Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

Sep 11, 2018

வீரத்தமிழச்சி சோபியா!

செப் 11/2018: தூத்துக்குடி மாவட்டம் கந்தன் காலனியை சேர்ந்த சாமி,  மனோகரி தம்பதியினரின் மகள் தான் சோபியா. தந்தை சாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகவும், தாயார் மனோகரி தலைமை செவிலியராக இருந்தும் ஓய்வு பெற்றவர்கள். சோபியா பள்ளிப் படிப்பை தூத்துக்குடியில் முடித்து, ஜெர்மனியில் M.Sc இயற்பியல், கனடாவில் M.Sc கணிதம்  முடித்து, தற்போது கனடாவின் மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை படித்து வருகிறார்.
இவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். புனேவில் சமூக செயற்பாட்டாளர்கள், மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி, சமூக போராளி வளர்மதி போன்றோர் பாசிச பாரதிய ஜனதா கட்சியின் கைக்கூலி தமிழக அரசால் கைது  செய்யப்பட்டது குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் "பாசிச பாஜக ஆட்சி ஒழிக" என்று தூத்துக்குடி விமான நிலையத்தில் இவர் எழுப்பிய ஒத்தை குரல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்ததது.  இவரின் பாசிச பாரதிய ஜனதா ஒழிக என்ற குரல் மொத்த இந்திய மக்களும் இந்த அராஜக அக்கிரமகாரா மோடியின் ஹிந்துத்துவா சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக சொல்ல நினைத்ததே.  இந்த வீரத்தமிழச்சிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 
நட்புடன்: யாழினி   

Mar 21, 2017

மரம்வளர்ப்பு மற்று சீமைக்கருவேல மரம் ஒழிப்பு!


மரம் வளர்ப்போம்! மழைவளம் காப்போம்!

நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காட்டு வளம் இருந்தால் மட்டுமே சராசரி மழையளவுக்கு உத்தரவாதம் உண்டு. தற்போது மழையளவு குறைந்திருப்பதற்குக் காடுகள் குறைந்ததும் ஒரு காரணம். நாம் வாழும் பூமி வெப்பம் அடைவதை தடுக்க மரம் வளருங்கள் என்று விஞ்சானிகள் அலறுகிறார்கள்.

மரங்கள் இன்றி நாம் உயிர்வாழ இயலாது. மனிதன் சுவாசித்து வெளியேற்றும் நச்சு காற்று, வாகனங்கள், தொழில்சாலைகள் வெளியேற்றும் நச்சு காற்று  இவைகளை திரும்ப நாம் சுவாசிக்கும் ஆக்சிஸனாக மாற்றும் பெரும் பங்கை மரங்கலே செய்துவருகின்றன.
மரங்கள் அதிகம் இல்லாததால் சூரிய வெப்பம் பூமியை நேரடியாக தாக்கி பூமியில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்துகிறது. மேலும் மழை வளத்தையும் பாதிக்கிறது.

சீமை கருவேல மரம் (உடைமரம்) ஒழிப்பு !

தமிழகத்தின் இன்றைய வறட்சியான நிலைக்கு சீமை கருவேல மரங்கள் ஒரு முக்கிய காரணம். இந்த கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியது. ஒரு கருவேலமரம் தனது வேர்களை பூமியின் நாற்பது அடி  ஆழத்தில், நாற்பது அடிஅகலத்தில் வரையில் அனுப்பி மண்ணின் நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது. 

ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றால் தன்னை சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும்  உறிஞ்சி விடுகிறது. மேலும் இம்மரம் மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும், எண்ணெய் பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுகிறது. 

இந்த சீமைக் கருவேல மரங்கள், பிராணவாயுவை ( ஆக்சிசன்) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறிவிடுகிறது. இப்படி மனிதர்களுக்கு, இயற்க்கைக்கு, நீர் ஆதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் சீமை கருவேல மரத்தைநதூரில் இருந்து முற்றிலும் ஒழிக்க நாம் ஒவ்வொருவரும் சபதம் ஏற்போம். 

*********************************************************************************
இதுபோல் மரம்வளர்ப்பு மற்று சீமைக்கருவேல மரம் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டறிக்கையை பிரிண்ட் செய்து உங்களது ஊர்களில் விநியோகம் செய்யுங்கள். மக்களிடம் விழிப்புணர்வு வரட்டும்.  

Feb 8, 2017

தமிழக அரசியலை களவாட துடிக்கும் BJP!

பிப்/8/2017 இன்றய  பரபரப்பு தமிழக அரசியலில் “பன்னீர் ராஜினாமாவை திரும்ப பெறுவதாக சொல்லி விட்டாரே, அதை கவர்னர் ஏற்றுக்கொள்வாரா ?” “சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க பன்னீருக்கு நேரம் கொடுக்கப்படுமா? அல்லது சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பாரா?” “ஜனாதிபதி ஆட்சி வருமா? தேர்தல் வருமா?” இதுதான் முக்கிய விவாத பொருள். 

ஏதோ பன்னீருக்கு திடீர் வீரம் வந்துவிட்டதை போலவும், இதுநாள்வரை தூங்கி கொண்டிருந்த மனசாட்சி திடீர் என்று விழித்து கொண்டது போலவும் அதனால்தான் அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார் என்று நீங்கள் நம்பினால் உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள் என்று அர்த்தம். இது ஒரு திரிகோண வடிவ அரசியல், இதில் பன்னீர் செல்வம் + பிஜேபி ஹிந்துத்துவா மதவாத கும்பல் + கட்டுமரம் கருணாநிதி கும்பல் என்று இது முக்கோணத்தில் முடிகிறது. 

பன்னீர் செல்வத்தை ஆட்டி வைப்பதின் பின்னணியில் பிஜேபி ஹிந்துத்துவா செயல்படுகிறது என்பது தெளிவான உண்மை. தமிழக முதல்வரின் ராஜினாமா குறித்து பிஜேபி H . ராஜா குறிப்பிடுகையில் நிர்பந்தம் செய்து ராஜினாமா செய்யவைத்தது சட்டப்படி செல்லாது என்று குறிப்பிட்டுள்ளார். பிஜேபியின் மாநில தலைவர் தமிழ் இசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் ஒரு உப்பு சப்பு இல்லாத பத்திரிக்கை பேட்டி அளித்துள்ளார். இதில் சசிகலா அல்லது பன்னீர் செல்வம் யார்க்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அந்த குதிரையில் ஏறிக்கொள்ள வசதியா அந்த பேட்டி அமைந்துள்ளது. பிஜேபி சுப்பிரமணிய சுவாமி பன்னீர் செல்வம் திறமையற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு விடயத்தில் அரசியல் நடத்தியது போல் இரட்டை நாக்கில் பேசி கபட நாடகம் நடத்துகிறது மத்தியில் ஆளும் மோடி அரசு. கோமாளி மோடியின் ஆட்சியில் மக்கள்படும் துயரங்களை மூடி மறைக்க முயல்கிறார்கள். 

அதேநேரம் சசிகலாவின் வழக்குகளை தூசிதட்டி அவருக்கு ஒரு நெருக்கடியை கொடுத்து பணியவைக்க முயலுகிறது. மொத்தத்தில் அதிமுக கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்ய துடிக்கிறது. அரசியல் நேர்மையற்ற பிஜேபி வடமாநிலங்களில் செய்த அதே நரித்தனத்தை தமிழகத்தில் அரங்கேற்றபார்க்கிறது. மொத்தத்தில் தமிழக அரசியலை கபளீகரம் செய்ய RSS சங்கபரிவார் துடிக்கிறது.    

May 11, 2016

2016 தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்!

