Apr 20, 2013

சென்னையில் விரைவில் இந்திய தூதரகம்!

ஏப்ரல் 21/2013: ஜோக் 1: அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய மந்திரி வயலார் ரவி கூறினார். 

பதில் 1: ஹா.. ஹா.. ஹா... கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம். இது நாள் வரை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை கண்டு கொண்டதே இல்லை. 
-----------------------------------------------------------------------------------------------
ஜோக் 2: மேலும், அரபு நாடுகளில் 24 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இதில் 20 லட்சம் பேர், உரிய ஆவணங்களுடன் வசிப்பதால் அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் 4 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. 

இதில் 2 லட்சம் பேருக்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இந்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 2 லட்சம் பேர், உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி இருப்பதால் அவர்களை பாதுகாக்க வெளி நாடுவாழ் இந்திய நலத்துறை சார்பில் அரபுநாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார் மத்திய மந்திரி வயலார் ரவி

பதில் 2: வெளி நாடுவாழ் இந்திய நலத்துறை இந்த கருமாந்திரம் பிடித்த துறை எப்பொழுது முளைத்தது என்றே தெரியவில்லை. இது அப்படி என்னதான் செய்து கிழிக்கிறதோ?  இந்த துறை குறித்து ஒரு வெள்ளையறிக்கை சமர்பிப்பாரா வயலார் ரவி. ஏற்கனவே வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் முகம் கிழிந்து தொங்குகிறது.  
 -----------------------------------------------------------------------------------------------
ஜோக் 3:  சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை திருவனந்தபுரத்துக்கு மாற்றும் திட்டம் எதுவும் கிடையாது. இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.  

பதில் 3:  இனப்படுகொலை பயங்கரவாதியும் உங்கள் நெருங்கிய கூட்டாளியுமான ராஜபக்சே நாட்டின் தூதரகத்தை நீங்கள் மற்ற மாட்டீர்கள் என்பது தமிழர்களுக்கு தெரியும். கூடிய சீக்கிரம் தமிழகத்தில் இந்தியாவுக்கு தூதரம் திறக்கும் நிலை வரும் என்பதை வளயலார் ரவி புரிந்து கொண்டால் சரி.

No comments: