செப் 11/2018: தூத்துக்குடி மாவட்டம் கந்தன் காலனியை சேர்ந்த சாமி, மனோகரி தம்பதியினரின் மகள் தான் சோபியா. தந்தை சாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகவும், தாயார் மனோகரி தலைமை செவிலியராக இருந்தும் ஓய்வு பெற்றவர்கள். சோபியா பள்ளிப் படிப்பை தூத்துக்குடியில் முடித்து, ஜெர்மனியில் M.Sc இயற்பியல், கனடாவில் M.Sc கணிதம் முடித்து, தற்போது கனடாவின் மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை படித்து வருகிறார்.
இவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். புனேவில் சமூக செயற்பாட்டாளர்கள், மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி, சமூக போராளி வளர்மதி போன்றோர் பாசிச பாரதிய ஜனதா கட்சியின் கைக்கூலி தமிழக அரசால் கைது செய்யப்பட்டது குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் "பாசிச பாஜக ஆட்சி ஒழிக" என்று தூத்துக்குடி விமான நிலையத்தில் இவர் எழுப்பிய ஒத்தை குரல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்ததது. இவரின் பாசிச பாரதிய ஜனதா ஒழிக என்ற குரல் மொத்த இந்திய மக்களும் இந்த அராஜக அக்கிரமகாரா மோடியின் ஹிந்துத்துவா சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக சொல்ல நினைத்ததே. இந்த வீரத்தமிழச்சிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
நட்புடன்: யாழினி
No comments:
Post a Comment