Feb 20, 2012

நாம் தேச துரோகி என்று உரக்கச் சொல்லுவோம்!

FEB 21: கூடங்குளம் அணு மின்நிலையத்தை எதிர்க்கும் அனைவரும் தேச துரோகிகள் என்று மத்திய அரசு கொக்கரிக்கிறது.

கூடங்குளம் அப்பாவி மீனவ மக்கள் மீது தேச துரோக வழக்கு உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேச தந்தை காந்தியடிகளை கொன்ற காவி கும்பல் தேச பக்தர்களாம். சுதந்திர போராட்ட வீரர்களை வெள்ளையர்களுக்கு காட்டி கொடுத்த ஆர்.எஸ்.எஸ். வர்ணாசிரம ஹிந்துத்துவா கூட்டம் தேச பக்தர்களாம்.

ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரஸ்காரர்கள் தேசபக்தர்களாம். தமிழக மீனவர்களை சிங்கள பயங்கரவாதிகள் சுட்டு கொல்லும்போது வேடிக்கைபார்த்த மன்மோகனும், சோனியாவும் தேசபத்தர்களாம்.


மீனவ குடும்பத்தில் பிறந்து மீனவர்கள் கொல்லப்படும் போது அதை பற்றி வாய் திறக்காத அரசு பயங்கரவாதம் என்கிற தேளின் கொடுக்கு அப்துல்காலாம் தேசபக்தராம். நாட்டு நலனில் அக்கறை இல்லாத கார்பரேட் முதலாளிகளின் கைகூலிகள் எல்லாம் தேசபதர்கலாம். நாட்டு நலனில் அக்கறையுள்ள அப்பாவி கிராம மக்கள் எல்லாம் தேச துரோகிகளாம்.

இவர்கள் இலக்கணப்படி இதுதான் தேசதுரோகம் என்றால் நாம் ஒவ்வொருவரும்  உரக்கச் சொல்லுவோம் நாம் எல்லாம் தேசதுரோகிகள் என்று. கூடங்குளம் அணு மின்நிலையத்தை எதிர்ப்பது மனித நேயம் கொண்ட ஒவ்வொரு மனிதனின் கடமை. கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஆதரிக்கும் அனைவரும்  இருதயம் இல்லாத இந்தியர்கள். இருதயம் இல்லாத தேசபக்தி இந்தியர்களாக இருப்பதை விட நாம் இருதயம் உள்ள மனிதனாக இருப்போம்.
*மலர்விழி*   

64 comments:

Anonymous said...

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. தேசதுரோகி லிஸ்டில் என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்.

by: ராஜா.

கபிலன் said...

கூடங்குளம் எதிர்ப்பாளர்களை தேசத் திரோகிகள் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறோம். வெளிநாடுகளில் இருந்து வரும் காசை அனுபவிக்க..அப்பாவி மக்களை ஏமாற்றும் கொள்ளைக் கூட்டம் என்று வேண்டுமானால் சொல்லலாம்..

Seeni said...

sariyaana saattaiyadi-!

ஆனந்த் said...

//அப்பாவி மக்களை ஏமாற்றும் கொள்ளைக் கூட்டம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.//

காங்கிரஸ் பிஜேபி அப்துல் கலாம், இவர்கள் எல்லாம் அதைத்தானே செய்கிறார்கள்?

கபிலன் said...

"ஆனந்த் said...
//அப்பாவி மக்களை ஏமாற்றும் கொள்ளைக் கூட்டம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.//

காங்கிரஸ் பிஜேபி ஓகே...அப்துல் கலாம் பற்றி பேச இதுல என்ன இருக்கு...அறிவியல் ரீதியில், கூடங்குளம் போராட்ட தலைவர்களை( ??? ) விட மேலானவர். அவரோட கருத்தை அவர் சொன்னார் அவ்வளவு தான்.

காங்கிரஸ் பிஜெபி ஆவது கொள்ளை அடித்த காசை கொஞ்சமாவது கட்சிக்காரங்க கிட்ட கொடுப்பாங்க. இந்தக் கூடங்குளம் தலைவர் அதைக் கூட தர மாட்றாரே...எல்லாத்தையும் ஒருத்தரே அடிச்சிட்டு போனா எப்படி ? இத்தனை நாள் அவர் பேச்சை கேட்டு ஏமாந்த அப்பாவி மக்களுக்கு அந்த கோடிகளை பகிர்ந்து கொடுக்க சொல்லுங்க சார்.இப்போ அவருக்கு கிடைத்த பாப்புலாரிட்டியை வச்சு....அவருடைய தொண்டு(???) நிறுவனத்துக்கு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுது என்பது மட்டும் நிஜம் ! இவரை நம்பி ஏமாந்த ஜனங்களுக்கு அதிலிருந்து ஒரு துளியாச்சும் கிடைச்சா கூட சந்தோஷம் தாங்க !

Unknown said...

ஒருசாரார் விரும்பாத மாற்றுக் கருத்து சொன்னார் என்பதற்காக கலாம் அய்யாவை கேவலமாக விமர்சித்திருக்க வேண்டியதில்லை!

நீங்கள் விழிப்புணர்வு பதிவு எழுதுகிறீர்களா...இல்லை வெறியேற்றுப்பதிவு போடுகிறீர்களா?இத்தகைய எழுத்துக்களால் என்ன சுகமோ?

இருதயம் said...

நண்பர் புதிய தென்றலின் நோக்கத்தை சரியாக புரிந்து கொண்ட நண்பர் கபிலன் அவர்களுக்கும் , ஐயா ரமேஷ் வேங்கடபதி அவர்களுக்கும் , புரிந்து கொள்ளபோகிற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி ....

http://naanoruindian.blogspot.in/2012/02/blog-post_18.html

ஆனந்த் said...

//ஒருசாரார் விரும்பாத மாற்றுக் கருத்து சொன்னார் என்பதற்காக கலாம் அய்யாவை கேவலமாக விமர்சித்திருக்க வேண்டியதில்லை!

எல்லா தமிழர் பிரச்சனைகளிலும் வாயை மூடிக்கொண்டு இருந்த கலாம் இப்போதும் வாயை மூடிக்கொள்ளவேண்டும்.

//அறிவியல் ரீதியில், கூடங்குளம் போராட்ட தலைவர்களை( ??? ) விட மேலானவர். அவரோட கருத்தை அவர் சொன்னார் அவ்வளவு தான்.

அவரு அணு விஞ்ஞானி அல்ல.aeronautical engineer. ராமேஸ்வரம் மீனவர்கள் கொல்லப்படும்போது 'அவரோட கருத்தை அவர்' சொல்லவேண்டியதுதானே? அல்லது இப்போதும் வாயை மூடிகொள்ளவேண்டும்.

Anonymous said...

அரசியல் புசாமா கூடங்குளம் நன்மை ,தீமை சிந்தச்சி இருக்கணும் ...
நன்மையை காட்டிலும் நிறைய தீமை தானே இருக்கு ....அப்புடி இருக்குறதை எதுக்கு நாம ஆதரிக்கனும் நு புரியல ....கூடங்குளம் ஆதரிக்கும் சிலருக்கு ரஷ்ய ஒப்பந்தம் பற்றிய முழு உண்மையும் தெரிந்து இருக்கணு தெரியல ...
காலம் அய்யா எவ்வளவோ மாணவர்களுக்காக செய்து இருக்கார் ...கூடங்குளம் நான் எதிர்க்கிறேன் ..ஆனால் கலாம் அய்யாவை திட்ட மாட்டேன்...

கறுத்தான் said...

அணு உலை யின் தீமைகளை பற்றி discovery சேனல் வரும் நிகழ்ச்சியை பாருங்கள்

PUTHIYATHENRAL said...

//வெளிநாடுகளில் இருந்து வரும் காசை அனுபவிக்க..அப்பாவி மக்களை ஏமாற்றும் கொள்ளைக் கூட்டம் என்று வேண்டுமானால் சொல்லலாம்//

வணக்கம் கபிலன் நலமா? காசு வருகிறது என்றால் யாரிடம் இருந்து. ஏன்? கூடங்குளம் அணு மின்நிலையத்தை விரும்பாத வெளிநாடு எது? இது குறித்து தாங்கள் விளக்க வேண்டும்.

இது குறித்து தமிழ் படைப்பாளிகள் முதல் தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் முதல் சமூக தொண்டு நிறுவனங்கள் வரை கூடங்குளம் அணு மின்நிலையம் வேண்டாம் என்றே சொல்கின்றன.

உதயகுமார் மற்றும் உள்ளவர்களுக்கு பணம் வருவது உண்மை என்றால் இந்தியாவின் உளவு நிறுவனங்கள் என்ன செய்கின்றன. ஏன் அதை நிரூபிக்க வில்லை.

சரி அப்படியே அவர்களுக்கு பணம் வருகிறது என்றே வைத்துகொள்வோம். கூடங்குளத்தில் அணு மின்நிலையம் வேண்டாம் என்று போராடும் அந்த மக்களின் கருத்து நியாயம்தானே.

PUTHIYATHENRAL said...

//அப்துல் கலாம் பற்றி பேச இதுல என்ன இருக்கு...அறிவியல் ரீதியில், கூடங்குளம் போராட்ட தலைவர்களை( ??? ) விட மேலானவர். அவரோட கருத்தை அவர் சொன்னார் அவ்வளவு தான்.//

அறிவியல் ரீதியாக அவருக்கு தெரியும் அணு மின் நிலையங்கள் என்பதே இப்போது வாழும் சந்ததியினருக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் பெரும் கேடு உண்டாக்க வல்லது என்று. அதனாலேயே உலகின் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஒன்பது மாமேதைகள் இந்த அணு உலை மின்சாரம் என்பது தேவையற்றது. உலகில் உள்ள அனைத்து அணு மின் உலைகளையும் மூடவேண்டும் என்று சொல்கிறார்கள்.

பெல்ஜியத்தின் அணு சக்தி துறை அமைச்சர் அவர்கள் பாராளு மன்றத்திலே ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறார் குள் அந்த நாட்டில் உள்ள அனைத்து அணு உலைகளையும் மூடுவது என்று. ஏன் என்றால் அணு உலகைகள் மூலமாக ஏற்ப்படும் ஆபத்தை பற்றி அறிந்ததனாலேயே.

அமெரிக்க விஞ்சானிகள் தொடர்ந்து குரல் குடுக்கிறார்கள் அணு உலைகள் தேவையில்லை என்று. இந்திய அணு சக்தி ஆராச்சி கழகத்திலே பணிபுரிந்த மூத்த விஞ்சானி டாக்டர் பத்மநாபன் என்பவர் சொல்கிறார் இந்த அணு சக்தி மின்சாரம் என்பது தேவையில்லாத ஒன்று என்றும் இந்திய அணு சக்தி துறையை சேர்ந்த விஞ்சானிகள் நிறைய உண்மைகளை வெளியே சொல்வதில், அணு உலை தொடர்பான உண்மைகளை இவர்கள் மறைக்கிறார்கள்.

அணு உலையினால் எதிர்க்கால சந்ததியினர் பாதிக்கப்படுவர் என்று சொல்கிறார். விஞ்சானிகள் என்பவர்கள் அரசுக்கு சாதகமாக பேசகூடாது. உண்மைகளை வெளியே சொல்ல வேண்டும் என்பதால் சொல்லப்பட்ட கருத்தே இது.

Anonymous said...

நானும் உங்களது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் ...

PUTHIYATHENRAL said...

மகாராஷ்டிர மாநிலத்திலே அமையவிருக்கும் அணு உலையை எதிர்த்து அந்த மக்கள் கடுமையாக போராடுகிறார்கள். இது குறித்தும் நாம் பதிவுகள் எழுதி உள்ளோம். அந்த போராட்டத்தில் பால் தாக்ரேயின் சிவசேனை அமைப்பும் தன்னை இணைத்து கொண்டு கடுமையாக போராடி வருகிறது.

ஒரு மாநிலத்தில் தங்களது ஹிந்துத்துவா சங்கபரிவாரை சேர்ந்த ஒரு இயக்கம் அணு உலையை கடுமையாக எதிர்கிறது. ஆனால் அதற்க்கு மாற்றமாக தமிழக இந்து முன்னணி கூடங்குளம் அணு மின்நிலையத்தை திறந்தே ஆகவேண்டும் என்று கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்து முன்னணிக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை இவர்கள் ஏன் கூடங்குளம் அணு மின்நிலையத்தை திறக்கச் சொல்கிறார்கள் என்பதே இதில் புரியாத புதிர். காங்கிரசை எதிரியாக கருதும் இந்து முன்னணிக்கு எப்போது இருந்து அவர்களோடு கூட்டு சேர்ந்து போராடும் அளவுக்கு கருத்து ஒற்றுமை வந்தது என்பதும், இவர்களுக்குள் இப்படி ஒரு கூட்டு நடக்க என்ன காரணம் என்பதும் புரியாத மர்மமே.

நாம் சொல்வது அணு உலைகள் என்பதே கூடாது என்றே அது தமிழ்நாட்டில் தொடங்கினால் கூடாது என்பதும் அதே மும்பையில் தொடங்கினால் கூடும் என்பதும் நமது கருத்து அல்ல.

PUTHIYATHENRAL said...

//கலாம் அய்யாவை கேவலமாக விமர்சித்திருக்க வேண்டியதில்லை!//

வணக்கம் ரமேஷ் வேங்கடபதி அவர்களே, கலாம் மீது எங்களுக்கு தனிப்பட்ட விரோதம் ஒன்றும் இல்லை. மீனவ குடும்பத்தில் பிறந்து மீனவர்கள் கொல்லப்படும் போது அதை பற்றி வாய் திறக்காத அப்துல்காலாம். ஏன் திடீர் என்று கூடன் குளம் விசயத்தில் பறந்து வந்து கருத்துக்களை சொல்ல வேண்டும். அவர் அரசு தரப்பில் அரசுக்கு ஆதரவாக களம் இறக்கப்பட்டவர் என்பதே உண்மை. இராமநாத புறம் மீனவ கிராமத்தில் பிறந்த கலாம் ஐயா ஏன் இதுவரை தமிழக மீனவர்கள் படுகொலை பற்றி ஒரு கருத்தும் தெரிவிக்காதது ஏன்? சாதாரண ரப்பர் ஸ்டாம்ப் இயக்கங்கள் கூட இதற்காக குரல் கொடுத்ததே இவர் ஏன் செய்யவில்லை? இப்போது கூடங்குளம் விடயத்தில் இவரது வருகையின் நோக்கம் என்ன இதுவே நமது கேள்வி?

PUTHIYATHENRAL said...

//நீங்கள் விழிப்புணர்வு பதிவு எழுதுகிறீர்களா...இல்லை வெறியேற்றுப்பதிவு போடுகிறீர்களா?இத்தகைய எழுத்துக்களால் என்ன சுகமோ?//

வணக்கம் ரமேஷ் வேங்கடபதி அவர்களே, பொழுது போக்குக்காக பதிவுகளை வெளியிடுவது எங்கள் நோக்கம் இல்லை. ஒவ்வொரு சராசரி மனிதனின் மனதில் ஏற்ப்படும் கோபங்களை, உணர்ச்சிகளை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் நமது எழுத்துக்கள். உங்களுக்கு கருத்து சுதந்திரம் உண்டு நீங்கள் எது வேண்டுமானாலும் திட்டலாம். நன்றி.

PUTHIYATHENRAL said...

//நன்மையை காட்டிலும் நிறைய தீமை தானே இருக்கு//

வணக்கம் கலை நலமா.. சரியாக சொன்னீர்கள் அணு உலைகளில் நன்மையை காட்டிலும் தீமையே அதிகம் இருக்கிறது. அது மட்டும் இல்லை இப்பொழுது உலகில் உள்ள 400 அணு மின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு வெறும் வெறும் ஏழு சதவீதம் தான். இப்படி இருக்க மீதம் இருக்கும் 93 சதவீதம் மின்சாரத்தை நாம் மாற்று வழிகள் மூலம் பெறுகிறோம் என்பதே உண்மை. அப்படி இருக்க இந்த ஏழு சதவீதம் மின்சாரத்தை பெற நாம் நம் எதிர்காலத்தையும், நம் சந்ததிகளின் எதிர்காலத்தையும் பலியிட வேண்டுமா? இந்த இலட்சணத்தில் நுட்ரினா என்கிற ஒரு அணுகதிர் ஆராச்சி மையத்தை தேனீ மாவட்டத்தில் கட்டி வருகிறார்கள். இது குறித்தும் நாம் பதிவு எழுதி இருந்தோம். இது குறிந்து சமீபத்தில் தினமணியின் தலையங்கல்த்தில் ஒருவர் இப்படிப்பட்ட ஒரு ஆராச்சி தேவையில்லை என்று கடுமையாக சாடி எழுதி இருந்தார்.

PUTHIYATHENRAL said...

//சரியான சாட்டையடி//
தோழர் சீனி அவர்களே நலமா! உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

PUTHIYATHENRAL said...

//எல்லா தமிழர் பிரச்சனைகளிலும் வாயை மூடிக்கொண்டு இருந்த கலாம் இப்போதும் வாயை மூடிக்கொள்ளவேண்டும்.//

வணக்கம் ஆனந்தன் நலமா, சரியான வாக்கியங்கள் இது. நெத்தியடி என்பார்களே அது இதுதானோ.

PUTHIYATHENRAL said...

/அவரு அணு விஞ்ஞானி அல்ல.aeronautical engineer. ராமேஸ்வரம் மீனவர்கள் கொல்லப்படும்போது 'அவரோட கருத்தை அவர்' சொல்லவேண்டியதுதானே? அல்லது இப்போதும் வாயை மூடிகொள்ளவேண்டும்/

ஒவ்வொரு நியாயம் விரும்பும் மனிதனின் உள்ளத்தில் தோன்றக்கூடிய நியாயமான கேள்விகள். நன்றி தோழரே;

PUTHIYATHENRAL said...

/அணு உலை யின் தீமைகளை பற்றி discovery சேனல் வரும் நிகழ்ச்சியை பாருங்கள்/

வணக்கம் karutha நலமா, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நிச்சயம் பார்க்கிறோம்.

PUTHIYATHENRAL said...

//நானும் உங்களது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் //
வணக்கம் கலை. ரொம்பவும் நன்றி.. மனிதர்களும் மனித நேயமும் சாகவில்லை என்பதை உங்களை போன்ற ஒவ்வொருவரும் பறை சாற்றுகிறீர்கள். நன்றி.

மக்களுக்காகத்தான் இந்த நாடு, இதன் ஆட்சியாளர்கள், அரசு, சட்டம், திட்டம் எல்லாம். ஒரு பகுதி மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அந்த மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிப்பது அராஜகம், ஆணவம், சர்வாதிகாரம். ஜனநாயகத்துக்கு விரோதமானது. நன்றி.

PUTHIYATHENRAL said...

வணக்கம் இருதயம் ஐயா! தங்கள்தான் புரிந்து கொள்ள வில்லை.

மகாராஷ்டிர மாநிலத்திலே அமையவிருக்கும் அணு உலையை எதிர்த்து அந்த மக்கள் கடுமையாக போராடுகிறார்கள். இது குறித்தும் நாம் பதிவுகள் எழுதி உள்ளோம். அந்த போராட்டத்தில் பால் தாக்ரேயின் சிவசேனை அமைப்பும் தன்னை இணைத்து கொண்டு கடுமையாக போராடி வருகிறது. ஒரு மாநிலத்தில் தங்களது ஹிந்துத்துவா சங்கபரிவாரை சேர்ந்த ஒரு இயக்கம் அணு உலையை கடுமையாக எதிர்கிறது. ஆனால் அதற்க்கு மாற்றமாக தமிழக இந்து முன்னணி கூடங்குளம் அணு மின்நிலையத்தை திறந்தே ஆகவேண்டும் என்று கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்து முன்னணிக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை இவர்கள் ஏன் கூடங்குளம் அணு மின்நிலையத்தை திறக்கச் சொல்கிறார்கள் என்பதே இதில் புரியாத புதிர். காங்கிரசை எதிரியாக கருதும் இந்து முன்னணிக்கு எப்போது இருந்து அவர்களோடு கூட்டு சேர்ந்து போராடும் அளவுக்கு கருத்து ஒற்றுமை வந்தது என்பதும், இவர்களுக்குள் இப்படி ஒரு கூட்டு நடக்க என்ன காரணம் என்பதும் புரியாத மர்மமே. நாம் சொல்வது அணு உலைகள் என்பதே கூடாது என்றே அது தமிழ்நாட்டில் தொடங்கினால் கூடாது என்பதும் அதே மும்பையில் தொடங்கினால் கூடும் என்பதும் நமது கருத்து அல்ல.

மக்களுக்காகத்தான் இந்த நாடு, இதன் ஆட்சியாளர்கள், அரசு, சட்டம், திட்டம் எல்லாம். ஒரு பகுதி மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அந்த மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிப்பது அராஜகம், ஆணவம், சர்வாதிகாரம். ஜனநாயகத்துக்கு விரோதமானது. நன்றி.

கபிலன் said...

" ஆனந்த் said...
எல்லா தமிழர் பிரச்சனைகளிலும் வாயை மூடிக்கொண்டு இருந்த கலாம் இப்போதும் வாயை மூடிக்கொள்ளவேண்டும்."


நீங்கள் அதை வேணாம்னு சொல்றதுக்கு எவ்வளவு உரிமை இருக்கோ...அதே மாதிரி அது ஆபத்தானது இல்லை...எங்களுக்கு வேணும்னு சொல்றதுக்கும் உரிமை இருக்குதுங்க. அணு ஆராய்ச்சியில் கை தேர்ந்தவர், இந்தியாவின் அணு ஆராய்ச்சியின் தந்தை என்றழைக்கப்படும் கலாம், அவருக்கு சம்பந்தமான ஒரு விஷயத்தில், மக்களின் தேவையற்ற அச்சத்தை போக்க குரல் கொடுத்தார்.
"ஞாயிற்றைக் கை மறைப்பார் இல்"

"அவரு அணு விஞ்ஞானி அல்ல.aeronautical engineer."

அணு விஞ்ஞானி ஆகணும்னா என்ன படிச்சிருக்கணும்னு நீங்க சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்ங்க....அப்படியே நீங்க சொல்ற அந்த கோர்ஸ் இந்தியாவுல எந்த யுனிவர்சிட்டில தர்றாங்கன்னு சொல்லுங்களேன்? கலாம் படித்த காலத்தை விடுங்க...இப்போ சொல்லுங்களேன்.

கபிலன் said...

"வணக்கம் கபிலன் நலமா? காசு வருகிறது என்றால் யாரிடம் இருந்து. ஏன்? கூடங்குளம் அணு மின்நிலையத்தை விரும்பாத வெளிநாடு எது? இது குறித்து தாங்கள் விளக்க வேண்டும்."


நலம். நன்றி புதியதென்றல் : )
உதயகுமார், எனக்கு காசே வரலைன்னு திட்டவட்டமா மறுக்கவே இல்லை. அதற்கு மாறாக யார் அனுப்பினார்கள் என்று சொல்லுங்கள் என்று சொல்வதில் இருந்தே, நான் மட்டும் மாட்டினேன்னா இங்க இருக்க தொண்டு நிறுவனங்கள் எல்லாருமே தான் மாட்டுவாங்க...என்ற தோணியில் இருக்கிறது அவரது நடவடிக்கை. அதுவும் இது சிறுபாண்மை சமூகம் தொடர்பான விஷயம் என்பதால் கொஞ்சம் அமைதி காக்குறாங்க அவ்வளவு தான். இந்த விஷயங்கள் அனைத்தும் தங்களுக்கு தெரியும் என்பது என் நம்பிக்கை.

