புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யபுரத்தில், கடந்த செப் 15-ம் தேதி தடையை மீறி நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பாஜக தேசியச் செயலாளர் H.ராஜா பங்கேற்றார். அப்போது, போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்த அவர், உயர்நீதிமன்றத்தையும், போலீசாரையும் இழிவான வார்த்தைகளில் பேசினார்.
இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவில், உயர்நீதிமன்றத்தால் மேடையமைத்துப் பேச தடை செய்யப்பட்ட ஒரு பகுதியில் மேடை போட்டு பேசுவேன் என அடம்பிடிக்கிறார் எச்ச ராஜா. தடுத்து சமாதானப்படுத்த கூனிக்குறுகி வரிக்கு வரி அண்ணாச்சி என கெஞ்சிக் கேட்கும் போலீசு அதிகாரிகளை நாயை விட இழிவாக நடத்துகிறார் ராஜா.
ஸ்டெர்லைட் போராட்டம், சேலம் எட்டுவழிச்சாலை போராட்டம் குறித்து கருத்து சொன்னவர்களை தேடித்தேடி கைது செய்த போலீஸ் ராஜா முன் பயந்து நடுங்குகிறது. சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்த பிறகே பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் அவர் மீது வழக்கு தொடுத்திருக்கிறார்கள். மேலும் இவரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பது வேடிக்கையின் உச்சம்.
எச்ச.ராஜாவுக்கு எப்போதும் போலீஸ் பாதுகாப்பு உண்டு. அந்தப் போலீசாரை தமிழக போலீசுதான் ஷிப்ட் முறையில் அனுப்புகிறது. ஆக எச்ச எங்கே இருந்தாலும் தமிழக போலீசுக்கு தெரியாமல் இருக்காது. இந்நிலையில் 2 தனிப்படை வேறு எங்கே தண்ணி அடித்து விட்டு தூங்குதோ. எஸ்.வி.சேகர் போல ராஜாவும் இனி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வாங்கும்வரை இப்படி நம்மை ஏமாற்றுவார்கள்.
1 comment:
hi
Post a Comment