ஒட்டு போடுங்கள்! அம்மா ஒட்டு போடுங்கள்! என்று பிச்சை கேட்டு அரசியல் பொறுக்கிகள் உங்கள் இல்லங்களை தேடி வருவார்கள்.

அழித்தொழிக்கப்பட  வேண்டிய  தீய சக்திகள் 

1). கருணாநிதி: தீமை மற்றும் ஊழலின் மொத்த உருவமும் அதன் கழிசடை கூட்டணியான காங்கிரசும் உங்களை தேடி வருவார்கள். இந்த கூட்டணியை இந்த தேர்தலோடு வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி ஏறிய வேண்டியது ஒவ்வொரு தமிழனின் தலையான கடமை.

2). ஜெயலிலதா: ஆணவம் தலைக்கு ஏறிய ஸ்டிக்கர் ராணி, அம்மா என்று தன்னை அழைக்க சொல்லி தாய்மையையே இழிவுபடுத்தும் பகல் கொள்ளைக்காரி.

3). பிஜேபி (BJP ) & இந்து மக்கள் கட்சி: மதகலவரங்கள் நடத்தி, அப்பாவி மக்களின் ரத்தங்களை ஓட்டி, அதன் மூலம் மக்களை பிரித்து அரசியல் நடத்தும் கட்சி. அதிபயங்கரவாத அமைப்பான RSS இயக்கத்தின் அரசியல் அணி.

இந்த மூன்று கட்சிகளையும் தமிழக அரசியலில் இருந்து துடைத்தெறிவது தமிழக மக்களின் இப்போதைய தலையாய கடமையாகும்.

மக்கள் நல கூட்டணி - (சந்தர்ப்பவாத கூட்டணி). 

மதிமுக: வைகோ பல்வேறு மக்கள் பிரச்சினைகளை பேசி வந்தாலும் பச்சோந்தி போல் அணி மாறுவது, கொள்கையே இல்லாமல் கண்டவருடன் கூட்டணி சேர்வது இதன் மூலம் அரசியல் அநாதை ஆனவர்.

வலது & இடது காம்யூனிஸ்ட் கட்சிகள்:  கொள்கை அற்ற கோமாளிகள். இவர்களுக்கும் இவர்கள் சார்ந்திருக்கும் காம்யூனிச தத்துவத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லாதவர்கள். மொத்தத்தில் போலி காம்யூனிஸ்ட்கள்.

தேமுதிக: எந்தவித திமையும் இல்லாமல், படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதியை கொன்று இந்தியாவை காப்பாற்றி, திரைப்படங்களில் வசனங்கள் மூலம்  அரசியல் பேசி, இதையே மூலதனமாக கொண்டு அரசியலுக்கு வந்த கோமாளி. தனிப்பட்ட முறையில் அவர் நல்லவராக இருக்கலாம் அது ஒன்றே ஒரு நாட்டை ஆள தேவையான தகுதி ஆகாது. 

தமிழ்மாநில காங்கிரஸ்: காமராஜருக்கு பின் காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் ஒரு லட்டர் பேடு இயக்கம் போல்தான் இருந்து வந்தது. ஈழப் படுகொலைக்கு பின்னர் தமிழ் மக்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட ,  புதைக்கப்பட்ட ஒரு கட்சி.

விடுதலை சிறுத்தைகள்: தாழ்த்தப்பட்ட, ஒருக்கப்பட்ட மக்களுக்கு போராடும் ஒரு அமைப்பு, ஈழவிடுதலை முதல் கூடங்குளம் அணுவுலை பிரச்சனை வரை எல்லா மக்கள் பிரச்சனைகளிலும் தங்களை முன்னிறுத்தி கொள்ளும் ஒரு தலைவர்தான் தோல். திருமாவளவன்.  மக்கள் நல கூட்டணியில் உள்ள ஒரே உருப்படியான கட்சி இதுதான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். 

பாட்டாளி மக்கள் கட்சி. கலையில் ஒரு கூட்டணி மலையில் கூட்டணி என்று கட்சி தாவி பொலிவிழந்து போன கட்சி. ஈழவிடுதலை, முதல் கூடங்குளம் அணுவுலை பிரச்சனைகள் வரை குரல் கொடுக்கும் கட்சி என்பது மறுப்பதற்கில்லை.

2016 தேர்தலில் ஓட்டளித்து ஆதரிக்கவேண்டிய 
நல்ல சக்திகள் 

1).  நாம்தமிழர் கட்சி: ஊழல் அற்ற ஆட்சி, இயற்க்கை வேளாண்மை, நீர் மேலாண்மை, கல்வி, மருத்துவம், குடிநீர் அனைவருக்கும் இலவசம், வேளாண்மை அரசு தொழில், இப்படி சிறந்த செயல் திட்டங்களுடன் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் புதிய கட்சி.  

2). சோசியல் டிமாக்ரடிவ் ஒப் இந்தியா (SDPI): ஈழத்தமிழர் போராட்டம், கூடங்குளம் அணு உலை போராட்டம், தமிழக மீனவர் போராட்டம், சென்னை, கடலூர் மழை வெள்ளம், பூரண மதுவிலக்கு என்று தொடர்ந்து பல்வேறு மக்கள் பிரச்சனைகளை பேசி மக்களுக்கு ஆதரவாக போராடி களம் நிற்கும் கட்சி. இவர்கள் 30 தொகுதிகளில் தனித்து போட்டி இடுகிறார்கள்.

தமிழக வாக்காள பெருமக்களே! வருகிற  2016 தேர்தலில் வாக்களிக்க வேண்டிய நல்ல சக்திகள் என்கிற தேர்வில் முதல் இடத்தில் நாம்தமிழர் மற்றும் SDPI கட்சிகள் வருகின்றது. இதில் அந்த அந்த தொகுதியின் வெற்றி வாய்ப்பை, வேட்பாளர்களை கருத்தில் கொண்டு இவர்களுக்கு வாக்கு அளித்து இந்த இரண்டு கட்சியையும் பலப்படுத்துங்கள்

ஜெயிக்கிற கட்சிக்குதான் ஒட்டு 
இந்த அடிமுட்டாள்தனமான சிந்தனையை முதலில் தூக்கி குப்பையில் போடுங்கள். எந்த புது கட்சியும் எடுத்தவுடன் ஜெயித்துவிட முடியாது. நடுநிலையான மக்கள் தொடர்ந்து இந்த புது சக்திகளுக்கு வாக்களித்து அவர்களை அரசியலில் கால்பதித்து நிற்க உதவிடவேண்டும். இந்த கட்சிகளின் வாக்கு விகிதத்தை அதிகப்படுத்துவத்தின் மூலம் இவர்கள் தமிழகத்தில் ஊழல், லஞ்சம் அற்ற ஒரு புதிய அரசியலை படைக்க உதவ முடியும். 

சிந்திக்கவும்: வருகிற காலங்களில் நாம்தமிழர் கட்சி, SDPI கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி என்கிற 4 கட்சிகளும் ஒரே அணியாக கூட்டு சேர்ந்தால் தமிழகத்தில் புதிய அரசியல் வரலாறு படைக்க முடியும் என்பதே எனது மேலான சிந்தனையும், கருத்துமாகும்

நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல். 

Mar 8, 2016

கொள்ளைக்காரியின் ஆட்சியில் தமிழகம்!

‘எனது மரணம் இலங்கைத் தமிழர்களுக்கான விடுதலையாக இருக்கட்டும்’, மதுரை அருகே உச்சபட்டியில் உள்ள அகதிகள் முகாமில் தற்கொலை செய்து கொண்ட  ரவீந்திரன் என்பவரின் கடைசி குரல்.

உயர் மின்அழுத்த கம்பிகள் கொண்ட இரும்பு கோபுரத்தில் ஏறி நின்று பலநூறு உறவுகள் பார்த்து நிற்க மின் கம்பியை தொட்டு எரிந்தபடியே ஈழத்து மனிதன் கீழே வந்து வீழ்ந்தது மாண்டுபோன அந்த கொடூர காணொளியை பார்த்து மனது ரணமாகியது. தமிழர் நாட்டில் சக தமிழனுக்கு இப்படி ஒரு அவலமா? 

இலங்கையில் இருந்து குழந்தைகளுடன் உயிர் பிழைக்க தப்பி வந்து தமிழகத்தில் உள்ள முகாம்களில் ஆண்டுக்கணக்கில் தங்கியிருக்கும் அகதிகளின் அவலம் சொல்லி மாளாது.
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு 1983-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை மொத்தம் மூன்று இலட்சத்து 14 ஆயிரத்து 259 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இதில் இரண்டு இலட்சத்து 12 ஆயிரம் அகதிகள் அரசு உதவி மற்றும் சர்வதேச உதவிகள் பெற்று சுயமாக இலங்கை திரும்பினர். தற்போது தமிழக முகாம்களில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 259 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வசிக்கின்றனர். இந்த முகாம்களில் தங்கி இருக்கும் ஆண்களுக்கு மாதம் ரூ.1,000, பெண்களுக்கு ரூ.750, குழந்தைகளுக்கு ரூ.400 அரசு வழங்குகிறது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உச்சபட்டியில் உள்ள அகதிகள் முகாமில், 450 குடும்பங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த முகாமைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் நேற்று முன்தினம் அங்குள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி, கீழே குதித்து தற்கொலை செய்தார். அப்போது, ‘என்னோட மரணம், இலங்கைத் தமிழர்களுக்கான விடுதலை” எனச் சொல்லிவிட்டு அவர் கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். ‘‘ஒவ்வொரு மாதமும் வருவாய்த் துறையினர் முகாமில் 3 முறை ஆய்வு செய்து, உதவித் தொகையை வழங்குவர். ஒருமுறை ஆய்வுக்கு வரும்போது முகாமில் அகதிகள் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு உதவித் தொகை கிடையாது.

தற்கொலை செய்த ரவீந்திரனுக்கு மனைவி, நான்கு மகள்கள், இரு மகன்கள் உள்ளனர். இரு மகள்களை திருமணம் செய்து கொடுத்துவிட்டார். கடைசி மகன் பிரதீபனுக்கு இரத்தக் கசிவு நோய் இருந்துள்ளது. அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாரிகள் ஆய்வு நடத்த முகாமுக்கு வந்த போது மகனை அழைத்து வர முடியாத காரணத்தை ரவீந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் வருவாய் ஆய்வாளர் ஒருவர் தனது ஆய்வின்போது ரவீந்திரனின் மகன் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.     
 
இதனால் அதிருப்தி அடைந்த ரவீந்திரன், சிகிச்சையில் இருக்கும் மகனை எப்படி அழைத்து வர முடியும் என அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால், அதை வருவாய் ஆய்வாளர் கண்டுகொள்ளவில்லை. இதனால் மனமுடைந்த ரவீந்திரன் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கு இது மட்டுமே ஒரு காரணம் மட்டுமல்ல. அரசு வழங்கும் உதவித் தொகை, மின் கட்டணத்துக்கும், மற்ற செலவுகளுக்குமே சரியாக உள்ளது. உள்ளூரில் யாரும் எங்களுக்கு வேலை கொடுப்பதில்லை. அதனால், பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்கவும், திடீர் செலவினங்களுக்கும் வெளியூர் வேலைக் குத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால், சில நேரங்களில் ஆய்வு நேரத்தில் வர முடியாமல் போவதால் எங்களுக்கு உதவித்தொகை வழங்க மறுக்கின்றனர்.

மேற்கூரை, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த மண் வீடுகளில்தான் வசிக்கிறோம். கழிப்பிட வசதி இல்லை. சமீபத்தில் 16 குடும்பத்தினருக்கு மட்டும் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளனர். அந்த வீடு மொத்தமாகவே 15-க்கு 10 இடத்தில்தான் உள்ளது. ஜன்னல் கிடையாது. படுக்கை அறை, குளியல் அறை, கழிப்பிடம் எதுவும் கிடையாது. அந்த வீட்டில் திருமணம் முடித்தவர்கள், பெரியவர்கள், குழந்தைகள் அனைவரும் எப்படி ஒன்றாக வசிக்க முடியும். முன்பு ஆண்டுக்கு ஒருமுறை சமையல் பாத்திரம், இரண்டு தட்டுகள், டம்ளர், பாய் கொடுத்தனர். கடந்த 5 ஆண்டுகளாக அதையும் நிறுத்திவிட்டனர். எங்களுக்கு குடி யுரிமை வழங்காவிட்டாலும் பரவாயில்லை. எங்களுக்கான அடிப்படை உரிமைகளையாவது வழங்கி சுதந்திரமாக வாழ அரசு உதவ வேண்டும்’’
 என்றனர்.

அகதிகள் சிலர் கூறியதாவது: இந்த தலைமுறையில் இங்குள்ள எல்லோரும் பட்டம் படித்துள்ளனர். ஆனால், கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், என்ன படித்தாலும் அவர்களும் எங்களுடன் பெயிண்டிங் வேலைக்குத்தான் வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவில் குடியுரிமையுடன் வேலை என்ற ஆசையில், முகாம்களில் இருந்த ஏராளமானோர் தப்பிச் சென்றனர். அவர்களில் பலர் பொலிஸார், கடற்படையினரிடம் சிக்கியதால் அவர்களின் முகாம் பதிவை தமிழக அதிகாரிகள் இரத்து செய்து விட்டனர். மனைவி, பெற்றோர், குழந்தைகள், இங்குள்ள முகாம்களில் வசித்ததால் அவர்களால் இலங்கைக்கும் செல்ல முடியவில்லை. தமிழக முகாம்களுக்கும் அகதிகளாக திரும்பி வர முடியவில்லை. அதனால், பலர் சுற்றுலா விசா, வேலைக்கான விசா வாங்கி முகாமில் வசித்து வருகின்றனர்
 என்றனர்.

ரவீந்திரனின் மகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கின்றாரா என்பதைச் சரிபார்க்க வேண்டிய அதிகாரி, ‘எங்களிடம் சொல்லாமல் எப்படி வெளியே போகலாம்?’ என அதை ஒரு கௌரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு வசை பாடியது மனிதாபிமானம் அற்ற செயல். ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் அடைக்கலம் பெற்ற ஈழத்தமிழர்களை அந்த நாடுகள் உரிய மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்துகின்ற நிலையில், தாய்த்தமிழகத்தில் அவர்களைத் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் கருதி அதிகாரிகள் அச்சுறுத்தி மிரட்டுகின்ற கொடுமைகள் எல்லை மீறிச் சென்ற நிலையில்தான், ரவீந்திரன் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்.

தங்கள் உடைமைகளைப் பறிகொடுத்து, உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தஞ்சம் கேட்டுத் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழர்களைத் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் கருதுகின்ற தமிழகத்தின் பாசிச தற்குறி அதிகாரிகளின் மனப்போக்கு மாற வேண்டும். இதுகுறித்துத் பாசிச பார்பன தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா? இந்த கேடு கெட்ட ஜெயலலிதா ஆட்சியில் தமிழக அரசு அதிகாரி ஒருவரின் கெடுபிடியால் ஈழத்தமிழர் ஒருவரின் உயிர் பறிபோனது என்ற செய்தி, உலக அளவில் தமிழகத்திற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கின்றது. ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற நிலை மாறி, வந்தாரைச் சாக வைக்கும் தமிழகம்’ என்ற அவப்பெயர் ஏற்பட்டு இருக்கின்றது. இதனால்தான் நாம் சொல்கிறோம் தமிழர்களை தமிழர்தான் ஆளவேண்டும் என்று.  

ரவீந்திரனின் குடும்பத்திற்கு சிந்திக்கவும் இணையம் சார்பாக எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

Mar 3, 2016

எது தேசம்? எது தேசத்துரோகம்?

ன்று இந்திய விடுதலைப் போராட்டத்தில் வெள்ளைக்காரனுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த காவிக்கும்பல்தான் இன்று வெள்ளைக்காரனின் காலனியச் சட்டங்களைக் கொண்டு ஜே.என்.யூ மாணவர்கள் மீதும் ஜனநாயகத்திற்காகப் போராடுபவர்கள் மீதும் தேசத் துரோக வழக்குகளை வீசுகிறது.
இவர்களின் போலி தேசபக்தியை திரைகிழிக்கும் விதமாகவும் உயர்கல்வித்துறையை ஆக்கிரமிக்கத் துடிக்கும் பார்ப்பன பாசிச கும்பலை முறியடிக்கும் விதமாகவும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் மார்ச் 3-ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
அதில் ஜே.என்.யூவில் நடந்தது என்ன என்பதை மாணவர் பிரதிநிதிகள் விளக்கவிருக்கிறார்கள். இந்து மதவெறி பாசிசத்தை அம்பலப்படுத்தி தலைவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். காவி இருளை கிழிக்க ம.க.இ.க-வின் புரட்சிகர பாடகர் கோவன் பாடுகிறார்.

ஆர்ப்பாட்டம் : 03-03-2016 காலை 10 மணி வள்ளுவர் கோட்டம்.

தோழர் மருதையன்
மாநிலப் பொதுச்செயலாளர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
தோழர் ராஜூமாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
திரு சுப. வீரபாண்டியன்
தலைவர்
திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை
பேராசிரியர் சிவக்குமார்
தோழர் கணேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பு.மா.இ.மு
தகவல்:  தோழர் ராஜா (சென்னைக் கிளைச் செயலர்)
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.

Dec 2, 2015

நிஜ வாழ்கையில் ஹீரோக்களா?

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.   

வெள்ளத்தின் காரணமாக பல மக்கள் இன்னும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். பல்வேறு சமூக அமைப்புகள், பல்வேறு கட்சிகள், இசுலாமிய அமைப்புகள், சங்கங்கள் இரவு பகலாக களப்பணி செய்து வருகிறார்கள். பள்ளி கூடங்கள், மசூதிகள், வெள்ள பாதிப்பு இல்லாத பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகள் என்று மக்கள் தங்க வைக்கப்படுவதும், ஜாதி, மத வேறுபாடு இன்றி அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி வருகின்றனர். 

உண்மையான ஹீரோக்கள் யார்? சினிமாவில் மட்டுமே மக்களை பெரும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவது போல் காட்டி மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழும் சினிமா ஹீரோக்களை மக்கள் தூக்கி ஏறிய வேண்டும். நிஜவாழ்வில் அவர்களின் பங்கு எங்கே? 

ரஜினிகாந்த் படையப்பா படத்தில் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு என்கிற பாட்டில் "என் ஒருதுளி வியார்வைக்கும் ஒரு பவுன் தங்க காசு தந்தது தமிழ் மக்கள் அல்லவா?  என் உடல், பொருள், ஆவியை தமிழுக்கும் தமிழர்களுக்கும் தருவது முறையால்லவா என்று பாடுவார். அவர் ஆவியை (உயிரை ) எல்லாம் விட வேண்டாம். அட்லீஸ்ட் தன்னுடைய பொருளாதாரத்தில் இருந்து ஒரு பகுதியை செலவழிக்கலாமே?

நடிகர் சங்கம் தெளிவாக அறிவித்து விட்டது இந்த பேரிடரை அரசு பார்த்து கொள்ளும் எங்களுக்கு இதில் இந்த பங்கும் இல்லை என்று. ரஜினி, கமல், அர்ஜூன், விஜய், அஜித், சூர்யா, கார்த்திக், சிம்பு, பிரபு, விக்ரம், போன்ற நடிகர்கள் இந்த வெள்ள பேரிடரில் ஒரு பங்களிப்பையும் இதுவரை செய்யவில்லை.

இவர்களது படங்கள் வெளியாகும் பொழுது, இவர்களுக்கு ஆளுயர கட்டவுட் வைத்து பால் அபிஷேகம் செய்யும் இவர்களது ரசிகர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்,  இது போன்ற கேடுகெட்ட கூத்தாடிகளுக்கு சேவகம் செய்வதை விட்டு விலக வேண்டும். ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் கலைத்து விட்டு உண்மையாக மக்கள் தொண்டு செய்யும் இயக்கங்களில் தங்களை இணைத்து கொள்ள வேண்டும். அதுவே தமிழ் நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது.

குறிப்பு: மோடி மாதிரி ரொம்ப தாமதமா தான் வாழும் சென்னையில் நடக்கும் துயருக்கு தமிழக அரசுக்கு 10 லட்சம் பிட்ச்சை போட்டிருக்கார்  கருணை பிரபு. 

Nov 6, 2015

வேசம் கலைந்தது! நிஜமுகம் தெரிந்தது !

ஷாருக்கான் தனது பிறந்த நாள் அன்று ‘நான் ஒரு தேசப்பற்றுள்ள இந்தியன். இங்கே நடக்கும் பிரச்சினைகள் என்னைக் கவலை கொள்ள வைக்கின்றன. இதற்காகவெல்லாம் நான் இந்தியாவை விட்டுக் கண்டிப்பாகப் போய்விடமாட்டேன். இந்த நாட்டில் வாழும் உரிமை பெற்ற தேசப்பற்றாளன் நான் என்று கட்டாயம் நினைக்கிறேன். மதரீதியான சகிப்புத்தன்மை இந்தியாவில் மிகமிகக் குறைவாக இருப்பது வருத்தப்படவைக்கிறது.. என் விருதுகளைத் திருப்பித்தர நான் தயார். இதற்காகப் போராடுபவர்களை நான் வரவேற்கிறேன்.ஆதரிக்கிறேன்’ என்று பிரகடனப்படுத்தினார். ஷாருக்கானின் இந்த பிரகடனத்தை கேட்டு அதிர்ச்சி உற்ற ஹிந்துத்துவா கும்பல் இவரை உடனே பாக்கிஸ்தான் போகுமாறு சொல்லி அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். 
இந்நிலையில் நடிகர் கமலஹாசன் திடீர் என்று தனது திருவாய் மலர்ந்துள்ளார்.  போரடிக்கும் பொழுது ஏதாவது பேசி ஓசி விளம்பரம் தேடிக்கொள்வதில் சுப்பிரமணிய சுவாமிக்கு நிகராக இவரை சொல்லலாம். தான் தயாரித்து நடித்த விஸ்வரூபம்  வெளியிடுவதில் பிரச்சனை ஏற்பட்டதும் நாட்டை விட்டே போய்விடுகிறேன் என்று புலம்பியவர். இப்பொழுது விருகளை திருப்பிக்கொடுத்த எழுத்தாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் இலவச அறிவுரைகளை அள்ளி வீசியிருக்கிறார் விருதையெல்லாம் திருப்பித்தர இயலாது. இங்கு சகிப்புத்தன்மை இல்லையென்பது இன்று இல்லை பாகிஸ்தான் பிரிந்த போதே தெரிந்திருக்க வேண்டாமா? உங்களுடைய எதிர்ப்பை கட்டுரை எழுதிக் காட்டுங்கள், அத படித்து அனைவரும் திருந்திக்கொள்ளட்டும் மற்றும் வேறு பல வழிகள் உள்ளனவே’ என்று கருத்து தெரிவித்துள்ளார். 
தமிழ் நாட்டிற்கு லிவிங் டுகெதர் (living together) காலச்சாரத்தை கற்றுகொடுத்தவர். நடிகை கவுதமியுடன் திருமணம் ஆகாமல் குடும்பம் நடுத்துபவர். காவேரி நதிநீர் பிரச்சனை முதல் கூடங்குளம் அணு உலை வரை எந்த தமிழர் பிரச்சனைகளிலும் வாய்திறக்காது மவுனம் காத்தவர். இவர் பெற்ற விருதுகளை இவரிடம் யார் திருப்பிகொடுக்க சொன்னது, இவருக்கு மனதிற்குள் ஒரு பயம் தன்னை யாரும் குறை சொல்லி விட கூடாது அல்லது தன்னிடம் யாரும் விருதை ஏன் திருப்பி கொடுக்க வில்லை என்று கேட்டுவிட கூடாது என்று தானாகவே வந்து ஓசி உபதேசம் செய்கிறார். மக்களுக்கு தெரியும் நடிகர்கள் எப்படி நிஜவாழ்வில் நடிப்பார்கள் என்று. 

Nov 1, 2015

உளவுத்துறையா! நடுநிசி நாய்களா?

.க.இ.கவின் மைய கலைக் குழுத் தோழர் கோவன் மக்கள் அதிகாரம் அமைப்பிற்காக “மூடு டாஸ்மாக்கை” என்று பாடிய குற்றத்திற்காக தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்டது மிகவும் கண்டனத்திற்கு ஊறியது. 

மக்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் இது. நடுராத்திரியில் யூனிபார்ம் இல்லாமல் குண்டர்கள் போல் வந்து வீட்டு கதவை தட்டி, காரணம் சொல்லாமல் தோழரை தர தர வென்று இழுத்து சொல்லும் அளவுக்கு இந்த காவல்துறை (நடுநிசி நாய்கள்)  குண்டர்கள் நடந்து கொண்டார்கள். தமிழகத்தில் மக்கள் ஆட்சி நடக்கிறதா? இல்லை ராணுவ ஆட்சி நடக்கிறதா? தமிழ்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது இந்தியாவை ஹிந்து பாசிசம் கபளீகரம் செய்கிறது என்றால் தமிழகத்தை பார்பன ஹிந்துத்துவா பாசிசம் கபளீகரம் செய்து வருகிறது. 

அரசை, ஜெயாவை எதிர்த்து கேள்வி கேட்க்க, போராட்டம் நடத்த உரிமை மறுக்கப்படுவது ஜனநாயகத்தின் குரவலையை நெறிக்கும் செயலாகும். மது ஒழிப்பு எதிராக பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், மாணவர்கள் என்று தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை நடுநிசி நாய்களை கொண்டு அராஜகமாக ஒடுக்கும் இந்த சர்வாதிகார ஆட்சியை மக்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்து கெட்ட சபதம் மேற்கொள்ள வேண்டிய தருணம் இது. தோழர் கோவன் மதுவுக்கு எதிராக பாடியதை கொலை குற்றமாக கருதி அவரை தேசியபாதுகாப்பு சட்டம் என்கிற கருப்பு சட்டத்தில் கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். ஒவ்வொரு தமிழனும் தோழர் கோவனின் படலை அங்கீகரிக்கிறோம். முடிந்தால் எங்கள் எல்லோரையும் கைது செய்யுங்கள். தோழர் கோவன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் செய்யவேண்டும் இல்லையேல் வரும் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மக்கள் சாவுமணி அடிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.                                    
 * நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்* 

Oct 28, 2015

இயற்கை விஞ்சானி நம்மாழ்வார்!

கோ. நம்மாழ்வார் (06 ஏப்ரல் 1938 - 30 டிசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு  அருகேயுள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த இவர்அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர்.  

லட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த நம்மாழ்வார், இயற்கை விவசாயம் பற்றிக் களமிறங்கிக் கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டுவிடம்தான். மேற்கத்திய நாடுகளின் விவசாய முறைகள், அங்குள்ள இயற்கை விவசாயம் குறித்த நிறைய புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் இவரே.. பாரம்பரிய விதை ரகங்களை அதிகம் நேசித்தவர் நம்மாழ்வார். அதைப் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம், மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யாவைக் குறிப்பிட்டுப் பேசுவார். ரிச்சார்யா இந்தியாவின் 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாடுகள் கைக்குச் செல்லாமல் பாதுகாத்தவர். அதனாலேயே தனது பணியையும் இழந்தவர். ரிச்சார்யா மற்றும் இயற்கை விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி, அத்தனை பாரம்பரிய நெல் ரகங்களையும் பன்னாட்டு நிறுவனமான ஸின்ஜெண்டாவிடம் 2003-ல் அரசு ஒப்படைத்தபோது, கண்ணீர்விட்டு அழுதார் நம்மாழ்வார்.

நம்மாழ்வாரை அதிகம் ஈர்த்தவை ஜே.சி. குமரப்பாவின் கொள்கைகள். ‘‘டிராக்டர் நல்லாத்தான் உழும்; ஆனால் சாணி போடாதே’’ என்று ஜே.சி. குமரப்பா சொன்னதை நகைச்சுவை.. இதை தனது ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிடுவார் நம்மாழ்வார். நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற உரங்கள் மண்ணுக்குத் தேவை என்று பலரும் வாதிட்டபோது, நமது பாரம்பரிய உழவு முறையான பயிர் சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிக்கிறது என்று முதன் முதலாக நிரூபித்துக்காட்டியவர் நம்மாழ்வார். இயற்கை விவசாயம் தொடர்பாகத் தனது வாழ்நாள் பயணத்தைத் தொடங்கினார். அதற்காகத் தான் பார்த்துவந்த அரசு பணியையும் உதறினார். மேலும், கால்நடையாகக் கிராமந்தோறும் சென்று விவசாயிகளைச் சந்தித்தார். உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை கூடி, அது அளவுக்கு அதிகமான தண்ணீரை உறிஞ்சுகிறது என்பதைச் சிறிய செயல் விளக்கம் மூலம் நிரூபித்துக்காட்டினார்.  

இன்றைக்கு இயற்கை விவசாயம்பற்றி தமிழகத்தில் ஓரளவேனும் விழிப்புணர்வு இருக்கிறது என்றால், அதற்கு நம்மாழ்வாரின் படிப்படியான செயல்பாடுகளே காரணம்.. 30 டிசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் பிச்சினிக்கோட்டை கிராமத்தில் மீத்தேன் வாயு திட்டத்தை  எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். தமிழர் இயற்கை விஞ்சானி  நம்மாழ்வார்க்கு நினைவு குடில் அமைத்து அவரது சேவையை தமிழர்களுக்கு நினைவு படுத்தும் தமிழர் முன்னேற்று படைக்கு நமது வாழ்த்துகள். 

Sep 10, 2015

ஹிந்தி நாட்டை விட்டு விடுபடுவோம்!

செப் 10/2015: உலக இந்தி மாநாட்டை எதிர்த்தும் இந்தித் திணிப்புக்கு எதிராகவும் வரும் செப் 10 ஆம் நாளில் இந்தி அல்லாத தேசிய இனங்கள் மாபெரும் ட்விட்டர் பரப்புரையில் ஈடுபட உள்ளன. அனைவரும் பங்குபெற அழைக்கிறோம்!
இந்த பரப்புரையில் பங்கு கொள்பவர்கள் கட்டாயம் ட்விட்டர் கணக்கு வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் உடனடியாக ஒரு ட்விட்டர் கணக்கும் தொடங்கலாம். பரப்புரையில் கலந்து கொள்பவர்கள் செப் 10 ஆம் தேதி காலை 9 மணி முதல் இந்தித்திணிப்புக்கு எதிராக இந்த குறியீட்டை ‪#‎S‬topHindiImperialism பயன்படுத்தி உங்கள் செய்தியை இந்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். என்ன பதிவிடுவது என்று தெரியவில்லை என்றால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று ஏதேனும் ஒரு பதிவை தேர்வு செய்து ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவிட வேண்டும்.
இணைப்பு: https://docs.google.com/…/11oEhZTdO1B1ptNUGvB2bD62oV58V…/pub
இந்தித் திணிப்புக்கு எதிரான படத்தொகுப்பு : https://drive.google.com/open…
தமிழில் இணைப்புக்கு : https://docs.google.com/…/1LcDlMPkSvulDtS9ElYoaDFseWq…/edit…
இப்பரப்புரை வெற்றி பெறுவது நம் கைகளில் தான் உள்ளது. ட்விட்டர் இணையதளத்தில் முதல் குறியீடாக நம் செய்தி வருமென்றால் நாடு முழுவதும் நம் செய்தி பரவும். இந்திய அரசின் காதுகளுக்கும் எட்டும். இந்தித்திணிப்பை தடுப்போம், தமிழ் மொழி உட்பட அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்குவோம். வாழ்க தமிழ்! தமிழர் ஹிந்தி நாட்டை விட்டு விடுபடுவோம் வாரீர்! தமிழ் தேசியம் அமைப்போம். 

Aug 9, 2015

இவர்களை தெரிந்து கொள்ளுங்கள்!

இந்த லிஸ்டில் சூர்யா தம்பி கார்த்திக், விக்ரம், போன்ற பல முன்னணி நடிகர்களும் உண்டு. குறிப்பு கலாமின் இறுதி ஊர்வலம் அன்றுதான் ரஜனி காந்த் மருமகன் தனூஸ்  தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடினார். நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கலந்து கொள்ளவில்லை என்பது ஹைலைட். 

Aug 6, 2015

மதுவுக்கு எதிரான திமுகவின் பொய் முகம்!

மதுவுக்கு எதிராக தற்போது குரல் கொடுத்து வரும் தி.மு.கவை சேர்ந்தவர்கள் கையில்தான் தமிழகத்தில் பெரும்பாலான மது தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இவர்களிடம் இருந்துதான் டாஸ்மாக்கிற்கு அதிகமாக மது கொள்முதல் செய்யப்படுகிறது.  
பீர் வகைகள்: 
  1. சென்னை புருவரீஸ்-பெங்களூரு தொழிலதிபர்.
  2. மோகன் புருவரீஸ் - மருத்துவக் கல்லூரி உரிமையாளர்.
  3. எம்.பி புருவரீஸ்- எம்.பி புருஷோத்தமன்.
  4. கல்ஸ்- தி.மு.க. தலைமையின்  வாரிசுகள்.
  5. அப்பல்லோ- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.
  6. ஏ.எம். புருவரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு  சொந்தமானது.
மதுவகைகள்:
  1. யுனைடெட் ஸ்பிரிட்ஸ்- பெங்களூரு பிரபல தொழிலதிபர்.
  2. மோகன் புருவரீஸ்- மறைந்த முதல்வருக்கும் நெருக்கமான தொழிலதிபர்.
  3. சிவா டிஸ்டில்லரீஸ்-பொள்ளாச்சி மகாலிங்கம் குடும்பத்துக்கு சொந்தமானது.
  4. எம்.பி டிஸ்டில்லரீஸ்- எம்.பி. புருஷோத்தமன். 
  5. சபில் - பொழுது போக்கு பூங்கா உரிமையாளருக்கு  சொந்தமானது.
  6. மிடாஸ்- அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவருக்கு சொந்தமானது.
  7. எலைட் டிஸ்டில்லரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சருக்கு சொந்தமானது.
  8. எஸ்.என்.ஜே- கருணாநிதிக்கு நெருக்கமான சினிமா தயாரிப்பாளருக்கு 
  9. கல்ஸ் - திமுக வாரிசுகளுக்கு சொந்தமானது.
  10. கோல்டன் வாட்ஸ்-தஞ்சை தி.மு.க. அரசியல் தலைவருக்கு சொந்தமானது.
  11. இம்பீரியல் ஸ்பிரிட்ஸ்- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு லட்சம் பெட்டிகள் முதல் 8 லட்சம் பெட்டிகள் வரை உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை.

Apr 25, 2015

தமிழர்களை திருத்த 3 விசயங்கள்!?

தமிழகம் முழுவதும் 20 தமிழர்கள் படுகொலை பற்றிய பரபரப்பு.  2 நாட்களில் முடிந்து விட்டதற்கு காரணம் என்ன தெரியுமா ?

இங்குள்ள மொத்த தமிழர்களில் பாதி பேர் உண்மையான தமிழனாக இல்லை.

ஆந்திராவில் நடந்ததற்கு நான் ஏன் கோபப்படவேண்டும் ? என்பது போல அவனவன் அடுத்த வேலையை பார்க்க போய்விட்டான்.

அடுத்த வேலை என்ன ?.

டீச்சர் ஓடி போயிட்டா.

கிரிக்கெட்டில் எவன் 100 அடிச்சான்.

இதுதான் இவனுகளுடைய அடுத்த வேலையாக இருக்கு.

இந்த தமிழர்களை திருத்த 3 விசயங்களை கட்டாயம் களையெடுக்க வேண்டும்.

1. சினிமா .
2. பெண்கள் மேல் உள்ள காமப்பார்வை .
3. கிரிக்கெட்.

சினிமாவை ஒரு பொழுது போக்கு விசயமாக பார்க்காமல் அதை தனது வாழ்வின் ஒரு அத்தியாவசமான தேவையை போல முட்டாள் தமிழன் நினைத்ததே நமது இனம் இன்று கூனி குறுகி வேற்று மொழி நாய்கள் இடத்தில் ஆட்சியையும் அதிகாரத்தையும் கொடுத்து விட்டு இன்று வரை அவன் திண்ணை காலை பிடித்து கொண்டு நிற்கிறோம்.

கேரளாவில், ஆந்திராவில், கர்நாடகாவில், டெல்லியில், மகாராஷ்டிராவில் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலாவது ஒரு தமிழன் சினிமாவில் நடித்து அந்த மாநிலத்தின் ஆட்சியை பிடிக்க முடியுமா?.

ஆனால் அது தமிழன் நாட்டில் நடந்தது. நம்மை கேரளத்துக்காரனும், தெலுங்கனும், கன்னடத்துகாரர்கள் மட்டுமே ஆண்டார்கள், ஆண்டு வருகிறார்கள்.

அதுபோலவே வாழ்வில், நேரில் பெண்களையே பார்க்காதது போல முகநூலில் ஒரு பெண் குட் மர்ன்னிங் என்று போட்டவுடன் 1008 லைக் 402 கருத்து .