"இது குறித்து தமிழ் படைப்பாளிகள் முதல் தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் முதல் சமூக தொண்டு நிறுவனங்கள் வரை கூடங்குளம் அணு மின்நிலையம் வேண்டாம் என்றே சொல்கின்றன."

இது தவறான கருத்து. அதிமுக அணு உலையை வேண்டாம்னு சொல்றாங்களா ? அல்லது திமுக அணு உலையை வேண்டாம்னு சொல்றாங்களா ? மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்பது மட்டுமே பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் நோக்கம். ஒரு சில தமிழ் படைப்பாளிகள்னு சொல்லுங்க, பெரும்பாலானவர்கள் இது குறித்து குரல் கொடுக்கவே இல்லை என்பது தான் உண்மை. உதயகுமார் & கோ மட்டும் தான் இது குறித்து குட்டையை கிளறி ஆதாயம் அடைந்து வருகிறது.

"சரி அப்படியே அவர்களுக்கு பணம் வருகிறது என்றே வைத்துகொள்வோம். கூடங்குளத்தில் அணு மின்நிலையம் வேண்டாம் என்று போராடும் அந்த மக்களின் கருத்து நியாயம்தானே."

போராட்டத்திற்காக பணம் வருகிறது என்பது வேறு, போராட்டமே பணத்துக்காகத் தான் என்பது வேறு
: ) இப்படியிருக்க இதனை நியாயம் என எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் !

கபிலன் said...

"அறிவியல் ரீதியாக அவருக்கு தெரியும் அணு மின் நிலையங்கள் என்பதே இப்போது வாழும் சந்ததியினருக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் பெரும் கேடு உண்டாக்க வல்லது என்று. "


விமானப் பயணம், ரயில் பயணம் எல்லாம் ஆபத்தானது தான். நாம போகாம இருக்கோமா ? சென்னைக்குப் பக்கத்துலேயே தான் கல்பாக்கம் இருக்கு. வெடிச்சா ஆபத்து தான்.
அணு உலை வெடித்தால் ஆபத்து என்பது அனைவருக்கும் தெரியும். அதையும் மீறி இதில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைய இருக்கு. அதனால, அப்படி ஒரு சம்பவம் நிகழ்றதுக்கு வாய்ப்புக்கள் ரொம்ப குறைவுன்னு தானே வாதமே !

பெல்ஜியம் விஷயம் இங்க பொருந்தாது.

ஏற்கனவே நல்ல சோறு சாப்பிடுபவன், எனக்கு பிரியாணி தேவையில்லை அதில் கொழுப்பு சத்து அதிகம்னு சொல்றாங்க.

நம்ம பட்டினியில் இருக்கோம், பிரியாணி கிடைச்சா சாப்பிடுவோமா...அல்லது கொழுப்பு சத்து இருக்கு வேணாம்னு சொல்லுவோமா சார்...

Anonymous said...

அடப்பாவிகளா!ஒரு உண்மையே புரிந்து கொள்ளுங்கள்.அறிவியலும் விஞ்ஞானமும் மனிதனின் வாழ்விற்காக மட்டும் தான் இருக்க வேண்டும்.மனிதனின் அழிவிக்காக இருக்ககூடாது .இன்று உலகில் அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகமாக மக்களை வாழ வைத்ததை விட அழிய வைத்ததுதான் அதிகம் மறுக்க முடியுமா உங்களால் !மனிதனின் உரிமைகளுக்கு,உயிருக்கு
மதிப்பு கொடுக்கும் ஜப்பானில் அணு உலை ஏற்படுத்திய அழிவை பார்த்த பிறகும் அணு உலைக்கு ஆதரவாக பேசுபவன் அவன் எவ்வளவு பெரிய விஞ்சணியாக இருந்தாலும்
அவன் முட்டாள் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை .அறிவாளிகள் ஒரு நாளும் முட்டாள் தனமாக பேசமாட்டார்கள் .

Anonymous said...

எல்லா விசயங்களிலும் இரண்டு விதம் உள்ளது .ஒன்று உண்மை ,ஒன்று போலி.....நல்ல டாக்டர்,போலி டாக்டர் ..........நோயாளிகளுக்கு நன்மை செய்தால் நல்ல டாக்டர் ,கெடுதி செய்தால்
போலி டாக்டர் ....அது போல் தான் அணு உலைக்கு ஆதரவாக எந்த விஞ்சானி பேசினாலும் அவன் போலி விஞ்சானி என்பதில் ஒரு சந்தேகமும் வேண்டாம்.விஞ்சானி சொல்வதும்,செய்வதும் சரியென்றால் நீங்களும் அவரை போல் கல்யாணம் சைதுகொல்லாமல் பிரம சரியாக வேண்டுமானால் இருந்து கொள்ளுங்கள் .அணு உலையே மட்டும் ஆதரிக்காதிர்கள்.அது நம் எல்லோரையும் அழித்து விடும்

PUTHIYATHENRAL said...

வணக்கம் கபிலன்.

திமுக இது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கு அதனால் பகிரங்கமாக எதிர்க்க முடியாது. அதிமுக கருணாநிதியை பழிவாங்க வேண்டும் அதற்க்கு அதே நேரம் மத்திய அரசுடன் தேச மோதல் நிலைமையை கடைபிடிக்காமல் சாதுரியமாக காய்களை நகர்த்த வேண்டும். இந்த இரண்டு குப்பை கட்சிகளின் நிலைமையை நீங்கள் ஈழத்து இன படுகொலைகளில் பார்த்து இருப்பீர்களே. இவர்களுக்கு ஆதாயம் என்று சொன்னால்தான் இதில் திலையிடுவார்கள், சமூக சிந்தனை படைத்த பதிவர்களும், சமூக நல அமைப்புகளுமே எந்த பிரதி உககாரமும் இல்லாமல் இது போன்ற விசயங்களை காய்தல் உவர்த்தலின்றி அலச முடியும் குரல் கொடுக்க முடியும்.

PUTHIYATHENRAL said...

//தொண்டு நிறுவனங்கள் எல்லாருமே தான் மாட்டுவாங்க//

தொண்டு நிறுவனங்களுக்கு பணம் வருவது இன்று நேற்று அல்ல... அது இந்திய அரசுக்கு தெரிந்தே வருகிறது. ஆனால் அது இப்போது புதிதாக நடப்பது போல் சொல்வதுதான் இதில் வேடிக்கை.

PUTHIYATHENRAL said...

//தொண்டு நிறுவனங்கள் எல்லாருமே தான் மாட்டுவாங்க//

தொண்டு நிறுவனங்களுக்கு பணம் வருவது இன்று நேற்று அல்ல... அது இந்திய அரசுக்கு தெரிந்தே வருகிறது. ஆனால் அது இப்போது புதிதாக நடப்பது போல் சொல்வதுதான் இதில் வேடிக்கை. அதுவும் அது இந்த கூடங்குளம் அணு மின்நிலையத்தை எதிர்க்க வருகிறது என்று முடிச்சி போடுவதுதான் பொருந்த வில்லை.

PUTHIYATHENRAL said...

போராட்டமே பணத்திற்காக என்று சொல்வதில் உண்மை இல்லை. இந்த போராட்டத்திற்கு கிறஸ்தவ தொண்டு நிறுவனங்கள் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கிறது என்று சொன்னால் ஏற்று கொள்வது மாதிரி இருக்கு. ஆனால் எந்த நாடு ஏன் இந்த நாசகார அணு உலையை கூடங்குளத்தில் வரவேண்டாம் என்று சொல்ல போகிறது. அணு உலை கட்டுவதால் ஒரு நாட்டுக்கு ஆபத்தே தவிர நன்மை எதுவும் இல்லை. எதிரி நாடு கூட இன்னும் பல அணு உலைகளை கட்டட்டும் என்றுதானே நினைக்கும். புரியவில்லை.

