Showing posts with label தமிழீழ சிந்தனைகள். Show all posts
Showing posts with label தமிழீழ சிந்தனைகள். Show all posts

Sep 22, 2015

இறுதி யுத்தத்தில் நடந்த துரோகங்கள்!

டிசம்பர்- 2008ல் ஒரு கிழமை, காபூலில். நேட்டோ கரவன் ஒன்று புறப்பட்டு சென்ற போது திடீரென ஒரு குண்டு வெடித்தது. அது ஒரு தற்கொலை குண்டு தாக்குதல். 

கூடவே பரவலான துப்பாக்கி சூடுகள். விஷேட கொமாண்டோக்கள் கவர் எடுத்து சூடு வந்த திசையை அவதானித்து பயர் பண்ணிய போது பதில் இல்லை. திடீரென ஒரு அலறல் சத்தத்துடன் அவர்கள் மேல் ஒரு நபர் பாய்ந்தார் பின்புறம் இருந்து. சுதாரித்து கொண்ட கொமாண்டோஸ் அவரை மடக்கி பிடித்து விட்டனர். 

கைது செய்யப்பட்டவர் தலிபான் தற்கொலை தாக்குதல் போராளி என்பது தெரியவந்தது. டெட்டனேட்டர் சமயம் பார்த்து ஸ்பார்க் ஆகாததால் குண்டு வெடிக்கவில்லை. அவரது உடலில் கட்டி இருந்த பெல்ட் ரக வெடிகுண்டு நீக்கப்பட்டு விசாரணை அதிகாரி முன்னுள்ள மேசையில் வைக்கப்பட்டது. அதை பார்த்த அவர் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

அந்த குண்டு ஆர்.டி.எக்ஸ் ரக பிளாஸ்டிக் மெட்டீரியலால் ஆனது.  இந்த விபரம் அறிந்ததும் அமெரிக்க ராணுவ மற்றும் CIA உளவுத்துறை அதிகாரிகள் அங்கே விரைந்து வந்தனர். தலிபான்கள் வெடிமருந்துகளை பயன்படுத்தி சாதாரண ரக குண்டுகளை மட்டுமே தயாரிக்க தெரிந்தவர்கள். ஆனால் இம்முறை பயன்படுத்தியதோ “பெல்ட் டைப்” ஆர்.டி.எக்ஸ் ரக பிளாஸ்டிக் வெடிகுண்டுகளை. இவை விலை உயர்ந்தவை அவர்கள் கரங்களிற்கு கிடைக்க வாய்ப்பு இல்லாதவை.

பின்னர் நடந்த விசாரணையில், இந்த ஸிலிம் பெல்ட் டெக்னோலொஜியை உலகிலே பயன்படுத்தும் ஒரே இயக்கத்தினர் விடுதலைபுலிகள் மட்டுமே என்று தெரியவந்தது. ரஜீவ் காந்தி படுகொலையில் இந்த பிளாஸ்டிக் ரக வெடிகுண்டே பயன்படுத்தப்பட்டது. இப்போது அதே ரக தாக்குதல் ஆப்கானிஸ்தான் வரை வந்து விட்டது. நாளை பக்தாத் வரை வந்தால் என்று அமெரிக்கா யோசிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் வெடித்த குண்டுகள் இதே போர்முலாவில் நிகழ ஆரம்பித்தன. தேடிப்பார்த்ததில் புலிகளது இன்டர்னேஷனல் தொடர்புகள் வெளிச்சத்திற்கு வந்தது.

தமிழீழம் விடுதலை புலிகள் இயக்கம் அழிக்கப்படவேண்டும் என்பதில் இலங்கை அரசு, அதன் இராணுவம், இந்திய அரசு, சீனா,மற்றும் காட்டி கொடுத்தபோராளி அமைப்புக்கள் வெவ்வேறு சுயலாபங்களுக்காக உறுதியாக இருந்தன. இதைதொடர்ந்து விடுதலை புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இறுதி யுத்தத்தின் கடைசி நாட்களில்  உங்களை காப்பாத்த இரண்டு அமெரிக்கன் அப்பாச்சி ஹெலிக்கப்டர்கள் முள்ளிவாய்க்காலிற்கு வரும், உங்கள் போராளிகளை மீட்டுச் செல்ல பிலிப்ஸ் -2 கப்பல் வரும்  என்று சொல்லியே அவர் கதையை முடித்து விட்டது அமெரிக்கா.  

Sep 10, 2015

கரும்புலி வீரர்களின் சாகசம்!

09.09.2015. வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கருவி (விமான ராடர்) மீதும் 09.09.2008 அன்று மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் மும்முனை அதிரடித் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப்.கேணல் வினோதன், கரும்புலி லெப்.கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி கப்டன் எழிலகன், கரும்புலி கப்டன் கனிமதி, கரும்புலி கப்டன் நிமலன், கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ், கரும்புலி கப்டன் அகிலன், கரும்புலி கப்டன் முத்துநகை ஆகிய கரும்புலி மாவீரர்களின் 07ம் ஆண்டு நினைவு தினம். வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கரும்புலி வீரர்களின் சாகசம் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

Jul 13, 2014

ஈழ தமிழ், முஸ்லீம் மக்கள் இணைந்து செயல்பட வேண்டும்!

ஜூலை 13/14: கடந்த சில வாரங்களுக்கு முன்  தென்னிலங்கையில் மிகத் திட்டமிட்டு அப்பாவி முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனகலவரம் இன்றைய தினத்தில் மத்திய பகுதியான பதுளை போன்ற நகரங்களிலும் முஸ்லீம் மக்களின் பாதுகாப்பினை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திர குமரன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.  
சிறீலங்காவின் மேல் மாகாணத்தில் உள்ள களுத்துறை மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் அளுத்கமை, தர்க்காநகர் ஆகிய பகுதிகளில் பௌத்த பல சேனாவின் நேரடி நெறிப்படுத்தலில் முன்னெடுக்கப்பட்டுள்ள முஸ்லீம்களுக்கு எதிரான வன்செயல்களையும் அப்பாவி முஸ்லீம் மக்களின் வழிபாட்டுத் தலங்கள், பொருளாதார மையங்கள், குடியிருப்புக்கள் எல்லாம் நிர்மூலமாக்கப்பட்டு அவர்களை அவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற முயல்வதும் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசின் குறிக்கோளின் ஒரு பகுதியாகவும் 1983இல் தமிழ்மக்களுக்கு எதிரான இனவெறி வன்செயலின் தொடர்ச்சியாகவுமே விளங்க முடிகிறது. 
இத்தகைய இனவழிப்பு செயற்பாடுகள் தொடர்வதனையும் தமிழ்மக்களைத் தொடர்ந்து முஸ்லீம் மக்களும் சிறிலங்காவின் இனவழிப்பு திட்டத்திற்கு பலிக்கடாக்களாக்கப்படும் அபாயம் வெளிப்படுவதையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மிகவன்மையாகக் கண்டிப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்திலும் பங்கேற்கிறது. இவற்றினைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தமிழ் மொழிபேசும் மக்கள் என்ற குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாக வேண்டி நிற்கின்றேன் என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திர குமாரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  
நாடு கடந்த தமிழீழ அரசு என்றால் என்ன?
நாடு கடந்த அரசாங்கம் என்பது, அரசியலில் ஈடுபடும் ஒரு குழுவினர், சொந்த நாட்டில் தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியேறி வெளிநாடு ஒன்றில் அதிகாரம் மிக்க தனி அரசாங்கம் ஒன்றை நிறுவுவதாகும். காலப் போக்கில் இந்த அரசானது தனது சொந்த நாட்டிற்கு திரும்பிச் சென்று சக்திகளையும் அதிகாரங்களையும் மீளப்பெறும் என்ற நோக்கில் அமைக்கப்படுவது ஆகும். 
இரண்டாம் உலகப் போரில் பல ஜரோப்பிய நாடுகளை கிட்லரின் நாசிசப் படைகள் கைப்பற்றியதனால், பல ஜரோப்பிய நாடுகள் பிரித்தானியாவில், இவ்வாறான நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை நடத்தி வந்திருந்தனர். ஆகையால் அவர்கள் தேசியம் காப்பாற்றப்பட்டது. 
திபெத்திய பீட பூமியை சீன அரசு ஆக்கிரமிப்புச் செய்தபோது அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா இந்தியாவுக்குச் சென்று இன்றுவரை திபெத்தின் அரசை ஒரு நாடு கடந்த அரசாக நடாத்தி வருகிறார். தற்போது சுமார் 11க்கும் மேற்பட்ட நாடு கடந்த அரசாங்கங்கள் உலகில் இயங்கிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு கடந்த அரசாங்கத்தால்  என்ன செய்ய முடியும்: 
* சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது.
* தனக்கென ஒரு சட்ட வரைமுறைகளை வரையறுப்பது.
*தேசியத்தின் சட்ட முறைமைகளைப் பாதுகாப்பது.
* ஒரு தேசிய இராணுவத்தை காப்பது அல்லது கட்டி எழுப்புவது.
* அரசியல் ரீதியாக அல்லது இராஜதந்திர ரீதியாக நாட்டின் தேசியத்தை ஒன்றுபடுத்துதல்.
* தேசிய அடையாள அட்டை வழங்குவது
* ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளை உருவாக்குவது.
* தேர்தல்களை நடத்துவது.
என்பனவற்றை நாடுகடந்த அரசாங்கத்தால் செயல்படுத்த முடியும்

நாடு கடந்த அரசாங்கத்தினை உருவாக்கத் தேவையானவை:
நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்க, ஏதாவது ஒரு வெளிநாட்டின் அனுமதி அல்லது முழு அங்கிகாரம் தேவைப்படுகிறது. அந்த நாட்டிலேயே நாடு கடந்த அரசாங்கத்தை நடத்த முடியும்,  அந்த அடிப்படையில் தமிழீழ நாடுகடந்த அரசு அமெரிக்க அரசின் அனுமதி பெற்று அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் செயல்பட்டு வருகிறது. 

