Showing posts with label நரேந்திர மோடி. Show all posts
Showing posts with label நரேந்திர மோடி. Show all posts

Jan 25, 2015

மோடியின் மோசடிகள்!?

மோடியின் மோசடிகள் அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவைவிட்டு உலக நாடுகளிலெல்லாம் அவப்பெயரே நரமோடிக்கு.

3 மாசத்துக்கு முந்தி ஐநா வில் இங்லிஸ்லே     மோ(க)டி பேச தடுமாறி ஹிந்தியில் gasp emoticon பேசி விட்டு வந்த ‪மோ(க)டி,. சில நாட்கள் முன்னே குஜராத் சம்மிட் மேடையில் கையில் எந்த பேப்பரும் இல்லாமல், சும்மா சரளமான இங்லிஷில் ஸ்பீடா பிச்சூ பிச்சூ பொளந்து கட்டினாராம். எப்படிங்க.?. வெரி சிம்பிள்.

5 வருஷத்துக்கு முன்னாடியிலிருந்தே அமெரிக்காவில் தடுமாறாமல் சரளமாக இங்லீஷ் பேச grin emoticon ஒபாமாவே பயன்படுத்திய அதேSpeech Teleprompter தொழில் நுட்பத்தைத்தான் மோடியும் இப்போது பயன்படுத்துகிறார்.
அது ஒரு ட்ரான்ஸ்பேரன்ட் கிளாஸ் திரை. பேச நிற்கும் போடியத்துக்கு முன்னே முகத்துக்கு நேராக வைக்கப் பட்டிருக்கும். அதில், எழுத்து ஸ்க்ரோலிங் ஆகி ஓடிக்கொண்டு இருக்கும்... அதை பார்த்து வேகமாக படிக்க வேண்டும்... அவ்ளோதான்.

இதில் என்ன பியூட்டி என்றால், மேடைப்பக்கம் இருப்பவருக்கு மட்டுமே கிளாஸில் ஓடும் எழுத்து தெரியும். ஸ்டேஜுக்கு முன்னே ஆடியன்ஸ் பார்வைக்கு பிளைன் கிளாஸ் மட்டுமே தெரியும்... அதில் ஓடிக்கொண்டு இருக்கும் எழுத்து ஏதும் தெரியாது என்பதால் பேசிக்கொண்டு இருப்பவரை மறைக்கவும் செய்யாது. சூப்பர்லே..?!? smile emoticon.

எனினும் குறிப்பிட்ட கோணத்தில் அமர்ந்து உள்ளவர்களுக்கு மட்டும் லைட் பட்டு கிளாஸ் கிளார் அடிக்கும் போது. அவங்க மட்டும், 'எதுக்கு இந்த கண்ணாடியை மோடிக்கு முன்னாடி வெட்டியா வச்சி இருக்காங்க'ன்னு புரியாம குழம்பிட்டு இருப்பாங்க. அது இல்லைன்னா மோடியின் இங்லிஷ் பேச்சுக்கு பியூஸ் போயிடும்.

இதை எல்லாம் மறைத்து மோடியின் ஆங்கிலப்புலமை குறித்து புகழ்ந்து தள்ளும் மோசடி ஊடகங்களை நம்பும் பாமர மக்களை நினைத்தால்தான் பாவமா இருக்கு..! cry emoticon.

May 22, 2014

மோடியின் கேடித்தனம்!?

மோடியின் சதி அம்பலம் – ABP News சேனல் வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ! May 19, 2014 admin featured, அரசியல், தொழில்நுட்பம். இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்ற மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை திரிக்க வழி கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மோசடி மன்னன் மோடியின் பி.ஜே.பிக்கு கிடைத்த 31 சதவிகித ஓட்டுக்களும் எப்படி கிடைத்தது என்பதை மறைமுக கேமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலம் ABP News சேனல் அம்பலப்படுத்தியுள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் வாக்குச்சாவடிகளில் கணக்கில்லாமல் ஒருவன் ஓட்டு போத்தானை அழுத்துக் கொண்டே இருக்கின்றான். ஆனால் அங்குள்ள தேர்தல் அதிகாரிகள் அதை கண்டும் காணமலுமாக இருக்கின்றார்கள். வாக்குச் சாவடியில் இரண்டு நபர்கள் இருந்து கொண்டு ஆழ் இல்லாத நேரத்திலும் ஆட்கள் ஓட்டு போடு வரும் போது இடையில் சென்று கொண்டும் ஓட்டு பொத்தானை பல முறை அழுத்துகின்றனர்.
வாக்காள அடையாள ஆட்டை உள்ளவரோ அல்லது அந்த வாக்குச் சாவடியில் ஓட்டு போட வேண்டிய நபரோ தான் ஓட்டு இயந்திரத்தின் பட்டனை அழுத்த முடிவும் என்ற நிபந்தனையில் ஓட்டு இயந்திரங்கள் உருவாக்கப்படவில்லை.
எத்தனை முறை பட்டன அழுத்தப்படுகின்றதோ அத்தனை ஓட்டுக்கள் பதிவு செய்யப்படும். அதை யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் அழுத்தலாம். அழுத்தியவர் யார் , அவருக்கு வாக்காளர் அட்டை உள்ளதா , அவர் ஏற்கனவே பட்டனை அழுத்தியுள்ளாரா ? அந்த தொகுதிக்கு உட்பட்டவர் தானா என்பது போற்ற எந்த வித பரிசோதனையும் கட்டுப்பாடும் ஓட்டு இயந்திரத்தில் இல்லை.
இதை கண்காணிப்பதற்கு தான் தேர்தல் அதிகாரிகள் ஆனால் அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டோ அரசியல் வாதிகளுக்கு பயந்து கொண்டோ இதை கண்காணிப்பது கிடையாது.
ஓட்டு இயந்திரத்தில் எந்த வித பாதுகாப்பும் இல்லை என்பதை விளக்கி 3 கணிப் பொறி வல்லுனர்கள் இதற்கனே தணி இணையதளமே உருவாக்கி அதில் இது தொடர்பான தொழில் நுட்ப தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் உருவாக்கியுள்ள இணையதளம் http://indiaevm.org/
இது தான் மோசடி மன்னன் மோடி 31 சதவிகிதம் ஓட்டு., அயோக்கியன் மோடியின் பித்தலாட்டதை பாருங்கள் பகிருங்கள்.

Apr 1, 2014

மோடியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பிடிபட்டனர்!?

நரேந்திர மோடியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் கனேஷ் மால்வியா, மற்றும் வருமான வரி உதவி ஆணையராக இருக்கும் அவரது மனைவி பூனம் ராய் ஆகிய இருவரும் ரு.10 லட்சம் லஞ்சம் பெற்ற போது சிபிஐயிடம் நேற்றுப் பிடிபட்டனர்.

மால்வியாவின் மனைவி பூனம் ராய், பதோரியாவின் வருமான வரி தொடர்புடைய குளறுபடிகளை சரிசெய்ய ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டிருந்தார், அதன் ஒரு பகுதியாகவே இந்த பத்து லட்சத்தை இருவரும் இணைந்து பெற்றனர். பதோரியா என்பவர் ராமாயன் கன்ஸ்டிரக்சன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்.

இந்த செய்தியை தேசிய செய்தியாக மாற்றாமல் பார்த்துக் கொண்டது நரேந்திர மோடியின் மக்கள் தொடர்பு படை.

@ சொந்த மக்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் மோடியின் ஆட்சி நல்லாட்சியா? மோடியின் கரங்களில் படிந்திருக்கும் இரத்தக் கறையை அகற்றவும், மோடியின் குறியீடாகப் பரவியிருக்கும் மதவெறியன் முத்திரையை அழிக்கவும், தொடர் முயற்சிகளை செய்து வருகின்றனர் இந்துத்துவ சக்திகள்.

Jul 25, 2012

பிரதமர் ஆகும் ஆசையில் ஒரு பயங்கரவாதி.?


அஹ்மதாபாத். july, 26: மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த காரணத்தால் குஜராத் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மீது தொடரப்பட்ட வழக்கில் விடுவிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பை 3 வார காலத்திற்கு குஜராத் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

கோத்ரா ரெயில் தீ விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து மோடி தனது வீட்டில் கூட்டிய அவசர கூட்டத்தில் ஹிந்துக்கள் அவர்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதி அளிக்கவேண்டும் என போலீஸ் அதிகாரிகளிடம் உத்தரவிட்டதை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Jun 30, 2012

ஊழல் அற்ற முதல் மாநில முதல்வர்! கேஜ்ரிவால்!!

அகமதாபாத், ஜூன் 30:  குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் ஊழலற்றவர் என்று காட்ட விரும்பினால், முதலில் லோக் ஆயுக்தவை அமைக்க வழிசெய்ய வேண்டும் என்றார் அண்ணா ஹசாரெ குழுவின் அரவிந்த் கெஜ்ரிவால்.

மோடி ஊழல்வாதி என்கிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "மோடியை நான் ஊழல்வாதி என்று சொல்லவில்லை.  ஆனால், ஊழல்களில் தொடர்புடைய தன்னுடைய அமைச்சரவை சகாக்களை அவர் பாதுகாக்கிறார். அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு ஆகாமல் பார்த்துக் கொள்கிறார். அதற்கு, லோக் ஆயுக்த அமைப்பை அமைக்காமல் இழுத்தடிக்கிறார். 


கடந்த 9 ஆண்டுகளாக இது குறித்து முறையிட்டும் லோக் ஆயுக்த அமைப்பை அவர் ஏன் அமைக்கவில்லை? ஊழல் இல்லாத மாநிலமாக குஜராத்தை மாற்ற வேண்டும் என்று மோடி விரும்பினால், முதலில் அவர் லோக் ஆயுக்தவை அமைக்க வேண்டும்” என்றார் கேஜ்ரிவால். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.

May 12, 2012

தீவிரவாதத்தை மறைக்க பாடுபடும் மோடி அரசு!?


அஹ்மதாபாத் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த அறிக்கையில் முதல்வர் நரேந்திர மோடி தொடர்பான தனது புகார் குறித்த முக்கிய ஆவணங்கள் இல்லை என்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி அஹ்மதாபாத் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

Sep 18, 2011

சாத்தானின் போலி உண்ணாவிரதம்!

நரேந்திர மோடி என்கிற மனிதகுல விரோதி, மனிதாபிமானம் இல்லாத மிருகம் 2002-ம் ஆண்டில் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரத்தில் ஹிந்து பயங்கரவாதிகளால் 5000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அச்சமயம் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியினரின் ஆட்சி மத்தியில் நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் ஒரே ஒரு மிதவாத தலைவர் திரு. வாஜ்பாய் ஆவார். சுருங்கச்சொன்னால் தீவிரவாதிகளுக்கு மத்தியில் ஒரு மிதவாதி. குஜராத்தில் பயங்கரவாதி மோடி தலைமையில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான மதகலவரத்தையும் அதை தொடர்ந்து நடைபெற்ற துயரமான சம்பவங்களையும் நினைத்து மனம் வருந்திய பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்வர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதம் இப்போது வெளியே வந்து கொலைகாரன் மோடியை துரத்துகிறது.

இப்போது 9 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கடிதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி வெளி கொண்டுவர பட்டுள்ளது. அந்த கடிதத்தில் வாஜ்பாய் கூறியிருப்பதாவது குஜராத்தில் நடைபெற்ற கலவரமும், அதைத் தொடர்ந்து நடந்த துயரச் சம்பவங்களும் என்னை கடும் மனவேதனைக் குள்ளக்கி உள்ளது. குஜராத்தில் இருந்து எங்களுக்கு புகார்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன. அங்கு சிறுபான்மை மக்கள் உயிர் வாழ்வது கேள்விக்குறியாகி விட்டது, கலவரத்தை நீங்களே (மோடி) முன்னின்று நடத்துவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன, அங்கு என்ன நடக்கிறது, உங்களுக்கு என்னவிதமான உதவிகள் தேவை என்னிடம் கேளுங்கள், உடனே அதை மத்திய அரசு செய்யும், சிறுபான்மையினரின் உயிர்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இந்த நாட்டில் வாழ முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டு விட கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

சிந்திக்கவும்: அமைதி, ஒற்றுமை, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த ஹிந்துத்துவா சாத்தான் வேதம் ஓதுகிறது. வாஜ்பாயின் கடிதம் வெளிவந்திருக்கும் இந்த வேளையில் மோடியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து போகாமல் இருக்க இந்த போலி உண்ணாவிரதம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. வாஜ்பேய்க்கு அடுத்து பாரதிய ஜனதாவில் பெயர் சொல்லும் அளவுக்கு முக்கிய தலைவர்கள் யாரும் இல்லை என்பதால் பயங்கரவாதி மோடி முன்மொழியப்பட்டு வருகிறார்.

மேலும் மோடி குஜராத்தில் பண்ணிய கலவரத்தால் பாரதியஜனதா கட்சி மீண்டும் மத்தியின் ஆட்சியை பிடிக்கும் கனவு நினைவாகமலே இருந்து வருகின்றது.  இது இரண்டையும் ஒரே நேரத்தில் சரிசெய்யவே இந்த போலி உண்ணாவிரதம். என்று எது போன்ற பயங்கரவாதிகள் தண்டிக்கப் படுகிரார்களே அன்றே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் இல்லையேல் இந்தியாவை பாதுகாக்க யாராலும் முடியாது.

Sep 13, 2011

இனப்படுகொலையாளன் தண்டிக்கப்படவேண்டும் !!

புதுடெல்லி : குஜராத் கலவரத்தில் தங்களின் குடும்பத்தினர் தன்னுடைய கண்ணெதிரே கொடூரமாக கொலைச்செய்யப்பட்டதை நேரில் கண்டவர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் நடக்கும் கலவரம் தொடர்பான வழக்கில் எதிர்பார்ப்பு அதிகம்.

ஏனெனில் குல்பர்க் கூட்டுப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஒன்பது வருடங்களாக நீதிவேண்டி காத்து கிடக்கின்றனர். இதில் இம்தியாஸ் பதான் என்பவரும் ஒருவர். இவர் தன்னுடை எட்டு குடும்ப உறப்பினர்களை தன் கண்முன்னே பலி கொடுத்தவர்.

குஜராத் முதல்வர் நர மோடிக்கு எதிராக இவ்வழக்கில் சாட்சி சொன்னவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2002 பிப்ரவரியில் நடைபெற்ற குஜராத் கலவரத்தின் கொடூரத்தின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் விடுபட முடியாமல் உள்ளார். அக்கலவரத்தில் தன்னுடைய தாய் உட்பட தன் குடும்பத்திலிருந்து எட்டு நபர்களை குல்பர்க் கூட்டுப் படுகொலையில் பலி கொடுத்தள்ளார்.

இம்தியாஸ் போன்று சிலர் மட்டுமே நீதிமன்றம் சென்று தாங்கள் குல்பர்கில் கொலைச் செய்யப்பட்ட இஹ்சான் ஜாஃப்ரி நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்து உதவி கேட்டதை நேரில் கண்டதாக கூறியவர்கள். ஆனால் எந்தவித உதவியும் மோடியால் வழங்கப்படவில்லை.

மேலும் இது குறித்து இம்தியாஸ் கூறியுள்ளதாவது; ஜாப்ரி அவர்கள் உதவி கேட்டு நரேந்திர மோடியை அழைத்ததாக கூறினார். அதற்கு நான் மோடி என்ன பதில் கூறினார் என்று வினவினேன் அதற்கு ஜாஃப்ரி அவர்கள் மோடி உதவி செய்தவதற்கு பதிலாக குற்றம் சாட்டுவதாக கூறினார் என்றார்.

அதனால் மனம் உடைந்து போன ஜாஃப்ரி அவர்கள் கலவரக்காரர்களிடம் தன்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் ஆனால் பெண்களையும் குழந்தைகளையும் விட்டு விடுங்கள் என்று கேட்டார். ஆனால் நான்கு பேர் உள்ளே புகுந்து அவரை ரோட்டில் வைத்து வெட்டி கொன்றனர் என்று கூறினார்.

இவ்வழக்கில் நர மோடி உட்பட போலிஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் மற்றும் சங்க பரிவார கும்பலைச் சேர்ந்தவர்கள் என 61 பேர் மீது வழக்கு தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நீதிக்காக காத்திருக்கும் இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி நிச்சயமாக தனக்கு நீதி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் இம்தியாஸ் கூறியுள்ளதாவது; உச்ச நீதிமன்றத்தால் மோடி தண்டிக்கப்படுவார் என்று தான் நம்புவதாக கூறியுள்ளார்.இம்தியாஸ் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களில் நீதிக்காக காத்திருக்கும் நபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Aug 18, 2011

சஞ்சீவ் பட் கைது வாரன்ட், நர மாமிச அரசு !!

ஜாம்நகர் : குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் பங்கினைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ்பட்டை கைதுச்செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1990-ஆம் ஆண்டு பதிவுச்செய்த வழக்கில் கம்தாலியா தாலுக்கின் செசன்ஸ் நீதிமன்றம் இந்த வாரண்டை பிறப்பித்துள்ளது. போலீஸ் தாக்கிய வழக்கில் ஒருவர் இறந்தது தொடர்பாக சஞ்சீவ் பட் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. உத்தரவு பிறப்பித்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாதை தொடர்ந்து சஞ்சீவ் பட்டிற்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வகுப்பு வாத மோதல்களை எதிர்கொள்ள போலீஸ் நடவடிக்கையில் ஒருவர் இறந்த சம்பவத்தில் பட் உள்பட ஏழு போலீஸ்காரர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டது. க்ரிமினல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவேண்டும் என்ற அதிகாரிகளின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்திருந்தது. இதனைத்தொடர்ந்து கீழ் நீதிமன்றத்தின் உத்தரவினை குறித்து கேள்வி எழுப்பி அரசு மனு தாக்கல் செய்தது.

1996-ஆம் ஆண்டு தாக்கல் செய்த இந்த மனுவை கடந்த மாதம் அரசு தரப்பு வழக்கறிஞர் வாபஸ் பெற்றிருந்தார். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் மீது நீதிமன்றம் நடவடிக்கையை துவக்கியது. ஏற்கனவே இம்மாத துவக்கத்தில் சஞ்சீவ் பட்டை பழிவாங்கும் நோக்கில் அவரை பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது மோடி அரசு.

Aug 14, 2011

குஜராத்தை ஆள்வது மோடியா? அல்லது கேடியா!?

அஹ்மதாபாத்:2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான மொபைல் ஃபோன் கால் ரிக்கார்ட் செய்த அசல் சி.டியை ஆஜராக்கவில்லை என குற்றம்சாட்டி மோடி அரசு ஐ.பி.எஸ் அதிகாரி ராகுல் சர்மாவுக்கு குற்றப்பத்திரிகை அளித்துள்ளது.

இந்த குற்றப்பத்திரிகை நகல் ராகுல் சர்மாவுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டதாக மாநில அரசு செய்தித் தொடர்பாளர் ஜெயநாராயண் வியாஸ் தெரிவித்தார்.
குற்றப்பத்திரிகை நகலை தான் பெற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மொபைல்ஃபோன் விவரம் அடங்கிய சிடி-யை அளிக்காதது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ராகுல் சர்மாவுக்கு அளித்த நோட்டீஸ் காலம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளக்கம் கோரும் நோட்டீஸ் கடந்த ஜனவரி 27-ல் அளிக்கப்பட்டது. இதையடுத்து இறுதி நோட்டீஸ் ஜூலை 28-ல் அளிக்கப்பட்டது. அதில் 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

2002-ம் ஆண்டு நிகழ்ந்த முஸ்லிம் இனப்படுகொலை சம்பவத்தின் போது நரோடா காம், நரோடா பாட்டியா, குல்பர்க் சொஸைட்டி ஆகிய இடங்களில் பாதுகாப்பு பொறுப்பேற்றிருந்த அதிகாரிகளிடமிருந்து வந்த மொபைல் ஃபோன் அழைப்புகள் அடங்கிய சிடி-யை அவர் அளிக்கவில்லை என ராகுல் சர்மா மீது குற்றம் சாட்டப்பட்டது.

காவல்துறை துணை ஆணயர் (டிசிபி) பதவியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டபோது சிடி-க்களை தனது உயர் அதிகாரிகளிடம் சர்மா அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அவருக்கு மாநில அரசு நோட்டீஸ் அளித்தது.

தனக்கு எந்த அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்ற விவரம் கோரி நீதிமன்றத்தில் ராகுல் சர்மா மனு தாக்கல் செய்திருந்தார். இதை குஜராத் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. சஞ்சீவ் பட், ராகுல்சர்மாவுக்கு பிறகு மோடி அரசு தன்னை வேட்டையாடுகிறது என நேற்று முன் தினம் ஐ.பி.எஸ் அதிகாரியான ரஜனீஷ் ராய் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தேவைப்பட்டால் தலையிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். ஆனால் அடுத்த நாளான சனிக்கிழமையே ராகுல் சர்மா மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சில விஷயங்களில் மத்திய அரசு தலையிட விதிமுறைகள் அனுமதி அளிக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு விருப்பம் தெரிவித்தால், மத்திய அரசு தலையிட முடியும் என்று சிதம்பரம் குறிப்பிட்டிருந்தார். ** மோடி போன்ற கேடிகள் இந்தியாவில் உலவுவதால் இந்தியா புள்ளரசாக போவது நிச்சயம்.**

Aug 12, 2011

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?

ஆமதாபாத், ஆக. 12: 2002-ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக மற்றொரு ஐபிஎஸ் அதிகாரிக்கு அந்த மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தெரியவந்திருக்கிறது.

குஜராத் காவல்துறையில் டிஐஜி அந்தஸ்தில் பணிபுரியும் ராகுல் சர்மா என்கிற ஐபிஎஸ் அதிகாரி, அங்குள்ள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.

2002 வன்முறை நேரத்தில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகள் அடங்கிய சிடிக்களை சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்ஐடி) உள்ளிட்ட அமைப்புகளிடம் எந்த முன் அனுமதியும் பெறாமல் கொடுத்ததற்காக உங்கள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்று கேட்டு அரசு நோட்டீஸ் அனுப்பிருப்பதற்கு அந்த மனுவில் ராகுல் சர்மா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அபிலாஷா குமாரி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. எந்த அடிப்படையில் தமக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது என்று கேட்டு மாநில அரசுக்கு தாம் கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் அதுபற்றிய தகவல்களை அரசு தரவில்லை என்றும் மனுவில் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

விளக்கமளிப்பதற்கு சர்மாவுக்கு வழங்கிய கெடு வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. இதன்பிறகு அவர்மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே குஜராத் வன்முறை தொடர்பாக சஞ்சீவ் பட் என்கிற ஐபிஎஸ் அதிகாரி கடந்த செவ்வாய்க்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்., இவை அனைத்தும் முதல்வர் மோடியின் உத்தரவின் பேரில் அரங்கேறியது குறிப்பிட தக்கது.

கூட்டம் கூட்டமாய் முஸ்லிம்களை கொலைசெய்ய உற்சாக மூட்டியதும், பொருளாதாரத்தை சூறையாட ஆலோசனை வழங்கியதும் நரேந்திர மோடியின் நேரடி உத்தரவுகளே! மேலும், முஸ்லிகளை கொலை செய்தவர்களையும், அவர்களை கற்பழித்தவர்களை பாராட்டி பாதுகாப்பும் அளித்ததும் இந்த நரேந்திர மோடியே தான், மட்டுமல்லாமல் மூன்று நாட்களுக்குள் எல்லாவற்றையும் முடித்துவிடுங்கள்.

அதற்கு பிறகு சட்டம் ஒழுங்கை நான் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்று ஆலோசனையை வழங்கியது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனாலும் மூன்று நாட்களுக்குள் சட்டம் ஒழுங்கை கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவராமல் 2 மாதத்திற்கும் மேலாக இனப்படு கொலையை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

மனித குலமே வெட்கப்படும்படி இந்துத்துவ தீவிரவாதிகள் நரேந்திரமோடியின் உதவியுடன் தாங்கள் செய்த படுகொலைகளையும் கற்பழிப்புகளையும் பெருமையுடன் விவரிக்கும் காட்சிகளை காணும் யாருமே அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியாது.

தெஹல்கா ரகசியமாக படம் பிடித்த வீடியோ காட்சிகளில் ஒவ்வொருத்தரும் தாங்கள் செய்த செயல்களை விபரமாக எடுத்துச் சொல்லிடும்போது நடந்த அக்கிரமங்கள் அனைத்தும் நம் கண்முன்பாக வருகின்றன. இத்தகைய கொடூரங்கள் அனைத்தையும் அவர்கள் தங்களது வீர சாகசங்கள் போன்று விபரிப்பது அவர்கள் பயிற்றுவிக்கப்பட்ட சங்பரிவாரத்தின் கொலைமுகத்தை தெளிவாகவே காட்டுகிறது.

ஆனால் இவை அனைத்தும் முதல்வர் நரேந்திர மோடியின் ஆமோதிப்பின் பேரில் நடந்ததுதான் அக்கிரமத்திலும் அக்கிரம். இந்த கொடியவன் நரேந்திரமோடி மனிதகுலத்திற்கே ஒரு அவமானம். அவன் முதல்வராய் இருப்பது என்பது இந்திய இறையாண்மை செத்துப்போனதையே நமக்கு அறிவிக்கிறது. மத்திய அரசு உடனே தெஹல்காவின் வீடியோக்களை பரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.#

Jul 4, 2011

பொய் சொல்லும் மோடி அரசு! காங்கிரஸ் கண்டனம்!

JULY 05, அஹ்மதாபாத்: :2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாசிச ஹிந்துத்துவா பயங்கரவாத வெறியர்கள் முஸ்லிம்களை கொடூரமாக கொன்றுகுவித்து மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்தினர்.

இக்காலக் கட்டத்தின் ஆவணங்களை அழித்துவிட்டதாக மாநில அரசின் வழக்கறிஞர் நானாவதி கமிஷன் முன்பு தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்காலிகமானதும், முக்கியத்துவம் இல்லாததுமான ஆவணங்கள்தாம் அழிக்கப்பட்டன என குஜராத் மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, மாநில அரசு மற்றும் மூத்த அரசு வழக்கறிஞரின் முரண்பட்ட அறிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இச்சம்பவத்தில் குஜராத் அரசு மக்களிடம் பொய் கூறுகிறது என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை தொடர்பாக அரசு ஏராளமானவற்றை மறைத்துள்ளது என்பதற்கு இது ஆதாரமாகும். ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக ஒருபுறம் அரசு வழக்கறிஞர் கூறுகிறார். மறுபுறம் உள்துறை அமைச்சகம் இல்லை என கூறுகிறது. அவ்வாறெனில் அரசு முதலில் கூறியது பொய்யாக இருக்கவேண்டும்.

அல்லது இரண்டாவதாக கூறியது பொய்யாக இருக்கவேண்டும். ஆவணங்கள் அழிக்கப்படவில்லையெனில் அவை எங்குள்ளன?ஆவணங்கள் வழக்கின் சட்டநடவடிக்கைகளின் பகுதியாக அமைந்துள்ளனவா? இதனை நாடு அறிய விரும்புகிறது என சிங்வி தெரிவித்துள்ளார்.

Jun 2, 2011

மோடியின் ஆட்சியில் நடப்பது என்ன? அதிர்ச்சி ரிப்போர்ட்!!

JUNE 2, ஊழலுக்கு எதிராக போர் முரசம் கொட்டி வரும் சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே   நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத் குறித்து தனது மனக்குமுறல்களை கொட்டியுள்ளார்.

மோடி யின் அரசு ஓர் ஊழல் நிறைந்த அரசு என்றும் அது ஏழை விவசாயிகளிடம் இருந்து நிலங் களை கையகப்படுத்தும் செயலில் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து வருகிறது என்றும் சமூக நல ஆர்வலர் அன்னாஹசாரே கடுமை யாக சாடியுள்ளார்.

மக்கள் உயிர் வாழ அடிப்படை தேவையான தண்ணீர் வசதியை ஒழுங்கு செய்து கொடுக்க முடியாதவன்தான் இனப்படுகொலை  புகழ்  மோடி. இவர்தான் இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராம்,  இந்த மாநிலம்தான் நம்பர் ஒன் மாநிலமாம்,

மேலும் குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் பல கிலோமீட்டர் நடந்து சென்று குடிநீர் சுமந்து வரும் கொடுமையை இந்த படத்தை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

ஹசாரேயின் கருத்துக்கள் மோடி அரசின்  கொடூரத்தை வெளிப்படுத்தி காட்டுவதாக இருந்தது.  இருப்பினும் இனப்படு கொலை தவிர்த்து மோடியின் நிர்வாகம் நல்ல முறையில் நடை பெறுவதாக ஒரு குருட்டு கருத்தோட்டம் திட்டமிட்டு பரப்பப்பட்டு வந்தது.

2002ஆம் ஆண்டில் நடைபெற்ற இனப்படுகொலை நிகழ்வுகளுக்கும் மோடிக்கும் எவ்விதத் தொடர்பும்  இருக்க முடியாது என பல ஊடகங்களும் மோடியை வளர்ச்சிக்கான  அரசியல் வாதியாக  வர்ணித்தன. காந்தியடிகள் பிறந்த மாநிலம் ஆதலால் அங்கு பூரண  மது விலக்கு என்றுமே நடைமுறையில் இருப்பது வழக்கமான ஒன்று.

ஆனால் அதைக்கூட மோடியின் சாதனையாக டமாரம் அடிக்க ஒரு கூட்டம் காத்திருந்தது,  மோடிக்கு முன்பாக ஆட்சி செய்தவர்கள் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால் அதைக்கூட மோடியால் செயல்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் அன்னாஹசாரே வெளியிட்ட கருத்துக்கள் மாயை களை உடைத்து உண்மைகளை வெளிப்படுத்தியது. குஜராத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருப்பதாக கூறப்படுவது ஒரு மாயை என்றும் மாநிலத்தில் பாலைவிட அதிகமாக மதுபானங் கள் தான் ஆறாக ஓடுகின்றன என்றும் கூறி பரபரப்பு தீயை பற்றவைத்திருக்கிறார்.

லஞ்ச ஊழலுக்கு எதிராக பாடுபட்டுவரும் அன்னாஹசாரே   கடந்த மாதம்  மோடி அரசை நல்லாட்சி என்று பாராட்டினார். பின்னர் அது தவறு என்று உணர்ந்து கொண்டதாக கூறி தனது மோடி ஆதரவு கருத்துக் களை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

May 30, 2011

மோடி ஆட்சியில் "குஜராத்தில்" கடும் குடிநீர் பஞ்சம்!!

மே 30,  குஜராத்தில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.

தலைநகர் அகமதாபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொது குழாயில் குடிநீருக்காக பெண்கள் இப்படி காத்துக்கிடக்கின்றனர்.

மக்கள் உயிர் வாழ அடிப்படை தேவையான தண்ணீர் வசதியை ஒழுங்கு செய்து கொடுக்க முடியாதவன்தான் இனப்படுகொலை பயங்கரவாதி மோடி.

இவர்தான் இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராம்,  இந்த மாநிலம்தான் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாம்,

மோடி செய்த இனப்படுகொலையை மறைக்க ஹிந்துத்துவா பத்திரிக்கைகள் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து பயங்கரவாதி மோடி மீது படிந்த கரையை துடைக்க பார்க்கின்றன.

குஜராத்தின் பயங்கரவாதி மோடி ஆட்சியை பற்றி சில தினங்களுக்கு முன் காந்தியவாதி அன்னா ஹஸாரே கூறியதாவது,

இந்தியாவிலேயே குஜராத்தில் 'தான்" அதிகமாக லஞ்ச ஊழல் உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில் காந்தி பிறந்த இம்மண்ணில் காந்தி எதை ஒழிக்க பாடுபட்டாரோ அந்த மது விற்பனை காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றார்.

இந்த மாநிலத்தில், பால் விற்பனையை விட மது விற்பனைதான் அதிகமாக உள்ளது என கோபம் பொங்க தெரிவித்தார்.

May 28, 2011

மத்திய அரசே அன்னா ஹஸாராவை காப்பாற்று!!

மே 29 என்னை கொள்வதற்கு முப்பது லட்சம் விலை விலை பேசப்பட்டதாகவும், அந்த நபர் என்னை கொள்ள மறுத்து விட்டதாகவும் அன்னஹசாரே கூறியுள்ளார் .


இந்த செய்தி இந்திய நாட்டையும், காந்திய வாதிகளையும், சமாதானத்தை விரும்பும் இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவுள்ளது.

இதன் பின்னணியில் இருப்பது யார்? என்று அவர் கூற மறுத்து விட்டார். அவர் அதை கூற மறுத்து விட்டதில் இருந்தே அவர்கள் சாதாரண ஆள்கள் இல்லை என்பது தெளிவாகிறது.

இருந்தாலும் ஏற்கனவே தேசபிதா மகாத்மாவை கொன்ற கயவர் கூட்டம் தான் இதற்க்கு பின்னில் இருக்கும் என்று காந்தியவாதிகள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

அரசு இவர்கள் விசயத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என தேச நலம் விரும்பிகள் எதிர்பார்க்கிறார்கள். அன்னா ஹசாரே சமீபத்தில் மோடியியை பற்றி கடுமையான விமர்சனத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

May 26, 2011

குஜராத்தில் லஞ்சம், மது, ஊழல்!! அன்னா ஹசாரே அதிரடி!!

தனது கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்ட அன்னா ஹசாரே, குஜராத்தின் உண்மை நிலையை நேரில் கண்டு மனம்வெதும்பி அறிக்கை சமர்பித்தார்.

சிறிது நாட்களுக்கு முன் தன்னால் புகழப்பட்ட மனித மிருகம் நரேந்திர மோடியை குறித்து அன்ன ஹசாரே இப்பொழுது அதிர்ச்சி தகவல்களை அளித்துள்ளார்.

இந்தியாவிலேயே குஜராத்தில் 'தான்" அதிகமாக லஞ்ச ஊழல் உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் காந்தி பிறந்த இம்மண்ணில் காந்தி எதை ஒழிக்க பாடுபட்டாரோ அந்த மது விற்பனை காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றார்.

இந்த மாநிலத்தில், பால் விற்பனையை விட மது விற்பனைதான் அதிகமாக உள்ளது என கோபம் பொங்க தெரிவித்தார்.

லோக்பால் பில் தயாராக்குவதர்க்காக குஜராத்திற்கு வந்தார் அண்ணா ஹசாரே. அப்போது அவர் பொதுமக்களிடம் கையெழுத்துகள் சேகரித்தார்.

அச்சமயம் இவர் நரேந்திர மோடியை குறித்தும் குஜராத் மாநிலத்தை குறித்தும் அறிய முடிந்தது என்றும், "இவரை பற்றியா நான் பாராட்டினேன்?" என்றும் கவலை தெரிவித்தார்.

"என்னுடைய இந்த போராட்டம் வெற்றி கண்டவுடன், எனது அடுத்த போராட்டம் குஜராத்தை நோக்கியே அமைந்திருக்கும். காந்தியை கொன்ற இவர்களிடம் இருந்து குஜராத்தை கைப்பற்றுவதுதான் என்னுடைய அடுத்த லட்சியம்" என்றார்.

அன்னா ஹசறேயின் அடுத்த போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இனியாவது ஹிந்துத்துவா பிடியில் உள்ள பத்திரிக்கைகளின் பொய் செய்திகளை நம்பி "குஜராத்தில் முனேற்றம்" என்ற பிரச்சாரத்தை நல்லவர்கள் நிறுத்தி கொள்ளவேண்டும். இல்லையேல் நீங்களும் அவரைப்போல் வருத்தப்படுவீர்கள்.

அன்னா ஹசாரேயோடு இணைவோம் ஹிந்துதுவா பாசித்தையும், ஊழலையும் ஒழித்து நம் நாட்டை முனேற்ற பாதையில், அச்சமற்று மக்கள் வாழவழி செய்வோம்.

நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்!!

மே 27, புதிதாக ஆட்சியில் அமர்ந்த உடன் ஜெயலலிதா ஒரு அறிவிப்பை செய்தார்.

அது என்ன வென்றால் இனி மக்கள் அஞ்சாமல் நிம்மதியாக வாழலாம் என்று!

அவர் அப்படி சொல்லி ஒரு நாள் கூட, முடியவில்லை சிறுபான்மை சமூக அதிமுக மத்திய அமைச்சர் மரியம் பிச்சை விபத்தின் மூலம் கொல்லப்பட்டார்.

அது சம்மந்தமாக இதுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. விபத்து நடத்திய லாரி கூட இதுவரை கண்டுப்பிடிக்க படவில்லை.

இதுவே அமைச்சர் ஒரு ஹிந்துவாக இருந்தால் ஐ.எஸ்.ஐ சதி என்று சொல்லி , அந்த இயக்கத்தோடு தொடர்பு, இந்த இயக்கத்தோடு தொடர்பு என்று இதுவரை எத்தனையோ? அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யபட்டு இருப்பார்கள்.

நடந்த இந்த சம்பவத்தை சில பத்திரிக்கைகள் பாகிஸ்தான் ஐ எஸ் ஐ என்பார்கள், ராமகோபாலன் அப்கானிஸ்தான் தலிபான்கள் என்பார், இல்லை, இல்லை, கஷ்மீர் லஷ்கரே அமைப்புதான் காரணம் என்பார்கள் காவல்துறை கண்ணியவான்கள்.

அதுவெல்லாம் இல்லை தாவூத் இபுராஹிம் தான் என்பார்கள் நமது வார இதழ்களாகிய ஜூனியர், சீனியர் விகடன்மார்கள். இதில் எதுவுமே இல்லை, இந்த விபத்தை நடத்தியது ஒரு புது அமைப்பு என்று சொல்லவார்கள் தினமணியும், தினமலரும் போன்ற பார்பன ஹிந்துத்துவா நாளிதழ்கள்.

நீங்கள் யார் சொல்லவதும் சரியில்லை நாங்கள் துப்பறிந்து கண்டுபிடித்தோம் என்று உலகத்தில் இல்லாத ஒரு புதிய பெயரை சொல்வார் பாசிச ஊது குழலாகிய நக்கீரன்.

இப்படி கற்பனையிலேயே துப்பு துலக்கும் இந்த துப்பறியும் பத்திரிகை சம்பவான்கள் எல்லாம், ஏன் இன்னும் தங்கள் கற்பனை குதிரையை ஓடவிடாமல் இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது நமக்கு சந்தேகம் வருகிறது.

