நவ 01/2013: இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் ஒரு துரும்பு கூட கலந்து கொள்ளக்கூடாது என கலைஞர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள முடிவெடுத்திருப்பதைப் போல செய்திகள் வந்திருக்கிறதே என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட பொழுது இவ்வாறு பதில் அளித்தார்.
சிந்திக்கவும்: ஈழத்தமிழர் பிரச்னையை வைத்து தமிழக ஓட்டு பொருக்கி கட்சிகள் தங்களை வளர்த்து கொண்டன. தமிழ், ஈழத்தமிழர் என்று சொல்லி கருணாநிதி தனது அரசியல் பிழைப்பை நடத்தி வந்தார்.
ஹிந்தி எதிர்ப்பு என்றார், ஹிந்தி எழுத்துக்களை தார் வைத்து அழிக்கக்கும் போராட்டம், என்றெல்லாம் சொல்லி விட்டு தனது பேரப்பிள்ளைகளை ஹிந்தி பயில வைத்தார். இந்தியா சார்பில் துரும்பு கூட கலந்து கொள்ள கூட்டாது என்கிற இந்த வேற்று பேச்சிக்கு மட்டும் குறைவில்லை. இவர் தமிழர்களுக்கோ, ஈழத்தமிழர்களுக்கோ எந்த ஒரு துரும்பையும் அன்றும் அசைத்ததில்லை இன்றும் அசைக்க போவதில்லை. மொத்தத்தில் இவர் ஒரு கபட வேடதாரி.
No comments:
Post a Comment