சுதந்திர தினத்துக்கு கருப்புக்கொடி: கூடங்குளம்
அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரை பகுதியில் சுதந்திரதினமான நேற்று
கருப்பு கொடி ஏற்றப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.
மீனவர்கள் வேலைக்கு செல்லவில்லை. போராட்டக்காரர்கள் நேற்று மாலை இடிந்தகரை ஆலயத்தில் இருந்து கருப்புகொடியுடன் சவப்பெட்டி ஊர்வலம் நடத்தினர்.
இதுகுறித்து விஜயாபதி கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமரன் கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் கூடங்குளம் போலீசார் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், தலைவர் புஷ்பராயன், பாதிரியார் மில்டன், மற்றும் எஸ்.எல்.சிங் சகாய இனிதா, கபிலன், பார்த்தீபன், இளங்கோ உள்பட 2 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை அவர்கள் மீது 274 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டம் தொடங்கி இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. இதையட்டி போராட்டக்காரர்கள் தங்கள் ஆதரவு அரசியல் தலைவர்களை பேச அழைத்துள்ளனர். கூடங்குளத்தைச் சுற்றி 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு இருப்பதால் இந்த எல்லைக்குள் போராட்டத்தை ஆதரித்து நுழையும் அரசியல் தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதுநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடங்குளத்தில் வைகோ: கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக் குழுவினர் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி, இடிந்தகரையில் இன்று மாநாடு நடந்தது. போராட்டக்குழு தலைவர் சுப.உதயகுமார் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டார்.
மாநாட்டில் பேசிய வைகோ, கூடங்குளத்தில் அணு உலை துவங்கினால் தென் தமிழகமே அழிந்து விடும். அங்கு புல்பூண்டு கூட முளைக்காது. இடிந்தகரை மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராம மக்கள் ஒரு வருடமாகப் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளவில்லை’ என்றார்.
சுதந்திர தினம் கொண்டாட தடை: ஒரு புறம் கூடங்குளம் மக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக சுதந்திர தின போராட்டத்தை எதிர்க்கின்றனர். மறுபுறம் முஸ்லிம்கள் தங்கள் விகிதாசாரத்துக்கும் அதிகமாக இழப்புகளை சந்தித்து பெற்ற இந்திய சுதந்திரத்தை கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரளா, கர்நாடக, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்திய சுதந்திர திறந்ததை கொண்டாடும் வகையில் தேசிய கொடி ஏந்திய தொண்டர்களின் அணி வகுப்பை ஒவ்வொரு வருடமும் நடத்தி வந்தது. அந்த அணி வகுப்பு முடிவில் அந்த பகுதியில் இருந்து கலந்து கொண்ட சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவித்தும் வந்தது. இந்த கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படி சுதந்திரத்தை கொண்டாடும் உரிமை கூட முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

இந்த பாசிச பயங்கரவாத அரசு இயந்திரங்கள் சுதந்திரத்தை கொண்டாடவும் அல்லது
எதிர்க்கவும் இரண்டுக்குமே தடை விதித்து ஒரு விசித்திரத்தை நிகழ்த்தி
உள்ளன.
3 comments:
கொடுமை... வருத்தப்பட வேண்டிய தகவல்...
thakavalukku nantri!
இந்த பதிவை-
வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!
வலைச்சரதுக்குவருகை தாருங்கள்!
http://blogintamil.blogspot.sg/
Post a Comment