Dec 2, 2009

இந்தியாவை குறிவைத்து புதிய விமான தளங்களை சீனா அமைத்து வருகிறது



இந்தியாவின் பல இடங்களை குறிவைத்து எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே, சீனா ஏராளமான விமான தளங்களை அமைத்து வருவதாக் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் பல இடங்களை குறிவைத்து எளிதாக பறந்து சென்று தாக்கும் நோக்கில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே சுமார் 27 விமான தளங்களை சீனா அமைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இத்தகவல் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், இது குறித்து விசாரித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி இந்திய இராணுவத்தை பாதுகாப்புத் துறை அமைச்சகம் பணித்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜூ, சீனா அமைத்து வரும் விமானத் தளங்கள் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றார்.

'ஒரு பிராந்திய சக்தியாக அவர்கள் ( சீனா ) தங்களது உட்கட்டமைப்புகளை பலப்படுத்தலாம்.நமது எல்லைப் பகுதியை பலப்படுத்த நாம் என்ன செய்கிறோமோ அதேப்போன்றுதான் அவர்களும் செய்வார்கள்.

மற்ற நாடுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன் என்பது குறித்து நாம் அச்சப்பட தேவையில்லை.இதுவரைக்கும் நமது திட்டங்கள் சுமூகமாகத்தான் சென்று கொண்டிருக்கின்றன.நம்மை நாம் பலப்படுத்திக்கொள்வதற்கு தேவையானவற்றை நாம் செய்து கொண்டிருக்கிறோம்' என அவர் மேலும் கூறினார்.

No comments: