Showing posts with label பாசிச ஹிந்துத்துவா. Show all posts
Showing posts with label பாசிச ஹிந்துத்துவா. Show all posts

Sep 15, 2018

கலவர விநாயகர்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இந்து முன்னணி பயங்கரவாதிகள் திட்டமிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர்.  போலீசால் அறிவிக்கப்பட்ட ஊர்வல பாதையை விட்டு மாற்று பாதையில் ஊர்வலத்தை கொண்டு சென்று கலவரத்தை நடத்தினர். இது மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகரை கொண்டு காவிகள் கலவரம் செய்தனர். 

வருடம் தோறும் வட இந்திய ஆரிய பார்ப்பனர்களின் இறக்குமதியான பிள்ளையார் தமிழக வீதிகளில் கவர விநாயகராக வலம் வருகிறார். பிள்ளையார் வழிபாடு என்பது எப்படி தோன்றியது என்று பார்ப்போம். ஆரியர் வருகைக்கு முன்பு இந்தியாவில் வாழ்ந்த பூர்வ குடிகள் இயற்கை மற்றும் தங்கள்  முன்னோர்களை வழிபாடுபவர்களாக இருந்தனர். கைபர் போலன் கணவாய் வழியாக இந்திய பிரதேசத்தில் நுழைந்த வந்தேறி ஆரியர்கள் வளமும் செழிப்பும் மிக்க இந்த மக்களை வெல்ல சூழ்ச்சியை பயன்படுத்தினர். 

ஆரிய வந்தேறிகள் புதிய கடவுள் கொள்கையை அறிமுகப்படுத்தினர். அதை  நாளடைவில் மக்களை நம்பவைத்தனர். அந்த கடவுள்களுக்கு தங்களது பாஷையில் மந்திரம் சொன்னால்தான் புரியும் என்றும் சொன்னார்கள்.  கோவில்களில் மந்திரம் சொல்லி பூசை நடத்துகிறோம் என்று கோவில்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டார்கள். கோவில்கள் அவர்கள் வசம் என்பதால் மன்னர்களும் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர். மேலும் தாங்கள் உண்டாக்கிய கடவுள்கள் பற்றி கதைகளையும், புராணங்களையும் இயற்றினர். அந்த புராண இதிகாச அடிப்படையில் மனிதர்களை பிறப்பினால்  பிரித்தனர். 

பிராமணன் தலையில் இருந்து பிறந்தவன் மற்றவர்கள் மார்பில், வயிற்றில், காலில் இருந்து பிறந்தவர்கள் என்று உருவாக்கினர். இதன் அடிப்படையில் பிராமணன் உயர்ந்தவன் என்றும் அவனுக்கு சேவை செய்யவே மற்றவர்கள் படைக்கப்பட்டார்கள் என்றும் ஆக்கினார். சூத்திரர்கள் வேதம் படிக்ககூடாது, இரட்டை குவளை முறை, உயர்சாதிகாரர்கள் குடிக்கும் கிணற்றில் தண்ணீர் எடுக்க கூடாது, அவர்கள் நடக்கும் வீதிகளில் நடக்க கூடாது, தொட்டால் தீட்டு, உடன்கட்டை ஏறுதல், பெண்கள் மேலாடை அணிய கூடாது, கோவிலுக்குள் நுழையக்கூடாது, சிலைகளை தொட்டால் தீட்டு என்று பிராமணர்கள் அல்லாதோர் மதத்தின் பெயரால் அடிமைப்படுத்தபட்டனர். இந்நிலையில் புத்தரின் சமத்துவ கொள்கைகள் மக்களிடையே வேகமாக பரவியது. மக்கள் புத்த மதத்தை அதிக அளவில் தழுவ தொடங்கினர். இனி நாம் ஆழ்வதற்கும், நமக்கு சேவை செய்யவும் அடிமைகள் இல்லாத நிலை உருவாகிவிடுமோ என்று பிராமணர்கள் அஞ்சத்தொடங்கினர். 

எப்படியாவது இந்த நிலையை சரிசெய்து வேண்டும் என்று பிள்ளையார் கதையை உண்டாக்கினர். பார்வதி குளிக்கும் போது தனக்கு பாதுகாவலுக்கு தன் உடலில் உள்ள அழுக்குகளை உருட்டி ஒரு படைப்பை உண்டாக்கினார். பிள்ளையாரை யாரும் தொடலாம், வெறும் மண், மாட்டு சாணி இப்படி எந்த பொருளாலும் பிள்ளையார் சிலைகளை யாரும் உருவாக்கலாம். இப்படி பிள்ளையாரை ஜனரஞ்சகம் ஆக்கி இதன் மூலம் மக்கள் மதம் மாறுவதை  தடுத்தனர். அதேநேரம் புத்த பிக்குகளை தூக்கிலிட்டும், எரித்தும் கொலைசெய்தனர். புத்த மடாலயங்களை இடித்து தரைமட்டம் ஆக்கினர். இதே பிள்ளையாரை வைத்தே இன்று கிருஸ்தவ, முஸ்லீம் மக்களை கலவரம் செய்து அழித்து ஒழிக்க பயன்படுத்துகின்றனர்.  

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எல்லா உயர்மட்ட தலைவர்களும் பிராமணர்களே! அதேபோல் பிஜேபி கட்சியின் மூத்த தலைவர்கள், முதல்வர்கள், கவர்னர்கள்  எல்லோரும் பிராமணர்களே. இனி வர்ணாசிரம கொள்கையை சொல்லி இந்துக்களை ஆள முடியாது என்று முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும்  பொது எதிரியாக்கி இதை கொண்டே அரசியல் நடத்தி ஆட்சியையும் பிடித்து விட்டனர். இதன் மூலம் இலாபம் அடையும் பணக்காரர்கள், உயர் அதிகாரிகள், ஆட்சியாளர்கள், எல்லாருமே பிராமணர்கள். பேருக்கு ஒரு சிலரை மோடி போல் மற்றவர்களையும் தங்களோடு இணைத்து வைத்து கொள்வர். இதை புரியாத வரை மக்களாகிய நமக்கு கேடுதான். 

Nov 13, 2014

வெளிச்சத்திற்கு வந்த உண்மை முகம்!?

போட்டோவில் உள்ள 22 வயதான குமார் சின்ஹே என்பவன். இஞ்ஜினியரிங் படித்துவிட்டு வேலையில்லாத காரணத்தால் மிரட்டி பணம் வாங்கும் வேலையில் ஈடுபட்டான்.

பாபர் மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்பிற்கும், கலவரத்திற்கும் காரணம் ஃபாஸிஸ சங்கப்பரிவார கும்பல் என்பது வெளிச்சத்திற்கு வந்த உண்மை.
மாலேகான், மக்கா மஸ்ஜித், சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ், கோவா, ஹுப்ளி, அஜ்மீர் தர்கா, தென்காசி ஆர்.எஸ்.எஸ். குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளை நடத்திய சங்கப்பரிவார கும்பல் என்பதும், அதனை முஸ்லிம்கள் மீது பழிசுமத்தி யூகத்தின் அடிப்படையில் புதிய, புதியதாக இயக்கங்களின் பெயர்களைக் கூறியும் சிமி இயக்க பெயர்களைக் கூறியும் பல அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு பிறகு குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய ஃபாஸிஸ பயங்கரவாதிகளை ஹேமந்த் கர்கரே போன்ற நேர்மையான அதிகாரிகள் வெளியே கொண்டுவந்தனர்.
இந்திய நாடு என்பது எங்களது பாரத மாத என்று கூறிக்கொண்டு அந்த பாரத மாதவின் உறுப்புகளிலே குண்டு வைத்துவிட்டு, அதற்கான உண்மையான குற்றவாளிகளை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடிக்கும் முன்பே முந்தியடித்துக்கொண்டு முஸ்லிம்களை மீது பழி சுமத்துவது தான் பாஸிஸ சங்கப்பரிவார கும்பலில் உண்மை முகாம். இன்று வரை சிறையில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் விசாரணை கைதிகள் என்பதும், விடுதலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் போதிய ஆதரமில்லை என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படவில்லை மாறாக அப்பாவிகள் என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது. இந்திய நாட்டு மக்களின் மீது குண்டுவெடிப்பு நடத்திவிட்டு சுதந்திரமாக சுற்றித்திரிகின்றனர் சங்பரிவார கும்பல்கள்.
இவர்கள் இந்த வரிசையில் வந்தவன் தான் போட்டோவில் உள்ள 22 வயதான குமார் சின்ஹே என்பவன். இஞ்ஜினியரிங் படித்துவிட்டு வேலையில்லாத காரணத்தால் மிரட்டி பணம் வாங்கும் வேலையில் ஈடுபட்டான்.
இதற்கான இவன் பயன்படுத்தியது முஸ்லிம்களை தான். போபால் சிவாஜி நகரில் உள்ள மகேஷ் என்பவரருக்கு ஒரு மிரட்டல் கடிதம் இவன் எழுதியுள்ளான். அதில் தனது பெயர் அப்துல் பாசித் அஹமது எனவும், தான் சிமி அமைப்பை சேர்ந்தவன் எனவும், தனக்கு 15 லட்சம் தரவேண்டும் எனவும் இல்லையேல் எங்களது அமைப்பு உன்னுடைய குடும்பத்தை சும்மா விடாது என்று மிரட்டல் கடிதம் எழுது விட்டு அயோத்தி நகரில் உள்ள தனது முஸ்லிம் நண்பன் வீட்டில் சென்று தங்கிவிட்டான். இவன் தொலைபேசியிலும் மிரட்டல் விடுத்துள்ளான். மிக முக்கியமான பிரச்சனை என்பதால் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு கயவனை கைது செய்துள்ளனர்.

காவல்துறை மட்டும் துரிதமாக செயல்படவில்லை என்றால் இதனை காரணம் காட்டி சங்கப்பரிவார கும்பல்கள் கலவரத்தை நிகழ்த்தி பல முஸ்லிம்களின் சொத்துக்களை சேதப்படுத்தியும், முஸ்லிம்களையும் கொலை செய்தும் இருப்பார்கள்.

(தவறு செய்கிறவங்களுக்கு முன்ஜாமீன் எந்த தவறும் செய்யாத  முஸ்லிம்களுக்கு சிறையா? சிறகு அடிக்க வேண்டிய நாங்கள் சிறை, சிந்திக்க அறிவு இல்லாத மனிதர்களால், வானளவு உயரநினைத்தோம் வாழ்வுக்காக போராடுகிறோம், மனிதா ஒரு நிமிடம் எங்கள் இடத்தில் இருந்து யோசித்து பாருங்கள் (முஸ்லிம்கள்) உங்களின் சுய நலத்திற்காக சிறை ).

Jun 20, 2012

ஹிந்துத்துவா (தீவிர)வாதியே இந்திய பிரதமராக முடியும்!


புதுடெல்லி, ஜூன்.21 ஹிந்துத்துவாவை முன்மொழிபவரே பிரதமர் ஆக வேண்டும் என்று நரேந்திர மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு தெரிவித்துள்ளது.
2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.
பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்துவிட்டே 2014 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள் ளார். மேலும் பிரதமர் வேட்பாளர் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும் என்றும், மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார். நிதிஷ் குமாரின் கருத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Jan 29, 2012

BJP இரண்டாக உடைகிறது!

JAN 30: பராதிய ஜனதா கட்சியில் மோடிக்கும் அத்வானிக்கும் இடையே கடும் குடும்பி சண்டை நடந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சியில் அத்வானி தன்னை பெரும் செல்வாக்கு உள்ள தலைவராக காட்டி  வந்துள்ளார்.

பாபர் மசூதி விஷயத்தை பூதாகரமாக்கி அதை வைத்து  தொடர்ந்து பல ரதயாத்திரைகளை (ரெத்த யாத்திரை) நடத்தி மதவாத பிரிவினைகளை உண்டாக்கி பாரதிய ஜனதாவில் தன்னை ஒரு ஹீரோவாக காட்டி கொண்டவர்தான் திருவாளர் அத்வானி.

Aug 7, 2011

ஹிந்துத்துவாவை இரும்பு கரம் கொண்டு அடக்காவிடில் ...?

AUG 08, புதுடெல்லி:முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ஆர்.கே.ராகவனின் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் குஜராத் இனப்படுகொலை தொடர்பான தகவல்களை ஆர்.எஸ்.எஸிற்கு கசியவிட்டதாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிறப்பு புலனாய்வு குழுவினர் குஜராத் கூடுதல் அட்வக்கெட் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு கசியச்செய்த தகவல்களை ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தவாதியான குருமூர்த்தி சுவாமிநாதனுக்கு அவர் அளித்துள்ளார் என சஞ்சீவ் பட் தெரிவித்தார்.

குஜராத் இனப்படுகொலை வழக்கில் மோடியை தப்பிவிக்க ஆர்.எஸ்.எஸ் நடத்தும் முயற்சிகளுக்கு தலைமை வகிப்பவர் குருமூர்த்தி சுவாமிநாதன் ஆவார். குருமூர்த்தி தயார் செய்த மனுவுடன் குஜராத் இனப்படுகொலையின் பெயரால் மோடியை வேட்டையாடக்கூடாது என கோரி எல்.கே.அத்வானியின் தலைமையிலான பா.ஜ.க பிரதிநிதிகள் குழு குடியரசு தலைவரையும், பிரதமரையும் சந்தித்திருந்தனர்.

சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்கு விசாரணையின் பல முக்கிய விபரங்களையும் துஷார் மேத்தாவுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிக் கொடுத்துள்ளனர். குஜராத் இனப்படுகொலை தொடர்பான வழக்குகளில் மோடி அரசிற்காக நீதிமன்றத்தில் ஆஜரானவர் துஷார் மேத்தா ஆவார். இந்த மின்னஞ்சல்களை துஷார் மேத்தா குருமூர்த்தி சுவாமிநாதனின் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியதற்கான ஆதாரங்களை சஞ்சீவ்பட் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

குருமூர்த்தி இந்த விபரங்களை எல்லாம் பா.ஜ.கவின் மாநிலங்களவை உறுப்பினரும், பிரபல சட்டநிபுணருமான ராம்ஜெத்மலானிக்கும், அவரது மகன் மகேஷ் ஜெத்மலானிக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பிக்கொடுத்துள்ளார்.
குஜராத்தில் சொராஹ்புதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்காக வாதாடுபவர்கள் ராம்ஜெத்மலானியும் அவரது மகன் மகேஷ் ஜெத்மலானியும் ஆவர்.

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது அமித் ஷா மோடி அரசில் உள்துறை அமைச்சராக பணியாற்றினார். குஜராத் இனப்படுகொலையின் இதர வழக்குகளின் வழக்கறிஞர்களுக்கும் துஷார் மேத்தா தனக்கு கிடைத்த முக்கிய விபரங்களை அளித்துள்ளார் என பட் தெரிவித்தார். விடுமுறை கால பயணம் தொடர்பாக தனது மிக நெருங்கிய நண்பரான துஷார் மேத்தாவின் மின்னஞ்சல் விலாசத்தை அவருடைய அனுமதியின் பெயரில் பரிசோதித்ததாக பட் முன்னர் தெரிவித்திருந்தார்.

சஞ்சீவ் பட் வெளியிட்டுள்ள தகவல்களை தொடர்ந்து குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி மோடி அரசை கடுமையாக கண்டித்துள்ளது. இதுக்குறித்து குஜராத் பிரதேச காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோட்வாடியா கூறியதாவது: அரசு இயந்திரங்களை நரேந்திரமோடி அரசு கலவர வேளையில் எவ்வாறு உபயோகித்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆவணங்கள் ஆதாரமாக உள்ளன. கலவரத்தின்போது குற்றவாளிகளும், அரசு அதிகாரிகளும் கூட்டாக செயல்பட்டுள்ளனர்.

ஆனால், உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவும் இத்தகையொரு கூடா நட்பின் ஒரு பகுதி என்பதை இந்த மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றம் நியமித்த புலனாய்வு குழுவின் மீது கருமையான நிழல் விழுவது மிகவும் கடுமையானது. இவ்விஷயத்தை தீவிரமாக உச்சநீதிமன்றம் பரிசோதிக்கும் என கருதுகிறேன் என மோட்வாடியா தெரிவித்தார்.

அதேவேளையில் சஞ்சீவ் பட் வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து பதிலளிக்க குஜராத் மோடி அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் ஜெயநாராயணன் வியாஸ் மறுத்துவிட்டார். நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம் குறித்து பதிலளிப்பது நீதிமன்ற அவமதிப்பு எனக்கூறி நழுவியுள்ளார்.

குஜராத் கலவர வழக்கில் ஏதேனும் குற்றவாளிகளுக்காக தான் இதுவரை எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகவில்லை என மகேஷ் ஜெத்மலானி பதிலளித்துள்ளார். மேலும், துஷார் மேத்தாவிடமிருந்தோ குருமூர்த்தியிடமிருந்தோ இத்தகைய மின்னஞ்சல்கள் தனக்கு கிடைக்கவில்லை என மகேஷ் கூறுகிறார். சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை தனக்கு கிடைக்கவில்லை என ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் சித்தாந்தவாதி குருமூர்த்தி கூறியுள்ளார்.

**ஹிந்துத்துவாவை இரும்பு கரம் கொண்டு அடக்காவிடில் ...? இந்திய உடைவது நிச்சயம் **

Jul 1, 2011

மும்பை இன பயங்கரவாதத்தின் மீது நடவடிக்கை!

JULY 02, மும்பை: சிவசேனை தலைவர் பயங்கரவாதி பால் தாக்கரேவின் சொத்துக்களை முடக்க பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிந்துத்துவா பயங்கரவாதி பால் தாக்கரே தனது கட்சியின் பத்திரிகையான “சாம்னாவில்’ 2008-ல் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார்.

இந்த கட்டுரை பிகார் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக ராஜேஷ்குமார் சிங் என்ற வழக்கறிஞர் பிகார் மாநில ஆரா சப்டிவிஷனல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கில் ஆஜராகும்படி தாக்கரேவுக்கு பலமுறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அவர் ஆஜராகவில்லை. எனவே தாக்கரேவின் சொத்துக்களை முடக்க நீதிபதி எஸ்.பி.எம்.திரிபாதி ஜூன் 27-ம் தேதி உத்தரவிட்டார்.

இதற்கிடையில் சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரௌட், தாக்கரேவின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இந்த நூற்றாண்டின் நகைச்சுவையாகும் என்று குறிப்பிட்டார்.

சிந்திக்கவும்:  பால்தாக்ரே சிவசேனை என்ற ஒரு பயங்கரவாத இயக்கத்தை நடத்தி வருகிறார். இது மராட்டியர் அல்லாத மற்ற மாநில மக்களுக்கு எதிரானது இயக்கம் மட்டும் அல்ல முஸ்லிம் மற்றும் சிறுபான்மை எதிர்ப்பு இயக்கமும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் நடத்திய இன, மற்றும் மதக்கலவரங்கள் எண்ணில் அடங்காது. எந்த அரசும் இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியே வந்தது. இந்நிலையில் பீகார் அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.

Jan 1, 2011

மத்திய அரசை மிரட்டும் விஸ்வ ஹிந்து பரிஷத்.

அயோத்தி, ஜன.1- அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு கையகப்படுத்தியுள்ள 67 ஏக்கர் நிலத்தை தரவேண்டும் என்று ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக்சிங்கல் மிரட்டிள்ளார். அயோத்தியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு வழங்காவிட்டால் பெரியளவில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். எனினும், புதிய போராட்டத்தை உடனடியாக நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருப்போம். ராமர் கோயிலுக்கான கல் சிற்ப வேலைகள் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கும்." என்று அசோக்சிங்கல் கூறினார்.

Dec 30, 2010

இஸ்ரேலுக்கு ரகசிய சுற்றுப்பயணம் சென்ற காவி பயங்கரவாதிகள்.


இஸ்ரேலுக்கு பாஜகவின் அகில இந்தியத் தலைவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தகவல்கள் தேசப்பற்றாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றங்களை அறிய இவர்கள் சென்றதாக கூறப்பட்டாலும், பின்ன ணியில் திடுக்கிடும் தகவல்கள் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். பா.ஜ.கவின் கட்சியின் அகில இந்திய தலைவர் நிதின் கத்காரி, கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் ராஜஸ்தான் முதல்வருமான வசுந்தராஜே சிந்தியா, மற்றொரு பொதுச் செயலாளர் ராம்லால், பா.ஜ.கவின் விவசாயப் பிரிவின் தலைவர் ஓம்பிரகாஷ் தன்கர் ஆகியோரும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

சர்வதேச அளவில் இஸ்ரேல் என்ற மனித குல விரோத பாசிச சக்தி தொடர்ந்து செய்து வரும் இனப்படுகொலை, சமாதானத்திற்கு விரோதமான அச்சுறுத்தல்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் பயணம் மேற்கொண்ட காவி முகாமின் செயல்கள் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் துணைப் பிரதமரும், உளவுத்துறை விவகார அமைச்சருமான டான் மெரிடர், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஜீப்பி லிவ்னி, மற்றும் லிக்யூட் கட்சியின் உறுப்பினர் கள், இந்தியா-இஸ்ரேல் நாடாளுமன்ற குழுத்தலைவர் ராஷேல் அடாட்டோ ஆகியோ ருடன் இக்குழுவினர் நடத்திய ரகசிய சந்திப்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மலேகான் குண்டுவெடிப்பு:ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி.

மும்பை,டிச.30:மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட லெஃப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் உள்பட ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது. ஜாமீன் வழங்கப்பட்டால் இவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதனை சுட்டிக்காட்டிய நீதிமன்றம் இதர குற்றவாளிகளான ராகேஷ் டவாடே, அஜய் ரஹிர்கர் ஆகியோரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடிச் செய்தது.

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டவர்கள் இந்திய அரசை கவிழ்த்துவிட்டு ஹிந்துராஷ்ட்ரம் உருவாக்குவதற்கான செயல்களில் ஈடுபட்டவர்கள் எனவும், இதற்காக அபினவ் பாரத் என்ற அமைப்பை உருவாக்கியதாகவும் அரசு தரப்பு வாதிட்டது.
தாங்கள் நிரபராதிகள் எனவும், குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்ட சூழலில் தங்களின் சிறைக்காவல் தேவையற்றது எனவும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியும் ஹிந்துத்துவ பெண் தீவிரவாதியுமான பிரக்யா சிங் தாக்கூரின் ஜாமீன் மனுவை வருகிற ஜனவரி 10 ஆம் தேதி நீதிமன்றம் பரிசீலிக்கும். கடந்த 2008 ஆம் ஆண்டு ஆறு பேரின் மரணத்திற்கு காரணமான மலேகான் குண்டுவெடிப்பில் ஏழு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் கைதுச் செய்திருந்தது.

Dec 28, 2010

அரசியல் கோமாளியை அரசு வக்கீலாக நியமிக்க வேண்டுமாம்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ.,யின் போக்கு சரியான திசையில் செல்கிறது. இதில் என்னை அரசு வக்கீலாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி, வரும் 7ம் தேதி முடிவு தெரியும். நான் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டால், சி.பி.ஐ., நடவடிக்கையை துரிதப்படுத்துவேன். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பெறப்பட்ட தொகைகளின் முதலீடுகள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அமெரிக்க நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு பிரதமர் சம்மதித்துள்ளார்.

சிந்திக்க: சுப்பிரமணிய சுவாமி என்ற கோமாளி இவர் தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் பண்ணும் கோமாளித்தனம் இருகிறதே தாங்க முடியலப்பா... இந்த பார்பன பணிய கும்பல் பதவிக்காகவும் பணத்திற்காகவும் போடும் வேஷம் இருகிறதே மிகவும் கொடுமையானது. இவர் ஜனதா தளம் என்கிற முகமூடியை போட்டுகொண்டு செயல்படும் ஒரு ஆதிக்க வெறிபிடித்த ஹிந்த்துதுவா ஆதரவாளர் என்பது யாவரும் அறிந்ததே.
இவர் அரசு வக்கீலாக மாறி எந்த வைக்கோலை தின்ன போறாரோ தெரியல.

காங்கிரஸை எதிர்ப்பத அல்லது ஹிந்த்துவாவை பாதுகாப்பதா? பாரதிய ஜனதாவில் குழப்பம்.

புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்ற பா.ஜ., கட்சித் தலைவர்களின் நிலைப்பாட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள் முரளிமனோகர் ஜோஷிக்கும், சுஷ்மா சுவராஜுக் கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக, கட்சிக்குள் மோதல் முற்றியுள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக, அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அளித்த அறிக்கை, தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதன் காரணமாக, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா, பதவி விலகினார். இருந்தாலும், எதிர்க்கட்சியினர் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து தீவிரப் படுத்தினர். இதனால், பட்ஜெட்கூட்டத்தொடரும் முடக்கப்படும்அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு நடத்திய தொடர் குண்டு வெடிப்புகள் குறித்த விசாரணையை காங்கிரஸ் நிறுத்தி வைபதாக பேரம் பேசி பாரதிய ஜனதாவை பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஒத்துழைக்கும்படி கேட்டு கொண்டிருப்பதாக புலனாய்வு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் பாரதிய ஜனதாவில் ஒரு குரூப் பாராளுமன்ற நடவடிக்கைகளை முடக்கவேண்டும் என்றும், இன்னொரு குரூப் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் மேல் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளை நிறுத்தி ஹிந்துத்துவாவை பாதுகாக்க முடியும் என்றும் இரட்டை கருத்து ஏற்பட்டுள்ளது. இதானால் பாரதிய ஜனதா கட்ச்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Dec 27, 2010

குண்டுவெடிப்பு வழக்கு: ஆர்எஸ்எஸ் தலைவரிடம் மீண்டும் விசாரணை.

புதுதில்லி, டிச.27: மசூதி குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தீவிரவாத ஆர் எஸ் எஸ் தலைவர் இந்தரேஷ் குமாரிடம் மத்திய புலனாய்வுத் துறை மீண்டும் விசாரணை நடத்தும் எனத் தெரியவந்துள்ளது. வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை அளிக்குமாறு இந்தரேஷ் குமாரிடம் சிபிஐ கேட்டிருந்தது. அதன் நகல்களை குமார் அளித்தார். சிபிஐ கேட்டுள்ள இதர ஆவணங்களை அளித்த பின்னர் அவர் விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவித்தன. 2007-ம் ஆண்டு ஹைதராபாத் மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர்.

Dec 25, 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு: பரபரப்பு துப்பு கிடைத்துள்ளது.


ஜெய்ப்பூர்,டிச.26:அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரை ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சில முக்கிய துப்பு கிடைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2007-ம் ஆண்டு ஆஜ்மீர் தர்கா வளாகத்தில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இந்து தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு சாமியார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது முக்கியத் துப்பு கிடைத்துள்ளதாக ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போது வெடிகுண்டுகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஐவரின் பெயர் விவரங்களும் கிடைத்துள்ளன. இது முக்கியத் திருப்பமாக கருதப்படுகிறது.

கருப்பு நிற சான்ட்ரோ காரைத்தான் இந்த தீவிரவாத செயலுக்கு குற்றவாளிகள் பயன்படுத்தியுள்ளனர். இந்த கார் மத்தியப் பிரதேசத்தில் வைத்து சிக்கியுள்ளது. இந்தக் காரில் வெடிகுண்டுகளை வைத்துக் கொண்டு ம.பி. மாநிலம் இந்தூரிலிருந்து குஜராத் மாநிலம் கோத்ராவுக்குப் போயுள்ளனர். கோத்ராவிலிருந்து அஜ்மீருக்கு பஸ்ஸில் வைத்துக் கொண்டு சென்றுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அஜ்மீர் சம்பவம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் என்பவரை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

Dec 14, 2010

மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு: ஹிந்துதுவா அமைப்புகள் மீது குற்றபத்திரிக்கை தாக்கல்.

ஹைதராபாத்,டிச:ஹைதராபாத்தில் உள்ள மக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில் அபினவ் பாரத் இந்து அமைப்பைச் சேர்ந்த தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் சர்மா ஆகியோர் மீது ஹைதராபாத் கோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த இருவரும் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் மக்கா மசூதியில், 2007ம் ஆண்டு மே 18ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடித்தது. மசூதி வளாகத்திற்குள் வெடித்த இந்த குண்டில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு நடைபெற்ற வன்முறையை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. வழக்கில் அபினவ் பாரத் என்ற வலதுசாரி இந்து தீவிரவாத அமைப்புக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அமைப்பின் சர்மா, குப்தா உள்ளிட்ட 6 பேர் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் சர்மா, குப்தா ஆஜ்மீர் வழக்கில் சிக்கி கைதாகியிருந்தனர். அவர்களை ஹைதராபாத்துக்குக் கொண்டு வந்து விசாரித்த சிபிஐ, பின்னர் இருவரையும் ஹைதராபாத் சிறையில் அடைத்தது. வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்கரா என்கிற ராம்ஜி ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இன்னொரு குற்றவாளியான சுவாமி அஸிமானந்த் சிபிஐயின் விசாரணை வளையத்தில் உள்ளார். இன்னொரு குற்றவாளியான சுனில் ஜோஷி என்பவர் 2007ம் ஆண்டிலேயே கொல்லப்பட்டு விட்டார்.

இந்த வழக்கில் நேற்று 14வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது சிபிஐ. 80 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில் அபினவ் பாரத் அமைப்புதான் இந்த செயலுக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது

Dec 12, 2010

சொறி நாயைப் போல கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள்.

இந்தியாவில் இரத்தவெறிப்பிடித்த வந்தேறிப் பார்ப்பன சங்க்கூட்டம் முஸ்லிம்களைத் திட்டமிட்டுக் கருவறுத்துக் கொண்டிருப்பதன் ஒரு அடையாளமான குஜராத் இனப்படுகொலைகளுக்கான ஆதாரங்களை, ஹிந்துத்துவ கொலைக்கார கூலிப்பட்டாளத்தின் வாயிலிருந்தே வெளிக்கொணர்ந்த தெஹல்காவின் வீடியோ ஆதாரங்களைப் பார்த்துக் கொந்தளித்துப் போய் சகோதரர் கார்கி அவர்கள் கொட்டிய ஆதங்கத்தை இங்கு மீள்பதிவு செய்கின்றேன்.

சில நேரங்களில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்க வார்த்தைகளைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆயிரக்கணக்கான கட்டுரைகள் இந்துத்துவ பாசிஸ்டுகளை கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதப்பட்டிருக்கும்.. ஆனாலும் உண்மைகளை ஒவ்வொரு முறை நேரடியாக பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வார்த்தைகள் செத்துப் போகிறது. இதை எழுதும் போதோ கைகள் நடுங்குகிறது. இந்த பாசிஸ்ட் நாய்களின் குடலை உருவும் வாய்ப்புக் கிடைக்காதா என்று ஆற்றாமையில் தொண்டை விம்முகிறது. இந்த நாய்களைப் பாதுகாத்து நிற்கும் இந்த நீதி மன்றங்களையும், அரசு இயந்திரத்தையும் நொறுக்கித் தள்ள முடியவில்லை இன்னும் என்கிற உண்மையால் வெட்கம் வருகிறது.

எல்லோருக்கும் தெரியும் நரேந்திர மோடி என்னும் கொலைகாரன் இரண்டாயிரத்தியிரண்டில் எப்படியெல்லாம் முஸ்லிம் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தான் என்று. எத்தனையோ கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டது. எத்தனையோ முறை காறித்துப்பியாகி விட்டது. ஆனால் நம்மால் இது மட்டும் தான் முடிந்திருக்கிறது என்பது எத்தனைக் குறைவானதொன்று என்பது தெகல்கா பத்திரிக்கை குஜராத்தின் கொலைகாரர்களின் பெருமிதம் ததும்பும் பேச்சுக்களை அம்பலத்திற்கு கொண்டுவந்தபோது புரிந்தது.
அந்தக் கொலைகள் வெறும் ஆத்திரத்திலோ சொந்த விவகாரங்களுக்காகவோ நடத்தப்பட்ட கொலைகள் அல்ல. அது ஒரு இன அழிப்பு! வீடியோக் காட்சி ஒன்றில் இந்துத்துவ வெறியன் ஒருவன் எப்படி கர்பவதியான ஒரு முஸ்லிம் பெண்மணியின் வயிற்றைக் கிழித்து இன்னும் உலகத்தைக் கூட காணாமல் உறங்கிக் கிடந்த கருவை வெளியே எடுத்து கிழித்து எறிந்தோம் என்று சொன்னதைக் கேட்ட போது இந்த பாசிஸ்டுகளையும் இவர்கள் இந்த முறையில் அமைக்கப் போவதாய் அறிவித்திருக்கும் இராம ராஜ்ஜியத்தையும் இவர்கள் நாயகனான இராமனையும் இவர்கள் காட்டிய கொடூரத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கொடூரத்தைக் காட்டி எதிர்த்தழிக்க வேண்டியதன் அவசியம் மண்டையில் உறைக்கிறது.

தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸைச் சேர்ந்த ஒரு வயதான முஸ்லிம் பிரமுகரின் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர் சில முஸ்லிம்கள். அந்த வீட்டை நாலாபுறமும் இருந்து சுற்றி வளைத்துக் கொண்ட இந்து வெறியர்கள், சுற்றிலும் தீ மூட்டி இருக்கிறார்கள். அந்தப் பிரமுகர் “வேண்டுமானால் பணம் கொடுக்கிறேன். தயவு செய்து எங்களைக் கொல்ல வேண்டாம்” என்று கெஞ்சி இருக்கிறார். “சரி பணத்தைக் கொடு விட்டு விடுகிறோம்” என்று கூறி வெளியே வருமாறு அழைத்திருக்கின்றனர். அவர் வெளியே வந்ததும் ஒருவன் அவரை உதைத்துக் கீழே தள்ளி இருக்கிறான். ஒருவன் அவர் கால்களை வெட்டியிருக்கிறான். நான்கைந்து பேர் சேர்ந்து அவரை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். ஒருவன் அவன் இரண்டு கைகளையும் வாளால் துண்டித்திருக்கிறான். பின்னர் அவருடைய பிறப்புறுப்பு அறுத்தெறியப்பட்டிருக்கிறது…. கடைசியில் அவரை உயிரோடு எரித்துக் கொன்றிருக்கிறார்கள். இத்தனையையும் செய்தவர்கள், தெகல்காவின் காண்டிட் காமெராவின் முன் மிகவும் பெருமிதமாகச் சொல்லிப் பூரித்துப் போகிறார்கள்

இதோ இது தான் ராம ராஜ்ஜியம்! இதைத்தான் இந்துத்துவ இயக்கங்கள் அமைக்கப்போவதாக சொல்கிறார்கள். இவர்களின் நாயகன் தான் ராமன். இவர்களைத்தான் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆதரிக்கிறாள். இவர்களைத்தான் ஒரு மாநிலத்தின் அத்துனை அரசு இயந்திரமும், அரசாங்கமும் பொத்திப் பொத்திப் பாதுகாத்தது. இவர்களில் ஒருவனான பாபு பஜ்ரங்கி என்பவனுக்குத் தான் நரேந்திர மோடி மவுண்ட் அபு என்னும் இடத்தில் இருக்கும் குஜராத்தி பவனில் ஐந்து மாதம் அடைக்கலமும் கொடுத்து, பின்னர் மூன்று நீதிபதிகளை மாற்றி விடுதலை செய்வித்தான். மேலே விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் நூறில் ஒரு சதவீதம் கூடக் கிடையாது. மேற்கொண்டு விவரிக்க எனக்கு மனதிடமும் கிடையாது..

ஆனால் இதைத்தான் இந்துக்களின் பதிலடி என்று அன்றைக்கு ஜெயலலிதா (பாப்பாத்தி) சொன்னதோடு மோடியை ஆதரித்து அறிக்கையும் விடுத்தாள்! ஒட்டுமொத்த கொலைகளையும் பின்னிருந்து இயக்கியது மோடி. அத்தனைக் கொலைகளையும் மூடி மறைத்தது அம்மாநிலத்தின் அரசு இயந்திரங்களான நீதித்துறை, காவல்துறை. பொய் சாட்சிகளை உருவாக்கியது அரசு வழக்கறிஞர்கள்.. அதனை ஊக்குவித்தது நீதிபதிகள். தெளிவாகத் தெரிகிறது இந்த அரசு இயந்திரங்கள் யாருக்கானது என்று. ஒழித்துக்கட்டப்பட வேண்டியது பாஜாகா ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிஸ்டுகள் மட்டுமல்ல; மாறாக இவர்களுக்கு இந்த தைரியம் உண்டாவதற்குக் மூல காரணமான அரசு இயந்திரமும் தான்!

மக்களுக்கான நீதியை இந்த அமைப்புக்குள் தேடுவது எப்பேர்பட்ட மடத்தனம் என்பதை பார்த்த காட்சிகள் உணர்த்துகிறது. உயிரைக்காப்பாற்றிக் கொள்ள மறைந்திருக்கும் முஸ்லிம் சகோதரர்களை வி.ஹெச்.பியினருக்கு அடையாளம் காட்டிக் கொடுத்து ஆள்காட்டி வேலை செய்தது காவல் துறை. இவர்களைத் தான் நாம் இன்னும் நாம் நம்பப் போகிறோமா? “நீதி தேவைதையின்” முன்னே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டிய அரசு வக்கீலும், நீதிபதியும் தான் பொய் சாட்சிகளைத் தயார்படுத்தியது.. இவர்களைத் தான் நாம் நம்பப் போகிறோமா?

இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கான தண்டனையை இந்திய அரசு அமைப்பு கொடுக்காது. அதற்கான அருகதையோ யோக்கியதையோ அதற்குக் கிடையாது. கோவை குண்டு வெடிப்புக்காக முஸ்லிம்களுக்கு தண்டனை வழங்கிய அதே நீதித்துறை, அதற்கு சில மாதங்கள் முன்பு நடந்த நவம்பர் கலவரத்திற்குக் காரணமான பார்ப்பனத் பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு இதே குஜராத் பாணியில் எங்கேயெல்லாம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், எங்கேயெல்லாம் அவர்களின் கடைகள் இருக்கின்றன என்பதை காட்டிக் கொடுத்து உதவிய காவல் துறையையும் ஏன் தண்டிக்கவில்லை?

அவர்கள் தண்டிக்க மாட்டார்கள். தண்டிக்கவும் முடியாது. இந்திய ஆளும் வர்கம் என்பது பார்ப்பன பயங்கரவாதிகளுக்குக் கொட்டை தாங்கும் வர்க்கம் என்பதைக் கண் முன்னாள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது நேற்றைய தெகல்கா வீடியோக்கள். ஒரே நம்பிக்கை மக்கள் தான்! உழைக்கும் மக்கள் தான் இவர்களுக்கான தண்டனையை, இவர்களுக்கான தீர்ப்பை வழங்குவார்கள். இவர்கள் சொறி நாயைப் போல தெருவில் கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள். அதில் முதல் கல்லை நக்சல்பாரிகளே வீசுவார்கள்!

நன்றி: கார்கி

கர்நாடகாவா அல்லது சங்க்பரிவாரின் ராம ராஜ்யமா?

கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் உள்கட்சிப் பூசல்கள் மற்றும் ஊழல் ஆட்சியால் அம்மாநிலத்தில் பாஜக வேகமாக வளர்ந்தது. வலுவான சிறுபான்மை மக்களின் ஆதிக்கம் இல்லாத கர்நாடகாவில் சங்க்பரிவாரத்தின் மதவெறி அஜண்டாக்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கத் துவங்கியது.

தென்னிந்தியாவில் காவியின் ஆட்சி என்ற சங்க்பரிவாரத்தின் கனவை நினைவாக்கும் விதமாக அவர்களுக்கு ஆதரவான களத்தை உருவாகும் சூழலை காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதாதளமும் ஏற்படுத்திக் கொடுத்தன. கிராம மக்களை மறந்துவிட்டு நகரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து முதலாளித்துவ சக்திகளின் விருப்பங்களுக்கு துணை நின்று, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வழியில் பயணித்தார் எஸ்.எம்.கிருஷ்ணா.

கிராம மக்களின் பிரச்சனைகளை கண்டும் காணாததுபோல் நடித்த எஸ்.எம்.கிருஷ்ணா, உலக ஐ.டி வரைப்படத்தில் பெங்களூரின் இடத்தை உறுதிச் செய்வதிலேயே குறியாக இருந்தார்.
ஐந்துவருடம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அடுத்த தேர்தலில் தோல்வியைத் தழுவியது. மதசார்பற்ற ஜனதாதளத்தின் குமாரசாமி பாரதீய ஜனதா ஆதரவுடன் கர்நாடகாவின் 18-வது முதல்வராக பதவியேற்றார். இது பா.ஜ.கவின் அதிகாரத்தை நோக்கி எடுத்துவைத்த காலடிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஒரு ஆண்டிற்கு பிறகு குமாரசாமி முதல்வர் பதவியை இழக்க கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. 2008 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரும்பான்மைக் கிடைக்க 4 சீட்டுகள் குறைவான நிலையில் ஆட்சியில் அமர்ந்தது பா.ஜ.க.பின்னர் கர்நாடகத்தில் பா.ஜ.கவின் ஆட்சி ஊழலிலும், குதிரை வியாபாரத்திலும் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளியது. ஹிந்துத்துவத்தின் உயிர்தெழலுக்காக கடுமையாக உழைக்கும் சங்க்பரிவாரின் உண்மையான விருப்பம்தான் கர்நாடகாவில் தற்பொழுது நடந்துவரும் பகல் கொள்ளையாகும். பெல்லாரியின் ராஜாக்களாக வலம்வரும் ரெட்டி சகோதரர்கள்தான் ஊழலின் சூத்திரதாரிகள்.

ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு மெட்ரிக் டன் இரும்பை விற்று அதில் 25 ரூபாயை வரியாக செலுத்துகிறார்களாம். பெல்லாரியின் மலைகளையெல்லாம் ரெட்டி சகோதரர்கள் தரைமட்டமாக்கி வருகின்றனர். கிடைப்பதில் ஒரு பங்கு டெல்லியில் பா.ஜ.க தலைவர்களின் சட்டைப் பையில் முறைதவறாமல் விழுந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த பட்டப்பகல் கொள்ளையை ஆசிர்வதித்தவாறு கர்நாடகா ஆர்.எஸ்.எஸ் தலைவர் எம்.சி.ஜெயதேவும் எடியூரப்பாவுக்கு உறுதுணையாக உள்ளார். அதிகாரத்தை காப்பாற்றுவதற்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆட்சி ரிஸார்ட்டுகளுக்கும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குமிடையே சீரழிந்துக் கொண்டிருந்தது.

அதிகாரம்-அது மட்டுமே எடியூரப்பாவிற்கும், அவரது கூட்டாளிகளுக்கும் ஒரே லட்சியம். மூன்று வருடங்களுக்கு முன்பு எடியூரப்பா காங்கிரஸில் சேர்வதற்கு முயற்சி மேற்கொண்ட பொழுது ஜெயதேவ் தலையிட்டு தடுத்து நிறுத்தினார். அதேவேளையில் ஹிந்துத்துவாவின் மதவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஊழல் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆட்சியில் தனது செல்வாக்கை துஷ்பிரயோகம் செய்துக்கொண்டு பிரமோத் முத்தலிக்கின் ஸ்ரீராம சேனா ஒரு கலவரத்திற்கு பத்துலட்சம், இரண்டு கலவரத்திற்கு பணம் கட்டினால் ஒரு கலவரம் இலவசம் என்ற மூலதன சந்தையின் ஆஃபருடன் செயல்படத் துவங்கியது.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களது எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்தியதைக் கூட எடியூரப்பாவின் பாஜக அரசால் பொறுத்துக் கொள்ளவியலவில்லை. இதற்காக அவர்கள் நிழலுக தாதாக்களுடன் கூட்டணி வைக்கக்கூட தயங்கவில்லை. நவ்ஷாத் ஹாஸிம்ஜி ஒரு அரசு-நிழலுக தாதாக்கள் கூட்டணியின் கொடூரத்திற்கு தனது இன்னுயிரை பறிக்கொடுத்தார்.

மைசூரில் ஹலீமா ஸாதிய்யா மஸ்ஜிதில் சங்க்பரிவாரக் கும்பல் பன்றியின் இறைச்சியை எறிந்து முஸ்லிம் சமுதாயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்த முனைந்தது. ஆனால், இதனைப் புரிந்துக் கொண்ட முஸ்லிம் அமைப்புகள் ஒரு கலவரத்தை திட்டமிட்ட சங்க்பரிவார ஆட்சியாளர்களின் முயற்சிகளை எதிர்த்தனர். ஆனால், கலவரத்தை கொளுந்துவிட்டு எரியச் செய்யலாம் எனக் கருதிய ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சார்ந்த கர்நாடகா மாநில உள்துறை அமைச்சர் ஆச்சார்யாவின் முயற்சி தோல்வியடைந்ததால், அவரது கவனம் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சிறையில் அடைப்பதை நோக்கி திரும்பியது.

பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்களை கலவரத்தை தூண்ட முயன்றதாகக் கூறி கைதுச் செய்த ஆச்சார்யா, இதற்கெதிராக ஜனநாயகரீதியில் போராடிய பெண்கள் உள்ளிட்டவர்களை காவல்துறையின் மூலம் வீதியில் போட்டு கண்மூடித்தனமாக அடித்து உதைக்கச் செய்தார். இறுதியில் சட்டத்திற்கு புறம்பாக பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றமே தலையிட நேர்ந்தது. தொடர்ந்து எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்பவும், மக்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தவும் ஒரு தீவிரவாதியை உருவாக்கும் நிலைமைக்கு கர்நாடக பா.ஜ.க அரசு தள்ளப்பட்டது.

பலிகடாவை கண்டுபிடிக்கும் முயற்சி கடைசியாக கர்நாடகா எல்லையும் தாண்டி கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் சென்று முடிந்தது. ஊனமுற்றவராக ஒன்பது ஆண்டுகளை கோவைக் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டு பின்பு விடுதலையான அப்துல் நாஸர் மஃதனியை பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கிலும் கேரள அரசின் உதவியுடன் கைதுச்செய்து சிறையிலடைத்தது கர்நாடகா பா.ஜ.க அரசு.

வழக்கத்திற்கு மாறாக அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிரான முயற்சிகளைக் குறித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன. மஃதனிக்கெதிரான சாட்சிகளும், வாக்குமூலங்களும் போலி என பல பக்கங்களிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கர்நாடகா மாநிலம் குடகு என்ற இடத்தில் நடந்த ரகசிய முகாமில் மஃதனி கலந்துக் கொண்டார் என்பதுதான் கர்நாடகா அரசு மஃதனிக்கு எதிராக முன்வைத்த முக்கிய சாட்சி .

கேரள போலீசாரின் கண்காணிப்பிலிருந்த அப்துல் நாஸர் மஃதனி அவர்களின் அனுமதியில்லாமல் எங்கும் செல்வதற்கான சுதந்திரத்தையும் இழந்திருந்தார். கேரள போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அப்துல் நாஸர் மஃதனி தனது ஒற்றைக் காலுடன் கர்நாடகா மாநிலம் குடகு ரகசிய முகாமில் பங்கேற்றார் என கர்நாடகா அரசு கூறியது. பிரபலமானவர் என்ற நிலையில் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அப்துல் நாஸர் மஃதனியின் உருவம் அடிக்கடி தென்படுவதால் அவரை குடகில் வைத்து அடையாளம் கண்டதாக கூறி சாட்சி வாக்குமூலம் அளித்ததாக கர்நாடகா போலீஸ் தெரிவித்தது.

இதன் உண்மை நிலையை அறிவதற்காக ஏசியாநெட்டின் முன்னாள் செய்தியாளரான ஷாஹினா டெஹல்காவிற்காக கர்நாடகா அரசு மஃதனிக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாக கூறும் சாட்சிகளை சந்தித்துள்ளார். சாட்சிகளில் ஒருவர் பா.ஜ.கவைச் சார்ந்த யோகானாந்த் என்பவராவார். பா.ஜ.க அரசு அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக சாட்சிகளாக முன்னிறுத்தியவர்களின் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றதுக்கூட தனக்கு தெரியாது என யோகானந்த் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, குடகில் நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் குறித்த வாக்குமூலங்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என யோகானந்த் கூறியுள்ளார்.

உண்மை விபரங்கள் வெளிவந்தால் தங்களின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுவிடும் என அஞ்சிய பா.ஜ.க அரசு ஷாஹினாவுக்கெதிராக நடவடிக்கையை மேற்கொண்டது. சமீபத்தில் கேரளாவிலிருந்து தாய்லாந்திற்கு வர்த்தகம் தொடர்பாக பயணித்துவிட்டு திரும்பி வருகையில் பெங்களூர் வழியாக பயணித்த கேரளாவைச் சார்ந்த 9 நபர்களை அவர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் தனியாக கடுமையான சோதனைகளை மேற்கொண்டது பா.ஜ.க அரசு. இவ்வாறு நாடு எக்கேடுக் கெட்டு குட்டிச்சுவாரானால் எங்களுக்கு என்ன? எங்கள் நோக்கம் நிறைவேறினால் போதும் என்ற மனோநிலையிலிருக்கும் கர்நாடகாவின் சங்க்பரிவார அரசுக்கு இனி குஜராத் மாதிரி இனப்படுகொலைதான் மீதமுள்ளதோ?

நன்றி: விமர்சகன்.

Dec 11, 2010

இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது ?

கோழிக்கோடு,டிச.12:குஜராத்தில் இனப்படுகொலை நிகழ்ந்து 8 ஆண்டுகள் கழிந்த பிறகும் குஜராத் முஸ்லிம் சமூகம் சாதாரண நிலையை இதுவரை அடையவில்லை என பிரபல மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.ஷக்கீல் அன்ஸாரி தெரிவித்தார்.இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது. துயர்துடைப்பு நடவடிக்கைகளுக்கோ, இழப்பீடுகளை வழங்குவதற்கோ அரசு ஆர்வம் காண்பிக்கவில்லை.

அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலையில் குஜராத் அரசிற்கும் பங்கிருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சமுதாயமாக மாறியுள்ளனர். பல வழக்குகளும் நீதிமன்றத்தை அடையவில்லை. பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது போன்ற சோதனைதான் குஜராத் இனப்படுகொலையும். ஆனால், இதற்கெதிராக மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் உறுதியாக நின்று போராடியதன் காரணமாக சில வழக்குகளிலாவது வெற்றிக் கிடைத்துள்ளது.

காங்கிரசும், பா.ஜ.கவும் ஆதிக்கம் செலுத்தும் குஜராத்தில் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் சேரவேண்டும் என்ற துர்பாக்கிய நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வாக்கு பதிவு குறைவதும், ஏகாதிபத்திய முறையில் தேர்தல் நடப்பதாலும் மோடியால் வெற்றி பெறமுடிகிறது.

ஹேமந்த் கர்காரேக்கு தொலைபேசி மூலம் கொலைமிரட்டல்; பின்னணியில் ஹிந்துத்துவா.

நாக்பூர்,டிச.12:மும்பை தாக்குதலின்போது கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரேக்கு கொலைச் செய்யப்படுவதற்கு முன்பு ஹிந்துத்துவா தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதைக் குறித்து விபரங்களை அளிக்க போலீசாருக்கு உத்தரவிடப்படும் என மஹாராஷ்ட்ரா மாநில துணைமுதல்வர் அஜீத் பவார் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பாக உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக கர்காரே தன்னை அழைத்துக் கூறினார் என காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் விடுத்துள்ள அறிக்கையைக் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அஜீத் பவார் இதனைக் குறிப்பிட்டார்.

Dec 7, 2010

வாரணாசி குண்டு வெடிப்பு : ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பா?

வாரணாசி, டிச. 7-உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் செவ்வா யன்று மாலை குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 8 பேர் காயமடைந்தனர். வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள ஷீட்லா கட் பகுதியில் தினந்தோறும் நடைபெறும் சிறப்புமிக்க தீப ஆராதனை நிகழ்ச்சியைக் காண செவ்வாயன்று மாலை ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். ஒவ்வொரு நாளும் மாலை 5.40 மணியளவில் இந்த ஆராதனை நிகழ்ச்சி துவங்கும். செவ்வாய்க் கிழமையும் நிகழ்ச்சி துவங்கி நடந்து கொண்டிருந்த போது 6.25 மணியளவில், தீப ஆராதனை நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு சற்று தொலைவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். சற்று தொலைவில் குண்டு வெடித்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும் குண்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து 150 மீட்டர் சுற்றளவிற்கு அதன் பாதிப்பு இருந்தது. இதில் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 1 வெளி நாட்டவர் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதர விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

இந்த குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஹிந்த்துதுவா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் இருப்பதாக உளவுத்துறை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கடத்த சில வருடங்களாக நடந்த தொடர் குண்டு விடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாபர் மசூதி பிரச்சனையில் உச்ச நீதி மன்றத்தில் முஸ்லிம்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கபடும் இந்த வேளையில் அதில் குழப்பத்தை ஏற்படுத்தவும், மீண்டும் அயோத்தியில் ராமர் கோவில் கேட்டுவோம் என்று கூறி ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்த குண்டு நடத்தபட்டிருக்கலாம் என்றும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து பயங்கரவாத இயக்கங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கபட்டு வருவதாகவும் பெயர் வெளியிட விரும்பாத ஒரு உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Dec 5, 2010

பாரத் மாதா கீ…….அடத்தூ! போடாங்….!

“இந்தியத் தாய்க்கு விஜயம்!”

இந்திய மண்ணை தாய்க்கு-தாய்மைக்கு நிகராக நேசிக்க வேண்டும் என்பதே இதன் மூலம் கூற வரும் கருத்தாகும்.

அதாவது அன்புக்கு இலக்கணமான தாய்மைப் பண்பு கொண்ட பெண்ணை-தாயை உயிராக நேசிப்பதுப் போன்று, பிறந்த மண்ணான இந்தியாவை நேசிக்க வேண்டும் என்பதாகும்.

இவ்வுலக நிலைநிற்பிற்குக் காரணமான தாய்மையை-தாயை-பெண்ணைப் போற்ற வேண்டும், கண்ணியப்படுத்த வேண்டும், மதிக்க வேண்டும், மரியாதை செலுத்த வேண்டும் என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்காது.

எனவே தான், ஒவ்வொருவரும் தாயின் மீது உயிரை வைத்திருப்பதுப் போன்று பிறந்த மண்ணையும் நேசிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியாவை தாய்க்கு உவமானப்படுத்தி, “பாரத் மாதா கி ஜே” என்கின்றனர்.

பிறந்த மண்ணை/இந்தியாவை நேசிக்கும் எவரும் இந்தச் சொல்லை மனப்பூர்வமாக, ஆவேசத்துடன் கூறுவர். நமக்கு இரத்தத்தை உணவாகத் தந்து ஈன்றெடுத்த நம் தாயை-பெண்ணை உயிராகவே மதிக்கின்றோம் – எனவே நாம் கூறுவோம்; கூறுகின்றோம் – பாரத் மாதா கி ஜே!.