ஜெயலலிதாவின் பதவி ஏற்ப்பு விழாவிற்கு வருகை புரிந்த குஜராத் இனப்படுகொலை நாயகன் நரேந்திர மோடியை பார்த்து சிறுபான்மை மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. மோடியின் வருகையால் அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்றுஅஞ்சினர்.

இந்நிலையில் தமிழகத்தில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி கொடுக்கப்பட்டது பிடிக்காமல் "ஹிந்துத்துவா" இந்த விபத்தை நடத்தி இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

இந்த துப்பறியும் பத்திரிக்ககளும் வாய்திறக்க மறுக்கின்றன, விபத்தை நடத்திய லாரியும், லாரி டிரைவரும் இதுவரை பிடிக்கப்படவில்லை. அதுவும் இந்த லாரி கேரளாவை சேர்ந்தது என்ற செய்தி இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கோட்டை என்று கேரளா மாநிலத்தை சொல்லலாம். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யூனிட்கள் ( சிறு சிறு படையணிகள் ) அதிகம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றுதான் கேரளா மாநிலம்.

முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான பழனி பாபா அவர்களை கொன்றவர்களும் கேரளத்து ஆர்.எஸ்.எஸ். காரர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பழனி பாபாவை கொல்ல கேரள ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து ஆட்களை தெரிவித்தார்கள் தமிழக ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி இயக்கத்தினர்.

கேரள ஆர்.எஸ்.எஸ். கார்கள் கேரளத்தில் இருந்து ஒரு அம்பாசிடர் கார் மூலம் தமிழகம் வந்து பழனி பாபாவை வெட்டி கொலை செய்து விட்டு திரும்பிச் சென்றார்கள். இதே போல் அமைச்சர் மரியம் பிச்சை அவர்கள் விசயத்திலும் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

வந்துவிட்டு போனதோ கொலையாளி மோடி ! கொல்லப்பட்டதோ சிறுபான்மை இனத்தை சார்ந்தவர்! குஜராத்தில் நடப்பதை போலவே நடந்திருக்கிறது! தமிழகத்திற்கு வருகை புரிந்த மோடியின் தூண்டுதலின் பெயரில் இது நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

புதிய அரசு சிபி ஐ விசாரணை நடத்துமா? சி.பி.சி.ஐ.டி விசாரணை அந்த அளவுக்கு உண்மைகளை வெளி கொண்டுவர போதுமானதாக இருக்காது என்றே நாடு நிலையாளர்கள் கருதுகிறார்கள்.

May 22, 2011

குஜராத்தில் பெண் எம்.பி யை அவமானப்படுத்திய மோடி!!

மே 23, . குஜராத்தின் கோத்ராவில் உள்ள தாகூ கிராமத்தில் விவசாயிகளுக்கான அரசு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் குஜராத் இனபடுகொலை முதல்வர் நரேந்திரமோடி அழைக்கப்பட்டிருந்தார். உடன் காங்கிரஸ் கட்சியின் பழங்குடியின பெண் எம்.பி. பிரபாபென் தவியாத் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சி.கே. ரஜோலி உள்ளிட்ட காங்கிரஸ் நிருவாகிகள் கலந்து கொள்ள வந்தனர்.

பாதுகாப்பு என்று பொய் காரணம் சொல்லி விழா மேடையில் காங்கிரஸ் எம்.பி.க்கும் மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. அரசு விழாவில் கலந்து கொள்ள சட்டமன்ற உறுப்பினர் ரஜோலிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரஜோலி தலைமையில் பயங்கரவாதி மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடன் அவர்களை மோடியின் பயங்கரவாத காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து மேடையில் இருந்த காங்கிரஸ் பெண் எம்.பி. பிரபாபென் தவியாத், முதல்வர் நரேந்திரமோடியின் அருகில் சென்று ஏன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்யுங்கள் என மோடியை கேட்டுள்ளார்.
இதனை கவனித்த மோடியின் பயங்கரவாத காவல்துறையை சேர்ந்த பெண் காவல்துறையினர் எம்.பி.யை கட்டாயப்படுத்தி மேடையைவிட்டு கீழே இறக்கிவிட்டனர்.

பயங்கரவாதி மோடியும் இதை சிறிதும் பொருட்படுத்தாமல் அமைதியாக இருந்துள்ளார். இது குறித்து காங். எம்.பி. கூறுகையில், நடப்பது அரசு விழா, அரசின் செலவில்தான் நடத்தப்படுகிறது. பா.ஜ.க. கட்சியினர் கொண்டாடும் விழா அல்ல. பொது விழாவில் எந்தக் கட்சியினரும் கலந்து கொள்ளலாம். என்றார்.

குஜராத் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான அர்ஜூன் மோஹோத்வாடியா கூறுகையில், எம்.பி.யை அவமானப்படுத்திய மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்றார்

May 17, 2011

ராஜபக்சே vs நரேந்திர மோடி!! ஒரு ஆய்வு!!

May 18, தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்கும் நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெறுகிறது.

குஜராத்தின் முஸ்லிம்களை ஒரு பாரிய இனப்படுகொலைக்கு உள்ளாக்கிய பயங்கரவாதி மோடிக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும் ஜெயலிதாவின் வலது புறம் மோடியும், இடது புறம் பார்பன வர்ணாசிரம கொள்கை கோமாளி சோவும் அமர்ந்து உணவருந்துவதை பார்க்க கேவலமாக இருந்தது.

எப்படி? இனப்படுகொலை பயங்கரவாதி ராஜபக்சேவை திருப்தி கோவிலுக்கு வருவதை நாம் எதிர்தொமோ அதுபோல்தான் இதுவும்.

ராஜபக்சேவுக்கும் நரேந்திர மோடிக்கும் எந்த ஒரு வித்தியாசமும் கிடையாது. அவன் ஈழத்திலே இனப்படுகொலையை நடத்தினான். இவன் இந்தியாவிலே குஜராத் மாநிலத்திலே நடத்தினான்.

ஈழத்திலே ராஜபக்சே எப்படி குழந்தைகளையும், பெண்களையும் கொன்று குவிதானோ அதுபோல் குஜராத்திலே பெண்களும், குழந்தைகளும் வீடுகளுக்குள் வைத்து எரித்தும், வெட்டியும் கொல்லப்பட்டனர்.

ஈழத்திலே எப்படி பெண்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாக்கப்ட்டார்களே அதுபோல் குஜராத்தில் ஹிந்துவா வெறியர்களால் முஸ்லீம் பெண்கள் கற்பழிக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டனர்.

ஈழத்திலே இந்த கொடூரங்களை சிங்கள இனவெறி ராணுவம் செய்தது. குஜராத்திலே ஹிந்துத்துவா வெறிபிடித்த காவி கயவர்கள் இதை செய்தார்கள்.

இந்த காமகொடுரர்கள் கர்ப்பிணி பெண்களின் வயிற்ரை கிழித்து அதில் இருந்து சிசுவை எடுத்து அதை தீயில் போட்டு கொன்ற கொடுராமானவர்கள்.

May 15, 2011

நரேந்திர மோடியும் குஜராத்தும்!! வெளிவரும் உண்மைகள்!!

May 16 குஜராத்: 2002 ஆம் ஆண்டில் இஸ்லாமிய இனப் படுகொலையை நடத்தியவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

இப்போது, அவர், இந்தியா விலேயே நல்லாசி நடத்தி, சாதனை படைப்பதாக பார்ப்பன ஏடுகளும், ‘இந்துத்துவா’ சக்திகளும் புகழ் மாலை சூட்டத் தொடங்கியிருக்கின்றன.

தமிழின உரிமை பேசும் தோழர்களும் கூட இந்த பிரச்சார மாயை உண்மையென நம்பி மோடிகளின் புகழ் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை என்ன? அதையும் பார்ப்போம்.

ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கியுள்ள அன்னா அசாரேயிடமிருந்து, பாராட்டு மாலை வந்து விழுந்தது. மோடி - குஜராத் மாநிலத்தை வெகுவேகமாக வளர்ச்சிப் பாதையில் அழைத்துப் போகிறார் என்று.

தமிழ்நாட்டில், குருமூர்த்திகளும் சோ இராமசாமிகளும் தீவிரப் பரப்புரை செய்து வருகிறார்கள். இந்தியாவின் பிரதமர் பதவி வேட்பாளருக்கு மோடியை முன்னிறுத்துவதே, இந்தப் பரப்புரையின் உள்நோக்கம்.

இந்த நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, மோடியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வும் நடந்தது. சஞ்சீவ் ராஜேந்திரபத் என்ற குஜராத்தின் IPS போலீஸ் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு. குஜராத் கலவரத்தைப் பற்ற வைத்தவரே மோடி தான் என்பது இவரது குற்றச்சாட்டு.

கலவரத்தின்போது உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டிய மோடி, ‘முஸ்லீம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார் என்பதே வழக்கு. அந்த உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில், இருந்தவர், இந்த அதிகாரி.

கொடூரமான குஜராத் இனப் படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து கரை சேர்ந்து விட்டதாக நம்பிக் கொண்டிருந்த மோடிக்கு, இது ஒரு பேரிடி. இந்த அதிகாரி, பிரமாண வாக்குமூலமாக வழக்கை தாக்கல் செய்துள்ளார். வாக்குமூலத்தில் தவறான தகவல் இடம் பெற்றிருந்தால் அது கடுமையான குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சபர்மதியில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத் கலவர பூமியானது. அப்படி ஒரு கலவரம் இந்தியாவில் நடந்ததே இல்லை. மூன்றே நாட்களில் குஜராத்தின் 19 மாவட்டங்களில் 3500 முஸ்லீம்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர்.

மோடி அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தவர் ஹேரன் பாண்டி. இவர் ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்தவர்தான். அவராலேயே இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தப் படுகொலைகள் பற்றி சிறப்பு புலனாய்வுக்குழு உச்சநீதிமன்ற ஆணையின் கீழ் நியமிக்கப்பட்டு விசாரித்தது.

ஆனால், ஆட்சி நிர்வாகம் மோடியிடம் இருந்ததால் உயர் அதிகாரிகள் உண்மையை வெளிப்படையாகக் கூறத் தயாராக இல்லை. சிறப்புப் புலனாய்வுக் குழுவும் நேர்மையாக செயல்பட வில்லை. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவே பதிவு செய்ய மறுத்தது.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.பி.சவந்த் மற்றும் ஹோஸ்பர்ட் சுரேஷ் ஆகியோரைக் கொண்ட ‘குடிமக்கள் பேராயம்’ என்ற சுயேச்சையான விசாரணை மையம் பல உண்மைகளைப் பதிவு செய்து சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்தது.

இந்த நீதிபதிகள் முன் தோன்றி மோடிக்கு எதிராக சாட்சியளித்தவர்களில் ஒருவர் வருவாய்த் துறை அமைச்சர் ஹிரேன் பாண்டியா, பிப். 27 ஆம் தேதி மோடி தனது வீட்டில் நடத்திய கூட்டத்தில் தானும் கலந்து கொண்டதாகவும், அப்போது இந்துக்கள் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைகளை காவல்துறை தடுக்க வேண்டாம் என்று மோடி உத்தரவிட்ட தாகவும் கூறினார்.

பின்னர் மர்மமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டார். மோடிக்கு ஆதரவாக உண்மை களை மறைத்த காவல்துறை அதிகாரிகளான பி.சி. பாண்டே, பி.கே. மிஸ்ரா, அசோக் நாராயணன் போன்ற பார்ப்பன அதிகாரிகளுக்கு அவர்கள் பதவி ஓய்வுக்குப் பிறகு, வேறு பதவிகளை பரிசாக வழங்கினார் மோடி.

பாதிக்கப் பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் போராடி வரும், மனித உரிமைப் போராளியும், பெண் பத்திரிகை யாளருமான தீஸ்த்தா செட்டால் வத், மோடிக்கு எதிராக நேரடியான குற்றச்சாட்டு, இப்போது தான் முதன்முதலாக வந்துள்ளது. உண்மைகள் வெளியேவரத் தொடங்கியுள்ளன என்று கூறியுள்ளார்.

மோடி நிர்வாகத்தில் பணிபுரிந்த சிறீகுமார், ராகுல் சர்மா போன்ற நேர்மையான அதிகாரிகள், கலவரங்கள் பற்றி சிறப்பு புலனாய்வில் பதிவு செய்த உண்மையான தகவல்களும் நிராகரிக்கப்பட்டு விட்டன. உண்மையைப் பேசியதற்காக, மோடி ஆட்சியில், இந்த அதிகாரிகள் பழிவாங்கப் பட்டனர்.

மோடி - குஜராத் கலவரத்துக்குப் பிறகு இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டார். அவர் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்று, வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவதே அவரது வெற்றிக்கான காரணம் என்ற பிரச்சாரம் பார்ப்பன வட்டாரங்களில் தீவிரமாக முடுக்கி விடப்படுகிறது! பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு தாராளமாகக் கதவு திறந்து விட்டுள்ள மோடியை அவர்கள் நடத்தும் ஊடகங்கள் புகழ் பாடுவதில் வியப்பு எதும் இல்லை.