ஒன்று மட்டும் உண்மை... வால்மார்ட் முதல் ஸ்டார்பக் வரை இந்தியாவை மீண்டும் அடிமை படுத்த போகின்றது என்பது அப்பட்டமான உண்மை. அன்று வெள்ளைய கும்பெனி படைகள் வியாபாரம் செய்து நாட்டை ஆக்கிரமிப்பு செய்தார்கள். இந்த கர்பெரெட் நிறுவனங்கள் நம் சிறு தொழில் முனைவோர்கள் முதல் நமது விவசாயம், தண்ணீர் எல்லாவற்றையும் அழித்து நமது இயற்க்கை வளங்களை நாசப்படுத்தி நமது வளங்களை கொள்ளையிட்டு சொல்லப்போகிறார்கள். உங்களை எங்களை போன்ற சாதாரண மக்களே இதைப்பற்றி கவலைபடுவர்.

கூடங்குளம் அணு மின்நிலையம் என்பது நமக்கு மின்சாரம் கொடுக்க இல்லை. கார்பரேட் நிறுவனங்களுக்கு மின்சாரம் கொடுக்க என்பதை புரிந்து கொள்ளுங்கள். இன்னும் ஆயிரம் அணு உலைகள் கட்டினாலும் உங்கள் மின்சார பற்றாக்குறை தீராது. இது மக்களுக்கு மின்சாரம் கொடுக்க உருவாக்கப்படுவது இல்லை என்பதே உண்மை.
தகுதி உள்ள ஒரு அரசாக இருந்தால் அந்த அந்த மாநிலங்களின் தேவைக்கு தகுந்த மின்சாரங்களை உற்பத்தி செய்ய அந்த அந்த மாநிலத்தில் அணு உலைகளை அமைக்க வேண்டும். கூடங்குளத்தை சுற்றி பல பன்னாட்டு ஆலைகள் வர காத்திருகின்றன. இனி அதில் இருந்து வெளியேறும் கழிவுகள் வேறு மக்கள் கொல்லப்போகிறது.

இதே கன்னியாகுமரி மாவட்டத்தில் மணலில் இருந்து கனிமங்களை பிரித்தெடுக்கும் ஒரு ஆலையால் அந்த பகுதி மக்கள் எப்படி புற்று நோயால் சாகிறார்கள் என்பதை பற்றிய வீடியோ சிந்திக்கவும் இணையத்தின் வலது புறத்தில் இணைக்கப்பட்டுள்ளது பாருங்கள்.

PUTHIYATHENRAL said...

விமானப் பயணம், ரயில் பயணம் எல்லாம் ஆபத்தானது தான். நாம போகாம இருக்கோமா ?
விமான விபத்து என்பது அந்த விமானத்தில் பயணிக்கும் மக்களைத்தான் கொல்லும், ரயில் விபத்து என்பது அந்த ரயிலில் பயணிக்கும் மக்களைத்தான் கொல்லும். ஆனால் இந்த அணு கழிவு என்பதில் இருந்து உருவாகும் காதிர்வீச்சும், அதன் கழிவினால் உண்டாகும் ஆபத்துக்களும் தலைமுறை தலைமுறையாக தொடரும் என்பதே உண்மை.

PUTHIYATHENRAL said...

//சென்னைக்குப் பக்கத்துலேயே தான் கல்பாக்கம் இருக்கு. வெடிச்சா ஆபத்து தான். அணு உலை வெடித்தால் ஆபத்து என்பது அனைவருக்கும் தெரியும்.//

கண்டிப்பாக பெரும் ஆபத்துதான். சாதாரண ஆபத்து இல்லை மிக கொடூரமான ஆபத்து. அந்த ஆபத்தின் தொடர்ச்சி அன்றோடு முடியாது. பல தலைமுறைகளுக்கும் தொடரும். கல்பாக்கம் சுற்றி இருக்கும் மக்கள் நிறயபேருக்கு புற்று நோய் இருக்கிறது. அதுவும் கல்பாக்கத்தால் ஏற்ப்பட்டதே என்பதை பல ஆய்வுகள் நிருபித்துள்ளது. சரி பல்லாயிரம் கோடி மானியத்தில் இயங்கும் லாபம் தராத அணு உலைகள் எதற்கு. இந்த அணு உலைகள் சாதித்த தென்ன. இதன் மூலம் மக்களின் மின்சார தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா?

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானாம் அணுமின்நிலையத்திற்கு எதிரான மக்கள் அனைவர்களின் மீதும் உண்டாவட்டுமாக ...அப்பாவிமக்கள் கொல்லப்படுவதை கண்டும் காணாமல் இருக்கும் அரசியல்வாதிகளும்..,, கலவரத்தை உண்டுபண்ணி சிறுபான்மை மக்களை [முஸ்லிகளை] கொத்துக் கொத்தாய் கொல்லும் காவிக்கூட்டமும்..,, இதை முன்னின்று நடத்தும் அரசு அதிகாரிகளும்..,, பாபர் மசூதியை இடித்த அத்துவானிக் கும்பலும் ..,, குஜராத்தில் பல ஆயிரம் முஸ்லிம்களை கொன்ற மோடியும்..,,தமிழக மோடி ராமகோபாலனும்..,,இலங்கைத்தமிழனை கொன்றுவிட்டு தமிழக மினவர்கள் கொல்லப்படுவதை ரசித்துபார்துக்கொண்டிருக்கும் மன்மோகனும் ..,, தமிழனுக்கு தண்ணீர் தரமறுக்கு அண்டைமாநிலத்தவனும் ..,,அணுமின்நிலையம் வெடித்துத்சிதறினால் பல்லாயிரம் மக்கள் கரிக்கட்டையாகிவிடுவார்கள் என்று அறிந்திருந்தும் அதைப்பற்றி வாய்திறக்காமல் அணுமின்நிலையத்திற்கு ஆதரவாக வாய்திறக்கும் குஞ்சானி அப்துல்கலாமும்..,,நாளைய தமிழனின் தலைமுறை தழைக்காமல் இருக்க தமிழக மண்ணை நச்சுப்பூமியாக மாற்ரத்துடிக்கும் இவர்கள் இந்தியநாட்டின் தேசபக்தர்கள் என்றால் தமிழா நீ யார் ..நெருப்பாய் தமிழா இருப்பாய் நீ உங்களோடு நானும் ..இப்படிக்கு..புனிதப்போராளி

PUTHIYATHENRAL said...

//நம்ம பட்டினியில் இருக்கோம், பிரியாணி கிடைச்சா சாப்பிடுவோமா...அல்லது கொழுப்பு சத்து இருக்கு வேணாம்னு சொல்லுவோமா சார்...//

ஆனால் இந்த உதாரணம் இதற்க்கு பொருந்தாது தோழரே. நமக்கு முன்னாள் நடக்கும் தீங்குகளை, பற்றி நாம் அறிந்ததும் அதில் இருந்து விடுபடவே நாம் என்ன வேண்டும். இந்த மின்சாரம் மக்களுக்கு என்று சொன்னால் சரி என்று ஏற்று கொள்ளலாம். இது வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வந்து தங்கள் கழிவுகளை கொட்டவும், குறைந்த கூலிக்கு நமது மக்களின் இரத்தத்தை உறிஞ்சவும் செய்து கொடுக்கப்படும் ஏற்ப்பாடு.

ஏன் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லாம் வந்து இந்தியாவுக்கு சேவை செய்ய வருகிறது என்றும் எண்ணி விட வேண்டாம். நாம்மை சுரண்ட வருகின்றன. நமது நாட்டில் இருக்கும் வசதிகள் போது மானது. இயற்க்கை வளங்களை அழித்து, விவசாயத்தை அழித்து நமக்கு ஆலைகள் தேவையில்லை. நமது நாட்டில் நூறு கோடிக்கும் அதிகமாக மக்கள் வசிக்கிறார்கள் இவர்களுக்கு தேவையான உணவு உற்பத்தி, விவசாயம், சுற்றுபுறம், சுகாதாரம் இதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். விஞ்சான அசுர வளர்ச்சி என்பதில் மட்டும் கவனம் செலுத்துவதால் பஞ்சம் என்று ஒன்று உண்டானால் நாம் சொமாலியாவை விட மோசமாக போய் விடுவோம். பஞ்சம் என்று வந்தால் எல்லா நாட்டு காரணம் எல்லையை மூடி விடுவான். கொத்து கொத்தா சாக வேண்டியதுதான். இதை நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது. மொத்த உலகமும் சேர்ந்து ஏன் ஒரு சிறிய நாடான சோமாலியாவுக்கு உணவு கொடுத்து உதவு முடியவில்லை. இவர்கள் எப்படி நமக்கு பஞ்சம் என்றால் உதவுவார்கள் புரிந்தால் சரி.

PUTHIYATHENRAL said...

//நம்ம பட்டினியில் இருக்கோம், பிரியாணி கிடைச்சா சாப்பிடுவோமா...அல்லது கொழுப்பு சத்து இருக்கு வேணாம்னு சொல்லுவோமா சார்...//

நாம் சொல்வது நமக்கு பிரியாணி எல்லாம் வேண்டாம் கால்வயிறு காஞ்சி குடித்தால் போதும். இதற்க்கு முன்னாள் குடிக்கமாலா இருந்தோம். இவர்கள் அணு உலையை கட்டி நமக்கு எல்லாம் கஞ்சி ஊத்த போகிறார்களா? இந்த பொருளாதார புலி மன்மோகன் அணு உலைகளை கட்டி ஏழை விவசாயிகள் வாழப்ப்கிரார்களா? தினம் தினம் வறுமையில் சாகும் மக்களுக்கு பதில் சொல்ல முடியாத அரசு, போபாலில் நடந்த விசவாய்வு கசிவுக்கு இன்னும் நிவாரணம் கொடுக்காத அரசு. கூடங்குளத்தில் அணு உலைகட்டி நம்மையெல்லாம் மாடி வீட்டில் குடியமர்த்த போகிறார்களா? மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுக்க முடியவில்லை. கல்வி நிறுவனங்கள் எல்லாம் தனியார் மயம். நாட்டை கூறு போட்டு விற்கும் காரியத்தை அழகா செய்கிறார்கள்.

உங்களுக்கு ஒரு சின்ன உதாரணத்தை சொல்கிறேன். அமெரிக்காவில் எந்த நாட்டில் இருந்தாவது ஒரு விதையையோ அல்லது மரத்தையோ கொண்டு சென்று ஊன்றி விட முடியுமா? சரி பழங்களை கூட கொண்டு சொல்ல அனுமதி இல்லை. அதன் மூலமாக ஏதாவது நோய் பரவி விடும் என்று கடுமையான பரிசோதனை. சரி நமது தமிழ் நாட்டில் இருக்கும் கருவேல மரங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். அந்த கருவேலம் மரங்கள் கடுமையான விசத்தன்மை கொண்டது என்பது மட்டும் அல்லாமல் அதனால் நிலத்தண்டி நீர் சுத்தாமாக உரின்ச்சப்பட்டு விவசாயம் சாகும், காற்று நச்சு தன்மை கொண்டதாக மாறும், வறட்சி உண்டாகும் என்று கொடிய தாவரங்கள் லிஸ்டில் அமெரிக்க விஞ்சானிகளால் அறிவுறுத்தப்பட்ட இந்த கருவேல முட் செடிகல்தானே தமிழகம் எங்கும் பரவி கிடக்கிறது. இதை அழிக்க எந்த தமிழ் நாடு அரசும் முன் வந்ததா? அல்லது மத்திய அரசுதான் முன்வந்தாதா? இவர்களுக்கு மக்களை பற்றி கவலை எல்லாம் கிடையாது.

சும்மா தேசபக்தி, வல்லரசு, நான் இந்தியன் என்று சொல்லி மக்களை கொல்ல யாரையும் அனுமதிக்க முடியாது. மீண்டும் மீண்டும் சொல்கிறோம் மக்களுக்காகவே நாடு, ஆட்சி, அதிகாரம், சட்டம், திட்டம் எல்லாம் மக்களின் நலனுக்கு கேடு விளைவிக்கும் எதுவும் தேவையில்லை.

PUTHIYATHENRAL said...

வருகைக்கு நன்றி புனித போராளி... உங்கள் கருத்துக்கள் அனல் தெரிகிறது. கண்ணை விற்று ஓவியம் வாங்க முடியாது. என்பதை சரியாக சொல்லி இருக்கீங்கள் நன்றி.

PUTHIYATHENRAL said...

//நம்ம பட்டினியில் இருக்கோம், பிரியாணி கிடைச்சா சாப்பிடுவோமா...அல்லது கொழுப்பு சத்து இருக்கு வேணாம்னு சொல்லுவோமா சார்.//

சரியான கேள்விதான். ஆனால் அது பிரியாணியாக இருந்தால் நாமும் ஒத்து கொள்ளலாம் அதில் கொழுப்பு மட்டும்தானே இருக்கு என்று ஆனால் இது நீங்கள் சொல்லும் உதாரணம் அளவுக்கு ஒரு சிறிய விடயம் இல்லை. அணு உலைகள் மூலம் உண்டாகும் சக்திகள் தேவையில்லை என்பதும் அதனால் எந்த இலாபமும் இல்லை என்பதுமே உண்மை.

இதில் இருந்து வெறும் ஏழு சதவீதம்தான் மின்சாரம் பெறப்படுகிறது என்றால் இந்த திட்டத்தால் யாருக்கு லாபம். கருணாதி ஆட்சிக்கு வந்தால் நிறைய பாலங்கள், கட்டிடங்கள் என்று கட்டுவார் ஏன் என்றால் அவர் சர்கார் கமிசன் சொன்னது போல் அவர் விஞ்சான ரீதியாக ஊழல் செய்ய தெரிந்தவர்.

இந்த கட்டிடங்களை கட்ட ஒதுக்கும் நீதியில் இருந்து இவர்களுக்கு ஒரு பெரும் பங்கு போய் சேரும். அதற்க்கு வாங்கப்படும் சிமிண்டு, ஜல்லி வரை எல்லாவற்றிலும் பங்கு வரும். மற்றபடி போது நலம் இல்லை. இலவசங்கள் எல்லாம் கொடுப்பது ஒட்டு வாங்க. மற்றபடி மக்கள் நலனில் அக்கறை கொண்டு செய்யும் திட்டங்கள் குறைவே.

அணு மின்நிலையம் என்பது ஆக்க சக்தி இல்லை அழிவு சக்தி. அதற்க்கு பகரமான சூரிய மின்சாரம், காற்றலை மின்சாரம், நீர் மின்சாரம் இவைகளில் கவனம் செலுத்துவதே அறிவுடைமை. குறிப்பாக மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டு அதுவே உகந்தது. வெறும் ஏழு சதவீதம் மிசாரத்தை கொடுக்கும் ஒரு அணு உலைக்கு நாம் ஏன் இத்துணை ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

அமெரிக்க போன்ற நாடுகளில் சாதாரண நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு காலில் செப்டி சூ, கைகளில் உரை, தேவை ஏற்ப்பட்டால் முகத்திற்கு மாஸ்க், அவர்களுக்கு மருத்துவ காப்பீடு, இப்படி எல்லாம் செய்து கொடுக்கிறார்கள். அங்கு இருக்கும் ஒவ்வொரு பெட்ரோல் பம்பில் நீங்கள் போடும் பெட்ரோலுக்கும் அந்த பெட்ரோல் பம்ப்னால் சுற்று புறத்தில் உள்ள வீடுகளுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டால் அவர்களுக்கு நிவாரணம் கொடுக்க என்று ஒரு பணத்தை அரசு வசூலித்து விடுகிறது.


