Jun 18, 2013

இந்திய உளவு நிறுவனங்களான IB & CBI மோதலா?

ஜூன்19/2013: முஸ்லிம் இளைஞர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட பல்வேறு வழக்குகளிலும், போலி என் கவுண்டர்களிலும் Intelligence Bureau (IB) பங்கிருப்பது நிரூபணமாகி வருகிறது.

இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேர் குஜராத் போலீசால் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இண்டலிஜன்ஸ் பீரோ சிறப்பு இயக்குநர் ராஜேந்திர குமாரிடம் சி.பி.ஐ இன்று விசாரணை நடத்த உள்ளது

ராஜேந்திரகுமாருக்கு போலி என்கவுண்டரில் உள்ள பங்கு குறித்து சி.பி.ஐ க்கு ஆதாரங்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், தனக்கு கிடைத்த தகவல் சரியானது என்றும் ஆனால் போலி என்கவுண்டரில் தனக்கு பங்கில்லை என்றும் ராஜேந்திரகுமார் விசாரணையின்போது தெரிவித்திருந்தார். 

ஆனால், இஷ்ரத் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் சதித்திட்டத்தில் ராஜேந்திரகுமாரின் பங்கு குறித்த தெளிவான ஆதாரம் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளதால் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு மீண்டும் ராஜேந்திரகுமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் இவரை காப்பற்ற இவரது துறையான ஐ.பி.யின் தலைவர் பல்வேறு தகடுதித்தங்களை செய்து வருகிறார். ஏதோ ஐ.பி க்கும் சிபிஐ க்கும் மோதல் வந்து விடும் என்று சொல்லி தங்கள் துறைக்கு ஆதரவான உள்துறை செயலாளர் மூலம் ஐ.பி, மற்றும் சி.பி.ஐ தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இந்த வழக்கில் இருந்து ஐ.பி.யின் சிறப்பு இயக்குநர் ராஜேந்திர குமாரை தப்பிக்க வைக்க முயலுகின்றனர்.

இந்நிலையில் பிரதமரை சந்தித்து ஆதரவு கேட்டனர். ஆனால் பிரதமரிடமிருந்து ஆதரவான கருத்து கிடைக்க வில்லை என்றதும் ஹெட்லைன்ஸ் டுடே என்ற 24 மணிநேர நியூஸ் சானலை பயன்படுத்தி ராஜேந்தர் குமாரின் நடவடிக்கையை நியாயப்படுத்த ஐ.பி முனைந்தது. நரேந்திரமோடியை கொலைச் செய்ய லஷ்கர்-இ-தய்யிபா உறுப்பினர்கள் தொலைபேசி மூலமாக சதித்திட்டம் தீட்டினார்கள் என்று கூறி ஒரு ஆடியோ ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இந்த உரையாடலை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஐ.பிக்கு இப்பொழுது ஏற்பட்டுள்ள புதிய தலைவலி.

*போலி என்கவுண்டரில் சிறுபான்மை மக்களை கொலைச் செய்த ஐ.பி அதிகாரியை காப்பாற்றும் முயற்சியை நிறுத்த வேண்டும் என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது*

No comments: