித்து ...
மழலை பூக்களை பொசுக்கி
மண்ணோடு மன்னாக்குவது ...ஏன்?

நாடுகள் யாவும் இடுகாடாய் போனபின் ,
நரிகள் மட்டும் ஊளையிடத்தானோ?
மாடுகளும் ,மரங்களும் ,மனிதனை சார்ந்து
தாய் பால் குடிக்கா ஜென்மமா நீ?

அறிவியல் வளர்ந்து
அநாகரிகம் பெருகி .
ஆதிக்கம் செலுத்தும் -உன்
ஆத்மா யென்ன ..உருவமுள்ள பிசாசா?

வசிக்க வீடில்லை
சுவாசிக்க நச்சுக்காற்று .
நேசிக்க இறையிள்ளமு மில்லை .
இது எழுத பட்ட விதியா?

இறைவன் வெற்றிகூட்டத்திற்கு
எத்தி வைக்கும் நீதியா?
சடலங்கள் அடுக்க பட்டன ..
சவக்கிடங்குகள் எங்கே?

புதைக்க கூடிய உடல்களை
கழுகுகளும் -பிறாந்துகளும்
திங்க கூட கூச்ச படும் ...அப்படி
சிதைக்க பட்டிருக்கிறது உயிர்கள்.!

இயற்கை எய்தியவர்கள்
இயற்கையிலேயே மரணிக்கவில்லை .
சிறகுகள் விரிக்கும் முன்னே
சருகாய் உதிரங்கள் சரிந்தே கிடக்கிறது!

ஒருதாய் பெத்த மக்களே ..,
ஒன்று மட்டும் நிச்சையம் ....
ஒன்றுமே இல்லாமல் பிறந்தோம்
ஒன்றும் செய்யாமல் இறந்து விடாதீர்கள் !

எல்லோரும் அவரவர் கடவுளிடம்
முடிந்த அளவு பிராத்தனை செய்வீராக !
மடிந்து போவது மதமல்ல -நம்
மனிதம் தான்...கடவுளை தொழ...

குரல் கொடு தோழா..,'
இன்று நான்.
நாளை நீ...
நேற்று ...முடிந்தது ....
விடிந்திடும் முன் விழித்திரு
உலகம் உன் வசம்..
இல்லையே அது
மாறிடும் விஷம்.!

மு யாகூப் அலி.

Oct 27, 2011

உறவுகளை கொல்லும் பயணம்!

கூடுவிட்டுக் கூடுப்பாய;
கூடை மட்டும்
தூக்கிக் கொண்டு;
கனமில்லாக் கடவுச்சீட்டைக்
கரம்பிடித்ததால்;
கனமானது மனம்;
கண்கள் குளமானதுத் தினம்!

அழுதுவடியும் அம்மாவும்;
அழுவதற்கேத்
தெம்பில்லா இல்லாளும்;
கூடி நிற்கும் உறவுகளும்;
வாசலில் நிற்கும்;
என் புன்னகைத் தோற்கும்!

மொழியில்லா மவுனமும்
விழிகளைக் கடக்க- சோகம்
தொண்டையை அடைக்க;
எட்டிப்பார்ப்பேன் மகிழுந்தின்
ஜன்னல்களை இறக்கியப்படி!

மெல்ல நகரும் வாகனமும்;
மென்று எனைக் கொல்ல;
அழுகை எனை வெல்ல;
மகிழுந்தின்;
கறுப்புக் கண்ணாடியை
வெறுப்பாய் நான் பார்க்க;
என் வீட்டு முகப்பு;
முழுவதாய் மறைய!

நசிந்துப்போன என் ஊர்
கடைத்தெருவும்;
அழகாய் ஜொலிக்க;
நண்பர்கள் கூட்டமொன்று;
கரம் அசைத்து – என்
மனதைப் பிழிய;
பொறுத்ததுப் போதும்
என் பொங்கி அழ!

எனக்கு மட்டும் எதற்கு என
என்னையே நொந்துக்கொள்ள;
எனைப்போலவே ஆங்காங்கே
அழுதுக்கொண்டுக் கண்களைப்
பிசைந்துக்கொண்டு ஒர் கூட்டம்!
விமான நிலையத்தில்!

சிரித்துக்கொண்டே;
சில்லறையைச் சேர்த்தக்
கூட்டமொன்று உறவுகளை
அணைத்தப்படி வருகைப் புரிய;
மெல்லப் பூரிப்பேன்;
இவர்கள் அழ இன்னும்மாதம் இருக்கென்று
 
எனக்கு கிடைத்த ஒரு முகம் தெரியா நண்பனின் கவிதையே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
 
நட்புடன்: முஹம்மது உஸ்மான்.

