சென்னை: நேற்று மாலையில் சென்னையில்
‘டெசோ’ மாநாடு நடைபெற்று முடிந்தது. இதில் லோக் ஜனசக்தி தலைவரும் எம்.பி.யுமான ராம்விலாஸ்
பஸ்வான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்தியாவின் வட மாநிலங்களில் இருந்தும்,
அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, சுவீடன், மொராக்கோ, சிங்கப்பூர்,
மலேசியா, நைஜீரியா மற்றும் இலங்கை நாடுகளில் இருந்தும் 30க்கும் மேற்பட்ட தமிழார்வலர்கள் வந்திருந்தனர்.
டெசோ' மாநாட்டில் தொல். திருமாவளவன்: ’’தனி ஈழத்தை
வென்றெடுப்பதற்கு முன்பாக 3 சவால்களை நாம் எதிர்கொள்ளவேண்டி உள்ளது.
ஈழத்தில் தமிழர்கள் வசித்து வந்த பகுதிகளில் சிங்களர்களையும், ராணுவ
முகாம்களையும் குடிபெயர வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்படுவது தடுக்கப்பட
வேண்டும்.
2-வது சவால் தமிழர்கள் மீது ராணுவத்தினர் செய்து வரும் கொடுமைகளை நீக்கி, அவர்களுக்கு மறுவாழ்வு அமைத்துத் தரவேண்டும். 3-வது தமிழர்கள் மீது திணிக்கப்படும் கலாசார சீரழிவுகளில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும். இந்த 3 சவால்களை வென்றெடுக்க வேண்டும்.
2-வது சவால் தமிழர்கள் மீது ராணுவத்தினர் செய்து வரும் கொடுமைகளை நீக்கி, அவர்களுக்கு மறுவாழ்வு அமைத்துத் தரவேண்டும். 3-வது தமிழர்கள் மீது திணிக்கப்படும் கலாசார சீரழிவுகளில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும். இந்த 3 சவால்களை வென்றெடுக்க வேண்டும்.
`டெசோ' மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: ’’ராம்விலாஸ் பஸ்வான்
போன்ற சக்தி வாய்ந்த தலைவர்களை கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை
நிறைவேற்ற நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இதற்கு முன்பாக ஈழப்
பிரச்சினையில் உலகத்தின் பார்வையை திருப்பவேண்டும். ஈழப் பிரச்சினையில்
இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் தான் தனி ஈழம்
பிறக்கும்’’என்று குறிப்பிட்டார்.
`டெசோ' மாநாட்டில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்: ’’2009-ல்
இலங்கையில் நடந்த போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இப்போது நாம் 3-ம்
கட்ட போராட்டத்தில் களத்தையும், யுக்தியையும் மாற்றவேண்டிய கட்டாயத்தில்
உள்ளோம். அதன் தொடக்கம்தான் இந்த
மாநாடு. இலங்கையில் நடப்பது தமிழ் ஈழப் பிரச்சினை இல்லை. அது மனித உரிமை
சிக்கலாகும். இதனை உலக கவனத்துக்கு கொண்டு சென்றால்தான், நாம் அடுத்த
கட்டத்துக்கு செல்லமுடியும்.
சிந்திக்கவும்: கடந்த தேர்தலில் தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகத்தால் கருணாநிதி படுதோல்வியை சந்தித்தார். `டெசோ'
மாநாடு என்பது கருணாநிதியின் அரசியல் சரிவை மீண்டும் தூக்கி நிலை
நிறுத்தவே உதவும். இருந்தாலும் தமிழர்களுக்கு வேறு வழியில்லை இது போல்
எங்கு யார் எதை நடத்தினாலும் அதை வைதாவாது ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நலம்
உண்டாகுமா என்று சிந்திக்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறோம்.
டெசோ' மாநாடு
வெற்றி என்பது கருணாநிதியின் அரசியல் வெற்றி என்றே சொல்லலாம். அதனால்
ஈழத்து தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை உண்டாகுமா என்பதை பொறுத்திருந்து
பார்ப்போம்.
No comments:
Post a Comment