Jul 4, 2011

பொய் சொல்லும் மோடி அரசு! காங்கிரஸ் கண்டனம்!

JULY 05, அஹ்மதாபாத்: :2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாசிச ஹிந்துத்துவா பயங்கரவாத வெறியர்கள் முஸ்லிம்களை கொடூரமாக கொன்றுகுவித்து மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்தினர்.

இக்காலக் கட்டத்தின் ஆவணங்களை அழித்துவிட்டதாக மாநில அரசின் வழக்கறிஞர் நானாவதி கமிஷன் முன்பு தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்காலிகமானதும், முக்கியத்துவம் இல்லாததுமான ஆவணங்கள்தாம் அழிக்கப்பட்டன என குஜராத் மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, மாநில அரசு மற்றும் மூத்த அரசு வழக்கறிஞரின் முரண்பட்ட அறிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இச்சம்பவத்தில் குஜராத் அரசு மக்களிடம் பொய் கூறுகிறது என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை தொடர்பாக அரசு ஏராளமானவற்றை மறைத்துள்ளது என்பதற்கு இது ஆதாரமாகும். ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக ஒருபுறம் அரசு வழக்கறிஞர் கூறுகிறார். மறுபுறம் உள்துறை அமைச்சகம் இல்லை என கூறுகிறது. அவ்வாறெனில் அரசு முதலில் கூறியது பொய்யாக இருக்கவேண்டும்.

அல்லது இரண்டாவதாக கூறியது பொய்யாக இருக்கவேண்டும். ஆவணங்கள் அழிக்கப்படவில்லையெனில் அவை எங்குள்ளன?ஆவணங்கள் வழக்கின் சட்டநடவடிக்கைகளின் பகுதியாக அமைந்துள்ளனவா? இதனை நாடு அறிய விரும்புகிறது என சிங்வி தெரிவித்துள்ளார்.

1 comment:

Anonymous said...

எந்தக் காலத்திலும் வர்நாசிரமக்கொள்கைக்கு எதிராக செயல்படக்கூடிய எந்த ஒரு சக்தியும் இந்தியாவில் இல்லை. மிகப் பெரிய இன அழிப்பு குஜராத்தில் மோடியால் நடத்தப்பட்டும், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு
அதைப்பற்றிய தகவல்களை அழிக்காமல் இருக்க குஜராத் என்ன மகாத்மா காந்தியின் ஆட்சி அதிகாரத்திலா
இருக்கிறது?

ஐயா, பன்றியோடு சேர்ந்தால் கன்றும் (-) தின்னும், என்று சொல்லும்பொழுது, பன்றியோடு சேர்ந்த பன்றிகள்
எதைச்செய்யும் ?

நீதி செலுத்த துணிவிருந்தால் நீதி செலுத்து. இல்லைஎன்றால் சமமாக அதிகார பகிர்வு செய்துவிட்டு ஒதுங்கிக்கொள். எமக்கு நாங்கள் சிறு பான்மை என்ற பயமெல்லாம் இல்லை. ஒன்றுக்கு பத்து என்றாலும் எதிர் கொள்ள தயார். ஒரு பக்கம் முழுதாய் எல்லா அதிகாரமும், படை பலமும், பண பலமும், எல்லா துறை சார்ந்த துணையும். ஒரு பக்கம் ஒன்றுமில்லாமல் நிராயுதபாணியாய் ஒரு சமூகம் மேலும் மேலும் நசுக்கப்பட்டால், அந்தச்சமூகம் என்ன செய்யும்.

நிச்சயமாய் ஒரு காலம் வரும். காத்திருப்போம். மன்னிப்போம். அதற்கும் ஒரு எல்லை உண்டு.

+++++++++++ வேண்டும் விடுதலை ++++++++++++++