Jun 11, 2011

மானிடம்!!

சுட்டெரிக்கும் கோடையில்
போகும் பாதையில்
ஒரு குழாயடி
சந்தோசம்....
உடல் வியர்க்கிறது
மூளை குளிக்கச்சொல்லுகிறது
குளிக்கமட்டுமே சொல்கிறது
மனமோ குளித்தால் தண்ணீர்
போகும் பாதையை பாத்திகட்டி
அருகில் உள்ள செடிகளுக்கு
வழியமைத்து குளிக்கச்சொல்லுகிறது .......

வழிதவறிய காட்டில்
ஒரு மாமரம் ..
மூளை மாங்காயைப் பறித்து
பசியாற சொல்கிறது
பசியாற மட்டுமே சொல்கிறது
மனமோ பசியாறிவிட்டு
சிறிது தொலைவில் மாங்கொட்டையை
மண்ணில் புதைக்கச்சொல்லுகிறது
மீண்டும் ஒரு மரம் வளர .........

அவசரமாக நடக்கையில்
பாதையில் வாழைப்பழத் தோல்
கண்ணில் படுகிறது ..
மூளை அதை ஓராமாக காலால் தள்ளிவிடச்சொல்லுகிறது
காலால் தள்ளிவிட மட்டுமே சொல்லுகிறது
மனமோ அதை கையில் எடுத்து
எதிரே வரும் ஆட்டிற்கோ, மாட்டிற்கோ
கொடுக்கச்சொல்லுகிறது ....

வீட்டின் வாயிற்படியில்
ஒரு யாசகன் ...
மூளை சில்லறையை கொடுக்கச்சொல்லுகிறது
சில்லறையை மட்டுமே கொடுக்கச்சொல்லுகிறது
மனமோ யாசகனை உள்ளே அழைத்து
சுத்தம் செய்ய தண்ணீர் கொடுத்து
உணவு பரிமாறி வழியனுப்ப சொல்லுகிறது ....

முன்பெல்லாம் மூளையோடு
மனதும் சரிவர இணைந்து இருந்தது
இப்போ
மனதை தொலைத்து விட்டு
மூளையோடு மட்டும்
அப்படி எங்குதான்
தொலைகிறது இந்த மானிடம் ?


....அப்துல் ரஹ்மான்.... 
     harmys

May 31, 2011

உணர்வுகள் தொடர்கதை!!


மனித உணர்வுகள் உற்பத்தியாகும் இடம் மூளை என்பது விஞ்ஞான விளக்கமாக இருக்காலாம். 

ஆனால் மனதிடம்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

அதுவும் கண்கள் தங்கள் கடமையைச் செய்ய மனம் ஏதோ ஆணைகள் பிறப்பிக்க.. மனிதன் பாவம் ஓடுகின்றான்.. வாழ்க்கைப் பாதையில்..

இச்சைச் செயலா? அணிச்சைச் செயலா? என்று இனம் கண்டு கொள்ள முடியாத செயல்களில் ஈடுபடுகின்றான்.  விளைவுகள் பயனுள்ளதாயின், இதயம் பூரிக்கிறான்.  மாற்று இல்லாத மனதைக் கட்டி ஆளத்தெரியாமல் மனிதன் படும் பாடு..  சொல்லில் அடங்குவதில்லை..

எதிலிருந்து எது?  எதற்குப் பின் எது?  என்று சிந்தித்துப் பார்த்தால் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உண்மை புரிகிறது.  இதோ இயற்கையின் சூட்சுமம் கண்டு இதயம் தெளிகிறான்.

கேள்விகள் பிறக்கின்றன! மறுவரியில் பதில்களும் கிடைக்கின்றன.. முதல் வரியும் இரண்டாம் வரியும் ஒற்றைப்புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றன!

 அன்புடன் : காவிரிமைந்தன்.

May 19, 2011

நீதி கேட்கும் பிஞ்சு குரல்கள்!!

உள்ளம் பதைக்குதடா!
உயிர் துடிக்குதடா.
கள்ளமில்லா பிள்ளை உடல் ..
துளைத்த உன் சூலத்தின் ..
முனை மழுங்கிவிட்டாலும் ..
என் மனத்தின் ரணம் இன்னும் ஆறவில்லை !!
உன் முகம் காணும் ..
நேரமெல்லாம் என் இகம் ..
மறந்து போகிறேனே மோடி!!
உன்னை பெற்றவளும் பெண்தானோ ?
இல்லை பிசாசை பெற ..
பெண்ணாய் பிறந்த பேயோ?!!

Apr 25, 2011

ஊடக பண்முகம்!!!!!!

என் துயர் நீங்க....
உன் மடி சாய்ந்தால் .... உன்
வருடல் எனக்கிதமாய்
இருக்கும்.

உனது பார்வை....
கனிவாய் தோன்றும்....
எனக்கிழைத்த கொடுமையை
உன் செவி சேர்த்தால்....
நீ கவனமாய் கேட்பாய்.

ஆனால் .......... நீ கழுகு
உனது இலக்கு மட்டும்....
தெளிவாய் தெரியும்....
உனது காலடியில் தஞ்சமடைந்த
கோழி குஞ்சு நான்....

நீ நினைத்தால்!!!!
கொடூர கொலையை....
சாதாரணமான மரணமென்பாய்....
சாதாரண மரணத்தை கொடூர கொலை என்பாய்....
கொலையாளியை வீரன் என்பாய்.

அழிந்து வரும் சமூகத்தில்!!!!
எழுந்து நிற்பவனை தீவிரவாதி என்பாய்....
உன் சொல் அம்பலமேறும்
என் சொல் செவிடன் காதில் சங்குதான்....
ஊடகமே நீ யார்? கையில் இருக்கிறாய்....
எமபாதகனிடமா????

சிந்திக்கவும்.நெட், வாசகர் கவிதை: MR. ராஜ யோகி.

நீங்களும் கவிதை எழுதலாம் வாருங்கள். நல்ல சமூக பொறுப்புள்ள கவிதைகளை எழுதுங்கள்!! நீங்கள் உங்கள் கவிதைகளை அனுப்பவேண்டிய முகவரி sinthikkavum@yahoo.com, puthiyathenral@gmail.com

Apr 23, 2011

தண்ணீர்!! தண்ணீர்!! தண்ணீர்!!

நீ அதிசயம் மட்டுமல்ல ...
நீ ஆச்சரியமான ஆசான் ....
உன் நேர்மையான பாதை வழி எங்கும் இன்பமே ....
உன் பாகுபாடில்லாத அணுகு முறையால்
நீ போகும், நிற்கும், நடக்கும், ஓடும் இடமெல்லாம் சுகமே ....

நீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை
அதனால் நீ தளர்வதுமில்லை
பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும்
உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி ....

சுத்த தங்கமாக நீ வலம் வந்து
மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும்
நீ உண்மையில் ஒரு சீர்திருத்தவாதி .....
அழுத்தமாக நீ செய்யும் தியாகம் ....நன்மையின் உச்சம் ..

நீ பயணித்த பாதையில்தான்
உயிரினம் வாழுமிடம் அமைத்தது ...
உன் வருகையால் அடைந்த தைரியம் ... அளவிடற்கரியது ...

உன் சலசலப்பில் நாங்கள்
உன்னை பருகினோம்,
உன்னில் நீந்தினோம்,
உன்னில் பயணித்தோம்,
உன் வரவால் பயிரிட்டோம் ...
உன்னால் நாங்கள் அடையும் சுகம் ... விவரிக்கமுடியதது ...

உன் பருவ காலங்களில் நீ
வரும் வழியெல்லாம் உன்னுடன் நீ
அழைத்து வரும் துள்ளல் தரும் இதம் ...... எப்படி சொல்வேன்? ...

நீ பாய்ந்த பிரதேசங்களில் எல்லாம்
தரை நிலமாக இருந்த வற்றஎல்லாம்
பூஞ்சோலை யாய் மாறியது ....
உயிரினம் சுவாசிக்க .... புசிக்க .....
மட்டுமல்ல .... ரசிக்கவும்!!!!

ஆனால்..........?
நீ பயணித்த வழியில் வாழுமிடம்
அமைத்த உயிரினம் .....

உன் வழியை,
உன் பாதையை,
சில மாதங்கள் நீ தங்குமிடத்தை எல்லாவற்றையும்
உயிரினங்கள் அடைத்து கூடு கட்டிகொண்டன .....

உன் வரவை அவர்களே (உயிரினங்கள்) தடுத்து கொண்டார்கள் ..
இழப்பு .... யாருக்கு? ...
நீரின்றி அமையாது உலகம் .......

சிந்திப்போமா?..... நாளை விடியலுக்கு .....

அன்புடன்: அப்துல் ரஹ்மான்... HARMYS. (மின்னஞ்சல் செய்தி).