முகநூலில் போலி முகவரியுடன் போலி புகைப்படத்தில் வரும் பெண்களுக்கே நீங்கள் இந்த வழி வழிகிரீர்களே? உங்களை நம்பி 5 வயசு குழந்தையை கூட நம்பிவிட முடியாது

அடுத்து கிரிக்கெட் :  எதுக்கு மானம் கெட்ட கிரிக்கெட்க்கு இவ்வளவு முக்கியத்துவம் தரனும்?இது வரை ஒரு தமிழனை கூட (பார்ப்பான தவிற) இந்திய அணிக்காக சேர்த்து கொள்ளாத இந்த கிரிக்கெட்டின் மீது உனக்கென்ன இவ்வளவு விருப்பம் ?.


இந்திய கிரிக்கெட் அணி துவங்கபட்ட காலம் முதல் இன்று வரை ஒரு தமிழன் அணியில் சேர்க்கப்படவில்லை, பார்ப்பான்களின் விளையாட்டாக மாறிப்போன இந்த கிரிக்கெட் இன்னும் உன்னை ஆரிய அடிமையாகவே வைத்திருக்கும்.


இனியாவது சிந்திப்போம்!.

Feb 20, 2015

அம்மணமாக திரிபவர்களின் காலடியை நக்கும் ராசா(க்கள்)

ஆதித்தமிழன் அம்மணமாக திரிந்தான் சீமான் அப்படியிருக்க தயாரா - ஹெச் ராஜா.
சீமான் அவர்களின் மீது எமக்கு விமர்சனங்கள் உண்டு ஆனால் ராஜா போன்ற மத வெறிக்கும்பலால் அவர் தாக்கப்படுவதை எம்மால் கடந்து போய்விட முடியாது.

தமிழனின் வரலாறுகளை அறியாத அல்லது அறிந்தும் அறியாதது போல நடிக்கிற ராசாவே உலகுக்கு நாகரீகம் கற்றுத்தந்தவன் தமிழன் அணைகட்டி உழவின் உழைப்பை கொண்டு தானும் பசியாறி அடுத்தவர்களுக்கும் உணவு கொடுத்தவன் தமிழன் தமிழனின் சிறப்பை நாகரீகத்தை பண்பாட்டை கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள முதலில் நீ வரலாறுகளை படி.

உலகிலேயே மூட நம்பிக்கைகள் அற்ற ஒரே இனம் தமிழினம் என்று கால்டுவெல் கூறியது உனக்கு தெரியுமா ?.  


(முதலில் தமிழ் எழுத படிக்க கற்றுக்கொள்ளுங்கள் - அப்புறம் தமிழ் நாடு 2016 தாமரை என்று சொல்லுங்கள்) ஆடை நாகரீகம் வளர்ந்த பிறகும் காசியில் அம்மணமாக திரிபவர்களின் காலடியை நக்கி மோட்சம் போக நினைக்கும் மூடர் குமபலின் மூன்றாம் 
நிலை .ராசாவே.
சீமான் என்ற தமிழனை விமர்சிக்க ஆரியக்காவடிகளுக்கு தகுதியில்லை சீமானை ஓட ஓட விரட்டுவதாக பேசும் ராசாவே இத்தனை வருடங்களாக உன்னை அப்படித்தான் நாங்கள் விரட்டிக்கொண்டிருந்தோம்.
ஏதோ காற்றில் எச்சில் இலைகள் கோபுரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது அதனாலயே அது கோபுரத்தில் நிரந்தரமாக தங்கிவிடும் என்று கனவு காணாதே அடுத்த காற்றில் அந்த இலைகள் கிழியும் கூடவே உன் முகத்திரையும்.

Nov 16, 2014

இன்றும் கற்கால கொத்தடிமை முறை!

நவம்பர் 16/14: நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் கொத்தடிமைகளாக இருந்துவந்த 28 பேர் மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் அளிப்பது என்ற உறுதி மொழி அளிக்கப்பட்டு அழைத்துவரப்பட்ட இவர்களுக்கு, பேசியபடி சம்பளம் வழங்கப்படவில்லை என்பதோடு, இவர்கள் வெளியில் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

சத்தீஸ்கரில் இருந்து  சமீபத்தில் இந்தத் தொழிலாளர்களைப் பார்க்க வந்த அவர்களது உறவினர்கள்  இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதனையடுத்து, நேற்று சில கோழிப்பண்ணைகளில் சோதனையில்  20 பெண்கள். 8  ஆண்கள் மீட்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட பண்ணைகளின் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோழி மற்றும் முட்டை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாமக்கல், ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் பெரும்பாலான பண்ணைகளில்  வடமாநில தொழிலாளர்களே பெருமளவில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
வடமாநிலங்களுக்குச் சென்று தொழிலாளர்களை ஒப்பந்த முறையில் பேசி அழைத்துவரும் இடைத்தரகர்கள், தொழிலாளர்கள் தேவைப்படும் கோழிப் பண்ணைகளில் இவர்களைப் பணியமர்த்துகின்றனர். இதற்கென ஒவ்வொரு தொழிலாளரின் மாதச் சம்பளத்திலிருந்தும் தங்களுக்கென ஒரு தொகையை அவர்கள் பெறுகின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1600 கோழிப்பண்ணைகள் இயங்கிவருகின்றன. இங்கு சுமார் நான்கு கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. சுமார் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.
சிந்திக்கவும்: வெளிமாநில ஏழை தொழிலாளிகளை ஒப்பந்த முறையில் குறைந்த கூலிக்கு அழைத்து வந்து அவர்களை அடிமைகள் போல் நடத்தும் இந்த பண்ணை முதலாளிகளை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். வந்தாரை வாழ வைக்கும் தமிழினத்தின் நற்பேறை கெடுக்கும் இந்த பண்ணை முதலாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. 

Sep 27, 2014

ஜெயாவுக்கு எதிரான தீர்ப்பு சரிதானா?

