1) செய்தி: "இலங்கையிலிருந்து தப்பிச் சென்று வேறு
பெயர்களில் வசிக்கும், விடுதலைப் புலிகளை பற்றிய
தகவல்களை அளிப்பதில் வெளிநாடுகள் ஒத்துழைப்பு அளிக்க
மறுக்கின்றன என இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபையா
தெரிவித்துள்ளார்.
பதில்: இலங்கை பயங்கரவாத அரசுக்கு பயந்து அவர்கள்
பெயர்களை மாற்றி கொள்ளவில்லை. மீண்டும் விடுதலை
போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே அவர்கள்
தங்கள் பெயர்களை மாற்றி தங்களது இருப்புகளை நிலை
பெற செய்துள்ளார்கள்.
2) செய்தி: புதுசேரி, நோணாங்குப்பம் லிங்குசாமி,28, கண்ணகி,20,கடந்த இரண்டு
ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு, இரு வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவித்ததால்,
மனமுடைந்த காதலர்கள் தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்து கொண்ட
காதல் ஜோடியின் பிணங்களுக்கு திருமணம் செய்து ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர்.
பதில்: காதல் என்கிற உணர்வு பருவகாலத்தில் ஆண், பெண் இருபாலாருக்கும் ஏற்ப்படும்
ஒரு உணர்வு. இதை புரிந்து கொண்டு அவர்களது காதலை ஏற்று ஏற்றுக்கொண்டு அதை
கல்யாணத்தில் கொண்டு முடிப்பதை விட்டு அவர்கள் தற்கொலைக்கு போகும் ஒரு
சூழ்நிலையை உண்டாக்கி விட்டு பின்னர் ஒப்பாரிவைப்பது தொடர்கதையாகி போனது.
3)செய்தி: பழைய ஹைதராபாத் நகரில் அனுமன் கோயிலில் மாட்டுக் கறியை வீசிவிட்டு
அதன் பழியை முஸ்லிம்கள் மீது போட்டு விட்டு கலவரத்தை உருவாக்கிய ஹிந்துத்துவா
இயக்கத்தை சார்ந்த ஜி.சிவகுமார் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்
கால்கிலோ மாட்டு இறைச்சியை கடையில் இருந்து வாங்கி இந்து-முஸ்லிம் கலவரத்தை
தூண்ட அனுமன் கோயிலில் வீசியுள்ளார்.
பதில்: ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் திட்டமிட்டு கலவரத்தை
உண்டாக்கி மதமாச்சாரியம் பேசி மக்களை பிரிகின்றனர். இவர்களது வேஷம் தொடர்ந்து
கலைந்தாலும் அரசுத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் ஊடுருவி உள்ள ஹிந்துத்துவா
சனாதனவாதிகள் அவர்களை தூக்கிபிடிக்கும் வேலையை திறம்பட செய்துவருகின்றனர்.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே.
4)செய்தி: இலங்கையில் தமிழர்களின் நிலைமைகளை ஆராய அங்கு செல்லும் இந்திய
எம்.பிக்களின் குழுவில் தி.மு.க இடம்பெறாது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்தக்
குழுவில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை சேர்க்கப்
படவில்லை. அதற்கான சரியான காரணத்தை மத்திய அரசு இதுவரை சொல்லவில்லை.
பதில்: இலங்கை அரசைக்
காப்பாற்றவே
இந்திய எம்.பிக்கள்குழு செல்கிறது. இக்குழுவால் இலங்கைத்
தமிழர்களுக்கு நலன் ஏதுமில்லை. ஐநா தீர்மானத்தில் இந்தியா
ஈழத்தமிலர்களுக்கு ஆதரவாக வாக்களித்து பின்னர் இலங்கைக்கு ஆதரவாக
தீர்மானத்தில் திருத்தங்களை கொண்டு வந்தது போல் இப்போதும் இந்திய எம்பிகளை
அனுப்பி ஈழமக்களுக்கு எதிரான படுகொலைகளின் சுவடுகளை அழிக்க முற்படுகிறது.
5 comments:
nalla vimarsanam!
இலங்கை அரசைக் காப்பாற்றவே இந்திய எம்.பிக்கள்குழு செல்கிறது. இக்குழுவால் இலங்கைத் தமிழர்களுக்கு நலன் ஏதுமில்லை. ஐநா தீர்மானத்தில் இந்தியா ஈழத்தமிலர்களுக்கு ஆதரவாக வாக்களித்து பின்னர் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தில் திருத்தங்களை கொண்டு வந்தது போல் இப்போதும் இந்திய எம்பிகளை அனுப்பி ஈழமக்களுக்கு எதிரான படுகொலைகளின் சுவடுகளை அழிக்க முற்படுகிறது.///////////
சரியா சொன்னீங்க.மதிமுக விடுதலை சிறுத்தைகளை சேர்த்தால் இந்தியாவின் லட்சனமும் வெளிவந்துவிடும் இலங்கையின் லட்சனமும் வெளிவந்துவிடும் என்று சிங்(பாரத பிரதமர்)பயப்படுகிறார்
.
CLICK >>>>
PART 6. இதுதான் இந்தியா. மனதை பிளக்கும் மனித நேயம் அற்ற நிகழ்வுகள். மற்றும் காம ஊற்றுக்கண்களா? <<< TO READ.
.
Nallaa thaan news vaasikiranga malar vili Akkaa ...
செய்தியின் பதில்கள் ஒவ்வொன்றும் சாட்டையடி.
உங்கள் இணையதளத்திற்கு ஏராளமான வாசகர்கள் வரவேண்டுமா. உங்கள் இணையதளத்தின் ஒவ்வொரு பதிவையும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.
Post a Comment