Mar 12, 2013

இனப்படுகொலை பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும்!

மார்ச் 13/2013: ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும்  என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், மாணவர்கள் ஆகியோர் தொடர் போராட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றை நடத்தி வருகிறார்கள். அது தொடர்பான சில செய்திகள்

செய்தி 1: இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை வேண்டும் போன்ற  கோரிக்கைகளோடு போராடி வரும் சேலம் அரசு கலை கல்லூரி மாணவர்களை, விடுதலை புலிகள் என்று ஜெயிலில் தள்ளி விடுவேன் என்று பயங்கரவாத போலீஸ் துறை மிரட்டல் விடுத்துள்ளது.

செய்தி 2: டெல்லியில் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்து அரசாங்கம் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு.

பிரபாகரன் மகனை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்தது கேவலமான செயலாகும். சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை போர் குற்றவாளிகளை கைது செய்து விசாரணையின் முன் நிறுத்துவதற்கு இந்தியா உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தி 3: ராஜபக்சேவுக்கு தண்டனை கிடைக்கும் தீர்மானத்தை இந்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்த கல்லூரி மாணவர்களை காவல் துறை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளதை கண்டித்தும், இலங்கைக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியிருக்கும் சுப்பிரமணிய சாமியை கண்டித்தும் மன்னார்குடி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 2500 பேர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி நுழைவாயில் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து சுப்பிரமணியசாமி உருவ பொம்மையை எரித்து கோஷங்கள் எழுப்பினார்கள். 

செய்தி 4: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன்  கூறியதாவது, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் இந்தியா மவுனம் காக்கிறது. இனப்படுகொலை குறித்து ஆதாரங்கள் வெளியான பின்னாலும் இலங்கையை நட்பு நாடு என்று இந்தியா கூறி வருவது சரியல்ல. மத்திய அரசு மனசாட்சியுடன் செயல்பட்டிருந்தால் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாதான் கொண்டு வந்திருக்க வேண்டும். 

1 comment:

Anonymous said...

ஈழ மக்களின் இன அழிப்புப்போரை முன்னின்று நடத்திய பாசிஸ்ட் இந்திய அரசை கண்டிக்கின்றோம்! இந்திய ஆளும் வர்க்க நலனுக்காக ஒரு இனத்தையே அழித்த இந்திய அரசின் உதவியோடு அதே இனத்துக்கு விடுதலை பெற்றுவிடலாம் என்று நினைப்பதும் அல்லது கோரிக்கை வைப்பதும், மனித குலத்துக்கே ஆபத்தான அமெரிக்க அரசின் தீர்மானம் ஈழ மக்களின் துயரத்தை துடைத்துவிடும் என்று நம்புவதும் முட்டாள்தனமானதும் ஈழ விடுதலைக்கு துரோகமிழைப்பதுமே ஆகும். எனவே இந்திய பிராந்திய மேலாதிக்க அரசை எதிர்க்காமல், ஏகாதிபத்தியத்தின் சதிகளை முறியடிக்காமல் மீண்டும் இவர்களை நம்பியே ஈழ விடுதலையை சாதித்துக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை எடுப்போமானால் இன அழிப்பு குற்றவாளி ராஜபக்சே, மன்மோகன்சிங், சோனியா மட்டும்மல்ல ஈழ மக்களுக்காக போராடுகிற நாமும்தான் என்கிற அனுபவத்தை 30 ஆண்டுகால ஈழ விடுதலைப்போராட்டம் படிப்பினையை கற்றுத் தந்துள்ளது.