எந்த பாதுகாப்பும் இல்லாத அல்லது ஒரு பிரச்சனை என்றால் அதற்க்கு நிவாரணம் கொடுக்காமல் ஒளித்து கொள்ளும் அரசுகளை நம்பி எந்த அபாயகரமான திட்டத்தையும் செய்ய முடியாது என்பதே உண்மை.

இன்னும் ஒரு கேள்வி ஏன் சத்தீஸ்கர் மாநிலத்தில் நிம்மதியாக காடுகளில் வாழும் மக்களை கனிம வளங்கள் இருக்கிறது என்று அதை இலண்டனை சேர்ந்த வேதாந்தா கம்பெனிக்கு கொடுக்க ஒப்பந்தத்தை போட்டு கொண்டு சொந்த மக்கள் மேல் போர் செய்யும் ஒரு அரசை நம்பி, போபாலில் விசவாய்வு கசிவினால் பல்லாயிரக்கணக்கான் மக்களை கொன்ற அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அமெரிக்காவை சார்ந்த அன்ருசன் என்பவரை தப்பிக்க அனுமதி அளித்த ஒரு அரசை, தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் கொல்லும் பொழுது அவர்களை பாதுகாக்க முடியாத ஒரு அரசினை நம்பி நம்மால் எப்படி இது போன்ற ஆபத்தான திட்டங்களை அனுமதிக்க முடியும் என்பதே நமது கேள்வி...

Anonymous said...

வெறுமனே கூப்பாடு போடுவதால் பயனில்லை. காங்கிரஸ் தலைமையின் அடிமடியில் கை வையுங்கள். இந்தியன் என்ற ஆயுதத்தை கையிலெடுங்கள்.

ஊர்வலம், எதிர்ப்பு கோஷம் மட்டுமே சரிவராது!!

Anonymous said...

its good article thank you.

we have to stop kudankulam project.

Anonymous said...

nalla pathivu. koodankulam anu minnilayaththai yethirppathu ovvoru manitha neyam ulla manithanin kadamai yaagum.

இப்னு அப்துல் ரஜாக் said...

மக்களின் உயிரைப் போக்கும் அணு உலை வேண்டாம்.

ஆனந்த் said...

// நீங்கள் அதை வேணாம்னு சொல்றதுக்கு எவ்வளவு உரிமை இருக்கோ...அதே மாதிரி அது ஆபத்தானது இல்லை...எங்களுக்கு வேணும்னு சொல்றதுக்கும் உரிமை இருக்குதுங்க.

ஒத்துகொள்கிறேன், தமிழகளுக்கு எதிரான விஷயம் என்றால் நிச்சயம் அப்துல் கலாம் முதல் ஆளாக இருப்பார். தமிழர்களுக்கு ஆபத்து என்றால் மௌன சாமியார் ஆகிடுவார். ராஜாபக்செவுடன் கை குளுக்குவார்

Anonymous said...

dont wanna koodankulam....

Unknown said...

ஆசிரியகுழுவினருக்கு!

வெறுப்பை உமிழ ஒரு தளமா? ஆச்சரியம்..வேதனை!

ஆவேசப்படுவதால் சிலசமயம் இலக்கோடு சொந்தங்களையும், குதறி விடுகிறோம்! உடன்வருவோரை இழக்கவும் ஆகிறது!

Unknown said...

ஆனந்த்// கலாம் எளிய இலக்கு! திருமாவை வைய முடியுமா..உங்களால்? அவரும் தான் விருந்து சாப்பிட்டு வந்தார்! கைகுலுக்கினார்! கனிமொழி பரிசு பரிமாற்றம் செய்தார்! அவர்கள் அங்கு சென்றபோது முழங்கி இருக்கலாமே, யார் தடுத்தது?அவர்களை வைய த்ராணி உள்ளதா..உங்களிடம்?

ஆசிரியகுழுவினருக்கு//
நான் யாரையும் வையச் சொல்லவில்லை..வைய வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்! குறிப்பாகத் தமிழர்களை..!

விருப்பு வெறுப்புகள் இருப்பதால் தானே இங்கு இத்தனை தலைவர்கள்! நான் சொல்வது பாஸிட்டிவ் அப்ரோச்! உமக்கு பிடிக்காத தலைவர்களை தூற்றுவதை விட,பிடித்த தலைவர்களை, விஷயங்களை ப்ரொபகண்டா செய்யலாம்!

தயை செய்து சிந்திக்கவும்!

சிரிப்புசிங்காரம் said...

அதான் நீங்க யாருன்னுதான் எல்லாருக்கும் தெரியுதே.... இத சொல்லவேற வேணுமாக்கும்

PUTHIYATHENRAL said...

//ஆசிரியகுழுவினருக்கு! வெறுப்பை உமிழ ஒரு தளமா? ஆச்சரியம்..வேதனை!//

வணக்கம் ரமேஷ் வெங்கடபதி நலமா, உண்மைகளை சொன்னால் வெறுப்பை உமிழ்வதாக அர்த்தமா? உங்களுக்கு நிறைய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது இருந்தும் ஏன் இப்படி பேசுகிறீர்கள் நண்பரே. உங்கள் மனதில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நீங்கள் உங்களை வரையறுத்து கொண்டதால் வந்த குழப்பம் இது. தடைகளை உடைதெரியுங்கள். நாடு என்பது அந்த நாட்டில் வசிக்கும் மக்களுக்காக என்பதை புரிந்து கொள்ள முயற்ச்சியுங்கள். மக்கள் நலன்களை கொன்று எதையும் செய்வது முறையல்ல.

PUTHIYATHENRAL said...

//அதான் நீங்க யாருன்னுதான் எல்லாருக்கும் தெரியுதே.... இத சொல்லவேற வேணுமாக்கும்//

வணக்கம் சிரிப்புசிங்காரம் அவர்களே! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் யாரைப்பார்த்து இந்த கருத்து சொல்கிறீர்கள் என்று விளங்கவில்லை. விளக்கமாக சொன்னால் பரவாயில்லை.

PUTHIYATHENRAL said...

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஜப்பானின் புகுசிமா அணு உலை நேர்ச்சி 770,000 இலட்சம் கோடி கதிரியக்க அலகுகளைக் கக்கியிருக்கிறது. ஒப்பீட்டு அளவில் இதை ஹிரோஷிமாவில் போடப்பட்ட குண்டுகளைப் போல அறுபது மடங்குக் கதிர்வீச்சு என்று கணித்திருக்கிறார்கள். இந்நேர்ச்சியால் வெளியேறியிருக்கும் ‘சீசியம்-137’ இன்னும் பல்லாண்டுகளுக்கு ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் அளவிலான நிலப்பரப்பு தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்.

PUTHIYATHENRAL said...

இவற்றை எல்லாம் மூடி மறைத்த ஜப்பானின் ஊடகங்கள் அணு, தொழிலகப் பாதுகாப்பு முகமை (‘நிசா’), அரசு, புகுசிமா அணு உலையின் இயக்குநராக இருந்த ‘டோக்கியோ மின்னாற்றல் நிறுவனம்(‘டெப்கோ’) ஆகியன ஒன்றுக்கொன்று நயவஞ்சக உடந்தையாக இருந்தன.

PUTHIYATHENRAL said...

புகுசிமா அணு உலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது; இன்று வரை கதிரியக்கம் அங்கிருந்து கசிந்து கொண்டே இருக்கிறது. பல மாதங்களுக்கு அங்கு தொடரும் எனக் கருதப்படும் நில நடுக்க அதிர்வுகள் ஏற்கெனவே நிலையில்லாமல் இருக்கும் உலையின் கட்டமைப்பில் இருந்து இந்தக் கசிவை மேலும் கூட்டிவிடுகின்றன. அணு உலையின் அடித்தளத்தில் இருக்கும் 120,000 டன் கதிரியக்க நீர் காற்றிலும் கடலிலும் கலந்து கொண்டிருக்கிறது.

PUTHIYATHENRAL said...

