Showing posts with label இந்திய அரசு பயங்கரவாதம். Show all posts
Showing posts with label இந்திய அரசு பயங்கரவாதம். Show all posts

Aug 1, 2015

துயர் கொள்ளாதே எனது சொந்தங்களே!

ஆகஸ்ட் 02/2015: எனதருமை இந்திய இஸ்லாமிய சொந்தங்களே, நீங்கள் இந்தியாவில் ஹிந்து ஃபாசிச பயங்கரவாத சக்திகளால்  பல்வேறு அடக்கு முறைகளை சந்தித்தும்,  ஒடுக்கப்பட்டும் வருகிறீர்கள். 

இப்பொழுது அரச பயங்கரவாதமும் உங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகிறது. முஸ்லிம்களை படுகொலை செய்து அதையே மூலதனமாக்கி ஹிந்துத்துவா மோடி நாட்டின் பிரதமராகி விட்டார். ஒட்டு மொத்த நாடும் ஃபாசிசத்தின் பிடியில் சிக்கித்தவிக்கிறது. 
இந்திய முஸ்லிம்களின் அடையாளமாக மாற்று மத மக்கள் உள்ளங்களையும் வென்ற அபுல் கலாமை இழந்திருக்கிறீர்கள், அதேநேரம், இந்தியா சுதந்திரம் அடைந்ததது முதல் இன்றுவரை சிறுபான்மை மக்களுக்கு எதிராக கலவரங்களை நடத்தி கூட்டம், கூட்டமாக கொன்று குவித்து இன சுத்திகரிப்பு நடத்திய ஹிந்து பயங்கரவாதி பால்தாக்ரே முதல் அசிமானந்தா வரை உள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகள் யாரும் இதுவரை தூக்கில் இடப்படவில்லை. அதே சமயம் தூக்கு தண்டனையை கடுமையாக எதிர்த்து வந்த அப்துல் கலாமின் இறுதி சடங்கின் போதே தூக்கில் போடப்பட்டு "யாகூப் மேனனை" இழந்திருக்கிறீர்கள். இதன் மூலம் ஒருவகைய விரக்திக்கும், பயம் உணர்வுக்கும் உள்ளாகி இருக்கிறீர்கள்.  
எனதருமை இந்திய முஸ்லிம் சொந்தங்களே எவ்வளவு பெரிய சோதனை, நெருக்கடி வந்தாலும் மனம் சோர்ந்து விடாதீர்கள். இச்சந்தர்ப்பத்தில், ஈழ சுதந்திர போராட்டத்தையும், ஃபலஸ்தீன சுதந்திர போராட்டத்தின் மீதும் நீங்கள் கவனத்தை திருப்புவது நல்லது. அந்த வரலாறுகளை படித்தால், அவர்கள் சந்தித்த, சந்திக்கும் சோதனைகளை படித்தால், அந்த சோதனைகள் வேதனைகள் முன் நமது சோதனைகள் ஒன்றுமே இல்லை என்று தெரிய வரும். அவர்கள் சந்தித்த, சந்திக்கும் எதிரிகளின் முன் உங்களது எதிரிகள் துச்சமென தெரிய வரும்.
ஹமாஸ்: ஃபலஸ்தீன முஸ்லிம்களின் வரலாற்றை தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கிய ‘இலக்கியச் சோலை பதிப்பகத்தின்  ‘ஃபலஸ்தீன முஸ்லிம்கள் அகதிகளான வரலாறு’, போராளி  ‘யஹ்யா அய்யாஷ்’  வாழ்க்கை‘ஹமாஸ் இயக்க முன்னோடி – காலித் மிஷ்அல்’. போன்ற போராட்ட  வரலாறுகளின் புத்தகங்களையும்,  பாலஸ்தீன போராளிகள் இயக்கமான ஹமாஸின் போராட்ட வரலாறுகளையும் படித்து புத்துணர்வு கொள்ளுங்கள். 
தமிழ் ஈழப்போராட்டம்: அதுபோல் தமிழ் ஈழப்போராட்ட வரலாறுகளை படியுங்கள், you tube இணையதளத்தில் சென்று ஆப்ரேசன் எல்லாளன், காற்று வெளிபுயல் புகுந்த பூக்கள்கரும்புலி பூட்டோ_001, முதல் கரும்புலி பூட்டோ_007, "ஒளிரும் தூரிகை" மேஜர் வாணிMaj Kinni, குருதிச்சன்னங்கள் போன்ற தமிழ் ஈழ போராட்ட வீர வரலாறுகளை பாருங்கள். புத்துணர்வு கொள்ளுங்கள். 
பெரியார் பிறந்த மண்ணினில் பாசிச ஹிந்துத்துவா பயங்கரவாதம் மோடி தலைமையில் கலவரங்கள் செய்ய காத்துக்கிடக்கின்றனர். ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக சிங்களவன் சிங்கள நாட்டை உருவாக்க தமிழர்களை எப்படி ஒரு இன சுத்திகரிப்புக்கு உள்ளாக்கினானோ அதையே மோடி தலைமையிலான RSS சங்கபரிவார் இயக்கங்கள் இந்திய முஸ்லிம்களுக்கு செய்ய துடிக்கின்றன. 
வடநாடுகளில் RSS பயங்கரவாதம் வலுவாக காலூன்றி  விட்டது. இந்திய முஸ்லிம்களுக்கு வேறு வழியில்லை பயந்து கோழைகளாக கலவரங்களின் மூலம் செத்து மடிவதற்கு பதில் வீர வரலாறுகள் படைக்க தயாராகுங்கள். இந்திய மண்ணில் எதிர்வரும் காலங்களில் நீங்கள் நிம்மதியாக வாழ்வது கேள்வி குறியே. உங்களை கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேற விடாமல் தடுத்து. உங்களை அடிமையாக்கி கொஞ்ச கொஞ்சமாக கொன்று ஒழிப்பதே அவர்கள் திட்டம். இல்லை உங்களை மதம்மாற சொல்வார்கள். இல்லை உங்களை நாட்டை விட்டு துரத்தி அகதிகள் ஆக்குவார்கள்.
இந்த திட்டத்தின் விதை 1925 ஆம் ஆண்டே RSS பயங்கரவாத இயக்கத்தால் போடப்பட்டு விட்டது என்பதை மனதில் கொண்டு வெகுவிரைவாக நீங்கள் செயல்படும் காலம் இது. என்றும் தமிழர்கள் உங்களோடு தோளோடு தோல் நிற்ப்பார்கள். 
அன்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.  

Dec 21, 2012

கருப்பு சட்டத்திற்கு எதிராக மக்கள் போராட முன்வர வேண்டும்!


DEC 23; மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பான NCHRO சார்பாக ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் 20/12/2012இல் சென்னையில் நடந்தது.
 
NCHROவின் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுஃப் கலந்தாய்வு கூட்டத்தின் துவக்க உரையை நிகழ்த்தினார். மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் (PUHR) தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கொடூரத்தன்மைக் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
 
வழக்கறிஞர் சத்ய சந்திரன் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மனித உரிமை வழக்கறிஞர்கள், சிவில் உரிமைகளுக்கான மக்கள் கழகம், அரசியல் கைதிகள் விடுதலைக்கான கூட்டமைப்பு (CRPP) உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளை சார்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
கடந்த 2004-ஆம் ஆண்டு ’பொடா சட்டம்’ ரத்து செய்யப்பட்டவுடன் அதில் இருந்த கொடுமையான பிரிவுகள், சட்டத்திருத்தம் என்ற பெயரால் ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. அதன் பிறகு 2008 இல் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் சம்பவத்தின் போது தேசத்தில் நிலவிய தீவிரவாத பீதியை சாதகமாக்கி கொண்டு மத்திய அரசு 2-வது முறையாக இச்சட்டத்தை திருத்தி அதன் கடுமையை அதிகரித்தது. இப்போது 3-வது முறையாக மீண்டும் திருத்தப்பட்டு இன்னும் பல கொடும் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
 
தடா, பொடா போன்ற கருப்புச் சட்டங்களைப் பற்றி மக்களிடையே இருந்த விழிப்புணர்வு போன்று இந்த ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தைப் பற்றி விழிப்புணர்வு இல்லை. தீவிரவாதம் என்ற பெயரால் முஸ்லிம் இளைஞர்களும், மாவோயிசம், நக்சலிசம் என்ற பெயரால் தலித் மற்றும் பழங்குடியின மக்களும் இந்த சட்டத்திற்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர். கருத்துரிமை (Freedom of Expression), அமைப்பாக ஒன்று சேர்ந்து செயல்படும் உரிமை (Freedom of Association) போன்ற அரசியலமைப்புச் சட்ட உரிமைகளும், அரசியல் உரிமைகளும் (Political Rights), ஜனநாயக உரிமைகளும் (Democratic Rights) இச்சட்டத்தின் மூலம் நிர்மூலமாக்கப்படுகின்றன.
 
ஜனநாயகத்துக்கு எதிரான இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக போராடுவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்.

Apr 20, 2012

அரசு ஆள்கிறதா அல்லது நம்பிக்கை ஆள்கிறதா?

April 21: புதுடெல்லி: சேது சமுத்திர திட்டத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.

மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை சரியா, தவறா என்பது போன்ற விவாதத்தில் மத்திய அரசு கருத்து கூறுவது சரியாக இருக்காது’ என்று குறிப்பிட்டுள்ளது.

அதனால், சேது சமுத்திரம் குறித்து புதிதாக கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Mar 2, 2012

கீற்று இணையதளத்தை மிரட்டிய உளவுத்துறை!

March 03: கீற்று இணையத்தளம் தமிழ் மக்களால், வாசகர்களால் போற்றப்படும் ஒரு சிறந்த மக்கள் ஊடகம். இது மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தோலுரித்து காட்டும் வகையில் சிறந்த பதிவுகளை வெளியிட்டு வருகிறது. இதன் உரிமையாளர் நந்தன் என்கிற ரமேஷ் ஆவார்.

சமூக அக்கறையுள்ள மக்களின் எழுத்துக்களை தங்களது இணையதளத்தில் வெளியிட்டதன் மூலம் கீற்று இணையத்தளம் உலகெங்கிலும் உள்ள தமிழ் வாசகர்களை கவர்ந்தது. இதன் பதிவுகள் மக்களின் பிரச்சனைகளை, துயரங்களை எடுத்து சொல்வதாகவும் அதிகாரவர்க்கத்திற்கு சாட்டை அடியாகவும் அமைந்தது.

கூடங்குளம் அணு மின்நிலையம், முல்லை பெரியாறு, தமிழக மீனவர்கள் படுகொலை, ஈழத்து இன அழிப்பு என்று தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் குறித்தும் தொடர்ந்து கீற்று பதிவுகளை வெளியிட்டு வந்தது.  இதை பொறுக்காத இந்திய உளவுத்துறை அரசு பயங்கரவாதிகள் கீற்று உரிமையாளர் ரமேஷ் அவர்களை விசாரணை என்கிற பெயரில் அழைத்து ஒரு மிரட்டலை விடுத்துள்ளனர்.

Feb 23, 2012

நான் போலீஸ் இல்ல பயங்கரவாதி!

FEB 24: இணையதளத்தில் எங்கு திரும்பினாலும் வங்கி கொள்ளையர்களை சுட்டு கொன்ற போலீசாருக்கு பாராட்டு என்று செய்திகள். இது போலீஸ்காரர்களை பாராட்டும் விஷயம் இல்லை.     

இது போலீசாரின் கையாலாகாத தனத்தை, கோழைத்தனத்தை, பயங்கரவாதத்தையே காட்டுகிறது. வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதற்காக அவர்களை சுட்டு கொல்லும் அளவுக்கு போக வேண்டியதன் அவசியம் என்ன?

எத்தனையோ வழிகள் இருக்கிறது அவர்களை மடக்கி பிடிக்க. மயக்க மருந்து கலந்த ஊசிகள் கொண்ட துப்பாக்கியை பயன்படுத்தலாம்மனிதர்களை வேட்டையாடும் யானை, சிங்கம், புலி போன்றவற்றை யாரும் சுட்டு கொன்று விடுவது இல்லை. அதை பிடிக்க மயக்க மருந்து ஊசி கொண்ட துப்பாக்கியால் சுட்டு பிடிக்கிறார்கள். ஏனென்றால் அதை பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இருக்கிறது.

Aug 23, 2011

வல்லரசு ஆகப்போகுதாம் வெட்கம் கெட்ட இந்தியா !!

என்கவுண்டர் கொலைகளை நிகழ்த்தும் அதிகாரிகளுக்கு மரணத் தண்டனையை விதிக்க வேண்டும் என அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியிருந்தது.

பாலியல் வன்புணர்வு கொலையை விட கொடிய குற்றம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. கொலை ஒரு மனிதனை ஒருமுறை மட்டுமே கொலைச் செய்யும், ஆனால் பாலியல் வன்புணர்வு பாதிக்கப்பட்டவரை பல முறை கொலைச் செய்கிறது.

சட்டத்தின் அடிப்படையிலோ, மனித நேயத்தின் அடிப்படையிலோ முற்றிலும் ஒப்புக்கொள்ள வியலாத இத்தகைய கொடூர குற்றங்கள் ஜம்மு-கஷ்மீரில் அரசு சட்ட அந்தஸ்துடன் நடத்திவருகிறது. பல ஆய்வுகளும், விசாரணைகளும் இதனை உறுதிச் செய்துள்ளன. தற்பொழுது ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தின் மனித உரிமை கமிஷனே கூட்டுப் படுகொலைகளுக்கு ஆதாரங்களுடன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

கஷ்மீர் மாநிலத்தில் 38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்கள் அடக்க செய்யப்பட்டுள்ளதை மனித உரிமை கமிஷன் கண்டறிந்துள்ளது. இந்திய ராணுவம் கடுமையான மனித உரிமை மீறல்களை புரிந்துவருவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணை அரசு அதிகார வர்க்கத்தின் பயங்கரவாத முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

அநியாயமான படுகொலை, வீணாக கைதுச் செய்வது, எவ்வித காரணமுமின்றி சிறையில் அடைத்தல், சித்திரவதைகள், கொடுமைகள் இவையெல்லாம் கஷ்மீரில் பல வருடங்களாக சர்வ சாதாரணமாக நடந்துவருகிறது. அடையாளம் தெரியாத உடல்களுடன் 2730 பேரை கூட்டமாக புதைத்துள்ளனர் என்பதை மாநில மனித உரிமை கமிஷனின் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பாரமுல்லா, பந்திபூர், குப்வரா ஆகிய மாவட்டங்களிலிருந்து மட்டும் கிடைத்த புள்ளிவிபரங்கள் தாம் இவை. மத்திய-மாநில அரசுகள் கஷ்மீருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகத்தின் சித்திரம்தான் இவை. தீவிரவாதி, பயங்கரவாதி, ஊடுருவல்காரன் எனக்கூறி எவரையும், எப்பொழுதும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழல்தான் கஷ்மீரில் நிலவுகிறது. இது ஒரு பயங்கரமான சூழலாகும்.

இறுதியாக கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி இந்திய ராணுவம் ஒருவரை சுட்டுக் கொன்றது. அவர் பாகிஸ்தானைச் சார்ந்த லஷ்கர் போராளி இயக்கத்தின் பிராந்திய கமாண்டர் அபூ உஸ்மான் என ராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால், உண்மையில் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர் ஒரு கஷ்மீரி ஹிந்து ஆவார்.

1989-ஆம் ஆண்டு முதல் 10 ஆயிரம் கஷ்மீர் மக்கள் காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கானோரை கஸ்டடியில் எடுத்து சித்திரவதைக்கு ஆளாக்குகின்றனர். இவ்வாறு கொடுமை இழைக்கப்படுவோர் 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் ஆவர். மக்களை முழுவதும் பீதியில் ஆழ்த்த தடை உத்தரவு உள்ளிட்ட தந்திரங்களை ராணுவமும், போலீசும் கையாழுகின்றன.

பெண்களுக்கு கொடுமை இழைக்கப்படுவது பல இடங்களிலும் வழக்கமாகிவிட்டது. பாலியல் வன்புணர்வு என்பது மக்களை அடக்கி ஆளுவதற்கான ஆயுதமாக மாறிவிட்டது என ரூர்த்வா பல்கலைக்கழக பேராசிரியரான டாக்டர்.மைதி கூறுகிறார். செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கையொன்றும் இதனையே கூறுகிறது.

உலகிலேயே அதிகமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது கஷ்மீரி பெண்கள்தாம் என ’டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ என்ற ஆய்வில் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு இரு தினங்களும் மூன்று வீதம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு பலியாவதாக பிரிட்டனில் ஒரு இணையதளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கலிஃபோர்னியாவில் பேராசிரியராக பணியாற்றும் இந்தியரான அங்கனா சாட்டர்ஜி கஷ்மீரில் அரச பயங்கரவாதத்தைக் குறித்து விரிவாக ஆய்வுச் செய்துள்ளார். மக்களை அடக்கி ஒடுக்க ராணுவத்திற்கு வாய்ப்புகள் கிடைப்பதற்காக கஷ்மீரில் தீவிரவாத-ஊடுருவல்களை குறித்து ஊதிப் பெருக்கிய பொய்கள் பரப்புரைச் செய்யப்படுவதாக அறிக்கை கூறுகிறது.

சுதந்திர இந்தியா அதன் குடிமக்கள் மீது இவ்வளவுதூரம் கொடுமை இழைத்த பிறகும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதன் காரணம் ‘தீவிரவாதம்’ என்ற லேபலை எதிர்ப்பவர்கள் மீது சுமத்துவதாகும். இதனையும் முறியடித்து விசாரணையை மேற்கொண்ட அங்கனா சாட்டர்ஜி உள்ளிட்ட பலரையும் தொந்தரவு அளித்து ஆய்விலிருந்து பின்வாங்கச் செய்வதற்கான முயற்சிகளை அரசு செய்கிறது.

கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சார்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ஷாப்பிராக்கிற்கு கஷ்மீர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மகளிர் எம்.பிக்களின் குழுவினர்கள் கூட மன்ஸ்காம் போன்ற சில பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வளவு நெருக்கடியிலும் ஹியூமன்ரைட்ஸ் வாட்ச், சர்வதேச தீர்ப்பாயம், செஞ்சிலுவை சங்கம், ஆம்னஸ்டி இண்டர்நேசனல் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் பல வேளைகளிலும் கண்டறிந்த உண்மைகள் நம்மை வெட்கமடையச் செய்கின்றன. ஆட்சியாளர்களைப் போலவே தேசிய மனித உரிமை கமிஷன் மற்றும் மகளிர் கமிஷன் ஆகியனவும் கஷ்மீர் விவகாரத்தில் கையாலாத தன்மையை வெளிப்படுத்துகின்றன.

மோதல் படுகொலைகளை ஒரு கட்டத்தில் நியாயப்படுத்த முயன்றார் முன்னாள் தேசிய மனித உரிமை கமிஷனின் தலைவர். குடும்ப பாரம் ஒருபுறம், மன அழுத்தம் மறுபுறம் என காணாமல் போன கணவனை எண்ணி அவதியுறும் கஷ்மீரின் ‘அரை விதவைகளை’ (காணாமல் போன கணவர் உயிரோடு இருக்கின்றாரா? இறந்துவிட்டாரா? என்று தெரியாமல் துன்பத்தில் உழலும் கஷ்மீர் பெண்களுக்கு ‘அரை விதவை’ என பெயரிட்டுள்ளனர்) சந்தித்து ஆறுதல் கூறக்கூட தேசிய மகளிர் கமிஷனால் இயலவில்லை.

கஷ்மீர் இன்று தீவிரவாதத்தின் சின்னமாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் தேசத்திற்கு அவமானத்தை தேடி தரும் ராணுவத்தின் அக்கிரமங்கள் நிறைந்த மாநிலமாகவே காட்சி தருகிறது. ஒரு மாநிலத்தின் மக்களை அவதிக்கும் கொடுமைக்கும் ஆளாக்கிவிட்டு நாம் எவ்வாறு உலகத்தின் முன்னால் தலை உயர்த்தி நிற்க இயலும்? அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கஷ்மீரின் நிலைமை இன்னும் மோசமாகும். ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை வாபஸ்பெற வேண்டும் என்ற பல ஆண்டுகளாக முன்வைக்கப்படும் கோரிக்கை இன்னமும் வெறும் வார்த்தையளவிலேயே உள்ளது.

கஷ்மீர் மக்களின் துயரத்தை துடைக்க விரும்பினால் அரசு முதலில் செய்யவேண்டியது ராணுவத்தை அங்கிருந்து வாபஸ் பெறச் செய்வதாகும். கஷ்மீரில் சுமூகமான அரசியல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவம் தடையாக உள்ளது.
ஜனநாயக நாடு என பெருமைக்கொள்ளும் நாம் ஒரு தேசத்தின் கொள்கை முடிவுகளை ராணுவத்திற்கு விட்டுக் கொடுப்பது வெட்ககேடானது. இது பெரும் துயரத்தை ஏற்படுத்தவே வழிவகைச் செய்யும்.

கட்டுப்பாடற்ற அதிகாரங்களை ராணுவத்திற்கு வழங்கியதன் விளைவுதான் மாநில மனித உரிமை கமிஷன் கண்டறிந்த உண்மைகள். இனிமேலும் கஷ்மீரின் கட்டுப்பாட்டை ராணுவத்திடம் ஒப்படைத்து கஷ்மீரை ஆபத்தான பள்ளத்தாக்காக மாற்றிவிடாதீர்கள். தேசத்திற்கு அவமானத்தை ஏற்படுத்திய கொடுங்கோலர்களை கண்டறிந்து தண்டனை அளிக்க அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் ஜனநாயகம், மனித நேயம் இவற்றிற்கெல்லாம் என்னதான் பொருள்?

Aug 9, 2011

காஸ்மீரில் தொடரும் போலி என்கவுண்டர்!

AUG 10, புதுடில்லி: காஷ்மீரில், கடந்த 7ம் தேதி பூஞ்ச் பகுதியில் நடந்த போலி என்கவுன்டர் குறித்து அறிக்கை அளிக்கும்படி ராணுவத்துக்கு, மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி உத்தரவிட்டுள்ளார்.

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில், கடந்த 7ம் தேதி பாதுகாப்பு படையினருக்கும், லஷ்கர் -இ- தொய்பா இயக்க அபு உஸ்மான் என்பவருக்கும் இடையே, 12 மணி நேரம் சண்டை நடந்ததாகவும், இந்த சண்டையில் உஸ்மான் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், கொல்லப்பட்டவர் லஷ்கர் -இ- தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர் அல்ல, ரஜவுரி பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட அப்பாவி என, போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிறப்பு போலீஸ் அதிகாரி மற்றும் ராணுவ வீரர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, ராணுவத்திடம் கேட்டுள்ளார்.

Jul 17, 2011

பயஸ் உஸ்மானியை போலீஸ் அடித்தே கொன்றது!

JULY 18, மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் பயஸ் உஸ்மானி. இவரை போலீஸ்சார் அடித்தே கொன்றார்கள். விசாரணை என்றபெயரில் அழைத்து செல்லப்பட்டவரை போலீஸ் அடித்தே கொன்றுள்ளது என்று உறவினர்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பையில் கடந்த 13ம் தேதி அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 23 பேர் பலியாயினர். 130க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த நாசவேலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க போலீசார் பல்வேறு கோணங்களில் துப்பு துலக்கி வருகின்றனர்.

கடந்த 2008&ம் ஆண்டு நடந்த அகமதாபாத் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அப்சல் உஸ்மானியின் சகோதரர் பயஸ் உஸ்மானி. மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரிக்க, பயஸ் உஸ்மானியை போலீசார் நேற்று அழைத்து சென்றனர். ஆனால் அந்த அகமதாபாத் குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சார்ந்தவர்கள் என்று நிருபிக்கப்பட்டது.

இதில் தொடர்புடைய ஹிந்துத்துவா சாமியார் அசிமானந்தா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் இந்திரஜித் குப்த்தா உட்பட நிறையபேர் ஜெயிலில் உள்ளனர். இந்த மொலோகன், அகமதாபாத், மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்து தீவிரவாதிகள் பிடிக்கப்பட்டதும் அதில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இலஞ்சர்களை விடுதலை செய்வதில் அரசு காகதாமதம் செய்து வந்தது.

இந்நிலையில் இந்த அப்பாவிகளின் உறவினரான பயஸ் உஸ்மானியை விசாரணை என்ற பெயரில் இந்திய ஹிந்துத்துவா போலீஸ் கைது செய்து அடித்து சித்திரவதை செய்தது. இதில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பயஸ் இறந்தார். விசாரணையின்போது போலீசார் அடித்து துன்புறுத்தி பயஸ்சை கொன்று விட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Jul 9, 2011

தில்சன் கொலை! பயங்கரவாதி லெப்டினன்ட் கர்னல் கைது!

JULAY 10, சென்னை:  சென்னை ராணுவ குடியிருப்பில், சிறுவன் தில்ஷனை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் தெரிவித்துள்ளதாவது, கைது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை நடைபெற உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட உள்ளோம்.

சிறுவனை சுட்டுக்கொன்றவர் லெப்டினன்ட் கர்னல் ராமராஜன் என்றும், இவர் நாளை பத்திரிகையாளர் சந்திப்பில், சிறுவனை எப்படி கொன்றார் என்று நடித்துக் காட்டுவார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

சிந்திக்கவும்: பொது மக்கள் மற்றும் ஊடகங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு, மக்கள் நல இயக்கங்கள் நடத்திய போராட்டங்கள் இந்த அரசு பயங்கரவாதி மீது நடவடிக்கை எடுக்க காரணமாக அமைந்தது. அதே நேரம் சில இணையதளங்களும் அதன் வாசகர்களும் இந்த ஏழை சிறுவனை சேரி பையன் என்றும் தடுக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததால் தான் சுடப்பட்டான் என்றும் வக்கலாத்து வாங்கி மனசாட்சியே இல்லாமல் பதிவுகள் போட்டன.

தாங்கள் கொண்ட குருட்டு தேசபக்தியின் விளைவாக இந்திய ராணுவம் ஈழத்தமிழர், கஷ்மீர் மக்கள், மணிப்பூர் மக்கள், காட்டு வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள், இவர்கள் மீது நடத்திய இன அழிப்பு, கற்பழிப்பு, இதை எல்லாம் மறைக்கவும் வக்கலாத்து வாங்கவும் செய்தன. சிறுவனை கொன்ற ராணுவ கோழையை பயங்கரவாதி என்று எழுதியதற்கு கண்டனம் தெரிவித்து கீழ்த்தரமான பின்னூட்டங்களை இட்டும் வந்தனர்.

சிறுவனை கொன்ற பயங்கரவாதிக்கு சட்டம் சரியான தண்டனை வழங்குவதன் மூலம் இனி அதிகாரம் கொடுக்கப்பட்ட காவல்துறை, மற்றும் ராணுவ துறையை சார்ந்தவர்கள் "தங்கள் பொறுப்பு மக்களை பாதுகாப்பதே" அதற்காகத்தான் மக்களின் வரி பணத்தில் இருந்து சம்பளம் வாங்குகிறோம் என்பதை உணர்ந்து செயல்பட்டால் நல்லது. வீட்டில் நாய் வளர்ப்பது வீட்டில் உள்ள மனிதர்களை பாதுகாக்க கடிப்பதற்கு இல்லை.

Jul 3, 2011

கமிஷனர் உள்பட 6 போலீஸ் பொறுக்கிகள் மீது நடவடிக்கை!

JULY 04, மதுரை: பொய்வழக்கை பதிவு செய்தல் மற்றும் மனித உரிமைகளை மீறியது தொடர்பாக மதுரை நகர கமிஷனர் பி.கண்ணப்பன் உள்பட 6 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1997 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்ணப்பன் எஸ்.பியாக பணியாற்றிய பொழுது மனித உரிமை மீறல்களை நடத்தியுள்ளார். கண்ணப்பனை தவிர இன்ஸ்பெக்டர்களான மாதவன், பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் தசரதராஜன், தலைமை கான்ஸ்டபிள்களான ராஜமணி, சாமிதுரை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய மதுரை பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது.

போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் நீதிமன்றத்தை அணுகினார். ஒரு இளம்பெண்ணை கொலை செய்ததாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கக்கோரி தன்னையும், தனது நண்பரான பழனியையும் போலீஸ் சித்திரவதை செய்ததாக கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்திருந்தார். கொலை செய்யப்பட்டதாக போலீஸ் கூறிய இளம்பெண் கடந்த 2002-ஆம் ஆண்டு உயிரோடு கண்டுபிடிக்கப்பட்டார்.

Jul 1, 2011

உலகத்திற்கு நாம் தான் முன்னோடி பெருமைப்படுவோம்!

JULY 02, பிஞ்சுக் குழந்தைகளுக்கு இன்றுவரை திருமணம் நடத்தும் இராஜஸ்தான் மாநிலம் இந்தியாவில்தான் இருக்கிறது.

 மூன்று லட்சம் குழந்தைகளை வைத்து சிறார் விபச்சாரத்தில் உலகிலேயே இரண்டாம் இடத்தைப் பெற்ற நாடும் இதுதான்.

எயிட்ஸ் தடுப்புப் பிரச்சாரத்திற்கு அதிகம் செலவழிக்கும் ஆசிய நாடும், எயிட்ஸ் நோய் வேகமாகப் பரவுவதில் முதல் நிலையிலுள்ள நாடும் இந்தியாதான்.

பெண் சிசுக்கொலை அதிகம் நடக்கும் நாடு, கலப்பு மணக்காதலர்களை கட்டி வைத்து எரிக்கப்படும்நாடு, ஸ்டவ் வெடித்துச் சாகும் மருமகள்கள், உடன் கட்டை ஏற்றிக் கொல்லப்படும் இளம்பெண்கள், உலகின் பழம்பெரும் விபச்சார நிறுவனமான தேவதாசி முறை ஆகியவற்றின் உறைவிடம் இந்தியாதான்.

மேலவளவுப் படுகொலை, தாழ்த்தப்பட்டவரின் இரத்தத்தில் பெயர் எழுதும் ரன்பீர் சேனா, முசுலீம்களின் தலைகளை விதைத்துப் பயிரிடப்பட்ட பகல்பூரின் காலிஃபிளவர் வயல்கள், சிறுநீரகங்களை அறுத்துக் கொடுத்துக் கடன் வாங்கும் நெசவாளர்கள், கடன் அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பருத்தி விவசாயிகள் இவற்றினை உலக வரலாற்றில் பார்ப்பது சிரமம்.

குஜராத்  போன்ற இன அழிப்பு, சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசு அடக்குமுறைகள், பெண்களுக்கெதிரான அடக்குமுறை, போலீசின் உதவியோடு லாக்கப் கொலை – கற்பழிப்பிலும் இந்தியாவே முதலிடத்தில் வருகிறது. மேலும் தொழுநோய், காசநோய், யானைக்கால், பெரியம்மை, பார்வையற்றோர், ஊழல் இவற்றிலும் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கின்றது.

குஜராத்தில் 15,000 பேர் தடா சட்டத்தில் கைதானது, பஞ்சாபில் 25,000 இளைஞர்கள் கொல்லப்பட்டுக் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்தது, காஷ்மீரில் காணாமல் போனவர்களைத் திருப்பித் தருமாறு ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களைக்கூட காக்கை குருவி போல சுட்டுக்கொல்வது, வடகிழக்கில் போராளிகளையும், ஆந்திரா – பீகாரில் நக்சல்பாரி புரட்சியாளர்களையும் போலி மோதலில் சுட்டுக் கொன்றது.

பஞ்சாப், ஈழம், வடகிழக்கு, காஷ்மீரில் போராடுகின்ற குழுக்களை உடைத்து கைக்கூலிக் குழுக்களை உருவாக்கியது, மனுக் கொடுக்க வந்த மாஞ்சோலைத் தொழிலாளர்களையும், நாக்பூர் கோவாரி பழங்குடியினரையும் அடித்துக்கொன்றது, வீரப்பன் தேடுதலைச் சாக்கிட்டு அதிரடிப்படை கிராமம் கிராமமாகப் பெண்களைக் கற்பழித்தது
-மலர்- 

Jun 30, 2011

புருலியா ஆயுத மழை! இந்தியாவுக்கு டென்மார் கொடுத்த அடி!

JUNE 01, புதுடில்லி: "புருலியா ஆயுத வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கிம் டேவியை, இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது' என, டென்மார்க் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் புருலியாவில், 1995ல் விமானத்தில் இருந்து, ஏராளமான ஆயுதங்கள் கீழே போடப்பட்டன. ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் என, ஏராளமான ஆயுதங்கள் வீசப்பட்டன.

இந்த ஆயுதங்கள் ஆனந்த மார்க்கம் என்ற ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்திற்கு போடப்பட்டது. இந்த ஆனந்த மார்க்கம் என்ற இயக்கம் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் துணை அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், டென்மார்க்கை சேர்ந்த கிம்டேவி என்பவருக்கு தொடர்பு இருப்பதை, சி.பி.ஐ., கண்டு பிடித்தது. அவரை, இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சில நிபந்தனைகளின் பேரில், கிம் டேவியை இந்தியாவிடம் ஒப்படைக்க டென்மார்க் அரசு முன்வந்தது.

கிம் டேவிக்கு தூக்கு தண்டனை விதிக்க கூடாது என்பது முக்கிய நிபந்தனை. டென்மார்க் அரசின் இந்த முடிவை எதிர்த்து, கிம் டேவி சார்பில் விசாரணை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த விசாரணை கோர்ட், கிம் டேவியை நாடு கடத்த அனுமதிக்க முடியாது என, தீர்ப்பளித்தது.

இதையடுத்து, டென்மார்க் ஐகோர்ட்டில் இந்த வழக்கு மேல் முறையீடுக்காக சென்றது. இதில், கிம் டேவியை இந்தியாவுக்கு நாடு கடத்த முடியாது என்ற விசாரணை கோர்ட்டின் உத்தரவை உறுதி செய்வதாக தெரிவித்த ஐகோர்ட், டென்மார்க் அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஐகோர்ட் உத்தரவில்,"இந்தியாவில் உள்ள சிறைகளின் நிலை மற்றும் மனித உரிமை பிரச்னை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிம் டேவி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், அங்கு அவர், விசாரணை என்ற பெயரில் கொடுமைக்கு ஆளாகலாம்' என, உத்தரவிட்டது. இந்த தகவலை தெரிவித்த சி.பி.ஐ., செய்தி தொடர்பாளர், ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து, டென்மார்க் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப் போவதாக கூறினார்.

Jun 29, 2011

ஒட்டுக் கேட்கும் கருவிகளை பயன்படுத்த தடை!

JUNE 30, புதுடில்லி: மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளிடம் உள்ள ஒட்டுக் கேட்கும் கருவிகள் அனைத்தையும், தங்களிடம் ஒப்படைத்து விடும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளிடம், எந்த ஒரு மொபைல் போனையும் ஒட்டுக் கேட்கும் கருவிகள் உள்ளன. இவை இருக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ., வரை தகவல்களை ஒட்டுக் கேட்கும் திறன் கொண்டவை. இக்கருவிகள், ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டி.எம்.ஏ., தொழில் நுட்பத்தில் இயங்கக் கூடியவை.

இக்கருவிகளைப் பயன்படுத்தி தொலைபேசிகள், மொபைல் போன்களை ஒட்டுக் கேட்பது சட்டப்படி குற்றம். மீறி அவற்றைப் பயன்படுத்தினால், இந்திய தொலைத் தொடர்பு சட்டத்தின் விதிகளை மீறிய குற்றமாகும். அதனால், அரசு மற்றும் தனியார் உளவு நிறுவனங்கள் அக்கருவிகளை தகவல் தொடர்புத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுப் படி, மத்திய அரசின் கீழ் இயங்கும், புலனாய்வுத் துறை (ஐ.பி.,), "ரா', மத்திய பொருளாதார புலனாய்வுத் துறை (சி.இ.ஐ.பி.,) வருவாய்ப் புலனாய்வு இயக்குனரகம், வருமான வரித் துறை, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., ஆகிய அமைப்புகள் தங்களிடம் உள்ள ஒட்டுக் கேட்புக் கருவிகளை, உள்துறை அமைச்சகத்தில் ஒப்படைக்க வேண்டி வரும்.

Jun 19, 2011

சிறுவர்களை கேடயமாக வைத்து கிராம மக்கள் போராட்டம்!

JUNE 19, ஒரிசா மாநிலம், ஜனத்சிங்பூர் மாவட்டத்தில் போஸ்கோ என்ற மிகப்பெரிய இரும்பு தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

போராட்டத்தை ஒடுக்க ஆயுதம் தாங்கிய போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் போராட்டம் மேலும் பல பகுதிகளுக்கு பரவி வருகிறது.

இதற்கிடையே போலீசை எதிர்த்து கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்ட சிறுவர்களை கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த 12 நாட்களாக இவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் மறியல் போன்றவற்றில் சிறுவர்கள் முன்னிலைப் படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு பின்னால்தான் பெரியவர்கள் வருகிறார்கள். இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

இது பற்றி போஸ்கோ ஆலை எதிர்ப்பு குழுவின் தலைவர் அபய்சாகு கூறுகையில், இரும்பு தொழிற்சாலைக்காக திங்கியா கிராமத்தில் விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்கள் பறிக்கப்படுகிறது.

இதை எதிர்த்து 6 ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. மாநில அரசு போலீசாரை கொண்டு போராட்டத்தை அடக்க நினைக்கிறது. காட்டுமிராண்டித்தனமான இந்த தாக்குதலை சமாளிக்க போராட்டத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தி உள்ளோம்” என்றார்.

போராட்டத்தில் சிறுவர்களை கேடயமாக பயன்படுத்துவதற்கு மாநில அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஜெகத்சிங்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டு எஸ்.கே. சவுத்திரியும் இதில் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சிந்திக்கவும்: பயங்கரவாத அரசு, பயங்கரவாத போலீஸ் இவர்களை எதிர்த்து ஏழை கிராமமக்கள் என்ன செய்வார்கள். தொழில்சாலைகள் அமையுங்கள் அதற்க்கு விவசாய நிலங்களை கைப்பற்றியா?.

இந்திய பயங்கரவாத போலீஸ் துறையை எதிர்த்து அப்பாவி ஏழை மக்களால் என்ன செய்ய முடியும். இந்த சிறுவர்கள் ஒன்று வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்கள் இல்லை அவர்களும் அந்த கிராமத்தின் குழந்தைகளே.

பெரியவர்களுக்கு வேறு வழிதெரியாமல் இதை செய்கிறார்கள். இந்த பயங்கரவாத போலீஸ்சை சமாளிக்க கிராம மக்கள் செய்த உக்தியாகவே இதை பார்க்க முடிகிறது.

அன்றாடம் தங்கள் உணவு தேவைகளுக்கு போராடும் அடித்தட்டு மக்களை நோக்கித்தான் இவர்கள் கைகள் நீளும். இந்திய அரசு பயங்கரவாதிகளால் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் பதிக்கப்படும் ஏழை மக்களின் அவலங்களை எதிர்த்து ஒவ்வொருவரும் போராட வேண்டும்.

சிறுமியின் கண்களை கத்தியால் குத்தி கற்பழிப்பு!

JUNE 19,  உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் 14 வயது சிறுமி போலீஸ் நிலையத்தில் கற்பழித்து கொல்லப்பட்டார். இந்த நிலையில் அங்கு மீண்டும் ஒரு கொடூரம் சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கன்னூஜ் மாவட்டம் குர்புர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி. 14 வயதான அவளை அந்த கிராமத்தைச் சேர்ந்த குல்தீப், நிரஞ்சன் ஆகியோர் கற்பழிக்க முயன்றனர். இதை தடுக்க சிறுமி போராடினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சிறுமியின் கண்களை கத்தியால் குத்தி கற்பழித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் அந்த சிறுமியின் இடது கண் பார்வை பறிபோனது. வலது கண் அதிகமாக சேதம் அடைந்து உள்ளது.

இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய மறுத்த சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் ஆகிய 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

சிந்திக்கவும்: பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கும் நாடுகளில் இந்தியா இப்பொழுது 4 வது இடத்தில் இருக்கிறது போகிற போக்கை பார்த்தால் சீக்கிரம் முதலிடத்தை அடையும் என்று சொல்லலாம்.

அதுபோல் இந்த போலீஸ் துறை இவர்களை போலீஸ் என்று சொல்வதை விட கிரிமினல்கள் என்று சொல்லலாம் வேலியே பயிரை மேய்வது போல, இந்த கொடியவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் முதலில் கொண்டுவரவேண்டும்.

பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் வேறு எங்கும் இல்லை அதன் மொத்த உருவமே காவல்துறைதான். இந்த கயவர்கள் துறையை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டுவர மக்கள் போராடவேண்டும்.

இல்லையேல், வீரப்பன் போல ஓராயிரம் வீரப்பன்கள் வேண்டும் இவர்களை அழித்தொழிக்க, பல்லாயிரக்கணக்கான நக்சல்பாரிகள் வேண்டும் இவர்கள் கொட்டத்தை அடக்க. அப்படியாவது இவர்கள் திருந்துகிரார்களா என்று பார்ப்போம்.

May 7, 2011

இந்தியாவின் பூர்வீக குடிமக்களை அழிக்க கூலிப்படை!!

May 8, சட்டிஸ்கர் : காட்டு வேட்டையின் கொடுங்கரங்கள் கடந்த மார்ச் மாதம் சட்டிஸ்கர் மாநிலத்தின் மூன்று கிராமங்களை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டன.

தேடுதல் வேட்டை என்ற பெயரில் துணை இராணுவமும், சட்டிஸ்கர் மாநில போலீசும் இணைந்து ஐந்து நாட்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டனர்; முன்னூறுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன; நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்;

சட்டிஸ்கர் மாநில அரசு மாவோயிஸ்டுகளையும், பழங்குடியின மக்களையும் வேட்டையாடுவதற்காகவே சல்வாஜுடும் என்ற குண்டர்படையை நடத்தி வந்தது.

இந்தப் படையினரின் கொலைவெறியாட்டமும் மனித உரிமை மீறல்களும் அம்பலமானதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இப்படையைக் கலைக்குமாறு சட்டிஸ்கர் அரசிற்கு உத்தரவிட்டது.

இதன்படி, தற்போது சல்வாஜுடும் கலைக்கப்பட்டுவிட்டதாக அரசு கூறினாலும், கோயா கமாண்டோஸ் என்ற பெயரில் மற்றொரு அரசு கூலிப்படையை உருவாக்கி, அதில் சல்வாஜுடுமில் இருந்த கூலிப்படையினரை இணைத்துக் கொண்டிருக்கிறது.

பழங்குடியின மக்களைக் கொண்ட படையைப் போல இதனைக் காட்டுவதற்காகவே, கோயா என்ற பழங்குடியின சமூகத்தின் பெயரை இக்கூலிப்படைக்கு வைத்து ஊரை ஏய்த்து வருகிறது, சட்டிஸ்கர் மாநில அரசு.

இவ்வாறு அமைக்கப்பட்ட 200 கோயா கமாண்டோக்களையும், மத்திய ரிசர்வ் போலீசின் கோப்ரா படைப் பிரிவின் 150 சிப்பாய்களையும் கொண்ட கூட்டுப் படையைக் கொண்டு, மொர்பள்ளி, திம்மாபுரம், தர்மேத்லா ஆகிய மூன்று ’மாவோயிஸ்டு ஆதரவு’ கிராமங்களின் மீது ஏவி தாக்கத் திட்டமிட்டது, சட்டிஸ்கர் மாநில அரசு.

May 3, 2011

பாதுகாப்பு படையா? அல்லது பயங்கரவாத படையா?

May 4, இந்திய‌ பாதுகாப்பு ப‌டை தாண்டேவாடா மாவ‌ட்ட‌த்தின் வனப்பகுதியின் உள்ளே உள்ள‌ மூன்று கிராம‌ங்க‌ளை முற்றிலுமாக‌ தீவைத்து கொளுத்தியுள்ள‌து. இதில் மொத்த‌ம் முன்னூறு குடிசைக‌ள் எறிந்து சாம்ப‌லாயின‌.

நூற்றுக்க‌ண‌க்கான‌ ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ள் வீடிழ‌ந்தார்க‌ள். மூன்று பெண்க‌ள் பாலிய‌ல் வ‌ன்புண‌ர்வுக்கு உள்ளாக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள். மூன்று ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள்.

ப‌ழ‌ங்குடிக‌ளின் தானிய‌ சேமிப்புக‌ள் எல்லாம் தீக்கிறைக்கப்பட்டுள்ள‌ன‌. ப‌ழ‌ங்குடிக‌ள் சேமித்து வைத்திருந்த‌ த‌ங்க‌ ந‌கைக‌ள், ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ரூபாய்க‌ள் கொள்ளைய‌டிக்க‌ப் பட்டுள்ள‌‌ன‌.

கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ரின் உட‌ல் ஒரு ம‌ர‌த்தில் தொங்க‌விட‌ப்ப‌ட்டும், ம‌ற்ற‌ ஒருவ‌ரின் உட‌ல் கோடாரியால் இர‌ண்டாக‌ பிள‌க்க‌ப்ப‌ட்டும் கிட‌ந்த‌து. அவ‌ர்க‌ளின் வாழ்வாதார‌மான‌ கோழி, ஆடு, உண‌வுப் பொருட்களும் கொள்ளைய‌டிக்க‌ப்பட்டுள்ள‌‌ன‌.

இந்த‌ ப‌டுகொலை நிக‌ழ்வுக்கு பின்ன‌ரான‌ மார்ச் இறுதி வார‌ங்க‌ளில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கிராம‌ங்க‌ளில் நுழைவ‌த‌ற்கு ப‌ல தனிப்பட்ட விசாரணை குழுக்க‌ளுக்கு த‌டைவிதிக்க‌ப்ப‌ட்ட‌து.
உள்ளூர் ப‌த்திரிகையாள‌ர்க‌ள் ப‌ல‌ர் தாக்க‌ப்பட்டுள்ளார்கள், மேலும் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என்று காவ‌ல்துறையால் மிர‌ட்ட‌ப்பட்டு உள்ளார்க‌ள்.

தாண்டேவாடா மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் கொடுத்த‌ நிவார‌ண‌ப் பொருட்க‌ளை ஏற்றிச் சென்ற‌ வாகனத்தின் ஓட்டுநர், சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரியினால் தாக்க‌ப்ப‌ட்டார். பாதுகாப்பு பிர‌ச்ச‌னை என்ற‌ பெய‌ரில் ச‌ட்டீசுக‌ர் மாநில‌ எதிர் க‌ட்சியைச் சேர்ந்த‌ 11 ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் இந்த‌ ப‌குதிக்குள் நுழைவ‌த‌ற்கு அனும‌தி ம‌றுக்க‌ப்பட்டுள்ள‌‌து.

ப‌ல‌ வித‌மான‌ இழுத்த‌டிப்புக‌ளுக்கு பின்ன‌ர் வேலை செய்ய‌த்துவ‌ங்கிய‌ மாநில‌ நிர்வாக‌ம் தாண்டேவாடா மாவ‌ட்ட‌ காவல்துறை த‌லைமை அதிகாரி க‌ல்லுரியை இட‌மாற்ற‌ம் செய்து, மேலும் இந்த‌ ப‌டுகொலை தொட‌ர்பான‌ நீதி விசார‌ணை ந‌ட‌க்கும் என்று உத்திர‌வாத‌த்தையும் வ‌ழ‌ங்கியுள்ள‌து.

க‌ட‌ந்த‌ வார‌ம் காவ‌ல்துறையின் அர‌ண்க‌ளை தாண்டி செல்வ‌த‌ற்காக‌ மிக‌வும் தொலைவான‌ காட்டுப்ப‌குதியின் மூல‌மாக‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கிராம‌ங்க‌ளை தெக‌ல்கா குழுவின‌ர் சென்ற‌டைந்த‌ன‌ர்.

ம‌த்திய‌ காவ‌ல் ப‌டை வீர‌ர்க‌ள், “கோப்ரா”, “கோய” அதிரடி படையைச் சேர்ந்த அதிகாரிக‌ள், காவ‌ல்துறை அதிகாரிக‌ள் எல்லாம் சேர்ந்து தான் இந்த‌ ப‌டுகொலையை நிகழ்த்தினார்கள் என்று நிக‌ழ்வை நேரில் க‌ண்ட‌ சாட்சிக‌ள் எம்மிடம்(தெகல்கா) கூறினார்க‌ள்.

தீ வைத்து கொழுத்த‌ப்ப‌ட்ட‌ மோர்பளி, திமாபுர், தர்மத்லா கிராம‌ங்க‌ள் ம‌யான‌ பூமியைப் போல‌ எங்க‌ளுக்கு காட்சிய‌ளித்த‌ன‌. அந்த‌ நில‌ப்ப‌குதி மொத்த‌‌மும் எரிந்த‌ குடிசைக‌ளையும், ஆள் அரவமற்ற எரிந்து போன தானிய‌ங்க‌ளைக் கொண்ட‌ ப‌ழ‌ங்கால‌ தாழிக‌ளையும் கொண்ட இடிந்து போன வீடுகளையும் மட்டுமே கொண்டிருந்த‌து.

சிந்திக்கவும்: சொந்த குடிமக்களை கொன்று குவிக்கும் இந்த அரசு ஜனநாயக அரசல்ல சர்வாதிகார அரசு.

Mar 27, 2011

சுவாமி அக்னிவேஷ்சை தாக்கிய அரசு பயங்கரவாதிகள்!!

மார்ச் 28, தண்டேவாடா: சட்டீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடாவில் போலீஸ் நடத்திய அராஜகங்களை குறித்து விசாரிக்கச் சென்ற பிரபல சமூக சேவகரான சுவாமி அக்னிவேஷ் தாக்கப்பட்டார்.

மாவோயிஸ்டுகளுக்கு உதவினார்கள் எனக் கூறி 300க்கு மேற்பட்ட ஆதிவாசிகளின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்ட கிராமங்களை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார் சுவாமி அக்னிவேஷ்.

இவர் செல்லும் வழியில் சல்வாஜூதுன் படையினரும், சிறப்பு போலீஸ் படை அதிகாரிகளும் இணைந்து தாக்கினர். இத்தாக்குதலில் பத்திரிகையாளர்களுக்கும் காயமேற்பட்டது.

போலீசாருக்கு உதவதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு படையினர்தாம் ஆதிவாசிகளின் வீடுகளுக்கு தீவைத்ததாக கூறப்படுகிறது. ராய்ப்பூரிலிருந்து 550 கி.மீ தொலைவில் உள்ளது இவ்விடம்.

மூன்று வாகனங்களில் தத்மெத்லா என்ற இடத்திற்கு அக்னிவேஷும், குழுவினரும் சென்றுக் கொண்டிருந்தனர். தோர்ணாபாலில் காத்து நின்ற மக்கள் கூட்டம் இவர்களை எதிர்கொண்டது.

அக்னிவேஷின் மீது அழுகிய முட்டைகளும், கெட்டுப்போன தக்காளிகளும் வீசப்பட்டன. அக்னிவேஷை காரிலிருந்து பிடித்து இறக்கி அவருடைய தலைப்பாகை அவிழ்க்கப்பட்டது. படமெடுக்க முயற்சித்த பத்திரிகையாளர்களின் கேமரா பறிக்கப்பட்டது.

மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் கணவர்களை இழந்த விதவைகள் தாக்குதல் நடத்திய கூட்டத்திலிருந்ததாக அக்னிவேஷுடன் சென்ற பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தை காண அக்னிவேஷும் குழுவினரும் ஏன் செல்லவில்லை? என கேள்வி எழுப்பினர். இவர்களின் செயல் எல்லை மீறிய பொழுது அக்னிவேஷிற்கும், குழுவினருக்கும் திரும்பிச் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது.

யாரோ இவர்களை தூண்டிவிட்டுள்ளார்கள் என அக்னிவேஷ் கூறுகிறார். முதல்வரின் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு சென்றதைத் தொடர்ந்து தங்களது பயணத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளார் என அக்னிவேஷ் தெரிவித்தார்.

Mar 10, 2011

போலீஸ் அதிகாரிகளா? பயங்கரவாதிகளா?

NCHRO வின் நான்கு வருட போராட்டத்திற்கு பிறகு கீரிப்பறை காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொல்லப்பட்ட கடையநல்லூர் மசூத் என்பவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது

கடந்த 2005 ம் ஆண்டு நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மசூத் என்ற முஸ்லிம் வாலிபரை விசாரணைக்காக கீரிப்பாறை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். குமரி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணையின் போது அவரை தலை கீழாக தொங்க விட்டு பழுக்க காய்ச்சிய கூர்மையான இரும்புக் கம்பியை அவரது ஆசனவாய்க்குள் செலுத்தி கடுமையாக அடித்து சித்திரவதை செய்து அவரை கொலை செய்தனர் DSP க்கள் பிரதாப் சிங், சந்திரபால், ஈஸ்வரன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள்.

காவல் நிலைய சித்திரவதையில் மசூத் கொல்லப்பட்ட இவ்வழக்கை கடந்த நான்கு வருடங்களாக மதுரை உயர்நீதிமன்றத்திலும் தென்காசி நீதிமன்றத்திலும் நடத்தி வருகிறது NCHRO .மேலும் பாதிக்கப் பட்ட மசூத் - ன் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி NCHRO வின் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஜின்னா அவர்கள் தலைமையிலான குழு பலமுறை சென்னையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனரையும், உள்துறை செயலாளரையும் சந்தித்து கோரிக்கை விடுத்து வந்துள்ளனர் .

மாநில தலைவர் வழக்கறிஞர் பவானி பா. மோகன், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் முகம்மது யூசுப் ஆகியோர் தலைமையில் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறது NCHRO. இவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்ட மசூத்தின் மனைவி அசனம்மாள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்குமாறு கடந்த பிப்ரவரி மாதம் 11 ம் தியதி குமரி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது .

இதனை தொடர்ந்து நிரூபர்களுக்கு பேட்டி அளித்த NCHRO வின் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அலி அவர்கள் " நீதிக்கான போராட்டம் இத்துடன் முடிந்து விட வில்லை, காவல் நிலைய சித்திரவதையின் மூலம் மசூத் அவர்களை கொலை செய்த DSPக்கள் பிரதாப் சிங், சந்திரபால், ஈஸ்வரன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிரான கிரிமினல் வழக்கை நாங்கள் நடத்தி வருகின்றோம். அவர்களுக்கு தண்டனை வாங்கி தரும் வரை எங்கள் போராட்டம் ஓயாது " என்று மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அலி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்

Jan 1, 2011

மனித உரிமையா? கிலோ என்னவிலை? என்று கேட்க்கும் இந்தியா.

மனித உயிரை காக்கும் மருத்துவ சேவை, பணம் பறிக்கும் தொழிலாக மாறியிருப்பதையும், பணத்திற்காக உடல் உறுப்புகளை திருடி விற்கும் மருத்துவர்கள் பெருகி வருவதையும் நாம் அறிவோம். ஆனால் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களை பார்ப்பது அரிது. அதிலும் மருத்துவத்தோடு நில்லாமல் மக்கள் படும் துன்பங்களுக்காகப் போராடும் மருத்துவர்களை காண்பது அரிதிலும் அரிது. அத்தகையதொரு அற்புதமான மருத்துவர்தான் பினாயக்சென். குழந்தைகள் நல மருத்துவத்தில் உயர்படிப்பு படித்து, மருத்தவத்துறையில் பிரபலமானவர் – கிராமபுறங்களுக்கு சென்று மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் குதிரைக் கொம்பாகிவிட்ட இக்காலத்தில் சத்தீஸ்கரில் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு பல ஆண்டுகளாக மருத்துவச் சேவை செய்து வருபவர் டாக்டர் பினாயக்சென்.

மேற்குவங்கம், ஒரிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் புதைந்து கிடக்கும் ஏராளமதான கனிவளங்களை கொள்ளையடித்துச் செல்ல தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தாராள அனுமதி கொடுத்துள்ளது மன்மோகன் அரசு. அதற்காக அப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களை பலாத்காரமாக அப்புறப்படுத்தி வருகின்றன மத்திய, மாநில அரசுகள். தங்களின் வாழ்விடங்களை பாதுகாத்துக்கொள்ள போராடுவரும் பழங்குடி மக்கள் மீது, போலீசு மற்றும் இராணுவத்தைக் கொண்டும், “சல்வாஜூடும்” போன்ற சட்டவிரோத கொலைகார குழுக்களைக் கொண்டும் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை ஏவிவருகிறது மன்மோகன் அரசு. இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்தான் மருத்துவர் பினாயக்சென்.

நமது இயற்கை வளங்களை அன்னியர்கள் கொள்ளையடித்துச் செல்ல அனுமதித்து வரும் தேசத் துரோக ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் சேவகர்களான மக்கள் விரோத போலீசுக்கும் மக்கள் நலனுக்காக செயல்படும் பினாயக்சென்னின் செயல்பாடு ஆத்திரம் கொள்ள செய்திருக்கிறது. “பினாயக்சென்” மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டார்” என்று பொய் குற்றம் சாட்டி போலியான ஆவணங்களைக் காட்டி பொய் வழக்கு போட்டது சத்தீஸ்கர் போலீசு. காவல்துறையின் போலியான ஆவணங்களை அப்படியே ஏற்றும் பினாயக்சென் தரப்பு உண்மையான ஆதாரங்களை ஏற்க மறுத்தும் மருத்துவர் பினாயக்சென், தோழர் நாராயன் சன்யால், பிஜூஷ்குஹா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது, ராய்ப்பூர் மாவட்ட நீதிமன்றம்.

இந்நீதிமன்ற தீர்ப்பை, “தீர்ப்பு வழங்கும் நெறிமுறைக்கே எதிரானது” என விமரிசத்து பினாயக்சென்-ஐ விடுதலை செய்யகோரி உள்ளது, சர்வதேச பொது மன்னிப்பு சபை. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங், “நான் அறிந்தவரை பினாயக் சென் அற்புதமான மனிதர். அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். இத்தீர்ப்பிற்கு எதிராக இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். நாமும் மருத்தவர் பினாயக் சென் விடுதலைக்காக குரல் கொடுப்போம்.