Showing posts with label ஆசிரியர் சிந்தனை. Show all posts
Showing posts with label ஆசிரியர் சிந்தனை. Show all posts

Oct 9, 2017

இப்படி ஒரு மனு கொடுக்கலாமே!

உங்கள் ஊரில் உள்ள சங்கங்களுக்கோ, பொது நல அமைப்புகளுக்கோ இப்படி ஒரு மனுவை கொடுத்து அவர்களை ஊரின் நலத்திட்டங்கள் பக்கம் இழுக்கலாமே 
அனுப்புனர்: 

(உங்கள் பெயர் மற்றும் முகவரி.)

பெறுநர்: 

தலைவர் அவர்கள் 
(உங்கள் ஊர் நல கமிட்டி, இளஞ்சர்கள் சங்கம், உங்கள் ஊரை சேர்ந்த ஏதாவது ஒரு பொதுநல அமைப்பு). 

அன்புள்ள சகோதரர்களுக்கு,

நமது முன்னோர்கள் நமது ஊரை நம்வசம் கையளிக்கும் பொழுது அது சுத்தமானதாக, இயற்க்கை வளம் மிக்கதாக, நீர்வளம் மிக்கதாக  இருந்தது. இன்றய சூழலில் ஊரின் நிலைமை மிகவும் மோசகரமானதாக இருக்கிறது. பல்லாண்டுகளாக சீர் செய்யப்படாத குளங்கள், ஏரிகள் மற்றும் ஊரை சுற்றி விஷச்செடியான சீமை கருவேல முள் மரங்கள் என்று ஊரே மாசுபட்டு கிடக்கிறது. 

ஊரில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை, தரமான கல்வி கூடம் இல்லை, பிள்ளைகள் படிக்க நூலகமோ, விளையாட சரியான விளையாட்டு திடலோ, உடல் பயிற்சி கூடமோ இல்லை. தெருக்களில் போதிய மரங்கள் நடபடவில்லை, போதிய குடிநீர் வசதிகள் இல்லை. இதுதான் இன்றய நமது ஊரின் நிலை.  இதை எல்லாம் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு நமதூர் மக்களுக்கு உண்டு. ஊழல் அரசுகள், அரசியல்வாதிகள் செய்வார்கள் என்று நம்பிக்கொண்டு இருப்பதை விட்டு நாம் ஒரு ஐந்தாண்டு திட்டத்தை வகுத்து, நமதூரை இயற்க்கை எழில் கொண்ட, அடிப்படை வசதிகள் பெற்ற ஊராக மாற்ற முடியும். 


திட்டங்கள்:

1 ). சீமை கருவேல மர ஒழிப்பு. 

சீமை கருவேல மரத்தால் ஏற்படும் பாதிப்புகளை மக்களிடம் எடுத்து சொல்ல விழிப்புணர்வு கேம்பைன்கள் நடத்துவது, பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம், தெரு முனை பிரச்சாரம், வீடுகள் தோறும் சென்று சொல்வது, பஞ்சாயத்து நிர்வாக மற்றும் மாவட்ட நிர்வாக உதவி பெறுதல், லோக்கல் கேபிள் டிவி மூலம் பிரச்சாரம், வெளி ஊர்களில் வசிப்பவர்களின் நிலங்களை அவர்கள் அனுமதி பெற்று அவர்கள் உதவியோடு  கருவேல மரங்களை அகற்றுதல், இவற்றின் மூலம் சீமை கருவேல மரத்தை முற்றிலும் அழிக்க முடியும். 

2). மரம் நடுதல்:  

"மரம் வளர்ப்போம் மழை வளம் பெறுவோம்" என்கிற விளம்பர பலகைகள் வைத்தல். தெரு முனை பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு உண்டாக்குதல். நாமே தரமான மரக்கன்றுகளை இலவசமாக வழங்குதல், நாமே தெரு ஓரங்களில், ஊரை சுற்றிலும் முதல் கட்டமாக குறைந்தது 500 மரங்களை நடுதல், அந்த மரங்களை பாதுகாக்க சிறிய இரும்பு நெட் வலைகளை அடித்தல், தெருவில் யார் வீட்டு முன்பு மரம் நடுகிறோமோ அவர்களிடம் சொல்லி அந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றி பாதுகாக்க செய்வது இதன் மூலம் ஊரில் ஒரு இயற்க்கை சூழலை ஏற்படுத்தலாம். 

3). ஏறி குளங்களை தூர் வாருதல்: 

ஏறி குளங்களில் போதிய தண்ணீர் இல்லாததால் நமதூர் நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்று கொண்டு இருக்கிறது. இதை சரி செய்ய நியூஸ் செவன் தொலைகாட்சியோடு இணைந்து, நமது பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்களின், விவசாய சங்கங்களின், லயன்ஸ் கிளப், சென்சிலுவை சங்கம், சாரணர் அமைப்பு, போன்ற தொண்டு நிறுவனங்களின் உதவியை பெற்று இதை சீர் செய்வது.   

4). இயற்க்கை விவசாயம்:  

நமதூரில் வீடுகளுக்கு பின்னால், முன்னாள், மொட்டை மாடியில் என்று போதிய இடவசதி உள்ளது. இதில் வீட்டுக்கு தேவையான காய், கறிகளை எப்படி விவசாயம் செய்யலாம் என்பதை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரமும், இலவச விதைகளும் பயிற்சியும் வழங்கலாம். மாடு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, இவற்றில் மூலம் கிடைக்கும் வருமானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.  அவற்றை  வளர்க்க அரசாங்க கடனுதவி பெறவும், அதேநேரம் நாமும் தேவையான அடிப்படை மூல கூறுகளை வழங்கியோ அல்லது சிறு கடனுதவி மூலமாகவோ தொழில் சிறக்க ஊக்குவிக்கலாம் . 

5). நூலகம் அமைத்தல்:  

பிள்ளைகள் படிக்க தேவையான ஒரு நூலகம் அமைப்பது. அதை சேர்ந்தாற்போல்  இளஞ்சர்கள் உடல் பயிற்சி செய்யும் கூடம் மற்றும் அவசர உதவிக்கு ஒரு ஆம்புலன்ஸ் சேவை இவைகளை நிறுவலாம். 

6). சிறு தொழில் கூடம்: 

நமதூர் மக்களுக்கு சிறு தொழில் கூடம் ஒன்று அமைத்து அதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கலாம். 

7). கல்வி நிறுவனங்களை சீர் செய்தல்:    

நமதூர் கல்வி நிறுவனங்களை சீர் செய்து அவற்றின் தரத்தை உயர்த்தி, மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேன்படுத்தி கொடுக்கலாம்.

Feb 13, 2013

காதலிக்க நேரமில்லை!

பிப் 14/2013: காதல் ஒரு பருவகால உந்தல். பருவ வயதை அடைந்த ஆண்,பெண் ஒருவேர்மேல் ஒருவர் கொள்ளும் ஈர்ப்பே காதல்.

ஒருவர் மேல் காதல் உண்டாக அழகு என்கிற புற தோற்றங்களோ அல்லது அறிவு சார்ந்த கல்வி, வீரம், விவேகம், சமூக சிந்தனைகள் போன்ற அக தோற்றங்களோ ஒரு காரணமாக இருக்கலாம்.

தனது மனதுக்கு  பிடித்தவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் காதலின் கடைசி இலக்காக இருக்கிறது. அதாவது காதல் என்பதின் கடைசி இலக்கு திருமணமே.

ஒவ்வொருவருக்கும் வாழ்நாளில் எதாவது ஒரு காலத்தில், காதல் அனுபவம் வந்து சென்றிருக்கும். காதல் பருவ வயதில் ஏற்ப்படும் சுகமான அனுபவம். காதல் என்றால் செல்போன் காதல் என்று நினைத்து விடாதீர்கள். நாம் பருவ வயதை கடந்து வரும்போது நமது மனதுக்கு யாரையாவது பிடிக்கும்.

ஆனால் நீங்கள் அவர்களோடு பேசி இருக்க கூட மாட்டீர்கள். இயல்பாகவே உங்கள் மனதுக்குள் ஒரு எண்ணம் தோன்றும் இவரை திருமணம் செய்தால் நலமாக இருக்கும் என்று மனம் எண்ணும். இதுபோல் உள்ள சிறு சிறு விஷயங்கள் தொடங்கி ஒருதலை காதல் முதல் ஒருதடவை பார்த்த காதல்வரை ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் காதல் அனுபவம் ஏற்ப்பட்டிருக்கும்.

சங்ககால காதல் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதோடு முடிந்து விடும். கண்களாலேயே பேசிகொள்வது ஏதாவது திருமணம், பண்டிகைகள் என்று பொது விசயங்களில் சந்தித்து கொள்வது என்பதோடு சரி. அன்றைய காலத்தில் காதல் என்பது உடல் சார்ந்த ஒரு விசயமாக இல்லாமல் மனம் சார்ந்த விசயமாக இருந்தது. காதல் என்றால் அன்பு, நேசம், பாசம் என்று ஒரு வரையறைக்குள் இருந்தது.

ஆனால் இன்றோ நிலைமை வேறு ஒரு  நாளைக்கு ஒரு காதல் என்று பாஸ்ட் புட் வேகத்தில் இருக்கிறது. இந்த காலத்து  காதல்களில் பெரும்பான்மை உடல் கவர்ச்சியாலே வருகிறது. இன்று காதல் என்பது முக கவர்ச்சியில் தொடங்கி காமத்தில் முடிந்து விடுகிறது. காதலித்து திருமணத்திற்கு பின்னால் நடக்க வேண்டிய விஷயங்கள்  திருமணத்திற்கு முன்னாள் நடப்பதால் பெருன்பான்மையான காதல்கள் கானல் நீராகிப்போகின்றன.

இப்படிப்பட்ட காதல்கள் உருவாக ஒரு வகையில் தாய் தந்தையர்களும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். காதல் என்பதன் முடிவு திருமணம் என்றிருக்க சொந்தம் விட்டு போக கூடாது, பணம், புகழ் போன்றவற்றிக்கு ஆசைப்பட்டு தகுதியில்லாத திருமணங்களை  பெற்றோர்கள் முடித்து வைப்பதின் விளைவே இந்த கண்டதும் காதலின் அஸ்திவாரம்.  இன்றைய இளைய தலைமுறையினர்  காதல் செய்து திருமணம் செய்து கொண்டால்தான் சந்தோசமாக வாழமுடியும் என்று எண்ணுவதற்கு பெற்றோர்கள் அதிமுக்கிய காரணியாக அமைந்து விட்டார்கள்.

திருமணம் முடிக்கும் முன் மணமக்களிடம் சம்மதம் கேட்பது என்பது ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.  அந்த பையனின், பெண்ணின் மனதில் என்ன விருப்பம் இருக்கிறது என்று அறிந்து கொள்ள யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெற்றோர்களால் நிச்சயக்கப்படும் திருமணங்களில் ஏற்ப்பட்ட தோல்வியே இந்த கண்டதும் காதல் கலாச்சாரத்தை உருவாக்கியது. இன்றைய பிள்ளைகள் பெற்றோர்களை இந்த விசயத்தில் நம்பத் தயாராக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

மற்றபடி பிப் 14  இல்  காதலர் தினம் கொண்டாட்டங்களை உருவாக்கியது  நமது கார்பெரெட் முதலாளிகளே. இப்படி ஒரு குறிப்பிட்ட தினத்தை மேலைநாடுகளில் உண்டாக்கி அதன் மூலம் மக்களின் பொருளாதாரத்தை சுரண்டுவதே இவர்களது எண்ணம். காதலர் தினம் என்பது கார்பரேட் முதலாளிகளின் தினமே. உலகின் பலபகுதிகளில் மக்கள் உணவில்லாமல் பட்டினியில் சாகும் போது இதுபோன்ற கேளிக்கைகள் அவசியமற்றதே. மற்றபடி காதல் என்கிற ஒரு சுகமான உணர்வுக்கு, ஒரு ( காதலர்) தினம் எடுத்து அதையும் செயற்கை ஆக்கவேண்டாமே.

நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல். 

Jan 25, 2013

இஸ்லாமிய தீவிரவாதம்! இந்து தீவிரவாதம்! சரியா?

Jan 26: இஸ்லாமிய தீவிரவாதம்! இந்து தீவிரவாதம்! என்கிற வார்த்தை பிரயோகம் சரியா? எந்த ஒரு மதத்தின் பெயரோடும் தீவிரவாதம் என்கிற வார்த்தையை சேர்ப்பது சரிதானா?. 
 
எந்த மதமும் தீவிரவாதத்தை போதிக்க வில்லை. அப்படி இருக்கையில் அந்த மதங்களின் பெயரோடு  தீவிரவாதத்தை சேர்ப்பது முறையா? இஸ்லாமிய  தீவிரவாதம், இந்து தீவிரவாதம், பவுத்த தீவிரவாதம், கிறிஸ்தவ தீவிரவாதம் என்று சொல்லை பயன்படுத்துவதை யார் செய்தாலும் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வகை செய்யும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். 
 
ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்கள் செய்யும் தீவிரவாத செயல்களுக்கு, இந்து மதமோ, இந்துக்களோ எப்படி பொறுப்பாக முடியும்? அதுபோல் அல்கொய்தா போன்ற இயக்கங்கள் செய்யும் தீவிரவாத செயல்களுக்கு இஸ்லாமோ, முஸ்லிம்களோ எப்படி பொறுப்பாக முடியும்? ராஜபக்சே மற்றும் சிங்கள இனவாத இயக்கங்கள் செய்யும் தீவிரவாத செயல்களுக்கு பவுத்த மதம் எப்படி பொறுப்பாக முடியும்? அதுபோல் கிறிஸ்தவ மதவெறி அமைப்புகள் செய்யும் தீவிரவாத செயல்களுக்கு கிறிஸ்தவ மதம் எப்படி பொறுப்பாக முடியும்? இதை முதலில் நாம்  நடுநிலையோடு புரிந்து கொள்ள வேண்டும்.
 
தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட நபர் யாரோ! அவருக்கு என்று ஒரு பெயர் அல்லது அவர் சார்ந்து இருக்கும் இயக்கத்திற்கு என்று ஒரு பெயர் இருக்கிறதல்லவா? அந்த இயக்கத்தின் பெயரையோ அல்லது அந்த நபரின் பெயரையோ குறிப்பிடுவதுதானே முறை. அதை விட்டு அவர் சார்ந்திருக்கும் மதத்தின் பெயரை குறிப்படுவது நியாயமா? ஒவ்வொரு மதத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதனால் ஒரு இனத்திலோ அல்லது மதத்திலோ சிலர் செய்யும் குற்ற காரியங்களை, தீவிரவாதங்களை ஒட்டுமொத்த சமூகத்தோடு தொடர்புபடுத்தி செய்யப்படும் பிரச்சாரங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். 
 
மேலும்,முஸ்லிம் அல்லாத மற்ற மதங்களில் உள்ளவர்கள்  தீவிரவாத செயல்களில் ஈடுபட்டால் அதை அந்த மதத்தோடு குறிப்பிடுவதில்லை. இன்று கூட  தமிழன் டிவியில் ஒளிபரப்பான ஒரு பேட்டியில், அதன் தொகுப்பாளர்,  விஸ்வரூபம் திரைப்படம் தடை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளரிடம் கேட்கும்பொழுது, இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து திரை துறையினர் சொல்லும் பொழுது உங்களுக்கு கோபம் வருகிறது, அதே நேரம் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதம் குறித்து உள்துறை சொல்கையில் நீங்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் சொல்லப்படுகிறதே என்று கேட்பார். 
 
நல்ல படித்த ஒரு டிவியின் தொகுப்பாளராக இருக்கும் ஒருவர் கூட முஸ்லிம்கள் குறித்து கேட்க்கும் பொழுது மதத்தின் பெயரால் இஸ்லாமிய தீவிரவாதம் என்றும் இந்துக்களை பற்றி சொல்லும் பொழுது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதம் என்றும் பகுத்து பார்க்க முடிகிறது. இந்து மதத்தில் ஒரு கூட்டம் செய்வதற்கு இந்துக்கள் பொறுப்பு இல்லை என்பதை அவரால் விளங்கி கொண்டது போல் முஸ்லிம்கள் விசயத்தில் அதே அணுகு முறையை பயன்படுத்த வேண்டும் என்பதை விளங்கி கொள்ள முடியவில்லையே. இந்திய வரலாறு கூட அப்படித்தான் பேசுகிறது இந்தியாவை கொள்ளையடித்த ஆங்கிலேயரை பார்த்து "ஆங்கிலயர்கள் வருகை" என்கிறது, அதேசமயம்,  இந்தியாவை பல்வேறு வகையில் வளப்படுத்திய மொகலாயர்களை பார்த்து "மொகலாயர் படையெடுப்பு" என்கிறது.
 
வேற்றுமையில் ஒற்றுமை அதுதான் தமிழர் கலாச்சாரம்! பண்பாடு! தமிழர்களுக்கு என்று நீண்ட பண்பாடுகளும் வரலாறும் இருக்கிறது! அதை பேணி பாதுகாத்து ஒற்றுமையை, சகோதரத்துவத்தை ஏற்ப்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை.
 
நாம் தமிழர்கள்! வெவ்வேறு மதங்களை சேர்ந்தாலும் நாம் தமிழர் என்று ஒன்றுபடுவோம்! வேற்றுமையில் ஒற்றுமை அதுதான் நிரந்தரம்! 

நட்புடன் ஆசிரயர்: புதியதென்றல்.

Dec 28, 2012

நடுத்தர வர்க்க நகரவாசிகள் ஆபத்தானவர்களா?

Dec 29: நகரங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கு பணக்காரர்களையும் அவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும்  ஸ்பென்செர், சிட்டி பிளாசாக்களை பார்த்து ஒருவித மோகம்.

பணக்காரர்கள் பயன்படுத்தும் கார், பங்களாக்கள் அவர்கள் உடுத்தும் உடைகள் வரை எப்படியாவது நாமும் இந்த மேட்டுக்குடி வாழ்க்கைக்கு மாறிவிட வேண்டும் என்கிற தீராத வெறி.

இதனால் தவணைக்கு வீட்டு உபயோக பொருட்கள், கார்கள்  வாங்குவது முதல்  நுனிநாக்கில் ஆங்கிலத்தை வரவழைப்பது வரை என்று அயராது பாடுபடுகிறார்கள். மேலும் குழந்தைகளை இங்கிலீஷ் கான்வென்ட்களில் சேர்க்க வட்டிகடை சேட்டு வீட்டுக்கு நடையாய் நடக்கிறார்கள்.

சென்னையில் வாழ்வதால் "தங்கள் மேட்டுகுடிகள்" என்கிற மனோபாவத்தை இவர்கள் தங்களுக்கு தாங்களே உருவாக்கி கொள்கிறார்கள். இதன் விளைவு இவர்களை கடன் வாங்கியாவது கார், பைக்குகள் வாங்குகிறார்கள். வாரத்தில் ஒரு முறை ஸ்பென்செர், சிட்டி பிளாசாக்களில் பொருள்கள் வாங்கவில்லை என்றால் தங்கள் கவுரவம் சரிந்து விடும் என்கிற மனோநிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இந்த மனோபாவத்தால், வரவுக்கு மீறிய செலவு என்கிற நிலைக்கு ஆளாகி பெரும் கடன் சுமைக்குள் சிக்கித்தவிக்கிறது சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் நடுத்தர வர்க்கம். இதனால் நகரங்களில் வாழும் பல இலட்சம் குடும்பங்கள் வட்டிகடனில் மூழ்கி தவிக்கிறது. இந்த மேல்தட்டு வாழ்க்கைக்கு ஆசைபடுவதால் கலாச்சார மற்றும் ஒழுக்க கேடுகளும், தற்கொலைகள் மற்றும் குற்றங்களும் பெருகிய இடமாக நகரங்கள் மாறிவருகின்றன.

சென்னை போன்ற பெரும் நகரங்களில் வசிக்கும் பெரும்பான்மை மக்கள் தாங்கள் கிராமங்களில் இருந்து வந்தவர்கள் என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். இவர்கள் அந்த கிராமங்களில், டவுன் பஞ்சாயத்களில் வசிக்கும்போது எப்படி இருந்தார்கள் என்பதை மறந்து நகரங்களில் உள்ள மேட்டு குடிகளை பார்த்து அதைபோல் தாங்களும் ஆகவேண்டும் என்கிற ஒருவித வெறி அவர்களை தங்களுக்கு கீழே உள்ள அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின்  உயர்வை பற்றி எண்ணுவோ அல்லது அவர்களுடைய பிரச்சனனைகளை பற்றி பேசவோ தடையாக அமைகிறது.

இந்த நடுத்தரவர்க்க பணக்கார நோய் பிடித்த சமூகம் பல்வேறு தருணங்களில் ஏழை, எளிய மக்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்படுகின்றது கூடங்குளம் அணு உலையால் அடையப் போகும் பாதிப்புகளை எதிர்த்து  அப்பகுதி மக்கள் போராடினால் இந்த நோய் பிடித்த சமூகம் அதை எதிர்த்து நையாண்டி செய்கிறது அல்லது எதிர்த்து களம் ஆடுகிறது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு வந்தால் நமதூர் சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று போராடினால் இவர்கள் வால்மார்ட் வரவேண்டும் என்று ஒப்பாரி வைக்கின்றனர்.

வால்மார்ட் வந்தால் இந்தியா அமெரிக்காவாக மாறிவிடும் என்று நம்புகின்றனர். கழிப்பறை வசதி இல்லாத ஒரு நாட்டில், குடிசைகளில், தெரு ஓரங்களில் மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள். தமிழக மீனவர்கள் பிரச்சனைகள் முதல் பல்வேறு மக்கள் பிரச்சனைகளில் நடத்தரவர்கத்தில் பெரும்பான்மையினர் மவுனமே காக்கின்றனர். குறுகிய காலத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி, பிள்ளைகளை இங்கிலீஷ் கான்வென்ட்யில் படிக்க வைத்து சாப்ட்வேர் இஞ்சினியர் ஆக்குவது எப்படி என்பதே இவர்களது முக்கிய கவலை.

நடுத்தர வர்க்கம் மேட்டுக்குடி பணக்கார மோகத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்பதே எங்களின் ஆவல்.
 
நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

Sep 30, 2012

சகாப்தம் படைக்கிறார் முதல்வர் மம்தா!


Sep 30: திரிணாமுல் காங். தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா. சில்லவரை வர்த்தகத்தில் 51 சதவீத நேரடி அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை விலக்கி தான் போலி அல்ல என்பதை நிருபித்தார்.

மேலும் மேற்குவங்கத்தில் தனது ஆட்சில் அந்நிய முதலீட்டை நுழைய விடாமல் தடுக்க சிறப்பு சட்டம் இயற்றி, பேச்சளவில் எதிர்க்காமல் அதற்க்கு செயல்வடிவமும் கொடுத்தார் மம்தா. மற்றைய மாநில முதல்வர்கள் மவுனம் காக்கும்போது, அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக  விளங்கினார்.

BJP மவுன சாமியார் ஆனது, போலி கம்புனிஸ்ட்களும், கருணாநிதி மற்றும் கட்சிகளும், காங்கரஸின் காலை கட்டியாக பிடித்து கொண்டன. ஆனால் மம்தாவோ தனது மாநிலத்தில் அந்நிய முதலீட்டை முற்றிலும் தடுத்ததோடு அதை எதிர்த்து இந்திய அளவில் விழ்ப்புணர்வை ஏற்ப்படுத்த டில்லி ஜந்தர்மந்தரில் அக்.1-ம் தேதி பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்துகிறார்.

Aug 30, 2012

கசாபுக்கு தூக்கு! மோடிக்கு எப்பொழுது?

Aug 30: அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வால் ஸ்டிரீட் ஜர்னல்' பத்திரிகை சார்பில் எடுக்கப்பட்ட பேட்டியில், குஜராத் கலவரங்களுக்காக மன்னிப்பு கேட்பீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு மோடி மன்னிப்பு கேட்க முடியாது  என்று திமிராக  பதில் அளித்தான்.

தனது ஆட்சியில் திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது இனக்கலவரத்தை தூண்டினான் மோடி. ஒரு ராணுவ கமாண்டரை போல் ஆணைகளை
பிறபித்து கலவரத்தை முன்னின்று நடத்தினான். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டாம் என ஆணை பிறபித்தான்.

இதனால் 10
ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி  ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும் கொல்லப்பட்டனர். கர்ப்பிணி பெண்களின் வயிற்ரை கிழித்து குழந்தையை எடுத்து தீயில் இட்டு கொளுத்தி "உலகிலேயே நாங்கள்தான் கொடூரமானவர்கள்" என்று ஹிந்துத்துவாவினர் நிரூபித்தனர்.

Aug 11, 2012

சிந்திக்கவும் இணையதளம் வன்மையாக கண்டிக்கிறது!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருளை நிரப்ப அணுசக்தி ஆணையம் அனுமதி அளித்துள்ளது. எனவே இன்னும் 10 நாட்களில் யுரேனியம் எரிபொருளை நிரப்பி மின் உற்பத்தியை தொடங்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சிந்திக்கவும்: கூடன் குளத்தில் அணு மின் உற்பத்தியை தொடங்குவதை சிந்திக்கவும் இணையத்தளம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை தர நெய்வேலி அனல் மின்நிலையம் மற்றும் நீர், காற்றலை மின் நிலையங்கள் இருக்க கூடங்குளம் அணு மின்நிலையம் ஏன்?

கேரளா மக்களால், அரசியல் கட்சிகளால் புறம் தள்ளப்பட்ட இந்த அணு உலை தமிழர்களை கொல்லும் கொலை கருவியாக கூடங்குளத்தில் நிறுவப்பட்டது. கூடங்குளம் மக்களின் நியமான கோரிக்கைகளை ஏற்க மறுத்த மத்திய பயங்கரவாத அரசு மக்களின் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சித்தரிக்கிறது.

Feb 22, 2012

இம்சை அரசன் 2012 ம் புலிகேசி!

FEB 23: இந்தியாவில் விவசாயம் அழிந்து வருகிறது. நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் உணவு தேவையை வரும் காலங்களில் நாம் எப்படி சம்மாளிக்கப் போகிறோம் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஒருபுறம் விவசாயத்திற்கு தேவையான போதிய மழை இல்லாதது மறுபுறம் உரம், விதை போன்றவற்றின் விலை உயர்வால் தவிக்கும் விவசாயிகள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வது அன்றாடம் செய்தி ஆகிவிட்டது.

இதுவரை உரங்களின் விலையை கட்டுபடுத்தி வந்த மத்திய அரசு இனி அதை உர கம்பெனிகளே தீர்மானித்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டது. இதை தொடர்ந்து உர நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி கொண்டு விலைகளை கண்டபடி உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றனர்.

Feb 13, 2012

காதலர் தினம் கூடுமா? காதலித்தால் பாவமா?

FEB 14: காதல் ஒரு பருவகால உந்தல். பருவ வயதை அடைந்த ஆண்,பெண் ஒருவேர்மேல் ஒருவர் கொள்ளும் ஈர்ப்பே காதல் ஆகும்.

ஒருவர் மேல் காதல் உண்டாக அழகு என்கிற புற தோற்றங்களோ அல்லது அறிவு சார்ந்த கல்வி, வீரம், விவேகம், சமூக சிந்தனைகள் போன்ற அக தோற்றங்களோ ஒரு காரணமாக இருக்கலாம்.

தனது மனதுக்கு  பிடித்தவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் காதலின் கடைசி இலக்காக இருக்கிறது. அதாவது காதல் என்பதின் கடைசி இலக்கு திருமணமே.

Jan 14, 2012

இந்தியாவின் சொர்க்கபுரியாக மாறும் கூடங்குளம்!

JAN 15: கூடங்குளம் அணு மின்நிலையம் குறித்த பிரச்னையை தீர்க்க நாடுதழுவிய போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் அது குறித்து தினமலருக்கு  39 பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதி இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி அபுல்கலாம் கூறியுள்ளார். இவரது புரட்டு வாதங்களும் அதற்க்கு பதிலும்.

வாதம் 1: கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள 50 முதல் 60 வரையிலான கிராமங்கள் பயன்பெறும் வகையில், 200 கோடி ரூபாய் மதிப்பிலான "புரா' (நகர வசதிகளை கிராமப் பகுதிகளுக்கு அளித்தல்).

Nov 19, 2011

காவல்துறை என்கிற பெயரில் ஒரு கயமை துறை!

NOV 20: சங்கரன்கோவில் அருகே வங்கி காவலாளி கொலையில் ஒரு மாதமாகியும் துப்பு கிடைக்காததால் போலீசார் ஜோதிடரை அணுகி குறிகேட்டுள்ளனர்.

சங்கரன்கோவில் தாலுகா திருவேங்கடம் அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியின் காவலாளி ராமராஜ்(47) என்பவர் கடந்த மாதம் 25ம்தேதி நள்ளிரவு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 24 மணிநேரமும் போக்குவரத்து உள்ள இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.

எஸ்பி விஜயேந்திரபிதாரி உத்தரவின்பேரில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர் கள் 15 வாகனங்களில் ரோந்து சுற்றி குற்றவாளி களை தேடிவருகிறார்கள். வங்கி செயலாளர், ஊழியர்கள் மட்டுமின்றி ஊர் பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தியதில் பலன் இல்லை. நூற்றுக் கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். 25நாட்கள் ஆகியும் துப்பு துலங்கவில்லை.

இந்நிலையில் தனிப் படையில் உள்ள சில போலீசார் எட்டையபுரம் அருகே கீழஈரால் பகுதி யில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டியில் குறிசொல் லும் ஜோதிடர் ஒருவரை சந்தித்து இந்த கொள்ளை யில் குற்றவாளி சிக்கு வானா என்று கேட்டனர். மேலும் காவலாளியை சுட்டுக்கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட தாக தெரிகிறது. இலங்கை அகதிகள் மூலம் இந்த துப்பாக்கி கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வந்ததால் விருதுநகர் மாவட்டம் கண்டியாபுரத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

சிந்திக்கவும்:
ஈழத்திலே தன் உறவுகளை இழந்து, தன் சொத்துக்களை இழந்து, நாட்டை இழந்து தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தால் அவர்களை மீன்பிடிக்க கூடாது என்று க்யூபிராஞ்ச் போலீஸ்காரன் மிரட்டுகிறான். ஏதோ இந்தியாவுக்கு கள்ள துப்பாகிகளை அறிமுகபடுத்தி விட்டவன் ஈழத்தமிழன் என்பது போல் ஒரு மாயை ஏற்படுத்தி இந்த பேங்க் காவலாளி கொலையிலும் அவர்களை துன்புறுத்துவது காவல்துறை கயவர்களின் இயலாமையையே காட்டுகிறது. புருலியா ஆயுத மழையை முதல் முபையில் தினம்தோறும் நடக்கும் துப்பாக்கி சண்டை வரை, கள்ளத்துப்பாக்கி மார்கட்களும், துப்பாக்கிகளும் வருவதும் அனைத்தும் வடநாட்டில் இருந்தே இப்படி இருக்க தமிழன்தான் இவர்களுக்கு இளிச்சவாயன்.

கேடுகெட்ட காவல்துறை குற்றவாளியை பிடிக்க முடியாமல் ஜோதிடரை அணுகி உள்ளது. இந்திய காவல்துறை கயவர்கள் லஞ்சம் வாங்குவதிலும், அப்பாவிகளை குற்றவாளிகள் என்று சொல்லி சிறையில் தள்ளுவதிலும் கில்லாடிகள். லஞ்சம் வாங்குவது எப்படி, சக காவல்துறை பெண் ஊழியர்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துவது எப்படி, குடித்து கூத்தாடுவது எப்படி என்பதை கற்று கொள்ள  இந்திய காவல்துறையினரிடம் பயிற்சி எடுக்க வேண்டும். இவர்கள்தான் உலகுக்கு முன்னோடிகள்.

இவர்கள் ஒன்றும் முறைப்படி துப்பு துலக்கி கண்டுபிடிப்பது எல்லாம் இல்லை, யார் மேல் சந்தேகமோ அவர்களை உள்ளே கொண்டுவந்து அடித்து துன்புறுத்தி அதன் மூலம் கண்டுபிடிப்பது, அப்படியே கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் பழைய குற்றவாளிகள் மீது திரும்ப வழக்கை போட்டு உள்ளே தள்ளுவது இதுதான் இவர்கள் வழக்கம். குற்றம் செய்தவன் ஏழையாக இருந்தால் அவனை நோக்கி சட்டம் தன் கடமையை திறம்பட செய்யும், அவனே பணக்காரனாக இருந்தால் சட்டம் சல்யூட் போட்டு வளைந்து கொடுக்கும்.
இவர்களை அடக்க ஓராயிரம் வீரப்பன்கள் வேண்டும்.

இது காவல் துறை இல்லை கயமை துறை! காவல்துறை என்கிற பெயரில் ஒரு பயங்கரவாத படை  இயங்குகிறது. இந்த படைக்கு மனிதாபிமானம், மனித நேயம், ஒழுக்கம், நேர்மை, நீதி, நியாயம் என்று ஒன்றுமே தெரியாது. காவல்துறை என்கிற பெயரில் ஒரு ரவுடி கூட்டம் செயல்படுகிறது என்றே சொல்லவேண்டும். ஒரு சிலரை தவிர.இத்துறையில்  நூற்றுக்கு தொண்ணுற்றி ஒன்பது சதவீதம் ரவுடிகளும், கிரிமினல்களும், பயன்கரவாதிகலுமே நிறைந்துள்ளனர். இத்துறையை ஒழித்து முன்புபோல் கிராம காவல்படையை அந்த அந்த கிராமத்து மக்களே நியமித்தால் அந்த படை இவர்களை விட சிறப்பாக பணிபுரியும். 

நட்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.

Nov 14, 2011

தமிழர் போராட்டங்களை இழிவுபடுத்தும் தினமலர்!

NOV 15: கேரள மாநிலம் சோரனூர் அருகே உள்ள சுதவலத்தூரைச் சேர்ந்த பெண் சவுமியா, 23. அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார்.

இதை செய்தவன் விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி.இவனுக்கு கேரளா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து நல்ல தீர்ப்பு வழங்கி உள்ளது. இதை வைத்து மொத்த தமிழர்களையும், தமிழர் போராட்டங்களையும் கொச்சை படுத்துகிறது  பார்பன விஷம் கக்கும் தினமலர் (மலம்) பத்திரிகை.

இதை குறித்து தினமலம் சிறப்பு நிருபர் கூறுவதை கேளுங்கள்! உங்களுக்கே பத்திக்கிட்டு வரும்! இந்த வந்தேறி பார்பன தினமலர், தினமணி, சோ வகைராக்களை தமிழகத்தை விட்டே துரத்த வேண்டும் என்று. இந்த பரதேசிகள் ஆதரிக்கும் பார்பன ஹிந்துதுவாவையும் வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழர்கள் ஒழித்து கட்ட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இனி ஒரு மானம் உள்ள தமிழன் கூட ஹிந்துத்துவாவை ஆதரிக்கவோ, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துமுன்னணி, சங்கபரிவார் கூடத்தின் வலையில் விழுந்து விடாமல் இருக்க இது உதவும் என்று நம்புகிறேன். தொடர்ந்து ஹிந்துத்துவா தினமலம் எப்படி தமிழர்களை,  கேவலப் படுத்துகிறது என்று படியுங்கள். திடீர் என்று தலித் மக்கள் மீது பார்பன வந்தேறிகளுக்கு பாசம் வந்து விட்டமாதிரியும், அவர்களை கேவலப்படுத்தியும் இந்த செய்தி நீள்கிறது.

தினமலம் வெளியிட்ட செய்தி (நவம்பர் 13,2011): இந்த வழக்கை, வெறுமனே ஒரு கற்பழிப்பு வழக்காகவோ, கொலை வழக்காகவோ மட்டும் கருதிவிட முடியாது. இது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான விஷயம் மட்டுமில்லை. இரு இனங்களுக்கு இடையிலான பிரச்னை. இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம்.

கோவிந்தசாமி ஒரு தமிழன். சவுமியா ஒரு கேரளத்துப் பெண். இது ஒன்று போதாதா, விஷயத்தின் வீரியத்தைப் புரிந்து கொள்ள! ஏற்கனவே அவர்களுக்கும் நமக்கும் தண்ணீர் தாவா இருக்கிறது. முல்லைப் பெரியாறு கோபத்தை, அவர்கள் இந்த வழக்கில் காட்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதை உலகுக்கு உணர்த்த, ஒரு தமிழ்க்குடிதாங்கி இல்லையா, இந்த நாட்டில்?

கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக் குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமான மில்லாத செயலாக இருக்கிறதே! கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. ஏதோ, வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச் சின்ன ரயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் தான்.

உணர்ச்சியின் உந்துதலில் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார். ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன? அவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தானே, அந்தத் தம்பியின் உயிரை தூக்குக் கயிற்றின் முன் ஊசலாட விட்டிருக்கின்றன! இறந்துவிட்ட அந்த அபலைப் பெண் சவுமியா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் கோவிந்தசாமியை மன்னித்திருப்பார் என்பது, மற்றவர்களுக்குத் தெரியாதா?

சம்பவம் நடந்தது, கடந்த பிப்ரவரியில் தான். அதற்குள் மரண தண்டனை விதிக்கும் அளவு அவசரம் என்ன? ஒன்பது மாதங்களுக்குள், 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள், கோர்ட்டில் விசாரித்து முடிக்கப்பட்டுவிட்டதாம். கோவிந்தசாமியிடம், 427 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதாம். நம்பும்படியாகவா இருக்கிறது இந்தக் கதை? உலகத்திலேயே தட்டிக் கேட்பதற்கு நாதியற்ற ஒரே இனம், எம் தமிழினம் தான் என்ற இளக்காரத்தில் செய்யப்பட்டது போல் தெரிகிறதே!

குற்றம்சாட்டப்பட்டிருப்பவர், ஒரு தமிழன்; தாழ்த்தப்பட்டவர். அதிலும், மாற்றுத் திறனாளியும் கூட. இறந்தது ஒரே ஒரு பெண். அதுவும் தமிழச்சி கிடையாது. அதற்காக, தம்பி கோவிந்தசாமி, ஒன்பது மாதங்களாக கேரளத்து கொட்டடிகளில் சிறைவாசம் அனுபவித்தது போதாதா? அவரை தூக்கில் வேறு தொங்கவிட வேண்டுமா? இது, ஒரு மனிதனுக்கு இரண்டு தண்டனைகள் விதித்தது போல் ஆகாதா? இயற்கை நீதிக்கு முரணான விஷயமில்லையா? ஒருவேளை, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும், 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ!  (  -நமது சிறப்பு நிருபர்-)

தினமலத்தை செருப்பால் அடிப்போம் வாருங்கள்! இந்த பார்பன வந்தேறிகள் தமிழர்களை கேவலப்படுத்தியது போதும்.  இனியும் இவர்களை அனுமதிக்க முடியாது. ஒரு கேவலமான இழி காரியத்தை ஒருவன் செய்திருக்கிறான் அவனுக்கு தூக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கும் தமிழர் போராட்டங்கள் அத்தனைக்கும் முடிச்சு போட்டு தமிழர்களின் போராட்ட களத்தை கொச்சைபடுத்த இந்த பார்பன ஹிந்துத்துவா வந்தேறிகள் சத்திட்டம் தீட்டுகின்றன. பார்பனர்கள் எவ்வளவு கேவலமானவர்கள், மனித நேயம் அற்றவர்கள் என்பதை தமிழர்கள் இப்போதாவது புரிந்தால் சரி.

நட்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.

Nov 10, 2011

மறக்க முடியுமா குஜராத் இனப்படுகொலையை!

NOV11,அஹ்மதாபாத்: குஜராத் இனப் படுகொலையின் போது 22 பெண்கள், எட்டு மாதம் பருவமுடைய குழந்தைகள் உள்பட 33 முஸ்லிம்களை உயிரோடு எரித்துக் கொலைச் செய்த வழக்கில் 31 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது விரைவு நீதிமன்றம் கூட்டுப் படுகொலையில் பலியானவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத் மாநிலம் கோத்ரா ரெயில் எரிப்பில் கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு முஸ்லிம்கள்தாம் காரணம் என பொய் பிரச்சாரம் சங்க்பரிவார பயங்கரவாதிகளால் வேகமாக பரப்பப்பட்டு ஏற்கனவே திட்டமிட்டப்படி ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமாக படுகொலைச் செய்யப்பட்டனர். முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இதில் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை எண்ணிகையில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்திய வரலாற்றிலேயே மிகக் கொடூரமான இனப்படுகொலை குஜராத்தில் நரேந்திர மோடியின் தலைமையில் அரங்கேறியது.

குஜராத் இனப்படுகொலையின் போது பயிற்சி எடுத்த ஆர்.எ.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்களை சேர்ந்த தீவிரவாதிகள்  முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் புகுந்து முஸ்லிம் ஆண்களை தாக்கி உறுப்புக்களை சேதப்படுத்தி, உயிரோடு தீயிட்டு கொழுத்தினர். பெண்களையும், சிறுமிகளையும் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய பிறகு தீயிட்டு கொழுத்தினர். கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்து சிசுவை சூழாயுதத்தால் குத்தி எடுத்து தீயிட்டு பொசுக்கினர். சிறு குழந்தைகளின் வாயில் பலவந்தமாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். அந்த குழந்தைகள் தீப்பிழம்புகளாக மாறி அலறுவதை கண்டு கைகொட்டி சிரித்தனர்.

கொடிய காட்டு மிருகங்கள்  கூட இந்த செயலை கண்டால் வெட்கம் அடையும் அளவிற்கு கொடூரங்களை புரிந்தது மோடிதலமையிலான பயிற்சி எடுக்கப்பட்ட, சிறந்த உளவுத்துறையை தன்னகத்தே கொண்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.இதற்க்கு காவல்துறை மற்றும் மாநில உளவுத்துறையில் உள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதிகளும் உடந்தையாக இருந்து செயல்பட்டார்கள். அதுமட்டும் அல்ல மோடி ஒரு ராணுவ கமாண்டர் போல் இந்த கலவரத்தை நடத்த ஆணைகள் பிரபித்தான். மோடியின் அவையில் உள்ள அமைச்சர்கள் காவல்துறை கண்ரோல் ரூம்களில் உள்ள வயர்லஸ் கருவிகளை பயன்படுத்தி ஆணைகளை பிறபித்தார்கள் அந்த அளவுக்கு அரசு துறை இயந்திரங்கள் மோடிக்கு சலாம் போட்டன.

குல்பர்க் சொசைட்டி கூட்டு படுகொலை: உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இனப்படுகொலைகளுள் ஒன்று, குஜராத் படுகொலை.  இந்து மதவெறிக் கும்பல் இப்படுகொலைகளை எவ்வளவு கொடூரமாகவும், வக்கிரமாகவும் நடத்தியது என்பதற்கு, குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு முக்கியமான  சாட்சியமாக உள்ளது. இந்து மதவெறிக் கும்பல் இக்குடியிருப்பைச் சுற்றி வளைத்துத் தாக்கியபொழுது, அங்கு வசித்து வந்த இஹ்ஸான் ஜாஃப்ரி (முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்), அக்காலனியில் வசித்து வரும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறும், தங்களது உயிர்களைக் காக்குமாறும் மோடியையும், உயர் போலீஸ் அதிகாரிகளையும் திரும்பத்திரும்ப, பலமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கெஞ்சியிருக்கிறார். 

அதற்கு எந்தப் பலனும் கிட்டவில்லை.  இஹ்ஸான் ஜாஃப்ரியைத் தெருவுக்கு இழுத்துவந்து, அங்கஅங்கமாக வெட்டி, உயிரோடு நெருப்பில் வீசியெறிந்து கொன்றது, இந்து மதவெறிக் கும்பல்.  ஜாஃப்ரி மட்டுமின்றி, அக்காலனியில் வசித்து வந்த மேலும் 69 முஸ்லிம்களும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.  இந்த குல்பர்க் சொசைட்டி படுகொலை முதலமைச்சர் மோடிக்கும், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரிந்தே, அவர்களின் ஆசியோடுதான் நடந்தது.

ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை: குஜராத் இனப் படுகொலையின் போது நடந்ததுதான் ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை. ஸர்தார்புராவில் உள்ள வீடுகளை சங்க்பரிவார பாசிச பயங்கரவாதிகள் தீவைத்துக் கொளுத்தி எரித்து சாம்பலாக்கினர். சொத்துக்களை கொள்ளையடித்தனர். அருகிலிலுள்ள ஊரிலிருந்து கலவரத்திற்கு பயந்து ஸர்தார்புராவில் வீடுகளில் அபயம் தேடிய அப்பாவி முஸ்லிம்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு அவர்களின் கதறலையும் பொருட்படுத்தாமல் வெறித்தனமாக வீட்டிற்கு தீவைத்து எரித்துக் கொலைச் செய்தனர்.

சங்பரிவாரின் இந்த கொடிய செயலை ரீனு கன்னா என்ற சமுதாய ஆர்வலர் இப்படி கூறுகிறார். கலவரத்தில் பங்கெடுத்து கொண்ட சங்பரிவாரத்தினர் குறிப்பாக VHPவினர் முஸ்லிம் பெண்களை கொடூரமாக கற்பழிப்பதையே தங்களின் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டனர். ஹிந்து மதவெறியர்களின் மிருகத்தனமான பாலியல் பலாத்காரத்தில் முஸ்லிம் பெண்கள் அடைந்த வேதனையும், பாதிப்பும் எண்ணில் அடங்காதவை.

பெரும்பாலான பெண்கள் கற்பழிக்கப்பட்டு பின்னர் உயிருடன் எரித்து கொள்ளப்பட்டார்கள் என்று மாலினி கோஷ் என்ற அறுவர் குழுவின் உறுப்பினர் ஏப்ரல் 18, 2002 அன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது இதை கூறினார். சாய்ரா பானு என்ற ஒரு பெண் இவர் சம்பவங்களை நேரில் கண்ட சாட்சிகளில் ஒருவர். இவர் கூரியதாவது  ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்  தனது உறவினர் ஒருவரின்  நிறைமாத கர்பிணி பெண்ணின் வயிற்றை பிளந்தது அந்த சிசுவை கூரிய கத்தியால் குத்தி வயிற்றிலிருந்து வெளியே எடுத்தனர். பின்னர் எரிந்து கொண்டிருந்த தீயில் வீசியெறிந்தனர். அதைகண்டு ஆனந்தம் கொண்டு சிரித்தனர்.

பெஸ்ட் பேக்கரி வழக்கு: ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வதோரா நகரில் பெஸ்ட் பேக்கரி என்ற கடையை தீவைத்து எரித்தனர். பெஸ்ட் பேக்கரி எரிப்பு ஒரு விசித்திரமானது. அந்த பேக்கரியை நடத்தி வந்த முஸ்லிம் ஒருவர் ஆர். எஸ். எஸ். காரர்களுடனும் அவர்களது ஏரியா தலைவர்களுடனும்  நெருங்கிய நட்பு கொண்டிரிந்தவர். அதுமட்டுமல்லாது இவர்கள் நடத்தும் நிகழ்சிகளுக்கு நன்கொடைகளை அள்ளி வீசியவர். கலவரம் நடக்கும்போது அந்த பேக்கரியின் உரிமையாளர் அந்த பகுதியை விட்டு வெளியேற ஆயத்தம் ஆகுகிறார். அப்போது ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வந்து சொல்கிறார்கள் நீங்கள் போகவேண்டாம் உங்களுக்கு எந்தபிரச்சனையும் இல்லை நீங்கள் எங்கள் ஆள் என்று சொல்லி அவரையும் பேக்கரியில் வேலை செய்பவர்களையும் இருக்க சொல்லிவிட்டு இரவில் கூட்டமாக வந்து இவர்கள் 19 பேரை உள்ளே வைத்து பூட்டி  உயிரோடு எரிந்து சாம்பலாக்கினர் துரோகிகள்.