செப் 28/2014: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி டிகுன்ஹா தீர்ப்பளித்துள்ளார். மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்..
சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், தலா ரூ.10 கோடி அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். மூன்று நீதிமன்றங்களையும், 14 நீதிபதிகளையும், எண்ணற்ற அரசு வழக்கறிஞர்களையும், கொண்டு கர்நாடகா பங்களூரில் உள்ள பார்ப்பன அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. 
சிந்திக்கவும்: இந்த அதிரடி தீர்ப்பு சரிதானா? ஜெயலிதா கொள்ளைக்காரி, பூலாந்தேவி என்றால் முந்தைய தமிழக முதல்வர் கருணாநிதி யார்? சர்கார் கமிஷன் சொன்ன நவீன ஊழல்வாதி இவர் என்பது உலகறிந்த உண்மை. இவர் மஞ்சள் பையோடு கள்ள ரயில் ஏறி சென்னைக்கு வந்தவர். இப்படிப்பட்டவரின் குடும்பம்தான் இன்று ஆசியாவிலேயே 7வது பணக்காரர்கள் லிஸ்டில் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அடுத்து பாசிதம்பரம் முதல் மற்றைய குட்டி கொள்ளையர்கள் ஆகிய நமது அரசியல்வாதிகளையும் மண் கொள்ளை முதல் கல்குவாரி கொள்ளை வரை நடத்தும் நமது கார்பரேட் கொள்ளையர்கள் பற்றி என்ன சொல்வது? இவர்களை தண்டிப்பது யார்>
இவர்கள் விசயத்தில் எல்லாம் அதிரடி தீர்ப்புகள் வெளிவர வில்லையே ஏன்? இதற்க்கு முன் எந்த அரசியல்வாதிக்கும் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது இல்லையே! கடந்த தேர்தலில் தமிழகத்தில் காலூன்ற நினைத்தது பாரதிய ஜனதா கட்சி. ஜெயலலிதா தங்களை கூட்டு சேர்த்து கொள்வார் என்று நம்பி ஏமாந்து போனது. ஜெயலலிதா ஒன்றும் ஹிந்துதுவாவுக்கு எதிரானவர் இல்லை என்றாலும் அவர் இருக்கும் வரை தமிழகத்தில் காலூன்ற முடியாது என்கிற நிலையே பாரதிய ஜனதாவுக்கு இன்று ஏற்ப்பட்டுள்ளது. தமிழக திராவிட கட்சிகளுக்குள் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினர் என்றோ ஊடுருவி விட்டனர். 
திமுக மற்றும் ஏனைய கட்சிகளை காட்டிலும் அதிமுகவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் வெகு அதிகமாக ஊடுருவி உள்ளனர். சுருங்க சொல்லவேண்டும் என்றால் அதிமுகவில் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை என்று மிக அதிக அளவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஊடுருவி உள்ளனர். அதன் நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவை அப்படியே அபகரித்து கொள்வதோ அல்லது அந்த கட்சியை தங்களது தமிழக பினாமி கட்சியாக்குவதோதான் அதன் உண்மையான நோக்கம். பெரியார் பிறந்த மண்ணில் ஹிந்துத்துவா தனது பெயரில் கட்சி வளர்க்க முடியாது என்பதை புரிந்து கொண்ட இவர்கள் எம்.ஜி.ஆர் காலத்திலேயே இந்த சதி திட்டத்தை தொடங்கி விட்டனர்.
இப்பொழுது மேலே மோடி ஆட்சி வந்ததும் அந்த நீண்டகால திட்டத்தை செயல்படுத்த சாதகமான சூழல் வந்துள்ளது. இந்த தருணத்தில் ஜெயலிதாவை ஜெயிலுக்கு அனுப்புவதன் மூலமோ அல்லது அவரை அந்த கட்சியில் இருந்து ஓரம் கட்ட வைப்பதன் மூலமோ ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல்காரர்களை, ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா அபிமானிகளை கொண்டு அதிமுகவை கைப்பற்றுவதன் மூலம் தமிழகத்தில் காலூன்றுவதே அவர்களது உண்மையான நோக்கம். 
நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

Aug 30, 2014

வெற்றிக்கு இருநூறு மட்டுமல்ல!?


அதிமுகவின் வெற்றிக்கு இருநூறு ரூபாய் மட்டும் காரணமல்ல..!
* தனி ஈழம்,
* மூவர் தூக்கு,
* எழுவர் விடுதலை,
* மீத்தேன் எரிவாயு, கெய்ல் எதிர்ப்பு,
* சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு,
* + 200 rpuee. ரூபாய்.

* காவிரி, முல்லைப் பெரியாறு வழக்கு, இப்படி பல காரணங்களும் இருக்கிறது.

கேப்டன் :- போதையில் தள்ளாடியபடி ஒரு கரண்ட் கம்பத்து அடியிலநின்னுகிட்டு.......?
கம்பத்த தட்டி,......!
ஏய்....! கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்....!
ஏய்....! கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்....! தொறடி...."
பக்கதுல இருந்த மற்றொரு குடிகாரன், :- ஏம்பா.... வீட்டுல யாரும் இல்ல போல இருக்கு....."!

கேப்டன் :- இல்ல பிரதர்...." நா போதையில இருந்தாலும்....? ஃபோல்டா தா இருப்பேன்.......!

வீட்டுல இருக்கா......? மாடில லைட் எரியுது பாருங்க....!!!

Jul 20, 2014

கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக மக்கள் மாநாடு!

ஜூலை 20/14: நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் 04.01.14 அன்று அணுவுலை எதிர்ப்பு மாநாடு துவங்கியது.

இந்த எதிர்ப்பு மாநாட்டில் அணுவுலை எதிர்ப்புகுழு தலைவர் உதயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார், அணுவுலை எதிர்ப்பு குழு நிர்வாகி புஷ்பராயன் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்.

இந்த மாநாட்டிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஒப் இந்தியா மாநில தலைவர் A .S இஸ்மாயில், எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் நாஞ்சில் செய்யதலி ,விடியல் வெள்ளி பத்திரிக்கை துணை ஆசிரியர் ரியாஸ், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் நவவி உள்ப்பட  அனைத்து கட்சிகள், இயக்கங்கள் ,சமுக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர் 

May 29, 2014

தாமரையும் கையும் வேறல்ல! SDPI!

மே 30/2014: இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான உறவில் பா.ஜ.க. தேர்தலுக்கு முன்பு ஒரு நிலையும், தேர்தலுக்கு பின்பு ஒரு நிலையும் என்கிற  இரட்டை வேடம் போடுவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த ராஜபக்சேவிற்கு எதிராக தமிழக மக்கள் பொங்கியெழுந்த போது, இலங்கை தமிழர்களின் நலனை காக்க மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தவறிவிட்டது எனவும், பாஜக ஆட்சிக்கு வந்தால் இலங்கைக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டு தமிழீழம் கொண்டு வருவோம் என பாரதிய ஜனதாவின்  தமிழக தலைவர்களும், வைகோ, நெடுமாறன் போன்றோரும் கூறி வந்தனர்.
மேலும் மோடி தமிழகத்திற்கு வந்த போது சிறிய நாடான இலங்கை தமிழக மீனவர்களை தாக்கி அழிப்பதற்கு காங்கிரஸ் அரசே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்நாட்டுடனான அணுகு முறையில் மாற்றத்தை கொண்டு வந்து தமிழக மீனவர்களின் நலனையும், தமிழர்களின் உணர்வுகளையும் காப்போம் என பிரச்சாரம் செய்தார். இதற்காக இராமேஸ்வரத்தில் கடல் தாமரை என்ற பெயரில் தனி மாநாடே சுஷ்மா தலைமையில் நடத்தப்பட்டது..
ஆனால் தற்போது அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த பாஜகவின் பிரதமர் வேட்பாளாரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை இனப்படுகொலை குற்றவாளி இராஜபக்ஷேவை அழைத்திருப்பதன் மூலம் அவர்களின் இரட்டை நிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விசயத்தில் தமிழக மக்களின் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் பாஜகவும், காங்கிரஸும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளதை தெளிவாக அறியலாம். 
இதேபோன்று காங்கிரஸ் அரசு பாகிஸ்தான் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது அதற்கு எதிராக பல முட்டுக்கட்டைகளை போட்டும், பேச்சுவார்த்தை என்பது கோழைத்தனம் எனவும் தேசப்பற்றை ஓங்கி உரைத்த பாஜக, தற்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பதும் அவர்களின் இரட்டை நிலையை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.
வெளியுறவுக் கொள்கையில் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. வெளியுறவுத் துறைக் கொள்கையில் காங்கிரசுக்கு அண்ணனாகவே பா.ஜ.க. இருக்கும். பா.ஜனதா, ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டுடனும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது வேறொரு நிலைப்பாட்டுடனும் செயல்படுவதாக சமீபத்தில் விக்கிலீக்ஸ் தெரிவித்திருந்தது தற்போது நிரூபணமாகி வருகிறது. மேலும் அரசியலுக்காக மட்டுமே காங்கிரஸை பா.ஜ.கவும், பா.ஜ.கவை காங்கிரஸும் எதிர்க்கின்றன. உண்மையில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுமே ஒரே விதமான சிறகுகள் கொண்ட பறவைகள்தான் என்று சோசியல் டாமாகிரடிவ் பார்டி ஒப் இந்தியா ( SDPI ) கட்சி .தெரிவித்துள்ளது.
- SDPI -