Apr 11, 2012

தொடரும் நித்யானந்தாவின் காமடி!

April 12: நித்தியானந்தா, ரஞ்சிதா இன்று மதுரை ஆதீனம் மடத்துக்கு சென்றனர்.  இவர்களுடன் நித்தியானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த பலரும் சென்றனர்.
  
மதுரை ஆதீனம் மடத்தில் நவீன வசதி கொண்ட அறைகளில் நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் தங்கினர். நித்தியானந்தா ஆதீனத்துக்கு 7 கிலோ வெள்ளி செங்கோல் ஒன்றை அளித்தார். 

பதிலுக்கு ஆதீனமும் நித்தியானந்தாவுக்கு  செங்கோல் ஒன்றை அளித்தார். ஆதீனத்துக்கு  வெள்ளியில் அமரும் இருக்கை ஒன்றை வாங்கி தரப்போவதாக நித்யானந்தா தெரிவித்தார். நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த பெண் சீடர்கள் 2பேரை மதுரை ஆதீனம் மடத்திற்கு வழங்கினார் நித்யானந்தா.

சிந்திக்கவும்: அது என்ன மதுரை ஆதீனம் சாதாரண நாற்காலியில் உட்கார மாட்டாரா? எத்தனையோ ஏழை, எளிய மக்கள் பசியிலும், பிணியிலும் வாடும்போது அவர்களுக்கு இந்த பணத்தை செலவு செய்யலாமே. முற்றும் துறந்த சாமியார்களுக்கு எதற்கு வெள்ளி செங்கோல். ஏன் இந்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு செலவு செய்யலாமே.

நித்யானந்தா ரஞ்சிதாவை திருமணம் செய்து கொள்ளலாம் யாரும் அதை பற்றி கருத்து சொல்ல மாட்டார்கள். இதை விட்டு தனது வெளுத்து போன சாமியார் மற்றும் துரவர வேஷத்தை மீண்டும் கட்டி எழுப்ப மதுரை ஆதீனம் முதல் பலரை சந்தித்து பொன்னையும் பொருளையும் கொடுத்து சரிந்து விழுந்த தன் இமேஜை கட்டி எழுப்பலாம் என்று குறுக்கு வழியில் யோசிப்பதே இங்கே விவாதப்பொருலாகிறது.

14 comments:

சிந்திக்க உண்மைகள். said...

Click the link below

///////////
நித்யானந்தாவின் குண்டலினி காமெடி. VIDEO
///////

நம்பிக்கைபாண்டியன் said...

நியாயமான கேள்விகள்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்த மதுரை ஆதீனத்தாரும் பெண் விடயத்தில் கில்லாடி, சில வருடங்களுக்கு முன் ஆதீனப் பாடசாலையில் கற்பித்த ஆசிரியையும்,அவ்வாசிரியைக்கு இவர் கூட்டால் பிறந்த ஒரு மகனின் படத்துடன் கூடிய செய்தி வெளிவந்தது. அதே சமயம் இவரை இவர் சீடர் கொல்ல வந்ததாக ஒரு களேபரம் அப்போ ,இந்தப் பெண் சமாச்சாரமும் கசிந்தது. இந்த மதுரை ஆதீனம் எல்லா அரசியல் கட்சிக்கும் காவடி தூக்குவதாலும், பணம் அபரீதமாக இருப்பதாலும் - சட்டத்தை, நீதியை, மனச்சாட்சியை எல்லாம் மண்டியிட வைத்து - கும்மாள வாழ்வு வாழ்கிறார்.
எந்த இந்து மத பீடங்களுக்கும் இவர்களைக் கேள்வி கேட்கும் யோக்கியதை உண்டா?
எல்லா மதங்களிலும் இப்போ இப்படிப்பட்ட கயவர்களே - தலைவர்களாக அனேகம் பேர் பவனிவருகிறார்கள்.
இந்து மதத்தில் மிக அதிகமெனலாம்.- சங்கராச்சாரியின் கூத்தே போதுமே...

அதனால் அந்த மதுரையை, இந்த நித்தி(யகல்யாணன்) நாடுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை?
நம் ம(ர) க்கள் திருந்த வேண்டும்.

கவிதை வானம் said...

இது ஒரு சிந்திக்கவைக்கும் பாத்து --------பரிதி.முத்துராசன்

கவிதை வானம் said...

இது ஒரு சிந்திக்கவைக்கும் பதிவு ...பரிதி.முத்துராசன்

தமிழ் மாறன் said...

Nalla pathivu. Niyamaana kelvigal...... Nanri//////

Anonymous said...

Very good article.

Unknown said...

good post

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

இன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்

Seeni said...

vidunga boss!

ithellaam -
ivanukalukku!
sakajam!

புனிதபோராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் சிந்திக்க மறுக்கும் மக்களின் மீது உண்டாவட்டுமாக.....மக்கள் மடத்தனமாய் மடாதிபதிகளிடம் மண்டியிடும்போழுது[ கழுதையும் சாமியாகி விடுகின்றன] கடவுளைப்பற்றி மக்கள் சிந்திக்கணும் [ அனைத்து மதங்களின் கடவுள்களை மக்கள் ஆராய்ந்து பார்க்கணும்] கடவுளின் அருள் கிடைக்க...நித்திமடம்..சங்கரமடம்.... ஆதிமடம்...இப்படிப்பட்ட கள்ளமடத்தில் பணத்தைக்கொண்டுபோய் கொட்டும் மக்கள்.. ஏழைகளுக்கு பணத்தை தர்மம் பண்ணினால் ஏழையின் சிரிப்பில் இறைவனின் அருள் கண்டிப்பாக கிடைக்கும் உணர்வார்களா எம்மக்கள் .......இவன் ....புனிதபோராளி

'பசி'பரமசிவம் said...

அத்தனை மதங்களும் அழிந்து ஒழியும் காலம் சில நூற்றாண்டுகளில் வரும்!
முதலில் அழியப்போவது இந்து மதம்தான். அதற்கு இந்த அவதாரங்களின் அட்டூழியங்களே முதல் காரணமாக இருக்கும்!

Nathimoolam said...

இந்தப்போலிப் பரதேசிகள் என்றைக்கு ஒழியுரானுங்களோ அன்றைக்குத்தான் உலகம் உறுப்படும்......
பரதேசிங்கோ நம்மலப்படுத்தியெடுக்குறானுங்கோ....

ramarkamachi said...

rhkpahh;fSk; rq;fuhr;rhhpfSk; itj;jpUf;Fk;m nrhj;Jf;fs; kf;fshy; ed;nfhillahf toq;fg;gl;lNj jptu nmth;fs; cioj;J rk;ghjhpj;j nrhj;Jf;fs; my;y NkYk; klhjpgjpfSf;F kd;dh;fs; mspj;j nrhj;Jf;fs; kf;fspd; th;ggzj;jpyupUe;J toq;fg;gl;litNs MFj; vdNNt ,e;j klhjjpgjpfspd; nrhj;Jf;fis muR Vw;W;f nfhs;tjpy; vt;tpj jiolAk; ,y;iy .muR ,ij fl;lha;k nra;aN5tz;Lk;

Anonymous said...

rhkpahh;fSk; rq;fuhr;rhhpfSk; itj;jpUf;Fk; nrhj;Jf;fs; kf;fshy; ed;nfhilahf toq;fg;gl;lNj jtpu mth;fs; cioj;J rk;ghjpj;j nrhj;Jf;fs; my;y NkYk; klhjpgjpfSf;F kd;dh;fs; mspj;j nrhj;Jf;fs; kf;fspd; thp;g;gzj;jpypupUe;J toq;fg;gl;litNs MFk; vdNt ,e;j klhjpgjpfspd; nrhj;Jf;fis muR Vw;W;f nfhs;tjpy; vt;tpj jilAk; ,y;iy .muR ,ij fl;lha;k nra;aNtz;Lk.; klq;fFf;fhd nrhj;Jf;fs; tpraj;jpy; jq;fis ahUk; fl;Lg;gLj;jKbahJ vd ,th;fs; $WtJ kf;fisAk; muirAk; mtkjpf;Fk; nraNyahfk;.