இந்த கலவரத்தின் அனைத்து வழக்குகளிலும் சம்மந்த பட்ட முக்கிய குற்றவாளியான மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.யின் முக்கிய தலைவர்கள் திட்டமிட்டு தப்ப வைக்கப்பட்டுள்ளனர். பாபர் மசூதி வழக்கில், “இந்து என்பது மதமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை” என ஆர்.எஸ்.எஸ். இன் கொள்கையையே தீர்ப்பாக உயர்நீதிமன்றம் அளித்தது முதல் மோடி தப்புவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த பல தீர்ப்புகள்  வரையில் நீதி துறை ஹிந்துதுவாவின் கைகளில் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது.  அந்த கலவரங்களில் சம்மந்தப்பட்ட பெருவாரியான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தப்பவைக்கப்பட்ட இந்நிலையில் ஒரு சம்பவத்திற்கு மட்டும் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது உண்மையில்  பாராட்டுதலுக்கு உரியதே.
நட்புடன்: புதியதென்றல்.

Oct 31, 2011

RSS இயக்கத்தின் சூலாயுதமும்! விஜய்யின் வேலாயுதமும்!

NOV 01: கடந்த சிலவருடங்களாக தமிழகத்தில் இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்த, ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை குலைக்க உன்னைப்போல் ஒருவன், வேலாயுதம் போன்ற படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருகின்றன.

இவைஅனைத்தும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் சதி செயலாகவே பார்க்க முடிகிறது. தமிழகத்திலே தங்கள் இயக்கங்களை வளர்க்க ஹிந்துத்துவா சக்திகள் தொடர்ந்து முயன்று வந்தன. பெரியார், அண்ணா போன்ற சீர்திருத்தவாதிகளின் கடுமையான உழைப்பின் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் தமிழகத்தில் சரியாக கால்பதிக்க முடியாத ஒரு சூழல் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பவே இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்தும் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

ஹிந்துத்துவா இயக்கத்தை ஒரு மாநிலத்தில் வேரூன்ற செய்ய வேண்டும் என்றால், அவர்களுக்கு இஸ்லாமிய எதிப்புணர்வு என்கிற சக்தி தேவைபடுகிறது. அந்த சிந்தனையை ஏற்படுத்தவே ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்கள் தமிழ் சினிமாவை பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் தங்கள் ஹிந்துத்துவா சித்தாந்தத்தை  தமிழகத்தில் பரப்பவும் அதேநேரம் முஸ்லிம் எதிர்ப்பு வெறி உணர்வை ஏற்படுத்தவும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதிதான் ஜிஹாத் மற்றும் முஸ்லிம் பயங்கரவாதம் என்ற பூச்சாண்டி எல்லாம்.

இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமே என்பது நிரூபனமான பின்னரும் அதை பற்றி எந்த சினிமாவும் வாய்திறக்க வில்லை. இப்படி இருக்க இஸ்லாமிய எதிர்புணர்வை  ஏற்படுத்தும் இதுபோன்ற
படங்களை எடுத்து  ஹிந்துக்கள் உள்ளத்தில் முஸ்லிம்களை பற்றிய HATE POLICY (வெறுப்புணர்வு) உண்டாக்கி இதன் மூலம் தங்கள் ஹிந்துத்துவா சித்தாந்தத்தை தமிழகத்தில் பதிக்கும் ஆர்.எஸ்.எஸ். யின் செயல்திட்டமே இது.

ஈழத்திலே தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள், தமிழகத்திலே தமிழக மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள், இதை பற்றி காட்ட எந்த சினிமாவுக்கும் துப்பில்லை. நமது ஹிரோக்களுக்கும்,  தயாரிப் பாளர்களுக்கும் பயங்கரவாதி ராஜபக்சேவிடம் இருந்து தமிழர்களை காப்பது போல் படம் எடுக்க முடியவில்லை. சமகாலத்தில் நடந்த ஒரு கோரத்தை பற்றி சொல்லி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட்டு விட்டு கலவரம் செய்ய ஆர்.எஸ்.எஸ்.க்கு துணை போவதேன்?

இது போன்ற படங்களை எடுக்க ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பின்னணியில் இருந்து பொருளாதார உதவிகளை செய்து வருகின்றது என்றே நம்பத்தோன்றுகிறது. அத்வானியின் தமிழக வருகையும் விஜய்யின் வேலாயுதம் படம் வெளியீடும் ஒரு கலவரத்துக்கான ஒத்திகையாகவே நம்மால் பார்க்க முடிகிறது.

நட்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.

Oct 11, 2011

ஸ்டெர்லைட் ஆலையும்! தமிழர்களின் கோழைத்தனமும்!

OCT 12, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று ஐகோர்ட் நீதிபதிகள், கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் நிர்வாகம் அப்பீல் செய்தது.  ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசியம் இல்லை. என்று டெல்லி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

சிந்திக்கவும்: ’’மராட்டிய மாநிலத்தில் இருந்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை இளிச்சவாயர்கள் ( தமிழர்கள்) வாழும் தமிழகத்துக்கு எப்படி வந்தது என்பதை பார்ப்போம். தங்கள் வாழ்விடத்தை, ஆபத்து வருமுன் காக்கும் எச்சரிக்கை உணர்வுடன் போராடும் மக்களே ஒரு நாட்டின் உண்மையான குடிமைக்கள் என்று சொல்லலாம். இயற்க்கைக்கு எதிரான இதுபோன்ற பயங்கரமான நாசங்களை உண்டாக்கும், சுற்றுப்புற சூழ்நிலைகளை கெடுக்கும் நாசகார நிறுவனங்களுக்கு எதிராக தமிழக மக்களின் போராட்டம் மராட்டிய மக்களோடு ஒப்பிடும்போது வீரியம் அற்றதாகவே தோன்றுகிறது.

1990-களின் தொடக்கத்தில், மராட்டிய மாநிலத்தில், அரசு அனுமதியோடு அமைக்கப்பட்டது ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை. .மராட்டிய மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அப்போதைய மதிப்பில் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து அமைக்கப்பட்ட தொழிற் சாலையை, இயந்திரங்களை உடைத்து நொறுக்கினார்கள். அதே மராட்டிய மக்கள், மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் ஜெய்தாபூர் என்ற இடத்தில் அணு மின் உலை அமைப்பதைக் கடுமையாக எதிர்த்து விவசாயிகளும், பொதுமக்களும் பலத்த கிளர்ச்சி செய்து வருகின்றனர்.

பொதுமக்களின் எதிர்ப்பைக் கண்டு மராட்டிய மாநில அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்குக் கொடுத்து இருந்த உரிமத்தை ரத்து செய்தது. மேலும் குஜராத் மாநிலத்தில் அனுமதி வாங்க முடியாமல், கோவாவில் கால் பதிக்க முடியாமல் போனது. இந்தியாவில் எங்கும் கால் பதிக்க முடியாத அவர்களுக்கு இளிச்சவாயர்கள் வாழும் மாநிலமான தமிழகத்தில் இலகுவாக கால்பதிக்க முடிந்திருக்கிறது. தமிழ்நாட்டில் முத்து வளமும், மீன் வளமும் கொண்ட அழகிய கடல் பூங்காவான தூத்துக்குடி கடலோரத்தில், ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலை நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் அதிகம் வாழும் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட உயர் நீதிமன்றம் கொடுத்த தடையை மறுத்து இந்திய உச்ச நீதிமன்ற களவாணிகள் அனுமதி கொடுத்திருப்பது நீதித்துறை ஆளும்வர்க்கங்களின் கைகளில் என்பது மீண்டும் தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உச்ச நீதிமன்றமே இப்படி என்றால் மக்கள் யாரிடம் முறையிடுவார்கள். இதை தமிழக மக்களின் கையாலாகாத கோழைத்தனம் என்றே சொல்லலாம். காடுகள் அதிகம் உள்ள ஒரிசா மாநிலத்தில் கூட இந்த ஆலைக்கு அனுமதி கிடைக்க வில்லை. மக்கள் நெருக்கமாக வாழும் தூத்துக்குடி நகரத்தில் இதற்க்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களின் கையாலாகாத தனத்தை நிருபிக்கும் மற்றொரு சான்று.

ஈழத்திலே தன் ரத்த பந்தங்கள் கொல்லப்படும்போது இப்படித்தான் உணர்வில்லா பிண்டங்களாக வேடிக்கை பார்த்தார்கள். அதை பக்கத்து நாட்டு பிரச்சனை என்று சொல்லி தேசபக்தி முகமூடி அணிந்து பதுங்கி கொண்டார்கள். குறைந்த பட்சம் தமிழக மீனவர்களை சிங்கள தீவிரவாத ராணுவத்தினர் சுட்டு கொள்ளும் போதாவது கிளர்ந்தெழுவார்கள் என்று பார்த்தால் அதுவும் நடக்கவில்லை. இப்போது ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுமின் நிலையம் என்று கழுத்திற்கு மேல் தொங்கும் கத்தியோடு வாழ்கிறார்கள். மராட்டிய மாநிலத்து கிராமத்து மக்களும், விவசாயிகளும் இதுபோன்ற தீய சக்திகளுக்கு எதிராக போராடி வெற்றி கொள்ள முடிந்திருகிறது. ஆனால் படித்தவர்கள் அதிகம் வாழும் தமிழர்களால் இதை சாதிக்க முடியவில்லை.

சத்தீஸ்கர் மாநிலத்திலே காட்டு வேட்டை என்ற பெயரிலே பழங்குடி மக்களை கொன்று குவிக்கும் இந்திய பயங்கரவாத ராணுவத்தை எதிர்த்து அந்த பழங்குடி மக்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்கள். அவர்கள் இயற்கையான தங்கள் வாழ்விடங்களை பாதுகாக்க போராடும் இந்திய நாட்டின் சிறந்த குடிமக்கள். நாமோ கோழைகள், பூனையைகூட ஒரு அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தினால் ஒருகட்டத்தில் புலியை போல சீறிப்பாயும் தமிழர்களோ தங்களின் வரலாற்றை மறந்து கோழைகளாக சினிமாகாரர்களின் வழித்தடங்களை பின்பற்றி சுகபோக வாழ்க்கை வாழ ஆசைபடுகிறார்கள். தமிழா நீ என்ன கோழையா! பதில் சொல்! என்று தொடங்கும் தீமைகளுக்கேதிரான உன்போராட்டம்.

நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

Oct 8, 2011

ஆணாதிக்க வெறியும் அவதிப்படும் பெண்களும்!

OCT 09, பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டம், தகானியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹிரா யாதவ்,30. இவரின் மனைவி ரினாதேவி, 25. கணவன் - மனைவி இடையே, அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் மனைவி வேறொருவருடன் தகாத உறவு வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டி, கடந்த 5ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதில், மனைவியின் முடியைப் பிடித்து இழுத்து, யாதவ் சண்டையிட்டார்.

மனைவியும் பதிலுக்கு பேசினார். ஆத்திரம் அடைந்த யாதவ், அருகில் இருந்த கத்தியை எடுத்து, மனைவியின் கழுத்தில் ஓங்கி வெட்டினார். துண்டான தலையை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினார். வெட்டப்பட்ட தலையுடன், ஊர்வலமாகச் சென்ற அவரைப் பற்றி, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், ஹிரா யாதவை கைது செய்தனர்.

சிந்திக்கவும்: கற்பொழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டும் உரியது என்பது போல ஒரு மாயயை ஆணாதிக்க வெறியர்கள் சித்தரித் துள்ளனர். கற்பொழுக்கம் என்பது ஆண்களுக்கும்தான் என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். ஹிந்துத்துவா மனுதர்மம் இவர்களுக்கு போதித்தது அப்படித்தான் பெண்கள் ஆண்களுக்கு சேவை செய்யப் பிறந்தவர்கள், கணவனே கண்கண்ட தெய்வம் இப்படி சொல்லி பெண்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளார்கள்.

காலையில் எழுந்ததும் பெண்கள் தங்கள் கணவனின் காலை தொட்டு கும்பிடுவது முதல் இது தொடங்குகிறது. மேலே செய்தியில் சொல்லப்பட்ட தகாத உறவு ஆண்களுக்கு இருந்தால் இதை இவர்கள் பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். இதை சம்மந்த பட்ட ஆண்களின் தாய்மார்கள் தாங்களும் ஒரு பெண் என்பதை மறந்து என் மகனுக்கு என்ன அவன் ஆம்பள சிங்கம்! சேத்தை கண்டால் மிதிப்பான்! தண்ணியை கண்டால் கழுவுவான்! என்று ரொம்பவும் பெருமையாக வேறு சொல்லி கொள்வார்கள்.

ஆண்கள் குடிக்கலாம், கற்பொழுக்கம் தவறி நடக்கலாம், கட்டிய மனைவியை வைத்து கொண்டு வைப்பாட்டிகள், சின்ன வீடுகள் வைத்துக் கொள்ளலாம் இதுவெல்லாம் ஆண்வர்க்கம் பெருமைப்படும் விஷயங்கள். அதே ஒரு பெண் அறியாமையில், தனது இயலாமையில், தவறிழைத்தால் அதற்க்கு இதுபோல் தலையை வெட்டி கோரதாண்டவம் புரிவார்கள். இதை மற்ற ஆண்களும் பெருமையாக பேசிகொள்வார்கள் அவன் வீரன் பெண்டாட்டி தப்பு பண்ணினாள் வெட்டி கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போயிட்டான் என்று.

ஆண்கள் காதலிப்பார்கள் அது தப்பில்லை அதை வைத்து ஆட்டோ கிராப் படம் எல்லாம் எடுப்பார்கள் ஒரு காதல் இல்லை! வாழ்க்கையில் பலகாதலை தாண்டி வருவார்கள். அதே நேரம் பெண்கள் படிக்க கூடாது, அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும் என்று ஆயிரம் கட்டுபாடுகள். பெண்பிள்ளைகளை நம்பாமல் அவர்களை தொடர்ந்து உளரீதியாக நெருக்கடிகளை கொடுப்பது இப்படியாக அவர்களுக்கெதிரான வன்முறை அவர்கள் வாழ்க்கை முழுவதும் தொடரும். ஒழுக்கம், கட்டுப்பாடு என்பது நாணயத்தின் இரண்டு பகுதிகள்! ஆண்கள், பெண்கள் இருவரும் அதை சமமாக பாவிக்க வேண்டும். அதைவிட்டு அதை பெண்களுக்கு மட்டும் என்று திணிக்கும் நிலை மாறவேண்டும்.

*நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்*

Oct 6, 2011

தமிழர்களின் விடியல்! விடிவெள்ளி!! இவர்கள்தான்!!!

OCT 07, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, இருபதாண்டு காலத்திற்கு மேலாக சிறையிலே வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிந்திக்கவும்: தமிழகத்தை கொள்ளையடித்து குடும்ப அரசியல் நடத்தி, ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்படும் போது அதை வேடிக்கை பார்த்து கொண்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கொண்டிருந்த கருணாநிதி இப்பொது அரசியல் அனாதையாக தவிக்கிறார். கடந்த தேர்தலில் தனது ஆஸ்த்தான கொள்கைபரப்பு  செயலாளர் குஷ்புவை நம்பி தேர்தல் களம் இறங்கி பெரும் தோல்வியை சந்தித்தார். இப்பொது வேறு வழியில்லாமல் பேரறிவாளன், முருகன், சாந்தன் விஷயத்தை கையில் எடுத்து பொழுது போகாமல் அறிக்கை போர் நடத்துகிறார்.

கடந்த தேர்தலில் பட்டது போதாது என்று இந்த பஞ்சாயத்து தேர்தலிலும் தனது ஆஸ்தான கொள்கைபரப்பு செயலாளர் குஷ்புவை நம்பி தேர்தல் களம் காணுகிறார். எங்கு திரும்பினாலும் பத்திரிக்கைகளில் குஷ்பு திமுக விற்கு பிரச்சாரம் செய்யும் படங்களும் முழக்கங்களும்தான். சிந்தனையாளர்களும், தமிழ் அறிஞசர்களும், நடமாடும் பல்கலைக் இப்பொது பிரச்சாரம் செய்ய கூட  நாதியில்லாமல் நடிகை குஷ்புவை  நம்பி நிற்கிறது. கழகங்களும் இருந்த திமுகவில்

மறுபுறம் ஜெயலலிதா இவர் பார்பனர் என்கிற ஆணவம், உயர்குலம் என்ற ஹிந்துத்துவா குடுத்த மமதை, பார்பன ஹிந்துத்துவா சித்தாந்தவாதி சோ ராமசாமியின் கைப்பாவையாக செயல்படுபவர். கருணாநிதிக்கு மாற்று இவர் என்று மக்கள் நினைத்தார்கள் ஆனால் இவர் ஒருசார்பு சிந்தனை படைத்த ஹிந்துத்துவா சித்தாந்தவாதி என்பதை மக்கள் நீண்டகாலம் ஆகியதால் மறந்துவிட்டார்கள் என்று சொல்வதை விட மக்களுக்கு வழியில்லை என்றே சொல்லலாம். இவரது ஆட்சி துக்ளக் சோ ராமசாமியின் ஆட்சியாகவே மாறிவிட்டது.

இந்த பழைய பெரிச்சாளிகளுக்கு மாற்றாக சினிமாவில் இந்தியாவின் எதிரிகளை அழித்து இந்தியாவை பாதுகாக்கும் தேசபக்தி நாயகன் கேப்டன் விஜயகாந்தை நம்பி கொஞ்ச மக்கள் வாக்களித்தார்கள். இவரது வீரவசனங்கள் எல்லாம் படத்தில் மட்டும்தான் நிஜவாழ்க்கையில் கிடையாது என்பது அவர் ஈழமக்கள் விசயத்தில் மவுனம் காத்ததில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.  இவர் தேர்தலுக்கு பின்னால் சிறந்த எதிர்கட்சி தலைவராக செயல்படுவார் என்று பார்த்தால் அம்மையாரின் காலடியில் அடங்கி போய்விட்டார்.

தமிழா! இவர்களை நம்பி மீண்டும் மீண்டும் இந்த அரசியல் சாக்கடையில் விழாதே! இந்த போலி அரசியல் வாதிகளை விட்டு ஒழி. செகுவார, திப்புசுல்தான், பகத்சிங் இப்படி அநீதிகளுக்கு எதிராக போராடிய தலைவர்களின் வாழ்கையை படி. கரும்புலி வீரர்களின் வீரத்தை நினைவில் கொள். இலஞசர்களே எழுச்சி கொள்ளுங்கள். ஒன்று சேருங்கள்! தமிழினம் காட்க்க தனித்தமிழகம் அமைப்போம். தமிழர்களுக்கு என்று ஒரு தனிநாடு அதுதான் தமிழ்நாடு தொடங்கி ஈழம் வரை. அதன் தலைநகர்தான் மதுரை.
-நட்புடன் மாவீரன்-

Sep 11, 2011

இவர்கள் போலீஸா! பயங்கரவாதிகளா!

SEP 11, பரமக்குடியில் இமானுவேல்‌ சேகரன் நிகழ்ச்சியில் தமிழகமக்கள் முன்னேறக்கழக நிறுவனர் ஜான்பாண்டியன் கலந்து கொள்வதற்காக செல்லமுயன்றார். அவர் நெல்லை மாவட்டம் வல்லநாடு பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். .

ஜான்பாண்டியனை கைது செய்ததாக செய்தி பரவியதையடுத்து பரமக்குடியில் மறியல், கலவரம் ஆகியவை ஏற்பட்டது. இதில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் கலவரத்தை அடக்க கண்ணீர்புகை குண்டு வீசப்பட்டது. தொடர்ந்து வன்முறை நீடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

துப்பாக்கிச் சூட்டில் முதலில் 3 பேர் உயிரிழந்தனர்.. பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் ஒருவர் பின் ஒருவராக தற்போது வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பரமக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரமக்குடி, சுற்று வட்டார கிராமங்களில் பாதுகாப்புக்காக 3ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  போலீஸ் வாகனம் எரிப்பு, துப்பாக்கிச் சூடு, 144 தடை உத்தரவையடுத்து பரமக்குடியில் பதற்றம் நிலவுகிறது.

1, பரமக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு வைகோ கண்டனம்!  அமைதி காக்க வேண்டுகோள்!

2, இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று துப்பாக்கி சூடு: காவல்துறை அணுகுமுறைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்!

சிந்திக்கவும்: இப்படியாக குடிமக்களை கொன்று பயங்கரவாத போலீஸ் துறை சாதனை படைத்துள்ளது! மக்கள் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் அதை சமாளிக்க கண்ணீர்புகை, தடியடி, ரப்பர் குண்டு பிரயோகம், தண்ணீரை பீச்சி அடிப்பது இப்படி நடத்துவது தவறல்ல அதை மீறி துப்பாக்கி சூடு நடத்துவது வடிகட்டிய அயோக்கியத்தனம் பயங்கரவாதம்.

வெறும் கையேடு கலவரம் செய்யும் மக்களை துப்பாக்கியால் சுட்டு கொல்வதற்கு அல்ல உங்கள் கைகளில் துப்பாக்கிகள்  கொடுக்கப்பட்டிருப்பது. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு அவர்களை பாதுகாப்பதை விட்டவிட்டு கலவரத்தை சமாளிக்க முடியாமல் துப்பாக்கி மூலம் உயிர்களை பறித்தது கடைந்தெடுத்த பயங்கரவாதம்.

கலவரம் செய்யும் மக்களை கலைக்க  தண்ணீரை பீச்சி அடிக்கும் வாகனம், ரப்பர் தோட்டாக்கள், கற்களை கொண்டு அடித்தால் அடி மேலே விழாமல் தடுக்க பைபர் தடுப்புகள் என்று இவர்களுக்கு மக்கள் வரிபணத்தில் வாங்கி கொடுக்கப்பட்டிருக்கும் கவசங்களோ ஏராளம். இப்படி இவர்கள் நோகாமல் நொங்கு திங்க!  கல்லடி படாமல், சுலபமாக கொஞ்சபேரை சுட்டு கொன்று கலவரத்தை அடக்கி விட நினைகிறார்கள். மொத்தத்தில் இவர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்ச்சிகளும், சம்பளமும் வீண்தான்.  வீணாக மக்கள் பணத்தில் மக்களை கொல்ல ஒரு பயங்கரவாத படை உருவாக்கப்பட்டிருகிறது என்பதே  உண்மை.
நட்புடன்: புதியதென்றல்.

Sep 5, 2011

வீதியில் விநாயகர்! பீதியில் மக்கள்!

SEP 06, : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் இதர இந்து அமைப்புகளின் சார்பில், சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த, ஆயிரத்து 341 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. திருவல்லிக்கேணியில், தடை செய்யப்பட்ட பகுதியில், ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உள்ளிட்ட, 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிந்திக்கவும்: ஒவ்வொரு வருடமும் விநாயகர் ஊர்வலம் என்றபெயரில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ஹிந்துத்துவாதிகள் தமிழகத்தில் ஒருவகைய பதட்டத்தை ஏற்ப்படுத்தி வருகின்றனர். இவர்கள் வேண்டும் என்றே கலவரம் செய்யும் நோக்கோடு நடத்தும் இந்த ஊர்வலத்தால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது.

போக்குவரத்து மற்றும் சுகாதார கேடு, பொது அமைதிக்கு பங்கம், அரசுக்கு பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் வீண் செலவு, கலவர பீதி என்று வடநாட்டு விநாயகரால் தமிழக மக்கள்படும் துயரம் எண்ணில் அடங்காதது. இது போதாதென்று இதர சமூதாய மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாக ஊர்வலமாக போய் அவர்கள் மதத்தை பற்றியும், அவர்களை பற்றியும் மோசமான வார்த்தைகளை பேசி, அவர்களின் வழிபாட்டு தளங்களில் செருப்பு, மற்றும் கற்களை எரிந்து கலவரங்களை
உண்டாக்கி மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கிறார்கள்.

விநாயகர் வழிபாடு என்பது தமிழர்களின் வழிபாடு கிடையாது, இது ஆரிய வந்தேறி பிராமணர்களால் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது. . ஒவ்வொரு வருடமும் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் இந்த காவி காலிகள் கலவரம் நடத்தாமல் இருந்ததில்லை. இப்படி விநாயகர் ஊர்வலம் என்றாலே கலவர பீதியில் தமிழகம் ஆழ்த்தப்படுவது வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது.

Sep 2, 2011

உண்ணாவிரதம் நடத்தும் போலிகளும், நிஜங்களும்!

SEP 04, இம்பால்: அன்னா ஹசாரே உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் என்று மணிப்பூர் மக்களுக்காக ராணுவத்துடன் போராடி வரும் மணிப்பூர் இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா விமர்சித்துள்ளார்.

அவரை அணுகி அன்னா ஹசாரே போராட்டம் பற்றி கேட்டபோது, அவர் போராட்டம் செயற்கை தனமானது. அவர் மணிப்பூரில் உள்ள மக்களின் அவலநிலை குறித்து வெளி மாநிலங்களில் பலருக்கும் தெரியவில்லை. அவர் இங்கு வந்து எங்களுடன் போராடினால் வரவேற்பேன். பாதுகாப்புப் படையினர் நடத்தும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சிந்திக்கவும்: ஹிந்துத்துவாவால் தூண்டிவிடப்பட்ட அன்னா ஹசாரே உடைய ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு பெரும் ஆதரவு இருந்தது போல் பார்ப்பன நாளேடுகளால் சித்தரிக்கப்பட்டது. இவரின் போலி 13 நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு பணிந்து, நாடாளுமன்றத்தில் விசேஷ தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவரின் ஜன் லோக்பால் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது.

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தை பெரிய அளவில் வெளிச்சம் போட்டு காட்டிய பார்ப்பன ஊடகங்கள் மணிப்பூரில் ஒரு பெண் அந்த மாநில மக்களுக்காக கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் வெறும் திரவ உணவுடன் பட்டினிப் போராட்டம் நடத்தி வருவது பற்றி இதுவரை கண்டுகொண்டதே இல்லை. இப்படி ஒரு போராட்டம் நடப்பதாக கூட மக்களுக்கு தெரியாது.

2000ஆம் ஆண்டில் இம்பால் (மணிப்பூர்) விமான நிலையம் அருகில் உள்ள மாலோம் என்ற கிராமத்தில் இந்திய  ராணுவத்தை சேர்ந்த பயங்கரவாத படையணி ஒன்று பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கிராமத்தினர் மீது கண்மூடித்தனமாக சுட்டதில்10 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண். அதற்குப் பிறகு மூன்று நாட்கள் கழித்து இதைக் கண்டித்து, இரோம் சர்மிளா தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பட்டினிப் போராட்டத்தை தொடங்கினார்.

ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, அவர் நடத்தும் பட்டினிப் போராட்டம் 11 ஆண்டுகளை கடந்து விட்டன. இந்த சட்டத்தை பயன்படுத்தி, இந்திய ராணுவம், சாதாரண மக்களை கைது செய்யலாம், பிரிவினைவாதி என்று சொல்லி தண்டனை வாங்கி தரலாம். இதுபோலவே, பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்வது செய்வது, பின்னர் அவர்களை கொலை செய்வது போன்ற மனித உரிமைக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த பெருமைக்கூரிய இந்த ராணுவம்தான் அமைதிப்படையாக சென்று ஈழத்து தமிழ் பெண்களை கற்பழித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொடூர ஆள்தூக்கி சட்டத்தை நீக்க கோரி இரோம் சர்மிளா, தொடர்ந்து போராடி வருகிறார். இதற்காக இவர் தொடங்கிய உண்ணா விரதம் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகியும் முடிவுக்கு வரவில்லை. இவரை வீட்டுக்காவலில் வைத்து இவருக்கு வலுக்கட்டாயமாக மூக்கின் மூலம் திரவ உணவுகளை காவல்துறையினர் செலுத்தி வருகின்றனர். இவரின் நியாயமான ஒரு கோரிக்கையை நிறைவேற்ற எந்த மத்திய அரசும் தயாராக இல்லை. அதே நேரம் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்திற்கு அடிபணிந்தது.

அதுபோல் ஹரித்வாரில் நிகமானந்தா என்ற ஒரு 38 வயதான ஹிந்துமத சாமியார், ஹிந்துக்களின் புனித நதியான கங்கை நதியின் தூய்மைக்காக 68 நாள் உண்ணாவிரதம் இருந்து சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். ஆனால் இதை பற்றி எந்த பார்பன பத்திரிக்கைகளும் வாய்திறக்கவில்லை. இப்படி ஒரு ஹிந்துச்சாமியார் உண்ணாவிரதம் இருந்து இறந்துபோனார் என்று எத்தனை ஹிந்து மக்களுக்கு தெரியும்.

அதுபோல் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து பாரதிய ஜனதா, ஹிந்து முன்னணி, விஸ்வஹிந்து பரிசத், பஜ்ராங்க்தல், அகிலபாரதிய வித்யாதி பரிசத், பாரத மஸ்தூர் சங், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர சுவாமி, பாபா ராம் தேவ், ஹிந்து முன்னணி ராமகோபாலன், அத்வானி, வாஜ் பேய், முரளிமனோகர் ஜோசி, இப்படி ஹிந்துத்துவா சங்கபரிவார பயங்கரவாதிகளும், அவர்களின் பார்ப்பன அபிமாநிகளுமான துக்களக் சோ, தினமலர், தினமணி, இந்தியா டுடே,  இந்தியன் எக்ஸ்பிராஸ் போன்ற பத்திரிக்கைகள் கங்கை புனித நதிக்காக போராடிய ஹிந்து சாமியாரை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை, ஏன் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க வில்லை.