ஆனால், இந்தியாவில் இந்த வார்த்தையைக் கடந்த 60 ஆண்டுகளாக மொத்த குத்தகைக்கு ஒரு கூட்டம் எடுத்துக் கொண்டுள்ளது. சொல்லாமலே யார் எனப் புரிந்திருக்கும்.

ஆம், கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளான பாஜக வெறியர்களுக்கு மட்டும் பட்டாப் போட்டு எழுதிக் கொடுக்கப்பட்ட தேசபக்தியின் அடையாடள வாசகம் தான் மேற்சொன்ன “பாரத் மாதா கி ஜே!”.

இதன் மூலம் இந்தச் சொறி நாய்கள்(நாய்கள் என்னை மன்னிக்க!) கூற வரும் கருத்து என்ன?

இந்தியாவை இவர்கள் மட்டும் தான் தாயைப் போன்று நேசிக்கின்றார்களாம். அதாவது இந்தியாவுக்கு இவர்கள் மட்டும் தான் உரிமையாளர்களாம். இருக்கட்டும். பிறந்த மண்ணான இந்தியாவைப் பெற்றத் தாயைப் போன்று உயிராக நேசித்து அதற்காக தங்கள் வாழ்வை அற்பணிப்பவர்களுக்குத் தான் இந்தியா சொந்தம் என்பதை அப்படியே எழுத்துப் பிசகாமல் ஒப்புக் கொள்வோம்.

ஆனால் அதற்கு இந்தப் பரதேசி நாய்களுக்கு என்ன யோக்கியதை உள்ளது? தாய்மையை-பெண்மையை மதிக்கும் இந்த வெறி நாய்களின் யோக்கியதை குஜராத்தில் பல்லிளித்தது. வயிற்றில் குழந்தையுடன் இருந்த ஒரு தாயின் வயிற்றைக் கீறி, சிசுவை எடுத்து கண்டம் துண்டமாக வெட்டி தீக்கிரையாக்கியதோடு, அத்தாயையும் கொடூரமாகக் கொன்று விட்டு அதனைக் கூறி புளகாங்கிதப்பட்ட வெறி நாயின் குதூகலத்தை சமீபத்தில் தெஹல்கா வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இது தான் இந்த வந்தேறிப் பன்னாடை வெறி நாய்கள் தாய்மைக்குக் கொடுக்கும் மரியாதை, கண்ணியம்.

இப்பொழுது கூறுங்கள் “பாரத்தை மாதா” என்றழைக்க இந்தப் பன்னாடைக் கொலை வெறிக் கூட்டத்திற்கு என்ன யோக்கியதை உள்ளது? “பாரத் மாதா கி ஜே” என்ற கோஷத்துடன் என்ன கூற வருகின்றனர்? குஜராத் தாய்மார்களிடம் எப்படிப்பரிமாறினார்களோ, அப்படித்தான் இந்தியத்தாயிடமும் பரிமாறுவோம் என்றா? “பாரத் மாதா” என்ற வாசகத்தைக் கூறும் ஒவ்வொரு பன்னாடை வெறி நாய்களையும் கண்ட இடத்தில் அசிங்கத்தில் தோய்த்தெடுத்தக் கல்லால் கையுறை அணிந்து அடியுங்கள் – உண்மையிலேயே இந்தியத் தாய் மண்ணின் மீது அன்பு கொண்டவர்களாக இருப்பின்.

இது இந்தியாவில் பிறந்த, இந்திய மண்ணுக்குச் சொந்தமான ஒவ்வொரு குடிமகனின் மீதும் கட்டாயக் கடமையாகும். நமது சில அப்பாவி சகோதரர்கள் இவ்வாறு சிந்திக்கலாம் – ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக இரத்த வெறிக் கூட்டம் குஜராத்தில் செய்தது, அவர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் தான் என்று.

அன்பான எனது சகோதர நெஞ்சங்களே, தயவு செய்து அந்தத் தவறான நினைப்பை மாற்றிக் கொள்ளுங்கள். இந்தச் சொறி நாய்கள் முஸ்லிம் தாய்மார்களின் மீது மட்டும் தான் இவ்விதம் தாக்குதல் தொடுப்பர் அல்லது இவர்கள் இந்துக்கள் எனக் கூறும் மக்களல்லாதவர்களிலுள்ள தாய்மார்களின் மீது மட்டும் தான் தாக்குதல் தொடுப்பர் என நீங்கள் நினைத்துக் கொண்டீர்களேயானால்…..

ஒருமுறை இன்றைய கைரளி அல்லது ஏசியாநெட் தொலைக்காட்சி செய்தித் தொகுப்பினை அல்லது யாராவது கேரளச் செய்தியைப் பார்வையிட்டவர்களிடம் பாஜக ஊர்வலத்தில் ஷோபனா என்ற இந்துத் தாயின் மீது சதீஷ் என்ற பாஜக வெறி நாய் ஒன்று செய்த அட்டூளியத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அந்தத் தாய் செய்தத் தவறு என்ன தெரியுமா?. இவர்களின் ஊர்வலத்தினூடாகச் சாலையைக் கடக்க முயற்சி செய்தது தான். அந்தத் தாய்க்கு அவ்வளவு அவசரமாக சாலையின் மறுபக்கம் போக வேண்டிய அவசரம் என்னவோ இருந்திருக்கின்றது. ஊர்வலத்தின் இடையில் புகுந்து அடுத்தப்பகுதிக்குச் செல்ல முயற்சிக்கும் பொழுது, அந்தத் தாயின் நடு முதுகில் இந்த இரத்த வெறிக்கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட சதீஷ் என்ற அந்தச் சொறிநாய் எட்டி உதைத்துக் கீழேத் தள்ளியது. இதில் ஒரு விஷேஷம் என்னவெனில், அந்த ஊர்வலத்தில் இந்தப் பன்னாடைக் கூட்டத்தின் முக்கியப் பல தலைமை நாய்களும் கலந்து கொண்டிருந்தன. இவற்றில் ஒரு சொறிநாய் கூட, அவ்வாறு எட்டி உதைத்த அந்த வெறி மிருகத்தைக் கண்டிக்கவோ அல்லது கீழே உதைத்துத் தள்ளப்பட்ட அந்தத் தாயைத் தூக்கி விடவோ முயற்சிக்கவில்லை என்பது தான்.

“பாரத் மாதா கி ஜே”. ஆம். பாரத் மாதாவுக்கு இந்த வெறி மிருகங்களிடம் என்ன மதிப்பு இருக்கின்றது என்பதன் அடையாளமே, தாய்மார்களின் மீதான இந்தச் சொறி நாய்களின் இத்தொடர் குரூரத் தாக்குதல்கள். இவை தான் இக்கயமைக் கூட்டம் பெண்மையை மதிக்கும் இலட்சணம்.

கேரளத்தை வெறி மிருகம் மோடி ஆள்வதாக இந்தச் சொறிநாய் நினைத்துக் கொண்டதோ என்னமோ?. ஆனால் கேரள ஊடகங்களால் ஆவணப்படுத்தப்பட்ட இச்சம்பவம் இன்று கேரளத்தைக் குலுக்கிக் கொண்டிருக்கின்றது. விஷயம் விஸ்வரூபமெடுத்த உடன், தான் வளர்த்து விட்ட அந்த வெறி மிருகத்தைக் கட்சியிலிருந்து நீக்கி அவனுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என வெறி பாஜக அறிவித்துள்ளது(காந்தியைக் கொன்ற வெறி நாய் கோட்சேயை ஆர்.எஸ்.எஸ் கைகழுவியதை நினைவில் கொள்ளவும்).

தாய்மைக்கு அர்த்தம் தெரியா அற்பப்பதர்களே, இனியும் கூறுவீர்களோ “பாரத் மாதா கீ ஜே”.

வெட்கம் கெட்ட இரத்தக்காட்டேறிகளே! நீங்கள் உண்மையில் சோற்றைத் தான் உண்கின்றீர்கள் எனில் தயவுசெய்து அந்த வார்த்தையை இனி உங்கள் வாயால் உதிர்க்காதீர்கள்!

நன்றி : இறை நேசன்