ஆகஸ்ட் 20, அதிகரித்து வரும் நூதனமான ATM கார்டு மோசடியைத் தடுக்க உங்கள் செல்போன் எண்ணை சேமிப்பு கணக்கு உள்ள வங்கியில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
இதன்மூலம், உங்கள் கணக்கில் பணம் எடுக்கும்போது, உங்களுக்கு SMS மூலம் தகவல் அனுப்பப்படும். ATMமில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும், வாடிக்கையாளருக்கு அதுபற்றி SMS அனுப்ப வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறை இம்மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் உங்களது ATM கார்டை பயன்படுத்தி வேறு ஒருவர் பணம் எடுத்தால் அதுபற்றி எச்சரிக்கை ஒலி எழுப்புவதன் மூலம் மோசடியைத் தடுக்க முடியும். எனவே, உங்களது செல்போன் எண்ணை உங்கள் வங்கியிடம் பதிவு செய்து கொள்ளவும்.
மும்பை அந்தேரியின் ஓஷிவரா பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் எந்திரத்தில் வேறு ஒரு கருவியை பொருத்தி ஒரு வாடிக்கையாளரின் ரகசிய குறியீடு மற்றும் இதர விவரங்களை தெரிந்து கொண்டு வேறு ஒரு ஏடிஎம்மில் பணம் எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற மோசடி இந்தியாவில் நடந்தது இதுவே முதல் முறை. எனினும், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியாவில் இதுபோன்ற மோசடி நடை பெற்றுள்ளது. எனவே, இதை தடுப்பதற்கு இப்போது உள்ள ATM எந்திரங்களுக்கு பதில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய எந்திரங்களை நிறுவுவது பற்றி இத்துறை சார்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ATM நெட்வொர்க் சேவையில் ஈடுபட்டுள்ள பிரிஸ்ம் பேமென்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் லோனி அந்தோனி தெரிவித்துள்ளார்.

3 comments:
வேற யாரோ பணம் எடுக்கிறது தெரியும். ஆனா அத தடுக்கிறது எப்படி?
புதிய இயந்திரமாவது நல்ல முறையில் வரட்டும்....
It's very interesting. Thank u
Post a Comment