
ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இப்பிரச்னை தொடர்பாக முடிவெடுப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நான் ஏற்கனவே பார்லிமென்டில் அறிக்கை சமர்ப்பித்தேன்.அப்போது, பார்லிமென்டில் பல்வேறு பிரிவினரும் தெரிவித்த கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும் எனக் கூறினேன். இதை பரிசீலிக்கும்படி அமைச்சரவையையும் கேட்டுக் கொள்வேன் என்றும் தெரிவித்தேன். அந்த நடவடிக்கை தொடரும். விரைவில் அமைச்சரவை இதுபற்றி விவாதிக்கும். அப்போது என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, அது மக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படும்.
No comments:
Post a Comment