AUG 09, புதுடெல்லி:கடன் சிக்கலில் மாட்டி மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கும் அமெரிக்காவின் முக்கிய வெளிநாட்டு கடனாளர்களில் ஒன்றான இந்தியா அளித்துள்ள 1.83 லட்சம் கோடி ரூபாய் கடனும் சந்தேகத்தில் உள்ளது.
பிரான்சு, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு அளித்துள்ள கடன் தொகையை விட இது அதிகமாகும். 15 லட்சம் கோடி டாலரை தொடும் அமெரிக்காவின் கடனில் 4.5லட்சம் கோடியும் வெளிநாடுகளிலிருந்து வாங்கிய தாகும். அமெரிக்கா அரசு வெளியிட்ட கடன் பத்திரங்களில் அதிகமான வற்றை வாங்கிய நாடு சீனா ஆகும். இந்தியா 14-வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவின் க்ரெடிட் ரேட்டிங் சரிந்ததை தொடர்ந்து ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா வாங்கிய அமெரிக்க கடன் பத்திரங்களின் பெரும்பாலனவையும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கைவசப்படுத்தியுள்ளது. ரேட்டிங் குறைந்தாலும், வெளிநாட்டு கடன் பத்திரங்களை கைவசம் வைத்திருப்பதை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தொடரும் என கருதப்படுகிறது. இந்த கடன்களில் இருந்து அமெரிக்கா வெகு விரைவில் மீளும் என்று அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment