மார்ச் 14: கடந்த 2012 ஆம் ஆண்டு அரபிக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கேரள மீனவர்கள் மீது அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த இத்தாலி கப்பலில் பாதுகாப்புப் பணியை ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அந்தச் சம்பவத்தில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் கைதாகி, பரோலில் இத்தாலி சென்ற அவர்களை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க இத்தாலி அரசு மறுத்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்து உள்ளார். “தூதரக நிலையில் பேச்சு நடத்தி, குற்றவாளிகளை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
அதுபோல், போபால் விசவாய்வு கசிவில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்த விபத்து நடந்ததும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் உரிமையாளார் ஆண்டர்ஷன் கைது செய்யப்பட்டு, பின்னர் பாதுகாப்பாக தனி விமானத்தில் வழியனுப்பி வைக்கப்பட்டார்.
1992-ஆம் ஆண்டு இவரை, போபால் ஜூடிஸியல் நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. 2009-ஆம் ஆண்டு ஆண்டர்ஸனை கைதுச் செய்ய வாரண்டும் பிறபித்தது, இருந்தும் இவரை அமெரிக்கா இதுவரை ஒப்படைக்க மறுத்து வருகிறது. இதனால் இவர் மீது இதுவரை விசாரணை நடைபெறவில்லை.
சிந்திக்கவும்: தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது. ஏன் என்றால் சீனாவும், பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவு கொடுத்து விடுவார்கள் என்கிற போலியான பயம்.
அமெரிக்காவில், பாதுகாப்பில்லாத முறையில் நிறுவனங்கள் தொடங்கினால் அனுமதி கிடைக்காது. அதே நேரம் பாதுகாப்பு செலவு, காப்பிடு, என்று நிறைய செலவாகும். ஆகையால் இந்தியாவில் நிறுவனம் நடத்தி பல்லாயிரக் கணக்கில் மக்களை கொன்று குவித்த யூனியன் கார்பரேட் நிறுவன அதிபர் ஆண்டர்சனை பாதுகாப்பாக வழியனுப்பி வைத்து அமெரிக்க விசுவாசம்.
சொந்த நாட்டு மக்களை பாதுகாக்காமல் உலக அரசியல் நடத்த நினைப்பது. இதன் விளைவாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் என்று பல்வேறு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆயுதமும், பணமும் கொடுத்து உதவி வருவது. ஈழத்து இன அழிப்பை நடத்த உதவியதால், போர் குற்றவாளி ராஜபக்சேவின் கூட்டாளி அந்தஸ்து கிடைத்துள்ளது. இதை எல்லாம் மறைத்து உலக அரங்கில் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடம் நல்ல பெயர் எடுக்கத்தான் இந்த கைது நாடகங்களும், விடுவிப்புகளும்.
ஒரு நாடு தன் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்க்காத்தான் மக்கள் வரிப்பணம் செலுத்துகிறார்கள். மக்களின் வரிப்பணத்தை இரத்த காட்டேறிகள் போல் உறிஞ்சி அதன் மூலம் ஆயுதங்களை வாங்கி குவித்து ராணுவபலத்தை பெருக்கி கொண்டு அந்த ராணுவத்தை சொந்த நாட்டு மக்களை அழிக்க மட்டுமே பயன்படுத்தும் ஒரு கேவலமான செயல்தான் இந்தியா செய்து வருகிறது. உலகில் எந்த நாடும் தன்நாட்டில் குற்ற காரியங்களை நிகழ்த்தியவர்களை சட்டப்படி தண்டிக்காமல் விடாது. அதுபோல் சொந்த நாட்டு மக்களை பாதுகாக்கத்தான் ராணுவமும், உளவுத்துறையும். ஆனால் இந்தியாவில் நடப்பதெல்லாம் தலை கீழ். கேட்டால் தேசபக்தி, தேசியம், வல்லரசு என்று சொல்லி மக்களை ஏமாற்றுவார்கள்.
2 comments:
சிந்திக்க மூளை வேண்டுமே, அதற்கு என்ன வழி?
*ஒரு நாடு தன் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.* சரியாக சொன்னிங்க- பாதுகாப்பு இல்லை என்பதை இன்னும் மக்கள் உணராமலே இருக்கின்றனர் உணரும் காலம் வரும் பொது தமிழ் நாடு போல் பல நாடு பார்ர்க்கலாம்
Post a Comment