நாடு கடந்த அரசாங்கத்தால் என்ன பயன் :
பல வெளிநாடுகளில் தமது அரசின் உத்தியோக பூர்வ தூதுவர்களை நியமிக்க முடியும், வெளிநாட்டு அரசாங்கங்களுடன், ஒரு நாட்டு அரசாங்கம் போல தகுதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடமுடியும், குறிப்பிட்ட நாட்டுடன் தனது பிணக்குகள் குறித்து பேச்சுவார்தை நடத்தி தீர்வுகான ஏதுவாக இருக்கும். இவ்வாறு பல உரிமைகள் இந்த நாடு கடந்த அரசாங்கத்திற்கு உண்டு.

*சிங்கள பேரினவாதம் முற்றிலும் அழித்து ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை என்று நம்புவோம்*

Oct 31, 2013

ஈழத்திற்காக துருப்பை கூட அசைக்காதவர் இன்ற சவால் விடுகிறார்!

நவ 01/2013: இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் ஒரு துரும்பு கூட கலந்து கொள்ளக்கூடாது என கலைஞர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள முடிவெடுத்திருப்பதைப் போல செய்திகள் வந்திருக்கிறதே என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட பொழுது இவ்வாறு பதில் அளித்தார்.

சிந்திக்கவும்: ஈழத்தமிழர் பிரச்னையை வைத்து தமிழக ஓட்டு பொருக்கி கட்சிகள் தங்களை வளர்த்து கொண்டன. தமிழ், ஈழத்தமிழர் என்று சொல்லி கருணாநிதி தனது அரசியல் பிழைப்பை நடத்தி வந்தார். 

ஹிந்தி எதிர்ப்பு என்றார், ஹிந்தி எழுத்துக்களை தார் வைத்து அழிக்கக்கும் போராட்டம், என்றெல்லாம் சொல்லி விட்டு தனது பேரப்பிள்ளைகளை ஹிந்தி பயில வைத்தார். இந்தியா சார்பில் துரும்பு கூட கலந்து கொள்ள கூட்டாது என்கிற இந்த வேற்று பேச்சிக்கு மட்டும் குறைவில்லை. இவர் தமிழர்களுக்கோ, ஈழத்தமிழர்களுக்கோ எந்த ஒரு துரும்பையும்  அன்றும் அசைத்ததில்லை இன்றும் அசைக்க போவதில்லை. மொத்தத்தில் இவர் ஒரு கபட வேடதாரி. 

Oct 25, 2013

கட்ச்ச தீவை மோடி மீட்ப்பார் தமிழக மீனவர்களை காப்பார்!

அக் 26/2013: இனப் படுகொலை நாடான இலங்கையில் பொதுநல நாடுகள் மன்ற மாநாட்டை நடத்தாதே என்று வலியுறுத்தி இன்று (25.10.2013) காலை 10.00 மணியளவில் சாசுத்திரி பவன் மற்றும் இங்கிலந்து துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டத்தை  மே பதினேழு இயக்கம் ஒருகிணைப்பாளர் திருமுருகன் தலைமை யேற்றார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்  பெ.மணியரசன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்  மல்லை சத்தியா, விடுதலை சிறுத்தைகள்தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொழிலாளர்கள் அணி பொதுச் செயலாளர் சைதை சிவா, மனிதநேய மக்கள் கட்சி மாணவரணி மாநிலச் செயலாலர் தோழர் அனிஸ், சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) துணைப் பொதுச் செயலாளர் அம்சா, தமிழக மக்கள் சனநாயக கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் ஆதிதிராவிடன், திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிகுமரன், தோழர் சிவகாளிதாசன், மக்கள் விடுதலை இயக்கத் தலைவர் இரவி, உயிரிதுளிகள் இயக்கம் முகிலன், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் சிபி உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் திரளானோர் பங்கேற்று கைதாகி கிரீம்சு சாலை அருகில் மண்டபத்தில் வைக்கப் பட்டுள்ளனர்.

சிந்திக்கவும்: ஈழத்தமிழ்  மக்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை புத்தர் நூற்றாண்டு விழாவிற்கு பாரதிய ஜனதாவின் சுஸ்மா சுவராஜ் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் இந்தியாவிற்கு வந்த ராஜபக்சேவுக்கு கோவில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்ப்பாடு செய்தது கொடுத்தது ஹிந்துத்துவா கூட்டம். இப்பொழுது மோடி கட்ச்ச தீவை  மீட்ப்பார் தமிழக மீனவர்களை காப்பார் என்று கதை விடுகிறார்கள்.

Oct 24, 2013

இலங்கை காமன் வெல்த் மாநாட்டை தடுத்து நிறுத்து! SDPI!

அக் 25/2013: ஈழத் தமிழர்களுக்கு எதிரான போருக்குப் பிறகு, சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் இவற்றிற்கு எதிராக  தற்போதும் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. அண்மையில் இலங்கை சென்று ஆய்வு செய்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின்  தலைவர் நவநீதம் பிள்ளையும்  இதைப் பகிரங்கப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில் காமன்வெல்த்  மாநாடு  வரும்  நவம்பரில் இலங்கையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது காமன்வெல்த்தின் அடிப்படைகளுக்கே  எதிரானதாகும். காமன்வெல்த் மாநாடு  இலங்கையில் நடைபெறுவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து கனடா அந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.

கனடாவை விட தமிழர்களின் பிரச்னையில் அதிகக் கடைமையுள்ள இந்தியா காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது எனக் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும். மத்திய அரசின்  எதிர்ப்பையும் மீறி இம்மாநாடு நடைபெற்றால் இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்துகிறது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரிக்கிறது. இக்கோரிக்கைகளை  வலியுறுத்தி கடந்த 10ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக மாநிலப் பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் தலைமையில் சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஆனால் மத்திய அரசு இன்னும் இப்பிரச்னையில் தமிழர்களின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை.

எனவே இந்தியா காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இந்திய அரசின் எதிர்ப்பையும் மீறி இம்மாநாடு நடைபெற்றால் இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வருகின்ற 28ஆம் தேதி டெல்லியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் தலைவர் தலைமையில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின் சார்பாக மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி, பொதுச் செயலாளர்கள் நெல்லை முபாரக் ஆகிய தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

Oct 15, 2013

கொலைகாரனும் அவனது கூட்டாளியும் நடத்தும் காமன்வெல்த்!

1) இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார் தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு. அவர் செவ்வாய் கிழமை மாலை மருத்துவமனையில் உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார்.

2). இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்க கூடாது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடர் கழகம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

3). திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய நகரம் சார்பில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டினி போராட்டம் பேரூராட்சி அலவலகம் அருகில் நடைபெற்றது. போராட்டத்தில் இலங்கை தமிழருக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவத்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

4). இலங்​கை​யில் நடை​பெ​ற​வுள்ள காமன்​வெல்த் மாநாட்​டில் இந்​தியா பங்​கேற்​கக் கூடாது என மத்​திய அரசை வலி​யு​றுத்தி,​​ செங்​கல்​பட்டு அம்​பேத்​கர் சட்​டக் கல்​லூரி மாண​வர்​கள் 5 பேர்,​​ 5வது நாளாக திங்​கள்​கி​ழமை உண்​ணா​வி​ர​தப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ள​னர்.​

5). இலங்கையில் நடைபெறம் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, சென்னையில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஈடுபட்டனர். 

6). இந்தியா இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்
து தமிழக வாழ்வுரிமை கட்சி அக்கட்சியினர் சென்னையில் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.
  • சர்வதேச போர் குற்றவாளி ராஜபக்சே தலைமையில் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது. செங்கல்பட்டு பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடவேண்டியும்,தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.
  • இலங்கை ராணுவத்தால் தினமும் திட்டமிட்டு தமிழக மீனவர்களை கைது செய்வதை மத்திய அரசு தடுத்திட வேண்டும். இலங்கை சிறையில் வாடும் அப்பாவி தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
  • இந்திய அரசு இலங்கைக்கு எந்தவிதமான ராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது எனவும், போர்க்கப்பல்கள் வழங்கக்கூடாது எனவும், இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்ககூடாது. இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும.   
துவெல்லாம் நக்குமா?

May 9, 2013

ஹிட்லரை பார்க்கனுமா? இலங்கைக்கு போங்கள்!

மே 09: இலங்கை சிங்கள பேரினவாத அரசு தமிழர்கள் மீது நடத்திய இனப் படுகொலையை தொடர்ந்து முஸ்லிம்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும்  அடக்கு முறைகளை கட்டவிழ்த்து வந்தது. 

அதன் தொடர்ச்சியாக, பத்திரிக்கையாளர்கள் கைது, பத்திரிகை அலுவலகங்கள் தாக்குதல் ஜனநாயக ரீதியா பேச்சு சுதந்திரம் பறிப்பு, தொழில்  நிறுவனங்கள் மீதான சூறையாடுதல், மத ரீதியான உரிமைகள் மறுப்பு போன்ற பல்வேறு சர்வாதிக்கார அடக்கு முறைகளை சிறுபான்மை தமிழர், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள்  மீது  திட்டமிட்டு நடத்தி வருகிறது சிங்கள பேரினவாத அரசு

இந்நிலையில் கொழும்பு நகரின் முன்னாள் துணை மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளருமான அஸத் ஸாலி அவர்கள் கைது  செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ் நாட்டில் ஒரு வார இதழுக்கு கொடுத்த  பேட்டியை காரணமாக காட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் தற்போது சிங்கள பேரினவாத இயக்கங்களின் அக்கிரமங்களை எதிர்த்து குரல் எழுப்பி வரும் மிகச் சிலரில் அஸத் ஸாலி முக்கியமானவர்.

இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சி என்று ராஜபக்சே மார்தட்டி கொண்டாலும் தினமும் ஏதாவது ஒரு செய்தி ராஜபக்சேவின் சர்வாதிகார ஆட்சியை அம்பலத்து கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. ஹிட்லரை யாரும் நேரில் பார்க்க வில்லையே என்று வருந்த வேண்டாம். ஹிட்லரை பார்க்க வேண்டுமா இலங்கைக்கு போங்கள். 

*ஒன்றரை இலட்சம் உயிர்களை வேட்டையாடிய மனித மிருகம்* 

Apr 20, 2013

சென்னையில் விரைவில் இந்திய தூதரகம்!

ஏப்ரல் 21/2013: ஜோக் 1: அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய மந்திரி வயலார் ரவி கூறினார். 

பதில் 1: ஹா.. ஹா.. ஹா... கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம். இது நாள் வரை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை கண்டு கொண்டதே இல்லை. 
-----------------------------------------------------------------------------------------------
ஜோக் 2: மேலும், அரபு நாடுகளில் 24 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இதில் 20 லட்சம் பேர், உரிய ஆவணங்களுடன் வசிப்பதால் அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் 4 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. 

இதில் 2 லட்சம் பேருக்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இந்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 2 லட்சம் பேர், உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி இருப்பதால் அவர்களை பாதுகாக்க வெளி நாடுவாழ் இந்திய நலத்துறை சார்பில் அரபுநாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார் மத்திய மந்திரி வயலார் ரவி

பதில் 2: வெளி நாடுவாழ் இந்திய நலத்துறை இந்த கருமாந்திரம் பிடித்த துறை எப்பொழுது முளைத்தது என்றே தெரியவில்லை. இது அப்படி என்னதான் செய்து கிழிக்கிறதோ?  இந்த துறை குறித்து ஒரு வெள்ளையறிக்கை சமர்பிப்பாரா வயலார் ரவி. ஏற்கனவே வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் முகம் கிழிந்து தொங்குகிறது.  
 -----------------------------------------------------------------------------------------------
ஜோக் 3:  சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை திருவனந்தபுரத்துக்கு மாற்றும் திட்டம் எதுவும் கிடையாது. இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.  

பதில் 3:  இனப்படுகொலை பயங்கரவாதியும் உங்கள் நெருங்கிய கூட்டாளியுமான ராஜபக்சே நாட்டின் தூதரகத்தை நீங்கள் மற்ற மாட்டீர்கள் என்பது தமிழர்களுக்கு தெரியும். கூடிய சீக்கிரம் தமிழகத்தில் இந்தியாவுக்கு தூதரம் திறக்கும் நிலை வரும் என்பதை வளயலார் ரவி புரிந்து கொண்டால் சரி.

Apr 13, 2013

சென்னையில் இலங்கை தமிழர் வாழ்வுரிமை கருத்தரங்கு!

ஏப்ரல் 14: இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்கான கருத்தரங்கு ஒன்று சென்னை எழும்பூர் கென்னட் லேன் ஹோட்டல் சிங்கப்பூரில் வைத்து ஏப்ரல் 16 அன்று மாலை 4.15 மணிக்கு நடைபெற உள்ளது.

இதை பாபுலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற அமைப்பு நடத்துகிறது. இதில் இந்த அமைப்பின் முன்னால் தேசிய தலைவர் E.M. அப்துல் ரஹ்மான் மற்றும் மாநில தலைவர் இஸ்மாயில், மாநில பொது செயலாளர் காலித் முஹமத், மாநில பொருளாளர் ரசீன், நெல்லை மாவட்ட தலைவர் முபாரக், மாநில செயல்குழு உறுப்பினர் அஹமது பக்ருதீன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இலங்கை சார்ந்த முக்கிய பிரமுகர்கள்: இலங்கை தமிழர் தேசிய கூட்டமைப்பில் இருந்து கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் கலந்து கொள்கிறார். மேலும் இலங்கை தேசிய ஐக்கிய முன்னணியில் இருந்து ஆசாத் சாலி அவர்கள் கலந்து கொள்கிறார். மேலும் தமிழ் நாட்டில் இருந்து மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தில் இருந்து பேராசிரியர் அ. மார்க்ஸ் கலந்து கொள்கிறார். மேலும் திராவிட விடுதலை கழகத்தின் பொது செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொள்கின்றனர்.

*சிந்திக்கவும் வாசகர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்*

Apr 8, 2013

சிங்களவர்கள் இந்தியர்களா?

ஏப்ரல் 09/2013: பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் என பா.ஜ.க. தேசியச் செயலாளர் டாக்டர். தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

சிந்திக்கவும்:  RSS இயக்கத்தின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி என்பது யாவரும் அறிந்ததே.

 RSS இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் RSS இயக்கத்தின்  ஆன்லைன் மாத இதழான ஸம்வாதம் ஆர்க்கில் எழுதியுள்ள கட்டுரையில் சிங்கள பயங்கரவாத  இயக்கமான பொது பல சேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.


இலங்கையில் உணவுப்பொருட்களின் பொதிகளில் ஹலால் முத்திரை பதிப்பதற்கு எதிராகவும், முஸ்லிம்களின் வழிபட்டு உரிமைகளுக்கு எதிராகவும், கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் செயல்படும் பல சேனாவின் செயல்பாடுகளை அவர் பகிரங்கமாக ஆதரித்த எழுதியுள்ளார்.

மேலும், தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்று நாயகர்களான  தமிழ் ஈழ விடுதலை  புலிகளின் கட்டுப்பாடு கிறிஸ்தவ சபைகளின் கரங்களில் இருந்தது என்று கீழ்த்தரமான ஒரு குற்றச்சாட்டையும் அதில் வைக்கிறார். ஹிந்துதுவாவின் நம்பிக்கை சிங்களர்கள் ஆர்ய வம்சாவளியைச் சார்ந்த வட இந்தியர்கள் என்பதே. இதை மையமாக வைத்தே RSS  இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் இக்கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

இலங்கையில் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டதில் பெரும்பகுதி மக்கள் இலங்கை தமிழ் இந்துக்களே! ஈழத்திலே சிங்கள பேரினவாதிகளால் உடைத்தெரியப்பட்ட கோவில்கள் பலநூறு. இலங்கையில் கொல்லப்படுபவர்கள் இந்துக்கள் என்கிற உணர்வு ஆரம்பம் முதல் பாரதிய ஜனதாவுக்கு இருந்ததில்லை.  சிலதினங்களுக்கு முன்னர்தான் ஈழத்து  படுகொலையை “இனப்படுகொலை” என்று தீர்மனம் இயற்ற முடியாது என ஆளும் காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது, முக்கிய எதிர்கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் (BJP) கூறி இருந்தது. 

பிற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் இதுபோன்ற தீர்மானங்களை இந்தியா கொண்டு வருவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஈழத்து விடுதலை போராட்டத்திற்கு எதிராகவே பாரதிய ஜனதா, ஜெயலலிதா, சோ, சுப்பிரமணிய சுவாமி, தினமலர், தினமணி, இந்தியா டுடே போன்றோர் குரல் எழுப்பி வந்தனர் என்பதை தமிழர்கள் மறந்து விடவில்லை.

அரசியலுக்காக ஓட்டு வாங்க அம்மாவும், பாரதிய ஜனதாவும் பகல் வேஷம் போடுவதை தமிழர்கள் நன்கறிவார்கள். அதனால் கருணாநிதியை யோக்கியர் என்று எண்ணிவிட வேண்டாம்! இவர்கள் நெஞ்சில் குத்தினால் கருணாநிதி முதுகில் குத்துவார்!

Mar 21, 2013

ஈழம்! பாரதிய ஜனதாவின் இரட்டை முகமும் நீலி கண்ணீரும் !

மார்ச் 23:இலங்கையில் நடந்த இனப்படுகொலை விடயமாக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிராக மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து மத்திய அரசு முடிவு செய்ய முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் புதன்கிழமை இரவு ஆலோசனை நடத்தினர். அதில் கலந்து கொண்ட BJP தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என எதிர்த்தது.

பிற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் இதுபோன்ற தீர்மானங்களை இந்தியா கொண்டு வருவதை அனுமதிக்க மாட்டோம்; அப்படியே மீறி பாராளுமன்றத்தில் அத்தகைய தீர்மானத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் அதை எங்கள் கட்சி ஆதரிக்காது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் (BJPயின்) சுஷ்மா ஸ்வராஜ் கடுமையாக எதிர்த்தார்.

தமிழ் நாட்டில் ஒட்டு பொறுக்க, ஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் வடிப்பது போல் அறிக்கைகளை அள்ளி வீசி கொண்டு மறுபுறம் பெரிய ஆப்பாக அடித்திருக்கிறது ஹிந்துத்துவா வர்ணாசிரம மதவாத கட்சி. இந்தியா ஒரு நாளும் அப்படிப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர உதவப்போவது இல்லை. ஒரு கண்துடைப்புக்குதான் இதை இந்தியா செய்கிறது. அந்த கண்துடைப்பு நாடகத்தை நடத்த கூட நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று பாரதிய ஜனதா கொக்கரிக்கிறது.

இதில் இருந்து ஒன்று நல்லா விளங்குது தமிழர்களுக்காக இந்தியாவில் குரல் கொடுக்க ஒரு நாதியும் இல்லை. இதே விஷயம் வேறு மாநிலத்தவர்களுக்கு நடந்திருந்தால் அன்றே இந்தியா துண்டாகி போகி இருக்கும். ஒரு விஞ்சான யுகத்தில் கண்ணெதிரே பல இலட்சம் மக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது மட்டுமல்லாது அதை போர் குற்றம் என்று சொல்வதை, அந்நிய நாடுகளின் மீது அழுத்தம் கொடுப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லும் பாரதிய ஜனதாவின் இரட்டை முகத்தையும், நீலி கண்ணீரையும் தமிழர்கள் அறிந்து கொண்டார்கள்.

Mar 12, 2013

இனப்படுகொலை பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும்!

மார்ச் 13/2013: ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும்  என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், மாணவர்கள் ஆகியோர் தொடர் போராட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றை நடத்தி வருகிறார்கள். அது தொடர்பான சில செய்திகள்

செய்தி 1: இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை வேண்டும் போன்ற  கோரிக்கைகளோடு போராடி வரும் சேலம் அரசு கலை கல்லூரி மாணவர்களை, விடுதலை புலிகள் என்று ஜெயிலில் தள்ளி விடுவேன் என்று பயங்கரவாத போலீஸ் துறை மிரட்டல் விடுத்துள்ளது.

செய்தி 2: டெல்லியில் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்து அரசாங்கம் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு.

பிரபாகரன் மகனை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்தது கேவலமான செயலாகும். சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை போர் குற்றவாளிகளை கைது செய்து விசாரணையின் முன் நிறுத்துவதற்கு இந்தியா உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தி 3: ராஜபக்சேவுக்கு தண்டனை கிடைக்கும் தீர்மானத்தை இந்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்த கல்லூரி மாணவர்களை காவல் துறை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளதை கண்டித்தும், இலங்கைக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியிருக்கும் சுப்பிரமணிய சாமியை கண்டித்தும் மன்னார்குடி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 2500 பேர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி நுழைவாயில் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து சுப்பிரமணியசாமி உருவ பொம்மையை எரித்து கோஷங்கள் எழுப்பினார்கள். 

செய்தி 4: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன்  கூறியதாவது, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் இந்தியா மவுனம் காக்கிறது. இனப்படுகொலை குறித்து ஆதாரங்கள் வெளியான பின்னாலும் இலங்கையை நட்பு நாடு என்று இந்தியா கூறி வருவது சரியல்ல. மத்திய அரசு மனசாட்சியுடன் செயல்பட்டிருந்தால் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாதான் கொண்டு வந்திருக்க வேண்டும். 

Mar 8, 2013

ஈழத்தமிழர்களுக்காக ஓரணியில் திரண்ட தமிழர் இயக்கங்கள்!

மார்ச் 09/2013: இலங்கை அரசு மற்றும் ராஜபக்சே மீது போர் குற்ற விசாரணை நடத்த கோரி ஐ.நா. வில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தியும், போர்க்குற்ற விசாரணை நடத்திட ஐ.நா. வை வலியுறுத்தியும், மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும் கோவை மாவட்ட SDPI  (சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா) கட்சியின் சார்பில் கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழர் இயக்கங்கள்: இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்ட தலைவர் முஸ்தபா  தலைமை வகித்தார். மாநில செயலாளர் அபுதாகிர் கண்டன உரை ஆற்றினார். இதில் பெரியார் திராவிட கழக மாநில பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன், தமிழ் புலிகள் தோழர் இளவேனில், ஆதி தமிழர் விடுதலை முன்னணி அமைப்பாளர் தோழர் கோவை ரவிக்குமார், திராவிடர் விடுதலை கழகம் தோழர் பன்னீர் செல்வம், தமிழர் விடுதலை இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் வெண்மணி, கொங்குநாடு அருந்ததியினர் முன்னேற்ற பேரவை தோழர் இளங்கோவன், சமத்துவ முன்னணி தோழர் மு. கார்க்கி, பொதுநல மாணவர் எழுச்சி தோழர் மு. பார்த்திபன், தலித் விடுதலை கட்சி மாநில செயலாளர் தோழர் களப்பிரார்.

மற்றும் நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் தோழர் பேரா. கல்யாண சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் அ. தென்னரசு, தமிழ் தேசிய வழக்கறிஞர் பேரவை தோழர் சி. முருகன், தமிழ் தேச புரட்சி இயக்கம் செய்தி தொடர்பாளர் தோழர் ப. சங்கர வடிவேலு, ஆதித்தமிழர் பேரவை மாநில நிதி செயலாளர் தோழர் நீலவேந்தன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தோழர் மதுக்கரை கிருஷ்ணன், எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட துணைத் தலைவர் தோழர் டி. சிவக்குமார் மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் அனைத்து தொகுதி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் தடையை மீறி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Mar 7, 2013

இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் குழப்பம்!

மார்ச் 08: இன அழிப்பு பயங்கரவாதி ராஜபக்சேக்கு எதிராக தமிழர்களும், உலக நாடுகளும் குரல் எழுப்புவது இந்தியாவின் காதுகளுக்கு கேட்கவே இல்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போல மவுனம் காக்கிறது.

பாராளுமன்றத்தில் இலங்கை பற்றி நடந்த  சிறப்பு விவாதத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் இந்திய அரசை செருப்பால் அடிக்கும் விதத்தில் கேள்விகளை கேட்டார். அவரது கேள்விகளுக்கு நாட்டை ஆளும் கோட்டான்கள் பதில் சொல்லுமா?

இலங்கை தமிழர் பிரச்சனையில், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர செயல்களுக்கு எதிராக நீங்கள் (இந்தியா) எதிர்ப்பு தெரிவித்தீர்களா?

உலக அரங்கில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்கும் என்று ஜவகர்லால் நேரு கூறி இருக்கிறார். இந்த கொள்கையை இந்திய அரசு பின்பற்றத் தவறியதின் விளைவுதான் இலங்கை நடந்த தமிழர் படுகொலைக்கு காரணமாக அமைந்தது. இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் குழப்பம் இருக்கிறது. 

மேலும் சோனியாகாந்தியை பார்த்து சோனியாஜி, நீங்கள் ஏன் மவுனம் காக்கிறீர்கள்? உங்களிடம் மத்திய அரசை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக எடுத்த நடவடிக்கை என்ன என்பதை உங்களுக்கு பின்னால் அமர்ந்திருக்கிற பிரதமரையும், வெளியுறவுத்துறை மந்திரியும் கேளுங்கள். அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவு தேவைதான். அதற்காக நமது சொந்த மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உரித்தான விஷயங்களை நாம் எடுத்துச் சொல்லக்கூடாது என்பதல்ல என்று பேசினார். 

சிந்திக்கவும்;  முலாயம்சிங்குக்கு தெரிந்த உண்மை நமது மெத்த படித்த பொருளாதார புலி மண்ணு மோகன் சிங்குக்கு தெரியாமல் போனாதேனோ! 

Feb 27, 2013

இலங்கையை மன்னிக்கலாம்! இந்தியாவை?

பிப் 28/2013: இலங்கை போர்க்குற்றம் தொடர்பான விவாதம் விவாதம் இன்று  ராஜ்யசபாவில் நடந்தது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசிய இந்திய வெளியுறவு துறை அமைச்சர், இலங்கையை எதிரி நாடாக பார்க்க முடியாது என்றும், இலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றி இப்போது கூற இயலாது என்றும் கூறினார். 

சிந்திக்கவும்: இந்த நூற்றாண்டின் மிகக்கொடிய இன அழிப்புகளில் ஒன்று  இலங்கையிலே நடந்தேறியது. மிகச்சிறிய பரப்பளவு கொண்ட பகுதி முள்ளிவாய்க்கால். அந்தப் பகுதிக்குள் லட்சக்கணக்கான தமிழர்கள் அடைபட்டிருந்தார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான். பாதிப்பேர் உணவு இல்லாமல் கடல் நீரைக் குடித்தே செத்துப்போனார்கள்.

தமிழ் மக்கள் கூட்டம் ராணுவத்திடம் சரணடைய வந்தனர். ‘நாங்கள் உங்களைச் சுட மாட்டோம். நீங்கள் அனைவரும் துணிகள் இல்லாமல், நிர்வாண நிலையில்தான் எங்களிடம் வரவேண்டும்’ என்று கட்டளை இட்டது ராணுவம். வேறு வழி இல்லாமல் அப்பா முன் மகளும், மகனின் முன் தாயும், அண்ணனின் முன் தங்கையும் நிர்வாணமாக வந்து சரணடைந்தனர்.

வவுனியாவில் இருக்கும் மெனிக் பார்ம் முகாமிலும், வெலிகந்தையில் இருக்கும் மறைமுக முகாமிலும் தினமும் இரவு நேரங்களில் பெண்களின் கதறல் சப்தம் கேட்டபடியே இருக்கும். இதுவரை இலங்கையில் கொல்லப்பட்ட மக்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் இருப்பார்கள். போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பலவற்றையும் இலங்கை ராணுவம் பயன்படுத்தியது.

இந்தனை நடந்தும், இலங்கைக்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறது இந்தியா. ஆறரை கோடி மக்களை கொண்ட தனது நாட்டின், ஒரு மாநிலத்து மக்களின் உணர்வுகளை மதிக்காது, காலில் போட்டு மிதிக்கும் இந்தியாவை இனி தமிழர்கள் அந்நிய நாடாக கருத வேண்டும். இலங்கையை எதிரி நாடக பார்க்க முடியாது என்று இந்திய வெளிவுறவு துறை அமைச்சர் சொல்லி விட்டார். அதானால் நாம் இந்தியாவை எதிரி நாடாக பார்க்க வேண்டியதுதான்

உலகமே மனித உரிமை மீறல் நடந்திருகிறது, போர் குற்றம் நடந்திருக்கிறது என்று சொல்லும் பொழுது இந்தியா மவுனம் காப்பது ஏன்? எதிரி ராஜபக்சேவையும், இலங்கையும் கூட மன்னித்து விடலாம். ஆனால், துரோகி இந்தியாவை மன்னிக்க முடியாது. இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் முதல் இப்பொழுது நடந்த இன அழிப்பு போர் குற்றம் வரை அனைத்துக்கும்.இந்தியாவே முழுமுதல் காரணம்

இலங்கையில் ஆதிக்கம். செலுத்த வேண்டும் என்கிற இந்தியாவின் வல்லரசு போதைக்கு இரையாக விடுதலை புலிகள் முதல் அனைத்து போராளி இயக்கங்களுக்கும் இந்தியாவில் வைத்து பயிற்சி கொடுத்து இலங்கை உள்நாட்டு போரை முன்னின்று நடத்தியதே இந்தியாதான், இலங்கை அரசோடு அனுசரணை ஏற்பட்டதும் தமிழ் போராளிகளை ஒடுக்க அமைதி படை என்கிற ஆக்கிரமிப்பு படை அனுப்பியது இப்படி ஈழத்தில் நடந்த அனைத்து துர்சம்பவங்களுக்கு இந்தியாவே முற்றிலும் காரணம். 

 பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சுட்டு கொல்லபட்டது முதல் இத்தனை அநியாயங்களுக்கும் இந்தியா ஒரு கண்டனனமாவது தெரிவித்த்ருக்குமா?