Mar 2, 2012

கீற்று இணையதளத்தை மிரட்டிய உளவுத்துறை!

March 03: கீற்று இணையத்தளம் தமிழ் மக்களால், வாசகர்களால் போற்றப்படும் ஒரு சிறந்த மக்கள் ஊடகம். இது மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தோலுரித்து காட்டும் வகையில் சிறந்த பதிவுகளை வெளியிட்டு வருகிறது. இதன் உரிமையாளர் நந்தன் என்கிற ரமேஷ் ஆவார்.

சமூக அக்கறையுள்ள மக்களின் எழுத்துக்களை தங்களது இணையதளத்தில் வெளியிட்டதன் மூலம் கீற்று இணையத்தளம் உலகெங்கிலும் உள்ள தமிழ் வாசகர்களை கவர்ந்தது. இதன் பதிவுகள் மக்களின் பிரச்சனைகளை, துயரங்களை எடுத்து சொல்வதாகவும் அதிகாரவர்க்கத்திற்கு சாட்டை அடியாகவும் அமைந்தது.

கூடங்குளம் அணு மின்நிலையம், முல்லை பெரியாறு, தமிழக மீனவர்கள் படுகொலை, ஈழத்து இன அழிப்பு என்று தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் குறித்தும் தொடர்ந்து கீற்று பதிவுகளை வெளியிட்டு வந்தது.  இதை பொறுக்காத இந்திய உளவுத்துறை அரசு பயங்கரவாதிகள் கீற்று உரிமையாளர் ரமேஷ் அவர்களை விசாரணை என்கிற பெயரில் அழைத்து ஒரு மிரட்டலை விடுத்துள்ளனர்.

நீங்கள எந்த அமைப்பை சார்ந்தவர்? நெடுமாறன், வைகோ, சீமான் போன்றோர்கள் உங்களுக்கு பணம் தந்து உதவுகிறார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். உங்களுக்கு வங்கி கணக்கு உள்ளதா என்றும் கேட்டுள்ளனர். இது மக்கள் பிரச்சனைகளை எழுதும் ஊடகங்களை அச்சுறுத்தும் செயலாகும்.  இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை எதிர்த்து நியாய உணர்வுள்ள ஒவ்வொருவரும் குரல் எழுப்ப வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சியில் எழுத்து சுதந்திரம் கூட இல்லையா? இந்திய உளவுத்துறை கயவர்களுக்கு சில கேள்விகள். பயங்கரவாதிகளும், ஊழல்வாதிகளும், கேடிகளும், கிரிமினல்களும் சுதந்திரமாக பேசித்திரியும் பொழுது மக்கள் பிரச்சனைகளை பேசும் ஊடகங்களை மிரட்டுவது ஏனோ? அதிகார வர்க்கத்தின் கைகூலிகள்தான் உளவுத்துறை என்பதை மீண்டும் நிரூபிக்கும் ஒரு செயல் இது ஆகும். இது போன்ற அச்சுறுத்தல்களை வேரறுக்க பதிபவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

29 comments:

Anonymous said...

There are two kinds of society in India and Sri Lanka.
1.Leg lickers of the rulers, living in luxury.
2. suffering people.

Unknown said...

ஊடகத்துறை பாதுகாக்கப்படுவது மிக மிக அவசியம்

Anonymous said...

உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

இருதயம் said...

தமிழக மக்களை , முதல்வரை ஏமாற்றும் திரு . உதயகுமார் - கூடங்குளம் ரிப்போர்ட்

http://naanoruindian.blogspot.in/2012/03/blog-post.html

PUTHIYATHENRAL said...

வணக்கம் இருதயம் சார் நலமா? உங்களது வாதங்கள் எல்லாம் உப்பு சப்பு இல்லாதது என்பதை மீண்டும் நிருபிக்கிறது. அந்த இடத்தில் மாற்று முறையில் மின்சாரம் எடுப்பது முடியுமா இல்லையா என்பது இங்கு கேள்வி இல்லை. அணு உலைகள் என்பதே வேண்டாம் என்பதே நமது கருத்து. அதுவே மக்கள் நலம் விரும்பும், மனிதாபிமானம், தொலை நோக்கு சிந்தனை கொண்ட ஒவ்வொருவரின் கருத்தும் கூட. அணு மின்சாரம் என்பது தேவையில்லாத ஒன்று என்று உலக சமாதானத்துக்காக நோபல் பரிசு பெற்ற ஒன்பது அறிஜர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதனால் ஏற்ப்படும் இலாபங்களை காட்டிலும் அழிவே அதிகம். அது மட்டும் இல்லை அதன் கழிவுகளால் ஏற்ப்படும் ஆபத்தும் அதை பாதுக்காக்க ஆகும் செலவும் கணக்கிட்டால் அதற்க்கு பதிலான மாற்று முறைகளை தேர்ந்தெடுப்பதே அறிவுடைமை.

மேலும் கூடங்குளம் பகுதியில் உள்ள மணல்பரப்பு நெகிழும் தன்மையை கொண்டது என்பதை உங்களால் மறுக்க முடியாது. மேலும் சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேராபத்துக்கள் உங்களையும், அபுல்கலாமையும் கேட்டு கொண்டு வராது. அதன் அளவையும் சீற்றத்தையும் நீங்கள் கற்பனையில் கணக்கிட முடியாது.

அந்த பகுதி மக்கள் விரும்பவில்லை என்றால் இழுத்து மூட வேண்டியதுதானே. சேது சமுத்திர திட்டத்தில் பல இலட்சம் கோடியை போட்டு விட்டு இழுத்து மூடவில்லையா, இல்லை நதி நீர் இணைப்பு என்று சொல்லி அதல் பல கோடி இலட்சங்களை போட்டு விட்டு மூடவில்லையா. மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்து சுவிஸ் வங்கிகளில் போட்டு சுகபோகமாக வாழவில்லையா?

அந்த மக்கள் கேட்பதெல்லாம் அவர்களுக்கு மின்சாரம் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். அவர்களை நிம்மதியாக வாழவிட்டால் போதும் என்பதே. நீங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மின்சாரம் கொடுக்க வேண்டும் என்பதற்கு மக்களை கொல்ல அவசியம் இல்லை. உங்கள் கோமாளி அப்துல்கலாம் சொல்கிறார் கூடங்குளம் மக்களுக்கு உலக தரம் வாய்ந்த மருத்துவமனையாம், அடுக்குமாடிகள் கொண்ட பசுமை வீடுகளாம், நால்வழி சாலையாம் ஏன்? இந்த வசதிகளை எல்லாம் போபாலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து கொடுத்து விட்டு அதைப்பற்றி பேசுங்கள்.

PUTHIYATHENRAL said...

வணக்கம் இருதயம் ஐயா! என்ன காதில் பூ சுற்றுகிரீர்களா? ஏதோ நீங்கள் இந்த நாட்டின் பிரதமர் மாதிரியும், அந்த மக்களுக்கு ஒன்று என்றால் நீங்கள் அப்படியே வந்து அவர்களை பாதுகாக்க திட்டங்கள் அமைத்து கொடுத்து வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி விடுவது போலவும் பேசுகிறீர்கள்.

அத்தனை பெரும் கலைவாணி பயலுவ நீங்கள் வேற வெவரம் கெட்ட ஆளா இருந்து கிட்டு... இந்த கலைவாணி பயலுவ சொல்லுவதை கேட்டு அணு உலை கெட்டினால் அவ்வளவுதான் ஏதாவது நடந்தால் அம்போ என்று நடுத்தெருவில் விட்டு விட்டு போயி விடுவாணுவ.

PUTHIYATHENRAL said...

உச்சகட்ட பாதுகாப்பை தூக்கி குப்பையில் போடுங்கள். முதலில் இந்தியாவில் என்ன நடக்கிறது என்று பாருங்கள் யார் மக்கள் நலம் மக்களுக்காக பேசுகிறார்கள் யார் கார்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழக மீனவர்கள் 500 பேருக்கு அதிகமாக இலங்கை ராணுவம் சுட்டு கொன்றதே எங்கே போனது உங்கள் உட்ச்சகட்ட பாதுகாப்பு.

மக்களை பாதுகாக்காத அரசு, மக்கள் நலம் விரும்பாத அரசு இயந்திரம், ஊழல் பெரிச்சாளிகள் குடிகொண்டிருக்கும் அரசியல் இப்படிப்பட்ட ஒரு நாட்டில் இது போன்ற அழிவை உண்டாக்கும் திட்டம் தேவை இல்லை என்பதே எங்களது கருத்து.

உலக சமாதானத்திர்க்காக நோபல் பரிசு பெற்ற மேதைகளால், அப்துல் கலாம் போன்ற அரசின் பொய் பேசும் தற்குறி விஞ்சானிகளாக இல்லாமல் உண்மையை பேசும் நல்ல விஞ்சானிகள் சொல்வதைத்தான் எங்களால் கேட்க்க முடியும்.

அழிவு சக்தி இல்லாத நல்ல திட்டங்களை கொண்டு வாருங்கள் வரவேற்ப்போம். இதுபோல் கூண்டோடு கைலாசம் அனுப்பும் திட்டங்களுக்கு முகவர்களாக செயல்பட வேண்டாம் என்பதே எங்களது கனிவான வேண்டுகோள்.

PUTHIYATHENRAL said...

\\ஊடகத்துறை பாதுகாக்கப்படுவது மிக மிக அவசியம்//

வணக்கம் எஸ்தர்... உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.

PUTHIYATHENRAL said...

தமிழக மக்களையும், முதல்வரையும் ஏமாற்றும் அளவுக்கு உதயகுமார் புத்திசாலி என்று நீங்களே ஒத்து கொண்டு சான்றிதழ் அளித்து விட்டீர்கள் வேறு என்ன வேண்டும். இப்ப புரிகிறது ஏன் உங்கள் போலி விஞ்சானி கலாம் கூடங்குளம் நிபுணர் குழுவை கண்டு பயப்படுகிறார்கள் என்று.

Anonymous said...

நிச்சயம் பத்திரிகை சுதந்திரத்தின் மீது கை வைக்கும் இந்த அரசு கைக்கூலிகளுக்கு எதிராக அணிதிரள வேண்டும். by: RAJA.

Anonymous said...

அடுத்தது உங்களை கண்டிப்பாக கூப்பிடுவார்கள். இத்தனை நாட்களாக இஸ்லாமிய பயங்கரவாத்தை ஊக்குவித்து வரும் உங்களுக்கு இது வரை அழைப்பு வரவில்லையா?

HotlinksIN.com திரட்டி - வலைப்பதிவுகளின் சங்கமம் said...

அட இப்படியா எழுதறீங்க... அடுத்து உங்களையும் வந்து விசாரணை பண்ணப் போறாங்க...

Chittoor Murugesan said...

//ஏதாவது நடந்தால் அம்போ என்று நடுத்தெருவில் விட்டு விட்டு போயி விடுவாணுவ.//

இதை மட்டும் செய்தா பரவால்லை. அந்த எதுவோ நடக்க காரணமானவுகளை -பொறுப்பானவுகளை பத்திரமா ஃப்ளைட் ஏத்தி விட்டுருவாய்ங்க..

Anand said...

//இருதயம் said...

தமிழக மக்களை , முதல்வரை ஏமாற்றும் திரு . உதயகுமார் - கூடங்குளம் ரிப்போர்ட்
//

முழுமையாக அனைவருக்கும் காப்பீடு வழங்கலாம். விபத்து ஏற்பட்டால் முழு நட்ட ஈடு தரலாம் என்று ரஷ்யா ஒப்புகொண்டால் என்ன? போபால் போன்று மற்றொரு விபத்து ஏற்பட்டால் அப்துல் கலாம் இருதயம் போன்றவர்களை எங்கே தேடிபிடிப்பது? விபத்து ஏற்பட்டால் கைக்கூலிகள் செயும் முதல் காரியம் அந்நிய நாட்டவரை விமானத்தில் பத்திரமாக ஏற்றி அனுப்புவார்கள்.

PUTHIYATHENRAL said...

//அட இப்படியா எழுதறீங்க... அடுத்து உங்களையும் வந்து விசாரணை பண்ணப் போறாங்க...//

வணக்கம் தோழரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

PUTHIYATHENRAL said...

//பத்திரமா ஃப்ளைட் ஏத்தி விட்டுருவாய்ங்க..//
வணக்கம் முருகேஷன் வாருங்கள்... உங்கள் வருகைக்கு நன்றி. சரியா சொன்னீங்கள்.

PUTHIYATHENRAL said...

வணக்கம் ஆனந்தன் நலமா.

//விபத்து ஏற்பட்டால் முழு நட்ட ஈடு தரலாம் என்று ரஷ்யா ஒப்புகொண்டால் என்ன? போபால் போன்று மற்றொரு விபத்து ஏற்பட்டால் அப்துல் கலாம் இருதயம் போன்றவர்களை எங்கே தேடிபிடிப்பது?//

இதற்கெல்லாம் மிஸ்டர் இருதயம் பதில் சொல்ல மாட்டார்.... விஞ்சான வடிவேலு அப்துல் கலாம் கூட சேர்ந்து கொண்டு 2020ல் இந்தியா வல்லரசாக போகிறது என்று தேசபக்தி வெறி கொண்டு மக்களை எல்லாம் கொன்று விட்டு உளவுத்துறையையும், அணு ஆயுதங்களையும், ராணுவத்தையும் வைத்து கொண்டு ஊர் நாட்டாமை பேசி தெரிவார்கள்.

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் இறைவனுக்கு அடிபணியும் மக்களின் மீது உண்டாவட்டுமாக...தமிழக மக்களின் கவனத்திற்கு ...தமிழன் தலை நிமிர நினைக்கும் போதெல்லாம் தமிழர்களை தமிழர்களைக் கொண்டு தட்டிவிடுவார்கள் இதுதான் இத்தனைக்காலமும் நடந்து வரும் உண்மையான விஷயம் ...இப்பொழுது தமிழக மக்களை அணுமின் நிலையத்திற்கு ஆதரவாளர்களாக மாற்றுவதற்காக பலமணிநேரம் மின்தடையை உண்டுபன்னுகின்றார்கள் மக்கள் விழிப்புணர்வு கொள்ளல் வேண்டும் இதை முறியடித்தல் வேண்டும்..இலங்கை தமிழனுக்கு விடிவு காலம் பிறக்கணும் அதற்கும் தமிழக மக்கள் ஆதரவுக்கரம் நீட்டனும் .........இப்படிக்கு ..புனிதப்போராளி

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் இறைவனுக்கு அடிபணியும் மக்களின் மீது உண்டாவட்டுமாக...ஆசிரியர்..புதியதென்றல்..அவர்களின் கவனத்திற்கு ..சிந்திக்கவும் இணையதளத்தில்..[ இப்னு ஷாகிர்]..என்ற பெயரில் வருபவன் இஸ்லாமியர்களை இழிவு படுத்தி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றான் இவனின் உண்மையான முகவரியை கண்டு பிடித்துதருபவர்களுக்கு தகுந்த சன்மானம் புனிதப்போராளியின் உளவுப்பிரிவு வழங்கும் என்பதனையும்.. சிந்திக்கும் இணையதளத்தில் இவனின் கருத்துக்களை தடை பண்ணவும் வேண்டுகின்றோம் ....by ..புனிதப்போராளி

PUTHIYATHENRAL said...

வாருங்கள் புனித போராளி அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

இப்னு ஷாகிர் பதிவுக்கு தொடர்பில்லாத கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இது போன்ற கருத்துக்கள் நீக்கப்படும் தோழரே.

Anonymous said...

வணக்கம் இருதயம் சார்...
தமிழகத்தின் வளர்ச்சிக்குக் கூடங்குளம் அணு உலை தேவை என்பது முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முயலும் செயல். நெய்வேலி அனல் மின் நிலைய உற்பத்தியில் வெறும் 30 விழுக்காடு மின்சாரம் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வழங்கப்படுகின்றது. மீதமுள்ள 70 விழுக்காடு மின்சாரம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றது. நெய்வேலியிலிருந்து உற்ப‌த்தியாகும் மின்சார‌த்தை ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளுக்கு கொடுப்ப‌தை நிறுத்தினாலே த‌மிழ‌க‌ம் மின் உற்‌பத்தியில் உப‌ரி மாநில‌மாக‌த் திக‌ழும். இதும‌ட்டும‌ன்றி மின்சாரத்தைக் கொண்டு செல்லுதல், வழங்கலில் உள்ள (T&D Loss) தொழில்நுட்ப‌க் குறைபாடு கார‌ண‌மாக‌ மின்சார இழ‌ப்பு ஏற்ப‌டுகின்ற‌து. த‌மிழ‌க‌த்தில் இவ்விழ‌ப்பு 18%. 2010 ஆம் ஆண்டு த‌மிழ‌க‌த்தின் மொத்த‌ மின் உற்ப‌த்தி 10,214 மெகா வாட், இதில் 1,830 மெகா வாட் வீணாகியது. இந்த‌ இழ‌ப்பீட்டை 10 விழுக்காட்டிற்கும் கீழாக‌க் குறைப்பதன் மூலம் கூட‌ங்குள‌ம் அணு உலைத் திட்ட‌த்தில் த‌மிழ‌க‌த்திற்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌டுவ‌தாக‌ச் சொல்ல‌ப்ப‌டும் 405 மெகா வாட் மின்சார‌த்தை விட இரு மடங்கு மின்சாரம் ந‌ம‌க்குக் கிடைக்கும். அதுமட்டுமின்றி தற்பொழுதுள்ள மின்சாரத்தைத் திறமையாகப் பயன்படுத்துவதன் மூலம் குறைந்தது 1,000 மெகாவாட் மின்சாரத்தை நாம் சேமிக்க முடியும். by: tamil kudi

Anonymous said...

பதிபவர்கள் ஒன்றிணைந்து ஒரு சட்ட ரீதியான அமைப்பை உண்டாக்க வேண்டும்.

...செல்வா.

PUTHIYATHENRAL said...

இருதயம் ஐயா! சும்மா மாங்காய் புளித்ததா மவுத் புளித்ததா என்று சொல்லி விட்டு போய் விடமுடியாது. அமெரிக்காவில் சோலார் நிறுவனங்கள் 150 டாலருக்கு அதிகமாக மின்கட்டணம் செலுத்தும் விடுகளுக்கு சோலார் முறையில் மின்சாரம் எடுக்கும் பேனல்களை இலவசமாக இன்ஸ்டால் செய்வதோடு அவர்கள் கட்டும் மின் கட்டணத்தில் 75 சதவீதத்தை தங்களுக்கு கட்டினால் போதும் என்று சொல்லி எல்லாம் இடங்களிலும் அதை நிறுவி வருகிறார்கள். இதை அங்கு வசிக்கும் நண்பர் ஒருவர் தனது வீட்டில் நிறுவி இருப்பதாக சொன்னார் வேறு என்ன ஆதாரம் வேண்டும். எதற்கு ஆலை நிறுவி மின் உற்பத்தி செய்து பெரிய நிறுவனங்களுக்கு கொடுக்கணும் அதை பற்றியே சிந்தியுங்கள். மக்களுக்கு மின்சாரம் கிடைப்பதை பற்றி பேசினால் நீங்கள் ஒரே அன்னிய நிறுவனங்களை கொண்டு வருவதிலேயே குறியாக இருக்கிறீரே...

PUTHIYATHENRAL said...

இருதயம் ஐயா! இனிமேல் அனல் மின்நிலயம் உருவாக்க தேவையில்லை என்பதே நமது கருத்து. இருக்கும் மின் பற்றாக்குறையை சீர் செய்ய குழல் விளக்குகளை பயன்படுத்துவது.... அரசியல் மற்றும் மாநாடுகள், பொது நிகழ்ச்சி, மசூதி, கோவில், சர்ச் திருவிழாக்கள் இப்படி கொடுக்கும் மின்சாரத்தையும், அரசியல், மாநாடுகளுக்கு கள்ளத்தனமாக மின்சாரத்தை திருடுவது இதை எல்லாம் கடுமையாக்கி சேமித்தால் போதிய அளவு மின் வெட்டை தடுக்க முடியும். அது போன்ற நிகழ்சிகளுக்கு ஜெனரேட்டரை பயன்படுத்தும்படி அரசு கடுமையாக சட்டங்களை கொண்டு வரவேண்டும். அதே வேலை விடுகளுக்கு தேவையான மின்சாரத்தை எடுக்க, தெரு விளைக்குகளுக்கு தேவையான மின்சாரத்தை பெற சோலார் பேனல்கள் மூலம் சூரிய மின் சக்தி பெரும் விடயத்தை மேற்கொள்ள வேண்டும். இதை செய்தாலே பெரும்பான்மையான மின் பற்றாக்குறையை தீர்க்கலாம்.

Anonymous said...

கீற்றை நான் தொடர்ந்து படித்து வருபவன் அது சிறந்த சமூக சிந்தனை படித்த இனைய தளம். உங்கள் பதிவுக்கு நன்றி.

Ki.Ilampirai said...

இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழும் மனிதர்களுக்குத் தான் சமூக அக்கறை இருக்கும். அவர்களைக் கேவலமாக நினக்கும் அரசும் அது தொடர்பான கைக்கூலிகளும் செய்யும் தொல்லைகளுக்கு ஊடகத்துறை சார்ந்தவர்கள் ஒன்று கூடி குரல் எழுப்பினால் அல்லது கண்டனக்கூட்டம் ஏற்பாடுசெய்தால் சற்றாவது சிந்திக்கும் அந்தக் கைக்கூலிக் கூட்டம். உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் கீற்றின் வளர்ச்சியில் நாங்களும் துணை இருப்போம் என்பதே இப்போதைக்கு உறுதிமொழி.

முத்து said...

நாட்டில் மக்களுக்குக் கேடு செய்பவர்கள் நன்றாகவும் நல்லது செய்ய நினைப்பவர்கள் துன்பத்தோடும் வாழ்கிறார்கள். இந்நிலை மாறவேண்டும்.

Jones said...

Professional Expert level Android Training in chennai, Android App Development
Android Training | Android App Development | Training in chennai

Unknown said...

nice and useful blog to everyone... thanks for sharing

java training in chennai | java training institute in chennai | java j2ee training in chennai | java j2ee training institute in chennai