Dec 30, 2010

இஸ்ரேலுக்கு ரகசிய சுற்றுப்பயணம் சென்ற காவி பயங்கரவாதிகள்.


இஸ்ரேலுக்கு பாஜகவின் அகில இந்தியத் தலைவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தகவல்கள் தேசப்பற்றாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றங்களை அறிய இவர்கள் சென்றதாக கூறப்பட்டாலும், பின்ன ணியில் திடுக்கிடும் தகவல்கள் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். பா.ஜ.கவின் கட்சியின் அகில இந்திய தலைவர் நிதின் கத்காரி, கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் ராஜஸ்தான் முதல்வருமான வசுந்தராஜே சிந்தியா, மற்றொரு பொதுச் செயலாளர் ராம்லால், பா.ஜ.கவின் விவசாயப் பிரிவின் தலைவர் ஓம்பிரகாஷ் தன்கர் ஆகியோரும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

சர்வதேச அளவில் இஸ்ரேல் என்ற மனித குல விரோத பாசிச சக்தி தொடர்ந்து செய்து வரும் இனப்படுகொலை, சமாதானத்திற்கு விரோதமான அச்சுறுத்தல்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் பயணம் மேற்கொண்ட காவி முகாமின் செயல்கள் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் துணைப் பிரதமரும், உளவுத்துறை விவகார அமைச்சருமான டான் மெரிடர், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஜீப்பி லிவ்னி, மற்றும் லிக்யூட் கட்சியின் உறுப்பினர் கள், இந்தியா-இஸ்ரேல் நாடாளுமன்ற குழுத்தலைவர் ராஷேல் அடாட்டோ ஆகியோ ருடன் இக்குழுவினர் நடத்திய ரகசிய சந்திப்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments: