Aug 7, 2011

ஹிந்துத்துவாவை இரும்பு கரம் கொண்டு அடக்காவிடில் ...?

AUG 08, புதுடெல்லி:முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ஆர்.கே.ராகவனின் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் குஜராத் இனப்படுகொலை தொடர்பான தகவல்களை ஆர்.எஸ்.எஸிற்கு கசியவிட்டதாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிறப்பு புலனாய்வு குழுவினர் குஜராத் கூடுதல் அட்வக்கெட் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு கசியச்செய்த தகவல்களை ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தவாதியான குருமூர்த்தி சுவாமிநாதனுக்கு அவர் அளித்துள்ளார் என சஞ்சீவ் பட் தெரிவித்தார்.

குஜராத் இனப்படுகொலை வழக்கில் மோடியை தப்பிவிக்க ஆர்.எஸ்.எஸ் நடத்தும் முயற்சிகளுக்கு தலைமை வகிப்பவர் குருமூர்த்தி சுவாமிநாதன் ஆவார். குருமூர்த்தி தயார் செய்த மனுவுடன் குஜராத் இனப்படுகொலையின் பெயரால் மோடியை வேட்டையாடக்கூடாது என கோரி எல்.கே.அத்வானியின் தலைமையிலான பா.ஜ.க பிரதிநிதிகள் குழு குடியரசு தலைவரையும், பிரதமரையும் சந்தித்திருந்தனர்.

சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்கு விசாரணையின் பல முக்கிய விபரங்களையும் துஷார் மேத்தாவுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிக் கொடுத்துள்ளனர். குஜராத் இனப்படுகொலை தொடர்பான வழக்குகளில் மோடி அரசிற்காக நீதிமன்றத்தில் ஆஜரானவர் துஷார் மேத்தா ஆவார். இந்த மின்னஞ்சல்களை துஷார் மேத்தா குருமூர்த்தி சுவாமிநாதனின் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியதற்கான ஆதாரங்களை சஞ்சீவ்பட் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

குருமூர்த்தி இந்த விபரங்களை எல்லாம் பா.ஜ.கவின் மாநிலங்களவை உறுப்பினரும், பிரபல சட்டநிபுணருமான ராம்ஜெத்மலானிக்கும், அவரது மகன் மகேஷ் ஜெத்மலானிக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பிக்கொடுத்துள்ளார்.
குஜராத்தில் சொராஹ்புதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்காக வாதாடுபவர்கள் ராம்ஜெத்மலானியும் அவரது மகன் மகேஷ் ஜெத்மலானியும் ஆவர்.

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது அமித் ஷா மோடி அரசில் உள்துறை அமைச்சராக பணியாற்றினார். குஜராத் இனப்படுகொலையின் இதர வழக்குகளின் வழக்கறிஞர்களுக்கும் துஷார் மேத்தா தனக்கு கிடைத்த முக்கிய விபரங்களை அளித்துள்ளார் என பட் தெரிவித்தார். விடுமுறை கால பயணம் தொடர்பாக தனது மிக நெருங்கிய நண்பரான துஷார் மேத்தாவின் மின்னஞ்சல் விலாசத்தை அவருடைய அனுமதியின் பெயரில் பரிசோதித்ததாக பட் முன்னர் தெரிவித்திருந்தார்.

சஞ்சீவ் பட் வெளியிட்டுள்ள தகவல்களை தொடர்ந்து குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி மோடி அரசை கடுமையாக கண்டித்துள்ளது. இதுக்குறித்து குஜராத் பிரதேச காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோட்வாடியா கூறியதாவது: அரசு இயந்திரங்களை நரேந்திரமோடி அரசு கலவர வேளையில் எவ்வாறு உபயோகித்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆவணங்கள் ஆதாரமாக உள்ளன. கலவரத்தின்போது குற்றவாளிகளும், அரசு அதிகாரிகளும் கூட்டாக செயல்பட்டுள்ளனர்.

ஆனால், உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவும் இத்தகையொரு கூடா நட்பின் ஒரு பகுதி என்பதை இந்த மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றம் நியமித்த புலனாய்வு குழுவின் மீது கருமையான நிழல் விழுவது மிகவும் கடுமையானது. இவ்விஷயத்தை தீவிரமாக உச்சநீதிமன்றம் பரிசோதிக்கும் என கருதுகிறேன் என மோட்வாடியா தெரிவித்தார்.

அதேவேளையில் சஞ்சீவ் பட் வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து பதிலளிக்க குஜராத் மோடி அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் ஜெயநாராயணன் வியாஸ் மறுத்துவிட்டார். நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம் குறித்து பதிலளிப்பது நீதிமன்ற அவமதிப்பு எனக்கூறி நழுவியுள்ளார்.

குஜராத் கலவர வழக்கில் ஏதேனும் குற்றவாளிகளுக்காக தான் இதுவரை எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகவில்லை என மகேஷ் ஜெத்மலானி பதிலளித்துள்ளார். மேலும், துஷார் மேத்தாவிடமிருந்தோ குருமூர்த்தியிடமிருந்தோ இத்தகைய மின்னஞ்சல்கள் தனக்கு கிடைக்கவில்லை என மகேஷ் கூறுகிறார். சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை தனக்கு கிடைக்கவில்லை என ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் சித்தாந்தவாதி குருமூர்த்தி கூறியுள்ளார்.

**ஹிந்துத்துவாவை இரும்பு கரம் கொண்டு அடக்காவிடில் ...? இந்திய உடைவது நிச்சயம் **

4 comments:

Anonymous said...

காங்கிரஸ் தலைவர்களுக்கு,

தனிப்பட்ட முறையில் உங்களுக்கெல்லாம் ஆபத்து வருகிறது என்பதால்தானே இன்று இந்துத்துவாவை
விமர்சனம் செய்கிறீர்கள்? நீங்கள் என்ன படிக்காத பாமரரா? வாயில் விரலை வைத்தால் கடிக்கத்தெரியாத
பாலகன் அல்லவா நீங்கள்? உங்களைப்போன்ற இருமுகம் கொண்ட அரசியல்வாதிகளாலேதான் இந்த
அளவுக்கு இந்துத்துவா வளர்ந்தது என்பது பகல் வெளிச்சமாய் இருக்க, இது என்ன புதிய பூச்சு வேலை? பரவாயில்லை. காலம் மேலும் கடந்து செல்லாமல் இஸ்லாமிய பெயர் தாங்கிய, இந்து பெயர் தாங்கிய எவனாக இருந்தாலும் நீதி தராசை கையில் பிடித்துக்கொண்டு குற்றவாளிகளை
தண்டிக்க தயாராகுங்கள். மதமோ, மொழியோ, இனமோ நீதி செலுத்துவதில் குருக்கிடவேண்டாம். நல்லோர் உங்கள் பக்கம் இருப்பர்.

- தலித் மைந்தன்

Anonymous said...

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின்// முஸ்லிம் இனப்படுகொலையா? ஏன் குஜராத்தில் நடந்த வன்முறையில் இந்துக்கள் யாரும் சாகவில்லையா? ஏன் இப்படி ஒரு சார்பாக எழுதுகிறீர்கள்? எதை எழுதினாலும் நடுநிலையாக எழுதுவதே நன்மை பயக்கும்.

இந்த ஒரு நாட்டில் எதோ ஒரு மாநிலத்தில்தான் இந்துக்கள் கலவரம் செய்தார்கள் என்று வைத்துக்கொள்வோம், உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தை பற்றி தாங்கள் என்ன எழுதியுள்ளீர்கள்.

இனப்படுகொலை என்ற வார்த்தைக்கு உங்களுக்கு பொருள் தெரியவில்லை என்று நினைக்கிறேன், ஈழத்தில் நடந்ததே இனப்படுகொலை, குஜராத்தில் நடந்தது மதக்கலவரம் மட்டுமே, இஸ்லாமிய இனப்படுகொலை அல்ல...

Anonymous said...

Mr Heart Rider,
In gujarat, the Government machinery was part of the murders. Its not like two fanatic gangs clashed and killed each other. It was a pre-planned, Government aided , targeted on a single community. what do you call that? just a riot?

A fellow Indian

Anonymous said...

India definitely will break two peaces if not arrest narendra modi
please let them live in india peaceful we hope indian goverment take necessary action against him
by peaceful wisher