பிப் 20:பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய நாட்டவரின் சட்ட விரோதக் குடியேற்றத்தைக் கண்டிக்கும் வகையில் ஐ.நா., பாதுகாப்பு சபையில் நேற்று தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால் அமெரிக்கா தனது "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்தது. இந்நிலையில் வீட்டோ அதிகாரம் என்றால் என்ன? அது பயன்படுத்த பட்ட விதம் குறித்தும் பார்ப்போம்.
வீட்டோ அதிகாரம் என்றால் என்ன?: ஐக்கிய நாடுகள் சபையின் வீட்டோ அதிகாரம் (United Nations Security Council veto power) எனப்படுவது பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் கொண்டுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும். இரண்டாம் உலகப்போரின் வெற்றிக்கு இந்த 5 நாடுகளின் பங்கு வெளியுலகுக்கு தெரிய வந்ததால் ஐநா அமைக்கப்பட்ட 1946 ஆம் ஆண்டு முதல் வீட்டோ (தடுத்து நிறுத்தும்) அதிகாரம் பெற்ற நாடுகள் என்ற சிறப்பை இந்நாடுகள் பெறுகின்றன. இதன்படி பாதுகாப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் (இதர உறுப்பு நாடுகள்) ஆதரவு பெற்றிருந்தாலும் இந்த 5 நாடுகளின் ஏவரேனும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தால் அந்த தீர்மானம் தோல்வியடையும் என்று ஐ நா சட்ட பிரிவு 27 ல் வரையறுத்துள்ளது.
வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள் பெறாத நாடுகள் :
1) வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள்: அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம்.வீட்டோ அதிகாரம் இல்லாதமற்ற நாடுகள்: அணு ஆயுதங்களை வைத்து கொள்ள கூடாது.
2) வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள்: புதிய அணு ஆயுதச் சோதனை செய்யலாம்.வீட்டோ அதிகாரம் இல்லாத மற்ற நாடுகள்: ஆயுதச் சோதனை செய்யக் கூடாது.
3) வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள்: தீர்மானங்கள் கொண்டு வரலாம், பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தைக் கூட்டலாம், உறுப்பு நாடுகளில் ஏதேனும் பிரச்சினை என்றால் அது குறித்து விசாரணை நடத்தலாம். வீட்டோ அதிகாரம் இல்லாத மற்ற நாடுகள்: தீர்மானத்தில் பரிந்துரைக்க மட்டுமே முடியும், பாதுகாப்புப் பேரவையில் கலந்து கொள்ளலாம் (பேரவை அனுமதித்தால்) உறுப்பு நாடுகளுக்கு பிரச்சனை என்றால் விசாரணை நடத்தும் உரிமை இல்லை.பிரச்சினைகளுக்கான தீர்வைப் பரிந்துரைக்கலாம். கருத்துச் சொல்லலாம்.
4) வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள்: 'தவிர்க்க முடியாத சூழல்' அல்லது 'பேரழிவு ஆயுதம்' போன்ற ஏதாவது பொய்க் காரணம் கூறி நேரடியாகப் போர் நடவடிக்கையில் ஈடுபடலாம். எடுக்கலாம் (வியட்நாம், வடகொரியா, இராக் போர்கள்).வீட்டோ அதிகாரம் இல்லாத மற்ற நாடுகள்:நேரடியாகப் போர் செய்ய முடியாது.
தற்காலிக உறுப்பினர்கள் உட்பட அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து, ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தாலும் ஒரேயொரு 'நிரந்தர உறுப்பு' நாடு 'வீட்டோ' என்று சொல்லி விட்டால் எவரும் எதுவும் செய்ய முடியாது.'வீட்டோ' என்பதை அமெரிக்கா தனது செல்லக் குழந்தையான இஸ்ரேலுக்கு விளையாடக் கொடுக்கும் விளையாட்டுப் பொருளாகும். இதுவரை இந்த வீட்டோ என்ற அதிகாரத்தை பயன்படுத்தி எந்த ஒரு நன்மையான காரியங்களும் செய்யப்படவில்லை. இதை தங்கள் சர்வாதிகார மேலாண்மையை வெளிபடுத்தவே இதுவரை இந்த நாடுகள் பயன்படுத்தி வந்தன என்பதே உண்மை. வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன், போன்ற நாடுகள் மீது போர் நிகழ்த்தபட்ட போது வீட்டோ பவர் உள்ள மற்ற நாடுகள் பொம்மைகளாக மவுனம் சாதித்தன என்பதும் கவனிக்க படவேண்டியது.
அன்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment