ஏப்ரல் 20: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதி அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினரின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சிலமாதங்களுக்கு முன் கடல் வழியாக சென்று அணுமின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினார்கள்.
இந்நிலையில் நாளை தரை வழியாக வந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளார்கள். இந்த போராட்டத்தில் கூடங்குளம் பகுதி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்ட குழுவினர் யாரும் பங்கேற்கவில்லை.
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டம், அப்பகுதி மக்களின் போராட்டம் அதை எளிதாக அடக்கி விடலாம் என்று மத்திய அரசு கனவு கண்டது. அதானால் அப்பகுதி மக்கள் மீது கடுமையான அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டது. இந்நிலையில், கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பு போராட்டம் அப்பகுதி மக்களின் போராட்டம் என்கிற நிலையில் இருந்து மாறி ஒட்டுமொத்த தமிழர்களின் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
வேறு மாவட்டங்களில் உள்ள அணுசக்திக்கு எதிரான கூட்டமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கன்னியா குமரியில் இருந்து பேரணியாக கூடங்குளம் நோக்கி வந்து முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்போராட்டத்தை சென்னை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணுசக்திக்கு எதிரான கூட்டமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சேர்ந்து நடத்துகிறார்கள்.

சுமார் 80-க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் இதில் பங்கேற்கிறார்கள். அனைவரும் கன்னியா குமரி காந்திமண்டபம் முன்பு திரண்டு பின்பு அங்கிருந்த கூடங்குளம் நோக்கி நடைபயணம் மேற் கொள்கின்றனர். இதனை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தொடங்கி வைக்கிறார். போராட்டத்திற்கு
பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்குகிறார். மேலும்
இதில் SDPI, மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மகஇக தோழர்கள்,
மற்றும் பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.
*மலர் விழி*
2 comments:
nalla muyarchi....
தமிழர்களையும் தமிழ்நாட்டையும் தமிழர்கள் தான் காப்பற்ற வேண்டும். இந்தியா வை எதிரிகளிடமிருந்து காப்பற்ற இந்திய ராணுவம் உள்ளது. தமிழர்களுக்கு யாரும் இல்லை. இலங்கை வாழ் தமிழர்களுக்கும், இந்தியா வாழ் தமிழர்களுக்கும் , இரு அரசுகளும் கொடுக்கும் டார்ச்சர் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருக்கிறது .இத்தனைக்கும் நமக்கு சப்போர்ட் செய்ய நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடச்சீ(அரசியல்)வாதிகள் இருந்தும் நாம் நாமாக இருக்க முடியவில்லை
Post a Comment