நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இந்து முன்னணி பயங்கரவாதிகள் திட்டமிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர். போலீசால் அறிவிக்கப்பட்ட ஊர்வல பாதையை விட்டு மாற்று பாதையில் ஊர்வலத்தை கொண்டு சென்று கலவரத்தை நடத்தினர். இது மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகரை கொண்டு காவிகள் கலவரம் செய்தனர்.
வருடம் தோறும் வட இந்திய ஆரிய பார்ப்பனர்களின் இறக்குமதியான பிள்ளையார் தமிழக வீதிகளில் கவர விநாயகராக வலம் வருகிறார். பிள்ளையார் வழிபாடு என்பது எப்படி தோன்றியது என்று பார்ப்போம். ஆரியர் வருகைக்கு முன்பு இந்தியாவில் வாழ்ந்த பூர்வ குடிகள் இயற்கை மற்றும் தங்கள் முன்னோர்களை வழிபாடுபவர்களாக இருந்தனர். கைபர் போலன் கணவாய் வழியாக இந்திய பிரதேசத்தில் நுழைந்த வந்தேறி ஆரியர்கள் வளமும் செழிப்பும் மிக்க இந்த மக்களை வெல்ல சூழ்ச்சியை பயன்படுத்தினர்.
ஆரிய வந்தேறிகள் புதிய கடவுள் கொள்கையை அறிமுகப்படுத்தினர். அதை நாளடைவில் மக்களை நம்பவைத்தனர். அந்த கடவுள்களுக்கு தங்களது பாஷையில் மந்திரம் சொன்னால்தான் புரியும் என்றும் சொன்னார்கள். கோவில்களில் மந்திரம் சொல்லி பூசை நடத்துகிறோம் என்று கோவில்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டார்கள். கோவில்கள் அவர்கள் வசம் என்பதால் மன்னர்களும் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர். மேலும் தாங்கள் உண்டாக்கிய கடவுள்கள் பற்றி கதைகளையும், புராணங்களையும் இயற்றினர். அந்த புராண இதிகாச அடிப்படையில் மனிதர்களை பிறப்பினால் பிரித்தனர்.
பிராமணன் தலையில் இருந்து பிறந்தவன் மற்றவர்கள் மார்பில், வயிற்றில், காலில் இருந்து பிறந்தவர்கள் என்று உருவாக்கினர். இதன் அடிப்படையில் பிராமணன் உயர்ந்தவன் என்றும் அவனுக்கு சேவை செய்யவே மற்றவர்கள் படைக்கப்பட்டார்கள் என்றும் ஆக்கினார். சூத்திரர்கள் வேதம் படிக்ககூடாது, இரட்டை குவளை முறை, உயர்சாதிகாரர்கள் குடிக்கும் கிணற்றில் தண்ணீர் எடுக்க கூடாது, அவர்கள் நடக்கும் வீதிகளில் நடக்க கூடாது, தொட்டால் தீட்டு, உடன்கட்டை ஏறுதல், பெண்கள் மேலாடை அணிய கூடாது, கோவிலுக்குள் நுழையக்கூடாது, சிலைகளை தொட்டால் தீட்டு என்று பிராமணர்கள் அல்லாதோர் மதத்தின் பெயரால் அடிமைப்படுத்தபட்டனர். இந்நிலையில் புத்தரின் சமத்துவ கொள்கைகள் மக்களிடையே வேகமாக பரவியது. மக்கள் புத்த மதத்தை அதிக அளவில் தழுவ தொடங்கினர். இனி நாம் ஆழ்வதற்கும், நமக்கு சேவை செய்யவும் அடிமைகள் இல்லாத நிலை உருவாகிவிடுமோ என்று பிராமணர்கள் அஞ்சத்தொடங்கினர்.
எப்படியாவது இந்த நிலையை சரிசெய்து வேண்டும் என்று பிள்ளையார் கதையை உண்டாக்கினர். பார்வதி குளிக்கும் போது தனக்கு பாதுகாவலுக்கு தன் உடலில் உள்ள அழுக்குகளை உருட்டி ஒரு படைப்பை உண்டாக்கினார். பிள்ளையாரை யாரும் தொடலாம், வெறும் மண், மாட்டு சாணி இப்படி எந்த பொருளாலும் பிள்ளையார் சிலைகளை யாரும் உருவாக்கலாம். இப்படி பிள்ளையாரை ஜனரஞ்சகம் ஆக்கி இதன் மூலம் மக்கள் மதம் மாறுவதை தடுத்தனர். அதேநேரம் புத்த பிக்குகளை தூக்கிலிட்டும், எரித்தும் கொலைசெய்தனர். புத்த மடாலயங்களை இடித்து தரைமட்டம் ஆக்கினர். இதே பிள்ளையாரை வைத்தே இன்று கிருஸ்தவ, முஸ்லீம் மக்களை கலவரம் செய்து அழித்து ஒழிக்க பயன்படுத்துகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எல்லா உயர்மட்ட தலைவர்களும் பிராமணர்களே! அதேபோல் பிஜேபி கட்சியின் மூத்த தலைவர்கள், முதல்வர்கள், கவர்னர்கள் எல்லோரும் பிராமணர்களே. இனி வர்ணாசிரம கொள்கையை சொல்லி இந்துக்களை ஆள முடியாது என்று முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் பொது எதிரியாக்கி இதை கொண்டே அரசியல் நடத்தி ஆட்சியையும் பிடித்து விட்டனர். இதன் மூலம் இலாபம் அடையும் பணக்காரர்கள், உயர் அதிகாரிகள், ஆட்சியாளர்கள், எல்லாருமே பிராமணர்கள். பேருக்கு ஒரு சிலரை மோடி போல் மற்றவர்களையும் தங்களோடு இணைத்து வைத்து கொள்வர். இதை புரியாத வரை மக்களாகிய நமக்கு கேடுதான்.
1 comment:
hi
Post a Comment