வெளியேற்று பகுதி’யில் இருந்து 200 கி.மீ வரையிலும் கதிர்வீச்சின் அளவு மிக அதிகமாக இருக்கிறது. ‘வெளியேற்று பகுதி’யில் காணப்படும் அதே அளவு ‘சீசியம்-137’, 200 கி.மீ. தொலைவு தாண்டியும் இருக்கிறது; அணு உலையில் இருந்து 200 கி.மீ. தொலைவான பகுதிகளில் தாய்ப்பாலிலும் குழந்தைகளின் சிறுநீரிலும் கூட ‘சீசியம்-137’ கலந்திருக்கிறது என்றால் கதிர்வீச்சின் தாக்கத்தை ஊகித்துக்கொள்ளுங்கள்

தமிழ் மாறன் said...

திருநெல்வேலி மாவட்ட கடற்கரை கிராமங்களில் வாழும் கிறிஸ்தவம் தழுவிய மீனவர்களான பரவர்களும், கிறிஸ்தவம் தழுவிய மற்றும்(அய்யா வழி மற்றும் அம்மன் வழி பிரிவுகள் ) ஏனைய நாடார் சமூகத்தவர்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் வாழும் கூடங்குளம், செட்டிகுளம், வைராவிக்கிணறு, எஸ்.எஸ்.புரம் போன்ற உள்நாட்டு கிராமங்களை சார்ந்தவர்களும் விஜயாபதி போன்ற கிராமங்களில் வாழும் இசுலாமியர்களும் இடிந்தகரை லூர்துமாதா ஆலயத்திற்கும் சித்தி விநாயகர் திருக்கோவிலுக்கும் இடைப்பட்ட மைதானத்தில் பந்தல் அமைத்து சாதி, சமய வேறுபாடு கருதாமல் "இது தமிழர் போராட்டம்" என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு போராடி வருகிறார்கள். இது யாரும் எந்த நேரமும் நேரடியாக போய் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும் உண்மை நிலையாகும்

தமிழ் மாறன் said...

போராட்டத்தின் நியாயங்களை நேரடியாக சந்திக்க முடியாத காரணத்தால் போராட்டத்தை களங்கப்படுத்துவது என்ற மோசடி திட்டத்தை அரங்கேற்றி வருகிறது காங்கிரஸ் அரசு.

அயல் நாடுகளிலிருந்து நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள் இந்திய அரசின் அனுமதி பெற்று, ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு இயங்கி வருவது இங்கு ஒன்றும் புதிதில்லையே.

இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, சமயம் சாராத நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் இருக்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சில கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களில் மட்டும் வெளிநாட்டு பணம் வந்துள்ளதாக கூப்பாடு போடுவதேன்?

வேறு எந்த நிறுவனங்களும் வெளிநாட்டு நிதி பெறவில்லையா? அவை பற்றி பேசாதது ஏன்? ஆதரவாக போராடும் தொண்டு நிறுவனங்களுக்கு போராட்டத்திற்காக வெளிநாட்டு பணம் வந்ததிற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா?

அப்படி ஒன்றும் இதுவரை கிடைத்ததாக செய்திகள் இல்லையே. பொய்ச் செய்திகள் மட்டும்தான் வருகின்றனவே தவிர ஆதாரங்கள் முற்றிலும் இல்லை.

தமிழ் மாறன் said...

எளிய மீனவர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் தங்கள் அன்றாட வருமானதிலிருந்து தரும் பங்களிப்புகள்தான் போராட்டத்தின் பொருளாதாரப் பின்னணி

தமிழ் மாறன் said...

யாருக்குப் பின்னால் அந்நிய நாடுகள் உள்ளன? சில்லறை வர்த்தகம் வரை நேரடி அந்நிய முதலீட்டை கொண்டு வரத்துடிக்கும் காங்கிரசின் பின்னணியிலா? இல்லை அன்றாட வருவாயில் போராட்டத்தை மட்டுமல்ல நாட்டின் பொருளாதாரத்தையே தாங்கும் விவசாயிகள், வணிகர்கள், மீனவர்கள் பின்னணியிலா?

தமிழ் மாறன் said...

ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா என்று அந்நிய நாட்டின் பின்னணியில் இயங்குகிறது இந்திய அணுசக்தி துறை. அவர்களின் பின்னணி இல்லாமல் இந்த அலம்பல், புலம்பல் விஞ்ஞானிகள் நாட்டு மக்களுக்காக அவர்களது நல்வாழ்விற்க்காக ஒரு சிறு துரும்பைக் கண்டுபிடித்து தந்தார்கள் என்று சொல்ல முடியுமா?

தமிழ் மாறன் said...

கூடங்குளம் அணு உலையை மூடும் கோரிக்கையில் வென்றால் நாட்டின் பிற பாகங்களில் உள்ள அமெரிக்க, பிரான்ஸ் கூட்டு அணுஉலை திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களும் உத்வேகமடையும் என்று அமெரிக்காவிற்குத் தெரியும் என்பது இங்கே உள்ள உலக மகாஞானிகளுக்கு தெரியாமல் போனதேன். பிறகு எப்படி அவர்கள் அணு உலைகளுக்கு எதிரான போராட்டத்தை தூண்டி விட முடியும்?

தமிழ் மாறன் said...

வணக்கம் கபிலன் நலமா... விமான, ரயில், பேருந்து விபத்துக்கள் நடப்பதால் யாரும் பயணங்கள் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்வதில்லை என்று ஒரு தவறான ஒப்பீட்டை அணுஉலை விபத்தோடு பொருத்தியுள்ளீர்கள்.

வாகன விபத்துக்கள் நடந்தால் அதன் பாதிப்பு அந்த விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான். அணு உலை விபத்து என்பது அணுகுண்டு வெடிப்பிற்கு ஈடானது மட்டுமல்லாமல் தொடர்ந்து வெளிப்படும் கதிர்வீச்சால் பல ஆண்டுகளுக்கு ஆபத்துகளை விளைவிக்கக் கூடியதாக இருக்கும்.

பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வாழும் லட்சக்கணக்கான மக்களை மீள்குடியமர்வுக்கு வாய்ப்பே இல்லாமல் அவர்களின் பூர்வீக வாழிடங்களை விட்டு இடம்பெயரசெய்து மறு வாழ்விற்குத் தேவையான நிவாரணங்களை செய்ய வேண்டியிருக்கும். உயிருள்ள எதுவும் வாழ முடியாத நஞ்சூட்டப்பட்ட பாலை நிலமாக மாறும்.

இத்தகைய கடும் விளைவுகளை கொண்ட அணு உலை விபத்தினை பயண நேர விபத்துகளுடன் ஒப்பீடு செய்வது மிக மிகத்தவறான ஒரு போக்கு. அணு உலை விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தருவதிலிருந்து பன்னாட்டு முதலாளிகளே பின்வாங்குவதும், தாங்கள் எந்தவிதமான பொறுப்பையும் ஏற்க முடியாது என்று கூறுவதும், அணுஉலை கழிவுகளையும் தாங்கள் திரும்பப் பெற முடியாது என்று ஒப்பந்தங்கள் போடுவதையும் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

சிரிப்புசிங்காரம் said...

இதிலென்ன சந்தேகம்..?!தேச துரோகிகளைப் பாத்துதான்

Anonymous said...

அனு மின் நிலையம் கபிலன் ஐயா, இருதயம் ஐயா வீடுகளுக்கு அருகில் இருந்தால்தான் எதிப்பார்களோ என்னவோ! அவன்ங்க, அவங்களுக்கு வந்தால்தானே தெரியும்.

PUTHIYATHENRAL said...

வணக்கம் சிரிப்புசிங்காரம் அவர்களே! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! அணு உலையை எதிர்க்கும் நாங்கள் தேசதுரோகி..... ஆதரிக்கும் நீங்கள் யார்? மனித குல விரோதிகள் அல்லவா? வசதியாக அது ஏன் உங்களுக்கு மறந்து விடுகிறது.